பாடு பொருள்

14 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Feb 22, 2026, 12:28:01 PM (4 days ago) Feb 22
to santhavasantham
அன்பர்களே,

சந்தவசந்தம்  எல்லா வகையான மரபுக் கவிதைகளுக்கும் பொதுவானது.  வெறும் பக்திக் கவிதைகள் மட்டும் இட்டால் போதாது. ஆன்மிகக் கவிதைகள் அவசியம் தான்.  வேரு வகைகளும் இருக்கின்றனவே
கண்ணியமான சமுதாயக் கவிதைகள், இயற்கை எழில், மொழி,  சுயமுன்னேற்றம், பாடல் வகைகள்   மொழியாக்கங்கள்.  கலை.   இலக்கணம்  இன்னும் பல

இலந்தை

Swaminathan Sankaran

unread,
Feb 22, 2026, 5:14:05 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
நான் இதை மிக ஆர்வமாக ஆதரிக்கிறேன்.

சங்கரன் 

Siva Siva

unread,
Feb 22, 2026, 5:32:28 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
Yes, very true.

We miss Natarajan (chrome...@gmail.com) who used to post many songs on a variety of topics.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Feb 22, 2026, 6:32:36 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
Timing couldn’t be any better than this. The whole day I was thinking about தில்லைவேந்தன் and his poems.

There was telepathy message from you to me, perhaps.

What a wonderful poet!

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 22, 2026, at 17:32, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPb3XbpQHCYzEZEn5PAwBmC5_G68XxUXxYHCFwimAQatw%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Feb 22, 2026, 7:02:29 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தில்லைவேந்தன் அவர்களுக்குப் பாடு பொருள்கள் எவ்வாறு கிடைக்கின்றன என்று எப்போதும் வியந்திருக்கிறேன். மேலும் கிடைத்த பொருள்களில் மிகச் சிறப்பாகப் பாடுவதிலும் வல்லவர் அவர் என்பது மிகவும் உண்மையே. அவரது மறைவு கவியுலகத்துக்குப் பேரிழப்பு.

Subbaier Ramasami

unread,
Feb 22, 2026, 8:17:13 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
போகும் இடமெல்லாம் போதிமரங்கள். பொருள் தானாகத் தேடிவரும். 

சரி இதோ ஒரு ஈற்றடி

புல்லும் கவிதைப் பொருள்  -    புல்லும் என்பதைப் புல்லாகவும் புல்லுதல் எனும் வினையாகவும் கொள்ளலாம்

செல்லும் வழியெல்லாம் தேடா மலேநம்மைப்
புல்லும் கவிதைப் பொருள்

சொல்லில் பொருளாய்த் துலங்கும் பனிசுமக்கும்
புல்லும் கவிதைப் பொருள்

புல்லில் அமர்ந்த புதிய பனித்துளியை
வல்ல கதிரோன் வருடிவிட- சொல்லாமல்
செல்லும் சுமைநீக்கச் சூடுணர்ந்த அக்காலைப்
புல்லும் கவிதைப் பொருள்- 

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Feb 22, 2026, 8:43:49 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
வண்ணமலர் வாசம்போல் மாண்புறும் நல்லெண்ணம்
திண்ணமாய்த் தோயத் திறம்படும்- பண்தோன்றும்.,
அல்லும் பகலும் அனவரதம் மேம்பாட்டில்
புல்லும் கவிதைப் பொருள்
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 22, 2026, at 20:17, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:



Parthasarathy S

unread,
Feb 22, 2026, 9:54:41 PM (3 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
அடியேனின் முயற்சி

பாடுபொருள் எந்நாளும் பஞ்சமின்றிப் பாரிலுண்டு
நாடியதை நன்றாய் நவில்வோரே - கோடியதை
ஊடுருவிப் பார்த்தால் உளதென்றும் இல்லையென்றும்
தேடுமனம் கொள்ளும் தெளிந்து

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி,பெங்களூர்



--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Arasi Palaniappan

unread,
Feb 23, 2026, 7:10:09 AM (3 days ago) Feb 23
to சந்தவசந்தம்
அருமை அண்ணலே!

Arasi Palaniappan

unread,
Feb 23, 2026, 7:25:01 AM (3 days ago) Feb 23
to சந்தவசந்தம்
மிகச்சரி 

தில்லைக்கு வேந்தர் திறமைக்(கு) ஒருபோதும் 
எல்லையில்லை அன்னார் இயல்பாகத் - தில்லைப் 
பதியரசர் நல்லருளால் 
பாக்கள்எனும் நீங்கா 
நிதிவாய்த்தார் யாரே நிகர்!



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Feb 23, 2026, 7:37:07 AM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 23, 2026, at 07:10, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



M. Viswanathan

unread,
Feb 23, 2026, 11:11:30 PM (2 days ago) Feb 23
to Santhavasantham
நூற்றுக்கு நூறு சரி.

அன்பன்,
மீ. விசுவநாதன்

Parthasarathy S

unread,
Feb 24, 2026, 6:07:02 AM (2 days ago) Feb 24
to சந்தவசந்தம்
அடியேனின் முயற்சி

காலை யெழும்கதிர் காற்றில் வரும்மணம்
சோலைக் குயிலிசை சொல்லுமே - காலத்தைக்
காசுக்கில் லாதுநல் சேவைக்கும் வைத்திட்டால்
நேசமே நிற்கும் நிலைத்து 
 

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி

Parthasarathy S

unread,
Feb 24, 2026, 6:16:27 AM (2 days ago) Feb 24
to santhav...@googlegroups.com
நன்றி திரு மீ.வி

Reply all
Reply to author
Forward
0 new messages