"பரம்பரை வீடு" - (மீ.விசுவநாதன்)

2 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Jul 19, 2026, 1:32:53 PM (3 days ago) Jul 19
to Santhavasantham, M. Viswanathan
மீள் பதிவு:

"பரம்பரை வீடு"
(மீ.விசுவநாதன்)

இந்த வீட்டிற் குள்ளேதான்
என்தாத்தா பாட்டியும் வாழ்ந்தார்கள் !
வந்த இன்ப துன்பத்தை
வரவேற்றுச் சிறப்புடன் வென்றார்கள் !
எந்த வேளை ஆனாலும்
இருக்கின்ற உணவினைப் பகிர்ந்தார்கள் !
கந்த வேளை எப்போதும்
கருத்தினிலே வைத்தவர் கடந்தார்கள் !

சும்மாப் போக வரும்போதும்
சுவைப்பதற்கு தட்டையும், முறுக்குமென
அம்மா செய்து எங்களுக்காய்
அன்பாக அள்ளியே தந்தார்கள் !
எம்மாம் பெரிய மனத்துள்ளே
எப்போதும் கருணையைக் கொண்டார்கள் !
பம்மாத் தெல்லாம் இல்லாமல்
பச்சைவயல் போலவர் இருந்தார்கள் !

இன்னார் என்று இல்லாமல்
இரக்கத்தில் உதவிடக் கரம்நீட்டும்
பொன்னார் குணத்துப் பெரியோர்கள்
புழக்கத்தில் பொலிகிற இல்லமிது !
முன்னோர் பாதம் பட்டதனால்
முத்தாக ஒளிர்கிற இவ்வீட்டில்
பன்னீர்ப் பூவின் வாசனையை
பரம்பரையாய் நுகர்ந்திட முடிகிறது!

(03.05.2016)

Kaviyogi Vedham

unread,
Jul 19, 2026, 9:58:37 PM (3 days ago) Jul 19
to santhav...@googlegroups.com
attakasam vsu,
 nee  vazga
  yo

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vmO%2BaL9L%2BGpMb%2Bzzd%2B-_ys2mzTc_9Ovcf7Mt8UbSN-Rw%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Jul 19, 2026, 10:05:12 PM (3 days ago) Jul 19
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
பன்னீர்ப் பூவின் வாசனை வீசும் கவிதை மிக அருமை
Reply all
Reply to author
Forward
0 new messages