நவராத்திரிப் பாட்டு 1&2

4 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 3:59:41 AM (8 days ago) Sep 23
to சந்தவசந்தம்
 நவராத்திரி நாள்-1

அன்னாய்! தேவி! அகிலம் காக்கும் 
    அரசி! தேவி! மலைமகளே!
பொன்னே! மணியே! பொருளே! அருளே!
    போதம் கூட்டும் மகராணி!
மின்னே! ஒளியே! வினைகள் போக்கி
    விதியை மாற்றும் வித்தகியே!
"என்னே வாழ்க்கை 
  இது"வென் பார்க்கும்
      இன்பம் அருள வருவாயே!

 நவராத்திரி நாள் -2

ஒன்பது நாள்களும் 
ஒவ்வொரு கோலத்தும் 
முன்பெழுந்தே 
ஆளும் முகத்தழகி - மன்பதையில்
கோலங்கள் மாறிக் கொடுமை 
புரிவோரை
சூலம்கைக் கொண்டே துணி!

அரசி. பழனியப்பன் 
23.09.2025

Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 4:25:49 AM (8 days ago) Sep 23
to சந்தவசந்தம்
முதல் பாட்டில் 

அரசி! ஓங்கு மலைமகளே!
 என்று கொள்க!

Ram Ramakrishnan

unread,
Sep 23, 2025, 7:21:59 AM (8 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
மிக அழகு, திரு. பழனியப்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXaKG4VcJJ6kRGCjKxO%3DxLhHmXNF_85yizT5FySznS2MvA%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 7:35:56 AM (8 days ago) Sep 23
to சந்தவசந்தம்
மிக்க நன்றி திரு ராம்கிராம் அவர்களே!

Siva Siva

unread,
Sep 23, 2025, 9:33:30 AM (8 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
இனிய பாடல்கள்.

#1.
/ தேவி /

Any reason for this coming twice?

தேவீ, அரசீ, - என்று விளியில் அமைத்திருக்கலாமே.

#2.

/ சூலம்கைக் கொண்டே துணி! /

இங்கே துணி என்றால் வெட்டு என்ற பொருளா?
சூலம் என்று சொன்னதால், வெட்டு என்னாமல் பொதுவாகத் தொலை எனலாமோ?

வி. சுப்பிரமணியன்

On Tue, Sep 23, 2025 at 3:59 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 10:34:55 AM (8 days ago) Sep 23
to சந்தவசந்தம்
அரசீ! தேவீ என்று விளியாக அமைத்திருக்கலாம்!

கபட வேட தாரிகளைச் சூலம் கொண்டு துணிக்க/துண்டாட வேண்டும் என்பதே என் கருத்து.

மிக்க நன்றி திரு சிவ சிவா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 23, 2025, 9:45:39 PM (7 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
சிறப்பான பாடல்கள்

        —தில்லைவேத்தன்.

Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 9:51:50 PM (7 days ago) Sep 23
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணா!

On Wed, 24 Sept 2025, 7:15 am NATARAJAN RAMASESHAN, <chrome...@gmail.com> wrote:
சிறப்பான பாடல்கள்

        —தில்லைவேத்தன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 23, 2025, 10:38:43 PM (7 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
அருமை. 

அபிராமி அந்தாதியை நினைவுறுத்தியது.

அனந்த்

On Tue, Sep 23, 2025 at 3:59 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
 நவராத்திரி நாள்-1

அன்னாய்! தேவி! அகிலம் காக்கும் 
    அரசி! தேவி! மலைமகளே!
பொன்னே! மணியே! பொருளே! அருளே!
    போதம் கூட்டும் மகராணி!
மின்னே! ஒளியே! வினைகள் போக்கி
    விதியை மாற்றும் வித்தகியே!
"என்னே வாழ்க்கை 
  இது"வென் பார்க்கும்
      இன்பம் அருள வருவாயே!

Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 10:50:07 PM (7 days ago) Sep 23
to சந்தவசந்தம்
பாராட்டுக்கு எளியேனின் மனமார்ந்த நன்றி ஐயா! தங்களின் அன்புக் கட்டளையின் படி எழுதிய கற்பக விநாயகர் வெண்பா அந்தாதிப் பதிகத்தைப் பார்த்துத் தங்கள் மேலான பின்னூட்டத்தை இட வேண்டுகிறேன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages