காதலினைக் களவென்றும் குற்றம் என்றும்கன்னியரும் காளையரும் கருத்தில் ஒன்றமோதலினை உருவாக்கும் பெற்றோர்களேமுற்றுமது தவறில்லை புரிந்துகொள்வீர்சாதலினை ஏற்றாலும் ஏற்போம் அன்றிசாகவிட மாட்டோம் எம்காதல் என்றேபேதமதைக் கொண்டுயிரும் துச்சமென்றுபிள்ளைகளும் எண்ணுவதன் ஆழம்நோக்கும்காதலென்ப இயற்கையதன் வேகத்தூண்டல்கடிததனை தடுத்திடில் கரணம் போடும்ஊத வருங் காற்றோடி உள்ளூர் மூச்சாய்ஓட்டையிட்ட தேகத்தில் உணர்வுத் தீயைபாதகத்தை செய்தும் அனல் பற்றித்தீய்க்கும்பட்டதிலே ஈருயிரும் பாதை தேடும்
சேதமிடும் உள்மனத்தில் தீயாயால்லசீறிஎரி மலை போலத் தேகம் காணும்வேதனையை உருவாக்கும் விளையும் பருவம்வீறுடனே செயலாற்றும் இளமைத்தேகம்சோதனையே அறிவென்ப துச்சமாக்கிசூழ்நிலையை மறந்துவிடச் செய்யும் தாகம்ஆதரவு அப்போதே அவர்க்கு வேண்டும்\அந்நியராய் எண்ணியதை அடக்கப்போயின்போதனைகள் தன்னும் உதவாமற் போமாம்பெண்மையுடன் ஆண்மை தனும் பிரியாதொன்றும்உடல் குடைந்தும் உள்ளத்தில் வேட்கை மீறிஉடைத்தெறியும் கட்டினை மாநதி போல்பாயும்குடல் பிசையும் குறுகுறுக்கும் கொல்லும்மேனிகுற்றமற்ற மதிதன்னை கொடுமைசெய்துவிடலை எனும்பருவத்தில் விளையுந் துன்பம்வேற்று மனமாக்கி வெறிகொள்ளச் செய்யும்அடக்கியதை நிறுத்தவெனக் காட்டு தீயை \அணைத்துவிடக் குடம்நீரை அதன்மேல் ஊற்றா,காதல் மனம் இயற்கையதன் இச்சைத் தூண்டல்காதலெனும் உணர்வில்லா வாழ்வேயில்லைகாதல் வரும் வயதுக்கு கட்டுப்பாடுகாணும் வயதிது வென்று கணக்குபோடல்வாதமதும் செய் தென்ன வைத்தோர் எல்லைவழமையிது என கூறி வாழ்வை மறுத்தால்பாதகமே பால் ஈர்ப்பால் பாதைமாறிப்பைங்கிளிகள் வானெழுந்து பறக்கக் கூடும்காதல் செய திருமணத்தை காத்தே நிற்போர்கதிர்வயலில் முற்றிப்பொலிந்தாடும்போதுபதமெனவே அறுவடைக்கு பாதைசெய்யா\படிப்புடனே வேலை பணம் பதவியென்றுபதரெனவே ஆகிப் போம்வரையும் காத்தேபலமற்ற சமுதாயக் குலத்தை செய்யாமிதமுடனே உடலிளைமை காணும்வேளைமதிவீரம் கொள் வம்சம் மலரச்செய்வீர்உரிமை தனும் உமக்குண்டு பிள்ளை வாழ்வைஉருப்படியாய் வழிகாட்டும் தேவைஉண்டுஇருந்திடினும் காதல் தன்னில் இளையோர் மீதுஎடுத்தவுடன் எதிர் நிற்கும் குணத்தை கண்டேன்விரியு;லகில் வாலிபத்தை பிள்ளை தொட்டால்வயதெல்லை தனையடையும் போதே மக்கள்உரிமையுடன் ஒன்றிணைய விட்டே நிற்பர்உலகினிந்த நீதி நமதுள்ளம் ஏற்காதனிமனித பண்பாடும் தமிழுக் கென்றோர்தரமுயர்ந்த நாகரிகத் தலைமுறையுண்டுஎனில் நமது வயதெல்லை இளையோர்க் கிங்கேஎழுதிவைத்த எல்லையொன்றிருந்தபோதும்கனிபழுத்து வீழும்வரை காத்தல்போலும்கல்யாணத்திருநாளும் கடக்கும் எல்லைபுனிதமுடன் கொள்நாளைக் கனவோ என்று
இளங்கனி சுவையும் இதழ்மலர் அமுதும்
எடுத்துரை மொழியும் இனிதெனும் ஊற்றாய்
தளதள பருவம் தலை நிறை கேசம்
திடமுறு விழிகூர் தெறி குளுபார்வை
குளமலர் விரிவாய்க் குமுதமென் வதனம்
குட வளை யிடையில் கொடிதெனும் நளினம்
அளவில சுகமென் றைம்புலன் துய்த்தே
அகிலமும் நிலையென் றறிவழிந் திருந்தேன்
இன்று:
அழகுறு குழலோ பனிமலை வடிவாய்
விளைகடல் சங்கின் இயல்நிறம் மருவி
குழலுடை இனிதாய் குரல்தரு மென்மை
அளவினில் மெலிதாய் அகமிடை தளர
நிழல்தரு தண்மை நிகரிளம் மேனி
பொழிலுடை அலையின் பொலிவடிவேந்த
கழலுறு மணியின் கலகல நாதம்
முழுதென இலதாய் மெதுநடை பழக
சுழலொரு புயலின் செறிவலி குறுகி
தழலெழ மனதை தகித்திட வைப்பாள்
முழமொரு பூவை முகர்வினில்வாசம்
எழ முடிவைத்த இயல்பது கனவாய்
தளதளமேனி தகையிளந் தாடத்
துளைவிழி யம்பு தொடுவலி குன்றிச்
சுளை பலகனியின் சுவையிவள் அதரம்
விளை வெனும் புகழும் விரயமென்றாகி
தடிகரம் கொண்டே தவழ்ந்திடும் மழலை
அடியெடு நடையும் அருகிட விழல்போல்
துடிசெய லடங்கித் துறுதுறு பார்வை
வெடித்திட முயலும் வெறியுணர் வோய
கொடியிடை ஒடிவும் கணை மதன் மலரும்
வடித்திடு சிலையாய் வந்தவள் இன்றோ
அடித்திட அரவம் அதன் கிடைபோலே
நடித்திட வைக்கும் நயன் கெடுவாழ்வில்
எடுத்திட முடிவாய் இளமையை நம்பி
துடுப்பிழந் தோடம் திசைவிடும் நிலையாய்
தடுப்பிழந் தலைகள் தொடத் தொலைவாகி
கொடுத்தோன் பறிக்கும் குயவனின் கலயம்
அடுத்தெனும் உடலை அமுதுகொண் டேற்றி
விடுத்து நீரூற்றி வீம்பினில் திழைத்துப்
படுத்திடக் கனவும் பகலினில் தினவும்
எடுத்துண்மை அறியா இருளிடை வாழ்ந்தோம்
வெய்யினில் காய்ந்து விழுமழை புரவி
பொய்யினில் வாடி புறந்தள்ள ஓடி
செய்வினை வஞ்சம் திரிந்திடமொழிந்து
கையினில் களவும் கனிமலர் பேச்சும்
மைவிழி மாதர் முனைந்தயல் கொண்டு
மெய்யிடை வாசம் மிகச் சுவைகண்டு
தெய்வம் மறந்து திருவருள் வேண்டாம்
உய்வது விட்டே உலகிடை நலிந்தேன்
*************
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எத்தனைமுறை நான் சித்தமெடுத்துனைக்கத்திய ழைத்தாலும்நித்தம் வருந்துயர் மொத்த மழித்துமுய்வித்து விடென்றாலும்முத்தமிழின் இறை சித்திதரும் அருள்அத்தனையும் ஈந்தாய்பத்தியுடன் உனை நித்தமும் தொழுதிடஇத்தரை வாழ்ந்திடுவேன்மத்தை யெடுத்திடல் போலும் கொடும் அர-வத்தை யெடுத்து மமு-தத்தைக் கொளக் கடைந்திட்ட போதேஉயிர்சத்தை அழிக்கும் விடம்மொத்தமெனத் திரள்கண்டுமே அஞ்சவி-டத்தை குடித்தவரின்புத்திரனே மனம் கொண்டருள் கேட்டேன்புத்தொளிர் வாழ்வீயாய்பத்தை யெடுத்துடன் பார்விழி நாலிடைப்பாதியும் சேர்குமராவித்தகனில் வெறும் கையுடன் முன்னால்கத்தலை யெழும்சாக-ரத்திடை வீழ்ந்தவ னாகியும் தப்பிடஎத்திசை நீந்தலெனஇத்திசை என்றொளி முன்னுவந் தீந்தாய்அத்தனையருள் நினதேசொத்தென ஏதுமே பொற்கலயம்நிறைமுத்தொளி இரத்தினமில்உத்தமனே வடிவேலவனே உனைநித்தமும் தொழுமென்னைசுத்தமெனும் மனதோடு நிறைகுணம்புத்தி தெளிந் துயரநித்தியமாகிட நிம்மதிகண்டுமின்-பத்தை யெடுத்திட வை !!
நடந்திடு நேரே !நடக்கின்ற பாதைமீது.. இடர்க்கென்று முள்ளிருக்கும்அட’க்கண்டும் அல்லல் கொள்வதோதடக்கென்று கல்லை வைப்பார். நடக்கின்ற வேளைதன்னில். கடக்காமல் தடுக்கி வீழவோஅடக்காமல் சினமெடுக்க. முடக்காமல் எதையும் செய்து. விடக்காலமென்னசொலுமோஇடக்காலும் வலக்காலும். உள்ளம் சொல்ல போகுமங்கு. தடுக்காமல் கண்கள் கூறுமோகுடத்தினுள் வைக்கும்தீபம். இடத்துக்கு ஒளிர்வதில்லை. கிடக்கட்டும் என்று விடுவதோகடக்கின்ற முள்ளும் கல்லும். படத்தன்னும் உள்ளம்நோகும். தடங்கற்கு ஏதுசெய்யவோவிடங்கக்கும் அரவம் உண்டு. விதியுமுண்டு தீண்டவந்தால். சடமென்று ஆக்கவிடுவதோஅடங்கென்று அவதியுற்று. நிறங்கெட்டு உருவம்கெட்டு. தடமின்றி முற்றும்போவதோசுடர்கண்டு கடகடென்று. மடல்தன்னை மலர்விரிக்கும். உடம்புள்ளும் இதயமுண்டன்றோதிடங்கொண்டு தெய்வம் வேண்டு. நடந்திடும் மலர்வு நெஞ்சில் .. புடம் செய்து பொன்னொளிர் வதாய்முடமென்ற எண்ணமின்றி. முடியுமென்று கொள்ளூ யாவும். படக் காணுமுந்தன்.கையிலேகடமைகள் தன்னியெண்ணிக். கடும்வேகம் கொண்டு மேகு. கெடும் தீது நன்மை பொங்கவே
அழகான இதயங்கள் அணீசேரலாம்அதன்மீது சினம்வந்து அரசாளவோபழகாத இதயங்கள் பலம் காணலாம்பரிவென்ற உயிர்கொண்டும் பகைகாணவோஇழகாத மனமென்று இருந்தாலும் சொல்இசையாத மனந்தானே எதிராகிடும்வளர்கின்ற தீயென்று வருமாயிடின்வருங்காலம் சிதைவுற்றுப் போகாதோசொல்புதுவெள்ளம் மனம்மீது பாய்ந்தோடலாம்பிரவாகப் புனல் நெஞ்சைக் அழித்தோடவோசெதுக்காத சிலையென்று திரைமூடலாம்திரும்பாத வழிகண்டும் தொடர்ந்தோடவாஎதுகாண நினைத்தாலும் எழில்சோலைப் பூஇதழுக்கு ஓர் வண்ணம் வேறாகுமாஇதுகாக்க உன் எண்ணம் முடிவென்பதோஇருக்கின்ற வரையின்பம் பெரிதல்லவோமதுகொண்ட மலர் தன்னும்தீ ஊற்றுமோமதிஎன்னும் நிலவென்றும் இருள் போர்க்குமோஇதுவென்ன அழகென்று மனம் கேட்கலாம்இதயத்தின் நலிவெண்ணி நான்வேர்க்கிறேன்\பொதுவாக உடல் நொந்து பகை காணலாம்பிறிதாக இதயத்தின் குரல்கேட்குதேஅது வாழவேண்டுமெனில் அயலோடு நான்அகம்கொள்ளும் உணர்வுக்கு அளவொன்|று வை
வேறொரு இழையில் போட்ட கவிதை வரிகளுக்கு விளக்கம் தருகிறேன்
தருவாய் தரமென்றுண்ணத் தருவே
தரமென் றுண்ணத் கனிவாய் கனிவாய்
தருவாய் என்றே தருமென்றெண்ணித்
தரமொன்றுண்ணும் நினைவும் கொள்ளத்
தருமோர்இன்பம் தருவொன்றெண்ணித்
தருவன்காயின் தரமென்றானால்
தருமென்கனியாய் தருவன் என்னும்
தருமம்விட்டோர் தருவாமன்றோ
--
.gif?part=0.1&view=1)
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ என்ன ஒரு கோணம்...என்ன ஒரு பார்வைவாழ்க ஐயா ...இந்த இழைக்குள் எங்கு நோக்கினும் ,எல்லாயிடத்திலும் மீதமிருப்பதுபிரமிப்பு மட்டுமே
ஒளியொன்று பெருவானில் உருவானது - அதுஉலகென்ற ஒருவிந்தைப் பொருள்செய்ததுவெளிதன்னில் அசைந்தோடும் சுழல்செய்தது - பின்விருப்போடு அலைகாந்த வலைகொண்டதுவளிபோலும் நிலையற்ற அசைவோடது - புவிவாழென்றே உயிர்த் தீயை வளர்க்கின்றதுநெளிகின்ற அலைபோலும் நிற்காதது - ஓர்நெடுவானின் இயலோடு நெறிகண்டதுஉளிகொண்டு சிலைசெய்யும் செயல்போலவே - உயிர்உள்நிற்க உடலென்னும் பொருள்செய்ததுகுளிர்மண்னில் அனல்சுட்டு குடமாகுது - இங்குகுவிமண்ணில் ஒளிசுட்டுக் கருவானதுவிழிதன்னில் ஒளிபட்டு உணர்வாக்கியும் - ஓடிவிலகென்ற புவிமீது அதிகாரமும்மொழிகூறல் தனில்சப்த விசைகூட்டியும் - அவைமுடிவாக உருவாக்கி வழிசெய்ததுவெளிர் மேகம் விளையாடும் விண் மீதிலே - படர்வெயில் என்று அவைவாழ ஒளி செய்ததுஅழி என்று பழமைகளைச் சிதைக்கின்றது - அதில்அழகென்று மீண்டும் சிலபுதி தாக்குதுவெளியென்ற பிரபஞ்சம் வியந்தோடிடும் - பலவிண்ணசைவுப் பின்னலென விதிபோட்ட பின்களி கொண்டு வாழுருவம் உயிர் தன்னையே - ஒருகாமஇசை போகமுனை வோடீந்ததுபுவிமீது பயிர் பச்சை மரமாக்கியும் - அதில்புனல்பட்டு வளர்கின்ற வழிசெய்ததும்குவிவானின் நிறையோட்டம் அசைவென்பதே - எனக்கோடானு கோடிவகை அசைக்கின்றவள்தவி யென்று தன்பாகம் தரைமீதிலே - விட்டுத்தகும் வாழ்வில் துயர்தன்னைக் கொள விட்டவள்செவி காணும் மொழி வகையில் பலவாகவும் அவைசெய்கின்ற துன்ப நிலை இடை வைத்ததென்?
அன்புக் கவிஞர் கிரிகசன் அவர்களுக்கு,
" முயன்றிடு நாளும்" கவிதையில் என்னைக் கவர்ந்த வரிகள்:
நம்பிக்கை யுடன் நடந்து செல்லும் வாழ்க்கை - அது
நாளும் அன்புடன் காணும் வாய்மை நேர்மை
செம்மனத்தில் கொண்டு சென்றிடு என்றும் - இனம்
சேர்ந்து வாழ்ந்திடு சுதந்திரமே வேண்டும்.
பாராட்டுக்கள்.
அன்பன்,
துரதிஷ்டம்நீலமலையினின் சோலைக் குயிலொன்றுநின்று பாடுது - அதுநேசமுடன் கூவ வானமழை மீறிச்சோவெனக் கொட்டுதுமேலடி வானிடை மேகம் சிவந்திடமேன்மை கொள்ளுது - அதைமாலைக் கருமிருள் மங்கிடச் செய்துமேமாயம் கூட்டுதுகோலம் அதிவிரை கொஞ்சும் கடலலைகூடி ஓடுது - அதுகொள்ளுங் கரைமணல் துள்ளி விழுந்தபின்கூசித் திரும்புதுசீலத்தொடு மனம் செந்தமிழ்ப் பாட்டினில்சேர்ந்து காணுது - அதைச்சோக மிழைந்தொரு சேதிவந்தே மனம்சோரக் காணுதுவாலைக் கொண்டோரினம் வந்து கிளைதொற்றிவளைந்து தூங்குது - அந்தவேளை கிளை முறிந்தாடி மண்ணில் வீழவெகிழும் குரங்கதுசாலை நடை பாதை தன்னந் தனியொருசீவன் போகுது - அதுசார்ந்து செல்லும் திசை மூங்கில் துளைகாற்றுசூவென் றூதுதுமூலைத் தெருவினில் கோவிலடிக் கடைமாலை தொங்குது - அந்தமாலைகள் சாமியின் தோளையெண்ண மங்கைகூந்தல் ஏறுதுநாலைக் குணம் கொண்ட நாரிகையின் நடைநளினம் போடுது - அதில்நீளக் கிடந்த கல் நேர்விழி. ஏய்த்திடநடை தள்ளாடுது
ஏழு வண்ண மாளிகைமுன் இரவினிலே விளக்குமின்றிஎப்படியோ நானவனைக் கண்டேன்தாழுமுயர் மேகமிடை தானும் விளையாடியவன்தான் ஒழிக்கத் தேடியறி என்றான்வாழுமுல கென்னிலவன் வந்தொழியும் இடமறிவேன்வானத்திலே எப்படி நான் என்றேன்தாழும் முகி லோடுமட்டும் தன்னிடத்தி லில்லையெனத்தலையசைத்து நான் மகிழ்வுகொண்டேன்ஓடியெழுந்தே மறைய உடனெழுந்து தேடுகிறேன்ஒர்முகிலும் நேருருவம் காட்டாநீடியைந்த ஊர்வலத்தில் நேர் பறந்துசெல்ல மனம்நிர்கதிகொண்டென்ன செய்ய என்றேன்தேடியும்நான் காணவிலை திசையெதனப் புரியவிலைதேவிமனங் கொண்டுதவாய் என்றேன்நாடி யொருதீ யெழவும் நல்லொளிர்ந்த சோதியிலேநான்மயங்கக் காதில் ஒன்று சொன்னாள்பூஇருந்தால் தேனிருக்கும் தேனிருந்தால் பூவினுக்கும்’தேடும் வாழ்வில் ஆசைகொள்ளத் தோன்றும்நாவிருக்க ருசியிருக்கும் நானிலத்தில் ஈதுவிதிநானிருக்கும் போது சொல்லிப் போனாள்நீயிருக்க நானிலையேல் நின்னுருவம் காணுவனோநானிருந்தால் தானறிவேன் என்றேநானில்லையோ நீயில்லையோ நானறியேன் காணவில்லைநானிருப்பதோ இல்லையோ என்றேன்நானில்லை நான் எங்குமிலை என்னையும் நீ காண்பதெனநேருவதும் இல்லையென்று சொன்னான்தானிருக்கும் இடமறிந்தேன் நேர் நடந்து கண்டவுடன்தான்மனதில் கோபங்கொண்டு நின்றான்நான் இலையே நன்கறிவேன் நீயுமெனைக் கண்டதென்னநானறியேன் என்றவனைகண்டுநீயிருக்க நான்இலையேல் நெஞ்சில்தெய்வம் காணுமங்கேநிசப்தமே நிகழ்ந்திருக்கும் என்றேன்பூசிரிக்கும் புன்னகைக்கும் போதில் ஒலி தோன்றுவதில்போலிருக்க வேண்டும் நினதுள்ளம்வாயிருக்கும் வார்த்தைகளில் வந்துமௌனம் குடியிருக்கும்வாழ்வி லுன்னை விட்டுநானும்போனால்தேய்விருக்கும் உயர்வுவரும் தேடும் விழி சாந்தமெனும்தெய்வசுகம் ஒன்றுமட்டும்காணதாயெனவே அன்பிருக்கும் தமிழ்கனிந்த மொழியிருக்கும்தாங்குமனம் தெய்வ மன்றோ என்றாள்
நேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லைநின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லைதோற்றவனாய் திரும்புவதே ஈற்றில் என்னிலைதூய்மைகொண்டே தூரத் தெரியும் தீயென் சக்தியைநீற்றென உடலாக்கிய பின் நேரும் நற்சுகம்.நிர்மலவிண் நீந்துகையில் நினைத்துப் பார்இதைநாற்றம் கொண்டிட தேகமிட்டவள் ஊற்றித் தீயினைநாளதில் நெருப்பாக்கிட நான் நீங்குவேன் உனைசேற்றெனும் மணல் கொண்டுசெய்யுடல் சிந்தனைதனைசீரழித்திடும் யாக்கை என்கிற தீமையுமில்லைபோற்றிட விண்ணில் போவதி லெந்தப் புதுமையும் இலைபூத்துக்கொண்ட இப்பொய்யுடல் விட்ட போது இன்நிலைஏற்றிடுமவள் ஈற்றினிலெமை கொள்ளும் நாள்வரைஇவ்வுலகினில் காண்பது மெய்யுணர்வின் பொய்நிலைசீற்றம் கொள்ளுணர் ஆற்றலுமற்ற பேய்களின்நிலைசிந்தி இந்நிலம் தந்தபின்கொள்ளும் குருதிக்கூட்டினைகாற்றினைக் கொண்டு ஊதிய இக்காமப் பையினைகட்புலனொடு காட்சி விம்பமும் ஏற்றும் காதலைவேற்று எண்ணங்கள் வேண்டி மெய்யினில் ஆக்கும்வேட்கையைவிட்டொரு விதம் வெளியில்சென்றிட விரும்பினாலுனைஆற்றென அகமோடி கண்டந்த அன்புச்சோதியைஆக்கிடும் அகவேதனை தரும் நெஞ்சத்தோசையைகூற்றென மெய்யைக் கூறின் யாக்கை தீயில் போம்வரைகூடி உன்னுடன் நான் இருப்பது திண்ணம் வேறில்லை
எத்தனை எத்தனை தெய்வங்கள் கண்டோம்அத்தனையும் ஒன்றுதானேநித்தமும் காலையில் கண்விழித்தால் முன்னேநிற்பதோர் சூரியன்தானேமத்தியில் உச்சியில் மாலயில் காலையில்மாறிக் கோலம் கொண்ட போதும்அத்தீயில் காணும் அனல் விளக்கு எங்கள்அன்பெனும் வாழ்வுக்கொளியேசத்தியமும்கொண்டு நித்தியமாய் ஆதிசக்தியென்று நம்புகின்றேன்புத்தியறிந்த வரையிலும் கண்டவன்பக்தியும் கொண்டதனாலேசித்தி கொண்டேயவள் சொல்லுங்கருத்தினைசெந்தமிழில் கவிசெய்தேஉத்தம இன்பங்கள் காணுகிறேன் இதுஏற்றிய தீபத்தொளியேவற்றியும் போவதே யில்லை உலகினில்வாழ்வி லன்பெனும் நீதிகற்றிருந்தும் பயன்கொள்வதில்லை அககண்களை மூடிடும் வேளைஉற்றதும் பெற்றதும் உள்ளவலிகளேஓடிச்செல் தெய்வத்தைநாடுசற்றுப்பொறு கூறு சஞ்சலம் போக்கிடசக்திதானே வேண்டும் சக்தி
***********
வலியெடுத்தும் அறமெடுத்தும்பகைமுடித்த தமிழ இன்றுவகை யடுத்து நடப்பதென்ன கூறுகிலி பிடித்து குளிரெடுக்ககிடுகிடென்று உடல்நடுங்ககீழ் கிடப்பதோ நினைந்து தேறுபுலிவிரட்ட முறமெடுத்தபெண்மணிக் கென்றான கதைபுழுகிவைத்த பொய்தனுமோ அன்றுகலியெடுத்து தொகையுரைத்தகளையெடுத்து தோள்பெருக்ககதைநிறுத்தி புதியவாழ்வு காணுமலைசிறுத்தும் திடம்பெருக்கும்மகிழ்வெடுத்துக் களம்புகுந்தமகன் குடித்ததனமறுக்க வென்றுதலை யடித்து கதறி மார்பில்தான்விழுப் புண் தாங்கினானோ ’தவறிம் தன்முதுகில் இல்லையென்றே
நெறியெடுத்த பாவையர்கள்நிறுத்தியும் உயிர் பறித்த கண்டும்குலை நடுங்கிக் கிடந்ததென்னகுரல் கொடுத்தும் அவனியெங்கும்கரங்கொடுக்கக் கதியுமற்றதென்ன
சிலையெடுத்த நிலை யிருப்பின்சிறுமைதரும் வாழ்விலென்றும்சீறிஎழும் தன்மை கொஞ்சம் வேண்டும்அலை யெழுந்து வீழ்ந்த பின்னேஅடங்கியுள்ளே கிடந்ததில்லைஅதுவெழுந்து வளைந்து கரையேறும்வலை விழுந்தபோது அஞ்சிவாழ்விழந்த தென்று புறாவாடவில்லை வேடனை ஏமாற்றும்தலைசிறந்த கதைகளிலேதர்மவழிகாட்டும் அதைத்தனுமறிந்து ஒன்றெனக் கைகூடு
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இதழ் நெகிழும் மலர்வனம் இதில் எழுமோ கவிமணம்!60 posts by 5 authors
Aug 29me எனது முன்னைய இழையான ”கவிதைச்சோலையில் கனவுப்பூக்கள்” மிக நீண்ட இழையாகப் போய்விட்டதால் இந்த புதிய இழையை தொடங்குகிறேன்.இதை தொடங்கும் போது புதிய உற்சாகத்துடன் நிறைய மலர்கள்பூக்கும் என்ற நம்பிக்கை மனதில் கொண்டு தொடங்குகிறேன்.-அன்புடன் கிரிகாசன் ஆலமர
Aug 29me காதலின் வலிமை பெரிது காதலினைக் களவென்றும் குற்றம் என்றும் கன்னியரும் காளையரும் கருத்தில் ஒன்றமோதலினை உருவாக்கும் பெற்றோர்களே முற்றுமது தவறில்லை புரிந்துகொள்வீர்சாதலினை ஏற்றாலும் ஏற்போம் அன்றி சாகவிட மாட்டோம் எம்காதல் என்றேபேதமதைக
Aug 30me எவரையும் (பெண்களை) புண்படுத்தும்நோக்கம் கிடையாது மன்னிக்கவும்கனவு முடிந்தபோது அவள்! அன்று: இளங்கனி சுவையும் இதழ்மலர் அமுதும் எடுத்துரை மொழியும் இனிதெனும் ஊற்றாய் தளதள பருவம் தலை நிறை கேசம் திடமுறு விழிகூர் தெறி குளுபார்வை குளமலர் விரிவாய்க் கு
Aug 30yogiyaar My dEar Kirikasan, ASeers. This is very urgent. Pl send a new GOOD poem for our Shanmuga kavacham DeepavaLi malar, AS yu did last year!. Thanks, YUrs truly,Yogiyar வாழ்க அனைவரும் வளமுடனே என் குருஜி லஹரி பாபாஜி ஆசியினால்.கவியோகி வேதம்(kaviyogi vedha
Aug 30me ஐயா தாங்கள் கேட்டுக்கொண்டதன் படி இப்பொழுதுதான் எழுதி முடித்தேன் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆனால் எப்படி இருக்கவேண்டுமென்று தெரியவில்லை. இதைபார்த்து சரியானதா என அவசியம் பதில்தரவும் திருத்தி அல்லது விரைவாக வேறெழுதி தருகிறேன்
Aug 31me ஒருபெண் தன் தந்தைமீது ஏற்பட்ட ஏதோ ஒரு சிறு காரணத்துக்காக சினம்கொண்டு தந்தையைப் பிரிந்து தனியே சென்றுவிட்டாள்.பிரிவு தகப்பனால பொறுத்துகொள்ள முடியவில்லை எங்கு சென்றாய் மகளே மழைகொண்ட உறவுக்கு மரமென்றும் நினைவாகமண்ணிலே நீரைத் தேடும்களை கொண்ட பயிரன்பு
Aug 31yogiyaar இப்பாடல் வேண்டாம். முருகன் பற்றி எழுதவும். அனுப்புக, யோகியார்
Aug 31me ஐயா இன்னொன்றும் அனுப்பியுள்ளேன் .மின்னஞ்சல் காண்க
Aug 31yogiyaar பார்த்துவிட்டேன்..சரியோகியார்
Sep 1me முன்னரும் இதே போன்றொரு கவிதை எழுதினேன். புதுமுயற்சி (இது கவியோகி வேதம் ஐயா அவர்களுக்காக) முருகா ,உருகும் மனம் எத்தனைமுறை நான் சித்தமெடுத்துனைக்கத்திய ழைத்தாலும்நித்தம் வருந்துயர் மொத்த மழித்துமுய்வித்து விடென்றாலும்முத்தமிழி
Sep 1me புதிதாக ஒரு கற்பனையோட்டம் கவிதையாக மலர்கிறது அழகின் சிரிப்பு பகுதி 1 காயா கனியா ? மயிலொன்று ஆடியதோ இல்லையில்லைமழைமேகம் மண்டபத்துள் வருவதில்லைஒயில் நடன உயிர் பெற்ற சிலையுமில்லைஓடிவரும் மான்குதித்த உருவம் இல்லைபுயலடிக்கப் புதிதா
Sep 1yogiyaar ரொம்ப அழகு.. சந்தமும் கற்பனையும் மீன்போல் துள்ளுகின்றன, வாழ்க யோகியார்
Sep 2me நன்றிகள் ஐயா மிக்க நன்றிகள்!
Sep 2me அழகின் சிரிப்பு பகுதி 2 ஆபத்து சிரிக்கின்றாள் சிலையென்பாள் அணிந்த மாலைசிதறியதோ முத்துக்கள் பளிங்குமேடைவிரிகின்றாள் மிகமென்மை வலையொன்றங்கேவிழியென்னும் அலைமீன்கள் வீழ்ந்ததாமோஎரிக்கின்ற தீயைமனத் தடக்கி மன்னன்எழும் சினத்தில் அவள் நோக்கத் தணிவும் கொண
Sep 3me நடந்திடு நேரே ! நடக்கின்ற பாதைமீது .. இடர்க்கென்று முள்ளிருக்கும் அட’க்கண்டும் அல்லல் கொள்வதோதடக்கென்று கல்லை வைப்பார் . நடக்கின்ற வேளைதன்னில். கடக்காமல் தடுக்கி வீழவோஅடக்காமல் சினமெடுக்க . முடக்காமல் எதையும் செய்து. விடக்காலமென்னசொலுமோஇடக்கா
Sep 5me புதுமைத்தாய் நீரும் நீயே நெருப்பும் நீயே நிகழ் வானத்தின் தீதாரும் வெம்மைத் தகிப்பும் நீயே தமிழும் பொறிகொள்ளச்சேரும் வார்த்தை சிதறுமெண்ணம் திருவாய்மொழியாகிஊரும் கொள்ளும் உறவில் நட்பின் உவப்பும் தந்தாயே தேரும் மனமும் தெரிவான் நிலவும் தேசம்
Sep 6me தவறுகள் மலியும் தருணம் அலைந்திடும் மனமதில் அலைகடலெனு மொருஅவதியும் உருவாகும்கலைந்திடும் கனவுகள் கடுதியில் மறைவதுகவலையை உருவாக்கும்குலைந்திடும் உறவுகள் கொடுமையென் பிரிவதுகுமுறலை தரும் நாளும்சிலையெனும் மனமதில் சிறுமையின் இழிவெழச்சீற்றமும் எழுந்
Sep 6me ஒரு நட்பினை வருந்த செய்துவிட்டால்.. மாமடை யெனவிழி ஓடிடுவேளையில் மாமடை செய்கையெனமாமடு எண்ணங்கள் ஓடிட மாமுடை மாதிரிஆற்றிவிடின்மாவிடை கூறிட மாமனதில் எது மாஇடி மாமழையாய் மாஇடர் தந்ததை மாமனம் கொண்டுளம் மாறிட வைத்தருளும் மாசுக மென்றிவன் மாசுகள் எழமனம் மா
Sep 6me இதயங்கள் அழகான இதயங்கள் அணீசேரலாம் அதன்மீது சினம்வந்து அரசாளவோபழகாத இதயங்கள் பலம் காணலாம் பரிவென்ற உயிர்கொண்டும் பகைகாணவோஇழகாத மனமென்று இருந்தாலும் சொல்இசையாத மனந்தானே எதிராகிடும்வளர்கின்ற தீயென்று வருமாயிடின்வருங்காலம் சிதைவுற்றுப் போகாதோசொ
Sep 7me உலகம் பலவண்ணம் மனமதில் தெளிவுறு மகிழ்வுடன் பழகுவர் முகம் மனம் எதிரிருக்கும்கனமென நினைந்தொரு பொதியினைப் பொன்னெனப்பிரித்திடக் கல்லிருக்கும்வனமதின் தேவதை வருமெனும் நினைவுகள் வலிஎழத் தீதும்வரும் தினமது தொடுமுனைத் தென்றலும் மறுகணம் திரிந்திடும் புய
Sep 8me சக்தி எனும் சக்தி! அஞ்சி அழுதலும் ஆடிஅடங்குதல் யாருக்குத் தேவை சொல்லாய் கிளியே.நெஞ்சிலுரங்கொண்டு நீநிமிர்ந் தேநட நேர்மை வழியெடுப்பாய் கிளியேதுஞ்சி அழுதலும் தூறும் விழிகளும் தேவை யுண்டோ நினை வீறுடனேதஞ்சமெனக் கொள்ளும் தாழ்மை களைந்திடு
Sep 8me சக்தியே நிரந்த்ரம் சக்தி சக்தி சக்தி யொன்றே நிச்சயம்சத்தியத்தின் மொத்தரூப சித்திரம்சகதி சக்தி சக்தி யொன்றே அற்புதம்சக்தியெண்ணு காணு இன்பம் முற்றிலும்சக்தி சக்தி சக்தி என்றும் கற்பகம்சக்தி சாருவோர்க்கு நன்மை யைத்தரும்சக்தி சக்தி சக்தி யுந்தன்
Sep 10me அழகின் சிரிப்பு 3 இந்த கவிதைக் கதையை முப்பரிமாணப் படங்களின் காட்சிகளோடு தரலாமென எண்ணுகிறேன் ( 3D கவிதையாக ) சற்றுக் காலம் எடுக்கலாம் ஆனல் நிச்சயம் வரும். ஏற்கனவே ஆர்ம்பித்துவிட்டேன் விடிந்தஓளி வெய்யவனின் வெம்மைகுன்ற விசுமிளங் காற்றும் வெந்தகிப
Sep 12me அழகும் இன்பமும் பெருக்கலும் கூட்டலும் பெண்மைக் கழகு பேரின ஒற்றுமை சமூகத்தின் கழகு வகுத்தலும் கழித்தலும் ஆடவர்க் கழகு வருந்துயர் நீக்குதல் வீரத்தி னழகு உருக்கலும் மெருகிடல் பொன்னதற் கழகு உடுத்தலும் சிறுத்தலும் உடல் தனுக் கழகு வருந்துதல் நிறுத்திடின
Sep 12me கண்ணீர் ஆவென்றலறிய வேளையிலும் மனம் ஆனந்தம் கொண்டு திளைக்கையிலும் பூவென்ற தாய் அள்ளிக்கொட்டுகிறாய் மழை போலும் என்னில் வந்து சொட்டுகிறாய் ஓவென்றே ஓடிபுயல் விளைக்கும் சத்தம் உள்ளிருந்தே ஓசையாகிவிட நாவொன்றும் சேதிசொல் லாமலேயே நெஞ்சில் கொண்ட துன்பம் நீபக
Sep 22me தன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம் தென்னைமரச் சோலையிலே திங்கள் எழும்போதினிலே என்னருகில் நீயிருந்தாய் இன்குயிலே அதில் பின்னியிழை வெண்முகில்கள் பொன்னிலவைப் போர்த்திருக்க என்னை மனம் பூக்க வைத்ததுன் குரலே சின்னமலர் சூடும் தரு சில்லெனவே வீசு த
Sep 24me மகிழ்வில ஆடும் உள்ளம் கள்ளையுண்ட போதை நெஞ்சு காணுதே கண்கள் சுழன்றோடி வட்டம்போடுதே உள்ளுணர்வு மெல்ல எட்டிப் பார்க்குதே உன்மத்தங் கொண்டோசை உள்ளம்போடுதே வள்ளலென வாரியின்பம் நல்குதே வட்டநிலா போலுமெண்ணம் மின்னவே தெள்ளினிய செந்தமிழின் பாவிலே தேகம் என்ன பூ
Sep 25me தீரப்புயல் வேண்டும், பேசாதே உள்ளத்தில் சக்திகொண்டேன் - வெறும் பேச்சில் இழந்திடச் சித்தமற்றேன் பூசாத நீறணி நெற்றியென - இங்கே போக்கிடும் வாழ்வில் வெறுமை கண்டேன் ஆசா பாசங்களின் கட்டினிலே - நின்று ஆடிக் கழித்திடவா பிறந்தேன் வீசாத தென்றல்கொள் பூவனமா - இ
Sep 29me சக்தியைப் போற்றுவோம் ஆதிமூல சோதியான அன்னை சக்தியே ஆளவென்று நீவகுத்த தாமிவ் வாழ்வதில் பாதிதுன்ப மோடப் பாதி இன்ப மாகிடப் பாரிலே பிழைத்துமேனி பக்குவம் பெற தாதினம் அருள் எமக்குத் தாவும் வெண்ணலை தூவிடும்மழை பெருத்துத் தோன்றுமாநதி போதினில் புரண்டுவீழப்
Oct 4me இருளும் ஒளியும் காணும் வாழ்விதே! சந்தன மேனியும் கொண்டடி வான்கதிர் சகமதில் ஒளி மேவும் சுந்தர வானின் சிவந்திடுங் கீழடி செங்கதிர் வரும் காலை விந்தை எழில்பெற வேகமுடன் மலர் விரிந்திடும் விடிவேளை செந்தமிழில் இசை கொண்டெழும் உள்ளங்கள் சேர்ந் திறை அருள் நாடு
Oct 7me உறவா ? பகையா? நிலை குலையும் நெஞ்சே நீ எதிரிதானோ நிர்க்கதி யென்றென்னை விட்டதேனோ கலை மணந்த வாழ்வில் காணும்இன்பந்தள்ளி கருக உளம் வேதனை செய்வாயோ சிலையுருவாய் கல்லாய் சேர்ந்துடனே நின்றாய் சிரிப்பிரு ந்த காலமதை மாற்றி மலையெனவே நம்பி மனதில் உயர்வைத்தும்
Oct 9me வேறொரு இழையில் போட்ட கவிதை வரிகளுக்கு விளக்கம் தருகிறேன் தருவாய் தரமென்றுண்ணத் தருவே தரமென் றுண்ணத் கனிவாய் கனிவாய் தருவாய் என்றே தருமென்றெண்ணித் தரமொன்றுண்ணும் நினைவும் கொள்ளத் தருமோர்இன்பம் தருவொன்றெண்ணித் தருவன்காயின் தரமென்றானால் தருமென்கனியாய்
Oct 9me தெய்வத்தைத் தேடி...! ஆண்டவனைக் காண எங்கும் ஓடினேன்ஆலயத்தின் உள்ளும்புறம் தேடினேன்’நீண்டவழிநேர் நடந்து வாடினேன்நிற்குமிடம் சுற்றிவந்து தேடினேன்கூண்டினிடை நின்று கிளி பேசவும்கோகிலமும் மாமரத்தில் கூவவும் தாண்டியெழும் தாமரைப் பூஏரியில்தாவுமலைப் பேரழகில
Oct 11me தலைவியின் சோகம் (இலக்கியத்தில் எனக்குப்பிடித்த உணர்ச்சி) பொருளறியேன் ‘மாலை மயக்குதடி தோழி - மன மீறி யலை பெருகுதிந் நாழி சாலை வழி இருளின் பயணம் - நிலை சற்றும் உணராத மௌனம் சேலை மறைத்த உடல்மேவித் - தனி செல்லும் குளிர்வாடைத் தென்றல் ஆலைக்
Oct 11meev1955 நல்ல கற்பனை. படிக்கத்தூண்டும் நடை. வாழ்த்துக்கள்.அன்புடன்,மீ.விசுவநாதன் 2014-10-11 16:40 GMT+05:30 kirikasan <kana...@gmail.com>:
Oct 11துரை.ந.உ என்ன ஒரு கோணம்...என்ன ஒரு பார்வை வாழ்க ஐயா ... இந்த இழைக்குள் எங்கு நோக்கினும் ,எல்லாயிடத்திலும் மீதமிருப்பது பிரமிப்பு மட்டுமே 2014-10-11 18:47 GMT+05:30 M. Viswanathan <meev...@gmail.com>:
Oct 11
Oct 12me நன்றிகள் ஐயா! அன்புடன் கிரிகாசன்******************************************
Oct 12me பிரமிக்கச் செய்பவளே இதனால் பெருமையடைவாள் தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்!
Oct 12me ஒளியானவள் ஒளியொன்று பெருவானில் உருவானது - அதுஉலகென்ற ஒருவிந்தைப் பொருள்செய்ததுவெளிதன்னில் அசைந்தோடும் சுழல்செய்தது - பின்விருப்போடு அலைகாந்த வலைகொண்டதுவளிபோலும் நிலையற்ற அசைவோடது - புவிவாழென்றே உயிர்த் தீயை வளர்க்கின்றதுநெளிகின்ற அலைபோ
Oct 28me முயன்றிடு நாளும் ஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில்உனக்கு மட்டுமேன் வரண்டிருக்குதே உள்ளம்பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் பார்த்து வைத்துமென் காலில் குத்துதே முள்ளும்தேர்ந்தது மென்ன மேற்படிப்புடன் பட்டம் - அவை தேவையற்றுமே வ
Oct 28meev1955 அன்புக் கவிஞர் கிரிகசன் அவர்களுக்கு, " முயன்றிடு நாளும்" கவிதையில் என்னைக் கவர்ந்த வரிகள்:
Oct 31me மிக்க நன்றிகள் ஐயா!
Oct 31me துரதிஷ்டம் நீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுதுமேலடி வானிடை மேகம் சிவந்திட மேன்மை கொள்ளுது - அதை மாலைக் கருமிருள் மங்கிடச் செய்துமே மாயம் கூட்டுதுகோலம் அதிவிரை கொஞ்சும
Nov 1me அருள்வாயே! நிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும்நிலைதனை நிதமெழ அருள்தாயேகுறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடுகுவலயம் மலர் என மடிதூங்கமறை துயர், மகிழ்வெனும் மணியொலி நிதமெழமருவிய சுகமென மனமீதில்இறை மழை எனஅருள் இலங்கிட மதி திறன்இயல்பெழ நிறையன்பு தருவாய
Nov 3me ( என்மனதில் கவி சொல்லிதருபவள். இதையும் சொன்னாள். நானறியேன் தெய்வமே பொறுப்பு) நானிருந்தால்........ ஏழு வண்ண மாளிகைமுன் இரவினிலே விளக்குமின்றிஎப்படியோ நானவனைக் கண்டேன்தாழுமுயர் மேகமிடை தானும் விளையாடியவன்தான் ஒழிக்கத் தேடியறி என்றான்வாழு
Nov 3கடிச்சம்பாடி அருமை. பாரதியின் 'மங்கியதோர் நிலவினிலே...' பாட்டை நினைவூட்டியது. 2014-11-03 17:00 GMT-05:00 kirikasan <kana...@gmail.com>:
Nov 4me நன்றிகள் ஐயா!!
Nov 4me நீ இருக்கும் வரை நானிருப்பேன் நேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லைநின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லைதோற்றவனாய் திரும்புவதே ஈற்றில் என்னிலைதூய்மைகொண்டே தூரத் தெரியும் தீயென் சக்தியைநீற்றென உடலாக்கிய பின் நேரு
Nov 4me சிந்தையில் சொந்தமே அற்றவன் நான் என்மீது குற்றங் கண்டால் பெரியவர்கள் மன்னித்து சிறியவனின் கருத்தை பொறுத்தருளுக நான் யார்?” சிந்தையில் சொந்தமே அற்றவன் நான்செய்வதில் குற்றங்கள் கொண்டவன்கந்தல்மனம் அழுக்குள்ளவன் நான்காணுலகில் மந்தமானவன்நிந்தைசெயும் குண
Nov 4me ஒளி விளக்கு எத்தனை எத்தனை தெய்வங்கள் கண்டோம் அத்தனையும் ஒன்றுதானேநித்தமும் காலையில் கண்விழித்தால் முன்னேநிற்பதோர் சூரியன்தானேமத்தியில் உச்சியில் மாலயில் காலையில்மாறிக் கோலம் கொண்ட போதும்அத்தீயில் காணும் அனல் விளக்கு எங்கள்அன்பெனும் வாழ்வுக
Nov 5me கனலொளியே காவாய் ஞானத்தை வேண்டி நடக்கிறேன் யானும்நான் தவிர வேறதையுங் காணேன்ஊனதைப் பிடித்தே உந்திடும் சக்தியென்உள்ளத்தில் சொல்வதைச் சொன்னேன்தேனதைத் தந்தாள் தித்திக்க நெஞ்சில்தேவையா சஞ்சலம் ஈந்தாள்நானாக கேட்கா நலிந்துள்ளம் வற்றிநட்பிலே பகை
Nov 5me அறியேன் அறியேன் ஐயா அறியா அறிவை அறியேன் அதனாலேஅறியேன் என்றால் அறியாத்தொலைவில் அறியா நிற்கின்றேன்அறியென் றறியாக் கலைகள் ஈந்தாள் அறிவேன் அவள்கோபம்அறிவேன் அகன்றால் அழிவும் வரலாம் அதனில் தெளிவுண்டாம்
Nov 6me இயற்கையின் அழகும் எமதுவாழ்வும் கண்ணைத் தந்தே காட்சிகள்செய்தார்கானல் விம்பங்கள்மண்ணைத் தந்தும் மானிடவாழ்வில் மாயக் கனவுகளாய்எண்ணச் சொல்லி நினைவுகள் வைத்தார்எழுமாம் விகாரங்கள்புண்ணைக்கொண்டோர் தேகமும் தந்தேபுனிதம் போற்றென்றார் வண்ணங் கொ
Nov 6me உள்ளே வேண்டும் ஒளி வானத்திலே வித்தாகியே நின்றதோர் வண்ணத்தில் தீக்குழம்பு மோனத்திலே வெடித்தாழப் பரந்துநல் லாட்சியும் கொண்டதன்று ’ஆனதிலே வெளியெங்கும் தனதென ஆக்கி ஒளி விரித்தாள் ஈனத்திருள் ஓடி எங்கம் ஒளித்தது இராவின் விடிவை யொத்து ஏழு வண்ணங்க
Nov 7me இதோ வெண் திரையில் வண்ணக்கலை ஆடவெனக் கட்டிவிட்ட சலங்கை இன்னும் அழுகிறது நான் அசைந்து நடக்கும்போதுகூடவெனக் கோர்த்தெடுத்தமாலை தன்னும் கூடையிலே காத்திருக்கு கொள்ளலின்றிபோடவென வஸ்திரமும் வெட்டித் தைத்து பூணவெனக் காத்திருக்கப் பொழுதும்
Nov 8me விழுந்தும் எழல் வேண்டும் வலியெடுத்தும் அறமெடுத்தும் பகைமுடித்த தமிழ இன்று வகை யடுத்து நடப்பதென்ன கூறுகிலி பிடித்து குளிரெடுக்க கிடுகிடென்று உடல்நடுங்க கீழ் கிடப்பதோ நினைந்து தேறு புலிவிரட்ட முறமெடுத்த பெண்மணிக் கென்றான கதை
Nov 10me மனத்தோட்டம் கவிதை மலர்களும் காணும் மனதெழும் கற்பனைத் தோட்டத்திலேபுவியில் புலர்ந்திடும் பொழுதில் முகைவிடும் பூக்களெனும் வகையேசெவியில் மதுவெனப் புகுமே இசையெழச் சேரும் தமிழினிதேகுவியும் மலரிதழ் நெகிழும் விதம் மனம் கொள்ளும் கவிதைகளே!
Nov 10
PostDiscard
me(kirikasan change)
Attach a file
Edit subject Quote original Add Cc
எனக்குள் ஒருவன் இருகின்றான் - அவன்இன்பமும் துன்பமும் ரசிக்கின்றான்கனக்கும் துயர்மனம் கொண்டாலும் - அவன்களிப்பில் பஞ்சென மிதக்கின்றான்தனக்கெனப் பாதை வகுத்தவனாம் - அவன்தனிவழிப் பயணம் நடப்பவனாம்வனத்தில் மானென வாழ்பவனாம் - பகை’வரும்போ தஞ்சா வீரனுமாம்குணத்தில் கோட்டையின் மன்னவனாம் - அவன்குலவும் தென்றலின் இளமகனாம்கணக்கில் கவிதையின் ஆற்றோட்டம் - இவன்கனவை ஆக்கிடப் போராட்டம்மணக்கும் மல்லிகை வாசமதோ - இவன்மனமும் வாய்மைசொல் பூவனமோகணத்தில் கற்பனை ரதமேறி - அவன்கைதொடும் தாரகை ஒருகோடிதடைகள் வருவது தானுடையும் - அவைதண்ணீர்க் குளத்திடை குமிழிகளாம்நடைகொள் பாதையில் குளிர்காற்று - அதில்நந்த வனம் எனும் உணர்வூற்றுஇடையில் ஒருமயில் நடமாடும் -அதுஇன்னிசைக் கூத்திடக் குயில்பாடும்விடைகள் தேடியே ஓடும்நதி - எனவிளங்கும் வாழ்வின் போக்கினிலேஇடையே விதியும் எழுந்தாட - இவன்எண்ணத் திசையினில் காட்சிமுரண்மடையும் உடையா நீர்த் தேக்கம் - எனும்மதியின் பொறுமை தோற்றாலேஉடையின் உண்மைப் பிரவாகம் - அதைஉணர்வோ கண்டால் வலி சேர்க்கும்படைகள் கொண்டெழுந் தணிசேர்வாய் - உன்பழமைத் தமிழ்க்கவி இடர் வெல்லும்
--
எங்கள் தாயகம்ஆழநெடுங் கடல் சூழ எழில்கொளும்அன்னைபூமி யெங்கள்தேசம் - அதில்வேழம் மிதித்திட வீசிடுங் காற்றினில்வெட்டிய நெல்பதர் தூற்றிசூழ வயல்களில் சுந்தரத் தென்றலில்சுற்றி நடந்திசைபாடி மகிழ்வான நிலைகொண்ட வண்ணம் சிரித்துமேவாழ்ந்திருந்தோம் அந்தநாளும்தாழக் கிடக்குமோர் பாழுங் கிணற்றினுள்’தாவும்,தவளையின் சத்தம் - அதுவாழுங் கிணற்றிடை ஆகும் மதிகொள்ளின்வந்து இருண்டிடும் காலம்நாளும் உயர்வெடு நேர் நிமிர் நில்லெனநீளுயர் தென்னைகள் கூறும் - பனைஆளுமை கொண்டுயர் வாகும் தமிழ்எண்ணிஆனந்தக் கூத்திடை ஆடும்தேளுடன் பாம்புகள் திரிந்திட நாணலும்தென்றல் தொட வளைந்தாடும் - இந்தநாளுமது வெனும் நாணம் இழந்திடில்நாடும் மொழி பலி போகும்வேளை விடிந்திடப் பூச்சிரிக்கும் அந்தவிந்தை உணர்வொடு வாழும் - புதுக்காலைக் கதிர்சுடக் கொள்ளும்உடல் வெம்மைகாணின் வாழும் எங்கள் தேசம்வானைத் தொடும் பெருங்கோபுரமும்அதில் வந்தொலிக்கும் மணி நாதம் - அங்குதேனைக் கொள்ளும் மலர் தூவித் தெய்வந் தொழத்தேறும் துயர்கொண்ட உள்ளம்மீனைக் கொண்டே குளம் மெல்லிய நீரலைமாதவஞ் செய்திடும் கொக்கு அங்குதானெழில் தாமரை யோடு மின்னும் ஒளிதங்கும் நிலம் எங்கள்தேசம்வீடுகளில் தமிழ் சிந்தும் அழகுடன்வீறுகொண்டே ஒலி காணும் - அங்கேஆடும் இளமங்கை கூட்டம் அசைந்தொருஆனந்தக் கும்மியும் ஆடும்தேடும் மனங்களில் தேன் தமிழின் நிலைதெய்வ சுகம் கொண்டபோதும் - இன்றுவாடும் வரை உயிர் போக வதைப்பவன்வந்து இருப்ப தென்னாகும்பேசுந் தமிழ்கொண்ட அன்னையும் தந்தையும்பெற்று வளர்த்திட்ட மண்ணில் - இன்றுமாசுகொண்டோர் எம்மை மண்டியிடச் செயும்மாபெரும் கொடுமையின் கோரம்வீசும்சுதந்திரம் வேண்டும் மனங்களோவீணடைந்தே விழுந்தாலும் இனிமாசுதந்திரம் என்றதோர் மந்திரம்மாற்றம் தருவதெக் காலம்
--
அக்கரை சிவப்பு
நடந்தே நாம் செலும்பாதை இருள்கொண்டது - அதில்நெளிந்தோடும் விச யந்து உயிர் வாழுதுகடந்தே நாம் செல்கின்றோம் கடிக்கின்றது -கால்கடுத்தே நம் உதிரங்கள் வழிகின்றதுகிடந்தே நாம் துடிக்கின்றோம் குரல்மங்குது - இதைகேட்போர்க்கு இதயங்கள் தொலைவாகுதுதிடங்கொண்டு வாழ்வெண்ணி கலங்கும் நெஞ்சம் - அதிதொலதூரம் வரை இல்லை மனிதம் ஒன்றும்
வாழ்க ஐயா
2014-11-21 3:35 GMT+05:30 kirikasan <kana...@gmail.com>:
அக்கரை சிவப்புநடந்தே நாம் செலும்பாதை இருள்கொண்டது - அதில்நெளிந்தோடும் விச யந்து உயிர் வாழுதுகடந்தே நாம் செல்கின்றோம் கடிக்கின்றது -கால்
ஆண்டஎங்கள் தேசந்தன்னை ஆளவென்று நாம் நினைக்கஅள்ளித்தீயை இட்டவரும் யாரோபூண்டசாமி யாரின்வேடம் போர்வைக்குள்ளே ருத்திராட்சம்பூனையாகஎம் மிடம்வந்தாரோமீண்டும் எம்மை நாமே ஆள மென்னுடம்பில் வேர்த்தமேற்குமூண்டெழுந்த அச்சம் சேர்ந்ததாலோபூண்டைவேரி னோடுவெட்டிப் புற்பசுந்தரை கருக்கிபேசும்செந் தமிழ்அழித்த பாரோஆண்டியாக எம்மையாக்க ஆளுகென்றோர் வேடமிட்டுஅந்நியர் எம்மண் பறிக்கலாமோகூண்டினு ள்ளே போட்டடைத்துக் குற்றமற்ற மக்கள் மீதுகுண்டை வீசிக் கொல்லல்நீதி யாமோநீண்ட நாட்கள் பொய்யுரைத்து நேர்மையற்று வாய்மைகொன்றுநீறு கொள்ளவென்று தீ சொரிந்துவேண்டி மண்பறித்து எம்மை வீதியிற் கிடக்க வைக்கும்வேந்தன்பக்கம் நூறு ஒன்று நாமோதோண்டியும் புயல் அழித்த தூயவர்தம் மேனி கண்டுதாண்டியும் பொறுத்தல் விட்டுக் கேட்கதீண்டியும் விலங்கினத்தை தீதினில் செய்மானம் ஒப்பதீந்தமிழ் அழிக்கக் கண்டும் தேசம்சீண்டியே எழுப்பும்போதும் தோன்றிடுமாபத்தையெண்ணாதூங்கியே கிடந்த சொந்தம் யாவும்ஆண்டவன் எழுத்தேயென்றும் அன்னையர் துடிக்கக் கண்டும்அந்நியம்மென் றெண்ணம்கொண்டுசோரமாண்டவர் எழுந்திடா ரிம் மக்கள் வீரம் குன்றவைத்துமாபழந் தமிழ்மொழிக்குக் கேடுவேண்டியே இழைத்த பூமி வெள்ளையில்சுண் ணாம்படித்துவிட்டதை மறைக்க ஏங்கும் போதுஆண்டெனும் ஓர் நூறுசென்றும் ஆவதோ ஒன்ன்றில்லை யென்றஆதங்கம் கொண்டின்னல் கண்டுமாளநீண்டதோர் பொற்காலமொன்றில் நற்றமிழ் மண்கல்லுமற்றநேரத்தில் உண்டான தெல்லை காணும் ????பாண்டியும் புலியென் றாடும் பாங்கினில் இபோரைக்கண்டுபத்தினில் அறுவன் ஆங்கிலத்தைநோண்டியுள் கலந்து பேசி நூதனப்பரிமாணத்துல்நின்றிடில் தமிழ் சிதையக்காணும்பூண்டினில் புல்லொடு வந்த போதிலும் காஞ்சோன்றி எங்கள்பொன்னெனும் இம்மேனி கொல்லப் பார்க்கும்பாண்டியன் அச் சேரன் சோழன் பைந்தமிழ் வளர்த்துமென்னபாத்திருக்க வில்லும் மீன் என்செய்யும் ???******************
காரிருள் பற்றிய கண்களிலே அந்தக் ’காட்சி தெரியவில்லைநேரருள் தந்தவள் நெற்றியிலே சினம்நேரும் நிலையுமில்லைபோரெனக் கீழே புரண்டெழு என்றதோர்பேதமை தானுமில்லைவாரவிழ் பூந்தளிர் போலும் மனதிலேவந்ததென் தோன்றவில்லைஆயிரம் தந்தவள் ஆவியெனில் கொண்டஅத்தனை எண்ணங்களில்போயிருந்து செய்த போக்கினிலே என்னபூத்தது அன்பின் வகைவாயிருந்தும் சொல்ல வார்த்தையில்லைவற்றிய தோ இலை யிலைகாயிருந்தும் கனிகொள்ள வில்லைஅந்தக் காரணம் சக்திநிலைசேயெனவே நின்று காணுகிறேன்எந்தத் தேசம் புதிய கலைதூயநிலை கொண்டு காணுகிறேன் எந்தன்துன்பம் ஒழிந்த நிலைதாயன்பு கொண்டதி னால் இதுவோ அடசக்தியில் ஊற்று தனைபோயிருந்து காணப் பெற்றுவிட்டேன் எந்தன்போக்கினில் சாந்தஎல்லைமீதிகிடந்த வன் நோய்கள் கொண்ட தொல்லைமாறியதாய் நிலைமை
ஏதிதில் என்மனம் கண்டது என்றுமேஇன்றுபோல் வந்ததில்லைஊதி வளரென்றே உல்லாசத் தீயினைஓங்கிடச் செய்தவளையாது எனக் கண்டே வேண்டிட வந்தூற்றும்மீண்டும் கவிதை மழை
--
மங்கல ஓசை எழுந்துவரமங்கையர் கள் நடமாடிவரசங்கு ஒலித்திடும் சத்தமெழசாய்ந்து மரங்கள் சலசலக்கபொங்கும் தமிழிசை காதில்வரபொய்கை இளந் தென்றல் வாசமிடஎங்கும் மணியொலித் தின்பமெழஏழைகள் வாழ்வில் நிறைவுகொள்ளவெங்கனல் வீசிடும் நீதியெழவிட்டெழுந்து தீமை ஓடிவிடதங்க ஒளிநிலா ஊற்றிவிடதந்தன தந்தன தாளமெழசங்க தமிழிசை சந்தமிடசார்ந்து குயிலிசை கானமெழசெங்கனி கொண்டதை தேனழைந்துதின்னவென பெண்கள் தந்திருக்கமங்கிடும் மாலையின் மஞ்சள்வெயில்மாறி இருள் போர்வைமூடிவிடஅங்குமிங்கும் வண்ணம் பூசியதாய்ஆக்கும் வண்ணஒளிக் கோலமிடபொங்கி விரிவன பூச்சரங்கள்போலும் வெடிக்கும் மாத்தாப்புகளும்தங்கிடும் இன்பத்தை வாழ்வுனிலேதந்திடப் புத்தாண்டு வந்ததுவோவெள்ளி முளைத்து விடியுதெனவேண்டுவர் வாழ்வில் உதயமெழபுள்ளியிட்ட மானும் துள்ளுதெனப்பூவையர் சின்னவர் ஆனந்திக்கஅள்ளி யணைத்திடத் தாயவளும்அன்புகொண்டதந்தை கூடிநின்றேஉள்ளமதில் பெருஆனந்தமும்உண்டு செய்யுமோ புத் தாண்டுமிதே!
இன்பமா, துன்பமா?இன்பமலர்த் தோட்டமென்றே இவ்வுலகாக்கி - அதில்ஏரியொடு ஆறு மலை புல்வெளி கூட்டிமென்மலர்கள் பூவனமும் மாமரச்சோலை - யெனமேதினியில் இன்பம் நிலைக்காட்சி யமைத்தாள்அன்புவழி செல்லும்வலைக் காந்தமமைத்து - அதில்ஆடியோடும் போதுமுள்ளே பாசமிழைத்துதன்னுணர்வில் கூடுமொரு இனபமும்செய்தாள் - பின்தவித்திருக்கப் பிரியுமொரு வேதனைதந்தாள்எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின்ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம்மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - எனமாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள்பொங்கிவரும் ஆறெனவே பூம்புன லூற்று - அதுபோகும்வழி கூடல்மரம் பூந்தளிர் நீட்சிதொங்கும்சுவை மாங்கனிகள் தின்றிடும் பட்சி - கூட்டித்தேமதுர கோலமென வாழ்வை யமைத்தாள்சிங்கமொடு சீறும்கொடுபாம்புகள் காணும் - இன்னும்சொல்லடங்கா கோரமுக தோற்றங்கள்தானும்எங்கிந்தோ மென்மை கொண்டே மான்களும்செய்து - அதில்எழிலெழவே புள்ளியிட்ட வண்ணமுமாக்கிஇங்கவைகள் ஒன்றெனவே வாழவும் விட்டாள் - அதில்இனிமைதனை. தேடும்வழி இடர்களும்செய்தாள்பங்கமுறும் மேனிதந்தே பாதுகாத்திட - நீயும்பழகு எனப் பாதையிலே முள்ளையுமிட்டாள்எங்கெதுதான் இல்லையென்றால் ஏக்க மிருக்கும் - மனம்எண்ணியது கையில்வர இன்பமென்றாகும்பொங்குமின்பம் மேன்மைதனை போற்றிடவென்றே - இந்தப்பூமியிலே வாழ்விற் பலதுன்பங்கள் வைத்தாள்தொங்குமுயர் வானிடையே தோரணங்களாய் - அனல்தூயஓளிக் கீற்றுகளை தோன்றச்செய்தவள்மங்கும்சிறு துன்பங்களை மாதிரிக்காக்கி - அதில்மாந்தருக்கு இன்பநலம் மேன்மைகொள்ளெனும்மாற்றமுற இயல்பமைத்தே மானிடம்தன்னை - இந்தமாறுதலில் ஆனந்தமும் கொள்ளவிட்டவள்தோற்றம் பெறும் மேனிதனும் இன்பமும் துன்பம்துய்க்கவென ஆக்கியுணர் வேற்றிய வேளைதூற்றி யழித் தோர் இனத்தை துட்டரும் கூடி - இன்றுதுன்பமிழைத் தின்பங் கண்டு கொள்வதுமேனோஈற்றினிலே பூமியெங்கும் துன்பமென்றாக்கி கொஞ்சஇடையினிலே மின்னலின்பம் மாற்றியதாரோ