நிறைந்த மனமே வேண்டும் - மீ. விசுவநாதன்

2 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Apr 19, 2026, 3:37:13 PM (6 days ago) Apr 19
to Santhavasantham, M. Viswanathan
"நிறைந்த மனமே வேண்டும்"
           (மீ. விசுவநாதன்)

உலகெங்கும் ஆனந்த ஊற்றாக வேண்டும்
உள்ளத்தில் அன்பென்ற தேன்கொள்ள வேண்டும்
கலகலென எப்போதும் களித்திருக்க வேண்டும்
கையள்ளித் தருகின்ற வள்ளல்வாழ் வேண்டும்
கலைமிக்க ஞானத்தால் மேலோங்க வேண்டும்
கடைக்கோடி மனிதரையும் கைகோர்க்க வேண்டும்
அலைகடலின் ஆழத்தின் நல்முத்து போன்ற
அழ்ந்திருக்கும் ஆன்மாவில் அகம்நிலைக்க வேண்டும்.

ஓரறிவு ஆறறிவு உயிக்கூட்டம் எல்லாம்
ஒன்றுக்கு ஒன்றாக உதவிடவும் வேண்டும்
ஈரமுள்ள இதயத்தால் எப்போதும் வாழ்த்தும்
இரக்ககுண சீலரெனும் பேர்வாங்க வேண்டும்
வாரணம்போல் வலிமையுடல் ஞானமுமே வேண்டும்
வற்றாத புன்சிரிப்பு இன்முகமும் வேண்டும்
பூரணமாய் இருக்கின்ற ஓர்முதல்வன் எண்ணி
பூமியிலே அனைத்துயிரும் பொலிவுறவும் வேண்டும்.

(20.04.2026 இன்று அக்ஷய திருதியை நந்நாள்)

இமயவரம்பன்

unread,
Apr 19, 2026, 8:23:53 PM (6 days ago) Apr 19
to santhav...@googlegroups.com, M. Viswanathan

அருமையான வேண்டுதல்!

அழ்ந்திருக்கும் = ஆழ்ந்திருக்கும் (தட்டச்சு?)

- இமயவரம்பன்

Kaviyogi Vedham

unread,
Apr 19, 2026, 8:34:55 PM (6 days ago) Apr 19
to santhav...@googlegroups.com
bale   bale.. nalla  ullam
yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/B4F8BD20-012C-4F38-94B6-5341A3A835A0%40gmail.com.

M. Viswanathan

unread,
Apr 19, 2026, 9:48:53 PM (6 days ago) Apr 19
to Santhavasantham
அன்புக் கவியோகியாரின் கருத்துக்கும், கவிஞர் இமயவரம்பன் அவர்களின் கருத்துக்கும் மகிழ்ச்சி. நன்றி. (தட்டச்சுப்பிழையைச் சுட்டியமைக்கு நன்றி. திருத்திக் கொண்டேன்)

அன்பன்,
மீ. விசுவநாதன்
20.04.2026 07.18 am



Ram Ramakrishnan

unread,
Apr 19, 2026, 10:58:56 PM (6 days ago) Apr 19
to santhav...@googlegroups.com
ஆகா! அற்புதம், சிந்தனையும் கவிதையும், திரு. மீ. வி.

உயிக்கூட்டம்்- தட்டச்சு
கைகோர்க்க - கைகோக்க?


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 20, 2026, at 01:07, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Apr 20, 2026, 12:34:37 AM (5 days ago) Apr 20
to Santhavasantham
அன்புக் கவிஞர் ராம் கிராம் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.
தட்டச்சுப்பிழையைத் திருத்திக் கொண்டேன்.

அன்பன்,
மீ. விசுவநாதன்
20.04.2026 10.03 am

Reply all
Reply to author
Forward
0 new messages