நனிநன்றி, சௌந்தர்!
தமிழ் ஹிந்து புத்தாண்டுதின வாழ்த்துக்களுடன்,
நா. கணேசன்
விக்ருதி வரவேற்கின்றோம்
நேற்றிங்கு விரோதி மாறி
நிற்கிற புதிய ஆண்டில்
மாற்றங்கள் வேண்டும், இங்கே
வருவதும் உடனே வேண்டும்
சீற்றங்கள் வேண்டும், புன்மைத்
தீமையை வீழ்த்த வேண்டும்
வீற்றிடும் நன்மை வேண்டி
விக்ருதி வரவேற் கின்றோம்
ஊழலை வளர்த்துக் கொண்டே
ஊர்களை யெல்லாம் வெற்றுப்
பாழென மாற்றித் தம்மைப்
பணத்தினால் நிறைத்துக்கொள்வோர்
வீழவே புதிய உத்தி
விக்ருதி கொணர்க நன்றே
வாழவே விரும்பி உன்னை
வணங்கியே வரவேற்கின்றோம்
இலந்தை
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நல்லன செய்திட நன்னெறி பற்றிட
..நமக்கொரு வாய்ப்பு மீண்டும்
நல்கிட வந்ததே விக்ருதி உதிக்கும்நன்
..நாளிது மாந்தர் எல்லாம்
செல்வமும் செழிப்புமாய்ச் சிறந்திட அவரது
.. சிந்தையில் அமைதி ஓங்கச்
செல்வியின் பேரினைத் தாங்கிடும் ஆண்டிலே
..திருவருள் வேண்டி நிற்போம்.
(லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் காணும் முதல் துதியான ப்ரக்ருத்யை என்பது இயற்கையையும் அடுத்து வரும் விக்ருத்யை மாற்றத்தையும் குறிக்கும்.).
அனந்த்
14-4-2010
மாற்ற மெழுகநன் றீயும் வகையாய் வரப்பணிநா
மாற்ற மனத்துரங் கூர்ந்ததற் கேற்ப அறிவுடனம்
மாற்ற லுமலிக வாடு மிடியர் அடுதுயர்நா
மாற்ற வழிபல நல்குக ஈசன்புத் தாண்டிதிலே.
*****
பதம் பிரித்து:
மாற்றம் எழுக - நன்று ஈயும் வகையாய் - வரப் பணி
நாம் ஆற்ற, மனத்து உரம் கூர்ந்து, அதற்கு ஏற்ப அறிவுடன்
நம் ஆற்றலும் மலிக, வாடும் மிடியர் அடு துயர்
நாம் ஆற்ற வழி பல நல்குக ஈசன் புத்தாண்டு இதிலே.
நன்று=நன்மை; வரம்=மேன்மை; உரம் கூர்ந்து=ஊக்கம் நிறைந்து
குறிப்பு: 'நன்று ஈயும் வகையாய்' என்பதை, 'நன்று ஈயும் வகையாய் மாற்றம்
எழுக' என்றும், 'நன்று ஈயும் வகையாய் வரப் பணி நாம் ஆற்ற' என்றும்
ஈரிடத்துங் கூட்டிக் கொள்ளலாம்.
************
************
On Apr 12, 8:55 pm, Soundar <rsoun...@gmail.com> wrote: