இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
ஆவினிலே ஐந்தேற்பான் ஆனைத்தோல் போர்த்திடுவான்
மூவிதழ் மாலை முடியணிவான் - நாவாலே
ஐந்தெழுத் தோதுகின்ற அன்பர் தமக்கருள்வான்
எந்தைசிவன் செய்கை இவை.
(ஆவினிலே ஐந்து - > பசு கொடுக்கின்ற பால், தயிர், நெய், கோசலம், கோமலம் ஆகிய ஐந்தின் கலவை, பஞ்சகவ்வியம்; மூவிதழ் மாலை - மூன்று இதழ்கள் கொண்ட வில்வ மாலை.)
இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> அருளாயோ?பாட்டினால் உன்னைப் பரவிய பழவடியார்
காட்டிய வழியில் கடையனும் நடந்துபர
வீட்டினை அடைய விண்ணவர் புடைசூழ
நாட்டியம் புரியும் நாதநீ அருளாயோ?
… அனந்த் 15-3- 2026
ஆனந்தத்தாண்டவர் அந்தாதி
திருச்சிற்றம்பலம்
காப்பு
சந்தனக் காப்பணிந்தோய்! சார்ந்தேன் நினதடியை
உந்தை நடிப்பில் உணர்விழந்தோர் உந்தலினால்
வந்திங்(கு) அடியேன் வடிக்க முயலுமிந்த
அந்தாதிக் குன்றனருள் தா.
செய்யுள்
1. வெள்ளித் திரைக்கிடையில் தங்கநிறச் செங்கதிரோன்
மெள்ளவே மூழ்குமந்த வேளையிலே - வெள்ளமுடன்
வெண்டிங்கள் தாங்கிடும் வேணியனின் ஆடலகக்
கண்கொண்டே உண்டிடுவேன் யான்
2. யானென் றறியாமை யால்நினைக்கும் நோய்தீர்ந்து
ஞான நிலையென்று நானடைவேன்? - மோனமாய்
நின்றிருந்தே காலத்தை நீட்டிவிட்டீ ராதலினால்
இன்றே இறுப்பீர் விடை
3. விடையிருப்பீர் நல்லதொரு வேடம்போட் டெங்குங்
கடைவிரிப்பீர் கால்தூக்கி யாடித் - தடையின்றி
ஈவேன்யான் என்றெனக்குக் கைச்சமிஞ்ஞை காட்டிடுவீர்
போவேனோ வேறோ ரிடம்
4. இடப்பாகம் நீர்ஏற்ற ஈசுவரி தேவி
அடக்காமல் விட்டதனால் ஆடி - இடக்காக
ஏதேதோ கூறியெனை ஏமாற்றப் பார்க்கின்றீர்
யாதேயான் செய்யவிய லும்?
5. உம்மென் றிருந்திடினும் ஊழிமுடி வெய்திடினும்
சும்மா விடேனுமைச் சுந்தரரே - அம்மா
பரதேவி பால்சென் றழுவே னதற்குள்
வரமளிப்பீர் வேண்டாமிவ் வம்பு
6. அம்பளித்தீர் அன்றவ் வருச்சுனனுக் காதரவாய்க்
கம்பேந்தும் வேடனாய்க் கானகத்தில் - எம்பவநோய்
தீர்த்திடென் றாலேன் திகைக்கின்றீர் உம்முடைய
கீர்த்தியறி வான்அம் புலி
7. புலித்தோ லணிந்த பசுபதியே! போற்றிப்
புலிப்பாதர் பேணுங்கால் தூக்கித் - தளுக்காய்ச்
சலிக்காம லாடும் சதானந்தக் கூத்தில்
வலிக்காதோ உன்றனிடக் கால்?
8. கால்மாற்றி யாடக் கனகசபை விட்டெங்கள்
சேல்விழியாள் தென்மதுரை சேர்ந்திட்டீர் - பால்வண்ண!
ஆதிரையில் உன்நடனம் ஆங்குநான் கண்டன்றோ
வாதின்று செய்யவந் தேன்
9. தேனார் மலர்ப்பாதம் தூக்கி யிஇடவலமாய்த்
தான்தோன்றி யாகநீர் மாற்றுவதைத் - தானறிந்து
கண்டிலேன் தாளென்று கைவிரித்தான் ஏழுலகும்
உண்டவன்முன் நாளதனில் ஓர்ந்து
10. ஓரோர் கணமும்ஐய! உன்நினைவே யென்னகத்தில்
நீரோட்ட மாக நிலைத்ததனால் - பார்கடந்து
நாதாந்தத் துள்நடிக்கும் நாத!உனை யான்கண்டேன்
வேதாந்த ஞானவெளி யில்
முடிப்பு
அம்போ ருகபாதன் ஆனந்தத் தாண்டவத்தை
என்போற் சிறுவனு மின்பமுடன் - தன்போக்கில்
கூறி மகிழத் துணிந்தேன் குறைபொறுப்பீர்
மாறிடா மாண்புடனே நீர்
குறிப்புகள்:
பாடல் 1. காப்புப் பாடல்: மதுரை மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோவிலில் உள்ள முக்குறுணிப் பிள்ளையாரின் சந்தனக் காப்பணிந்த கோலத்தை நினைவு கொண்டு, "ஐயனே! உன் தந்தையின் நடனத்தில் மெய்ம்மறந்து எழுந்த உள்ளத் தூண்டுதலால் அவனது தாண்டவத்தை அந்தாதிப் பாடலாக எழுத நினைக்கும் இந்த அடியவனுக்கு அருள்புரிவாய்!" என வேண்டுவது.
பாடல் 2. மதுரையில் உள்ள வெள்ளியம்பல நடராசனின் ஆனந்தக் காட்சியையும், தில்லையிலுள்ள பொன்னம்பலத்தாடுவானின் அழகிய காட்சியையும், வெள்ளிநிற அலைக்கடலில் தங்கநிறக் கதிரோன் அத்தமனமாகும் பிரதோஷ வேளையின் மாட்சி ஒருங்கே மனத்தகத்தில் நினைவுறுத்தும் என்பது.
பாடல் 6. முன்பு வேடன் (கிராத) வடிவில் வந்து அர்ச்சுனனுனுக்குப் பாசுபதமென்னும் அம்பை அளித்துள்ளீர், சாபத்தினால் தேய்ந்து மறைந்துகொண்டிருந்த சந்திரனை உம் தலையில் தரித்துக் காப்பாற்றினீர்; இன்று என்னுடைய பிறவிப் பிணியை அகற்றல் உமக்கு எளிய செயலேயன்றோ என்று இறைஞ்சுதல்.
பாடல் 8: ஐயன் தில்லையில் தூக்கியாடும் இடது கால் வலியாதோ என்ற கவலையால், இமுன்னம் மதுரையில் பாண்டிய மன்னன் ஒருவன் காலை மாற்றியாடும்படி கேட்ட வேண்டுகோளுக்கிணங்கித் தன் வலதுகாலைத் தூக்கியாடிக் காட்சி தந்து 'அதிரவீசியாடி' என்னும் பேர்கொண்ட இறைவனின் சொல்லொணாத் திருக்கோலத்தைத் திருவாதிரை நன்னாளில் மதுரையம்பதியில் கண்டு களித்ததை நினைவு கூர்தல்.
இன்று சோமவாரப் பிரதோஷ நன்னாள்.
ஆனந்தத்தாண்டவர் அந்தாதி
திருச்சிற்றம்பலம்
காப்பு
...அனந்த் 29-3-2026---------------------
இன்று சோமவாரப் பிரதோஷ நன்னாள்.
செய்யுள்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/a34d7b64-7939-4059-b7ef-e1140e7649ban%40googlegroups.com.
--
இன்று தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புடன் சேர்ந்த பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> நிம்மதி நிலவிட அருள் <>
<> நிம்மதி நிலவிட அருள் <>
உலகெங்கும் போர்புரிய உறுதிகொண்ட அரசினரின்
.. உறுமலும் அதுவிளைக்கும் உற்பாத மும்காணும்
நிலைமையுள்ள இந்நாளில் நீதியினை நிலைநாட்டி
.. நிம்மதியை நிலவிடச்செய் நேசமிகு ’பராபவ’த்தில்*
கலகமெலாம் தீர்ந்தொழிந்து காசினியோர் களிப்பெய்தக்
.. கனகசபை நடுவிலெழில் நாட்டியமொன் றா(டு)ஈசா
அலைகளெல்லாம் ஓய்ந்துன்றன் அடர்சடையுள் அடங்கிடு(ம்)அவ்
.. வான்நதிபோல் உன்னுள்ளே அடங்கிடநீ அருள்வாயே.
.. அனந்த் 14-4-2024
(பராபவத்தில் - -> இது பராபவம் என்னும் பெயர் கொண்ட தமிழ்ப் புத்தாண்டைக் குறிப்பது; வான்நதி -> ஆகாச கங்கை)
இன்று சோமவாரப் பிரதோஷ நன்னாள்.
ஆனந்தத்தாண்டவர் அந்தாதி
திருச்சிற்றம்பலம்
காப்பு
அரிய பிரார்த்தனை.
I tried a small change.
அலைகளெல்லாம் ஓய்ந்துன்றன் அடர்சடையுள் அடங்கிடு(ம்)அவ்
.. வான்நதிபோல் உன்னுள்ளே அடங்கிடநீ அருள்வாயே.
அலைகளெல்லாம் ஓய்ந்துன்றன் அடியடியில் முயலகன்போல்
.. அத்தனையும் அசைவிழந்தே அடங்கிடநீ அருள்வாயே.
கோபால்
இன்று தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புடன் சேர்ந்த பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> நிம்மதி நிலவிட அருள் <>
உலகெங்கும் போர்புரிய உறுதிகொண்ட அரசினரின்
.. உறுமலும் அதுவிளைக்கும் உற்பாத மும்காணும்
நிலைமையுள்ள இந்நாளில் நீதியினை நிலைநாட்டி
.. நிம்மதியை நிலவிடச்செய் நேசமிகு ’பராபவ’த்தில்*
கலகமெலாம் தீர்ந்தொழிந்து காசினியோர் களிப்பெய்தக்
.. கனகசபை நடுவிலெழில் நாட்டியமொன் றா(டு)ஈசா
அலைகளெல்லாம் ஓய்ந்துன்றன் அடர்சடையுள் அடங்கிடு(ம்)அவ்
.. வான்நதிபோல் உன்னுள்ளே அடங்கிடநீ அருள்வாயே.
.. அனந்த் 14-4-2024
(பராபவத்தில் - -> இது பராபவம் என்னும் பெயர் கொண்ட தமிழ்ப் புத்தாண்டைக் குறிப்பது; வான்நதி -> ஆகாச கங்கை)
=======================================
இன்று தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புடன் சேர்ந்த பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> நிம்மதி நிலவிட அருள் <>
உலகெங்கும் போர்புரிய உறுதிகொண்ட அரசினரின்
.. அனந்த் 14-4-2026
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> உய்ய அருள் <>
இன்பப் பெருக்காய்நீ என்றுமென்றன் உள்ளிருக்கத்
.. துன்பக் கனலில்நான் துடிப்பதுமேன் பரமேசா
அன்பின் திருவுருவாய் அத்தனென நீயிருக்க
.. வம்புச் சுழலில்நான் வீழ்வதுமேன் பரமேசா
தன்பால் வருவோர்க்குத் தாயின்மே லோனென்று
.. சாற்றும் அடியார்தம் சொற்கேட்டேன் பரமேசா
என்போல் இழிந்தோனை இதுவரைநீ கண்டிலையென்(று)
.. உரையா(து) அருள்புரியின் உய்வேன்யான் பரமேசா
…. அனந்த் 29-4-2026
(வாய்பாடு தேமா காய் காய் காய் தேமா காய் காய் காய்:
தாயுமான சுவாமிகளின் ’பராபரக் கண்ணி’யின் அமைப்பை ஒட்டியது )
----------------------
உலகெங்கும் போர்புரிய உறுதிகொண்ட அரசினரின்
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> உய்ய அருள் <>
திருச்சிற்றம்பலம்
<> உய்ய அருள் <>
இன்பப் பெருக்காய்நீ என்றுமென்றன் உள்ளிருக்கத்
.. துன்பக் கனலில்நான் துடிப்பதுமேன் பரமேசா
அன்பின் திருவுருவாய் அத்தனென நீயிருக்க
.. வம்புச் சுழலில்நான் வீழ்வதுமேன் பரமேசா
தன்பால் வருவோர்க்குத் தாயின்மே லோனென்று
.. சாற்றும் அடியார்தம் சொற்கேட்டேன் பரமேசா
என்போல் இழிந்தோனை இதுவரைநீ கண்டிலையென்(று)
.. எண்ணா(து) அருளியெனை ஏற்றிடுவாய் பரமேசா
…. அனந்த் 29-4-2026
(வாய்பாடு தேமா காய் காய் காய் தேமா காய் காய் காய்: தாயுமான சுவாமிகளின் ’பராபரக் கண்ணி’யின் அமைப்பை ஒட்டியது )
On May 1, 2026, at 01:21, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM_6tf-apPruFnLZqqM_CZvo0bS3JQU_U2Kwbg8OmurRA%40mail.gmail.com.
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> மனத்திற்கொரு மடல் <>
செல்லும் வழிமுடிந் தாச்சு - வேறு
... திசையில் திரும்பிடும் நேரம்வந் தாச்சு
தொல்லை தருமுடல் நோயில் - படும்
..துன்பத்தில் நீவாடும் இத்தறு வாயில்
இல்லை துணையுனக் கென்று - நீ
..ஏங்கிடக் காரணம் சொல்கின்றேன் இன்று.
அல்லும் பகலும் அலைந்தாய் – உன்றன்
.. ஆசைக்கு வானமே கூரையாய் வேய்ந்தாய்
சொல்லில்பொய் யாவு முரைத்தாய் – அற்பச்
… சுகத்தைப் பெறப்பல தீமையி ழைத்தாய் (செல்லும்)
தன்னலம் கொண்டு திரிந்தாய் – தலை
.. தாழ்தல் பிழையென்று சாற்றி நடந்தாய்
உன்னை எதிர்த்தவர் தம்மைத் – தூற்றி
..ஒடுக்க உபயோகித் தாய்கொடும் வன்மை.
திரையோ(டு) உரை,நடை மாற்றம் – உன்றன்
.. தெம்பில்லா உள்ளத்தில் காணும்ஏ மாற்றம்
புரையொடு நாளும்போ ராட்டம் - கண்கள்
.. பூத்துத் தெரியு(து) ஒருபனி மூட்டம் (செல்லும்)
பொருளை நினைத்தேனோ தேட்டம் - நீ
.. போவதில் தான்இங்(கு) இருப்பவர் நாட்டம்
இருக்குமிந் நாளில்ஏன் காட்டம் – பிறர்
.. ஏச்செலாம் கேளா(து) எடுப்பாய்நீ ஓட்டம் (செல்லும்)
செருக்கோடு வாழ்ந்திட்ட காலம் – தன்னில்
… தெம்போடு செய்த பலப்பல ஜாலம்
இருக்கும் அவஸ்தைக்கு மூலம் – அதை
.. இன்னும் உணரா(து) எழுப்புவாய் ஓலம் (செல்லும்)
உள்ள மிகச்சில நாளில் -உனக்(கு)
.. உதவக் கரம்நீட்டு வோனை மனத்தில்
உள்ளின் கிடைக்கும்மெய்ஞ் ஞானம் – அதில்
..ஊறிப் பருகுவாய் பேரின்பப் பானம் (செல்லும்)
அம்பலத் தாடிடும் ஈசன் – உனக்(கு)
.. அருளிடக் காத்துநிற் பானந்த நேசன்
நம்பி அவன்தாளைப் பற்று – அந்த
.. நாளேநீ ஆவாய் துயரேதும் அற்று. (செல்லும்)
.. அனந்த் 13-5-2026
Wednesday, May 13, 2026
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> மனத்திற்கொரு மடல் <>
செல்லும் வழிமுடிந் தாச்சு - வேறு
... திசையில் திரும்பிடும் நேரம்வந் தாச்சு
...
செருக்கோடு வாழ்ந்திட்ட காலம் – தன்னில்
… தெம்போடு செய்த பலப்பல ஜாலம்
இருக்கும் அவஸ்தைக்கு மூலம் – அதை
.. இன்னும் உணரா(து) எழுப்புவாய் ஓலம் (செல்லும்)
.....
On May 17, 2026, at 05:15, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNYZPsTgJMrUjDrfRqjJ__zawMH%2BUFwhamVwQ-P2U0QHg%40mail.gmail.com.
திருச்சிற்றம்பலம்
அகந்தையை அழிப்பாய் நீஎன்(று) அகிலம்வாழ் மாந்தர் காண
… அத்தியைப் புலியை மாய்த்தாங்(கு) அவற்றுரி போர்த்தி நின்றாய்
சகந்தனில் கால ஓட்டந் தனைஅவர்க்(கு) உணர்த்து(ம்) வண்ணஞ்
… சலித்திடு(ம்) நதியை உன்றன் சடையினில் வைத்தாய்; நாடி
உகந்தனை துறவிக் கோலம் உலகில்காண் பொருளில் பற்றை
… உதறுதல் வேண்டு(ம்) முக்தி உற்றிட என்று காட்ட;
பகர்ந்திடப் போமோ இங்ஙன் பற்பல வகையாய் எம்மைப்
.. பரிவுடன் வழிந டத்தும் பரம!நின் அருளின் மேன்மை.
..அனந்த் 28-5-2026Wednesday, May 13, 2026
செல்லும் வழிமுடிந் தாச்சு - வேறு
... திசையில் திரும்பிடும் நேரம்வந் தாச்சு
தொல்லை தருமுடல் நோயில் - படும்
..துன்பத்தில் நீவாடும் இத்தறு வாயில்
இல்லை துணையுனக் கென்று - நீ
..ஏங்கிடக் காரணம் சொல்கின்றேன் இன்று.
.........
இன்று பிரதோஷ நன்னாள்,
<> வழிநடத்தும் பரமன் <>
அகந்தையை அழிப்பாய் நீஎன்(று) அகிலம்வாழ் மாந்தர் காண
On May 28, 2026, at 08:39, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPCsD3MycoFpx1036kuuzKb44qecjGgyq3x__YCyJPQPA%40mail.gmail.com.
<> வழிநடத்தும் பரமன் <>
அகந்தையை அழிப்பாய் நீஎன்(று) அகிலம்வாழ் மாந்தர் காண
… அத்தியைப் புலியை மாய்த்தாங்(கு) அவற்றுரி போர்த்தி நின்றாய்
சகந்தனில் கால ஓட்டந் தனைஅவர்க்(கு) உணர்த்து(ம்) வண்ணஞ்
… தளும்பிடு(ம்) நதியை உன்றன் சடையினில் வைத்தாய்; நாடி
உகந்தனை துறவிக் கோலம் உலகில்காண் பொருளில் பற்றை
… உதறுதல் வேண்டு(ம்) முக்தி உற்றிட என்று காட்ட;
பகர்ந்திடப் போமோ இங்ஙன் பற்பல வகையாய் எம்மைப்
.. பரிவுடன் வழிந டத்தும் பரம!நின் அருளின் மேன்மை.
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்

<> இது தருணம் <>
சந்தக்குழிப்பு:
தனதனன தனதனன தனதனன தனதனன தான தானான
தனதனன தனதனன தனதனன தனதனன தான தானான
கனகமென ஒளியுமிழும் கலுழன்மிசை உலவிவரு மாயன் சேயோடு
... ககனவெளி தனில்வதியு மமரர்தலை வனுமுனது வாயில் சேராநின்(று)
அனவரதம் அரனெனுமு(ன்) அடிநிழலில் இசைபரவு வேளை நாயேனிங்(கு)
... அழுவிழியுந் தொழுகரமும் அகமுழுதும் உனநினைவும் மேவ நீயேவந்(து)
எனையுமுன தடியனென* கருதிடுவை எனும்நினைவில் வாழ்வன் ஆவானென்(று)
... இறையுனது மனமதனில் கருதியொரு கணமுனது சேவை ஈவாயின்
தனதுகழல் நினையடியர் தமதுதுயர் களைதலைவன் நீயென் றீரேழு
... சகமுணருந் தருணமிது சடிதிஎன முனமணுகு வாயெம் தேவேச!
(கலுழன்= கருடன்; வாயில்=வாசலில், ககனம்=ஆகாயம்; வதியும்=வசிக்கும்; இசை=புகழ்; பரவு= துதிக்கின்ற; சேராநின்று=சேர்ந்து; அனவரதம்=எப்போதும்; உன= உனது; மேவ = மேலிட; தடியனென* கருதிடுவை—சந்தத்தையொட்டி வல்லொற்று மிகாமல் நின்றது; சேவை=தரிசனம்; ஈவாயின் – தந்தால்; நினையடியர்= நினைத்திடும் அடியர்; சடிதி= விரைவில்.)
...... அனந்த் 11/12-6-2026
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> இது தருணம் <>
Sent from my iPhone
Begin forwarded message:From: "Dr.Parameswaran VS" <vsp...@gmail.com>
Date: June 12, 2026 at 1:58:24 AM EDT
To: VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
Subject: Re: பிரதோஷப் பாடல்@@@@@@@A bit கரடு முரடு due to which couldn't appreciate the verse much.Poetically very good.Ohm Namashivaya.Kannan@@@@@@@@
On Fri, 12 Jun 2026, 08:56 VETTAI ANANTHANARAYANAN, <gan...@gmail.com> wrote:
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> இது தருணம் <>
சந்தக்குழிப்பு:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/01AE7B13-5BC3-4FF0-AC9D-35D2D4493078%40gmail.com.
On Jun 12, 2026, at 13:09, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia3FZMnf46vszQ1c%3DmXYxSAVB6nsJLpcAY4SDKh8f8US9Q%40mail.gmail.com.