Fwd: அழல்வடிவன் அம்மானை

13 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Mar 30, 2026, 1:10:16 AM (3 days ago) Mar 30
to santhav...@googlegroups.com

அழல்வடிவன் அம்மானை

தழலே உருவானான் தழல்தோன்றி பங்கனவன்!
சுழலுலகு நீறவன்தீ சொரிந்தாலே அம்மானை!
சுழலுலகு நீறவன்தீ சொரிந்தாலே ஆமாகில்
கழலழுத்தி ராவணனைக் கடிந்ததுமேன் அம்மானை?
அழலானான் அன்னானென் றறியாயோ அம்மானை!

நல்வாழ்த்துகள்
கோபால்
[30/03/2026] (பிரதோஷம்)


सर्वे जना: सुखिनो भवन्तु ।

Arasi Palaniappan

unread,
Mar 30, 2026, 2:45:10 AM (3 days ago) Mar 30
to சந்தவசந்தம்
அருமை! அம்மானை வெண்டளை கொண்டு வருமன்றோ?

"விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் 
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை "
--------------




--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtu9fXBAzM1wWvefkF8z3869Yj-3NEBszNR-Tri-EcxpSQ%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
Mar 30, 2026, 2:56:15 AM (3 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
வெண்டளை கொண்டு வருவது சிறப்பு. 
நான் வெண்டளை இன்றி எழுதிய அம்மானைப் பாடல்கள் இங்கே ஏற்கப் பட்டிருக்கின்றன.
கோபால். 

Arasi Palaniappan

unread,
Mar 30, 2026, 3:40:11 AM (3 days ago) Mar 30
to சந்தவசந்தம்
தகவலுக்கு நன்றி!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Mar 30, 2026, 3:53:41 AM (3 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
ஐந்தடிக் கொச்சகக் கலிப்பா வடிவில் நிறைய அம்மானைப் பாடல்கள் காண்கின்றன. 
கோபால். 

Siva Siva

unread,
Mar 30, 2026, 9:45:00 AM (3 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
விளக்கம் இடுக.
கருத்துச் சொல்ல உதவும்.

வி. சுப்பிரமணியன்

GOPAL Vis

unread,
Mar 30, 2026, 11:47:40 AM (3 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
அவன் அக்னி ஸ்வரூபமானவன். அக்னி குண்டத்தில் பிறந்தவளைப் பங்கில் வைத்தலன். அவன் தீயைச் சொரிந்தால் சுழல்கின்ற உலகம் சாம்பலாகும். 
அவ்வாறென்றால் இராவணனைச் சுட்டெரிக்காமல் ஏன் காலால் அழுத்தித் தண்டனை கொடுத்தான்? 
அதற்கே அந்த இராவணன் அழலானான் என்பதை அறிந்திலையோ நீ? 
(இராவணன் அழுதான் என்பது கதை! அதனால்தான் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது என்பர்) 
சிவபெருமான் கடிந்து நோக்க எதுவும் அழலாகும்! அழல் = தீ.]

கோபால். 

Siva Siva

unread,
Mar 30, 2026, 12:03:32 PM (3 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
Thanks.

1)
/ தீ சொரிந்தாலே /

I think it should be - தீச் சொரிந்தாலே.

2)
/ கழலழுத்தி ராவணனைக் /

To avoid starting a word with ரா you can consider கழலழுத்தித் தசமுகனைக்.

3)
அழல் - அழுதல் & தீ - nice effort.

But, that phrase's direct meaning is - Ravana started crying & Ravana became fire.
Becoming ash is different from becoming fire.

V. Subramanian

GOPAL Vis

unread,
Mar 30, 2026, 12:27:32 PM (3 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
Thanks for the corrections. 

But, that phrase's direct meaning is - Ravana started crying & Ravana became fire.
Becoming ash is different from becoming fire.

With respect to Ravana, that he started crying is the only meaning. 
It apparently suggesting another meaning, true or false, is the characteristic of ammanai. 
Catching fire and becoming fire is the effect of coming into contact with fire. 
Ash is the end product. Becoming fire implies to become ash eventually. 
Becoming ash implies having caught fire prior to that. 
Gopal. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

OAGAI NATARAJAN

unread,
Mar 30, 2026, 2:48:22 PM (3 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
நீறில்லா நெற்றிபாழ் நல்வழியில் அவ்வைசொன்னாள்
வேறுபட ஒன்றுளதே விண்டிடுவாய் அம்மானை!
வேறுபட ஒன்றுளதை  வேண்டிட்டால் அம்மானை
மாறுபட்டு நானுரைக்க மற்றிதிலே ஏதுமுண்டோ?
நீறாக்கும் கண்ணுமுண்டே நெற்றியிலே அம்மானை!

Rajagopalan Soundararajan

unread,
Mar 30, 2026, 5:41:45 PM (3 days ago) Mar 30
to சந்தவசந்தம்
"அக்னி குண்டத்தில் பிறந்தவளைப் பங்கில் வைத்தவன்". இந்த சரித்திரம் எங்கே வருகிறது? அக்னியில் பிறந்த திரௌபதி கதை மட்டுமே அடியேனுக்குத் தெரியும்.
ஸௌந்தர்  

On Monday, 30 March 2026 at 11:47:40 UTC-4 GOPAL Vis wrote:

GOPAL Vis

unread,
Mar 30, 2026, 9:20:28 PM (3 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
चिदग्निकुण्डसम्भूता - श्री ललिता-सहस्र-नाम-स्तोत्रम्। 
கோபால்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Mar 30, 2026, 10:07:02 PM (3 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
கண்ணுதலன் அம்மானை. 
[31/03/2026]

விண்ணவரும் அஞ்சுகிற வேந்தனவன் நெற்றியமர்
கண்திறக்கக் காசினியும் கருகிடுமாம் அம்மானை!
கண்திறக்கக் காசினியும் கருகிடுமே யாமாகில்
கண்ணுதலால் யாதுபயன் கண்டனனோ அம்மானை?
அண்ணலவன் பெற்றதுதான் ஆறுதலை அம்மானை!

[நெற்றி அமர் = நெற்றியில் அமைந்த; ஆறுதலை = (1) நிம்மதியை, (2) முருகன்]
[அவன் தேவர்களுக்கும் அச்சம் தரும் தலைவன். நெற்றிக் கண்ணைத் திறந்தால் உலகமே கருகிவிடும்;
அவ்வாறாகில் அந்தக் கண்ணுடைய நெற்றியால் அவனுக்கு என்ன பயன்?
(1) அதுவே அவன் பெறும் மன நிம்மதி!
(2) அவன் பெற்றதுதான் ஆறு தலை கொண்ட முருகன்!
(முருகன் நெற்றிக் கண்ணில் உதித்தவன் என்பர் )]

நல்வாழ்த்துகள்
கோபால். 

Ram Ramakrishnan

unread,
Mar 30, 2026, 10:41:43 PM (2 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
அருமை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 31, 2026, at 00:18, OAGAI NATARAJAN <enge...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Mar 30, 2026, 10:46:03 PM (2 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
சிதக்கிகுண்ட சம்பூதா என்ற அடி எனக் குறித்ததாக அறிகின்றேன். வடமொழி அறிவு அதிகம் இல்லாவிடினும் ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வதால் அறிந்து கொள்ள முடிகிறது.

மிக்க நன்றி, திரு. கோபால். எனக்கும் இருந்த சந்தேகம் நிவர்த்தியானது.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 31, 2026, at 06:50, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:



GOPAL Vis

unread,
Mar 30, 2026, 11:51:36 PM (2 days ago) Mar 30
to santhav...@googlegroups.com
சிதக்னி. 
கோபால். 

GOPAL Vis

unread,
Mar 31, 2026, 12:05:29 AM (2 days ago) Mar 31
to santhav...@googlegroups.com
அருமை, திரு ஓகை நடராஜன். 
ஐந்தாம் அடிக்கு இரு வேறு பொருள்கள் உண்டா? 
இருப்பின் அவை யாவை?
கோபால். 

GOPAL Vis

unread,
Mar 31, 2026, 5:50:44 AM (2 days ago) Mar 31
to santhav...@googlegroups.com
உடுக்கை உண்டு!

கண்டுதுதிப் போர்க்கெல்லாம் கனகமருள் வள்ளலவன்
அண்டமெலாம் சிவன்சொத்தே ஆகுமன்றே அம்மானை!
அண்டமெலாம் சிவன்சொத்தே ஆமாகில் பைரவனாய்த்
துண்டுடையும் இல்லாமல் தோன்றுவதேன் அம்மானை!
உண்(டு)அவனுக்(கு) எப்போதும் ஓர்உடுக்கை அம்மானை!

நல்வாழ்த்துகள் 
கோபால். [31/03/2026]

Rajagopalan Soundararajan

unread,
Mar 31, 2026, 6:58:32 AM (2 days ago) Mar 31
to சந்தவசந்தம்
இங்கு 'நெருப்பு' என்பது ஞானத்தைக் குறிக்கிறது. ஒரு மனிதனின் அஞ்ஞானம் (இருள்) விலக வேண்டுமானால், அங்கு ஞானத்தீ எரிய வேண்டும். அஞ்ஞான வடிவினனான பண்டாஸுரனை அழிக்க ஞான வடிவான அன்னை லலிதாம்பிகை தோன்றினாள். அவள்  வெளிப்படையான உருவங்களைக் கடந்தவள்; அவள் நம்முள்ளே இருக்கும் அறிவொளியின் வடிவானவள் என்பதே இத்தொடரின் ஸாரமாகும்.

Rajagopalan Soundararajan

unread,
Mar 31, 2026, 6:59:28 AM (2 days ago) Mar 31
to சந்தவசந்தம்
உடுக்கை சிலேடை அருமை.

GOPAL Vis

unread,
Mar 31, 2026, 7:36:34 AM (2 days ago) Mar 31
to santhav...@googlegroups.com
பாடலிலும் அவ்வது எவ்வெத் தீயோ அதுவே குறிப்பிடப் படுகிறது. ஆனால் அக்னி என்ற பொதுச் சொல்
கவி நயத்துக்கு ஒத்துழைக்கிறது. கவிதைக்குப் பொய்யழகு. 
கோபால்

GOPAL Vis

unread,
Mar 31, 2026, 7:38:05 AM (2 days ago) Mar 31
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 
கோபால். 
Reply all
Reply to author
Forward
0 new messages