மாண்ட- மாண்பு, மாட்சி

6 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 6, 2026, 5:43:46 PM (4 days ago) Mar 6
to Santhavasantham
மாண்ட- மாண்பு, மாட்சி
------------------

மாண்ட- என்ற சொல் மாண்பு, மாட்சி என்ற பொருளிலேயே பொ.யு. 1000 (First Millennium) வரை இருப்பதைக் காண்கிறேன். மா- (மாம்பழம். அறுத்தால் பொன்னின் நிறம்). மாழை - பொன். மாழை ஒண்கண். மாழை ஒண்கண்ணி, மாவகிர்க் கண்ணி, வடுவகிர்க் கண்ணி - பார்வதி அம்பாள். மாழை - மாடை : ஒரு பொற்காசு.

மாழ்-/மாண்-/மாட்சி. An intrinsic rule of retroflexion in Dravidian languages, showing the source of Retroflexion in Sanskrit. Here is an example I wrote yesterday, ciLukku-/ciDukku/ciNukku-
https://x.com/naa_ganesan/status/2029284040302370848

மாண்ட- இறத்தல் என்ற பொருளில் சங்க நூல்களில் உண்டா?
------------------------

மாள்- : இறத்தல்/செத்தல். சாவு < சாய்தல். சவம் > ஶவம் (ஸம்ஸ்கிருதம்), இது தமிழ்ச் சொல் என்பர் சம்ஸ்கிருதப் பேராசிரியன்மார்.

DEDR 4831 Ta. māḷ (māḷv-, māṇṭ-) to die, perish, be exhausted, expended or finished; māṭṭu (māṭṭi-) to kill, destroy, remove, cause to disappear; māṇṭār the dead; maṭku (maṭki-) to be dim, deprived of lustre, glory, or brilliance, lose strength, be destroyed. Ka. māṇ to stop, cease, subside, be laid aside, be got rid of, be checked or repressed, desist from, cease from, give over; māḷ to cease, etc. Tu. māṇāvuni, mānāvuni to lessen, decrease, abate. Te. mālu to be spoiled, be destroyed, be removed; mālucu to stop, set aside, remove; malugu to be extinguished, (K. also) be reduced, diminish (as hunger), (lamp) goes down due to lack of oil; malupu to extinguish, put out, destroy; (K.) malãgu to cease, stop (as births and deaths), (sins) to diminish; (K.) malãpu to remove, extinguish; manũgu, (K. also) manuvu to die. Kuwi (F.) mṛakhali to obliterate, wipe out; (Ṭ.) maṇk- to erase; (Isr.) mṇeṅg- (-it-) to die out, be destroyed; mṇek- (-h-) to destroy completely, erase. DED 3958.

மாய்-தல் > மா(ய்)ழ்- மாழ்குதல் மாண்டார் (செத்தார்). இப் பொருள் பெரும்பான்மை இரண்டாம் ஆயிரத்தில் (Second millennium) ஆகியுள்ளது.  சீ- (Palm tree like palmyrah palm, coconut palm, date palm etc.,) ஒப்பு: சீ(ய்)ழ்-  சீழம் > ஈழம் "கள்ளு".

DEDR 4830 Ta. mār̤ku (mār̤ki-) to be bewildered, fascinated, be spoiled or lost, grow lazy; mār̤ā (-pp-, -nt-) to be fascinated, be confused, bewildered, fade, become dim. Ma. mār̤kuka to languish, grow faint, sleep, die; mār̤kāta unfailing, unremitting; mār̤kal, mār̤ca faintness, dullness, laziness. Cf. 4750 Ta. mar̤uku. DED 3957.

மாள்-/மா(ய்)ழ்- என்னும் வினைச்சொல் தரும் மாண்டார் "செத்தார்" பிரபல ஆட்சி கொள்வது இரண்டாமாயிரத்தில் எனத் தெரிகிறது.

என் வினாவல்:
மாண்ட- இறத்தல்/சாதல்  என்ற பொருளில் சங்க நூல்களில், 18 கீழ்க்கணக்கில், ஐம்பெரும் காப்பியங்களில், பக்தி நூல்களில் (தேவாரம், திருமுறை, திவ்வியப் பிரபந்தம்)  உண்டா?

மறுமொழிக்கு நன்றியுடையேன்,
நா. கணேசன்

Girija Varadharajan

unread,
Mar 6, 2026, 6:42:17 PM (4 days ago) Mar 6
to santhav...@googlegroups.com
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார்- என்ற ஔவைப் பாட்டி பாடல் 


From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of N. Ganesan <naa.g...@gmail.com>
Sent: Saturday, March 7, 2026 4:13:06 AM
To: Santhavasantham <santhav...@googlegroups.com>
Subject: மாண்ட- மாண்பு, மாட்சி
 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcD5wVSOGw-1QxHk%3DM-S-Cq47eOXjjeXO0kGi%2BsDsnppQ%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Mar 6, 2026, 8:11:21 PM (4 days ago) Mar 6
to சந்தவசந்தம்
"ஆண்டுபல வாயினும் நரையில வாயின 
மாண்டஎன் மனையொடு மக்களும் நிரம்பினர் "

பிசிராந்தையார் 

--

N. Ganesan

unread,
Mar 7, 2026, 5:59:58 AM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com, Pandiyaraja Paramasivam
On Fri, Mar 6, 2026 at 5:42 PM Girija Varadharajan <girij...@hotmail.com> wrote:
>
> ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார்- என்ற ஔவைப் பாட்டி பாடல்
>

ஆம்.

கம்பன் இருபொருளையும் ஒரே பாடலில் வைத்துப்  பாடியிருப்பான்.
பார்த்துச் சொல்லுங்கள்,

On Fri, Mar 6, 2026 at 7:11 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> "ஆண்டுபல வாயினும் நரையில வாயின
> மாண்டஎன் மனையொடு மக்களும் நிரம்பினர் "
>
> பிசிராந்தையார்

இங்கேயும் குறிப்பிட்டேன்:

இவை இரண்டு பாடலும் தான் என் நினைவுக்கும் வந்தன. பேரா. ப. பாண்டியராஜாவிடமும் கூறினேன்.

பக்திக் காலத்தில் - தேவாரம், திவ்வியப் பிரபந்தம், திருமந்திரம், ... மாண்ட- இப்போதைய பொருள் வந்துவிடுகிறது.

முதன் முதலில், இளங்கோ அடிகள், பத்தினித் தெய்வம் கண்ணகி மதுரையை எரியூட்டிய போது ஊர்மக்கள் இறந்துபட்டதைச் சொல்கிறார். இது தமிழின் மாண்ட- = செத்த- என்பதன் முதல் ஆட்சி, 5-ம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது எனலாம்.

பாடல்_சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டு
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட
முலை_முகம் திருகிய மூவா மேனி        150
பத்தினி கோட்ட படிப்புறம் வகுத்து
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி
பூவும் புகையும் மேவிய விரையும்
தேவந்திகையை செய்க என்று அருளி
வலமுறை மு முறை வந்தனன் வணங்கி        155
உலக மன்னவன் நின்றோன் முன்னே
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும்
குடக கொங்கரும் மாளுவ வேந்தரும்

கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தனும்        160
எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
நல் நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல்
வஞ்சிக்காண்டத்தில், வஞ்சி மாநகரில் கண்ணகிக்குக் கோட்டம் எடுத்தபோது பல நாட்டார் கூடியதைப் பாடுகிறார். கரூருக்கும், பாலக்காட்டுக் கணவாய் வழியாக முசிறிக்கும் எகிப்து நாட்டிலே இருந்த தொடர்புகள் இப்போது அங்கே கிடைத்துள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. [1]
நா. கணேசன்
[1] எகிப்திய நாட்டில் தமிழ் இளம்வீரர் (கண்ணதாசன், 1958)




N. Ganesan

unread,
Mar 7, 2026, 6:32:51 AM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com, Pandiyaraja Paramasivam
ஆழ்வார் பாசுரங்களில் மாண்டல் (<  மாள்தல்/மா(ய்)ழ்குதல்)
--------------------------------------

பேயாழ்வார், மூன்றாம் திருவந்தாதி:

காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள்
ஏய்ந்த பண கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த
மது கைடவரும் வயிறு உருகி மாண்டார்
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு

---------------------------------
பெரியாழ்வார், பெரிய திருமொழி:

மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பிஎங்கும்
போதில்வைத்த தேன்சொரியும் புனலரங்க மென்பதுவே.

---------------------------------
பெரியாழ்வார், பெரிய திருமொழி:

பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே.

-----------------------
திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி:

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை தன்னை
வேண்டேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே

------------
திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி:

பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டுபட்டுப்
        பொய் நூலை மெய் நூலென் றென்றும் ஓதி
மாண்டு, அவத்தம் போகாதே வம்மின் எந்தை என்
        வணங்கப் படுவானை, கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான் தன்னை
        நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை,
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
        கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.   5.2

Reply all
Reply to author
Forward
0 new messages