கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை

3 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jun 24, 2026, 8:25:44 AM (21 hours ago) Jun 24
to santhavasantham
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை – மீள் பதிவு

எண்ணங்க ளெழுச்சிபெறு மின்பத்தில் திளைக்க
ஏழிசையின் விதங்காட்டிக் கவியொன்று முளைக்கும்
வண்ணங்கள் வார்த்தையிலே வக்கணையா யமரும்
வாழ்விற்குப் போதிக்கும் தத்துவத்தில் மிளிரும்
விண்ணேகிச் சென்றாய்நீ விண்ணவருங் களிக்க
விசைகொண்ட அம்பாலெம் மிதயத்தைப் பிளக்க
கண்ணனவன் தாசனென்ற கவியரசே உன்போல்
கவிபடைக்க யார்வல்லர் கடலாற்சூழ் மண்மேல்.

ஆட்டனத்தி ஆதிமந்தி காவியத்தைப் படைத்தாய்
அனுபவத்தின் சாறுகொண்டு கவிதைகளைத் தொகுத்தாய்
வாட்டமுற்ற நாட்களிலும் வண்மையுடன் தொடர்ந்தாய்
வனவாசம் மனவாசம் மாங்கனியோ டளித்தாய்
ஏட்டறிவு உனக்கிலை என்பவர்தாம் மடையர்
…. என்றுமுந்தன் காவியங்கள் அவர்கூற்றைப் புடைக்கும்
பாட்டமைத்தாய் பண்ணமைத்தாய் படைத்ததனால் இறைவன்
…. பட்டமது உனக்காகும் பாருள்ளோர் அறிவர்.

ஏசுவென்ற இறைவன்றன் காவியத்தைக் கொடுத்தாய்
இறுதியிலே இரங்கற்பா உனக்கெனவாய்த் தொடுத்தாய்
பேசுவகைப் பொருளானாய் பொய்யுறவைத் துறந்தாய்
பெம்மானின் அடிபணிந்துன் வாழ்நாளுக் கிரந்தாய்
மாசற்ற ஆன்மீகம் மனமேற்று நின்றாய்
மாயவனின் கானத்தை மனமுருகத் தந்தாய்
பாசத்தில் பார்போற்ற உன்பேரும் வாழும்
பாரதிப்பின் தாசற்பின் உன்புகழும் நீளும்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Arasi Palaniappan

unread,
Jun 24, 2026, 8:28:28 AM (21 hours ago) Jun 24
to சந்தவசந்தம்
படைப்புகளைக் கொண்டே படைத்தவனைப் போற்றும் 
நடையிலுயர் பாடல் நயம்!


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CCE2F976-A0F0-4C7E-9235-559A8B233870%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Jun 24, 2026, 8:29:52 AM (21 hours ago) Jun 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 24, 2026, at 08:28, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Govindaraju Arunachalam

unread,
Jun 24, 2026, 11:22:30 AM (18 hours ago) Jun 24
to santhav...@googlegroups.com
கவிபடைக்க யார்வல்லர் கடலாற்சூழ் மண்மேல்.
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. 

அருமையான விருத்தம்! மாந்தி மகிழ்ந்தேன்.

-கருவூர் இனியன்.



--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Ram Ramakrishnan

unread,
Jun 24, 2026, 12:00:10 PM (17 hours ago) Jun 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அருமை நண்பர் இனியனாரே


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 24, 2026, at 11:22, Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:



Kaviyogi Vedham

unread,
Jun 24, 2026, 8:41:38 PM (9 hours ago) Jun 24
to santhav...@googlegroups.com
அட்டகாசம் ராம். வாழ்க..
 யோகியார்

Ram Ramakrishnan

unread,
Jun 24, 2026, 10:53:21 PM (7 hours ago) Jun 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, யோகியாரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 24, 2026, at 20:41, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages