சந்தவசந்தக் கோட்பாடுகள்

13 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 18, 2026, 8:22:18 AM (4 days ago) Mar 18
to santhavasantham
சந்த வசந்தம் கவிதைக் கென்றே அதிலும் குறிப்பாக மரபுக் கவிதைக்கென்றே அமைக்கப்பட்டுள்ள ஒரு தளம். பின்னாளில் கொஞ்சம் விரிவுபடுத்தப் பட்டுப் புதுக்கவிதைக்கும் அவ்வப்போது அனுமதி அளிக்கப்பட்டது. சந்தவசந்தத்தில் கவிஞர்கள் அவர்களுடைய கவிதைகளை மட்டுமே இடலாம். அதில் பிழைகண்டால் யார்வேண்டுமானாலும் அதைச் சுட்டிக் காட்டலாம்.   கவிஞர் சிவசிவா அவர்கள் மதிசூடி துதிபாடி தொடரில் பலவிதமான பாவகைகளை அவரே எழுதி வெளியிடுகிறார். அது பலருக்கும் பயனாகிறது.  கவிஞர்களின் பயிற்சிக்காக அவ்வப்போது இலக்கண விளக்கங்கள் பயிற்சிகள் வெளியிடப்படும். அதனால் பயனடைந்தவர்கள் ஏராளம். இங்கே எப்பொழுதாவது சில சிக்கலான கவிதைகளுக்கு உரை வெளியிடப்படுவதுண்டு. அதுவும் எப்பொழுதாவதுதான்.  கவிஞர் இமயவரம்பனின் சில உரைகள் வெளியிடப்பட்டுள்ளன.   தேவாரம் போன்றநிறையப்பாடல்கள் உள்ள  பிரம்மாண்டங்களுக்கு 
இங்கே உரை வெளியிடப்படுவதில்லை.  அப்படி அனுமதித்தால் நாம் எதற்காகத் தொடங்கினோமோ அதற்குப் பாதிப்பு நேரும். அந்தப் பாதிப்பைத் தடுப்பதற்காக சந்த வசந்தத்தில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம் விவரித்தால் பெருகும் என்பதால் விடுக்கிறேன் பிடிவாத மாக கோட்பாடுகளைப் பின்பற்றியதால் சந்தவசந்தம் இன்னும் தொடர்கிறது. .  இங்கே பயிற்சி பெறவும், கவியரங்கம், கவிதைப் பட்டிமண்டபம் போன்றவற்றில் பங்குபெறவும் வாய்ப்புகள் அதிகம். இங்கே பயிற்சி பெற்றவர்கள் பலர் வெளியில் பிரபலமாகத் திகழ்கிறார்கள்.

இலக்கியங்களைப்பற்றி வினாக்கள் எழுப்பித் தெளிவு பெறுவதும் இங்கே நடைபெறுகிறது

தேவார உரை போன்ற நீண்ட செயற்பாடுகளுக்காக யார் அதைச் செய்யவிரும்புகிறாரோ அவர் தனியாக ஒரு கூகுள் குழுமத்தை அமைத்து அதில் தொடர்வது. நல்லது.   . இங்கிருப்பவர்களும் அதில் உறுப்பினர்களாகிப் பங்கு பெறலாம்.

இங்கே சித்திர கவியிலிருந்து பல வகையான பாவகைகளைக் கையாள்கிறோம்.  எல்லா வகையான ஏற்றுக்கொள்ளத் தக்க தலைப்புகளில் கவிதை வழங்கலாம்.
 பல தடைகளை மீறிப் போராடி  இந்த அளவுக்கு வந்திருக்கிறோம் என்கிற வரலாற்றைத் தெரிவித்துக் கொள்கிறேன்

எனவே அன்பர்கள் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறேன்

இலந்தை

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 18, 2026, 9:40:31 AM (4 days ago) Mar 18
to சந்தவசந்தம்
தலைவரே வணக்கம் 

இந்தக் குழுவில்  இருப்பதும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தக் குழுவால் நான் நிறைய பயனடைந்தேன். 
இந்தக் குழுவால் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.
இந்தக் குழுவின் விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றுவேன்.
ஆர்வத்தில் அடியேன் செய்த பிழையை மன்னிக்கவும். 


கந்தம் கமழும்நல் கன்னித் தமிழினில்
எந்தக் கவியும் இயற்றிட - வந்தவற்
கிந்தக் குழுதான் எழுச்சி தருமது
சந்த வசந்த சபை.







Reply all
Reply to author
Forward
0 new messages