பழம்பாடல் - யாப்பு வகை வினா

8 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 27, 2026, 8:22:32 PM (19 hours ago) Mar 27
to சந்தவசந்தம்

கீழே தந்துள்ள மொத்தம் 16 சீர்களைக் கொண்ட பிரதோஷப் பாடலின் யாப்புவகை என்ன? இரட்டை எண்சீர் விருத்தம் என்னலாமா? 


<> எப்படிச் செய்வேன்? <>

 

 

அருகிருக்கும் அன்னைமுகம் அரைவிழியால் நோக்கியவா(று)

.. ஐயனவன் தில்லைச்சிற் றம்பலத்தில் ஆடுமந்த

 

பெருமெழிலைப் பருகிவந்(து)உன் றனுக்களிக்க வைத்தனன்நான்

.. பின்னர் இருசெவிகளையும் பிறையணியும் பெம்மானின்

 

திருவைவிரித்(து) அடியர்சொலும் துதிகளெல்லாம் கேட்கவைத்தேன்

.. தேனாகத் தித்திக்கும் தேவனின்பேர் ஆயிரத்தின்

 

உருசியெலாம் உனக்குரைக்க நாவினுக்கோர் ஆணையிட்டேன்

உனக்கெனநான் செய்தபல உதவிகளை ஒருசிறிதும்

 

 

மதியாமல் உதறியுன்றன் மதம்பிடித்த போக்கினைநீ

.. மாற்றாமல் உன்னிழிய வழியினிலே சென்றெனக்கோர்

 

எதிரியென என்றுமெனை வாட்டுகின்ற என்மனமே!

.. எவ்வகையில், எதைக்கொண்(டு)இவ் ஏழைநான் உன்னுணர்வைச்

 

சதிர்பயிலும் ஐயனின்பால் சாரவைத்துப் பிறப்பிறப்புச்

.. சகதியிலே சந்ததமும் சலியாமல் அளைந்திடும்உன்

 

கதியிதனை மாற்றியந்தக் கைலைமலை இறைவனையோர்

கணமேனும் உள்வாங்கிக் கசிந்துருகச் செய்வேனோ?


... அனந்த்

Siva Siva

unread,
Mar 27, 2026, 8:28:10 PM (19 hours ago) Mar 27
to santhav...@googlegroups.com
Based on the edhugai, it looks like 2 stanzas of 4 lines of 8 seers.

V. Subramanian

GOPAL Vis

unread,
Mar 27, 2026, 8:32:22 PM (19 hours ago) Mar 27
to santhav...@googlegroups.com
16 சீர்கள் இல்லையே. அடிக்கு எட்டுச் சீர்களே உள்ளன. 
கோபால். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2eabcsBRVPON%3DyqFgdmUrgK0KSftm3Xv5ZWWrHUS35pQ%40mail.gmail.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 27, 2026, 8:33:39 PM (19 hours ago) Mar 27
to santhav...@googlegroups.com
நன்றி. 
> Based on the edhugai, it looks like 2 stanzas of 4 lines of 8 seers. அப்படி அமைந்த பாடலைத் தொடர் இரட்டை எண்சீர் என்று அழைக்கலாமா?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 27, 2026, 8:38:08 PM (18 hours ago) Mar 27
to santhav...@googlegroups.com
நான் சுட்டியது இரு பாடல்களுமாகச் சேர்த்து 16 அடிகள் இருப்பதை. பொதுவாக, முதல் எண்சீர் விருத்தத்தின் கருத்து முழுமையாகாமல் அடுத்து வரும் எண்சீர்களைக் கொண்டு முடிவதை. இது வழக்கத்தில் இல்லாததால் என் கேள்வி எழுந்தது. 
அனந்த்  

Siva Siva

unread,
Mar 27, 2026, 8:46:28 PM (18 hours ago) Mar 27
to santhav...@googlegroups.com
குளகமாக அமைந்த பாடல்கள். 
வேறு பெயர் தேவையா?

V. Subramanian

GOPAL Vis

unread,
Mar 27, 2026, 10:04:50 PM (17 hours ago) Mar 27
to santhav...@googlegroups.com
அதை நான் குளகம் என்று சொல்வர் என்று நினைத்தேன்
கோபால்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 27, 2026, 10:27:30 PM (17 hours ago) Mar 27
to santhav...@googlegroups.com
நன்றி. என் வினாவை இங்கிட்ட பின் எனக்கும் அவ்வாறே தோன்றியது. அனைவருக்கும் நன்றி.
அனந்த்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 27, 2026, 11:06:36 PM (16 hours ago) Mar 27
to santhav...@googlegroups.com
அனந்த் ஜீ அவர்களுக்கு அடியேனில் வணக்கங்கள்.

ஒருசிறிதும் என்று முதல் நான்குவரிகளுடைய எண்சீர்கள் பாட்டை முடிக்காதிருப்பதால் 16 சீர் விருத்தம் (எதுகை வேறுபாடு இருந்தாலும்) எனக் கருத இடமுண்டு. அல்லது, முதற் பாட்டின் கருத்து முடியாமல் அடுத்த பாட்டிற்கு எடுத்துச் செல்லுதல் என்பதற்கு இலக்கிய முன்னோடி இருக்குமானால், இதனை இரண்டு எண்சீர் விருத்தங்களாகக் கொள்ள இடமுண்டு.

எல்லாச் சீர்களும் காய்ச்சீர்களாக இருப்பதுவும் மற்றொரு தனித் தன்மை.
 

என்றன் இரு சிறு காசுகள்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 28, 2026, at 06:02, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
2:20 AM (13 hours ago) 2:20 AM
to santhav...@googlegroups.com
“குளகமாக” அமைந்த பாடல். சற்றே விளக்கி என் அறியாமையைப் போக்கலாகுமா?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 28 Mar 2026, at 7:57 AM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:



M. Viswanathan

unread,
3:32 AM (12 hours ago) 3:32 AM
to Santhavasantham
குளகச் செய்யுள் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY https://share.google/FqLEaCxzK0AmaRNQv

Reply all
Reply to author
Forward
0 new messages