உன்னை அறிந்தால் - மீ.விசுவநாதன்

1 view
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 6, 2026, 6:58:26 PMMar 6
to Santhavasantham, M. Viswanathan
"உன்னை அறிந்தால்"
(மீ. விசுவநாதன்)

வானில் மேகம் மாறும்
வான மாற்றம் இல்லை
ஊனில் உயிரும் வாழும்
உயிர்க்கு அழிவே இல்லை
நானில் தோன்றும் கர்வம்
ஞானத் தாலே மாயும்
ஏனில் இருக்கும் தேடல்
இருப்பாம் நான்யார் சொல்லும்

வாடா மலரே ஆத்மா
வந்த பிறப்பில் பற்றுக்
கோடா யின்றி நின்று
குறித்த காலம் ஓடும்
மாடாய் உழைக்கும் உன்னுள்
வாசம் செய்யும் நானை
தேடாப் பொழுது வீணே
தெரிந்த வாழ்வு தேனே.
(07.03.2026 05.25am)

Arasi Palaniappan

unread,
Mar 6, 2026, 8:08:43 PMMar 6
to சந்தவசந்தம், M. Viswanathan
அருமை அண்ணா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-v_fONwv_DQwbUQ7zkPt-Ku71bfbx4p-MrBLvoF%2B4f_3A%40mail.gmail.com.

Kaviyogi Vedham

unread,
Mar 6, 2026, 8:40:48 PMMar 6
to santhav...@googlegroups.com

M. Viswanathan

unread,
Mar 6, 2026, 10:56:40 PMMar 6
to Santhavasantham
அன்புக் கவியோகியார், அம்புக் கவிஞர் அரசி பழனியப்பன் ஆகியோரின் கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்
08.03.2026

Reply all
Reply to author
Forward
0 new messages