மருவுதல் (மருமம்/வருமன், மம்மம்:அம்மம்)

57 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 8, 2016, 6:10:04 AM1/8/16
to சந்தவசந்தம், vallamai, mintamil, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
திருவாசகத்தின் சிறப்புப் பாயிரமாக ஒரு வெண்பா போற்றப்படுகிறது.

                 தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி

                 அல்லலறுத்(துஆனந்தம் ஆக்கியதே எல்லை

                 மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன்

                 திருவா சகமென்னும் தேன்.


இவ்வெண்பாவில் வரும் மருவா, தேன் என்னும் சொற்களை

மாணிக்கவாசகரே ஒரு வெண்பாவில் பயன்படுத்தியுள்ளார்:


வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து.


மருவுதல் என்னும் தமிழ்/த்ராவிட வினைச்சொல் ஏராளமான சொற்களைத் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் தந்திருக்கிறது. மருவு- = தழுவுதல், புணர்தல், பிணைத்தல், பொருந்துதல், கிட்டுதல், பதித்துவைத்தல் என்று ஒன்றுக்கொன்று நெருங்கிய பொருள்களில் இலக்கியங்களில் பரக்கக் காண்கிறோம்.

மாணிக்கவாசகர் ஆமாத்திய அந்தணர் [1]. அவர்களது முக்கியமான தொழில் மருத்துவம் என்னும் பண்டுவம் பார்த்தல். மருந்தைத் தேனில் குழைத்து அளிப்பவர்கள் மருத்துவர்கள். அதுபோல, பிறவிப்பிணிக்கு மருத்துவராக திருவாசகம் என்னும் தேனில் குழைத்து சைவசித்தாந்த மருந்தை ஊட்டியவர் மாணிக்கவாசகர் என்றாலும் திருவாசக பாயிரத்துக்குப் பொருந்தும். துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் மாணிக்கவாசகர் தேனில் குழைத்துத் தரும் பிறவிமருந்து எப்படிப்பட்டது எனப் புகழ்கிறார்:

நேரிசையாசிரியப்பா
விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
காரண னுரையெனு மாரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூ ரண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்த தென்குவீ ராயின்
வேத மோதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
திருவா சகமிங் கொருகா லோதிற்
கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்ப ராகுந ரன்றி
மன்பதை யுலகின் மற்றைய ரிலரே.


தேனில் குழைத்துத் தருதலாலும், உடலுடன் மருவி (பொருந்தி) நோய் நீக்குதலாலும் மருந்து என மருத்துவன் தரும் பண்டுவ (ட்ரீட்மெண்ட்) பொருளை அழைக்கலாயினர் தமிழர்கள். வழிவழியாக மருவி இருப்பது மரபு என்றும், அகக்காழொடு மண்ணை மருவி இருப்பது மரம் என்றும் மருவு- என்னும் வினைச்சொல்லில் பிறக்கும் பெயர்கள். சிறிய அளவில், புன்மை, மண்ணை புல்லும்/மருவும் ஸ்தாவரங்கள் புல் என்று பெயர்பெற்றன. புறக்காழொடு இருப்பன புல், அகக்காழொடு இருப்பன மரம். புல், மரம் இரண்டுக்கும் புல்லுதல்/மருவுதல் என்பது தாது. புல், மரம் இரண்டும் வளர வானில் இருந்து நிலத்தை மருவும் மாரி வேண்டும்.


மருவுதல் வினையில் இருந்து மருமம் = மார்பு (மார்வம், மார்). இதுவே, மர்மம் என்று நெஞ்சுக்கும், மர்மஸ்தானங்களுக்கும் பெயரானது.

மர்மன் - சமுதாயத்திற்கு மார்புக் கேடயம் போன்றவன் என்ற பொருளில் வர்மன் என்று க்ஷத்ரியர்களுக்குப் பெயர் வடமொழியில் உண்டானது.

தேசியகவி பாரதியார் மறைந்தபோது சரமகவி பாடிய ஒரே கவிஞர் சேலம் அர்த்தநாரீச வருமரே. மர்மக்கலை நாகர்கோவிலில் வருமக்கலை ஆகிறதும் நோக்கலாம். நெருநல் நென்னல் என்றாதற்போல, மருமம் = முலை, தாய்ப்பால். மாரில் சுரக்கும் பால் மருமம் மம்மம் என்றாகிறது.

பேச்சு வழக்கில் மம்மம் ஊட்டுதல் என்கிறோம். தயிர்ச் சோறு ஊட்டல் தை மம்மம் (அ) தச்சு மம்மம் எனவும், பருப்பஞ்சோறு

பப்பு மம்மம் என்றும் தாய்மார்கள் ஊட்டுகின்றனர். -மார் என்னும் விகுதி, - உ-ம்: கொங்குநாட்டின் காவியம் அண்ணன்மார்கதை -பொருந்துதல் கருத்துடையதுதான். நங்கைமார், தம்பிமார், ஆசிரியன்மார், அண்ணன்மார், ... இதில் எல்லாம் கூட்டாகப் பொருந்தியுள்ள தொகுதியினர் என்ற பொருள் மருவு என்பதில் இருந்து வருகிறது.


அன்றாடல் லக்ஷக்கணக்கான குழைந்தையருக்கு சொல்லி ஊட்டும் பப்பு மம்மம், தச்சு மம்மம் என்பது மருமம்/மம்மம் என்னும் தாய்ப்பால் உணவில் இருந்து குழந்தையுணவாக வளர்ச்சிபெற்ற சொல். ஏராளமான சொற்களில் சொன்முதல் ம் இழப்பதைக் காண்கிறோம்: உ-ம்: மலர்:அலர். அதேபோல, 

மருமம்/மம்மம் - மாரில் சுரக்கும் தாய்ப்பால் அம்மம் என்றாகிறது.


http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=85&Itemid=61

பொன்போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால்

வன்பா ரச்சக டம்இறச் சாடி வடக்கி லகம்புக் கிருந்து

மின்போல் நுண்ணிடை யால்ஒரு கன்னியை வேற்றுரு வம்செய்து வைத்த

அன்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.


அம்மம் தருதல் = முலை கொடுத்தல் (பழைய வியாக்கியான உரைகளில்).


அம்மம் < மம்மம்/மருமம் (chest, milk from chest. Cf. alar < malar etc.,)

சட்னி அரைக்கும் குழைவிக்கல் தட்டையான கல்லை மருவுகிறது.

எனவே, குழவிக் கல் மருவும் கல் = மர்மி/மம்மி. இதனை அம்மிக்கல் என்கிறோம்.

அம்மி < மம்மி/மர்மி (மருவுதல் என்னும் வினைச்சொல்லால்). அலர் < மலர் போலென்க,


இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் 
நம்மை உடையவன் நாராயணன் நம்பி 
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி 
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்   - ஆண்டாள்


வலம்கொடு தீயை வணங்கினர். வந்து.
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி.
இலங்கு ஒளி அம்மி மிதித்து. எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். - கம்பர்


    அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்
    கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை
    மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
    வெறுமைக்கு வித்தாய் விடும். - ஔவை


     கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
     சுரையாழ அம்மி மிதப்ப-வரையனைய
     யானைக்கு நீத்தும் முயற்கு நிலையென்ப
     கானக நாடன் சுனை’

                              - ஓரடிக்குள் சொல்மாறு பழம்பாட்டு


நா. கணேசன்


[1] திருவாசகம் அளித்த மாணிக்கவாசக சுவாமிகள் ஆமாத்திய அந்தணர் மரபினர். ஆமாத்தியர் என்னும் வடசொல் அமைச்சர் என்று தமிழாக்கம் செய்கிறார்கள் திருவள்ளுவர் போன்றோர். படைப்பயிற்சி, போரில் நிகழும் காயங்களுக்கு வைத்தியம் - இப்போது ஸ்போர்ட்ஸ் மெடிசின் (கன்கஷன் படம் பார்த்தால் அமெரிக்கன் ஃபுட்பால் பின்விளைவு புலனாகும்), war zone medicine - செய்தவர்கள் மங்கலர்கள். மங்களாதிராசன் என்று மங்கலர்கள் பல கல்வெட்டுக்களில் அழைக்கப்படுகின்றனர். மருத்துவர் சமூகம் என்று அழைக்கப்படும் இவ் அந்தணர்களின் சமயப் பணிகளை இன்றும் கிராமப்புறங்களில் காணலாம்.


பாண்டிநாட்டுப் பொதிகைமலையின் தட்சிணாமூர்த்தி, சோழநாட்டுச் சிதம்பரத்து நடராஜர் வழிபாடுகளை ஒருங்கிணைத்து ஆகமவழி நிற்கும் சைவசித்தாந்தம் உருவாக்கியதில் மாணிக்கவாசகர் பங்கு பெரிது. வடக்கே இருந்து வந்த கோகழிச் சைவ ஆகமங்கள் மரபையும், தமிழ்ப் பொதிகை தட்சிணாமூர்த்தியையும் இணைத்தவர் மாணிக்கவாசகரே. எல்லாக் கோவில்களிலும் நடராஜர் அருகே மாணிக்கவாசகர் இருப்பார். மார்கழி உற்சவத்தில் திருவெம்பாவை நடராஜருக்குப் பாடப்பெறும். மாணிக்கவாசகர் குலம் ஆமாத்திய அந்தணர் குலம். அமாத்திய அந்தணர் என்னும் மங்கல அந்தணர்கள் வரலாற்றை விரிவாக ’மாணிக்கவாசகர் மகாசபை’ மாநிலத் தலைவர் நந்தன் என்கிற நாமக்கல் தங்கம் விசுவநாதன் “மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாற்று” நூலில் எழுதியுள்ளார். நாமக்கல் நந்தன் கேட்டுக்கொண்டதன் பேரில் எஸ். இராமச்சந்திரன் தலைமையில் கல்வெட்டாய்வாளர்கள் சென்று கல்வெட்டுக்களை ஆராய்ந்து ஆவுடையார்கோயிலின் 13-ஆம் ஆண்டுத் தோற்றத்தை விளக்கியுள்ளனர். ”மாணிக்கவாசகர் கட்டியதல்ல அக்கோவில்” என்றும் தெளிவுபடுத்தியுளர் (தினமலர், மார்ச் 1, 2014).  இசுலாமியரும் வந்து தொழும் குதிரை ராவுத்தர் மண்டபத்தில் தூண்களுக்கு மேலே பாவுகற்கள் பாவி உள்ளனர். இதன் காலம் கி.பி. 1581. பத்திரிகைகளில் வெளிவராத ஆவுடையார்கோவில் பிற்காலக் கல்வெட்டுக்கள் படிப்போமா? கல்வெட்டறிஞர் வை. சுந்தரேசவாண்டையார் 50+ ஆண்டுகளுக்கு முன்னர் படித்த கல்வெட்டுப் பாடல் இதுதான்:

     கட்டளைக் கலித்துறை

திதிக்கும் சகாத்தமிங் கொன்றரை ஆயிரம் செல்லுறுநான்கு
உதிக்கும் பிலவத்தில் பங்குனி மாதத்தில் ஒன்பதிற்குப்
பதிக்கும் கனக சபைமண்ட பந்தனிற் பாக்கலெலாம்
மதிக்கும் படிமுகித் தானெங்கள் மாணிக்க வாசகனே!

மாணிக்கவாசகர் அருளால் 16-ஆம் நூற்றாண்டில் இம்மண்டபம் எழுந்தது என்பது பொருள். ’கண்காண வேமுகித் தாள்யோக நாயகக் காரிகையே’ என அம்பிகையும்,

பலஞ்சேரும் நாளில் கனக சபைதனில் பாக்கலெலாம்
நலஞ்சேர வேமுகித் தானெங்கள் ஆளுடை நாயகனே’
என ஆளுடையார் ஆத்மநாதரும்,
                                                                                   பாக்கலெலாம்
வேடிக்கை யாகச்செய் தானெங்கள் கோபுர வேலவனே’

ஆக, மணிமொழியார், வேலன் போன்றோர் செய்த தெய்வ அருளால் பாக்கல் பாவிய செய்தி கவித்துவமான செய்யுள்களாகச் சொல்லப்பட்டுள்ளது. கி. வா ஜகந்நாதன் அவர்களும் ‘வாருங்கள் பார்க்கலாம்’ என்னும் நூலில் இந்தப் 16, 17-ஆம் நூற்றாண்டுப் பாடல்கள் ’மாணிக்கவாசகர் கட்டியது ஆவுடையார்கோவில்’ என்பதன் சான்றாகா என விளக்கி எழுதியுள்ளார். 9-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் மறைந்தபின் 13, 14-ஆம் நூற்றாண்டில் திருவிளையாடல் புராணக்கதைகள் கட்டப்பெற்றுச் சிதம்பரத்தையும், பொதிகை தட்சிணாமூர்த்தியையும் இணைக்கும் வகையில் இந்த இரு கோவில்கள் இவ்வூரிலே ஏற்பட்டுள்ளன. பழைய திருவிளையாடற் புராணம் (கி.பி. 1200) பின்னர் கல்லாக உருப்பெற்றது ஆவுடையார்கோவிலிலே! இப்போது 200 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவை முழுதும் தனிநூலாக வெளிவர வேண்டும். எங்குமே இல்லாத வகையில் தென்னன் (தக்ஷிணாமூர்த்தி) கோவிலாக தெற்குப் பார்த்தவகையில் ஆவுடையார்கோவில் மூலஸ்தானம் டிஸைன் செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சம். தென் (பொதியில் தென்னன்), வட (காளாமுக சைவம், ஆனந்தநடராஜர் தோற்றத்தில் அவர்கள் பங்கு) நாடுகளின் சைவங்களை எல்லாம் தொகுத்து, synthesize செய்த திருவாதவூர் அடிகள் பேரில்  அவர் மறைந்து ஓரிரு நூற்றாண்டுகள் சென்றபின்னர் புராணக்கதைகள் திருவிளையாடல் புராணமாகக் கட்டப்பட்டு, அவருக்காகப் பாண்டிநாட்டில் ஏற்பட்ட நினைவுச்சின்னக் கோவில் ஆவுடையார்கோவில். ஆனால், அவர் குருந்த மரநிழலில் குருமூர்த்தியைத் தரிசித்ததாய் வரலாறும், இலக்கியங்களும், மரபும் காட்டும் திருப்பெருந்துறை சோழநாட்டில் இருக்கிறது. சோழநாட்டின் ஒரு பகுதியான மிழலைநாடு அது என்று சங்க இலக்கியங்கள் விவரிக்கும் பிரதேசம். 

http://nganesan.blogspot.com/2014/02/manickavasakar-and-chola-seashore-town.html



N. Ganesan

unread,
Jan 10, 2016, 11:29:04 AM1/10/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham

> மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
> என்பதை
>மருவரை மார்புதம் அலர்முலை குளிப்பத் 
> எனவும் வாசிக்கலாம்.

No. இந்த அடியின் மோனையைப் பாருங்கள். மருவரை எனவே, மலர்முலை என்பது பாடல்.

திருவாசகம் சிவபுராணத்தில் 
”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”

மோய்தல் > ஓய்தல் என வரும். 
(1) மலர் > அலர், (2) மர்மம்/மம்மம் > அம்மம், (3) மாசு > ஆசு, (4) மணி > அணி, (5) மிளை > இளை, (6) முள்ளல் > உள்ளல் (மீன்), 
(7) மாற்று/மாட்டு> ஆற்று/ஆட்டு (to do,cf. மாட்டோம் in the negative) .... போல.
"மோய உரைப்பனியான்” என்பதன் மோய்தல் பொருளை உரைகாரர்கள் எழுதிஉள்ளனர். 
மகர வர்க்கத்தில் தொடங்கும் அடிகளில் மோய்- என்னும் சொல் உள்ள பாடல்கள்
கம்பனிலும் உண்டு. பிற இலக்கியங்களிலும் இருப்பவை. மோனையை வைத்துப் பார்த்தால் தெரிந்துவிடும்.
அவற்றை மோய்தல் என்ற வினைச்சொல்லை அறியாததால் ஓய்தல் என்று அச்சிட்டிருப்பர்.

மூய்தல்/மோய்தல் = முடிதல், பூர்த்தி ஆதல்.
’கலியாணம் மூய்ச்சாச்சு’ என்பது கொங்குவழக்கு. மணமுடிந்தது எனப் பொருள்.
மோய்தல் என்றுள்ள பாடல்களை திருவாசகம் போல மற்றவற்றில் உள்ளவற்றைத்
தேடித் தொகுத்தல் நன்று.

நா. கணேசன்

 
On Sunday, January 10, 2016 at 7:02:31 AM UTC-8, வேந்தன் அரசு wrote:


9 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:03 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:


அலர்முலை ஆகம்.தான்
மலர்முலை ஆகம் இல்லை


மலர்முலை > அலர்முலை.
மலர்முலை:
 
”யிருநிலந் தீண்டா வெருவரு நிலையு
மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
தெரிவையர் முயங்கிய சிருங்கார நிலையும்” 
          ------------ (இலக்கணவிளக்கம், தும்பைத்திணைத் துறைகளுள் ஒன்று).

”மலர்முலை மடவார் கலவிகா முறுநரு
மிரண்டறு கலப்பி னின்பநச் சுநரு
மினையபல் வேறு நினைவின ரெவரும்” (திருத்தணியாற்றுப்படை)

 

கணேசரு

நான் சொல்லவ்னதை நீங்களே வ்லையுறுத்திவிட்டீர்கள்

ஆரம் தாங்கிய அலர்முலைஆகத்துப். பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து”

இது நெடுநல்வாடை. நீங்க சுட்டும் நூல்களுக்கு முந்தியது

அலர்முலை என்பதே பின்னாளில் மலர் முலை ஆக்கி இருக்கு

இல்லை. மலர், மாலை என்பது ஆதி. அலர்ந்தது < மலர்ந்தது.
ஒரு சொல் சங்க இலக்கியத்தில் வந்துவிட்டால் உடனே அதுதான் பழசு என்பதெல்லாம் இல்லை.

வேத இலக்கியங்களில் இதனைப் பார்க்கலாம். ரிக்வேதத்தில் இல்லாமல், பின்னால் வரும்
இலக்கியங்களில் உள்ள சொற்களே பழமை எனக் காட்டியுள்ளனர்.

அதுபோல், மலர்முலை ஆகம் > அலர்முலை ஆகம்.
மருமம்/மம்மம் > அம்மம் ஆதற்போல.

நா. கணேசன் 

அவற்றிலும்,

மருவரை மார்புதம் மலர்முலை குளிப்பத்
என்பதை
மருவரை மார்புதம் அலர்முலை குளிப்பத் 

எனவும் வாசிக்கலாம்.

நீங்க வினவுது ஏன் ஆரம் மாரம் ஆகலை என்பது போல் இருக்கு

மூன்று எனும் சொல் மூனு,  மூடு, மூரு என கொச்சைத்தமிழ்,தெலுகு கன்னட மொழிகளில் திரியும். ஆனால் மகரம் திரியவில்ல்லை.
,


N. Ganesan

unread,
Jan 11, 2016, 10:50:17 AM1/11/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham, Sethupathi Sethukapilan, dorai sundaram, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, George Hart, L Srinivas, Lakshmi Srinivas, K Rajan, Theodore Baskaran, Dr. Y. Manikandan, dinamalarrk, Ramachandran Nagaswamy, Iravatham Mahadevan, Subbarayalu Yellava

NG> மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு  > அடுப்பு


On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote: 
அடுப்புக்கு மடுப்பு எனும் சொல் எங்கு புழங்குது

இதுக்கு இணையான மகரச்சொற்கள் காட்டுங்க

 
மடுத்தல், மடையன்/மடைச்சி (வண்ணான் புலையன்/புலைத்தி என்பது போல),
மடைப்பள்ளி, மடம், மடுப்பு, ....

சங்க இலக்கியம் படித்தால் மடுத்தல் = சமைத்தல் என்பது தமிழின் அடிப்படையான 
வினைச்சொற்களில் ஒன்று என அறியலாகும். வகுத்தல் என்னும் வினை தருவது வகுப்பு.
அதுபோல், மடுத்தல் (=சமைத்தல்) என்னும் வினைதருவது மடுப்பு. சொன்முதல் ம் கெட்டு
அடுப்பு எனவரும். மடுத்தல் சொன்முதல் ம் கெட்டு அடுத்தல் (= சமைத்தல்) எனப் புழங்குகிறோம்.

மடுதல்/அடுதல் சமைக்கும் தீயிற்கும், சுடுதல் அழிக்கும் தீயிற்கும் பயன்படும்.
இதனைப் புறப்பாட்டு குறிப்பிடுகிறது:

|| “அடுதீ யல்லது சுடுதீ யறியாது
இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்” (புறம். 70)

என்பதனால் தங்கள் உணவு அடுதற்குரிய தீயைச் சுடுதீயென்னாது வேறோர் நன்பெயர்
கொடுத்து அடுதீயெனப் பாகுபடுத்திப் பாராட்டுதலும் அறிவின் பயனேயாம். சிலப்பதிகாரம்
வஞ்சின மலையில் “எரியங்கி வானன்வன்” (49) எனவும் வருதல் காண்க.  “ ||
பாஷா கவிசேகரர் மகாவித்துவான் ரா. இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
(1930களில் மகாவித்துவான் ஐயங்கார் ஸ்வாமி நடத்திய தமிழ் வகுப்புகளில் போதித்த செய்திகள்
அடங்கிய நூல். அண்ணாமலைப் பல்கலையின் வெளியீடுகளில் இரண்டாவது.
அப்போதெல்லாம் அண்ணாமலைப் பல்கலையில் தனி பிரெஸ் இல்லை. எனவே,
சுவாமி சித்பவானந்தர் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன அச்சகத்தில் அச்சிட்ட நூல்.
சிறுவனாக இருந்தபோது பராய்த்துறை சி. அடிகள் ஆசீர்வதித்து அளித்த நூலிலிருந்து தட்டச்சுகிறேன். பக். 90)

அடுதீ = மடுக்கும் தீ, அதாவது சமைக்கும் தீ. இதனைக் கலித்தொகை கொண்டு விளக்கலாம்.
அடுத்தல் < மடுத்தல், அடுப்பு < மடுப்பு என அறியலாகும்.
மடுத்தல் = சமைத்தல் (சங்க இலக்கியச் சான்று)
எனவே தான், மடுப்பு > அடுப்பு; மடுத்தல் > அடுத்தல் (சமையல்)

கலித்தொகை 59

ஆய்தொடி யைதுயிர்த் திவனுண்ணோ யாதென்னு
நோயிலை யிவட்கென நொதுமலர் பழிக்குங்காற்
சிறுமுத்த னைப்பேணிச் சிறுசோறு மடுத்துநீ
நறுநுத லவரொடு நக்கதுநன் கியைவதோ;
எனவாங்கு;

நச்சினார்க்கினியர் மடுத்தல் = சமைத்தல் என விளக்குகிறார்:
எ - து: ஆராய்ந்திட்ட தொடியினையுடையாய்! நீதான் ஐதாக உயிர்த்து இவன் மனத்திலுண்டாகிய நோய் யாதென்று கேட்கும் நோய் இவட்கு இல்லை யென்று யான் கூற அதுகேட்டு அயலார் நினைப்பழிக்குமளவிற் சிறிய குழமகனைப் பேணி வளர்த்து அவனுக்கு வேறொருத்தியுடைய பெண் மகனைக் கோடற்குச் சிறுசோற்றைச் சமைத்து ஆயத்திற்கு இட்டு நீ நறிய நுதலையுடைய மகளிரோடே மகிழ்ந்த நோன்பின் பயன் நினக்கு வந்து பொருந்துமோ? பொருந்தாது காண்; எ - று.

எனவாங்கு
எ-து; என்று; எ - று. ஆங்கு - அசை. ||

இங்கே பெண்மகன் என்பது வரலாற்றில் பல்லாயிரம் காலமாக ஆழ்ந்த சொல். கன்னித்தமிழ் என்று கொற்றவை காக்கும் என்றுமுள தென்றமிழ் என்பது பழையவழக்கு. அக் கன்னியை (தமிழர் தெய்வத்தை) அம்மன் என்பதும், நகர் என்னும் விடங்கர் (முதலை) இலிங்க வடிவில் தொழும் தேவரடியாள்கள் நக்கன் என்று பெயர் பெறுதலும் பொது அம்பலங்களில் வாழும் பெண்டிருக்கு ஆண்கள் போல -ன் விகுதி பெறுவது பற்றி விரிவாகப் பேசலாம். வாடாள் என தமிழல்லாப் பிற இந்திய இலிபிகளில் எழுதினால், தமிழில் வாட்டாள் என்றும், வெங்காலூரில் (கொங்கில் வெங்கால நாடு, கேரளத்தில் வெங்கால்நாடு) உள்ள காட்டுமல்லேசுரம் காடுமல்லேசுரம் என கன்னடலிபி ஆதலும் (காட்டுமல்லிகை = அதிரல் என்னும் காட்டுமுல்லைக் கொடி), கார்த்திகை கார்திகை என வடமொழியில் தமிழின் அரத்தனம் > ரதனம் என ஆதலும். அரத்தம் = சிவப்பு, எனவே ரத்தம். தமிழில் அரதனம் இன்றும் ரத்தனம்/ரத்தினம், அதுபோல, நக- > நக்கன் என தேவரடியார்கள் பட்டம் - சோழர் கல்வெட்டுக்களில். விரிவாக, இன்னொரு சமயத்தில் நக்கன் என்ற தேவரடியாள் குறிக்கும் சொல்பற்றி எழுதுகிறேன். ஐராவதம் ஐயாவின் நக்கன் என்ற கட்டுரை படிக்கலாம். அதற்குப் பின்னூட்டமாக அமையும்.

உலை மடுத்தல் = உலையேற்றிச் சமைத்தல்,
தீமடுத்தல் = தீயினால் சமைத்தல்
சோறுமடுத்தல் (சங்க இலக்கியத்தில்) = சோற்றைச் சமைத்தல்.

 இம்மாலை
ஐய ரவிரழ லெடுப்ப வரோவென்
கையறு நெஞ்சங் கனன்று தீமடுக்கும் (கலித்தொகை)

எ - து: இம்மாலைக்கண்ணே, இருடிகள் விளங்குகின்ற அழலை ஆவுதி பண்ணிஎழுப்ப, என்செயலறுநெஞ்சம் தானுங்கொதித்து எனக்குங் காமத்தீயைக் கொளுத்தும். எ - று. (நச்சினார்க்கினியர்).

மடை அடும் பால் = மடைப்பள்ளியில் மடுக்கும் பால்

இடைதெரியா வேஎ ரிருவருந் தத்த
முடைவனப் பெல்லா மிவட்கீத்தார் கொல்லோ
படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும்
பாலொடு கோட்டம் புகின்  (கலித்தொகை)

எ - து: தம்மில்வேறு பெயர்விளங்கி அழகையுடையராகிய உருப்பசியும் திலோத்தமையும் தம்முடைய தம்முடைய அழகையெல்லாம் இவட்குக் கொடுத்தார் கொல்லோ? அது தெரிந்ததில்லை; இவள் தெய்வத் திற்குப் பலியாகச்சமைக்கும் பாலோடே காமன்கோயிலிலே செல்லில் அக்காமனும் நெஞ்சழிந்து தன்கையிற் படையை மிகவும் போகடுவன். எ-று.  (நச்சினார்க்கினியர்)

 

மடுப்பு = மூட்டுதல், அடைவு ; நிறைப்பு ; உண்கை, சேர்த்தல், ....
நீரை நிரப்பிச்/மூட்டிச் செல்லும் மடை. மடுத்துச் செல்தலால் மடை.

சமையல்காரனுக்குப் பழைய பெயர் மடையன்/மடைச்சி.
அடுப்பில் தீ மடுக்கும் இடம் மடைப்பள்ளி. அங்கே 
பக்தர்களுக்கு உணவு கிடைக்கும். எனவே, மடம் (< மடுத்தல் = சமைத்தல்).

மடுத்தல் = அடுப்பில் ஏற்றித் தீ மூட்டிச் சமைத்தல்.
எனவே, மடுப்பு > அடுப்பு

வளைத்து நின்று ஐவர் கள்வர்
            வந்துஎனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்து உலையை ஏற்றத்
            தழல் எரி மடுத்து நீரில்
திளைத்து நின்று ஆடுகின்ற
            ஆமைபோல் தெளிவு இலாதேன்
இளைத்து நின்று ஆடுகின்றேன்
            என்செய்வான் தோன்றினேனே.

சமணமுனிவர் தோலாமொழித் தேவர்
சூளாமணியில் மடுப்பு > அடுப்பு என்ற
சொல்முளை காட்டும் பாடல் தந்துள்ளார்:

மலையெடுத் திடுகோ மாநிலம் பிளக்கோ
     மறிகட லறவிறைத் திடுகோ
வுலைமடுத் துலகம் பதலையா வூழித்
     தீமடுத் துயிர்களட் டுண்கோ

சிலையிடத் துடையார் கணைவலத் துடையார்
     சிலர்நின்று செய்வதீங் கென்னோ
நிலையிடத் தவரு ணிகரெனக் குளரே
     னேடுமின் சென்றென நின்றான்.
 
     (இ - ள்.) மலை எடுத்திடுகோ - உலகின்கண்ணுள்ள இமய முதலிய மலைகளைத்
தூக்குவேனோ! அல்லது, மாநிலம் பிளக்கோ - பெரிய பூமியை இரண்டாகப் பிளப்பேனோ!
அன்றி, மறிகடல் அற இறைத்திடுகோ - அலைகள் மறிகின்ற கடல்கள் நீர் அற்றுப் 
போம்படி காலால் எற்றுவேனோ! அன்றி,
உலகம் பதலையா - இவ்வுலகமே ஒரு
பானையாகக்கொண்டு, உலைமடுத்து - அப்பானையை அடுப்பில் ஏற்றி வைத்து, ஊழித்தீ
மடுத்து -அவ்வடுப்பில் ஊழித்தீயைக் கொளுவி, உயிர்கள் அட்டு உண்கோ - உயிர்களைச்
சமைத்து உண்பேனோ,
(என் பெருமைக்கேற்ப இன்னோரன்ன செய்வதல்லாமல்,)
சிலையிடத்துடையார் - வில்லை இடக்கையிலுடையராய், கணைவலத்துடையார் - 
அம்புகளை வலக்கையிலுடையராய், சிலர் - ஒருசில பேதையர் ஈண்டு உளர், நின்று 
செய்வது ஈங்கு என்னோ - இவ்விடத்தே நின்று யாம் செய்தற்குரிய செயல் யாதுளது?,
நிலையிடத்தவருள் - இப்போர்க்களத்தே நிற்குமவருள், எனக்கு நிகர் உளரே - எனக்கு
நிகராய் நின்று போர் செய்வாரும் உளர்கொல்லோ!, சென்று நேடுமின் - உளராயில் நீயிர்
சென்று தேடுங்கோள் என்று கூறி, நின்றான் - ஓரிடத்தே நிற்பான் ஆயினன், (எ - று.)
அவ்விடத்தே தோன்றிய தூமகேதனன், மலை எடுத்திடுதல் முதலிய அருஞ்செயலைச் 
செய்வதன்றி, ஈண்டு வில்லுங் கணையும் கொண்டு நிற்கும் புல்லியரோடு யான் போர்புரிதல்
தகுமோ! இக்களத்தே என்னோடு எதிர்க்கும் ஆற்றலுடையார் யாரேனும் உளராயின்
அவரைத் தேடுங்கோள் எனக் கூறி நின்றான் என்க.
 

நா. கணேசன்
 

10 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:29 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jan 12, 2016, 7:18:33 AM1/12/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham
On Saturday, January 9, 2016 at 10:03:22 AM UTC-8, வேந்தன் அரசு wrote:

9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Friday, January 8, 2016 at 8:29:14 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
மகர ஒலி என்றும் மருவாது.

பொருள் என்ன?  


அம்மா. மா, மம்மிம் உம்மா என பல மொழிகளிலும் மகரம் மருவாமல் இருக்கு. காரணம் ஒட்டிய இரண்டு உதடுகளும்  திறந்தலா ஒலிப்பது.
பகரத்தல் நான்குவகை ஒலிப்புகள் இருப்பதுபோல் மகரத்தில் இல்லை

அதுபோல் ஓகாரமும்

மகள் - மோளே(மலையாளம்)
கோழி- கோடி(தெலுகு) ஓகாரம் மாறலை.
ஆம் = ஓம் ( ஈழம்)
ஐயா = யோவ் (கொச்சைத்தமிழ்)
போ = ஓகு (கன்னடம்) ஓகாரம் மாறலை


பிரணவத்தில் ஆ- என்னும் ஒலி ஓ- என்றாகிறது. இது தமிழ்ச் சொல்.
ஆ(ம்) > ஓ(ம்): 1917 என்சைக்ளோபீடியாவில்
 Om by Keith, A, B., pages 490 to 492 in Encyclopaedia of Religion and Ethics, editor James Hastings, Vol. IX, Edinburgh 1917
(இந்த கட்டுரையை வெள்ளுரையாத் தரணும்).

முத்துஸ்வாமி தீக்ஷிதர் தன்னூரில் உள்ளவரைப் பாடும் ‘வாதாபி கணபதிம் பஜேஹம்’ பாடலில் “பிரணவ ஸ்வரூபம்”
என வலஞ்சுழி கணபதியைப் பாடுகிறார். இப்படி உருவம் அமைப்பது 4500 ஆண்டுகளாய்
தமிழர்களுக்கு மரபு. உ-ம்: 4500 ஆண்டு முன்னர் நட்சத்திரங்களை மீனாக வரைந்துள்ளனர்.

18 ஆண்டுகளுக்கு முன் ஒரு மடலில் எடுத்தாண்ட கட்டுரை:
*Also in early Upanisads "Om" means just "yes," equivalent to
*"tathaa." Is it possible that it could have first just been an
*affirmative  particle that later gained its cosmic signifcance
*and was not fabricated from the vowel tables of the Sanskrit
*alphabet?

  Please see the important publication establishing
  'Om' to be of Dravidian origin:

Parpola, Asko, 1981. On the primary meaning and etymology of the
sacred syllable ôm. Pp. 195-213 in: Asko Parpola (ed.), Proceedings
of the Nordic South Asia Conference held in Helsinki, June 10-12,
1980. (Studia Orientalia, 50). Helsinki: The Finnish Oriental Society.

Summary of the main theses:
Original meaning: Om in the Vedic ritual = 'yes', om = tathâ = 'yes'
also in ordinary conversation, and in the Chandogya Upanishad ôm is
expressly said to be a word expressing agreement.
Etymology: < Dravidian âm < âkum 'yes' < 'it is (fitting, suitable)',
â labialized by the following m as Jaffna Tamil ôm < âm.

--------------------------------------------------------

ஆ > ஓ (காட்டு: ஆம் > ஓம்) என்றாதல் சொன்முதலில் மட்டுமில்லை,
சொற்களுக்கிடையிலும் உண்டு என்பதைக் கொங்குநாட்டின்
சமணமுனிவர் பவணந்தி நன்னூல் சூத்திரத்தாலும், முத்துவீரியத்தாலும்
அறியலாம்.

|| செய்யுட்கண் ஆகாரம் ஓகாரமாதல்

505. யாப்பினுள் ஆ, ஓ வாகலு முளவே.

(இ-ள்.) செய்யுளுள் ஆகாரம் ஓகாரமாய்த் திரிதலுமுளவா மென்க.

(வ-று.) வில்லான், வில்லோன், தொடியான், தொடியோன், நல்லார், நல்லோர்.

(வி-ரை.)

‘பெயர்வினை யிடத்து னளரய ஈற்றயல்
ஆஓ ஆகலும் செய்யுளுள் உரித்தே’ (பொது - 2)

என்ற நன்னூல் நூற்பாவைக் கொண்டு இதன் கருத்தை நன்கறியலாம்.
எடுத்துக்காட்டில் னளர ஈற்றயல் ஆகாரம் ஓகாரம் ஆதற்கு மட்டுமே உள்ளன. 
‘வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ (அகம் - 80) என்பதால் யகர ஈற்றயலும் ஆ
ஓவாகும் என அறியலாம். (48) ||


நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jan 12, 2016, 9:18:14 AM1/12/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, santhav...@googlegroups.com, sethuk...@gmail.com, doraisu...@gmail.com, erodetam...@gmail.com, sirpip...@gmail.com, tamiz...@gmail.com, svs....@gmail.com, glh...@berkeley.edu, lsri...@gmail.com, lsri...@yahoo.com, rajan...@gmail.com, theodore...@gmail.com, v.y.man...@gmail.com, dinam...@hotmail.com, urnag...@gmail.com, iravath...@gmail.com, ysra...@gmail.com, Asko Parpola
திருவாசகம் சிவபுராணத்தில் 
”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”

மோய்தல் > ஓய்தல் என வரும். 
(1) மலர் > அலர், (2) மர்மம்/மம்மம் > அம்மம், (3) மாசு > ஆசு, (4) மணி > அணி, (5) மிளை > இளை, (6) முள்ளல் > உள்ளல் (மீன்), 
(7) மாற்று/மாட்டு> ஆற்று/ஆட்டு (to do,cf. மாட்டோம் in the negative)  (8) மடுப்பு > அடுப்பு  (9) மோய்தல் > ஓய்தல்.... போல.
"மோய உரைப்பனியான்” என்பதன் மோய்தல் பொருளை உரைகாரர்கள் எழுதிஉள்ளனர். 
மகர வர்க்கத்தில் தொடங்கும் அடிகளில் மோய்- என்னும் சொல் உள்ள பாடல்கள்
கம்பனிலும் உண்டு. பிற இலக்கியங்களிலும் இருப்பவை. மோனையை வைத்துப் பார்த்தால் தெரிந்துவிடும்.
அவற்றை மோய்தல் என்ற வினைச்சொல்லை அறியாததால் ஓய்தல் என்று அச்சிட்டிருப்பர்.

மூய்தல்/மோய்தல் = முடிதல், பூர்த்தி ஆதல்.
’கலியாணம் மூய்ச்சாச்சு’ என்பது கொங்குவழக்கு. மணமுடிந்தது எனப் பொருள்.
மோய்தல் என்றுள்ள பாடல்களை திருவாசகம் போல மற்றவற்றில் உள்ளவற்றைத்
தேடித் தொகுத்தல் நன்று.


மாமரம் > ஆமர > ஆம்ர என ஹிந்தி போன்ற மொழிகளில் தமிழின் திரிபாக விளங்குகிறது. அதுபோல், Burma தேசப் பெயர் சொன்முதல் மகரம் இழப்பதால் அரமணம் என்றாகியுளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு எழுதுங்கல்வி கிரந்தலிபியால் உருவானது. அளித்தவர்கள் தமிழரும், ஆந்திரரும் ஆவர். இந்தியாவின் லத்தீன் லிபி என்றால் அது கிரந்தமே. வட்டெழுத்தை தூக்கிவிட்டு தமிழை கிரந்தத்தால் எழுதச் செய்தவன் ராஜராஜசோழன் ஆவான். சங்க நடை போன்ற மரபுச் செய்யுள் எழுதுவாருக்கும் பத்திரிகைகளுக்கும் தமிழ் இலிபி. மற்ற இந்திய மொழிகளைப் படித்தறிய - மலையாளம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, .... போன்ற பிற இந்தியபாஷைகள் - கிரந்தத்தை கணினி போன்றவற்றில் கைக்கொள்ளலாம். நாகரம் மட்டுமன்றி எல்லா இந்திய லிபிகளும் இந்திய யூனியனில் வாழ கிரந்தமும் உதவும். பல மொழிக்குடும்பங்களை கிரந்தங் கொண்டு எழுதியிருப்பதை வரலாறு காட்டுகிறது. தேவாரம், ஆழ்வார் அருளிச்செயல் எல்லாமும் கிரந்த எழுத்தில் தாய்லாந்தில் கூடக் கிடைக்கின்றன. கிரந்தலிபியை தமிழர்கள் தென்கிழக்கு ஆசியாவில் பரப்பி அவர்கள் பாஷைகள் எல்லாவற்றையும் கல்விக்குட் செலுத்த உதவினர். எனவே, அந்நாடுகளின் பெயர்கள் பல தமிழர் தந்ததாக இன்னும் விளங்குகின்றன.

மலையகம்/மலாயா என்னும் மலேசியா மலை என்னும் தமிழ்ச்சொல். மலைகள் நிறைந்த நாடு. பொலிகிற தீவு பொலிதீவு/பலிதீவு (Bali). வருண தீவு - Borneo. கம்போதியா தென்கிழக்கு ஆசியாவின் தலைமையரசு ஆவதன் முன்னர் யாவகம் என்னும் சாவகம்/ஜாவகம் தான் தலைநகர்.இதன் பெயர் யா மரத்தால் ஏற்பட்டது. யா மரங்கள் பற்றி ஏராளமான செய்திகளைச் சங்க இலக்கியத்தில் படிக்கலாம். யா மரங்களில் 300க்கும் மேற்பட்ட இனங்கள் யாவக தீவிலும் இந்தோனேசியாவிலும் வாழ்கின்றன. இன்று பேரழிவுக்கு பெருங்காடுகள் உள்ளாகிவருகின்றன. யாவகம் - மணிமேகலையின் சாவகத் தீவு.
யாவக தீவுக்கு பெயர் தரும் யா மரங்கள்:

இலங்கை யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி இருக்கிறது. இலங்கை தீவின் பாலி இலக்கியங்களிலே ரமணதேசம் எனப்படுகிறது மியான்மார் நாடு. இதன் சரியான பெயர் அரமண தேசம் என்பதாகும் என இரா. இராகவையங்கார் (தமிழ் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு) விளக்கியுள்ளார்கள். https://en.wikipedia.org/wiki/Ramannadesa
கறி என்பதை curry என ஆங்கிலத்தில் எழுதுதல்போல ரமணதேசம் ஆங்கிலத்தில் ramannadesa ஆகிறது. பழைய தமிழ்ப் பெயரான அரமணநாடு என்பதன் தாதுவை  தென்கிழக்காசியாவின் வரலாற்றறிஞர்கள் மேலைப் பல்கலைகளிலோ, அந்நாடுகளிலோ இன்னும் எழுதவில்லை. அரமணம் என்னும் ம்யான்மார் தேசம் அருமணம் எனவும் கல்வெட்டுகளில் வழங்கிற்று. யானைகளுக்கும், தந்தத்துக்கும், அகில் என்னும் நறுமணப் பொருளுக்கும், குங்கிலியம், சாம்பிராணி போன்ற மரங்கள் தரும் நறுமணப் பொருள்களும் தமிழர்கள் அரமண நாட்டினின்றும் இறக்குமதி செய்தனர் என்பது சரிதம். அடம்பு/அடும்பு, அணங்கு/அணுங்கு, போல அரமணம்/அருமணம் என்றும் பதியப்பட்டுள்ளது. கொங்குநாட்டின் சமணக் குரவடிகள் அடியார்க்குநல்லார் இல்லாவிடில் தமிழிசையின் வரலாறே விளங்காது. அவர் அருமணவன் = அகில்வகை என்பதையும் விளக்கியுள்ளார்கள்:
அருமணவன் - A kind of eagle-wood, used as incense; அகில்வகை. (சிலப். 14, 108, உரை.)
அரமணம் தருவது அருமணவன். நன்னூலின் முதல் உரை மயிலைநாதர் என்னும் கொங்குநாட்டு முனிவர் செய்தது. அதிலும், அருமணவன் வருகிறது: MTL gives:
"அருமணம் arumaṇam , n. See அருமணவன். (நன். 272, மயிலை.)
அருமணவன் arumaṇavaṉ , n. 1. Name of an island noted for elephants and aromatics; ஒரு தீவு. அருமணவ னானை (திவ். திருநெடுந். 14, வ்யாக்.). 2. Elephant from the above island; அருமணத் தீவின் யானை. (நன். 275, மயிலை.)"

அகிலும், தேக்கும், வேங்கையும், யா (/ஆ = ஆச்சா, நச்சர்)இன்னபிற மரங்களும் நிறைந்த நாடு  மரமண நாடு. மரமண > அரமண-/அருமண-. 
ஒப்பீடு: மர்மக்கலை > வர்மக்கலை. தமிழின் மருமன் > வர்மா (வடமொழி) ரமணதேசம் என பாலி இலக்கியமும், அரமண/அருமண நாடு என தமிழரும் அழைத்த மரமண நாடு வரமண நாடு ஆகி, வர்மா (Burma) எனப்படுகிறது. மரமணம் மிகுந்த நாடு அரமணநாடு. மலர் > அலர் போல்,  மரமண > அரமண தேசம் (=ரமண தேசம்). https://en.wikipedia.org/wiki/Ramannadesa அரமணத்தின் தலைநகர் கடாரம் என இராகவையங்கார் எழுதியுள்ளார்.


நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 13, 2016, 6:14:01 AM1/13/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, santhav...@googlegroups.com


On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
>மடுப்பு  > அடுப்பு

”போர் அடுதானை சேரலாத!”

”நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”


உவமையாகு பெயர்கள் பல அறிவோம். உவமையாகு வினைசொற்கள் பற்றி காட்டுகள். வரையறைகள் உண்டா?
உ-ம்: சமைத்தலுக்கும், போருக்கும் ஒப்புமைகள் தென், வட மொழிப் பழமையான இலக்கியங்களில் உண்டு.
எனவே, அடுதல் என்பது உவமையாகு வினைச்சொல் எனலாம்.

அடுத்தல்/அண்டுதல்/அட்டை/அள்ளை - நெருங்குதல் என்னும் வினைச்சொல்லும்,
களவேள்வியில் அழித்தல்/சமைத்தல் என்று பொருள்படும் அடுத்தல் (< மடுத்தல்)
வெவ்வேறான தாதுக்கள் கொண்டன. அடு- < மடு-: In the Heroic Age classics
(Greek, Latin, Sanskrit and Tamil), the King roasted the enemies, he parched the enemies in battle, etc.,
are common.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 14, 2016, 8:21:13 AM1/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, santhav...@googlegroups.com, DEV RAJ
On Tuesday, January 12, 2016 at 6:27:53 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:

12 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

திருவாசகம் சிவபுராணத்தில் 
”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்”


நிலைமொழியின் இறுதி ம் இல்லாமல் இப்படி வரும் இடங்களை தேடவும்,

ஆம். தேடினால் கிட்டும். உ-ம்: கம்பனில் மு-/மோ- எனத் தொடங்கும் அடிகளில்
மோனைக்கு மோய்- என வருகிறதா எனப் பார்க்கலாம். ஓய்- என அச்சிட்டிருக்க வாய்ப்புகள் பல.
சிந்தாமணி, சூளாமணி, சிலம்பு, பெரியபுராணம், தேவாரம், நாலாயிரம், ..... பார்க்கலாம்.

விள்-/வெள்- என்பது போல தமிழின் அடிப்படையான வினைச்சொல் ஜோடி மூய்-/மோய்-
கலியாணம் மூச்சாச்சு, மூஞ்சுபோச்சு போன்ற கொங்குவழக்குகளிலும்,
முய்-/மொய்- என உற்றார், உறவினர் கலியாணம் முய்க்க (=முடிக்க) தரும் பணம் இச்சொல்லால் வருவது.
மூய் என்றால் மூடி (உ-ம்: சட்டியை மூடி வைக்கச் சொல்லும் சொல்). இதைத்தான்
மாணிக்கவாசகர் ’முந்தைவினை முழுதும் மோய உரைப்பன் யான்’. எனப் பயன்படுத்துகிறார்.
உரைகாரர்கள் விரிவாக எழுதியுள்ளனர், பார்க்கவும்.

சந்தவசந்தத்தில் வித்தக இளங்கவி விவேக்பாரதி (பெயரைப் பாருங்கள் பாரதமாதாவின் எழுச்சிக்கு
கால்கோள் இட்டவர் சுவாமி விவேகானந்தர், பாரதாமாதாவை தமிழ்நாட்டுக்குக் கொணர்ந்தவர்கள்
வஉசி, பாரதியார். பாரதமாதா பள்ளியெழுச்சி தந்தவர் பாரதியும் பெயரில் இருக்கிறார்: விவேக்பாரதி! வாழ்க)
காளமேகம் வெண்பாக் காட்டினார்:

பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க
டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் - சிகந்த
நுசுமகரங் கும்பமீ னம்பன் னிரண்டும் 
வசையறுமி ராசி வளம் .

கும்பமீனம் என்பதைக் கும்பம் மீனம் எனப் பிரிக்கவேண்டும் அல்லவா?
அதுபோலத்தான், ”முழுதுமோய” என்பதைப் ”முழுதும் மோய” எனப் பிரித்து உரை
தருகின்றனர் தமிழ்ப் பெரும்புலவர்கள். கம்பன் உதாஹரணம் உவமையாகுவினை
பற்றிய வினா விடையில் பார்ப்போம்.

உவமையாகு வினைச்சொல்லாக மடுத்தல்/அடுத்தல் ‘சமைத்தல்’ என்னும்
வினையானது அரசனின் போர்க் களவேள்விக்கும் வருகிறது எனக் குறிப்பிட்டேன்.
களவேள்விக்கும், சமையலுக்கும் உள்ள தொடர்புகளை வேதம், சங்க
இலக்கியங்களிலிருந்து அருமையாகக் காட்டியுள்ளார் மஹாவித்வான், கவிபாஷாசேகரர்
ரா. ராகவையங்கார் அவர்கள். அதனை அனுப்புகிறேன் பின்னர்.

On Sunday, January 10, 2016 at 11:47:38 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
>மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
>மடுப்பு  > அடுப்பு

”போர் அடுதானை சேரலாத!”
”நீர் நாடன் கூடாரை அட்டகளத்து”



மடுத்தல்/அடுத்தல் - உவமையாகுவினை இங்கே. 
அது சரியே. ஆனால் நான் கேட்பது,

அடு= அட்ட ஆவதுபோல் மடு = மட்ட ஆகி அதே பொருளைக்கொடுக்கிறதா?


ஆமாம். மட்டம் = லெவெல் என்ற சொல் இருப்பதால், மட்டித்தல் என வருகிறது.
மட்டித்தல் - இதன் முதன்மைப் பொருள் "அழித்தல்"..

மணி கொள்குட்டிம மட்டித்து, மண்டபம்
துணி படுத்து,அயல் வாவிகள் தூர்த்து, ஒளிர்
திணி சுவர்த்தலம் சிந்தி, செயற்கு அரும்
பணி படுத்து,உயர் குன்றம் படுத்துஅரோ - கம்பன்.

ஏடுகளில்,’மணிகொள்குட்டிமமட்டித்து’ என இருப்பதை
’மணிகொள் குட்டிமம் மட்டித்து’ எனப் பிரிக்கிறோம்.
‘மணிகொள் குட்டிமம் அட்டித்து’ எனப் பிரித்தால் மோனை பொருந்தாது. மட்டித்தல் = அட்டித்தல் என்றாலும்.
(மலர்முலை ஆகம் என்ற உதாரணமும் மோனைக்கு நோக்கினோம்).

இலஞ்சி/ஈரோடு/சென்னை தேவராஜன் அவர்கள் சுந்தர காண்டம் வான்மீகி, கம்பன் ஒப்புமை சொன்னார்:
வால்மீகியின் ‘வாக்யக்ஞன்’ கம்பரின் ‘சொல்லின் செல்வன்’ ஆகிறான்.

கண்டேன் சீதையை - இரு ராமாயணங்களிலும் :

த்ருஷ்டா ஸீதா மஹாபாஹோ ......
த்ருஷ்டா தேவீ   ந ஸந்தேஹ: .......
                                        (வால்மீகி)

கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்  (கம்பர்)

மணி ஸ்ப²டிக முக்தாபி⁴​: மணி குட்டிம* பூ⁴ஷிதை​: |
தப்த ஹாடக நிர்யூஹை​:  ராஜத அமல பாண்டு³ரை​: || 5-3-9||

(வா0 ரா0)

மணி கொள்  குட்டிமம்*  மட்டித்து, மண்டபம்
துணி படுத்து, அயல் வாவிகள் தூர்த்து .......

(க0   இரா0)

மணி குட்டிமம் - மணிகொள் குட்டிமம் (pials inlaid with precious stones)

இரண்டும் சுந்தர காண்டத்தில்.”

-------------------------------------------------------------------------

மடு- > அடு- : மட்டித்தல் > அட்டித்தல்

*9
தேனப் பூ வண்டு உண்ட கொன்றையான்காண்;
திரு ஏகம்பத்தான்காண்; தேன் ஆர்ந்து உக்க
ஞானப்பூங்கோதையாள் பாகத்தான்காண்;
நம்பன்காண்; ஞானத்துஒளி ஆனான்காண்;
வானப் பேர் ஊரும் மறிய ஓடி
மட்டித்து நின்றான்காண்; வண்டு ஆர் சோலைக்
கானப்பேரூரான்காண்; கறைக்கண்டன்காண்---
காளத்தியான்அவன், என் கண் உளானே.

வானப்பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் (காண்)
stood destroying, even the heaven to made it fall down running towards it; (மட்டித்தல் destruction)

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 16, 2016, 9:26:41 PM1/16/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham
மடுத்தல்:அடுத்தல் ‘சமைத்தல்’ வினையிலிருந்து மட்டித்தல்:அட்டித்தல் ‘அழித்தல்’ (போரில்)
என உவமையாகுவினைச் சொல்லாகப் பயன்படுகிறது. அதனை முன்னர் பார்த்தோம்.

மட்டித்தல்:அட்டித்தல் - சேர்த்தல்,  இணைத்தல், பூசுதல், அப்புதல் என்ற பொருளிலும்
பல இடங்களில் பயில்கிறது. முக்கியமான பழைய நகைக்கு ஒரு பெயர் தரும் வினைச்சொல்
இஃது.

மட்டனம் maṭṭaṉam, n. . Smearing, rubbing over; பூசுகை. மான்மதக் கல வைச் சாந்த மட்டனஞ் செய்து (திருவிளை. உக்கிர. வேல்வளை. 45).

மட்டிகை maṭṭikai, n.  Seal of cowdung put upon bundled sheafs of paddy or straw on the threshing-floor or upon corn sacks; களத்தில் வைக்கோல் அரிக்கட்டு முதலிய வற்றின்மேல் இடுஞ் சாணிமுத்திரை. (M. M. 483.)

பூசுதல் என்னும் பொருளுடைய மர்த-/மர்திக- என்னும் வடமொழி வினைச்சொல் இதிலிருந்து
வந்ததெனக் கொள்ளலாம்:

மட்டித்தல் To put on, clap on, daub, as sandal paste; பூசுதல். குளிர் சாந்த மட் டித்து (திவ். நாய்ச். 6, 10).;  To cleanse, as the floor; மெழுகுதல். மணிநிலஞ் சந்தனங்கொண்டு மட்டியா (மேருமந். 629); To mix and knead; பிசைதல். சுண்ணமொடு மட்டித்துக் கலந்த குங்குமக் கொழுஞ்சேறு (பெருங். உஞ்சைக். 40, 222-3). 

Oyster = மட்டி/மட்டம் (due to its joined shell). ஆய்ஸ்டர்கள் மிகுந்த பகுதி மட்டக்களப்பு.
களர் நிலம் - களப்பு. Batticola எனப்படும் ஈழ நாட்டு ஊர். மரமணம் > அரமணம் என்னும்
ரமண தேசம், மரமண > வரமண > Burma என அழைக்கப்படுதலுக்கு மட்டக்களப்பு Batticola
ஆதலை ஒப்பிடுக. மண்ணான்:வண்ணான், மருமம்:வரும- (க்ஷத்ரியர் பெயர், உடற்காப்புக்கலை)
போல. மட்டி/மட்டம் ஆய்ஸ்டர்-மீனின் ஓடு. எப்பொழுதும் ’ஆய்ஸ்டர் ஷெல்’ மட்டித்து (= சேர்ந்து,
இணந்து, பூண்டு) இருப்பதால் மட்டச்சிப்பிமீன் எனப்படுகிறது. அதனால் கடற்கரை நகரப் பெயரும்.
மட்டிச் சிப்பி = Oyster shell. இதே வேர்தான், தேங்காய் மட்டை

மேலே, சேர்த்துக்கட்டிய வீடு மாடி/மாடம். அட்டாலை/அட்டாலி - மேல்வீடு (< மட்டாலை).
அட்டிகை < மட்டிகை (cf. மட்டி = oyster shell):
அட்டிகை aṭṭikai, n. < K. aḍḍike. cf. அட்டு-. Closely fitting necklace of gold wires or of precious stones; கழுத்தணிவகை.
அட்டியல் aṭṭiyal, n. [T. aḍḍigalu.] Closely fitting necklace. See அட்டிகை.
அட்டியல் < மட்டியல்.
அட்டாளை aṭṭāḷai, n. < aṭṭāla. Covered platform for watching a garden; காவற்பரண். (J.)
அட்டாளைப்பெட்டி aṭṭāḷai-p-peṭṭi , n. < id. +. Case of shelves; தட்டுக்கள் உள்ள பேழை. Loc.

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

மட்டித்து:அட்டித்து - கனக்கப் பூசி
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்
(ஆளுடையபிள்ளை திருவுலா மாலை, 11-ஆம் திருமுறை).

திருமங்கை மன்னர் நடராஜா ஆடும்போது
தோளிலே மட்டித்த (= பொருந்திய/சேர்ந்த/இணைந்த) 1000 கைகளும்
திசைகள் எல்லாம் ஆடுதலைப் பாடுகிறார்: பெரிய திருமடல் பாசுரம்,
மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா          (2750)
மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,
அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர்,
பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,
தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங்
கன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள்           (2751)
மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,
தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,
கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,
அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?,

மங்கையாழ்வார் சிவபிரானின் தோளில் பொருந்தும்
1000 கைகளை மட்டித்தல் என்கிறார். மட்டித்தல் > அட்டித்தல்
எனவும் வரும். தேவாரச் சான்று தரலாம்:

கருமானின்உரி-அதளே உடையா வீக்கி,
கனைகழல்கள் கலந்து ஒலிப்ப, அனல் கை ஏந்தி,
வரு மானத் திரள்தோள்கள் மட்டித்து ஆட,
வளர்மதியம் சடைக்கு அணிந்து, மான் நேர் நோக்கி (அப்பர் தேவாரம்)

ஆயிரம்திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம்அசுரர் வாழும் அணி மதில்மூன்றும் வேவ
ஆயிரம்தோளும் மட்டித்து, ஆடிய அசைவு தீர,
ஆயிரம்அடியும் வைத்த அடிகள்---ஆரூரனாரே (அப்பர் தேவாரம்).

ஒவ்வொரு அடியிலும் அகர ஓசை சிறப்பாகப் பயிலுதலால்,
அட்டித்து என்பது இன்னும் பொருத்தம். அப்படிப் பழம்
பதிப்புகளில் பார்க்கலாம்.

ஆயிரம்திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம்அசுரர் வாழும் அணி மதில்மூன்றும் வேவ
ஆயிரம்தோளும் அட்டித்து, ஆடிய அசைவு தீர,
ஆயிரம்அடியும் வைத்த அடிகள்---ஆரூரனாரே (அப்பர் தேவாரம்)

(ஆண்டாள் வாரணம் ஆயிரத்திலும்
குங்குமம் அப்பி, குளிர்சாந்தம் அட்டித்து என்பதா?
குங்கும மப்பி, குளிர்சாந்தம் மட்டித்து என்பதா?
இருவகையிலும் பதிப்புகள் உண்டு.)
மட்டித்தல் > அட்டித்தல். சேர்த்தல், பொருத்தல், பூசுதல்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் 
யாப்பினுள் அட்டிய நீர் - குறள்
அட்டிய < மட்டிய = சேர்த்திய. இங்கே, ஊற்றிய.
தாரை வார்த்தலுக்கு அட்டிக் கொடுத்தல் என்பது கல்வெட்டு.
(அளகத்தின் அட்டிய தாது - திருக்கோவையார். 
அட்டுதல் < மட்டுதல் “சேர்த்துதல்/பொருந்துதல்”, அட்டிகை < மட்டிகை)

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 18, 2016, 6:32:17 AM1/18/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Santhavasantham
On Sunday, January 17, 2016 at 7:47:37 PM UTC-8, வேந்தன் அரசு wrote:
ரொம்ப பாடுபடுறீங்க. நன்றி


தமிழ் எழுதுவோரில் சொன்முதல்மெய் இழத்தலை மாற்றிச் சொல்வதால் பல புரியாமைகள் ஏற்படுகின்றன.
அதை விளக்கவே, இவ்விழை. ப. அருளி போன்றோர் எழுதியுள்ள அலர் > மலர், அம்மம் > மம்மம் ஏன் பொருந்தாது
என சொன்முதல்மெய் இழக்கும் எல்லாச் சொற்களின் தொகுதி பார்த்தால் புலனாகும். திரு. சேசாத்திரி
ப. அருளி எழுதுவதை எழுத, நீங்களும் உள்வாங்கி அலர் தான் மலர் ஆகும் என்று சொன்னதை இவ்விழையில்
உள்ள வார்த்தைகளைக் கொண்டு பார்க்கணும். மலர் தான் ஆதி. அலர் அதனின்றும் பிறப்பு.
அலர் ஆதி என்றால் (1) மாலை என்று ஏன் உள்ளது? (2) ஆலை என்றோ, சாலை என்றோ மாலைக்கு ஏன் பேரில்லை?
இப்பி > சிப்பி, அமணர் > சமணர் என எழுதுவதும் பார்க்கிறோம், அவற்றுக்கும் இக் கேள்விகள் கேட்டால் எந்த திசையில்
மாற்றம் என விளங்கிவிடும்.

மலர் > அலர், மோய்தல் > ஓய்தல், மடுப்பு > அடுப்பு, மட்டியல் > அட்டியல், மட்டணங்கால் > அட்டணங்கால்.
அட்டணைக்கால் - கல்வெட்டுக்களில் வரும், மாடி போல, கால்கள் உயரமாக வைத்து அதன் மீது அரசர்
அமரச் செய்யும் பீடம். அட்டணங்கால் - கால் மேல் கால் போட்டு அமருதல். அதிகாரத்தைக் காட்டுவது.
பழைய சினிமாப் படங்களில் கர்நாட்டிக் கச்சேரி நடக்கும் பிரமுகர்கள் முன்வரிசையில் அட்டணங்கால்போட்டு அமர்ந்திருப்பர்.
சிந்து முத்திரைகளில் கொற்றவை-விடங்கர் தம்பதியரின் பூசாரி அட்டணங்காலுடன் அமர்ந்திருப்பதையும்,
புலி அவன் ஏவலுக்குப் பார்த்துக் காத்திருப்பதும் காட்டியுள்ளேன். அட்டிகை, அட்டணங்கால், ... 
போன்றன மட்-மாட்- (மாடி, மாட்சி/மாண்பு) என்னும் ம்- என்பது பலரும் அறியாத செய்தி. கொங்குநாட்டுச்
சொல்லான இதற்குப் பிழைபட்ட விளக்கம் கொடுத்துள்ளார் ஒருவர்.

கொங்குநாட்டு எழுத்தாளர் வா. மு. கோமு ‘அட்டணங்கால்’ பயன்படுத்துகிறார்:
மெல்பர்னிலும், டாக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை மசக்காளிபாளையத்தில் அட்டணங்கால் போட்டு படுத்தபடி ரசித்து விடுகிறோம். பார்வையாளர்கள் அரங்கத்தில் புலி மாதிரியும், கரடிமாதிரியும் வேசம் போட்டு அமர்ந்து கொண்டு ஆட்டம் பார்க்கிறார்கள். கங்குலி ஐ ஆம் மிஸ் யூ என்றும் மம்மி ஐ ஆம் ஹியர் என்றும் கையில் அட்டைகள் வைத்து ஆட்டு ஆட்டென ஆட்டுகிறார்கள்.”

வா. மு. கோமுவின் இன்னொரு கதையில்:
”மீனாகுமாரி, நான் தங்கி இருக்கும் அறைக்குச் சொந்தக்காரருடைய ஒரே செல்ல மகள். அருகில்தான் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறாள். இப்படி உங்களை அமரவைத்து மீனாகுமாரிபற்றி ரகசியம் பேசுவது, அவள் குடும்பத்தாருக்குத் தெரிந்தால், இந்த நகரில் இப்படி இனிமையான வீடு எனக்கு இல்லை என்று ஆகிவிடும். இரண்டு, மூன்று நாட்கள் எங்காவது பிளாட்ஃபாரத்திலோ, பஸ் நிறுத்தத்திலோ, சுரங்கப் பாதையிலோ தலைக்குத் துணி மூட்டை கொடுத்து, அட்டணங்கால் போட்டுக்கிடக்க நேரிடும். புரிந்து இருப்பீர்கள்… இது ரகசியம்.”


ய்-, வ்-, ச்-, ம்-, ந்- இம் மெய்கள் கெட்டுத் தமிழில் பல சொற்கள் உருவாகியுள்ளன.
வார்-/வால்- :கீழே தொங்கும் தன்மையால். எனவே ஆலித்தல், மேலிருந்து கீழே விழும் மழைக்குப் பெயர்.
வால்- > ஆல்-  : ஆலிக்கட்டி = hailstone. விடங்கர் > இடங்கர்  (அலர்முலை ஆகம் போல, இடங்கர், ஆலித்தல் சங்க இலக்கியத்தில்.
இவை பிற்கால நிலை. அதற்கும் முந்தைய சொற்கள் மலர், விடங்கர், வாலித்தல், ... வேதத்திலும் இவ்வாறான சொற்கள் உண்டு.)
யால்- > ஆல் மரம் (cf. யானை). யாலுதல் செய்யும் விழுது, விழுதுபோலும் துதிக்கை)
சம்மணம் > அம்மணம் : சமண முனிகள் நிலை - உ-ம்: சிரவண பெளகுளத்திலே.
மர்மம்/மம்மம் > அம்மம், மலர் > அலர்.
நுண்ணி > உண்ணி (உண்ணி க்ருஷ்ணன் - குருவாயூரில், உண்ணி - நாயில் உள்ள நுண்ணிய ticks)


இச் சொற்றொகுதிகளை ஆராய்வோருக்கு “மெய்முதலா? உயிர்முதலா? - இச் சொற்களில்”
என்ற கேள்விக்கு விடை தெற்றென விளங்கும்.

NG
 
17 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:23 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Thursday, January 14, 2016 at 6:07:03 AM UTC-8, வேந்தன் அரசு wrote:

செய்யுள்களை விடுத்து தற்காலச்சொற்களில் மகரம் அகரமாக திரிந்தவை உண்டா


நம் கொங்கு மண்டிலத்தில் அதிகம் புழங்கும் ஒரு சொல்லையே தருகிறேன்.

மட்-/மாட்- என்ற தாதுமுளை பொருந்து-/பூசு/-இணை- என்ற பொருளுடையது.
மாடம்/மாடி. மாட்சி/மாண்பு =உயர்ச்சி, பெருமை, அழகு. 
மாண்டார் = உயர்ந்த நிலையில் வாழ்பவர்கள்.

மட்டி/மட்டம் = oyster. அதனால் மட்டக் களப்பு, இதனை சிங்களத்தில்
மடக்களப்பு என எழுதுவர். மரத்தாலாய சித்தம்பலம் சிதம்பரம்,
வெங்காலூரில் காட்டுமல்லேசுரம் காடுமல்லேசுரம், கார்த்திகை கார்திகை,
அரத்தனம் அரதனம் (ரத்னம்), நக்கர் நகர் (திருநள்ளாற்றில் நகவிடங்கர் லிங்கம்
- நேற்று நெட்ரம்பாக்கத்தில் கண்ட லிங்கம் வருணனைக் குறிப்பதாக தெரிகிறது.)
 என ஃபோனடிக் ஸ்க்ரிப்ட்ஸ் எழுதலை ஒத்தது - மட்டக்களப்பை மடக்களப்பு என எழுதல்.

மட்டனம் maṭṭaṉam, n. . Smearing, rubbing over; பூசுகை. மான்மதக் கல வைச் சாந்த மட்டனஞ் செய்து (திருவிளை. உக்கிர. வேல்வளை. 45).
மட்டிகை maṭṭikai, n.  Seal of cowdung put upon bundled sheafs of paddy or straw on the threshing-floor or upon corn sacks; களத்தில் வைக்கோல் அரிக்கட்டு முதலியவற்றின்மேல் இடுஞ் சாணிமுத்திரை. (M. M. 483.)

Oyster = மட்டி/மட்டம் (due to its joined shell). ஆய்ஸ்டர்கள் மிகுந்த பகுதி மட்டக்களப்பு.
களர் நிலம் - களப்பு. Batticola எனப்படும் ஈழ நாட்டு ஊர். மரமணம் > அரமணம் என்னும்
ரமண தேசம், மரமண > வரமண > Burma என அழைக்கப்படுதலுக்கு மட்டக்களப்பு Batticola
ஆதலை ஒப்பிடுக. மண்ணான்:வண்ணான், மருமம்:வரும- (க்ஷத்ரியர் பெயர், உடற்காப்புக்கலை)
போல. மட்டி/மட்டம் ஆய்ஸ்டர்-மீனின் ஓடு. எப்பொழுதும் ’ஆய்ஸ்டர் ஷெல்’ மட்டித்து (= சேர்ந்து,
இணந்து, பூண்டு) இருப்பதால் மட்டச்சிப்பி மீன் எனப்படுகிறது. அதனால் கடற்கரை நகரப் பெயரும்.
மட்டிச் சிப்பி = Oyster shell. இதே வேர்தான், தேங்காய் மட்டை

மேலே, சேர்த்துக்கட்டிய வீடு மாடி/மாடம். அட்டாலை/அட்டாலி - மேல்வீடு (< மட்டாலை).
அட்டிகை < மட்டிகை (cf. மட்டி = oyster shell); அட்டியல் < மட்டியல்
அட்டிகை aṭṭikai, n. < K. aḍḍike. cf. அட்டு-. Closely fitting necklace of gold wires or of precious stones; கழுத்தணிவகை.
அட்டியல் aṭṭiyal, n. [T. aḍḍigalu.] Closely fitting necklace. See அட்டிகை.
அட்டியல் < மட்டியல்.
அட்டாளை aṭṭāḷai, n. < aṭṭāla. Covered platform for watching a garden; காவற்பரண். (J.)
அட்டாளைப்பெட்டி aṭṭāḷai-p-peṭṭi , n. < id. +. Case of shelves; தட்டுக்கள் உள்ள பேழை. Loc
ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச் செய்வது, எனவே: அட்டாளை < மட்டாளை.

கோத்தல் என்னும் வினையால் தமிழர் உடையான கோமணம்/கோவணம் பெயர் பெறும்.
கௌபீனம் என்னும் வடசொல் இதுதான். பழனி முருகவேள் தரித்துநிற்பது. கொங்கு/கங்கு எனில்
வளைவு வளைவுடைய ஆண்கள் அணிகலன்: கங்கணம். பூர- = தண்ணீர், எனவே பூரண (கும்பம்).
இதுபோல் -ண விகுதிபெறும் சொற்கள்பல. சம்மணம் > அம்மணம், மட்டணம் > அட்டணம் பார்ப்போம்.

பண்டை இந்தியாவில் மக்கள் இருக்கையில் அமரும் முறைகள் இரண்டு:
(1) சம்மணங்கால் - சமழ்த்துதல்/சமட்டுதல்/சவட்டுதல் வினை போலும்.
சமணம் (ச்ரமணம்) என்ற சொல் இதிலிருந்தாகலாம். தீர்த்தங்கரர், புத்தர் தியானத்தில் அமரும்
நிலை. எனவே அவர்களுக்கு ஆழ்வார் எனப் பெயர். ஆழ்ந்த தியானம் ஆழ்வார். இருகாலும்
மடங்கி இருப்பது சம்மணம் போட்டு உட்காருதல். சம்மணம் > அம்மணம் ‘nude'  சமண அடிகளைக்
கண்டு மக்கள் கொடுத்த பெயர். இதே போல, இன்னொன்று, நிர்வாணம் ‘nude' இதுவும் சிரமண
சமயங்கள் கொடுத்த பெயரே. தவசிகள் அமரும் நிலை சம்மணங்கால் போட்டு உட்காருதல்.
உட்கார்தல் = உட்கு ஆர்தல் (உட்கு - உள்ளுக்கு) - திருவாய்மொழி ஈடு.

(2) அரசர்களும், மடத் தலைவர்களும் உட்காரும் நிலை அதிகார தோரணை காட்டுவது.
இதனை, அட்டணங்கால் போட்டு உட்காருதல் என்கிறோம். 4300 ஆண்டுக்கு முன்னே
கொற்றவையின் பூசகன் கதிர மரத்தில் அட்டணங்கால் போட்டு அமர்ந்துள்ளான்:
Figure 11 in
Also see, the Gharial croc "Proto-Pasupati" has the same "shaman" in the same mode,

மட்- என்னும் தாதுவினால் மட்டை (தேங்காய் மட்டை), மட்டி/மட்டம் (ஆய்ஸ்டர் சிப்பி ‘shell'
ஒன்றின் ஒன்று இருத்தலால்), மட்டனம் - பூசுதல், ... போல, மட்டணம் - ஒன்றின் மேல் ஒன்று
பொருத்துதல். எனவே அட்டணங்கால் < *மட்டணங்கால், அட்டாலை < *மட்டாலை, ...

நா. கணேசன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jan 20, 2016, 8:42:45 AM1/20/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, santhav...@googlegroups.com, Dr. Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam
மடுத்தல்/அடுத்தல் - ஓர் உவமையாகுவினை

உவமையாகு பெயர்கள் பல அறிவோம். உவமையாகு வினைச்சொற்கள் பற்றி காட்டுகள். வரையறைகள் உண்டா? உ-ம்: சமைத்தலுக்கும், போருக்கும் ஒப்புமைகள் தென், வட மொழிப் பழமையான இலக்கியங்களில் உண்டு. எனவே, அடுதல் என்பது உவமையாகு வினைச்சொல் எனலாம். In the Heroic Age classics (Greek, Latin, Sanskrit and Tamil), the King roasted the enemies, he parched the enemies in battle, etc., are common.

மொழிகளின் வரலாற்றில் எழுத்து என்பதே அண்மைக்கால நிகழ்வுதான். எழுத்தில்லாக் காலம் மிக நீண்டது. தமிழில் ”எழுத்து” என்பது ஓர் உவமையாகுவினையில் உருவானது. பழங்காலத்தில் ”எழுதுதல்” என்றால் ஓவியங்கொண்டு சித்திரித்தல். பருத்தித் துணி, தானியங்கள் கட்டிய சாக்குமூட்டை, ஓலைகள் போன்றவற்றில் பெயர்களை, எடைகளை ஓவியங்களாய் வரைந்தனர், அதாவது “எழுதினர்”. இதுவே, சிந்து “எழுத்து” ஒரு கண்ணெழுத்து/ஓவியம். சிந்து எழுத்தை ரா. மதிவாணன் போன்றோர் மெய், உயிர் எழுத்துக்கள் என வாசிப்பது உயிரெழுத்து போன்றன உலக வரலாற்றில் ஏற்படுமுன்னர் என்பதை உணர்வோம். இருக்கும் 400 சிந்து எழுத்துக்களைப் பார்த்தால் அவை உயிர் எழுத்து, மெய்யெழுத்து ஏற்படும் காலத்துக்கு முந்தையது என விளங்கும். பின்னர் 1000 ஆண்டு கழித்து, சிவ சூத்திரங்கள், பாணினி, தொல்காப்பியம் போன்றவற்றில் மெய், உயிர் எழுத்துக்கள் கண்டறியப்பட்டன. ஓவியம் வரைதல் என்னும் பொருள்கொண்ட “எழுதுதல்” என்னும் வினைச்சொல்லை உவமையாகுவினையாக Writing with alphabet என்பதற்குத் தமிழில் பயன்படுத்தலாயினர். ”எழுதுதல்” என்பதன் பொருள் கால ஓட்டத்தில் மாறிவிடுகிறது. கண்ணைக் கவரும் எழுத்து கண்ணெழுத்து - Symbols painted (primarily on cloth, gunny bags, leaves such as palms and even on pandanus petals) ஒருவகை ஓவியங்கள். தமிழ்மொழி “எழுதப்படும்போது” பண்டை ஓவிய “எழுத்து” (பெயிண்டிங்) என்னும் பெயர் Writing என்ற பொருளுக்கு மாறுகிறது. இன்றும் திரைச்சீலையில் படமெழுதல் என்கிறோம்.

சங்க இலக்கியம் படித்தால் மடுத்தல் = சமைத்தல் என்பது தமிழின் அடிப்படையான 
வினைச்சொற்களில் ஒன்று என அறியலாகும். வகுத்தல் என்னும் வினை தருவது வகுப்பு.
அதுபோல், மடுத்தல் (=சமைத்தல்) என்னும் வினைதருவது மடுப்பு. சொன்முதல் ம் கெட்டு
அடுப்பு எனவரும். மடுத்தல் சொன்முதல் ம் கெட்டு அடுத்தல் (= சமைத்தல்) எனப் புழங்குகிறோம்.

மடுதல்/அடுதல் சமைக்கும் தீயிற்கும், சுடுதல் அழிக்கும் தீயிற்கும் பயன்படும்.
இதனைப் புறப்பாட்டு குறிப்பிடுகிறது:

|| “அடுதீ யல்லது சுடுதீ யறியாது
இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்” (புறம். 70)

என்பதனால் தங்கள் உணவு அடுதற்குரிய தீயைச் சுடுதீயென்னாது வேறோர் நன்பெயர்
கொடுத்து அடுதீயெனப் பாகுபடுத்திப் பாராட்டுதலும் அறிவின் பயனேயாம். சிலப்பதிகாரம்
வஞ்சின மலையில் “எரியங்கி வானவன்” (49) எனவும் வருதல் காண்க.  “ ||
பாஷா கவிசேகரர் மகாவித்துவான் ரா. இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
(1930களில் மகாவித்துவான் ஐயங்கார் ஸ்வாமி நடத்திய தமிழ் வகுப்புகளில் போதித்த செய்திகள்
அடங்கிய நூல். அண்ணாமலைப் பல்கலையின் வெளியீடுகளில் இரண்டாவது.
அப்போதெல்லாம் அண்ணாமலைப் பல்கலையில் தனி பிரெஸ் இல்லை. எனவே,
சுவாமி சித்பவானந்தர் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன அச்சகத்தில் அச்சிட்ட நூல்.
சிறுவனாக இருந்தபோது பராய்த்துறை சி. அடிகள் ஆசீர்வதித்து அளித்த நூலிலிருந்து தட்டச்சுகிறேன். பக். 90)

அடுதீ = மடுக்கும் தீ, அதாவது சமைக்கும் தீ. இதனைக் கலித்தொகை கொண்டு விளக்கலாம்.
அடுத்தல் < மடுத்தல், அடுப்பு < மடுப்பு என அறியலாகும்.
மடுத்தல் = சமைத்தல் (சங்க இலக்கியச் சான்று)
எனவே தான், மடுப்பு > அடுப்பு; மடுத்தல் > அடுத்தல் (சமையல்)

கலித்தொகை 59

ஆய்தொடி யைதுயிர்த் திவனுண்ணோ யாதென்னு
நோயிலை யிவட்கென நொதுமலர் பழிக்குங்காற்
சிறுமுத்த னைப்பேணிச் சிறுசோறு மடுத்துநீ
நறுநுத லவரொடு நக்கதுநன் கியைவதோ;
எனவாங்கு;

நச்சினார்க்கினியர் மடுத்தல் = சமைத்தல் என விளக்குகிறார்:
எ - து: ஆராய்ந்திட்ட தொடியினையுடையாய்! நீதான் ஐதாக உயிர்த்து இவன் மனத்திலுண்டாகிய நோய் யாதென்று கேட்கும் நோய் இவட்கு இல்லை யென்று யான் கூற அதுகேட்டு அயலார் நினைப்பழிக்குமளவிற் சிறிய குழமகனைப் பேணி வளர்த்து அவனுக்கு வேறொருத்தியுடைய பெண் மகனைக் கோடற்குச் சிறுசோற்றைச் சமைத்து ஆயத்திற்கு இட்டு நீ நறிய நுதலையுடைய மகளிரோடே மகிழ்ந்த நோன்பின் பயன் நினக்கு வந்து பொருந்துமோ? பொருந்தாது காண்; எ - று.

எனவாங்கு
எ-து; என்று; எ - று. ஆங்கு - அசை. ||

மடுத்தல்/அடுத்தல் = சமைத்தல். இந்த வினைச்சொல் மனிதகுலத்தில் அடிப்படையான வினைகளைத் தமிழில் குறிப்பிடும் ஓர்சொல். உவமையாகு பெயர்கள் பல. மடுத்தல்/அடுத்தல் என்னும் வினையை “மட்டித்தல்/அட்டித்தல், அடுதல்” என போரிடலுக்கு உவமையாகுவினையாகப் பண்டைய தமிழில் பயன்படுத்தியுள்ளனர். அடுதல் - அட்டூழியம், அட்ட களம் என்றெல்லாம் வரும். நெடுநெடு > நடுதல்,
நடத்தல் (bipedalism) - நட்ட நெல்லம்பயிர், நெகிழ்தல் > நகர்தல். வணிகர்களின் முகாம் நகரம். பின்னர் city என்றாகிறது. மடுத்தல் > அடுத்தல் என்று உவமையாகுவினையாய் வளர்ச்சி பெறக் காரணமாக உள்ள சமைத்தல் - போரிடல் ஒப்புமைகளை இரா. இராகவையங்காரின் அழகுத் தமிழ்நடையில் படிப்போம்:

இரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, அண்ணாமலைப் பல்கலை:
“இதுகாறும் தொகுத்துக்கூறிய வாற்றாற் பழந்தமிழரொழுக்கம் வேத வழக்கோடு மாறுபடாதியைதல் நன்கு தெளியலாகும். இவ்வுண்மையானன்றே,

”ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” (தேவாரம்) எனவும், 
                                                                  “புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை” (திருமடல்)
எனவும், இருபெருந் தெய்வங்களையும் தெய்வத் தமிழ்ப் பெரியார் வாயாரப் பாடினரென்று துணியலாம். “தென்னானாய் வடவானாய்” (திருநெடுந்தாண்டகம் 10) என்பதும் இக்கருத்தை ஐயமறத் தெளிவித்த லுணரலாம்.

    இனித் தமிழர் தம் பெருவீரச் செயலிற் பாராட்டிக் கூறிய செருக்கள வேள்வியினியல்பு,
   “களவழித், தேரோர் தோற்றிய வென்றியும்”
                                                         (தொல். புறத். 21)
என்புழி நச்சினார்க்கினியர் உரைத்த உரையானும், புறப்பாட்டில்,

                    “அரசுபட வமருழக்கி
                     உரைசெல முரசுவவ்வி
                     முடித்தலை அடுப்பாகப்
                     புனற்குருதி  யுலைக்கொளீஇத்
                     தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியி
                     னடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய” (புறம். 26)
என வருதலானும் அறிந்ததேயாம். இவ்வரிய வழக்கம் வடநூலார்க்கும் ஒத்ததாதல் மஹாபாரதத்து அநுசாசன பருவத்துச் (192 வடமொழி, V. N. கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பு_

  “செருக்களத்துப் படையெடுத்துப் பொருபவன் பெருவேள்வியைச் செய்து தூயனாயவன். அவன் (தோல்) கேடகம் மான்றோல், வில் தண்டம், தேர் வேள்வி வேதி, கொடி யூபம், பரிவார் தருப்பை, போர்க்கிளர்ச்சி, செருக்கு, சினம் இவை முத்தீ, உவகை ச்ருவம், தேர்ப்பாகன் புரோஹிதன், படைகள் வேள்விக்கருவிகள், அம்பு சமித்து, உடல்வேர்வை தேன், மக்கள்தலை புரோடாசம், உதிரம் ஆகுதிநெய், துணிகள் அவிக்கலம், உடல்நிணம் நெய்யொழுக்கு, ஊணூன் பூதங்கள் வேள்வி யந்தணர், அத்தகைய மக்களும் யானை குதிரைகளும் உணவும் குடிநீரு மாகும். இறந்த வீரர்களின் அணிகலங்கள் வேள்வி முகவைகள்” என்பன முதலாக வருதலான் நன்கறிந்துகொள்க.

   இராஜதரங்கிணி (7, 980-81)யில் யமன் அடுக்களையாகிய போர்க்களத்தில் இம்மாதிரி வேள்வியில் வேதாளத்திற்குத் தசையுணவும், உதிரப் புனலும், ஈந்தது கூறுதல் காணலாம்.

  இப்பழைய வழக்கம் பிற்காலத்து வடகோடியிலும் உண்டென்பது இதனால் உணரலாம். இக்கள வேள்வியிற் கூழ் கொடுத்தற்குப் பரணி நாளைக் கொள்ளும் வழக்கமும் 27 நாள்களில் ஒன்றான பரணிக்கு அதிதெய்வம் யமனாதல் பற்றியென்பது துணியத்தகும். ஏர்க்களத்தோடு போர்க்களத்தை உவமித்தோ அன்றி உருவகித்தோ இவர் கூறும் ஒரு முறை, வேத வழக்கொடுபட்டதே யென்பது களம் () என்னுஞ் சொல் கதிரடிக்குந் தரைக்குப் (ரிக்வேதம் 10, 48, 7; நிருக்தம் 3, 10) பெயராம் ஒற்றுமைபற்றியென்று உய்த்துணரலாகும்.

    இத்தமிழர் தேரிற் பரியும் அத்திரியும் பூட்டுதலும் சகடத்தில் எருது பூட்டுதலும் வேத வழக்கிற் கண்டனவேயாம். “ [...]

மடுத்தல்/அடுத்தல் - சமையல் வினையிலிருந்து பொருதலுக்கு உவமையாகுவினையாய் ஆதற்போல,
படம் எழுதுதல் எப்படி உயிர், மெய் எழுத்தை எழுதுதல் என்னும் உவமையாகுவினையாய் பரிணாம வளர்ச்சி பெறுகிறது எனப் பார்க்கலாம்.

    மடுத்தல்/அடுத்தல் - சமையலும், போரிடலும்
                     “அரசுபட வமருழக்கி
                     உரைசெல முரசுவவ்வி
                     முடித்தலை அடுப்பாகப்
                     புனற்குருதி  யுலைக்கொளீஇத்
                     தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியி
                     னடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய” (புறம். 26)

நா. கணேசன்

pbalakrishnan1

unread,
Jan 20, 2016, 9:59:41 AM1/20/16
to santhav...@googlegroups.com
நல்ல கட்டுரையைப் படித்ததில் 
மகிழ்ச்சி . 
-அரிமா இளங்கண்ணன்




Sent from my Samsung Galaxy smartphone.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages