சும்மாவா வந்த திந்தச் சுதந்திரம்- அதுதான்
சுவாசமாய் உயிரைக் காக்கும் மந்திரம்
அன்று
கட்டுண்டார் , கொசுக்க ளாலே
கடியுண்டார், கத்தி யாலே
வெட்டுண்டார், தீயின் சூட்டு
வெப்புண்டார், வசைச்சொல் லாலே
திட்டுண்டார், கசையின் வீச்சால்
சிதைப்புண்டார், தேள்க ளாலே
கொட்டுண்டார், விளையாட் டாகக்
கொலையுண்டார் தேச பக்தர் சும்மாவா?
திருமணம் செய்த அன்றே
சிறையிலே தள்ளப் பட்டும்
உரிமைகொள் சொத்து வெள்ளை
உலுத்தனால் கவரப் பட்டும்
அரும்பெரும் மானம் போக்கி
அம்மண மாக்கப் பட்டும்
கருகிய மொட்டாய் நாளைக்
கடத்தினர் தேச பக்தர்
(சும்மாவா..)
தழும்புகள் நகைகள் என்றும்
சழக்கனின் வஞ்சம் செய்த
தொழும்புகள், பூக்குழிக்குள்
சுடுகதிர்த் தொழுகை என்றும்
விழும்பொழு தெல்லாம் அன்னை
மென்மடி கிடப்பதென்றும்
பிழம்பெனச் சுடர்விட் டன்று
பேசினர் தேச பக்தர். (சும்மாவா....)
தூக்கிலே தொங்கி, எங்கோ
தொலைவிலே தீவில் வெந்து
சீக்கிலே செத்து , கல்விச்
சிறப்பினை நீக்கி , என்றும்
வாக்கிலே தாயின் வந்தே
மாதரம் முழங்கி, சொந்த
யாக்கையைத் துச்ச மாக
ஆக்கினர் தேச பக்தர் (சும்மாவா...)
யாக்கையும் துச்ச மானால்
அடிதடி என்ன செய்யும்?
வாக்கிலே தாயி ருந்தால்
வன்முறை என்ன செய்யும்?
நோக்கிலே தெளிவிருந்தால்
நோவுகள் பொருட்டே இல்லை?
வாழ்க்கையைத் தேசத் திற்கே
வார்த்தனர் தேச பக்தர் (சும்மாவா...)
பெற்றவர் சொந்த மில்லை
பிள்ளைகள் சொந்த மில்லை
உற்றவர் சொந்த மில்லை
ஊருளோர் சொந்த மில்லை
மற்றெதும் சொந்த மில்லை
வணங்கிடும் பார தத்தாய்
பற்றதே சொந்தம் என்று
பற்றினர் தேச பக்தர் (சும்மாவா...)
சுதந்திரம் பெறுவ தற்குத்
தொண்டுகள் அவரேன் செய்தார்?
இதந்தரும் வசதி வாழ்க்கை
எய்துவோம் என்றா? இல்லை
பதவிகள் வீட்டு வாசல்
படியிலே நிற்கும் என்றா?
எதையுமே தனக்கென் றெண்ணா
ஏந்தல்கள் தேச பக்தர் (சும்மாவா...)
அப்படிப் பெற்ற ஒன்றை
ஐயகோ என்ன செய்தோம்
கொப்பிலே பழுத்த ஒன்றைக்
குரங்குகள் கையில் தந்தோம்
எப்படிப் பெற்றோம் என்றே
எண்ணியே பார்த்தி டாமல்
தப்படி வைத்தே இன்று
தன்சுகம் தேடு கின்றோம் (சும்மாவா...)
நல்லது செய்வ தெல்லாம்
நமக்கெது கிடைக்கு மென்னும்
எல்லையில் நின்று பார்க்கும்
எழுச்சிதான், நாட்டு நன்மை
சொல்லிலே மட்டும் தொட்டுச்
சுகங்களைத் தேடு வோரை
வல்லவர் என்று சொல்லி
மாயையில் வீழு கின்றோம் (சும்மாவா.}
On Mar 23, 2026, at 08:34, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC-BqMpsseiPt5NmnbS9i6koCgMi7X1opAVSXs8OD6XMQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/55CBCDD7-0FC6-43CF-9993-3A42DF9E3325%40gmail.com.
சும்மா வரவில்லை சுதந்திரம் என்று
அம்மா அழகாக அளித்தபா நன்று
இம்மா நிலத்துள்ளார் இதனையே இன்று
கும்மாங் குத்திட்டு குதிப்பரே தின்று!
-கருவூர் இனியன்.
அற்புதம், கருத்தும், எண்ணவோட்டமும், கவிதையும், தலைவரே.
சும்மா வரவில்லை சுதந்திரம் என்று
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDH%3DOzG0qDNXm8_UObarmRoVonqg3aLysrF8dAiXK-K_w%40mail.gmail.com.
வாக்கிலே தாயி ருந்தால்
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BULB5W_-yF_XdosV%2BR0Vg8DrVeapT6hxE_VyMOFfkN4hw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/FF0B63E5-6C56-43F5-A574-E61229FA70D5%40gmail.com.