![]() | |
ஆடுகின்றான் எவ்வுள் அழகன் - திருவள்ளூர் ஶ்ரீ வீரராகவர் வீதி உலாத் துதி
(பல்லவி)
ஆடுகின்றான் எவ்வுள் அழகன் - நெஞ்சை
… ஆளுகின்றான் எங்கள் அரசன்...
நாடிநின்றார்க் கருளும் வரதன் - உயர்
… நாகணைமேல் துயிலும் தலைவன்...
(சரணம் 1)
பல்லாண் டிசையெங்கும் பண்ணாய் முழங்கிடப்
பொல்லா வினைகளும் பொய்யாய் மறைந்திட
எல்லாக் குறைகளும் இல்லா தொழிந்திட
நில்லா உலகினில் நீதி விளங்கிட