கொழு கொழு கன்றே

626 views
Skip to first unread message

Swaminathan Sankaran

unread,
Jun 4, 2013, 11:46:10 PM6/4/13
to santhav...@googlegroups.com
இலந்தையாரின் 'கதைப் பயிற்சி' என்ற திரியின் ஆரம்பத்தைப் படித்தவுடன் என் நினைவுக்கு வந்தது இது.
 
1950 என்று நினைக்கிறேன். மானாமதுரையில் என் தாய் மாமன் வீட்டில் போய்ச் சேர்ந்த சமயம் அது. அவர் அங்கே இருந்த உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். இருவரும் அதற்கு 8 அல்லது 9 வருடங்களுக்கு முன்னால்  நாட்டரசன்கோட்டைப் பள்ளியில் ஒன்றாக ஆசிரியர்களாக வேலை பார்த்தார்கள். மாமா மானாமதுரைக்கு வந்தார். நண்பர் ஒரு தமிழ்ப் பண்டிதர், மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்கு மாறிச் சென்று விட்டார். (சேதுபதி என்று ஞாபகம். தவறாக இருக்கலாம்.)
 
நான் 8 வயதுப் பையன். தனியாக 'உம்'மென்று மூலையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். 'இங்கே வா' என்று கூப்பிட்டார். போனேன். பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு, "உனக்கு ஒரு கதை சொல்லப் போறேன். கவனமாகக் கேள். அடுத்த தரம் நான் வரும்போது கேட்பேன், ஞாபகமாச் சொல்லணும். சரியா?" என்று கேட்டார். 'சரி' என்றேன். கதை சொல்ல ஆரம்பித்தார்.
 
ஒரே ஒரு ஊரிலே ஒரு ஈ இருந்ததாம். அதுக்குத் திடீர் என்று ஒரு நாள் தன்னோட பேர் மறந்து போச்சாம். தலையைப் பிச்சுண்டதாம். ஆனாப் பேர் ஞாபகம்வரலையாம். 'சரி,  வேறே யாரையாவது போய்க் கேட்கலாம், அவர்களுக்கு என் பேர் தெரிஞ்சிருக்கலாம்,' என்று யோசித்து ஒரு கண்ணுக் குட்டியைப் பார்த்ததும், அதன் கிட்டே போய்,
'கொழு கொழு கன்றே, என் பெயர் என்ன?' என்று கேட்டதாம்.
கண்ணுக் குட்டி'எனக்குத் தெரியாது, அங்கே என் தாய்ப் பசு நிக்கறது. அவளைப் போய்க் கேள்' என்றதாம்.
ஈ தாய்ப் பசு கிட்டே போய்,
'கொழு கொழு கன்றே,
கன்றின் தாயே,
என் பெயர் என்ன?' என்று கேட்டதாம்.
தாய்ப் பசுவுக்கும் தெரியலை. அது 'எனக்குத் தெரியாது, அதோ, அங்கே என்னை மேய்க்கும் ஆயன் நிற்கிறான். அவனைப் போய்க் கேள்' என்றதாம். உடனே, ஈ ஆயன் கிட்டே போய்,
  
'கொழு கொழு கன்றே,
கன்றின் தாயே,
கன்று மேய்க்கும் ஆயா 
என் பெயர் என்ன?' என்று கேட்டதாம்.
 
ஆயனுக்கும் தெரியலாம்.
 
ஆக இப்படிக் கதை போய்க் கொண்டே இருந்தது. ஒவ்வொருவரும் இன்னொருவரைச் சுட்டிக் காட்டி அங்கே போய்க் கேள் என்று சொல்ல, ஈ ஒவ்வொருவரையும் தான் முன்னால் கேட்டவர்களின் பெயரையெல்லாம் பட்டியலிட்டு விட்டு அந்த நபரை 'என் பெயர் என்ன' என்று கேட்கும். இப்படியாகக் கடைசி நபருக்கு தமிழ்ப் பண்டிதர் வந்தார். நானும் மிக சுவாரஸ்யமாகக் கேட்டுக் கோண்டே இருந்தேன். இதோ கடைசி  நபருக்கு வரும்போது ஆன 'கவிதை.'
 
'கொழு கொழு கன்றே,
கன்றின் தாயே,
கன்று மேய்க்கும் ஆயா
ஆயன் கைக் கோலே 
கோலொடிக் குங்கொடி மரமே 
கொடிமரத் திலிருக்கும் கொக்கே 
கொக்கு நீராடும் குளமே 
குளத்திலுறும் மீனே 
மீன் பிடிக்கும் வலையா 
வலையன் கைச் சட்டி 
சட்டி செய்யும் குயவா 
குயவன் கை மண்ணே 
மண்ணில் வளரும் புல்லே 
புல்லைத் தின்னும் குதிரையே  
என் பெயர் என்ன?' என்று கேட்டதாம்.
 
ஈ அதன் காதில் வந்து இப்படிச் சத்தம் போட்டதும் அந்தத தொந்தரவு பொறுக்காமல் குதிரை தன் காதுகளையும் வாலையும் 'பட பட' வென்று அடித்துக் கொண்டு, உரக்க 
'ஹீ ஹீ ஹீ ஹீ ..ஈ ஈ' என்று கனைத்ததாம்.
உடனே ஈக்குத் தன்பெயர் ஞாபகம் வந்து விட்டதாம். 'ஆஹா, என் பெயர் ஈ, என் பெயர் ஈ' என்று களித்துக் கூத்தாடி பறந்து போயிட்டதாம்' என்று தமிழ்ப் பண்டிதர் முடித்தார்.
 
இதன் சிறப்பு என்னவென்றால் 60 வருடங்களுக்கு மேலான பிறகும் முழுக் கவிதையும் எனக்கு ஞாபகம் இருக்கிறது! வேறு எந்தக் கவிதையும், எந்த மொழியிலும் எனக்கு அரை குறை ஞாபகம் தான். அதிகம் போனால் எந்தக் கவிதையிலும் 4 அல்லது 6 வரிகளுக்கு மேல் ஒப்பிக்க முடியாது!
 
இந்தக் கவிதை அவர் எட்டுக் கட்டியதா, அல்லது மதுரை - ராமநாதபுரம் வட்டாரத்து பாரம்பர்யக் குழந்தைக் கதை கவிதையா, அல்லது அழ. வள்ளியப்பா போன்ற குழந்தைக் கவிஞரின் கவிதையா என்று எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லவும்.
 
தமிழ்ப் பண்டிதர் பெயர் திரு. ரங்கநாதன். இந்தக் குழுவில் இப்பொது இருக்கும் 60 வயதுக்கும் மேற்பட்ட,  மதுரையில் படித்து வளர்ந்த  உறுப்பினர் யாருக்கேனும் அவரைத் தெரிந்திருக்கலாம் அப்படி எவரேனும் இருக்கிறார்களா?
 
அருமையான கதை சொல்லும் உத்தி. தமிழ்ச் சொல்களைத் தவிர வேறு  சொல்லே கிடையாது. இன்று தமிழ் நாட்டில் இம்மாதிரிப் பேசிக் கேட்க முடியாது. அரைகுறைத் தமிழும் அதை விட மோசமான ஆங்கிலமும் கலந்து தான் சிறு குழந்தையிலிருந்து  பெரியவர்கள் வரை பேசுகிறார்கள்! பல விதமான சொற்கள், தொழில்கள் (ஆயன், வலையன், குயவன்) பற்றி ஒரு சிறுவன் தெரிந்து கொள்ளலாம். சிறுவனின் ஆர்வத்தைத் தூண்டும் கவிதை. சிறுவர்களைச் சிரிக்க வைக்கும் கவிதை. என் நினைவில் இன்றும் நிற்கும் கவிதை.
 
 
சங்கரன்
 
 பி. கு.பண்டிதர் ரங்கநாதனை அதற்குப் பிறகு நான் சந்திக்கவே இல்லை!

--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Jun 4, 2013, 11:51:36 PM6/4/13
to சந்தவசந்தம்
அருமையான கதை. சின்ன வயதில் நினைவில் பதிந்தவை இளமையாகவே இருக்கின்றன.

இலந்தை


2013/6/4 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Subbaier Ramasami

unread,
Jun 4, 2013, 11:54:32 PM6/4/13
to சந்தவசந்தம்

Kaviyogi Vedham

unread,
Jun 5, 2013, 2:34:42 AM6/5/13
to santhavasantham
அடடா! அருமை சங்கரன்! இக்கதை மதுரையில் மட்டுமன்று... என் 9வது வயதில் என் லக்‌ஷ்மிப்பாட்டி(அவளது கண் பழுதடைந்தபோதும்
 இதுபோன்று நிறைய விடுகதை போன்றும்)திருநெல்வேலி(அத்தாழநல்லூரில் இருந்தபோது)சொல்லியிருக்கின்றாள்>.அதில் இக்கதையும் ஒன்று. மறந்துபோகாமல் இருக்க இதை சிறு (கிஃப்ட் ஆக வந்தது) பாரதியார் கவிநூலில் கிறுக்கிவைத்தேன்.
 அது தாள் நைந்து ஈக்கவியோடு தொலைந்துவிட்டது!,கியாபக ப்படுத்தியதற்கு நன்றி .பேரனுக்குச் சொல்றேன்.
 யோகியார்












வாழ்க அனைவரும் வளமுடனே என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar),
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115
cel. no.9282115012


2013/6/5 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

--

Siva Siva

unread,
Jun 5, 2013, 8:09:38 AM6/5/13
to santhavasantham
Nice story.
I think during some period, this may have been included in the tamil text book for grade 2 or so. (Obviously, that was before they 'improved' the education in TN).

Others echo your experience as well.



2013/6/4 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

Swaminathan Sankaran

unread,
Jun 5, 2013, 8:43:53 AM6/5/13
to santhav...@googlegroups.com
Thanks for the info. I suspected that it would be a very well known story several times retold to children.
 
Sankaran

2013/6/5 Siva Siva <naya...@gmail.com>

Narayan Swaminathan

unread,
Jun 5, 2013, 10:52:07 AM6/5/13
to santhav...@googlegroups.com
நானும் இதைக் கேட்டிருக்கிறேன். சிறுவர் பாடப்புத்தகங்களிலும் உள்ளது.


இந்தக் கதை நமக்கு நன்றாக நினைவிருப்பதின் காரணம்,
ஒரு வரியின் ஈற்றுச் சொல் அடுத்த வரியின் முதல்சொல்லாய்த்
தொடர்வதாகும். ( கா-டு: கன்று -ஆயன், ஆயன் - கைக்கோல், கைக்கோல்-கொடிமரம்,
கொடிமரம்-கொக்கு, கொக்கு-குளம், குளம்-மீன், மீன்-வலையன், வலையன் - சட்டி,
சட்டி- குயவன், குயவன் - மண், மண் - புல், புல் -குதிரை)
 
செவிவழியே வந்த நம் வேத சுலோகங்களில் இப்படிப் பல உத்திகள்
கையாளப்பட்டுள்ளன. மேலதிகத் தகவல்கள் தெய்வத்தின் குரலில் காணலாம்.
(http://periva.proboards.com/thread/3873/kural-vol-2-adhyayana-muraigal)

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்


2013/6/4 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Balasubramanian N.

unread,
Jun 6, 2013, 4:50:41 AM6/6/13
to santhav...@googlegroups.com

இவ்வகைப் புனைவுகள், பிற மொழிகளிலும் உளவா, தேடிப் பார்க்கலாமே? குறிப்பாக, 

 
முதற்சுற்றம்:தெலுங்கு/கன்னடம், மலையாளம், துளு
 
 அடுத்த சுற்றம்: வடவிந்திய மைதிலி, போஜ்புரி, ராஜஸ்தானி, மராட்டி, குஜராத்தி காஷ்மீரி,  வங்காளி, ஒரியா, அஸமி, மணிபுரி

 

அடுத்த சுற்றம்:அரபி, பாரசிகம்

 

அடுத்தது:கிரேக்கம், இலத்தீனம், யூதம், ஐரோப்பிய மொழிகள், [சிறப்பாக]ஆங்கிலம்

 

பின், அமெரிக்க-ஆங்கிலம், இனுவிட்

 

விட்டுவிட்டேனே!: சீனம்,ஜப்பானியம்[நிப்பானியம்]

 

மஓரி, ஜூலூ, காங்கோலியம்

 

[இப்போதைக்கு] முடிவாக: அரமெய்க்கு, ஸெமிடிக்கு.

 

அனைத்துலகப் பன்மொழிவழிக்கழந்தையிலக்கிய வொப்பாரய்ச்சி செய்யப்பட்டிருக்கிறதா?

அறிந்தோர் கூறுக!

 

Eg. Developed extensions of “chAt pUT thrI”:  சாட் பூட் த்ரீ

Eenie meenie minie moe … [Please condone spelling variation!}
ஒன்னர டூவர டக்கர டன், யாவல் காவல் மஸ்ட் பி டன்                                        கள்ளன் குள்ளன் டொண்ட்டீவொன்,  யா... யூ... மே... ப்ளக்... சிப்!

ப்ளக்கத் தூக்கி மேல போட்டா செட்டியார் வீட்ல நண்ண்டு!!

நண்டத் தூக்கி மேல போட்டா நாகரத்னப்பாம்பு!

பாம்பத் தூக்கி மேல போட்டா பஞ்ச வர்ணக் கி...ளி...!

கிளியத் தூக்கி மேல போட்ட கிஷ்ணரோட கொண்ண்ண்டை!



2013/6/5 Narayan Swaminathan <swaminath...@gmail.com>

ramaNi

unread,
Jun 6, 2013, 8:27:34 AM6/6/13
to santhav...@googlegroups.com
இதோ இன்னொன்று:

பந்தோ பந்து.
என்ன பந்து?
ரப்பர் பந்து.
என்ன ரப்பர்?
இந்தியா ரப்பர்.
என்ன இந்தியா?
வட இந்தியா.
என்ன வடை?
ஆமை வடை.
என்ன ஆமை?
குளத் தாமை.
என்ன குளம்?
திரிக் குளம்.
என்ன திரி?
விளக்குத் திரி.
என்ன விளக்கு?
குத்து விளக்கு.
என்ன குத்து?
கும்மாங் குத்து!

Ms. Tamil

unread,
Jun 9, 2013, 10:39:07 AM6/9/13
to santhav...@googlegroups.com
2013/6/5 Swaminathan Sankaran <swamina...@gmail.com>:
> [...]
> 'கொழு கொழு கன்றே,
> கன்றின் தாயே,
> கன்று மேய்க்கும் ஆயா
> ஆயன் கைக் கோலே
> கோலொடிக் குங்கொடி மரமே
> கொடிமரத் திலிருக்கும் கொக்கே
> கொக்கு நீராடும் குளமே
> குளத்திலுறும் மீனே
> மீன் பிடிக்கும் வலையா
> வலையன் கைச் சட்டி
> சட்டி செய்யும் குயவா
> குயவன் கை மண்ணே
> மண்ணில் வளரும் புல்லே
> புல்லைத் தின்னும் குதிரையே
> என் பெயர் என்ன?' என்று கேட்டதாம்.
>
> ஈ அதன் காதில் வந்து இப்படிச் சத்தம் போட்டதும் அந்தத தொந்தரவு பொறுக்காமல்
> குதிரை தன் காதுகளையும் வாலையும் 'பட பட' வென்று அடித்துக் கொண்டு, உரக்க
> 'ஹீ ஹீ ஹீ ஹீ ..ஈ ஈ' என்று கனைத்ததாம்.
> உடனே ஈக்குத் தன்பெயர் ஞாபகம் வந்து விட்டதாம். 'ஆஹா, என் பெயர் ஈ, என் பெயர்
> ஈ' என்று களித்துக் கூத்தாடி பறந்து போயிட்டதாம்' என்று தமிழ்ப் பண்டிதர்
> முடித்தார்.

சுவையான பாடல். நன்றி.

"வாலு போச்சு கத்தி வந்தது" என்று ஒரு பாட்டு. பிள்ளைகளுக்குச்
சொல்லித்தரத் தேடி, "சிறுவர் நாடோடிக் கதைகள்" (சேகரித்து எழுதியவர்:
வீர. வேலுசாமி; பதிப்பாசிரியர்: கி. ரா; அகரம் வெளியீடு; அட்டைப்
படங்கள்: மருது) புத்தகத்தில் கண்டேன்.

தன் வாலில் தைத்த முள்ளை எடுக்க நாவிதனிடம் செல்கிறது நரி. அவன்
கத்தியால் கீறவும் வால் அறுபட, அவனை மிரட்டி பதிலுக்குக் கத்தியைப்
பிடுங்கிக் கொண்டு நடக்கிறது. வழியில், கிணற்றடியில் மாம்பழம்
வைத்திருந்த ஒருவனைச் சந்திக்கிறது. அவனிடம் "மாம்பழத்தை அறுத்துச்
சாப்பிடு" என்று கத்தியைக் கொடுக்க, அவன் கத்தியைக் கிணற்றில் தவறவிட,
அவனை மிரட்டி மாம்பழத்தைப் பிடுங்கிக் கொள்கிறது. இப்படியே பலரைச்
சந்தித்துக் கடைசியாய் ஒரு கொட்டு கிடைக்கவும்,

வாலு போச்சு
கத்தி வந்தது
டும் டும் டும்

கத்தி போச்சு
மாம்பழம் வந்தது
டும் டும் டும்

மாம்பழம் போச்சு
பொண்ணு வந்தது
டும் டும் டும்

பொண்ணு போச்சு
எண்ணெய் வந்தது
டும் டும் டும்

எண்ணெய் போச்சு
தோசை வந்தது
டும் டும் டும்

தோசை போச்சு
கொட்டு வந்தது
டும் டும் டும்

என்று பாட, கதை இப்படி முடிகிறது: "பாடிக்கொண்டே நரி குதித்து ஆட,
கொஞ்சம் கால் தவறி விட்டது. நரி கொட்டோடு உருண்டு விழுந்து செத்தது."

கி. வா. ஜ. அவர்கள் தொகுத்த "பல்வகைப் பாடல்கள் [விளையாடல்கள்]" என்ற
புத்தகத்திலும் சில சுவையான பாடல்கள் கிடைத்தன.

நன்றி.
அர்விந்த்

Ms. Tamil

unread,
Jun 9, 2013, 10:44:08 AM6/9/13
to santhav...@googlegroups.com
2013/6/5 Narayan Swaminathan <swaminath...@gmail.com>:
> நானும் இதைக் கேட்டிருக்கிறேன். சிறுவர் பாடப்புத்தகங்களிலும் உள்ளது.
>
>
> இந்தக் கதை நமக்கு நன்றாக நினைவிருப்பதின் காரணம்,
> ஒரு வரியின் ஈற்றுச் சொல் அடுத்த வரியின் முதல்சொல்லாய்த்
> தொடர்வதாகும். ( கா-டு: கன்று -ஆயன், ஆயன் - கைக்கோல், கைக்கோல்-கொடிமரம்,
> கொடிமரம்-கொக்கு, கொக்கு-குளம், குளம்-மீன், மீன்-வலையன், வலையன் - சட்டி,
> சட்டி- குயவன், குயவன் - மண், மண் - புல், புல் -குதிரை)
>

இந்த உத்தியைப் பயன்படுத்தும் மற்றொரு சிறுவயதுப் பாடல்:

"அதோ பாரு ரோடு
ரோட்டு மேல காரு
காருக் குள்ள யாரு
எங்க மாமா நேரு
என்ன என்ன சொன்னாரு?
எழுதிப் படிக்கச் சொன்னாரு."

Swaminathan Sankaran

unread,
Jun 10, 2013, 1:13:19 PM6/10/13
to santhav...@googlegroups.com
எனக்கு இந்தப் பாடலைக் கற்றுக் கொடுத்த தமிழ்ப் பண்டிதரைப் பற்றிய இன்னும் சில விவரங்கள்.
அவர் பெயர் டி. ஏ . (D.A.) ரங்கநாதன்.
1944/45 இலிருந்து அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளி, மதுரையில் (Anerican College High School, Madurai) தமிழ்ப் பண்டிதராக வேலை பார்த்தார். 1975/76 போல ஓய்வு பெற்றிருக்கலாம்.
 
சங்கரன் 

2013/6/9 Ms. Tamil <mst...@mstamil.com>

Balasubramanian N.

unread,
Jun 10, 2013, 1:45:41 PM6/10/13
to santhav...@googlegroups.com

 

ஊர் ஊர்

என்ன வூர்

மயிலாப்பூர்

என்ன மயில்

காட்டு மயில்

என்ன காடு

ஆற்காடு

என்ன ஆறு

பாலாறு

என்ன பால்

கள்ளிப்பால்

என்ன கள்ளி

எலைக்கள்ளி

என்ன எலை

வாழையிலை

என்ன வாழை

ரஸ வாழை

என்ன ரஸம்

மொளகு ரஸம்

என்ன மொளகு

வால்மொளகு

என்ன வால்

நாய் வால்

என்ன நாய்

மர நாய்

என்ன மரம்

பலா மரம்

என்ன பலா

வேர்ப்பலா

என்ன வேர்

வெட்டிவேர்

என்ன வெட்டி

மணம் வெட்டி

என்ன மணம்

பூ மணம்

என்ன பூ

மாம்பூ

என்ன மா

அம்மா!

 

1900களிலேயே நிலவிய இதைப்போல

 

மல்லி மல்லி / குண்டு மல்லி / ஈயக்குண்டு/ வெள்ளீயம்/.. . என்று முன்னேறும் குறுநீளப்பாட்டை அழ.வள்ளியப்பா எழுதியிருக்கிறாரென நினைவு.ஒரு சிறார் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

 

இம்மாதிரிப்புனைவை ஆங்கிலத்தில் எழுதிப்போட்டிருக்கிறேன். எலந்தையாரின் துறைமுகம்.காமுக்காக.ஆன் செகண்த் தாட்ஸ், எழுதினேன், அனுப்பிப்போட்டேனோ நினைவில்லை! அடுத்த மெயிலில் தருகிறேன்.



2013/6/10 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

Ms. Tamil

unread,
Jun 10, 2013, 2:54:01 PM6/10/13
to santhav...@googlegroups.com
> "அதோ பாரு ரோடு
> ரோட்டு மேல காரு
> காருக் குள்ள யாரு
> எங்க மாமா நேரு
> என்ன என்ன சொன்னாரு?
> எழுதிப் படிக்கச் சொன்னாரு."

மேலுள்ள பாடல் யார் எழுதியது என்று தெரியவில்லை. அதேபோல் ஒன்று
முயன்றேன். (ஆனால் அதுபோல் சோபிக்கவில்லை!)

மேலே பாரு வானம்
வானத் திலே மேகம்
மேகத் துள்ளே விமானம்
போன தெங்கே காணோம்?

காணோம் காணோம் காணோம்
விமானம் எங்கே காணோம்?
காணாமற் போன விமானம்
மீண்டும் அதோ பாரும்!

நன்றி.
அர்விந்த்
http://mstamil.com

Ms. Tamil

unread,
Jun 10, 2013, 3:05:01 PM6/10/13
to santhav...@googlegroups.com
2013/6/6 ramaNi <sai...@gmail.com>:
> இதோ இன்னொன்று:
>
> பந்தோ பந்து.
> என்ன பந்து?
> ரப்பர் பந்து.
> என்ன ரப்பர்?
> இந்தியா ரப்பர்.
> என்ன இந்தியா?
> வட இந்தியா.
> என்ன வடை?
> ஆமை வடை.
> என்ன ஆமை?
> குளத் தாமை.
> என்ன குளம்?
> திரிக் குளம்.
> என்ன திரி?
> விளக்குத் திரி.
> என்ன விளக்கு?
> குத்து விளக்கு.
> என்ன குத்து?
> கும்மாங் குத்து!
>

இதே பாடல், கி.வா.ஜ. புத்தகத்தில் ("பல்வகைப் பாடல்கள்", கலா நிலையம்)

பேபே, என்னா பே?
பந்துப்பே; என்னா பந்து?
ரப்பர்ப்பந்து; என்னா ரப்பர்?
இந்தியா ரப்பர்; என்ன இந்தியா?

என்று ஆரம்பித்து,

என்ன குத்து? திம்மாக் குத்து

என்று முடிகிறது; பாடலின் தலைப்பு: "பேய்ப்பந்து விளையாட்டு"!

Pas Pasupathy

unread,
Jun 10, 2013, 7:05:37 PM6/10/13
to santhav...@googlegroups.com
 
கி.வா.ஜ -வின் “பல்வகைப் பாடல்கள்’ நூல் இங்கே:
 
 


2013/6/9 Ms. Tamil <mst...@mstamil.com>

."

கி. வா. ஜ. அவர்கள் தொகுத்த "பல்வகைப் பாடல்கள் [விளையாடல்கள்]" என்ற
புத்தகத்திலும் சில சுவையான பாடல்கள் கிடைத்தன.

நன்றி.
அர்விந்த்

Suganthivenkatesh

unread,
Jun 10, 2013, 9:34:04 PM6/10/13
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா

நல்ல ஒரு புத்தகம்.
படித்த்து மகிழ்ந்தேன்
விக்கிப்பிடியாவிலும் இதைத்   தொடர் விளையாட்டு என்று குறிப்பிட்டுள்ளார்கள்

http://ta.wikipedia.org/wiki/மொழி_விளையாட்டு

With regards
SuganthiVenkatesh
--

ramaNi

unread,
Jun 10, 2013, 10:41:20 PM6/10/13
to santhav...@googlegroups.com
கோலாட்டப் பாட்டு 

கோலேன கோலே ஏ
பாலா நீலா லா கோலே
பால பாவன லீல விலோசன
பால ப்ரபஞ்ச கோலே ஏ

சந்தன வனந்தனிலே ஏ -- நாங்கள் பெண்கள்
ஷெண்பக ஒடையிலே
அந்தத் துகிலெடுத்துக் கரம்மேல்கரம் வைத்து
விளையாடும் வேளையிலே ஏ

பசுவா பசுவையா ஆ -- உமக்கு
பணம் கொடுப்பா ருமில்லை
இன்றைக்கு வாவென்று நாளைக்கு வாவென்று
ஏய்க்கிறாரே பசுவே ஏ!

பால் செம்பு கொண்டு ஊ -- நாங்கள் பெண்கள்
பாலென்று கூவையிலே
பாலைத் தாடி என்று க்ருஷ்ணன்
பற்களை உடைத் தாண்டி ஈ!

தயிர்ச் செம்பு கொண்டு ஊ -- நாங்கள் பெண்கள்
தயிரென்று கூவையிலே
தயிரைத் தாடி என்று க்ருஷ்ணன்
தாடையில் அடித் தாண்டி ஈ!

எட்டடிக் குச்சிக் குள்ளே ஏ -- ஸ்வாமி
எத்தனை நாளிருப்பேன்?
மச்சுவீடு கட்டித் தாரும் -- ஸ்வாமி
மலையாளம் போய்வா ரேன்.

*****

Balasubramanian N.

unread,
Jun 11, 2013, 6:32:22 AM6/11/13
to santhav...@googlegroups.com

என் சுற்றத்திலும் பரம்பரையாக நிலவிவரும் கதை. "தாய் மேய்க்கிற ஆயா" என்று நான் கேட்டது.

இதே வகையில் "கதை கதையாங்காரணமான், காரணத்துல தோரணமாம்" கேட்டிருக்கலாமே?



2013/6/5 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

--

Swaminathan Sankaran

unread,
Jun 12, 2013, 11:13:09 AM6/12/13
to santhav...@googlegroups.com

ஆமாம்.  "தாய் மேய்க்கிற ஆயா" தான் சரிதான பாடம்.
"கதை கதையாங்காரணமான், காரணத்துல தோரணமாம்" கேட்டிருக்கிறேன்.

சங்கரன்.

2013/6/11 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

Ramamoorthy Ramachandran

unread,
Jun 13, 2013, 9:36:38 PM6/13/13
to santhav...@googlegroups.com
என் தாயார் எனக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்த தமிழ்த் தொடர் விடுகதை 'கொழ கொழ கன்றே!'',  என் அன்னையின் நினவு என் கண்களைக்  கசிய வைக்கிறது. அவர் நெல்லை- திருவனந்தபுரம் பகுதியில் வளர்ந்தவர் 
 குறிப்பு
 'எந்த ஊர் என்பவளே 
இருந்த ஊரைச சொல்லவா 
அந்த ஊர் நீயும் கூட 
அறிந்த ஊர் அல்லவா? என்ற கண்ணதாசனின் 
புகழ் பெற்ற பாடல் இதே வகைக் கதைப் பாடல் தான் 
 நன்றி புலவர் இராமமூர்த்தி 

2013/6/12 Swaminathan Sankaran <swamina...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages