கருங்குயிலே, கவிதை சொல்லாய்!

875 views
Skip to first unread message

kirikasan

unread,
Aug 30, 2011, 4:41:14 AM8/30/11
to சந்தவசந்தம்
புதிய தொடக்கம்! குயிலின் குரல் இனிமை என்பார்கள்! இப்படி பெயரை
வைத்தாவது இனிமையைக் கொண்டு வரமுடியாதோ என்ற நப்பாசை!

இதுவும் சிறிதுகாலம் முன்னர் எழுதியது. சில திருத்தங்களோடு இப்போது...!

அன்புச்சோதனை


தேடுமா பூவெனைத் தென்றல் அறிந்திடத்
தேன்மலர் விட்டெதிர் திக்கில் நடந்தது
ஓடுமா மலைமீ துலவித் திரும்பிட
உள்ளம் நொந்து மலர் உதிர்ந்தே கிடந்தது
வாடுமா என்றதன் வண்ணம் அறியவே
வாசமலர் விட்டு வானில் நடந்தனே
கூடு மிருள்மாலை கொள்ளுமிவ் வேளையில்
கொஞ்சுமுன் மேனிகு லைந்ததே என்றது

ஆடுமா மயிலென ஆழமும் காணவே
அன்பிருந்தும் முகில் அந்தஇடம்விட்டு
காடுமா மரங்கொண்ட காற்றோடு திக்கிலே
காணாப் பறந்துபின் மாலை திரும்பிட
தேடும் மழைமேகம் தென்படா தென்றதும்
தீய்கும் வெயில்சுட்டு தோகை கிடந்தது
போடும் துளிநீரைப் பூவெனத் தூவியே
பொன்மயில் கண்டு புலம்பி அழுதது

கதிரோன் ஒளிகாணக் காரிருள் வேளையில்
கமல மலர்நீரில் காத்துக் கிடந்தது
புதிதோர் உதயப்பொற் சூரியனைக் கண்டு
புன்னகை கொண்டது பூத்துக் களித்தது
இதுவோர் அதிசய மென்று இரவுப்பெண்
எண்ணங் கொண்டேயிவர் தம்மைப் பிரித்திட
புதிதோ பங்கயத் தாள்பூரிப்பு இன்றியே
பொன்மு கம்வாடிப் புரண்டே கிடந்தனள்

எட்டாத தூரத்தில் ஏற்படும் காதலை
இத்தரைப் பூக்களும் எண்ணத்திற் கொள்வது
விட்டாலென் னென்றுவி யந்தேன் இருப்பினும்
விந்தைகண் டேபின்னோ என்மனம் நாணினேன்
தொட்டாலும் பட்டாலும் தோன்றும் சுகமொன்று,
தோள்கள்நெருங் காததூய் மையுமின் னொன்று
கட்டி இழுத்திடும் கண்காணா தோர் இழை
காலைகதிரையும் பூவை இணைத்ததோ?

kirikasan

unread,
Aug 30, 2011, 5:01:39 AM8/30/11
to சந்தவசந்தம்
/பொன்மயில் கண்டு புலம்பி அழுதது/
என்பதை
/பொன்மயி லின்நிலை கண்டுள்ளம் நொந்தது/
இப்படி மாற்றுகிறேன்

தேடும் மழைமேகம் தென்படா தென்றதும்
தீய்கும் வெயில்சுட்டு தோகை கிடந்தது
போடும் துளிநீரைப் பூவெனத் தூவியே

பொன்மயி லின்நிலை கண்டுள்ளம் நொந்தது

ஆன்புடன்
கிரிகாசன்

kirikasan

unread,
Sep 3, 2011, 8:10:16 PM9/3/11
to சந்தவசந்தம்
யார்செய்த குற்றம்?
திங்கள் வரும் வானமதில் செய்துவிட்ட குற்றமென்ன
தேடிமுகில் மூடுகின்றதே!
மங்குஒளி தீபமது மனமெடுத்த குற்றமென்ன
மாலையிளந் தென்றல் ஊதுதே
பொங்குநதி செய்ததொரு குற்றமென்ன போகுமிடம்
பாதையெங்கும் கல்லும்முள்ளுமே
அங்கும்வளைந் தேநெளிந்து அதுநடக்க உயர்ந்தபாறை
அதைவிழுத்தி மகிழுகின்றதே!

செங்கமலம் வாழ்வினிலே செய்தவொருகுற்றமென்ன
சீண்டும் அலை ஆடுஎன்குதே
அங்கு படர் தாமரையின் அலைமிதக்கும் இலைவெறுத்து
ஏறியநீர் விட்டு ஓடுதே
தங்கம் எழில்தந்தபோதும் தன்னகத்தே கொண்டதென்ன
தீயழிக்க தேகம் வெந்ததே
எங்கணும்நற் சோலைதன்னில் உள்ளபூக்கள் செய்ததென்ன
ஓர்தினத்தில் காய்ந்து வீழுதே

பெண்மையெனும் மென்மைசெய்த குற்றமென்ன பூமியிலே
மேனியது போதையாகவே
கண்ணியமே அற்றவர்கள் கண்டுஅதன் தூய்மைகொல்லக்
காப்பதற்கு யாருமில்லையே
சின்னவர்கள் வாழும்தமிழ் ஈழமண்ணில் செய்ததென்ன
யாருமற்ற நாதியாகவே
மென்னுடலை ஆயிரமாய் மேதினியில் யாரும்விழி
கொள்ளமுதல் பூமிதின்குதே?

அள்ளி உடல் கொள்ளிவைத்து ஆவெனவே அலறியவர்
ஆனந்தமாய் துள்ளி ஆடுறார்
நள்ளிரவுப் பேயென்றாகி நங்கையர்கள் பெண்ணவர்முன்
நாயிலும்கீழ் இழிவு செய்கிறார்
எள்ளி நகையாடி இவர் என்னசெய்தும் பூமிகண்டு
என்னசெய்தார் தூங்குகிறார் ஏன்?
வள்ளிமணவாளனே சொல்! வாழ்வில்தமிழ் ஈழமக்கள்
செய்தபெருங் குற்றமென்ன சொல்!

kirikasan

unread,
Sep 4, 2011, 2:51:55 AM9/4/11
to சந்தவசந்தம்
கவியின்பம்


கவிஎன்ப தினிதாம் கவியெங்க ளுயிராம்
கவி எமது வாழ்வுக்குப் பொருளாம்
கவிஎங்க ளுணவாம் கவியெங்கள் கனவாம்
கவியோ நம்உணர்வுகாண் விழியாம்
கவிஎங்கள் சிறகாம் கவிஎங்க ளிறையாம்
கவிஎங்கள் குறைவற்ற நிதியாம்
கவிஎங்கள் மதுவாம் கவியின்ப மழையாம்
கவிஎங்கள் தமிழன்னை எழிலாம்!

கவிஎங்கள் கலையாம் கவிஎங்கள் துதியாம்
கவியின்பம் பொலிகின்ற நதியாம்
கவிஎங்கள் தேராம் கலையென்னும் உலகின்
கவினின்ப சுவையூறும் அமுதாம்
கவிமென்மை மலராம் கவிவீசுங் காற்றாம்
கவிஎங்கள் உயிர்கொண்ட மூச்சாம்
கவி எங்கள் துகிலாம் கவிசொல்லும்வகையில்
கவிந்திடும் சுகம்கூறின் பெரிதாம்

அவிழ்கின்ற மலரும் அதுதரும் மணமும்
அகிலத்தில் இருள் மாலைவேளை
கவிந்திடும் இன்பம் காண்பது போல்நற்
கவி தரும்சுகம் மிகப் பெரிதாம்
செவிகாணும் இன்பம் தேனெனச் சொல்லின்
குவிவான வில்லதன் வண்ணம்
தவிக்கின்ற சுனையின் தாமரை இதயம்
தாங்கியே பலஇன்பம் காணும்

kirikasan

unread,
Sep 4, 2011, 2:58:40 AM9/4/11
to சந்தவசந்தம்

தமிழே இனிதாம் !

தமிழே இனிதாம் தமிழேஅழகாம்
தமிழே பெருநிதியாம்
தமிழே யுன்னைப் பாடப் பாடத்
தருமே மிக மகிழ்வாம்
தமிழே இதமாம் தமிழே சுகமாம்
தமிழே பல நினைவாம்
தமிழின் தாகம் பருகத் தண்மை
தருமே மனமுழுதாம்

அலையே கடலில்புரளும் அதுபோல்
அகிலம் முழுவதிலும்
கலையே கொண்டு தமிழே புரள்வாய்
கவிதை ஊற்றாவாய்
சிலையே அசையாநிற்கும் நிலைஏன்,
சிந்தைகொள் தமிழின்
நிலையே நினதில் பெரிதும் அழகால்
நினவை இழந்தாயோ?


மலையே நீயும் உயர்விற் பெரிதாய்
மனதில் கர்வமுறாய்
இலையே தமிழுக் கிணைநீ என்றே
இன்று மலைத்தாயோ
தொலைவும் காணாத் தொன்மைத் தமிழின்
தோற்றம் காணுகையில்
அலையும் வானச் சுடரும் நிலவும்
அதன்பின் அணியாமோ?

பொங்கும்தமிழோ புதுமை நதியின்
புனலாய் குதிபோட
தங்கும் எண்ணம் சற்று மின்றித்
தளளவென் றோடும்
எங்கும் தண்மை இன்பம் பரவ
இசையென் றொலிகூட்டும்
சங்கம்வளரின் பத்தெள் தமிழே
சரிநிகர் எதுவுண்டோ?

வெங்கண் கொண்டே வினைகள் செய்வோர்
விளைதுன் பந்தானும்
மங்கும் வகையில் மலையின்அருவி
மடிபோற் தமிழ்பொங்கும்
கங்குல்வானிற் கதிரோன் போலக்
கண்முன் ஒளிவெள்ளம்
எங்கும் பொங்கப் பிரவா கிக்கும்
இனிமைத் தமிழ் என்பேன்

> > > > கட்டி...
>
> read more »

kirikasan

unread,
Sep 4, 2011, 3:06:47 AM9/4/11
to சந்தவசந்தம்
//தங்கும் எண்ணம் சற்று மின்றித்
தளளவென் றோடும் //

தளளவென் றோடும் - தளதள வென்றோடும் என வரவேண்டும்
தவ்றுக்கு மன்னிக்க!

> > > > > தேன்மலர் விட்டெதிர் திக்கில் நடந்தது...
>
> read more »

kirikasan

unread,
Sep 5, 2011, 5:03:53 AM9/5/11
to சந்தவசந்தம்

குயில் பாடும்! கிளி பேசும்!!

1. தீராத துயரம்

நீளப்பெருத்தஓர் நெடுங்காட்டி னோரத்தே
மாள உடல்வைத்து மெய்தீய்க்கும் சுடுகாடு
ஆளைப் பயமுறுத்தும் ஆந்தை அலறலுடன்
தாளவொரு தரையாய் தன்முன்விரிந்திருக்க

பட்டமர மொன்று பரந்தகிளை இரண்டு
விட்டுமுறிந்தகிளை விறகை ஒடித்தனரோ
தொட்டு எடுத்தந்த தீமூளப் போட்டனரோ
மொட்டை மரமாகி முன்னாலே காட்சிதர

எட்டச் சிறுதொலைவில் எரிகின்ற நெருப்பினிலே
முட்டப் புகையெழுந்தே முழுமேனி எரிந்திடவும்
வெட்டி அழித்தமர விரிகிளையின் ஒரத்தே
பெட்டைகுயிலொன்று பேச்சின்றித் தானமர்ந்து

கண்கள் நீர்வழியக் கருகும்தீ புகைபார்த்து
மண்ணிலென் வாழ்வேது மரணத்தைக் காணவென
திண்ணங் கொண்டேயந்தத் தீயுள் உயிர்விடவும்
எண்ணப், பெருவானில் எங்கிருந்தோ கிளியொன்று

பக்கக் கிளைதன்னில் பறந்துவந் திருந்ததுகாண்
துக்கம் உளம்மீறித் துடித்திட்ட குயிலோ அச்
செக்கசிவந்த வாய்ச் சிறுகிளியும் கண்டவுடன்
நெக்கநெகிழ் துருக்கும் நினைவின் கொடுமைதனை

மூடும் விழிநீரை மூண்ட பெருந்தீயை
வாடும் மனதுள்ளே வாழ்கின்ற சோகத்தைப்
பாடு முளங்கொண்டு பச்சைக்கிளி கேட்கத்
தேடுந்துணை யெண்ணித் தேனா யிசைத்ததுவே

(குயில் பாடுகிறது)

”வாச மெழும் பூவாய் வாழ்ந்தேன் வளமுடனே
பேசி எனைமயக்கிப் பேதைமனம் கொண்டவரே
ஆசைமுடிந்தவுடன் அன்புமனம் விட்டதென்ன?
தேசம்கடந்து கால் திசைகாணாச் சென்றதென்ன?

பூவை எறிந்தனைஏன்? புயலடித்து வீழ்ந்ததென
சாவை அணைத்துவிடச் சஞ்சலமும் கொண்டேனே
தேவை முடிந்தவுடன் தேடவைத்து சென்றதேன்
பாவை இவள்கொள்ளும் பாடுதுயர் அறியாயோ

பேதை உனைநம்பிப் பெண்மைதனை ஈந்தவளாம்
போதை முடிந்தவுடன் புறந்தள்ளிப் போனதென்ன?
பாதை மறந்தும் ஏன்? பார்க்க மனம் வாராதோ?
மாதைபிரிந்ததென்ன? மாற மனம் கூடலையோ?

பாவை யிவள் தானெண்ணிப் பக்கம் அணைந்திலையேல்
நாவை அறுதெறிந்து நான்சாக மாட்டேனோ?
காவிஉடல் எடுத்துக் கட்டையிலே போட்டெவரும்
மேவத் தீ மூட்டாரோ? மின்னல்தான் வீழாதோ?

காதல் கனிந்ததென கற்பனையில் நானிருக்க
போதல் இனிதெனவே போனவரே எங்கு ள்ளீர்
மோதல் இருந்திடலாம் மோகம் கலைந்திடலாம்
சாதல் நிலையடைந்தேன் சற்றுமனமிளகாதோ

பக்கமிருந்தழுது பாடுங்குயில் பார்த்துமன
துக்கமெடுத்தே, தன் தோல்விதனை எண்ணிக்குரல்
விக்கித்திணறிஒரு வேதனையில் தான்துடித்து
சிக்கித் திரிந்தகுயில் சொல்லுமொழி தான்கேட்டே

திக்கற்ற பேடுதனை திரும்பிக் கிளிபார்த்து
”மிக்க துயரெடுத்து மேதினியில் வாழ்பவளே
எக்கதியு மில்லையென இளைத்து அழுபவளே
நிர்க்கதியின் காரணமென் நெஞ்சுரைப்பாய் என்றதுவாம்

2. துயரின் முடிவு

மாலை யிருள்மயக்கம் மாந்தர்வயல் தோட்டமதில்
வேலை முடித்தலைந்து வீடேகும் நேரத்தில்
தோலை எலும்பென்றே தோன்றும் சிலஎருதுகளும்
காலை எடுத்தபசி கண்டபுல் போதாமல்

நொண்டி நடந்தசைய, நோயெடுத்த முதியவரும்
வண்டியி ருந்தபடி வாய்திறந்து பெரிதிருமி
தொண்டை கனைத்தவொரு தோற்றங் கண்டேயக்
கெண்டைதான் நீர்வெளியே கிடந்து துடித்ததென

வெண்ணை என உருகி வேதனையை கொட்டியதாய்,
கண்ணின் துளி உதிரக் கருங்குயிலோ கூறியது
”பெண்ணின் நலமறியாப் பித்தர்கள் வாழும்வரை
மண்ணில் கரைவதுவோ மாதர்விழி நீராகும்

அன்னைதிருவயிற்றில் அழகுமணிக் கருவுயிர்த்து
பின்னர் உதிக்கையிலே பிறந்தவொரு அழுகையவர்
கன்னதிருந் தொழிந்து காய்வதுதான் எப்போது?
சின்னக் குழந்தையெனில் சீராட்டிப் பாட்டிசைப்பர்

கன்னி வயதென்றால் கதைநூறு பேசிடுவார்
பின்னைவீட்டிலிவள் பேசியது பார்த்ததென்பர்
கன்னத்தொரு முத்தம் கண்டதெனப் பொய்யுரைப்பர்
சின்ன மனதெடுத்து சேதிபல கூறிடுவர்

உண்மைக் காதலுடன் ஒருவன்தனை நேசிப்பின்
பெண்மைச் சுகமறிந்து பேசாமல் போயிடுவான்
மண்ணில் எறிந்ததொரு மாதுளையின் முத்தெனவே
கண்ணீர் சுரப்பதன்றி காப்பதற்கு யாருமில்லை

எண்ணத் திருத்திமன துள்ளே குமுறியொரு
கிண்ணப்பசும்பாலில் கொட்டியதோர் துளிவிசமாய்
உண்ணவும் முடியா உமிழ்ந்திடவும் மாட்டாது
மண்ணில் கிடந்துழலும் மங்கையரில் ஒன்றானேன்

என்றிடப் பைங்கிளியோ இன்னலே இல்லாத
ஒன்றில்லை வாழ்வில் உரைதிட நீகேளாய்
தென்றல் புயலாகும் திரைகடலும் பொங்கிவரும்
கொன்றை மலர்தானும் கொழுந்துவிட்டுத் தீஎரியும்

பெண்ணே உலகமதில் பெருஞ்சக்தி கொண்டவளாம்
கண்ணீர்க் கிரையாகி காலமெலாம் துஞ்சுகிறாள்
எண்ணி வெகுண்டெழுந்தால் எரியும்,ஒருமதுரையென
கண்ணை விழிக்கவோர் காற்றும் புயலாய் மாறும்

மாவுலகு சுற்றும்விசை மேலெழுந்த சூரியனாம்
காவுமிந்த அண்டவெளி காற்றில்லா சூனியமும்
ஏவி ஒரு சக்தியதன் இழுவைக்கு ஆடுதெனில்
தூவிநிலம் வீழ்சக்தி தோற்றங்களே பெண்ணாவர்

பெண்ணில் மறைந்துள்ள பெரும்சக்தி தானெழவே
அண்டம்சிலுசிலுத்து ஆகாயம் ஒடியாதோ
விண்ணில் சுழலுபவை விசையெடுத்து ஓடாதோ
அன்னை சக்தியவள் அருங்குழந்தை நீவிர்காள்

என்றாலும் இன்னல்தனை இதயத் தடக்கியொரு
மென்மை கொழித்தவராய் மௌன உருவெடுத்து
புன்னகை கொண்டேநற் பொறுமைதனைக் காத்திடுவீர்
மண்ணில் பெருவாழ்வும் மகிமையும் பொங்கி வரும்

சொல்லிச் சிறுகிளியும் சிறகடித்து வான்பறக்க
மெல்லத் திரும்பிதன் மீளாத் துயரடக்கி
கல்லாய் மனதெடுத்து கண்ணைத் துடைத்தகுயில்
இல்லத் திசைநோக்கி எழுந்து பறந்ததுவே !

> > > > > > புதிய தொடக்கம்!  குயிலின் குரல் இனிமை என்பார்கள்! இப்படி பெயரை...
>
> read more »

kirikasan

unread,
Sep 5, 2011, 5:12:44 AM9/5/11
to சந்தவசந்தம்
/பாவை யிவள் தானெண்ணிப் பக்கம் அணைந்திலையேல்
நாவை அறுதெறிந்து நான்சாக மாட்டேனோ? /

/பாவை யிவ ளெண்ணிப் பக்கம் அணைந்திலையேல்
நாவை அறுத்தெறிந்து நான்சாக மாட்டேனோ? /

என்று மாற்றிக்கொள்கிறேன்.
--கிரிகாசன்

> காவுமிந்த அண்டவெளி காற்றில்லா...
>
> read more »

kirikasan

unread,
Sep 6, 2011, 1:16:35 AM9/6/11
to சந்தவசந்தம்
என் முகமூடி

(ஒரு தங்கையின் அண்ணனாக...)


வாழ்வினில் ஆயிரம் வந்ததைக் கண்டவன்
வாட்டம் எனக்கில்லை ஞானப்பெண்ணே
தாழ்விலும் ஏற்றமும் தன்னில் திளைத்தவன்
தாங்கும் உரமுண்டு ஞானப்பெண்ணே
மூழ்கி எழுந்தவன் மூச்சுப் பிடித்துமே
முற்றும் கடந்தவன் ஞானப்பெண்ணே
வீழ்வில்லை இன்னுமும் வீறுகொண்டே பாரில்
வெல்லத் திடமுண்டு ஞானப்பெண்ணே!

யாவும் உணர்ந்தவன் ஞாலம் அறிந்தவன்
நானே ஓர் ஞானியாம் ஞானப்பெண்ணே
தாவும் இளம்தென்றல் தன்னில் புயலையும்
தாங்குமிடி கண்டான் ஞானப்பெண்ணே
ஏவும் இயற்கையின் ஓடுமுகில் வந்து
என்ன மறைக்கினும் ஞானப்பெண்ணே
மேவும் முகில் உள்ளே மெல்ல ஒளிர்நிலா
மீண்டும் வெளிவரும் ஞானப் பெண்ணே

கொட்டும் மழைவரும் கூவி இடித்திடும்
சட்டச்சட பெரும் சத்தமெல்லாம்
விட்டுவிடும் ஒருவேளை அமைதியின்
வேகம் பிறந்திடும் ஞானப்பெண்ணே
வட்டமுகம்வாடி வாழ்வது விட்டுநீ
வண்ணம் எடுத்தெழில் சோலையிலே
சிட்டுகுருவியென் றோடிப் பறந்திடு
சிந்தை அமைதிகொள் ஞானப் பெண்ணே!

வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை

என்றுமே வாழ்வில் நிலைப்பதில்லை இருள்
ஓடும் ஒளிவரும் ஞானப்பெண்னே
நன்றும் பெருந்தீமை நல்லதும் கெட்டதும்
நாளும் தினம்மாறும் ஞானப்பெண்ணே
குன்றும் குழிகளும் கோடி உண்டு இது
கொண்டது வாழ்வடி ஞானப் பெண்ணே
வென்று புகழொடு வாழ நினைத்திடு!
வெய்யவனாய் ஒளிர் ஞானப்பெண்ணே!

> > தென்றல் புயலாகும் திரைகடலும்...
>
> read more »

kirikasan

unread,
Sep 6, 2011, 3:58:21 AM9/6/11
to சந்தவசந்தம்
இது சிலமாதங்களுக்கு முதல் எழுதினேன்.இப்போது தெரிந்தவரையில்
நெறிப்படுத்தினேன். கவிகளைப் புனரமைத்தேன்
தங்களோடு பகிர்கிறேன்

காதல் மலர்ச்சோலையில்... (கவியமுதம்)


மாலை இருளானது, வஞ்சகனின் சூழ்ச்சிபோல வையகத்தை மெதுவாக ஆக்கிரமித்துக்
கொண்டிருந்தது. அது ஒரு வசந்தகால
மாலைநேரம். கொடுமைகள் கண்டு சுட்டெரித்த செங்கதிரோன் இது ஒன்றும் இன்றோடு
முடியும் காரியமல்ல
என்றெண்ணி சிவந்து களைப்பாற எண்ணி எங்கோ மறைந்துவிட, இரவாகிக்
கொண்டிருந்தது.
கதிரவன் மறைந்து வெகு நேரமாகி விட்டபோதிலும் இளங்கதிரோன் சுட்டுச்சென்ற
வெம்மை காற்றில் இன்னும் தணியவில்லை.

அந்தச் சோலையின் மலர்களைக்கூடி நறுமணம் சுமந்த தென்றல் வந்து, அங்கே
சோலையின் நடுவில் தனிமையில் நின்றிருந்த தலைவியின் கேசங்களை நீவி
முகத்தில் மெதுவாக
வெப்பத்தால் முத்தமிட்டுச் செல்கிறது. காற்றுமட்டுதானா சுட்டது?.
காதலனும்தானே!
அவள் உள்ளத்தை பிரிவினால் சுட்டு வேக வைக்கிறான்!

எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது? அவள் முன்னால் இருக்கும் குளிர்ந்த
தடாகத்தைப் பார்க்கிறாள்.
அதோ அந்த அல்லிமலர் கூட சந்திரனின் வருகைக்காக காத்திருக்கிறதாம். தோழி
ஒருதடவை சொன்னாள்.

இதோ இந்த குளிர் பொய்கையின் அலைகள்கூட இவள் மனதைப்போல நிரைநிரையாக
எழுந்து உணர்வு எழுச்சியின் துடிப்பாகக் காணுகிறதே! அதோ அலைகளின்
ஆட்டத்திற்கு
தலையாட்டும் தாமரைகூட அவளின் மனம் அங்குமிங்கும் அலைவதையும், அதனருகே
துள்ளிவிழும்
கயல்மீன்கள் அவள்விழிகளின் துடிப்பையும் போலப் பாவம்காட்டி
அவள் ஆற்றமையைக் கேலி செய்வதுவும் போல் தோன்றுகிறதே!

ஆகா இதோ, இந்த மலர்க்கூட்டம்கூட காற்றிலாடி தமக்குள் இரகசியமாக என்ன
பேசிக்கொள்கின்றனவே!
அவள் ஏமாற்றத்தைத்தானே எள்ளி நகையாடுகின்றன...
கோபம் கட்டுமீறவே பாடுகிறாள்

தேனே என்றான் ஒரு தென்றலென்றான்-பெரும்
தீயாகி நின்றே என் பெண்மை கொன்றான்
வானில் வளைந்தவில் வண்ணம் என்றான் அன்று
வாஎன்று என்னையே தன்னில் கொண்டான்
பூநின்ற வாசமே பொன்னே என்றான் ஒரு
புன்னகை பூத்ததில் என்னை வென்றான்
ஏனின்று என்னையே விட்டுவிட்டான் இன்று
ஏதில் மயங்கியே நின்றுவிட்டான்

பூவாக மேனியில் போதை கண்டான் புயல்
போலவும் மாறிப்பின் காயம் செய்தான்
நோவாகி உள்ளத்தை நெக்க வைத்தான் பின்பு
நெஞ்சில் கலந்தென்னை சொக்க வைத்தான்
நாவான பொய்த்தே இந்நங்கை யென்னை இன்று
நாளில் மறந்திடில் நிச்சயமே
சாவாகு மாம்மேனி சற்றே வந்து எனைச்
சாவினில் காத்திட சொல்லிடடி!

காற்ரறைப் பார்த்து அவள்கட்டளை இடுகிறாளோ?
அவள் கோபத்தைப் பார்த்து இரங்கியோ என்னவோ தென்றல் குளிர
ஆரம்பித்துவிட்டது.
நிலவும் எழுந்து பொன்னொளி கூட்டத் தொடங்கிவிட்டான். காதல் ஏக்கம் கசப்பாக
மாறுகிறது. கண்கள்
சிவந்துவிட்டன. கோபத்தாலா? தூக்கத்தாலா?

அப்போது அங்கே யாரோ வரும் ஓசை கேட்கிறது. ஆனால் அதை அறியாமல் அவள்
பாடுகிறாள்

(தொடர்கிறது)

> > > திக்கற்ற பேடுதனை...
>
> read more »

kirikasan

unread,
Sep 6, 2011, 4:03:32 AM9/6/11
to சந்தவசந்தம்
காதல் மலர்ச்சோலையில்... (தொடர்ச்சி..)

துடித்தே கண்கள் துவள்கிறதே என் துணையே நீயெங்கே?
வெடித்தே நெஞ்சம் அழுகிறதே என் வேந்தே நீ எங்கே?
வடிந்தே யிருளும் முடியமுன்னே என்வாழ்வே வாராயோ?
மடிந்தே யுள்ளங் குமுறுதுவே என்மன்னா நீயெங்கே?

எவளோ ஒருத்தி கண்டனையோ என் இதயம் மறந்தனையோ
இவளைச் சிலையென் றெண்ணினையோ என் இறைவா நீ எங்கே?
குவளை நிறைதேன் நீயென்று எனைக்குலவிக் கொண்டதெல்லாம்
அவளை இனிதாய் கண்டதிலே இதுஆலம் எனவாமோ?

தடந்தோள் கொண்டான் தவறியதேன் என் தலையே சுற்றுகுதே
மடந்தை என்னை மறந்ததும் ஏன் மனமே கொல்லுகுதே!
கிடந்தே யுள்ளம் துடிக்கின்றேன் இக்கணமே நினைவானேன்
விடந்தான் முடிவே கொல்லுகிறேன் என் வேதனை போமாமே!

அண்மையில் நின்றிருந்த அலரிப் பூமரம் ஒன்று கண்ணுக்குத்தெரியவே
முடிவுக்கு வருகிறாள்.
பூச்செடியிலிருந்து ஒருகாய் பறித்து உண்ண முயல்கிறாள்.
ஆனால் எப்படி உண்பதென்று தெரியவில்லை. கசக்குமாமே! விழித்தபடி நின்றபோது
அங்கே ஒருகுரல் ஒலிக்கிறது

காதல் மட்டும் வாழ்வே என்று
காதல் எண்ணிமாயும் பெண்ணே
காதல் போயின் சாதல் என்றால்
காற்றுக்குலகில் வேலை இல்லை

காதல் கண்டு தோற்கும் மாந்தர்
காணுமுலகில் மாளச் சென்றால்
ஊதல் காற்றும் உயிர்கள் இன்றி
ஒற்றை உலகு சுத்தும் வீணில்

தேனை உண்டு தித்திக் காமல்
தீயை உண்ணத் தேரும் பெண்ணே
போனால் தேகம் வாரா தென்று
புரியா தவளே கேளாய் இன்று

தாகம் கொள்ளல் தேகக் குற்றம்
தாங்கா தாயின் மனமே நோகும்
நாகம் கக்கும் நஞ்சைப் போலே
நாளும் விரகம் தேகம் கொல்லும்

ஆகக் காதல் ஒன்றே உலகின்
ஆகிக் கொண்டோர் இன்ப மில்லை
போகப்போக மனமே யாறிப்
புதிதாய் வாழ்வு பெறலாம் பெண்ணே

மோதல் கொண்டு முனையும் வாழ்வில்
மூச்சை நிறுத்த முயலா தென்றும்
காதல் போயின் வாழ்வை வென்று
காலம் யாவும் காண்போம் நன்று

தலைவி திடுகுற்றுத் திரும்புகிறாள். ஒரு முதியவர் நிற்கிறார். இதுயார்
இவரெப்படி இங்கே?
”யார் நீங்கள்?” என்கிறாள். முதியவர் சிரிக்கிறார். அவள் திகைக்கிறாள்.
இந்த
இரவு நேரத்தில். இவருக்கு இங்கே என்னவேலை. ‘யார் நீங்கள் பெரியவரே
கூறுங்கள்’
அவர் சிரித்தபடி ’நான்தான் காலதேவன்’ என்று கூறிச் சட்டென்று மறைந்து
போகிறார்

அந்தவேளையில் அவள் தோழி, தலைவியை நீண்டநேரம் காணாது
தேடிவருகிறாள். தன் தலைவி திகைத்து நிற்பதைக் கண்டு என்னவென
விசாரிக்கிறாள்.

அங்கு நடந்ததைக் கூறி அவள்மீது தலைசாய்த்து கண்களை மூடுகிறாள்
தலைவி. கண்ணிலிருந்து நீர் தாரையாக வழிகிறது.
தோழிஅவளை ஆறுதல் படுத்துகிறாள்

இறுதிக்கு அவசரம் ஏனோ- மேனி
இடு ’தீ’க்கு ஆசையும் கொண்டிடலாமோ
வெறுமைக்கு மனமாகும் போது -சூழ்
வெள்ளிக்குள் நிலவாக தனிமைநீ காணு
துள்ளிவான் வெண்ணிலா ஓடும் - ஒரு
துன்பமும் கொள்வதே இல்லையே நாளும்
அள்ளிப்பொன் னாய்ஒளி ஊற்றி -அது
ஆழ வானில் வலம் போவதைப் பாரு

அவள் மடியில் படுத்த தலைவி சோர்வு மிகுதியால் அயர்ந்து மயங்கி
கிடக்கிறாள். அப்போது மெல்லியதாகத் தோழி பாடுகிறாள்


பூமி, வான்தூறலை வேண்டில் அது
பூவாக நீர்மழை தூவாதோ நாளும்
மேவிவானில் கதிர்ஏறும் நேரம்
மேதினியில் காலை என்றாக வேண்டும்
ஆவிதுடித்துநீ பாடும் கீதம்
அள்ளிச்சென்றே தென்றல் கூறாதோ காதில்
தேடிக் கதிர் எழும்நேரம் இருள்
தேய்ந்து உதயமென் றாகிடவேண்டும்


தளிரோடு பூப்பூக்க வேண்டும் முகம்
தண்ணீரில் பார்க்கும் நிலைவர வேண்டும்
ஒளிவீச இரவோட வேண்டும் நல்ல
உயிர் கொண்ட தோர்சுனை மீன் துள்ளவேண்டும்
களிகூடிப் புள்ளினம் ஆர்க்கும் அவை
கலகலவென்றொலி செய்தோடவேண்டும்
வழிதோன்றி அவன்பாதைகண்டே இங்கே
வாரும் வரை நன்று தூங்கட்டும் நெஞ்சம்

கனவோ சுமைகொண்ட நெஞ்சை வெறும்
காற்றாகி வானத்தில் நீந்திடச் செய்யும்
மனமோ துயர் எண்ணி நின்றால் துயில்
மாற்றாகித் துன்பம்மறைந் திடச்செய்யும்
சினமும் கவலையும் போக இங்கு
சற்றே நீ கண்க ளுறங்கிடுகண்ணே
நினவோ டமைதி கொள் என்றும் இந்த
நிலையாம் உலகினில் ஒன்றுமே யில்லை

மாறுதல் மட்டும்தான் வாழ்வு என்றும்
மாறாத ஒன்றெனில் மாந்தரின்சாவு
தேறுதல் இல்லை யென்றாகில் நாமும்
தீய இப்பூமியில் வாழ்வ தரிது
ஊறுகள் ஏதுவந்தாலும் நீயும்
உள்ளம் உரமுள்ளதாய் மனம் தேறு
ஏறுதல் தான்மட்டும் எண்ணு இனி
ஈது இயற்கை யிழப்ப தென்றாகு


தோழியின் தாலாட்டில் துக்கம் தணிந்திடவே இருவரும் அந்தப்புரம் நோக்கிச்
செல்கிறார்கள்.. விடிந்ததும் தகவல் கொண்டு ஒரு தூதன் வந்தான்
தலைவன் வரும்வழியில் ஏற்பட்ட
இடரே காரணம் எனவும் காவலர் அவன்வரும் பாதையை தடைபோட்டு விட்டனர் என்றும்
தலைவியிடம் மன்னிப்பு கேட்டிருந்தான்
மகிழ்வில் தலைவியின் மனம் குதிக்க எங்கிருந்தோ பெண்கள் சேர்ந்து
பாடும்பாடல் ஒலிக்கிறது. அவள் உள்ளத்தில்சேர்ந்த உறுதியும் இன்பமும்
பிரதிபலிப்பதாக!


வெட்டுமிடி வீழ்ந்தாலும் வேகோம் -கையில்
விளையாட மின்னலில் பந்துகள் செய்வோம்
கொட்டி மழை பெருகினும் தாழோம் -அங்கு
குளித்தேயோர் சுழிபோட்டு கரைநீந்தி எழுவோம்

தட்டுவோம் கைகளைக் கோர்த்து - பெண்கள்
தாண்டாத இடரில்லை காதலும் சேர்த்து
கட்டுவோம் வாழ்வென்ற வீடு - ஒளி
காட்டுவோம் அன்பென்ற தீபமும் கொண்டு

பெட்டியில் பாம்பாகிச் சோர்ந்து - பெண்கள்
பெருமை மறந்துதிவர் தூங்குதல் விட்டு
எட்டி இம யங்கள் தாண்டி! - நாமும்
இந்த உலகையும் ஆள்வோம் நிரூபி!
**********************
(நிறைவு)


---அன்புடன் கிரிகாசன்

> > நாளும் தினம்மாறும் ஞானப்பெண்ணே...
>
> read more »

kirikasan

unread,
Sep 8, 2011, 4:29:24 AM9/8/11
to சந்தவசந்தம்
இதுவும் காதலை கூறும்கவி

செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள்
சொரிவது எனவிழி நீர்வழிய
மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும்
எழுமெழில் முகமதில் தீ பரவ
வழுவிடு உனதிடம் வழிவிடு மதனிடம்
வகையென அவளிடம் கூர்கணைகள்
எழமுகில் மறைவது இரவினில் மதியென
எழிலுறும் வகையென இவளிருந்தாள்

சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு
சிலையெனும் வடிவெடு ஆரணங்கே
கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில்
குறுநடை பழகிட வருமெனவே
பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும்
பொலிவொடு சிதறுநீர் ஏனறியேன்
விலகிடும் மனதினை விரைந்தெழும் மடமையை
விழிசெய உளமதில் கோபமுற்றான்

அலைகடல் பெரியது அதைவிட இதுபெரும்
அதிசய மலையுது நீரின்றியே
மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்
மகிழ்வென நீந்திடும் மதிகுலைய
உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு
உளதுயர் தெளிவெடு மீனசைய
விலையில திவளெழில் சிதைவது கொடிதென
விளைவது ஏதென இவன் வினவ

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்

எவனுன துடைமையை இருவிழி நீருற
எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்
அவனது தருவனோ அதைவிட அவனது
எடுபொருள் கவரென இவனுரைத்தான்
நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென
இவளெழில் வதனமும் பூமலர
அவனிலை இவனென எடுஉன திதயமும்
எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்!

> தலைவியிடம்...
>
> read more »

kirikasan

unread,
Sep 10, 2011, 8:34:42 PM9/10/11
to சந்தவசந்தம்

> > அவள் மடியில் படுத்த தலைவி சோர்வு மிகுதியால்...
>
> read more »

kirikasan

unread,
Sep 11, 2011, 2:17:44 AM9/11/11
to சந்தவசந்தம்
என் வாழ்வு ஏனோ?


என்னென்று சொல்லாது ஏனோஇவ்வுலகிலே
என்அன்னை என்னயீந்தாள்
என்செய்வ தறியாது கண்கள்நீர் சொரியவே
என்வாழ்வை யிங்குகண்டேன்
என்நன்று என்அன்று என்னொன்றும் தெரியாமல்
என்னவோ வாழ்ந்திருந்தேன்
என்னெண்ணி என்னையும் இறைவன் படைத்தனன்
என்பதும் ஏதுமறியேன்

என்னவன் என்னிவன் என்நண்பன் அல்லவன்
எதையுமே அறிய அல்லேன்
என்மனம் வெண்பளிங் கென்றிடும் அண்மையில்
உள்ளதன் வண்ணங் கொண்டேன்
என்னவள் என்றொரு சின்னவள் வந்திட
என்வாழ்வு பங்கு கொண்டேன்
என்நலம் தன்னலம் இருவரும் கொண்டிட
எண்ணிலே மூவர் கண்டேன்

என்னது என்னது இன்பங்கள் கோடியாம்
என்றுளம் ஆவல் கொண்டேன்
என்மனம் என்னது எண்ணுவ தாற்றியே
என்புடல் கூசி நின்றேன்
என்னவோ ஆகியும் என்னமோ கூறியும்
என்மதி கெட்டலைந்தேன்
என்மன வானிலே என்மதி தேய்ந்திட
ஏனோ இருளில் நின்றேன்

என்னதான் வாழ்ந்தனன் இத்தனைகாலமும்
இன்பமாய் வாழ்ந்திருந்தும்
என்னதாய்ச் செய்தனன் என்னொரு பிள்ளை! ஆ..
இவனென்ற சொல்லுங் கேட்டேன்
என்விதி இங்கிவன் என்னுடன் சேர்ந்தனன்
என்பதும் கண்டிருந்தேன்
என்னருள்தேவிநீ என்னுடை வாழ்வெனும்
இதைநீயும் ஏன் படைத்தாய்?

> > > துன்பமும் கொள்வதே இல்லையே...
>
> read more »

kirikasan

unread,
Sep 15, 2011, 1:01:19 AM9/15/11
to சந்தவசந்தம்
காதல்,வீரம் இது இரண்டும்தான் கவிதைக்கு கருத் தருகிறனவே!
இது காதல்

மாலைவெயில் மஞ்சளிடும் மதுமலரும் வண்டுறங்கும்
மாமன் உந்தன்நெஞ்சி லெந்தன் மனமுறங்காதோ
சோலையிலே கிளியுறங்கும் சொல்லுங் குயில் தானுறங்கும்
சுந்தரமென் கூந்தல்மணம் கண்டுறங்காயோ
ஓலையிலே காற்றுவந்து ஓசையிடப் பாட்டிசைக்கும்
ஊமையிவள் பாடுங்குரல் உனையழைக்காதோ
காலையிலே பூமலரும் காற்றில்மணி யோசைவரும்
கற்பனையில் நீயிருப்பாய் கண்முன் எழாயோ

நீலவிழி மையெழுதி நினவிலுந்தன் மையலெழுதி
நீந்துகிறேன் கனவில் என்றும் நேரில் வாராயோ
வேலெறியும் விழியிலிவள் வேதனைதான் மீந்ததென்று
வெயிலெழவே பனிவிலகும் வெம்மை தாராயோ
கோலமுகம் விண்ணுலவும் குளிர்நிலவின் விம்பமென்றார்
கூடுமொரு வான்முகிலாய் கொள்ள வாராயோ
பாலமுதம் போலவெனப் பனிமலரும் நீயெனவே
பார்த்துஒரு சேதிசொல்லப் பக்கம் வாராயோ

ஆடிவரும்தென்றலெனில் ஆக்கும்துயர் கொஞ்சமல்ல
அத்தனையும் நீக்கியுளம் அன்புகொள்ளாதோ
கூடிவரும் பூவின்மணம் கொல்லுதய்யா உன்நினைவில்
கொண்டதுவோர் துன்பம்தனைக் கிள்ள வாராயோ
கோடியெனத் தன்னருகில் கொள்ளையெழிற் தாரகைகள்
கொட்டிகிடந்தென்ன மதி கூடிவிடாதே
ஓடிஒரு சோடியினை உள்ளமதிற் காணும்வரை
ஒவ்வொருநாள் தேய்ந்துமது ஒய்ந்துவிடாதே

பூவில்மது உண்ணுவண்டு போய்விடவே துன்பம்வரும்
போதிலொரு சோலைமலர் வாடிடுமாமே
ஆவியிலே நீகலந்து ஆகிவிட்டோம் ஒன்றெனவே
ஆருயிரே நீஇலையேல் அழிந்திடுவேனே
கோவிலிலே பார்த்த சிலை குறுநடையில் போகுதடா
குமரியிவள் பேரழகு என்றதும் ஊரே
ஆவியிலே பேய்கலந்து ஆனதுவோ கோலமென்ன
ஆகஇவள் நோய்பிடித்தாள் என்றதுமின்றே!

நூல்திரிந்து போனதென நெய்விழியாள் ஆனதென்ன
நூலெடுத்து ஆடைநெய்ய நேர்ந்திடும் வாழ்வே
கால் இருந்து உச்சிவரை காதலெண்ணி நோயெடுத்தேன்
கன்னியென்னைக் காத்துவிட கைதொடுநீயே
வேல்விழியில் நீரெடுத்து விழிகலங்கி பார்வைகெட்டு
வேதனையில் பாடுகிறேன் விடிவு தாராயோ
வால்முளைத்த வெள்ளியொன்று வானிறங்கக் கனவுகண்டேன்
வாழ்வு இவள் முடியமுன்னே வந்துவிடாயோ

> > > > நாகம் கக்கும் நஞ்சைப் போலே...
>
> read more »

Kaviyogi Vedham

unread,
Sep 16, 2011, 2:02:59 AM9/16/11
to santhav...@googlegroups.com
ஒஹோஹோ.. மடமடவென எத்துணைக் கவிகள்!
என்ன ஆகிய ஓட்டம்...படித்தேன்..உம் கவிப்பணி வாழ்க,
 யோகியார்.

2011/9/15 kirikasan <kanaga...@hotmail.com>
காதல்,வீரம் இது இரண்டும்தான் கவிதைக்கு கருத் தருகிறனவே!
       இது காதல்

மாலைவெயில் மஞ்சளிடும் மதுமலரும் வண்டுறங்கும்
மாமன் உந்தன்நெஞ்சி லெந்தன் மனமுறங்காதோ
சோலையிலே கிளியுறங்கும் சொல்லுங் குயில் தானுறங்கும்
சுந்தரமென் கூந்தல்மணம் கண்டுறங்காயோ
ஓலையிலே காற்றுவந்து ஓசையிடப் பாட்டிசைக்கும்
ஊமையிவள் பாடுங்குரல் உனையழைக்காதோ
காலையிலே பூமலரும் காற்றில்மணி யோசைவரும்
கற்பனையில் நீயிருப்பாய் கண்முன் எழாயோ

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 16, 2011, 11:25:57 AM9/16/11
to santhav...@googlegroups.com
அருமை!

.. அனந்த்


சோலையிலே கிளியுறங்கும் சொல்லுங் குயில் தானுறங்கும்
சுந்தரமென் கூந்தல்மணம் கண்டுறங்காயோ
ஓலையிலே காற்றுவந்து ஓசையிடப் பாட்டிசைக்கும்
ஊமையிவள் பாடுங்குரல் உனையழைக்காதோ
காலையிலே பூமலரும் காற்றில்மணி யோசைவரும்
கற்பனையில் நீயிருப்பாய் கண்முன் எழாயோ

2011/9/15 kirikasan <kanaga...@hotmail.com>

kirikasan

unread,
Sep 16, 2011, 2:53:25 PM9/16/11
to சந்தவசந்தம்
ஐயா, தங்கள் இருவருக்கும் நன்றிகள்!
நன்றியோடு...

தெள்ளத்தெளிந்தநீரோடை - பக்கம்
தென்றல்தொடும் பூவின்சோலை
உள்ளம் விரும்பி ஓர்பூவை - அணைந்
தோடும் காற்று கொய்யக் கண்டேன்
துள்ளித் தென்றல் விளையாட - பூவும்
தொட்டிலென ஆடியோடை
வெள்ளமெனும் நீரில்மேலே - ஆகா
வீழ்ந்திட என்னோர்அழகு!

வட்ட வட்டக் கோலம்போடும் - அலை
வந்து வந்து விரிந்தேகும்
தொட்ட பூவைச்சுற்றி ஆடும் - அவை
துள்ளி ஒன்றன்பின்னே ஓடும்
நெட்டை மரம் அதன் விம்பம் - அது
நேரைவிட்டு நெளிந்தாடும்
எட்ட வானிலோடும் மேகம் - நில
வத்தனையும் குதிபோடும்

அத்தனை துள்ளல் என்னுள்ளம் - உங்கள்
அன்பு வார்த்தை தனில் கொள்ளும்
புத்துணர்வு மெல்லப்பொங்கும் - பல
பூக்கள் எனக்கவி பூக்கும்
தத்தி நடைபயில் பிள்ளை - அது
தள்ளிடும் வண்டியைப்போல
இத்தரையில்பெரும் வாழ்வை இவன்
இங்கு தள்ளப் படும்பாடு

பத்து வயதுடைபிள்ளை - ஒரு
பல்கலைப் பட்டபடிப்பை
கத்திப் படிப்பதுபோல - இவன்
கண்டது கூறுவனாக
அத்தனையும் மகிழ்வாக -தாங்கள்
ஆசியினைத்தரும்போது
எத்தனை கோடி வருடம் - இங்கு
இன்னும் கவி செய்யத் தோன்றும்

On Sep 16, 7:02 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> ஒஹோஹோ.. மடமடவென எத்துணைக் கவிகள்!
> என்ன ஆகிய ஓட்டம்...படித்தேன்..உம் கவிப்பணி வாழ்க,
>  யோகியார்.
>

> 2011/9/15 kirikasan <kanagaling...@hotmail.com>

kirikasan

unread,
Sep 18, 2011, 12:30:03 PM9/18/11
to சந்தவசந்தம்
அச்சமென்பது உடைமையடா!

கன்னங் கரிதோர் இருளும்வேளை காட்டில்நடக்கின்றேன்
கண்கள்மூடி கிடக்கின்றேன் அதுகனவோ மிரள்கின்றேன்
என்னேஎதுவும்புரியவில்லை என் இதயம் துடிக்கிறது
ஏனோஅச்ச உணர்வெழவே என் மனமும் திகைக்கிறது

ஏதோஒன்று தெரிகிறது அதில் ஒளியும் எரிகிறது
எண்ணெய் தீபம் புரிகிறது அதுஇலையுள் மறைகிறது
பூதாகரமாய் நிழலோ எந்தன் பின்னால் எழுகிறது
பெரிதாய் ஆடிப்பீதிகொள்ளும் நிலமை வருகிறது

மனிதர்செல்லும் வழியெல்லாம் நல் மலர்கள் இருப்பதில்லை
மனமே செய்யும்தவறுகளை அம் மனேமே பொறுப்பதில்லை
தினமும் கால்கள் மனம்காவும் செல் திசையைமனம்கூறும்
திக்கில்கல்லும் முள்ளிருக்கும் மனம்தீண்டா, கால்வலிக்கும்

கால்கள் காட்சி காண்பதில்லை அது கண்கள் காண்கிறது
கண்ணோ காட்சி கூறவில்லை எனில் கால்கள் என்னபிழை?
வேல்கள் முள்ளாய் குத்துகையில் வெறும் பாதம்வழிமாறும்
விளையாட்டில்லை வேதனைதான் பல விதிகள்தனைமாற்றும்

கால்கள் போனபோக்கினிலே நீபோகா தென்கின்றார்
கண்கள் போகுதிசையெல்லாம் நீகாணா தென்கின்றார்
நாலும் காணும்மனதினிலே நல்லுணர்வேபொங்கட்டும்
நானும்புரியும் காலம்வந்தால் நாளை விடிவாகும்

பாடும்குருவி எழுந்தோடும் அதன் பாடல் வான்பரவும்
தேடும் கண்கள் தூரத்தேபெருவானம் விரிந்திருக்கும்
நீளப் பரந்து காண்கிறதே அந்நீலக் கருவானம்
நீந்திக்களித்து கொள்ளென்னும் ஓர் நினைவும் மனதொலிக்கும்

அவளே என்னை நில்லென்றாள் பின் அவளேபோ என்றாள்
அவளேஉலகில் சொல்லென்றாள் பின் அவளே சுவைதந்தாள்
அவளே என்னை பார்என்றாள் பின்அவளே ஒளியானாள்
அவளே உள்ளத் திருந்தென்னை மன அச்சம் தருகின்றாள்

சக்தி எந்தன் உயிர் தந்தாய் என்னதமிழின் அறிவீந்தாய்
சக்திஎன்னில் பெயர் தந்தாய் எனபேச்சில் உயிர் தந்தாய்
சக்திஎன்னில் உறைகின்றாய் என்னுள்ளே உணர்வானாய்
சக்தி!சக்தி! சக்தி! என்னுள் நீயே ஒளியாவாய்!

kirikasan

unread,
Sep 19, 2011, 6:59:19 AM9/19/11
to சந்தவசந்தம்
ஈழத்துக்கவிகள் என்ற இழையை விட்டுவிட்டு இந்த கருங்குயில் பெயரில் ஒரு
இழைதொடங்கியதை
யாரும் சந்தேகத்தோடு பார்த்தால் ஈழத்தைபாடிவதை கைவிடதேன் என்று என்ணினால்
அதற்காக
என்மனதில் உள்ளது இதுதான்


நான் பிறந்த நாட்டினிலே நாடே எரிகையிலே
ஏன்பிறந்தோம் மென்பதுவே இசையாகிக் கேட்குதய்யா
ஊன்சிதைந்து போகையிலே ஏதும்கதியற்றநிலை
வான் எழுந்ததீரமெல்லாம் வற்றிவிடச்செய்யுதய்யா

கேள்வி கேட்க ஈழமண்ணில் கைதூக்கின் யாரெவரும்
ஆழ உறைகானகத்து ஆனவிலங்கென்றுரைப்பார்
சூழுலகும்சேர்ந்துஇவன் செய்தகுற்றம் நூறு என்பர்
பாழும்விதிமாற்றி இவன் பாவிஎன ஆக்கிடுவிடும்

கிட்டவரும்யாரையுமே கொல்லவரும் ஆளோவென்று
விட்டுஓடும் நேரம்இன்று வாழ்வுஅச்சம் ஆனதையா
மாள்வதுதான் நீதியென்று மாஉலகு சொல்வதுபோல்
ஈழம்முற் றழிக்கையிலே என்கவிஒப் பாரிபோன்றோ

அச்சமில்லை அச்சமில்லை உச்சிவானம் வீழ்ந்திடினும்
அச்சமில்லை என்றகவி இச்சமயம் இங்கிருந்தால்
அச்சமில்லை அச்சமில்லை உச்சியிலே வானிடிந்தால்
மிச்சமில்லை ஈழமென்று மற்றோர்கவி கூறிடுவார்

உள்ளத்திலே வீரமது ஒட்டியிருந் தென்னசெய்ய
வெள்ளதிலே நீந்துவது வேகம் பொறுத்த தன்றோ
துள்ளிஆறு நீர்பெருகி தோன்றும் பெருவெள்ளத்திலே
அள்ளிவிழுந்தேறுதிசை ஆற்றடிக்கத் தோணவில்லை

செல்லும்திசை காற்றெதிரில் செல்லமனம் ஆகுதில்லை
அல்லலுற்று கண்டவர்கள் ஆனதோ ரனுபவமாம்
பொல்லாப் பேய்போலுடுத்து பக்கமரமேறிநின்று
செல்லுவழிப் பெண்களின்முன் சட்டென்றுகீழ்குதித்து

கொல்லுகின்ற இற்றையநாள் கொடிதுநடக்குதங்கே
எல்லாமிழதானவர்கள் என்ன செய்ய யாருமில்லை
நல்லதொருபாட்டெழுதி நான்பாடி என்னபயன்
அல்லல்தீரவேறு வழி ஆகவேதும்செய்திடணும்

அன்றுபோல்இன்றுஇல்லை அலைபேசி மின்வலைகள்
இன்னும் ஒளிக்காட்சியென்று எத்தனயோ கூறுவதை
இன்னும் திரைக்காட்சியென்று எங்கும் திரைகாட்டியுமே
சொன்னதவை எத்தனையோ என்கவிதைஎங்குமட்டும்

நான் மறந்துபோகவில்லை நாலைந்து ஏடு உண்டு
தானவைகள் ஒவ்வொன்றும் தாங்குவண்ணம் வேறுவேறு
ஏனோ இதில் ஒன்றுமட்டும் இல்லையென்றுமூடிவைத்தேன்
இன்னும்வேறுஉண்டு இதில் என்னுணர்வு என்றுமுண்டு

kirikasan

unread,
Sep 20, 2011, 2:36:55 AM9/20/11
to சந்தவசந்தம்
பிரியாத வரமொன்று வேண்டும்

மலர்மீ திருந்து மணம்வேறு சென்று
பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீ திருந்து யுயிரான சந்தம்
பிரியாத வரமொன்று வேண்டும்

அலையோடுதழுவி குளிரான தென்றல்
அசைந்தோடி பிரிகின்ற போதும்
கலைமீது கொண்ட எனதாசை என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

இருள் மேகம்கூடி இரவானதாகி
இடியோடு மழைவீழ்ந்த போதும்
அருளோடுதீபம் அணையாது என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

கடுநோயில் வீழ்ந்து கனவாகி வாழ்வும்
கடையென்று விதிசொல்லும்போதும்
தொடுவானும் மண்ணும் திகழ்கின்றதாகி
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

சுனைநீரும் என்றும் செழிவானபூவும்
சுழன்றோடும் மீனோடு வாழ்ந்தும்
வலைபோட மீனின் வாழ்வின்றிப் பூவாய்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

மலர்கின்றகாலை புதிதான வாழ்வை
மனதோடு நினவென்றும் காணும்
வரமீந்து என்னை இதயங்கள் ஏற்கும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

தொலை வானிலுள்ள நிலவான தோர்நாள்
வரவானில் மறந்திட்ட போதும்
கலைவானில்கீதம் காற்றோடுசேரும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

தலைமீது மின்னல் இடியாகித் துன்பம்
ஒருதாகி விழுகின்ற போதும்
உருவாகுமன்பை எதுவந்து மழியா
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்

மலையான தொன்று வழிமீது நின்று
புகும்பாதை தடைசெய்யும் போதும்
உருவாகும் அன்பு அதனூடுசெல்லும்
பிரியாதவரம் ஒன்று வேண்டும்

> > > வெள்ளமெனும் நீரில்மேலே - ஆகா...
>
> read more »

Siva Siva

unread,
Sep 20, 2011, 10:01:01 PM9/20/11
to santhav...@googlegroups.com
1)
/மலர்மீ திருந்து மணம்வேறு சென்று

பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீ திருந்து யுயிரான சந்தம்
பிரியாத வரமொன்று வேண்டும்/

"தனதான தான தனதான தான
தனதான தனதான தான "
என்ற சந்தமோ?

ஓரளவு "துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன்....." பாடலின் சந்தத்தைப் போல் உள்ளது.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=20880&padhi=088&startLimit=1&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

2)
சில இடங்களில் பாடல் எனக்குப் புரியவில்லை.

/ தலைமீது மின்னல் இடியாகித் துன்பம்

ஒருதாகி விழுகின்ற போதும்
உருவாகுமன்பை எதுவந்து மழியா
பிரியாதவரம் ஒன்றுவேண்டும் /


2011/9/20 kirikasan <kanaga...@hotmail.com>

kirikasan

unread,
Sep 22, 2011, 5:54:41 AM9/22/11
to சந்தவசந்தம்
மன்னிக்கவும் சிலசமயங்களில் இல்லாத சொற்களாக மனதுள் வருவதை
எழுதிவிடுகிறேன்
ஒருதாகி என்பது ஒன்றாகி என்பதற்குபதிலாகப்பாவித்துவிட்டேன்

/ தலைமீது மின்னல் இடிபோலத் துன்பம்
ஒன்றாகிப் பலவீழும் போதும்


உருவாகுமன்பை எதுவந்து மழியா
பிரியாதவரம் ஒன்றுவேண்டும் /

இதுவே சரி. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்!

On Sep 21, 3:01 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 1)
> /மலர்மீ திருந்து மணம்வேறு சென்று
> பிரிந்தாலும் தமிழான எந்தன்
> உளமீ திருந்து யுயிரான சந்தம்
> பிரியாத வரமொன்று வேண்டும்/
>
> "தனதான தான தனதான தான
> தனதான தனதான தான "
> என்ற சந்தமோ?
>
> ஓரளவு "துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன்....." பாடலின் சந்தத்தைப் போல்
> உள்ளது.
>

> http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idFie...


>
> 2)
> சில இடங்களில் பாடல் எனக்குப் புரியவில்லை.
>
> / தலைமீது மின்னல் இடியாகித் துன்பம்
> ஒருதாகி விழுகின்ற போதும்
> உருவாகுமன்பை எதுவந்து மழியா
> பிரியாதவரம் ஒன்றுவேண்டும் /
>

> 2011/9/20 kirikasan <kanagaling...@hotmail.com>

kirikasan

unread,
Sep 22, 2011, 6:03:08 AM9/22/11
to சந்தவசந்தம்
நரகத்தில் உழலுவதோ?

தேரேறு என்கிறான் தேவன் - நானுந்
தெரியாத வன்போலத் திரும்பியே நின்றேன்
பூவாரி எறிகிறான் என்னைப் - பார்த்துப்
புன்னகை பூத்துமே கைகொண்டு காட்டி
போயேறு என்கிறான் வானில் - அங்கு
பூத்ததோர் வெள்ளியை புதிதாகக் காட்டி
ஏதேது என்றதைக் கேட்க - ஆகா
இனியுந்தன் வாழ்வங்கு இன்பமேயென்றான்

நீரூறு விழிகளைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
விளையாடி வேடிக்கை செய்தும் சிரித்தான்
நோயுறு தேகமும் நொந்து - இங்கு
நிற்கவும் முடியாது போனதே என்றால்
காயமே பொய்யாடா என்று - கை
காட்டியவ் வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை என்றால்
பாயிலே கிடஎன்று என்னைத் - தள்ளிப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தரணியில் வாழ்வோர்க்கு எதிரியோ, என்றேன்
பேயிலும் இழிவென்ற பிறவி இந்த
பிணம்மீது குருதியில் பேராசை ஏனோ?

நாளிலே மணம்கொண்டு வீசும் - அது
நாற்றம் எடுத்திட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - உடல்
தீயிலே போட்டிடச் சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினை தானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதைநீ மேகம் வந்தால் - அங்கு
தீயாக மாறிநீ திகழலா மென்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமா யறியேன்
கொல்வது என்றுதான் வந்தால் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தேதென்று கொண்டாய்
இல்லைவே றிதுதானே நரகம் - காண்
இதுவே உன்மழலையின் சொல்லான நகரம்

கொள்வது எல்லாமே துன்பம் - வான்
கொட்டிடும் மழையிலே கொடிபோலும் மின்னல்
உள்ளதோர் அளவேயுன் இன்பம் -அதில்
ஊதி யடிக்கின்ற புயல் போலுந் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடேநீவாழும் -இந்த
உலகவாழ் வினிதென்று எண்ணுதல் ஏனோ”

நில் இன்னும் சிறுகாலம் வாழ்வேன் - என்
நெஞ்சினி லாசையும் நிற்குது என்றேன்
”நல்லதென் கூற்றினைக் கேளாய் -பின்
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
அல்லலும் துன்பமும் கொள்ள -உனக்
கத்தனைஆசையா, அற்புதம் மனிதா!
நல்லதோர் புவி செய்ய நீவிர் அதை
நரகமென் றாக்கிந லிந்தின்பங் கண்டீர்

kirikasan

unread,
Sep 22, 2011, 7:37:36 AM9/22/11
to சந்தவசந்தம்
இரண்டு நாட்களாக எழுந்துநடக்க முடியவில்லை. முதுகில்
பிடித்துக்கொண்டுவிட்டது. அதனால் எழுந்த கற்பனை! மேல்தந்த கவிதை

> > > > உருவாகுமன்பை...
>
> read more »

kirikasan

unread,
Sep 23, 2011, 2:40:20 AM9/23/11
to சந்தவசந்தம்
இப்போதெல்லாம் இப்படிகவிதை எழுதமுடிவதில்லை. வயதும் பிணியும் சோர்வு,
இந்த கவிதை உணர்வு இளவயதில் வந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும்!
(நல்லவேளை தொல்லையிலிருந்து தப்பித்தீர்கள்!) இப்போது அரை நூற்றாண்டைக்
கடந்துவிட்டேன் . ஆனாலும் காதல் உணர்வுகள் எப்போதும் பசுமையானவை

காதல் ஏக்கம்

ஆலை கொண்ட வேகும்சூழை
அதன்மே லிரும்பெனவே
வேலை விட்டுப் போகும் வெய்யோன்
வெந்தே சிவந்தபடி
தோலைஉரித்து தொங்கச்செய்த
மேகக் கூட்டமதுள்
காலைவிட்டுக் கடந்தேசென்று
கடலில் வீழ்ந்துருண்டான்

பாடும் பறவை ஒடும் நதியும்
படரும் இனிதென்றல்
கூடும் சுகமும் கொண்டேநின்றாள்
குமுதமென அவளும்
தேடும் சுகமும் திங்கள்வதனம்
தேவை என்றுரைக்க
ஆடும்விழியில் அஞ்சும்மொழிகள்
ஆயிரமா யிசைத்தாள்

சேரும்கண்கள் சொல்லும் உறவில்
செழுநீர்க் கமலமென
சோரும் வதனம் சிதையக்கூந்தல்
திங்கள் மறையுதென
வாரும்முடியை அந்தோ காற்று
வானக்கரு முகிலோ
நேரும்மதியின் மறைவை எண்ணி
நீவிச் சென்றதுவே

மாலைகாற்றில் மனதுக்கினிய
மரகத ரூபவண்ண
சேலைகொண்ட சுந்தரிகொட்டும்
சொல்லின் சுவைகண்டே
வேலையொத்த விழிகள் குத்தும்
வேதனை சுவைபடவே
மேலைத் திசையின் மேகச்செம்மை
மோக எழில் கண்டேன்

தேனை தவறி குங்குமச் சிமிழில்
தெரியா மற்போட்டார்
மீனைசெய்து மேகத் திங்கள்
மீது விழி வைத்தார்
யானைத் திமிரை மேனிக்களித்து
யாரோ தவறு செய்தார்
மானைக் கண்ணில் மருளச் செய்து
மற்றோர் தவறு செய்தார்

சேனைப் படைகள் செய்யும்போரைத்
தேகங் கொள்ள வைத்தார்
வீணை மீட்டவிரலைத் தந்து’
விதியைப் போட்டுவைத்தார்
பானைசெய்யும் பதமாய்மேனி
பார்த்துச் செய்தவனோ
ஏனோ நெஞ்சில் ஏக்கம் வைத்து
எட்டாக் கனிவைத்தான்

மேகப் பஞ்சைப் பிய்த்தேகொண்டு
மின்னல் தொட்டுமுகம்
ஆகச்செய்தார் அதனின்பின்னால்
அதிரும் மழைமுகிலாய்
தோகை கூந்தல்வைத்தே பெரிதாய்
தோன்றும் இடிமின்னல்
நோகத்தான் னென்நெஞ்சில்வைத்தான்
நீதிக் கழகாமோ?

கண்கள்காணின் கல்லுமுருகிக்
கரைந்தே நிலமோடும்
வண்ணம் காண வானும் உருகி
வந்தே நிலம்வீழும்
எண்ணம் யாவும் நிற்பாள் இவளோ
என்னைப் பார்த்துவிடில்
மண்ணில் பிறவிப்பாவம் மறைந்தே
மாதவன(ள)டி சேர்வேன்

> > > > > பிரியாத...
>
> read more »

kirikasan

unread,
Sep 23, 2011, 5:00:38 AM9/23/11
to சந்தவசந்தம்
இதுவும் முன்னர் எழுதிய கவிதை சிறுமாற்றத்தோடு
அழகான உள்ளங்கள்

அழகான சபையொன்று கண்டேன் - அங்கு
அசைந்தாடும் மலர் போலும் இதயங்கள் கண்டேன்
குழலோசை குயில்பாடுங் கீதம் - இளங்
குளிர்மாலைக் காற்றோ டெழுந்திடக் கண்டேன்

கிளிபோற் குரல்கொண்டு நானும் - அங்கு
கீக்கி எனக் கத்தியே கூத்தடித்தாலும்
களிகொண் டுயர்நெஞ்சம் வாழ்த்தும் - யான்
கதைகூறிக் கவியென்று வதைசெய்தபோதும்

சரிபாதி நிகர்தானும் இல்லை -நான்
சரிகமபதநி அறிந்தவன் இல்லை
வரைமீறி கவிசெய்யு மென்னை - அங்கு
வாஎன்று வழிதந்த இவர்கொண்ட மேன்மை

வளைந் தோடுநதி பாதை கொள்ளும் - என்றும்
வளாயா நதிமோதித் துளியாகி வீழும்
களைநீங்கப் பயிரோடி ஓங்கும் - எம்
கலைகொண்ட உளம்தானும் மகிழ்வொன்றே காணும்

சினங்கொண்ட வெயிலோடி வீழும் - மீண்டும்
செந்தமிழ் பொன்மதி வானிலே தோன்றும்
மனங்களில் நாமெறிந்தாடும் - நல்ல
மலர்கொண்ட கணைநெஞ்சில் மணம் தந்துபோகும்

அவைமென்மை யென்றிடக்காணும் -பட்டும்
அதில் நோவு இன்றியே உளமன்பி லாடும்
இவை கொண்ட வலி யாற வேண்டும் - இனி
ஏதுமற் றெண்ணாது கவிசெய்ய வேண்டும்

மகிழ்வாக மனமின்று துள்ளி - ஒரு
மாற்றான அனுபவம் கொள்ளுதேயள்ளி
புகழோடு வழிகாட்டல் சொல்லி - என்னைப்
புடம்போடச் செய்தவர்க் கொருகோடிநன்றி

காற்றோடு மலர்கொண்ட வாசம் - நற்
கனியோடு சுவை கொண்ட காதலும் நீரின்
ஊற்றோடு குளிர் கொண்ட நேசம் - இவை
உளதானவரை நானும்ஓய்வெனக் கொள்ளேன்

ஆர்ப்பரித் தெழுமாழி அலைகள் - ஆக
ஆயிரம் உணர்வுகள் அகம்மீது உண்டு
நீர்த்துளி வீழுதல் போலே - என்
நெஞ்சத்தின் எண்ணங்கள் நிச்சயம்வீழும்

kirikasan

unread,
Sep 24, 2011, 2:04:28 AM9/24/11
to சந்தவசந்தம்
வசந்தம் வீசட்டும்

இந்தமனம் செந்தணலில் வெந்ததுமில்லை துயர்
தந்தஎதைக் கண்டுவிழி சிந்தவுமில்லை
வந்தஒரு துன்பம்பெரி தென்பதுமில்லை -அதைத்
தந்தவிதி வந்துநிலை கொண்டதுமில்லை
சிந்தையிலே அன்புஒளி தந்ததினாலே உடன்
விந்தைமனம் முந்திமகிழ் வெய்திடவாழ்வே
சந்தணமும் வாசமதைத் கொண்டதுபோலே ஒரு
நந்தவன மாய்மலர்ந்தேன் சிந்தையினாலே

மந்தமென வந்துமுகில் நின்றதனாலே இருள்
தந்தநிலை வந்திடுமோ எண்ணியமனதே
பந்தமதை செய்துமரப் பொந்திடைமீதே வைக்க
வெந்ததென சூடெழுமாம் சொன்னது கவியே
கந்தகமும் செந்தணலைக் கண்டதுபோலே மனம்
முந்திஎழ வண்ணவெடி சிந்தியவாறே
சுந்தரமாய் சந்திரவான் கண்டதுதானே அது
தந்ததென்ன சந்தமிடும் செந்தமிழ் பாவே

எந்தநிலை வந்துந்துயர் எந்தனின்மேலே ஒரு
குந்தகமும்செய்வதில்லை இந்தொருநாளே
மந்திரமோ தந்திரமோ சென்றது தானே இனித்
தந்தனனே பாடிடுவோம் மங்கலந்தானே
கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் சொல்லிலென்ன, தந்தையின்காதே ஒரு
மந்திரமும் சொன்னவனை நிந்தைசெய்யேனே என்றும்
செந்தமிழின் காவலனாய் வந்தனம்செய்வேன்

எந்தநினை வின்றிஇனி சந்தமென்றாலே- சுக
சுந்தரவ சந்தமென தந்திடுமன்பே
உந்தி மனம் முந்திநடை கொண்டதினாலே - துயர்
வந்தவழி சென்றதுவே நன்றதுதானே
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு
பந்து சுவர் பட்டதென சென்றதுநன்றே
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே

> > > > நீரூறு விழிகளைக் கொண்டு -...
>
> read more »

Kaviyogi Vedham

unread,
Sep 24, 2011, 2:17:04 AM9/24/11
to santhav...@googlegroups.com
நன்று.. ரசித்தேன் கருத்தை, சந்த அழகை,
யோகியார்

2011/9/23 kirikasan <kanaga...@hotmail.com>
>
> read more »

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

Siva Siva

unread,
Sep 24, 2011, 8:16:11 AM9/24/11
to santhav...@googlegroups.com
பெரும்பாலான சீர்களில் 'தந்ததன' என்ற ஓசை பயின்றுவருவது அழகுற உள்ளது.

சில இடங்களில் புணர்ச்சியால் ஒலி மாறும். (அன்புஒளி).

எந்தன்? என்றன்?

/சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு
 பந்து சுவர் பட்டதென சென்றதுநன்றே /

அழகிய கருத்து.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/9/24 kirikasan <kanaga...@hotmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 24, 2011, 3:20:05 PM9/24/11
to santhav...@googlegroups.com
முற்றிலும் ஒரே எதுகையில் அமைத்தது மட்டுமன்றி, சந்தமும் அதைத் தொடர்ந்த இசை ஒலியும் (”உன்னழகைக் கண்ணிரண்டும் கண்டதனாலே” என்ற திரைப்படப் பாடல் போல) நடையும், கருத்தும் கொணர்ந்தது மிக அழகு. ஓரிரு இடங்களில் சந்தம் பிறழ்தல், ஒற்றுக் குறைவு இருப்பினும் மொத்தமான அழகு பாதிக்கப்படவில்லை.  ”எண்ணியமனதே
பந்தமதை” பந்தம் என்பதற்குக் கட்டு என்று பொருள். கட்டப்பட்ட துணியில் எரிவது  தீப்பந்தம். எண்ணிடுவேன்தீப் பந்தமென என்பது போல அமைக்கலாம். இந்தொருநாளே- இந்த ஒரு நாளே, இன்னொருநாளே?

அனந்த் 
  

2011/9/24 kirikasan <kanaga...@hotmail.com>
>
> read more »

ka thamizhamallan

unread,
Sep 25, 2011, 11:42:28 AM9/25/11
to santhav...@googlegroups.com
வசந்தம் வீசட்டும்
நன்றாகக் குளிர்ச்சியாக வீசியது.சில இடங்கள் திருத்தப்பெற வேண்டும்
முனைவர் க.தமிழமல்லன்

25 செப்டெம்ப்ர், 2011 12:50 am அன்று, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> எழுதியது:

முற்றிலும் ஒரே எதுகையில் அமைத்தது மட்டுமன்றி, சந்தமும் அதைத் தொடர்ந்த இசை ஒலியும் (”உன்னழகைக் கண்ணிரண்டும் கண்டதனாலே” என்ற திரைப்படப் பாடல் போல) நடையும், கருத்தும் கொணர்ந்தது மிக அழகு. ஓரிரு இடங்களில் சந்தம் பிறழ்தல், ஒற்றுக் குறைவு இருப்பினும் மொத்தமான அழகு பாதிக்கப்படவில்லை.  ”எண்ணியமனதே
பந்தமதை” பந்தம் என்பதற்குக் கட்டு என்று பொருள். கட்டப்பட்ட துணியில் எரிவது  தீப்பந்தம். எண்ணிடுவேன்தீப் பந்தமென என்பது போல அமைக்கலாம். இந்தொருநாளே- இந்த ஒரு நாளே, இன்னொருநாளே?

அனந்த் 
  

2011/9/24 kirikasan <kanaga...@hotmail.com>
      வசந்தம் வீசட்டும்
>
> read more »

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

sk natarajan

unread,
Sep 25, 2011, 10:10:10 PM9/25/11
to santhav...@googlegroups.com
அருமை  அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/9/15 kirikasan <kanaga...@hotmail.com>
>
> read more »

kirikasan

unread,
Sep 27, 2011, 2:16:39 AM9/27/11
to சந்தவசந்தம்
என் கவிதையையும் பொருட்டாக மதித்து பாராடியவர்களான கவியோகி வேதம் ஐயா
அவர்களுக்கும்
மற்றும் பெரியோர்கள் Siva siva, Vettai Ananthanarayanan, முனைவர்
க.தமிழமல்லன், சா.கி.நடராஜன்
அனைவருக்கும் மிக்க நன்றிகள்!

கவிதைத் திருத்தங்களை கீழே தருகிறேன்
1.அன்புஒளி
/சிந்தையிலே அன்பொளியைத் தந்ததினாலே உடன்
விந்தைமனம் முந்திமகிழ் வெய்திடவாழ்வே/
என்று மாற்றலாம் என கருதுகிறேன்.

2. எந்தன் க்குப் பதிலாக என்றன் என்பதையும் மனப்பூர்வமாக ஏற்றுக்
கொள்கிறேன்.

3. இந்த மாற்றம் சரியாக இருக்கும் என் நினைக்கிறேன்

/மந்தமென வந்துமுகில் நின்றதனாலே இருள்
தந்தநிலை வந்திடுமோ என்பதனாலே
பொந்தில்எரி பந்தமதை வைத்ததினாலே தீ
வெந்ததெனக் காடெரிந்து கொண்டதுமேனோ


கந்தகமும் செந்தணலைக் கண்டதுபோலே மனம்
முந்திஎழ வண்ணவெடி சிந்தியவாறே

சுந்தரமாய் சந்திரவான் கண்டதினாலே அது
தந்ததென்ன சந்தமிடும் செந்தமிழ் பாவே/


அன்புடன் திருந்தங்கள் செய்யவேண்டிய இடங்களைச்
சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றிகள்!
கிரிகாசன்

On Sep 26, 3:10 am, sk natarajan <sknatarajan...@gmail.com> wrote:
> அருமை  அருமை
>
> என்றும் அன்புடன்
> சா.கி.நடராஜன்.

> கவிதை    :  தமிழ் சுவாசம்http://tamizhswasam.blogspot.com/<http://tamizhswasam.blogspot.com/>
>
> *குழுமம்    :*  தமிழ்
> சிறகுகள்<http://groups.google.com/group/tamizhsiragugal?hl=ta>


>  http://groups.google.com/group/tamizhsiragugal
>
> ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
> அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்
>

> 2011/9/15 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> read more »

kirikasan

unread,
Sep 27, 2011, 3:53:28 AM9/27/11
to சந்தவசந்தம்
காலையில் காணும் கவிதைகள்

தெளிந்தது மனமும் துலங்கிடுவானும்
தென்றல் தொடுஞ் சுனையும்
கழிந்தது இரவும் கரைந்தவை இருளும்
கனவுகளெழுந் துயிலும்
நெளிந்தது ஆறும் நிமிர்ந்தன மரங்கள்
நின்றிடும் நிரையழகும்
அழிந்தது பனிநீர் அதுவென்ன பசும்புல்
அணைசுகங் கசந்ததுவோ

வழிந்தது மதுவும் வாசனை மலர்கள்
விரிந்திடும் இதழ்எழிலும்
பொழிந்ததும் தூறல் போயின முகில்கள்
புரண்டிடும் மலையிடையும்
செழித்தன பெண்கள் சிகையிடை மலர்கள்
செவ்விழி மலர்தாவிப்
பழித்தன இரவின் பலமழி தோள்கள்
பாங்குடை ஆடவரை

செழித்திடும் வாழ்வும் சிரித்திடும் இதயம்
சிவந்திடுங் காலைதனில்
குளித்தன இறைவன் கோவில் மணித்திரு
கொள்மறை சுகராகம்
வழித்தெரு நீளம் வண்ணமென் சிறுவரின்
வளமெடு குறுநடையும்
விழித்திட, அறிவென் விதையிட நடைகொள்
வீறெடு சந்தங்களே

பழுத்திடும் கனிகள் ருசித்திடும் குருவி
பாய்ந்திடு மணிலதுவும்
கழுத்திடு மணிகள் கலகல ஒலியிடும்
கடுநடை ஏறுகளும்
இழுத்திடும் வண்டி இரைந்தன மூச்செழ
ஏய்எனும் குரலொலியும்
எழுந்திடுங் காலை இசையொலி தாளங்கள்
இவைதரும் சுகம்பெரிதே

எழில்தரும் வாழ்வில் எழுபவை யாவும்
இயற்கையின் ஒலிநாதம்
களிகொளும் மனதில் கவிதைகள் தோன்றும்
கருவென உருவாகும்
வெளிதனில் நின்றால் விளைந்திடு தென்றல்
வருடிடும் சுகம்காணும்
ஒழிந்தது துயரம் உயர்ந்திட மனமென,
உளமங்கு புதிதாகும்

*********
கவிதையில் காணும் காலை!

குழிந்திடும் கண்கள் குறைந்திடும் பார்வை
கூனிடும் முதுமைதனும்
அழுந்திடு பிணியும் உழன்றிட வலியும்
அதனுடன் சிலராகும்
விழுந்திடும் குரலும் வீம்பத னழிவும்
வெறுமையின் நினைவோடும்
கழிந்திடும் வாழ்வில் கவிதைகள்தானே
காற்றினை உள்நிறுத்தும்
*********

> > > > என்மதி கெட்டலைந்தேன்...
>
> read more »

kirikasan

unread,
Sep 27, 2011, 3:59:06 AM9/27/11
to சந்தவசந்தம்
மன்னிக்கவும்
தாளங்கள் - தாளம் என ஆக்குகிறேன்

எழுந்திடுங் காலை இசையொடு தாளம்


இவைதரும் சுகம்பெரிதே

கிரிகாசன்

> > > > கொட்டிகிடந்தென்ன மதி...
>
> read more »

துரை.ந.உ

unread,
Sep 27, 2011, 4:38:28 AM9/27/11
to santhav...@googlegroups.com
வாழ்க ஐயா ...
திருக்குறள் விளக்கத்திற்காக தேடி எடுத்த படம் ...இங்கு உங்கள்முன் சமர்பிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன்
22 05.jpg

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு                                     [22:05]

விளக்கக் குறள் :

பேரறிவா ளன்செல்வம்; தாகம் தணிக்கநல்

நீர்தரும் ஊருணியை போன்று


--
என்றும் அன்புடன்  
        துரை .ந.உ
         
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

22 05.jpg

kirikasan

unread,
Sep 27, 2011, 5:21:12 PM9/27/11
to சந்தவசந்தம்
நன்றிகள் துரை.ந.உ அவர்களுக்கு!
தங்கள் அழகிய படமும் பாராட்டுதலையும் மகிழ்வுடன் ஏற்று
பெருமிதமடைகிறேன். மகிழ்ச்சி! நன்றிகள்!


On Sep 27, 9:38 am, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> வாழ்க ஐயா ...
> திருக்குறள் விளக்கத்திற்காக தேடி எடுத்த படம் ...இங்கு உங்கள்முன் சமர்பிப்பது
> மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன்
> [image: 22 05.jpg]
>
> ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
>
> பேரறி வாளன் திரு                                     [22:05]
>

> *விளக்கக் குறள் :***


>
> பேரறிவா ளன்செல்வம்; தாகம் தணிக்கநல்
>
> நீர்தரும் ஊருணியை போன்று
>
> --

> *என்றும் அன்புடன்  *
> *        துரை .ந.உ*
> *
> **கவிதை    *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
> *படம்         *: ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’     :http://marabukkanavukal.blogspot.com/
> *ஹைகூ   *: 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> *பதிவு        *: 'வல்லமை தாராயோ' :http://duraipathivukal.blogspot.com
> *கதை        *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
>  <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral
>
>  22 05.jpg
> 104KViewDownload

kirikasan

unread,
Sep 27, 2011, 6:05:30 PM9/27/11
to சந்தவசந்தம்
இதுவும் எப்போதோ எழுதியது.மீண்டும்பூக்கிறது

உதிர்ந்த பூக்கள்

( இது சோகத்தை கூறும் கவிதை)

1.காலை மலர்கள்

காலை மலர்ந்திடும் பூவை மணந்தொரு
காற்றுஎழுந் தோடிப்போகும்
நீல வானவெளி நீந்துமொளிச்சிறு
தாரகைகள் விடைகூறும்
வேல்விழி மாதரோ வாசலிருந்து கை
கொண்டவளையல்குலுங்க
கோல வண்ணமிட்ட தானஅழகைப்
பொறாமைவிழி கொண்டுநோக்கி

கீழத்திசை அடிவானும் சிவந்திட்ட
ஜால வண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப் போலேதோ
கீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத் திசையினில்
புள்ளியென்றோர் பட்சிக் கூட்டம்
நீலம் சிவந்தது எப்படி என்றுதான்
காணப் பறந்ததைக் கண்டேன்

காரிருள் கட்டியணைக்கப் புவிமகள்
வாழ்விருண்டு போனதென்று
பேரொளி வான்சுடர் பொல்லாச் சினமெடுத்
தேயொளி கொண்டதைத்தேட
வாரியடித் தெழுந்தோடி இருள்வாசல்
மூலைக் கதவடி சந்து
ஆலமரத்தடி சோலை நிழலெங்கும்
நாடி அடைக்கலம்கோர

மெல்லஒளி விரிந்தேகும் பொழுதினில்
உள்ளம் களித்திட நானும்
செல்லுமிடம் அறியாமல் பசும் புல்லில்
சின்ன நடை கொண்டு சென்றேன்
வெள்ளை மலர்களின் கூட்டம் பசுந்தரை
வீழும் பனித்துளி தூங்கி
துள்ளும் கயல்விழி மங்கையின் புன்னகை
போல எழில் தரக்கண்டேன்

மாடுகள் பூட்டிய வண்டி மெல்லஅசைந்
தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக் கிளைசேர்ந்து கொஞ்சிப்பேசிக்
கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம் அணைந்திடும்
காலைக்குளிர் காற்றின் முத்தம்
கூவிடும் சேவலும்பின்னே குரைத்தோடும்
நாயதும்கண்டு நடந்தேன்

ஆகப் புதுமைக ளேதுமற்றஒரு
காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்து மண்மீது அடிபதித்
தோடிநடந் திட்டபோது
மேகம்மறை நிலவாக ஒளிகுன்றிக்
காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்து குவிந்திட்ட
ஏதிலிகள்இல்லம்கண்டேன்

கண்களில் நீருடன்காய்ந்த முகங்களில்
வாழ்வையிழந்த துயரம்
மண்களில் மூடிய உண்மைகளை இன்னும்
சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிடப்
பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப் பூச்சிகாள் வைத்தபெயர்உம
தென்னென்றுகூறுவீ ரென்றேன்

(இன்னும் உண்டு)

Kaviyogi Vedham

unread,
Sep 28, 2011, 2:22:56 AM9/28/11
to santhav...@googlegroups.com
இயற்கை அழகு கொஞ்சுகிறது. வாழ்க,
 யோகியார்

2011/9/28 kirikasan <kanaga...@hotmail.com>

kirikasan

unread,
Sep 28, 2011, 4:39:51 AM9/28/11
to சந்தவசந்தம்
தங்கள் அன்பு வார்த்தைக்கு,வாழ்த்துக்கு தலை வணங்குகிறேன் ஐயா!

On Sep 28, 7:22 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> இயற்கை அழகு கொஞ்சுகிறது. வாழ்க,
>  யோகியார்
>

> 2011/9/28 kirikasan <kanagaling...@hotmail.com>

kirikasan

unread,
Sep 28, 2011, 4:43:18 AM9/28/11
to சந்தவசந்தம்
2..பறித்துப் போட்ட மலர்கள்

குமுதினி என்பெயர் என்றாள் - அங்கே
கோகிலம் என்றாள் ஒருத்தி
தமிழினி கயல்விழி என்றார் - இன்னும்
தேவிஎன்றோர் குரல் பின்னால்
கனிமொழி தேன்மொழி குமரி - என்று
கன்னித்தமிழ்ப்பெயர் கொண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்

பழிதானும் யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகோடி கதையங்கு உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகிய செல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம் நீட்டிக் கொள்ளும்
பழமின்சுவை கொண்டு வந்தேன் - இனி
பண்டமுண்டு உண்ண என்றேன்

குழல்சீவிப் பின்னலுமிட்டு - விழி
கொண்டநீர் முட்டி வழிந்து
அழுத கன்னக்கள் துடைத்து - ஊடே
அங்கொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை - ஓர்
பசியென்ற எண்ணமுமில்லை
வளமான வாழ்வழிந்தோமே - இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்

பேசும் செயலற்று நானும் - அந்தப்
பெண்ணவளின் முகங் கண்டு
வீசும் நிலவொளி குன்றி - இதழ்
விம்மும்நிலை கண்டு வெந்தேன்
பாசமிழந்தவள் நெஞ்சம் - அது
பட்டது எத்தனைதானோ!
நேசமுடன் முகம் பார்த்து - வாழ்வில்
நேர்ந்தது என்னம்மா என்றேன்

பார்வை வெறுமையில் நோக்கி- அந்தப்
பாவையோ இன்னமும் சொன்னாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த - பல
பொன்போல் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - செத்தே
ஆடும் பிணமென்று ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் வேதனை என்றாள்

(இன்னும் உண்டு)

On Sep 28, 7:22 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:

> இயற்கை அழகு கொஞ்சுகிறது. வாழ்க,
>  யோகியார்
>

> 2011/9/28 kirikasan <kanagaling...@hotmail.com>

kirikasan

unread,
Sep 28, 2011, 4:54:09 AM9/28/11
to சந்தவசந்தம்
3. துயரின் கொடுமை...

நீர்த்திரை பாய்ந்து விழிவழிய - சிறு
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீற அமைதியுடன் - அங்கே
வார்த்தை கனல்கொள்ள வாயுரைத்தாள்
பார்த்தவர் போற்றும்நல் வாழ்வுதனும் - ஒரு
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்த மணியாரம் போலிருந்த - எங்கள்
கோபுர வாழ்வு குலைந்த தய்யோ

அன்னைபோன தெங்கு நானறியேன் - வாடும்
அன்புதந்தை சிறைக் கூடறியேன்
பின்னை பிறந்திட்ட தங்கையவள் - எங்கும்
உள்ளனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமுமிங்கே - இன்று
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம் பெரியது இவ்வுலகம் - இந்தப்
பிஞ்சுமனங் காக்க யாருமில்லை

வீதியில் கொல்ல ஒருவன் வந்தால் - அங்கு
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை - அதைக்
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலை நேருமென்று - உண்மை
நெஞ்ச மறிந்தும் பொறுப்பதுவோ
பாதிக் கழுத்தினை வெட்டும்வரை - ஒரு
பாவமில்லை யென்று பேசுவதோ

எத்தனைபேர் ஒன்றாய்கத்தி நின்றோம் - மனம்
ஏங்கிக்கதறி அலறி நின்றோம்
செத்துஅழிந்து சிதறவிட்டு - வெறும்
சிற்பமெனச் சிலையாகி நின்றார்
மொத்தமு மழிந்து போனதய்யோ - அவர்
மௌனம் கொலைத் துணை ஆனதன்றோ
உத்தமரைக் கொடுங்கோலரசு - பல
ஒன்றாயிணைந்து அழித்ததன்றோ

கீறி கழுத்து சிதையவெட்டி - இனம்
கீழேகிடந்து துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று - இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ - ஒரு
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் எழுந்து வந்து - எங்கள்
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ

ஏன் உலகெங்களின் கண்ணீரையும் - பல
ஏழை கதறிய கூக்குரலும்
வானில் கரைந்து அழியவிட்டு - அன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு - புள்ளி
மானு முயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ - புவி
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்

கூறி அழுதிட்டு நின்றவளாம் - அவள்
கோலமதைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள் -சிறு
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒரு நாளிலம்மா- நல்ல
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறித்திடம் மனம் கொள்ளுஇனி -அந்த
தெய்வம் இருக்குது கேட்குமென்றேன்

நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும் - அந்த
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்திலும் நீதி நெறி - அன்பு
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த - முழு
நானிலமும் உள்ளமட்டிலொரு
பூமியல்லஇது வேறு ஒன்று, - கொடும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்

கூறிவிடை பெற்று நான்திரும்பி - கனம்
கொண்ட மனதுடன் வீதிவந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம் - பெரும்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனச் சீறிடும் சாலைவண்டி - பெரும்
பீதியெழும் சுழல்காற்றின் சத்தம்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில் - இவை
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்

(முடிந்தது)

kirikasan

unread,
Sep 30, 2011, 6:03:06 AM9/30/11
to சந்தவசந்தம்
இது கணினியோடு எப்போதும் பொழுதைக் கழிக்கும் கணவனை நொந்து
கணினியை ஒரு பெண்ணாக உருவகித்து காணும் மனைவியின் ஆதங்கம்

மயக்கியவள் யாரோ??

வெண்ணிலவு தேனிறைக்க
வேளை நடுச்சாமத்திலே
கண்ணிரண்டும் தான்கலங்க
காதல் மனம் கொண்டவரே
எண்ணியிவள் உன்னவளாய்
இங்குமனம் வெந்திருக்க
கண்ணியமும் தாழ்ந்தவளைக்
கண்டுமகிழ் வெய்திடலேன்?

பன்னிரண்டு மணிவரையும்
பக்கமவள் தானிருந்து
சின்னவிரல் கொண்டழைந்து
சேருமின்பம் காணுகிறீர்
என்னைமனம் நோகவிட்டு
என்னருமைச் சக்களத்தி
தன்னில் மோகம்கொண்டதென்ன
தனியிருந்து வாடுகிறேன்

திங்களடி உன் வதனம்
தித்திக்கும் கன்னமிது
பொங்குதடி என்இதயம்
பொன்னென்றே யன்றுரைத்தீர்
மங்கிமதி கெட்டுழன்று
மன்னவரே இன்றவளின்
அங்கமெலாம் மின்சாரம்
ஆஹா..கா.. என்கின்றீர்

பேசுவது நானென்றால்
போதுமடி மூடென்று
ஏசிமனம் நோகவைத்தீர்
இன்றவளோ எத்தனைதான்
மாசுபடப் பொய்யுரைக்க
மையலிடும் கதைசொல்லக்
கூசும்மனம் ஏதுமின்றிக்
கோடிமகிழ்வெய்துகிறீர்

என்னபுதிர் கேட்டாலும்,
எடுத்துரைக்க வல்லவளாம்
சொன்னவேலை கச்சிதமாய்
சுறுசுறுப்பாய் ஆற்றிடுவாள்
என்னழகுச் சித்திரமாய்
எழுதுகிறாள் என்றரற்றி
மென்னழகுப் பொருள்ஈந்து
மிகமகிழ்வு கொள்ளுகிறீர்

கல்லெனவே மனதுடையாள்
கண்டதெலாம் சொல்லிடுவாள்
பொல்லாத மாயமிட்டு
பொழுதெல்லாம் அருகிருத்தி
அல்லதொரு சுகமளிப்பாள்
அடுத்தவரின் சேதிசொல்வாள்
உள்ளதொரு ஊர்ப்புதினம்
ஓயாது எடுத் துரைப்பாள்

மின்னும் இதழ் கொண்டுமையே
மோகமுறச் செய்ததென்ன?
இன்னிசைகள் பாடிஉமை
ஏக்கமுற வைத்தனளோ?
சொன்னகதை எத்தனைதான்
சுகமளிக்கும் வித்தையதோ
என்னவகை ஆயிருந்தும்
இதயமில்லா வன்மையலாள்

அன்னமென ஆக்கியுமை
அறுசுவையில் விருந்தளிக்க
சின்னவளால் முடிகிறதோ
செய்வதென்ன நானல்லவோ
சின்னவளைத் தொட்டெவரும்
சில்மிஷங்கள் செய்வரென
கன்னங் கருத்துவிடக்
கட்டிஒரு மந்திரமும்

இட்டுவைத்தும் நீர்வீட்டில்
இல்லாத சமயமெவர்
தொட்டாலும் முகம்மலர்ந்து
சொன்னதெலாம் செய்கின்றாள்
விட்டதொட்ட கதையெல்லாம்
விவரித்துக் கூறுவதை
மட்டும் உமக் குரைத்து விடில்
மனம் வாடிப் போய்விடுவீர்
****************

(மென்னழகுப் பொருள் - மென்பொருள்)
(மின்னும் இதழ் -மின்னிதழ்)

> > > > ( இது சோகத்தை கூறும்- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »

akila ramasami

unread,
Sep 30, 2011, 6:15:12 AM9/30/11
to santhav...@googlegroups.com
மயக்கியவள் யாரோ..
 
அருமை.. அன்றாட அல்லல்களில் இதுவும் ஒன்றாகி விட்டதே..
புலம்பல்கள் அருமை.
அன்புடன்
அகிலா ராமசாமி


 
2011/9/30 kirikasan <kanaga...@hotmail.com>

kirikasan

unread,
Sep 30, 2011, 7:19:52 AM9/30/11
to சந்தவசந்தம்
நன்றிகள் தங்களுக்கு! இதேபோல சில மாதங்களுக்கு முன்னர் எழுதினேன்
அதையும் இதனுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

உள்ளங்கவர் க(ன்/ணி)னி

உன்னை நினைக்கையிலே மனதில்
ஓடிவரும் இன்பம்
என்ன சுகம் சொல்வேன் கணியே
என்மனத் தாரகையே
வண்ண வடிவெடுத்து எந்தன்
வாழ்வில் புதியதொரு
எண்ணம் குழைத்தவளே என்றும்
என்மலர்த் தாமரையே

உன்னைத் தொடும்போது என்றும்
துள்ளி மலர்ந்து நின்று
வண்ணத்திரை முகத்தில் ஒளியை
வந்திடச் செய்குகிறாய்
சொன்னதெலாம் கேட்டு அதனை
செய்து முடிக்கையிலே
உன்னதமாய் மலரும் செய்கை
உள்ளம் கவருதடி

என்னதான் கேட்டாலும் உடனே
சொல்லி விளக்குகிறாய்
உன்அறிவென்பதென்ன என்றும்
ஊற்றெடுக்கும் நதியோ
வண்ணபடம் வரைந்தால் அழகு
வாரிக் கிடக்குதடி
பண்ணிசை பாடு என்றால் இனிமை
என் செவிக்கின்பமடி

கட்டுக்கடங்காத கதைகள்
எத்தனை சொல்லுகிறாய்
சுட்டி பயல்சிறுமி அவர்க்கும்
சித்திர காதை சொல்வாய்
பட்டுமுகம் உனதை முறைகள்
எத்தனை பார்த்தாலும்
விட்டு சலிப்பதில்லை அதுவே
எத்துணை விந்தையடி

நாட்டின் அரசியலை வீதி
நாற்புறமும் நடக்கும்
வீட்டில் தகராறு கொள்ளை
விருந்துசெய்யும்முறைகள்
சாத்திரம் சோதிடங்கள் எல்லாம்
சட்டென்று ஓடிவந்து
ஊரில் அறியமுன்னே சேதி
காதில் பகருகின்றாய்

எத்துணை வித்தகியாய் இருந்தும்
ஒன்றில் மட்டும் எனக்கு
உன்செயல் கண்டதிலே கோபம்
ஓடி வருகுதடி!
சின்னபயல் முதலா எவரும்
கள்ளத்தனம் புரிந்தால்
சொல்லிக்கொடுப்பதற்கு நாணம்
கொஞ்சமுமில்லையடி


On Sep 30, 11:15 am, akila ramasami <akilacsr2...@gmail.com> wrote:
> மயக்கியவள் யாரோ..
>
> அருமை.. அன்றாட அல்லல்களில் இதுவும் ஒன்றாகி விட்டதே..
> புலம்பல்கள் அருமை.
> அன்புடன்
> அகிலா ராமசாமி
>

> 2011/9/30 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> read more »

kirikasan

unread,
Sep 30, 2011, 7:26:56 AM9/30/11
to சந்தவசந்தம்
மேலே உள்ள கவிதை எதுகை, மோனை எதையும் பற்றி கருத்தில் கொள்ளமுதல்
ஆரம்பத்தில்
எழுதியது இரண்டு வருடங்களுக்குமுன். அதனால் பொறுத்தருள்க!
அன்புடன்கிரிகாசன்

> > > > கோபுர வாழ்வு குலைந்த தய்யோ...
>
> read more »

Dr Subramanian

unread,
Sep 30, 2011, 7:34:32 AM9/30/11
to santhav...@googlegroups.com
 "இனி
> > அழவேண்டும் அதுபோதும் என்றாள்" என்று "பறித்துப் போட்ட மலர்கள்" பேசியதைக் கேட்க நெஞ்சம் நெகிழ்ந்தது.

வவேசு
2011/9/30 kirikasan <kanaga...@hotmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470

kirikasan

unread,
Sep 30, 2011, 8:00:45 AM9/30/11
to சந்தவசந்தம்
நன்றி ஐயா , இதுவே என் கவிதைக்கு கிடைத்த வெகுமதி. மிக்க நன்றி!

On Sep 30, 12:34 pm, Dr Subramanian <vav...@gmail.com> wrote:
>  "இனி> > அழவேண்டும் அதுபோதும் என்றாள்" என்று "பறித்துப் போட்ட மலர்கள்" பேசியதைக்
>
> கேட்க நெஞ்சம் நெகிழ்ந்தது.
> வவேசு

> 2011/9/30 kirikasan <kanagaling...@hotmail.com>

> > > கோலமதைக் கண்டு...
>
> read more »

akila ramasami

unread,
Sep 30, 2011, 12:10:16 PM9/30/11
to santhav...@googlegroups.com
சின்னபயல் முதலா எவரும்
கள்ளத்தனம் புரிந்தால்
சொல்லிக்கொடுப்பதற்கு நாணம்
கொஞ்சமுமில்லையடி

 

உண்மையான வரிகள் ...
 
 
அன்புடன்
அகிலா ராமசாமி
 


2011/9/30 kirikasan <kanagalingamm@hotmail.com>
> ...
>
> read more »

kirikasan

unread,
Oct 2, 2011, 11:00:36 AM10/2/11
to சந்தவசந்தம்
இது சக்தியை வழிபடும் காலம்

சக்தியே, சஞ்சலம் தீர்!

உலவும் காற்றும் உயிரும் கொண்ட உறவைத் தந்தவளே
நிலவும் உள்ளத் துயரைப் போக்கி நிம்மதி தாராயோ
பலதும் மனதில் கொடியாய் தோன்றிப் படரச் செய்பவளே
பாசம் படரும் மனதில் என்றும் பசுமை தாராயோ

வளமும் வாழ்வும் மனிதன் கொண்டே வளர செய்பவளே
வந்தேன் உன்னை வணங்கிக் கேட்டேன் வசந்தம் தாராயோ
குலவும் இன்பம் கொண்டோம் இன்று குறைவே எனவாக
கொள்ளும் காற்றும் பகையென் றாகிக் கண்ணீர் சொரியுதடி

தினமும் எண்ணம் கருகித் துன்பம் தெரியும் வாழ்வென்றே
தேனில் விழுந்த தீயோர் நஞ்சாய் தேகம் குலையுதடி
மனமும் கோணி மகிழ்வும் நாணி மாற்றம் வேண்டியொரு
மழையைத் தேடும் கழனிப் பயிராய் மறுகிக் கிடப்பேனோ

உலகின் சக்தி உயிரின் சக்தி ஓளியின் சக்தியெனும்
உள்ளத் திண்மை உள்ளே தருவாய் உள்ளம் இரங்காயோ
பலதும் பாடிக் கவியென் றாக்கும் பண்பைத் தந்தவளே
பாரில் இன்னும் பலநூ றெண்ணும் பலமும் தாராயோ

நோயும் பிணியும் நிற்கா தெந்தன் நினைவில் மகிழ்வோங்கி
நீயும் சக்தி நிறைவைத் தந்து நெஞ்சில் கவியோங்கி
பாயும் நதியாய் பொங்கும் வெள்ளப் பாங்காய் பலநூறு
பாவும் புனையக் காதில் வந்து பாடிச் செல்லாயோ


**
சக்தியின் சக்தி!
(சிறுவரோடு ஆடுதல்)

சக்தி கொண்டு நீயெழுந்து சுற்றிஆடடா - அந்தச்
சக்தி அன்பு தெய்வம் உந்தன் வெற்றியாமடா
சக்தி பூமி பெற்ற துந்தன் அன்னைதானடா - அந்த
சக்தி சத்தி யத்தின் அன்பு தேவியாமடா

சக்தி யின்றி நாம் நடந்து செல்லலாகுமா - அந்தச்
சக்தி போயின் செத்ததென்று ஆகுமேயடா
சக்தி பெண்ணில் உள்ளதென்று கைகள் கூப்படா-அந்தச்
சக்தி பூமி வருவதில்லை பெண்கள்தானடா

சக்தி உந்தன் அன்னைகூட பெண்ணேதானடா - அவள்
சக்தி யாரும் சொல்லிநீயும் தெரிவதாமோடா
சக்தி ஒன்று தார மானல் துச்சமாகுமா - அந்தச்
சக்தி மீண்டும் தாயென்றாகும் நெஞ்சில் வையாடா

****

On Sep 30, 5:10 pm, akila ramasami <akilacsr2...@gmail.com> wrote:
> சின்னபயல் முதலா எவரும்
> கள்ளத்தனம் புரிந்தால்
> சொல்லிக்கொடுப்பதற்கு நாணம்
> கொஞ்சமுமில்லையடி
>
> உண்மையான வரிகள் ...
>
> அன்புடன்
> அகிலா ராமசாமி
>

> 2011/9/30 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> read more »

akila ramasami

unread,
Oct 3, 2011, 1:58:19 AM10/3/11
to santhav...@googlegroups.com

சக்தியை போற்றும் சஞ்சலம் தீர்க்கும் அருமையான கவிதை
அகிலா ராமசாமி

 
2011/10/2 kirikasan <kanaga...@hotmail.com>
> ...
>
> read more »

kirikasan

unread,
Oct 8, 2011, 6:28:58 AM10/8/11
to சந்தவசந்தம்

பட்டமரம்

பட்டமரம் அழுகிறது அட்டமியின் ஒளிநிலவு
...விட்டமழைத் தூறலடி தங்கமே தங்கம் - இது
..... விதிஎழுதும் ஒருகவிதை தங்கமே தங்கம்
கட்டைவிரல் எழுகிறது தொட்டெடுக்க விழைகிறது
...ஒற்றைவிரல் பற்றிடுமோ தங்கமே தங்கம் - நல்
.....ஓசைஒரு கையசைவில் உள்ளதோ தங்கம்
திட்டுமணல் மேடைதனில் சின்னவிதை காய்கிறது
...கொட்டி வெயில் எறிக்கையிலே தங்கமே தங்கம் - அதில்
..... குருத்தெழுமோ வெடித்துமுகை கொள்ளுமோ தங்கம்
தட்டிநிலம் நடைபழகும் தளர்வுகொண்ட காலிரண்டும்
... முட்டியெழும் அலைகடலில் தங்கமே தங்கம் - அவை
.....மூழ்கிடாது மேல்நடந்து செல்லுமோ தங்கம்


நட்டநடு வீதியிலே நாலுபேர்கள் முன்னிலையில்
...சத்தியமும் பட்டபாடு தங்கமே தங்கம் - அது
.....நித்தியமோ நின்றிடுமோ தங்கமே தங்கம்
தொட்டவரும் வெட்டவரும் தீயவரால் துன்பமதைப்
...பட்டவரும் கொண்டவலி கொஞ்சமோ தங்கம் - அப்
..... பட்டுமலர் கொட்டி ரத்தம் பார்த்தையோ தங்கம்
எட்டவரும் கட்டைதனை ஏறிஉயிர் காக்கவென
... முட்டவழிந்தோடும் ஆற்றில் தங்கமே தங்கம் - நீர்
..... மூழ்கமுதல் எண்ணியவன் தங்கமே தங்கம்
கிட்டவரக் கட்டையல்ல கொத்தும் பெரும் அரவமெனில்
...எப்படிநீ தப்பிடுவாய் தங்கமே தங்கம் - இந்த
......ஏழைவாழ்வு மப்படியே தங்கமே தங்கம்

சுட்டுநிலா எரிவதில்லை தோன்றும் வெயில் கறுப்புமில்லை
... குட்டிடவும் குனிந்தொருவன் நிற்பதேயில்லை -அந்தக்
..... குணமறிந்து நீயும் எழு தங்கமே தங்கம்
முட்டையிலே குதிரைவரும், முந்திரியில் பொன்விளையும்
...குட்டியானை பறந்துபோகும் என்றவர் தங்கம் - இப்போ
..... கூரையிலே கோழிகொள்ளப் படுவதோ துன்பம்
கட்டிச்சிறை யிடநினைந்து கையிலொரு விலங்கு கொண்டு
... எத்தனைதான் ஓடினாலும்தங்கமே தங்கம் - பொய்
..... இட்டுக் கட்டும்வித்தை கற்றோன் ஏய்க்கிறான் தங்கம்
தட்டிவாசல் கூட்டிவைத்து தண்ணிதெளித் தூபமிடு
... முத்துஒளித் தீபமொன்று ஏறுமாம் தங்கம் - இனி
..... முன்னெழுந்து விடியல் வரும் தங்கமே தங்கம்

On Sep 30, 5:10 pm, akila ramasami <akilacsr2...@gmail.com> wrote:

> சின்னபயல் முதலா எவரும்
> கள்ளத்தனம் புரிந்தால்
> சொல்லிக்கொடுப்பதற்கு நாணம்
> கொஞ்சமுமில்லையடி
>
> உண்மையான வரிகள் ...
>
> அன்புடன்
> அகிலா ராமசாமி
>

> 2011/9/30 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> read more »

Siva Siva

unread,
Oct 8, 2011, 8:47:47 AM10/8/11
to santhav...@googlegroups.com


2011/10/8 kirikasan <kanaga...@hotmail.com>


        பட்டமரம்

பட்டமரம் அழுகிறது அட்டமியின் ஒளிநிலவு
...விட்டமழைத் தூறலடி தங்கமே தங்கம் - இது
..... விதிஎழுதும் ஒருகவிதை தங்கமே தங்கம்
கட்டைவிரல் எழுகிறது தொட்டெடுக்க விழைகிறது
...ஒற்றைவிரல் பற்றிடுமோ தங்கமே தங்கம் - நல்
.....ஓசைஒரு கையசைவில் உள்ளதோ தங்கம்
திட்டுமணல் மேடைதனில் சின்னவிதை காய்கிறது
...கொட்டி வெயில் எறிக்கையிலே தங்கமே தங்கம் - அதில்
..... குருத்தெழுமோ வெடித்துமுகை கொள்ளுமோ தங்கம்
தட்டிநிலம் நடைபழகும் தளர்வுகொண்ட காலிரண்டும்
... முட்டியெழும் அலைகடலில் தங்கமே தங்கம் - அவை
.....மூழ்கிடாது மேல்நடந்து செல்லுமோ தங்கம்


பாடல்களில் பொதுவாகப் பௌர்ணமியோ பிறைச்சந்திரனோ வருவதுண்டு. அஷ்டமி நிலாவும் விசேஷமா?
 

Pas Pasupathy

unread,
Oct 8, 2011, 9:12:54 AM10/8/11
to santhav...@googlegroups.com
ஆம். அஷ்டமி நிலா சங்க நூல்களில் வரும்.
 
பார்க்கவும்.
2011/10/8 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

kirikasan

unread,
Oct 8, 2011, 9:20:42 AM10/8/11
to சந்தவசந்தம்
அமாவாசை நிலவானேன் என்பதாக,
அழிந்துபோனேன்(ம்) என்பதை அட்டமியிலும் விரும்பத்தகாத அழியும் நிலவானேன்
எனப் பொருள்தர எழுததோன்றியது.
அதிகம் தெரிந்தவனல்ல.அதில் தவறுண்டானால் கூறுங்கள். திருத்ட்திக்
கொள்வேன்
அன்புடன்
கிரிகாசன்

On Oct 8, 1:47 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/10/8 kirikasan <kanagaling...@hotmail.com>

Siva Siva

unread,
Oct 8, 2011, 9:21:44 AM10/8/11
to santhav...@googlegroups.com
Thanks.

2011/10/8 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

kirikasan

unread,
Oct 8, 2011, 9:22:02 AM10/8/11
to சந்தவசந்தம்
நல்லது
தங்கள் பதிலை பார்க்கமுதல் முன்னைய ஊட்டம் இட்டுவிட்டேன் மன்னிக்கவும்!


On Oct 8, 2:12 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> ஆம். அஷ்டமி நிலா சங்க நூல்களில் வரும்.
>

> http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=6090409...


> பார்க்கவும்.

> 2011/10/8 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> >  2011/10/8 kirikasan <kanagaling...@hotmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Oct 8, 2011, 9:43:07 AM10/8/11
to santhav...@googlegroups.com
சந்திரனின் எட்டாம் பிறையின் எழிலானது பெண்ணின் நெற்றிக்கு உவமையாகக்  குறுந்தொகைப் பாடல்களில் ஒன்று இப்படிக் குறிப்பிடுகிறது:

"மாக்கடல் நடுவண் என்னாள் பக்கத்துப்
பகுவெண் திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்"

சிலப்பதிகாரத்தில், கோவலன் கண்ணகியின் எழிலைப் பாராட்டும்போது "குழவித் திங்கள்" என்று சொல்வதற்குப் பொருள் சொல்லும்போது  எட்டாம் நாள் நிலவு என்று  சொல்வர்.


சிவ.சூரி

2011/10/8 kirikasan <kanaga...@hotmail.com>

kirikasan

unread,
Oct 8, 2011, 11:28:35 AM10/8/11
to சந்தவசந்தம்
அப்படியென்றால் நல்லதாகப் போயிற்று. நான் துரதிஸ்டத்தை நினத்துப்பாடியது
அதிஷ்டமாகிவிட்டது.
இன்னொமொரு பந்தி எழுதினேன். இங்கு போடமல் விட்டுவிட்டேன்
அதில்

பட்டமரம் பூக்குமடி பௌர்ணமியும் தோன்றுமடி
... விட்ட மழை மீண்டும்வரக் காணுவோம் தங்கம் - இனி
.......விடியலெண்ணி பாய் சுருட்டி போடடி தங்கம்
....................................................
....................................................

என்றுபோகும்.
நன்றிகள்!

On Oct 8, 2:43 pm, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:


> சந்திரனின் எட்டாம் பிறையின் எழிலானது பெண்ணின் நெற்றிக்கு உவமையாகக்
> குறுந்தொகைப் பாடல்களில் ஒன்று இப்படிக் குறிப்பிடுகிறது:
>
> "மாக்கடல் நடுவண் என்னாள் பக்கத்துப்
> பகுவெண் திங்கள் தோன்றியாங்குக்
> கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்"
>
> சிலப்பதிகாரத்தில், கோவலன் கண்ணகியின் எழிலைப் பாராட்டும்போது "குழவித்
> திங்கள்" என்று சொல்வதற்குப் பொருள் சொல்லும்போது  எட்டாம் நாள் நிலவு என்று
> சொல்வர்.
>
> சிவ.சூரி
>

> 2011/10/8 kirikasan <kanagaling...@hotmail.com>

kirikasan

unread,
Oct 8, 2011, 3:14:25 PM10/8/11
to சந்தவசந்தம்
பட்டமரம் என்னும் கவிதை ஈழக்குடிமகனாக அங்குபடும் அவஸ்தையை
பற்றி எழுதப்பட்டது. இதன் இறுதிபந்தியில் சில வரிகள் கடுமையாக
ஒருகட்சிசார்ந்து
என்னையறியாமலே எழுதிவிட்டதால் அது தகுந்தல்ல என நீக்கிவிட்டேன்.

அன்புடன்
கிரிகாசன்

kirikasan

unread,
Oct 14, 2011, 10:05:15 AM10/14/11
to சந்தவசந்தம்

வரம் தராத வசந்தங்கள் (பிரிவின் பின்னால்)


நெய்யூறும் விழிகொண்டு நெஞ்சக் கருமைதனில்
பொய்யூறும் பேச்சாலே புதுவண்ண ஒளியேற்றி
ஓய்யாரம் கொள்ளுமுன் ஒடிந்தஇடை நளினம்
தெய்யென்று ஆடத்தான் தேவி மயக்கினையே

தேகம் அழைந்துகுளிர் தென்றல்வரும் பொய்கையிலே
ஏகம் நனைந்துடலை ஏற்றமிட மஞ்சள் வெயில்
தாகம் கொடுத்துமனம் தான் மறக்கச்செய்தவளே
மோகம் எடுக்கவைத்த முழுநிலவே எங்குசென்றாய்

பாவி எனைவிடுத்துப் பகல்நிலவாய் ஆனதென்ன
நீவி மனம்கிளர்ந்து நெஞ்சுரைத்த மெய்மாறி
தேவி நீசென்றதெங்கே தென்றல்தனும் அறியாதோ
கூவிவிழித் துன்னைக் கூப்பிடவும் கேளாதோ

வற்றும் குளத்தின் ஒரு வண்ணமலர் போலிருந்து
குற்றுயிரில் வாடுதெனக் கோகிலமே வாடுகின்றேன்
இற்றைவரை நீயும் எழுந்தருள வில்லையடீ
சற்றும் இரங்கிவரம் தாராத வசந்தம் நீ!

உனையிழந்த வாழ்வில் உடல்நீவும் தென்றலதும்
சுனை யெழுந்த நீரலையும் செவ்வான இளங் கதிரும்
தனை இழந்த பூவுமதிற் தாவும் சிறுவண்டினமும்
புனை கவியும் யாவுமொரு புண்ணாக நோகுதடீ

சொட்டும் மகிழ்வில்லை சூழ்நிறைசேர் இன்பங்கள்
கொட்டும் நச்சரவக் கொடுமையெனக் தோன்றுதடீ
வட்டவிழிக் கண்ணே வானமதில் ஏறியிவன்
கிட்டஅடி வைத்துன்னை கட்டிவிடத் தோன்றுதடீ

பூவைப் பார்த்தழுதேன் புதுமலரைத் தாவென்றேன்
தாவும் காற்றிடமும் தலைமகளின் இடங்கேட்டேன்
பாவை மறைந்த இடம் பார்த்தவர்யார் எனக்கேட்டு
சாவை பிரித்த நிலம் தனில்வீழ்ந்து அழுதெழுதேன்

வந்திடெனக் கேட்டென்ன வரவில்லை யென்னுயிரே
எந்தநா ளிளகி மனம் எழுந்தருளி என்குடிசை
வந்திடுவாய்? எண்ணிஉயிர் வாழுமுடல் தான் நீங்கி
வெந்திடவும் செய்வாயோ வரம் தாரா வசந்தமே

வாழ்வில்நீ யில்லாத வசந்தங்கள் உண்டோடி?
பாழுந்துயர் வாழ்வில் பார்த்தநிலை போதுமடி
மீளும் நினவுகளில் மீண்டும் உனைகேட்டும்
வாழும் உலகெனக்கு வரம் தராத வசந்தங்களே

> > > > இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:- Hide quoted text -

kirikasan

unread,
Oct 14, 2011, 10:42:28 AM10/14/11
to சந்தவசந்தம்

என்ன செய்வேன்?

மெல்லிய புன்னகை மேவி இதழ்களில் சென்றது பூமலரில்
மல்லிகை முல்லையும் மங்கலபூக்கள் மலர்ந்தன என்னருகில்
துல்லியமாய்க் குளிர் நீரும்கிடந்தது தோட்டத்து நீர்க்குளத்தில்
கல்லைஎடுத்து எறிந்திடுமோ இந்தக் கைகளும் இந்நிலையில்?

வெள்ளிடைமேகம் விரிந்து பரந்தது வானக்கருங் குளத்தில்
தெள்ளென வானில் நிலவு எறித்தது தேனொளிதான் புவியில்
துள்ளி இசைகொண்டு ஆடினள்தேவியும் தோன்றி எனதருகில்
அள்ளி அழகைப் பருகுவதோ யன்றி ஆத்திரம் கொள்ளுவதோ?

சின்னக் குழந்தைகள் கூடிநின்றே சில செய்தன சில்மிசங்கள்
என்னவென்று சொல்ல என்னைப்பிடித்து இழுத்தன ஈர்கரங்கள்
முன்னே யிருந்துமே துள்ளி என் தோள்களில் தொங்கின பூங்கிளிகள்
பின்னிய கைகளை மெல்லத் திறப்பனோ பேசிஅடித்திடவோ?

காதலர் சேர்ந்து களித்தனர் அச்சமே காணவில்லை மனதில்
ஆதவன் மேலைக் கடல்மறை வேளையில் ஆசையுடன் கரையில்
மாதவள் வெட்கியே என்னயல் கண்டனள் மாறிடவே உணர்வில்
ஏதுநான் பின்னு மயல்நிற்கவோ இல்லை ஏகிவிட்டேன் தொலைவில்

ஆலயம் நோக்கி அசைந்தனர் அங்கங்கு ஆடவரும் மகளிர்
கோலமணி யொலித்தாடின அந்தணர் கூறும் இசையிடையில்
பாலில்குளித்து அக்கோவிற் சிலைதனும் பூசைபெறும் நிலையில்
நாலைந்து பூக்களை நானுமிடுவனோ? நாத்திகம் பேசுவதோ

> > > > > > >> .....நித்தியமோ நின்றிடுமோ தங்கமே- Hide quoted text -

kirikasan

unread,
Oct 17, 2011, 4:22:24 AM10/17/11
to சந்தவசந்தம்
வாழ வழி என்ன?

பாட்டெதற்குப் பாடியே பரமனவர் பட்டதனை
பாவிநான் மறக்கலாமோ
போட்டுடைத்து ஆடிப்பெரும் பூமியில் புயலடிக்க
பூமலர்கள் தூவலாமோ
ஏ(ட்)டெதற்கு என்றெழுதி இதயம் கனத்துவிட
இன்னுமே எழுதலாமோ
நீட்டியொரு பாய்விரித்து நிமிர்ந்து படுத்துமனம்
நிம்மதியைக் காணுமாமோ

நாடெதற்கு நல்லவர்கள் அல்லோர் அரசுகொள்ள
நானெதற்கு என்னலாமோ
வீடெதற்கு என்றவனோ விறகாய் கொழுத்திவிட
விட்டுமோடிச் செல்லலாமோ
ஆடவரக் காலுடைத்து அழகு எனச்சொல்பவரை
ஆளும் திறன் என்னலாமோ
வேடமிட்டு சூழ்ந்துவந்து வேதனை விளைப்பவனை
வேடிக்கையென் றெண்ணலாமோ


தோலுரித்து வெயிலில் துடிக்க விரிப்பவனைத்
தோழனென்று கொள்ளலாமோ
நாலுபேரைத் தூக்கவிட்டு நடுவில் படுக்கவைக்க
நாமும்சரி என்னலாமோ
வாலிருக்க தீயைவைத்து வந்திருந்த தூதனையும்
வேடிக்கை புரிந்ததாரோ
காலிருக்க ஒடியவன் கனத்த அனல்எரித்துக்
கண்டநிலம் தீயுதாமோ

வேலிருக்க என்னபயம் வென்றுவிடு என்றவனும்
வீதியிலே நிற்கலாமோ
கோலிருக்கு ஆளுங்குடை கொண்டிருக்கு என்றவுடன்
கோவிலும் பறிக்கலாமோ
ஆலிருக்கு தோர்அரச மரமிருக்கு என்றவுடன்
அந்த இடம் சொந்தாமாமோ
வேலிருக்கு வேம்புடனே விளைந்த நிலமிருக்க
வீற்றிருக்க வந்ததேனோ

கூழிருக்கு சோறுகஞ்சி குடித்துப் படுத்தமண்ணை
கூலிபெற்று விற்கலாமோ
தோழிருக்கு உள்ளம் இன்னும் துடித்து உணர்விருக்க
தூங்கவென்று செல்லலாமோ
ஆளிருத்தி வாழ்வழித்து அவலமிடப் பொறுக்க
ஆக இன்னும் ஏழையாமோ
நாளிருக்கு நமக்கில்லை நாமிருப்ப தூரமென
நாஒறுக்க ஊமையாமோ

ஏழிருக்கு ஏழரையில் ஏறியேசனியிருக்க
எல்லாம்விதி என்பதாமோ
ஊழிருக்கு செய்தவினை உற்றழியகாலமிது
ஒன்றும்பயன் இல்லையென்பதோ
நூலுடன் சிலந்திவலை நாலுதரம் வீழ்ந்தெழுந்து
நெய்தகதை நீபடித்தையோ
போலிருக்கு பூமிதனில் புன்மைதரும்வாழ்வு நீயும்
போயெழுந்து வாழ்வு கொள்வையோ!

> > > > > திங்கள்" என்று...
>
> read more »

kirikasan

unread,
Oct 18, 2011, 2:02:28 PM10/18/11
to சந்தவசந்தம்
பெரியவர்கள் மத்தியில இப்படி ஒரு பிதற்றல் கவியை வைக்கிறேன். ஏதோ
தோன்றியது
எழுதிவிட்டேன்.. தவறுகள் இருப்பின் கூறுங்கள்!


ஒளியைத்தேடி (ஞானம் என்னும்)

ஞானம் மனம்தேடும் ஒளிதானும் விழிகாணும்வரை
நானும் அலைந்தேனே தினமும்
தானம் தருமங்கள் இவைதானு முதவாதே பிர
தானம் ஒருசேரும் மனமே
வான மதில்நீந்தும் விரிவாழ்வும் இருளாகும் உயிர்
தானும் உனைநீங்கும் பொழுதே
மோனம் கதியாகும் அம்மோட்சம்முடிவாகும் ஒளி
காணும் மனம் ஒன்றாகிடவே

கானம்எழும் சோலைதனில் காணும்கிளிதானும் கனி
தேடும், மனந்தானும் அதுபோல்
கூனும் குழிகொள்ளுமிரு கண்ணும் நரைதன்னுமொரு
கோலம் என ஆகும் முதலே
வானம்அதில் ஞானமெனும் தீபம்தனை நாடும் அதை
வாழ்வில் பெறஆசை கொளவே
தேனும் இனிதாகும் உயிர்தேடும் ஒளிவெள்ளம் அது
தேகம் நிலைகொளும் வரையே

விடியு ஒருகாலை விரிவானில் பகலோனும்
வெளிகாணும் வகையாகி யெழவே
நொடியில் ஒருசிதறல் என்நினைவில் ஒருபொறியாயது
நிகழப் பெருமாற்றம் கண்டேன்
வெடிகொள் எரிமலையும் அதுவிளையும் பெருந்தீயானது
வெள்ளம் என உள்ளே எரிய
கடிதும் பெரிதுலகம் அதை காணா தனை விட்டேபெருங்
கதிரோன் ஒளிவேண்டித் திரிதேன்

காணும் சுழல்ஞாலம் அது தேடும் ஒளிதானும்
அதனூடே பெருந்தீயாய் எரிதே
வீணும் வெளிதேடிக் குணம்மாறிப் பிணமாகும்வரை
வீழ்ந்தே நாமெழுவோம் இதுபோல்
காணும் மனம்தானும் ஒளிகண்டே யதிற்கூட,வெறுங்
காயம் ஒரு துன்பம்படினும்
பேணும் உயர்ஆன்மா எனும் பேராமொளிதன்னில் பெறும்
ஞானம் நமைக் காக்கும் பெரிதே!
*****

> > > வட்டவிழிக் கண்ணே வானமதில்...
>
> read more »

kirikasan

unread,
Oct 18, 2011, 7:51:38 PM10/18/11
to சந்தவசந்தம்
மீண்டும் ஒரு நீண்டகவிதை 4 பகுதியாக வரும்
தவறுகளிருப்பின் திருத்திக் கொள்வேன்

நீதி கேட்ட தேவதை

1. வந்தது வினை

கண்கள் சிவந்திட நெஞ்சம் கனந்திட
காண்பது யார்இவளோ?
பெண்ணின் குணமிழிந் தென்னைக் சினந்திடும்
பேதையின் பேரெதுவோ ?
வண்ண முகம்பெருந் தீயெழுந் தாடிட
வந்தவள் யார்மகளோ?
எண்ண மெடுத்தவள் என்ன நினைத்தனள்
எப்படிச் சொல்லுவளோ?

மின்ன லெனவந்து நின்றவளே யுந்தன்
மென்முகம் வாடுவதேன்?
நன்னரும் மேனி நலங்கெடக் கோபமுன்
நெஞ்சி லெழுந்ததுமேன்?
பொன்னெனும் காலையில் பூவதனமதின்
புத்தொளி குன்றியதாய்
என்னநடந்தது இத்தரையில் இவள்
என்னிடம் வந்துமேன்

”பன்னுரும் சேனை படைகொண்டு வீரம்
பகை வென்ற தால்மனதில்
என்னரும் வாழ்வு இழிந்திடச் செய்திடல்
எவ்வகை நீதியாமோ?
பொன்னெனகூறிப் பின் தீயிலிட்டுக் கண்டு
புன்னகை செய்வதுதான்
மன்னவராம் நீவிர் மாதரிடம் கண்ட
மாபெரும் இன்பமதோ?”

அன்னவள் பேச்சில றிந்திட ஆ இவள்
அந்தியில் தாமரைகள்
பன்னள வென்று செறிந்த பளிங்கென்னும்
பொய்கையில் நீந்தியவள்
முன்ன ரெழுந்தவெஞ் சூரியன் மாலையில்
மேற்கில் சினமெழுந்து
தன்னிலை கெட்டுத் தணல்கொதித் தேகடல்
தண்ணீரில் வீழுகையில்

மென்தளிர் மேனியில் தொட்ட களிப்பினில்
துள்ளிடும் நீரலைகள்
வந்து கரைதனில் மண்ணி லுருண்டு
விரைந்து புரண்டுசெல்ல
விந்தை பொலிந்திட வானக் குளத்திலோர்
வெண்மதி நீந்துவதாய்
இந்த மகளிள மான்குளிர்ப் பொய்கையில்
இன்பநீராடக் கண்டேன்

கண்கள் மறந்துமே சிந்தை யிளந்தவள்
காரிகை யின்எழிலில்
அண்ணள வாயொரு கண்ணிமை நேர
மயர்ந்தது நிச்சயமே
”எண்ணியொரு தவறேது மிழைத்திலேன்
என்னவென்றே பகர்வாய்
கண்ணியம் கொண்டு கணமிடம் நீங்கிய
காட்சி தெரிந்திலையோ”

”புன்னகை கொண்டுநின் பேச்சில் மயங்கிடப்
பேதை யல்லயிவளோ
கன்னம் பிடித்திவள் கன்னியின் பொன்முகம்
கைவிரல் தொட்டதுவும்
இன்னும் அடம்பிடித் தாவல் கொண்டேயிவள்
ஆசையில் கொஞ்சியதும்
பொன்னில் வளர்ந்தவ ளென்று பசற்றிய
பொய்யும் மறந்ததென்ன?

கன்னியிவள் மனம் களங்கமாகிடக்
காரண மானவரே
என்னவென் றேயொரு நீதிசொல் லச்சபை
முன்னேயெ ழுந்தருளும்
பின்னையி ராப்பக லோடு கலந்திடும்
போதில் அரசமரத்
திண்ணையடி வந்து சேரு”மெனச் சொல்லித்
தென்றலென நடந்தாள்

அன்ன நடைஅசைந் தாடுமிடை எழில்
வண்ண மயிலெனவே
எண்ணமது சிதைந்தோட அவள்நடை
கண்டுமன மிழந்தேன்
வண்ணங் குழைத்த நல்மாலைவரஅவள்
வஞ்சியின் சொல்லினுக்கே
திண்ண மெடுத்திவள் செய்வதுமோச மென்
றுண்மை பகரச்சென்றேன்


(வளரும்)

> > > மாதவள் வெட்கியே என்னயல்...
>
> read more »

kirikasan

unread,
Oct 19, 2011, 1:17:58 PM10/19/11
to சந்தவசந்தம்
நீதி கேட்ட தேவதை 2

2. எதிரியின் முன்னால்

மஞ்சள் நிறவெயில் மாலைக் காற்றின்கீதம்
மாந்தரின் பேச்சினொலி
பஞ்சென வேதுள்ளி வஞ்சமில்லா தோடும்
பாலகர் கொஞ்சுமொலி
நெஞ்சைக்கவர்ந்திட சங்கீததாளமும்
நேரெதிர் காற்றில் வர
சஞ்சலங் கொள்மனம் பஞ்செனஒத்தடம்
தந்தது மாலையெழில்

சின்ன இதழ்விரித் தின்ப மணமெடுத்
தேங்கின பன்மலர்கள்
தின்ன வருங்கரு வண்டை அசைந்தாடித்
தேடின பூங்கொடிகள்
தன்னவர் வந்திடுங் காலமென இல்ல
நங்கையர் பூமுடித்து
சின்ன அகல்விளக் கேற்றி ஒளியிட்டு
சித்திர மாகிநின்றார்

நெல்மணி தேடிய புள்ளினங்கள்
வானில்நீளப் பறந்துவர
புல்லைக் கடித்தது போதுமென்று பசு
போகும் வழி திரும்ப
கல்வி பயின்றிடத் திண்ணை அயல்சிறு
கன்னியர் கூடியதும்
சல் சலவென்று சலங்கை குலுங்கிட
சின்னவர் ஆடியதும்

கண்டுமனதினில் கொண்ட உவகைகள்
கொஞ்சமல்ல நடந்தேன்
கொண்டையில் பூவிடும் நங்கைதனை அயல்
கண்டு அருகணைந்தேன்
வண்டையுரித்தன இரண்டுகண்கள் என்னை
கண்டு மருண்டிருக்க
செண்டைமலரொத்தசின்ன இதழென்னும்
பூவை மலரவைத்தாள்

வந்திடு வீரெனும் எண்ணமற்றேன்
ஆகா..வந்தீர் அதிசயமே
சிந்தையி லென்னையும் கொண்டதனாலிங்கு
வந்தது நிச்சயமே
இந்தளவே போதும் உங்கள் நினைவுடன்
என்றுமே வாழ்ந்திடுவேன்
எந்தநினைவுடன் சொன்னவளோ அவள்
நெய்விழி பூத்ததுநீர்

பித்துப் பிடித்தவள் போலப் பிதற்றிடும்
பெண்ணே பெரியோர் எங்கே
சித்தம்பிழைத்தவன் உன்னை நம்பியிங்கே
சேர்ந்தேன் மடமையிலே
எத்தர் செய்யும்வேலை இட்டவளே இனி
என்னைமறந்துவிடு
இத்துடன் யாவும் நிறுத்திவிட்டா லுன்னை
விட்டேன் பிழைத்தாய் ஓடு

எட்ட இருந்தென்னை தொட்டவரே இந்த
ஏழையின் வாழ்வுதனை
விட்டு விலகிட எண்ணியிருப்பது
விந்தையில் விந்தையன்றோ
தொட்டதனாலேஎன் தூயமனதினில்
தோன்றிய வேதனையை
விட்டு நலங்கொளச் செய்தலன்றி ஒரு
வேடிக்கை வேண்டியதோ

அந்தர வானிலேகூடுகட்டி அதில்
ஆனையின் முட்டை வைத்தேன்
விந்தை நாலுகுஞ்சு வந்ததடாஎன்று
வீணில் பசப்பும் பெண்ணே
உந்தன்மொழி பொய்கள் என்னிடம் செல்லாது
போதும் நிறுத்திவிடு
சுந்தரியே சொல்லு நீதிசொல்லும் சபை
சென்றது எங்கேயிங்கு

சொல்லி முடிக்க முன்வந்தவரோ ஒரு
சித்திர நாயகன்போல்
ஒல்லி உருவமும் ஓங்கிய நெற்றியும்
ஊடுருவும் விழிகள்
நல்லது உங்கள் வழக்கென்ன கூறுவீர்!
நங்கையே சொல்லிடுவாய்
வல்லவர் சொல்லியபோது புரிந்தது
வந்தவர் ஊர்தலைவர்

(இன்னும்...உண்டு)

> > > நீட்டியொரு...
>
> read more »

kirikasan

unread,
Oct 22, 2011, 11:13:04 AM10/22/11
to சந்தவசந்தம்
நீதி கேட்ட தேவதை 3

3. பொய்யுரைத்த பேதை

”அன்றொரு நாளிவள் ஆனந்தநீராட
அல்லிக் குளத்தருகே
தென்றலெனும்படி தீயவிழிகொண்டு
தேவியெனைக் கவர்ந்தார்
இன்றுவரை இவர் எந்தன் மனதினில்
ஏக்கம்தனை விதைத்து
கொன்றுவிடுவதுபோலும் மனதினில்
கேடுகள் செய்துநின்றார்

சின்னவளாம் இவள் சொல்லும் மொழியுண்மை
சிந்தை மயக்கியவர்
எந்தன் கனவினில் என்றும்வந்து இரு
கன்னம் தழுவுகின்றார்
பொன்னெனப் பேசி பிதற்றுகிறார் எந்தன்
பின்னலைநீவுகிறார்
முன்னமிருந்து முகம் பிடித்தேமுழு
வெண்மதி என்குகிறார்

ஊருக்கும் உண்மைக்கும் நீதிசொல்லும் நல்ல
உத்தமமானவரே!
நீருக்குள் நாளொன்று நிற்கையிலே அன்று
நெஞ்சில்புகுந் தவரோ
யாருக்கும் ஏதும் அறியமுன்னே என்னை
ஆட்கொண்டு ஏங்கவைத்தார்
போருக்குவீரனாம் பெண்மனதை யின்று
பித்தம்பிடிக்கச் செய்தார்

பாலைக் குடிக்க எடுத்துவைத்தால் மனம்
பாம்பின் விஷம்என்குது
காலைவரை கண்ணை மூடினும் மைவிழி
காணாத் துயில்போனது
மாலை வந்தால் மனம் மாறிப் பகையென
மங்கையெனை வாட்டுது
ஆலை பிழிந்திடும் செங்கரும்பாய் எந்தன்
மேனி துயர் கொள்ளுது

கண்கள் பனித்தன தொங்கும் இமைகளில்
கண்ணீர்த்துளி திரண்டு
பொன்னெனும் கன்னம்கடந்து அவளது
பேசுமிதழ் கலக்க
சின்னை உதடு கசந்ததுவோ, அவள்
செவ்விதழ் கோணலிட்டாள்
என்னைகடை விழிகொண்டு நிலைகண்டு
ஏதோ மீண்டு முரைத்தாள்

பூவிழிமூட முடியவில்லை ஒரு
பொழுதும் தூக்கமில்லை
நாவில் தெளிவெழும் பேச்சுஇல்லை ஒரு
நல்ல உணர்வுஇல்லை
ஆவிதுடிக்குது ஆனந்தம்பொங்கவே
கீதம் இசைத்தபடி
கூவிமகிழ்ந்திட வேண்டிநின்றேன் இந்த
கோலமென் றாகிவிட்டேன்

காற்றாகி வந்து கலகலத்தே என்னைக்
கைகளால் நீவுகிறார்
ஆற்றில்குளிக்கையில் ஆடுமலைகளாய்
ஆடையைதள்ளுகிறார்
ஊற்றிலுணர்வினுள் உள்ளக் கிளர்ச்சியில்
ஓடிப் பெருகுகிறார்
வேற்றுமை யின்றியே வேண்டு மொருநீதி
வேதனைபோயிடவே

கொட்டியதுபல பொன்விளை காசென
கொல்லெனவே நகைத்து
பட்டெனக் கைதட்டிப் புன்னகைத்து சபாஷ்
பார்த்தகனவா என்றார்
நெட்டி முறித்துவிரல் மடக்கி ஓகோ
நிற்கும் இளையபெண்ணே
குட்டிகதை சொல்லக் கூட்டிவந்தாய் இது
குற்றம் எனச்சினந்தான்

(இன்னும் 1 பகுதி)

> > கன்னம் பிடித்திவள்...
>
> read more »

kirikasan

unread,
Oct 22, 2011, 12:04:57 PM10/22/11
to சந்தவசந்தம்
மன்னிக்கவும் இதுவும் மூன்றாம் பகுதியோடு சேர்த்து விடுகிறேன்.

(தொடர்ச்சி) பொய்யுரைத்த பேதை


கட்டுக்கதையால்ல கன்னிவள் மனம்
கள்ளம்புகுந்துவிட
வட்டவிழியழ வேதனை கூடிட
வேறெவர் காரணமோ
தொட்டு விடுவதில் மட்டுமல்ல பெண்ணின்
தூய்மை கலைவதற்கு
வெட்டும்விழி தனில் பட்டதனால் வரும்
வேதனை மாபெரிதே

மொட்டைத் தலையதும் மீசையும் கொண்டவர்
மீண்டும் விழிஉருட்டி
தட்டுத்தடுமாறி தன்நிலையில் சற்று
தத்தளித்து மொழிந்தார்
வட்டவிழிகளில் நீர்த்திவலை கட்டி
வந்தது முத்துஎன
பொட்டெனப் போய்நிலம் தொட்டுஅழிந்திட
பூவைஅழகும் கண்டேன்

”செம்மை வழுவோனே சின்னவள் சொல்வது
சற்றும் என் வாழ்வினிலே
வம்பு வழக்கிது வந்ததில்லை போலும்
வாழ்வில் புதுவிதமே
வெம்பும்விழி சொரி மங்கையின் பேச்சுமே
வேடிக்கை யானதுகாண்
நம்புவதா இதில் நல்ல தீர்ப்பை யுந்தன்
நாமொழி கண்டுரைப்பேன்”

செந்தழல்வீசிய சின்னவளின் முகம்
சோர்ந்து துவளக் கண்டேன்
எந்தளவோ ஓரு யெல்லையற்ற சோகம்
அங்கவள் மூச்சில்கண்டேன்
மந்தமெனும் இளம் புன்னகை யில்பெரு
மாசறு காதல் கண்டேன்
செந்தமிழ் பேசிடும் செல்வியின் கண்களில்
சேர்ந்ததோர் சோகங் கண்டேன்

”பொல்லா மனங்கொண்ட பொய்மகளே ஒரு
போதும் மனம் இளகேன்
வல்லவன் என்னிடம் சொல்லும் பொய்யில்வந்த
வெஞ்சினம் ஆறலற்றேன்
நல்லதொரு நீதிநான் சொல்லுவே”னென
நங்கையை நோக்கி நின்றேன்
கல்லில் சிலையென கண்கள் பனித்திட
கட்டுடல் ஆட நின்றாள்

(அடுத்தில் முடியும்)

> >         போதும்...
>
> read more »

kirikasan

unread,
Oct 25, 2011, 3:56:01 PM10/25/11
to சந்தவசந்தம்
அனைவருக்கும் , தீபாவளி வாழ்த்துக்கள்!

சில நாட்களாக எனது பொழுதுபோக்கான கணினி யுடன் ஒரு தமிழ் விளையாட்டு
உருவாக்குவதில்
ஈடுபட்டிருந்தேன். என்னால் முடிந்தளவு செய்துள்ளேன். சிறுவர்களுக்கு
ஏற்றது . விரும்பின் தரவிறக்கி
பாருங்கள். பிடித்தால் கூறுங்கள். பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம் ஆனால்
முழு தமிழ் விளையாட்டு.
’’படம் படுத்தும் பாடு ‘’
இங்கே
http://www.mediafire.com/download.php?jgpwgm2mz7277we
அல்லது
http://www.filesonic.com/file/2731300001/GoingMovieC.rar

நன்றிகள்!

> > >    நங்கையர் பூமுடித்து...
>
> read more »

kirikasan

unread,
Oct 29, 2011, 2:45:09 PM10/29/11
to சந்தவசந்தம்
சிலநாட்களுக்கு முன் இணையத்தில் உலாவியபோது ஒரு கவிதை கண்டேன். அது
மிகவும் கேவலமாக ஒரு விடயத்தை சாடியிருந்தது.
அதையிட்டு எழுந்த உணர்வு. சிரியோ பிழையோ அறியேன். இது எனது எண்ணம்

காதலைப் பாடுவதா?

குருதிப் புனலும் சதையும் கொண்டே குலவும் ஒருபோதில்
மருகிக் கணமே மின்னல் போலும் மாயை சுகம் காட்டும்
உருவைத் தொழுதே தினமும் பாடும் ஒருவன் கவியாமோ
சருகைப் போலே காயும் நாறும் பிணமும் கருவாமோ

இதனைப் போலே கேட்கும் நண்பன் ஒருவர் நான் கொண்டேன்
குதறிப் பிய்த்தே குடலை வெட்டி உள்ளே பார்க்கின்றார்
சிதறக் குத்தி காணும் செயலை சிரசில் கொள்ளாமல்
பதுமைப்பெண்ணின் விழிகள் வதனம் வியத்தல் இழிவாமோ

நிலவை அழகென் றுலகில் நின்றே கண்டால் அழகாகும்
நிலவில் நின்றால் மண்ணும்தூசும் வெறுமை என்றாகும்
சிலையில் பெண்ணை வடிக்கும் சிற்பி செயலை வியந்தோரின்
கலையென் றுள்ளம் ஏற்கும் கவியில் கண்டால் பிழையாமோ

மதனை ரதியை மனதில் கொண்டால் மறுவென் றிகழ்வாமோ
அதனைப்பாட அடிகள்கொண்டால் ஆக்கம் பழுதாமோ
எதனைப் பாடக் கவிஞன் எண்ணம் எழுமெப் பொருள்யாவும்
உதவிக் கவிதைக் கருவாய் பொருளாய் உருவம் பெறும்மாறும்

உணர்வில் உயிரில் ஊற்றும்வண்ணக் குழம்பைக் கைக்கொண்டு
கணமும் நில்லா துலகத்திரையில் காட்சி ஓவியமாய்
தணலைத் தீயைத் தண்ணீர்க் குளுமை தருமாம் எதுதானும்
கணமே தீட்டும் கலைஞன் கையில் கட்டும் விலங்கில்லை

பெண்மை அழகுஎன்றால் என்ன பிழைகள் அதிலுண்டு
பெண்ணே இல்லா வாழ்வுகொண்டார் பாரில் எவருண்டு
பெண்ணி லழகைகண்டோர் அதனைபேசல் பிழையென்றால்
மண்ணில் தமிழின் கவிகள் பலதும் மறைந்தேபோகாதோ

உலகம் எங்கே உதயம்கொண்டாய் உந்தன் வரவறியேன்
கலகம் செய்யும் விண்ணின் தீயின் கடிதோர் சுடுகோரம்
வலமும் புறமும் இடியும் வெடியும் இவைகள் தாமறியேன்
நிலமும் கண்ட நாளில் இருந்தே உலகை நானறிவேன்

புவியில் மரமும் செடிகள் கொடிகள் மலரை நான்கண்டேன்
ரவியும் மதியும்முகிலும் விண்ணின் மீனும் நான்கண்டேன்
குவியும் விரியும் மலரில் அழகைக் கொட்டி வைத்தவரே
கவியில் காட்டும் பெண்ணிலெழிலைக் காணச்செய்கின்றார்

மனிதம் என்னும் அழகைக் கலையின் கண்ணால் அதைநோக்கி
மனதில் குற்றம் இல்லா துணர்வு கொண்டால் மகிழ்வாமே
அழகை அழகென் றுள்ளம் சொல்ல அதற்கோர் வயதில்லை
மலரை எழிலென் றெழுதும் கைகள் மாற்றம் தேவையில்லை

அழகு என்ப தெதுவும் பொருளில் இலதாம், விழிகொண்டே
பழகும் மனதின் பார்வைகொள்ளும் உணர்வே எழிலென்றார்
மழலைசெல்வம் மடியில்தூங்கும் அழகை விழிகாணும்
குழலில் பூவைச் சூடும் வதனம் எழிலும் அதுபோலும்

******

> > >         குற்றம்...
>
> read more »

kirikasan

unread,
Oct 29, 2011, 3:10:52 PM10/29/11
to சந்தவசந்தம்

மனம்

நீராழி மீதிலே அலைகள் ஆடும்
நினைவோடு போனவை நின்றேயாடும்
பேரோடு சொந்தங்கள் பின்னால் கூடும்
புகழோடு வரவுகள் புதிதென் றாகும்
தேரோடத் தெய்வமும் தீந்தமிழ்சொல்
தமிழோடு மனம்தானும் சேர்ந்துஆட
நீரோட விழிமீது வழியும் வைத்தாய்
நெஞ்சிலே தீயாக நினைவும் வைத்தாய்

மானாடும் மயிலாடும், மதுவில்நின்று
மலர்மீது வண்டாடும், மகிழ்வில்என்றும்
வானோடும் கதிரேறும் வண்ண நிலவு
வந்தோடும் பூங்காற்று வசந்தமென்று
தானாடும் மனமீதில் எண்ணமென்று
தனியாக அதுவோடிச் செய்யுகோலம்
நானோடி சொல்வதோ யாருக்கென்று
நடுநீரில் மீன் நின்று அழுததென்று

பூவிரியும் இரவோடிப் புலரும்வேளை
புள்ளினமும் ஆர்ப்பரித் தெழுந்த காலை
தீவிரியும் கதிரோடு தினகரன்தான்
தேய்நிலவை தள்ளியத் திசையும் கொள்ள
காவிரியின் அலையாகக் கலகலத்து
காற்றுமிளங் காலைதனில் இதயம் மீது
நீவியொரு இன்பமதை ஊட்டுமாமோ
நீர்விழியில் கொண்டதனைக் கூட்டுமாமோ

பசும்வெளியில் புல்லாக பச்சை வண்ணம்
பழந்தூங்கு சோலைகளும் பாரில் வைத்தான்
விசும்பியழ மனமொன்றை உள்ளே வைத்து
விதியோடு உறவுவென்று கூட்டி வைத்தான்
பிசுசிசுத் துழலென்று செய்தான் காலம்
பிழைத்துவிடப் பொல்லாப்புப் புரிந்துநின்றான்
நசுங்கமனம் பூவாக மனதைச் செய்து
நடமாடும் நிழலாக நலிவை வைத்தான்

எழிலோடு பிறக்கின்ற இரவின் அந்தம்
எழுந்தாடும் அலைகொண்ட கடலின் சந்தம்
வழிமீது சொரிகின்ற மலர்கள் மென்மை
வானேறிக் காண்கின்ற சொர்க்கம் யாவும்
பொழிகின்ற மழைகொண்ட சாரல்தூவும்
புனல்தூறக் குளிரின்ப வாழ்வுமேனோ
குழிமீது எனைவீழ்த்திக் கோபுரத்தின்
கொண்டே என்கனவாக வைத்தாய் ஏனோ?

****************

> > > வல்லவன்...
>
> read more »

kirikasan

unread,
Oct 30, 2011, 8:32:20 AM10/30/11
to சந்தவசந்தம்

தமிழே, தருவாய் நல்வரம்

கனவொன்று கண்டேன்
. -களிகொண்டு நடமாடும் இளமங்கை
. -கனிவோடு எனைநாடி வந்தாள்
மனம்நொந்து நின்றேன்
. -மதியோடு உறவாடும் முகம்மீதில்
. -மலர்கொண்ட நகையோடு நின்றாள்
வினவென்று சொன்னேன்
. விழிமீது கனிவாக விளைகின்ற
. விதமாக எனைக்கண்டு சொன்னாள்
’பனிபோலும் விழிகள்
. படராதநிலைகொண்டு பண்’பாடு’
. பதில்கூறு பயமேது’ என்றாள்

தமிழன்னை என்றாள்
. தனையெண்ணி சுவையான தமிழ்கொஞ்சும்
. தரமான கவிகூறு என்றாள்
அமிழ்தோடு வந்தே
. அதை வீசி இதுவென்ன அதைமேவி
. இனிதான மொழிபாடு என்றாள்
குமிழ்போல்நல் லெழிலாள்
. கரைமீது அலையோடி உருண்டாலும்
. மதுமீண்டும் கடலோடும் என்றாள்
தமிழ்பாடி நின்றாய்
. இனிவாடிக் கருகாமல் தரும்வாழ்வு
. தலைமீது முடிசூடும் என்றாள்

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோடிணைந்தாள்


***************

> > > சில நாட்களாக எனது பொழுதுபோக்கான கணினி யுடன் ஒரு தமிழ் விளையாட்டு...
>
> read more »

kirikasan

unread,
Nov 2, 2011, 3:29:39 AM11/2/11
to சந்தவசந்தம்

சக்தியே, காத்திடுவாய்

தெள்ளெனும் நீரினில் கல்லைஎறிபவர் தேங்கிக் கிடக்கையிலே
உள்ளமது கொள்ளும் வெள்ளம்கரைபுரண் டென்னை இழுக்குதம்மா
கள்ளமதுஇல்லை கால்கள் நடந்திட காணும்பெரு விசையாய்
அள்ள அள்ளத் திரை வெள்ளம் கடலெனத் தள்ளி விழுத்துதம்மா

சொல்லமுடியாத பன்னெரும் துன்பங்கள் பற்றிக் கெடுக்குதம்மா
வல்லமனதினில் வாழ்வின் இழிமைகள் வந்ததே யசைக்கு தம்மா
கொல்லு மனங்களின் கோடரி வீச்சுக்கள் கொட்டு மிரத்தமின்றி
பல்லு முடைபட வீழ்த்தியதாய் எனைப் பக்கமுருட்டுதம்மா

நில்லுஎன எந்தன் நெஞ்சைநிறுத்திடும் நல்லதை கொள்வதிலே
கல்லுப் பெரியதில் கட்டிஎனைக் கடல் தள்ளக்கை காக்குதம்மா
வெல்ல முடியுமா வேதனைஎன்றிட வீசும்கயிறு சொல்லாய்
அல்லல் குளத்தினுள் ஆழ்ந்து விடமுன்னர் ஆருயிர் காக்குதம்மா

அன்புதனை மனம் என்றும் மதித்திடும் ஆனவழி சரிதான்
என்பதைக் காட்டிடல் எந்த இதயமும் அந்த இறைவடிவாம்
தன்னிலை தானுணர்வென்பது சற்றுப்பின் தாமதமே, பெரிதாய்
முன்னுரிமை கொண்டு மோக இருள் வந்து முற்றும் கறுத்துவிடும்

> > > பெண்ணே...
>
> read more »

kirikasan

unread,
Nov 2, 2011, 4:21:06 AM11/2/11
to சந்தவசந்தம்
கொஞ்சம் புரியாதது

சந்தம்வ சந்தம் நற்சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் ஒருஎந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு தந்துவிடும்
செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நிலா சுத்தம் என்கும்

அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்
என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்

உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !!!

> > > > குருதிப் புனலும் சதையும் கொண்டே குலவும் ஒருபோதில்...
>
> read more »

kirikasan

unread,
Nov 2, 2011, 4:30:31 AM11/2/11
to சந்தவசந்தம்
ஒரு சிறு திருத்தம்
//என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்//

என்பதை

//என்பது சொன்னதென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்//

என்று மாற்றிக்கொள்கிறேன்

*************

> > > > நீவியொரு இன்பமதை...
>
> read more »

kirikasan

unread,
Nov 3, 2011, 5:22:48 AM11/3/11
to சந்தவசந்தம்
சந்தம்வ சந்தம் நற்சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் ஒருஎந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு தந்துவிடும்
செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நிலா சுத்தம் என்கும்

(’செந்தேன்’ என்பதில் கடைஎழுத்தை ’கொண்டாள்’ என்பதில்
இறுதி எழுத்தாக மாற்றினால் செந்தேள் . அதாவது எந்தன் மனம்
கனத்து சிலவேளைகளில் செந்தேளின் முன்னால் வரும் வாலைக்கொண்டு
முள் பட்டது (கடித்துவிடுவது) போன்ற உணர்வினை
ஏற்படுத்தி அசுத்தம் செய்கிறதோ?

அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்
என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்

(செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும் -நிறைக்கு எதிர் குறை
என் குறையை பெரிது படுத்தாதீர்)

((என்ன ‘வெ’ யின்று(இல்லாத) காண் ”வெய்யில்” = ய்யில்
”பொழுதினில்” உள்ள தலையெழுத்தங்கு செல்லும் = பொ
ஆகவே பொய்யில்

நான் பொய்யாக சொன்னதென்றெண்ணில்
மன்னவன் முன்னிரு = மன்
பின்(னால்) னியும் = மன்னியும் !!
மன்னித்து விடுங்கள்))

உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !

(நள்ளிரவு கடல்போல எல்லையற்று ஆகுவது (உயிர் போனபின்பு)

********************

On Nov 2, 8:21 am, kirikasan <kanagaling...@hotmail.com> wrote:

> > > > நீவியொரு இன்பமதை...
>
> read more »

kirikasan

unread,
Nov 3, 2011, 5:42:10 AM11/3/11
to சந்தவசந்தம்
பூவும் வாழ்வும் (உருவகம்)

தேன்விழுந்த இலையொன்று தித்திப்பைக்கண்டது
தேடியப் பூவைக் கண்டு
வான் பார்த்தகண்களும் வடிவோடு கர்வமும்
வைத்தாயே அன்புமலரே
ஏன் கொண்டுவாசமும் இனிக்கின்ற தேனையும்
இதழ்மீது சுமந்து நின்றாய்
தான்கொண்ட செய்கையால் தாவுமவ் வண்டோடு
தரைவீழும் வாழ்வுகொண்டாய்

நானிங்கு நிற்பதோ நாள்வாரம் மாதமாம்
நலங்கொண்டு வாழும்போது
தேனிங்கு கொண்டதால் தென்றலுந் திறங்கூற
திகழ்கின்ற மேனியழகால்
தானிங்கு நாளொன்றில் தன்மையைஇழந்தாடி
தவித்துநீ வீழ்தலேனோ
வீணிங்கு வாழ்வினை விதிகையில் தந்ததேன்
விடு உந்தன் முறைமை என்றாள்

”ஒர்நாளென் றாயினும் ஒங்கு புகழென்பது
ஒருகோடி இன்பமாகும்
வேர்போலும் மறைந்திங்கே வெளிகாணா வாழ்வது
வியப்பென்று நகைத்துநின்றாள்
பேர்கொண்டு திசையெங்கும் பிறர்பேச வாழ்வது
பெரிதான போதையாகும்
ஊர்கொண்ட கோவிலில் உள்ளதோர் இறையடி
தோள் சேர்த்தல் நாமேயென்றாள்

இலையாக இருந்தென்ன, இல்லையென வாழ்வது
எவருக்கு வாழ்வுவேண்டும்
கலைகூறு நற்கவி கவிஞரும் போற்றுவர்
காணின்ப மலர்களாகும்
விலைகூறி விற்பவர் இலைதன்னைக் கொள்வரோ
இவர் வேண்டல் பூவையாகும்
இருந்தென்ன வேர்போலும் இருள்கண்டு வாழுதல்
எவருக்கு இன்னும்வேண்டும்”

”ஆனாலும் அழகிகேள், அருந்திடத் தேனையும்
எழில் கொஞ்சு மிதழும் வைத்தாய்
போனாலும் திசையெங்கும் புகழ்மாலை சூடுவாய்
பெயர்தந்து எமையேற்றினாய்
தேனாலும் வாசமும் தேகமென் பாங்கிலும்
திகழ்ந்தாலும் ஒன்று தெரிவாய்
நானாலு இலைகளும் நல்வேருமில்லையேல்
நீவாழ என்ன செய்வாய்

ஆதார மென்றுநம் அகம்மீது பொறுமையென்
றணிகொண்டு வாழுகின்றோம்
நீதாங்கும் தேனையும் நிமிர்ந்ததோர் வாழ்வுக்கு
நீர்கொண்டு ஊட்டுகின்றோம்
வேர்தாங்க வில்லையேல் விழிக்காண அழகினை
விரிகின்ற மலர் கொள்ளுமோ?
தீதாங்கு மாதவன் ஒளிவாங்கி உயிர்காத்தல்
தேவைநம் கடமையன்றோ?”

***************

> > > > .  ...
>
> read more »

Kaviyogi Vedham

unread,
Nov 4, 2011, 1:51:05 AM11/4/11
to santhav...@googlegroups.com
பலே பலே..ரசித்தேன்,
 யோகியார்

2011/10/2 kirikasan <kanaga...@hotmail.com>
         இது சக்தியை வழிபடும் காலம்

         சக்தியே, சஞ்சலம் தீர்!

உலவும் காற்றும் உயிரும் கொண்ட உறவைத் தந்தவளே
நிலவும் உள்ளத் துயரைப் போக்கி நிம்மதி தாராயோ
பலதும் மனதில் கொடியாய் தோன்றிப் படரச் செய்பவளே
பாசம் படரும் மனதில் என்றும் பசுமை தாராயோ

வளமும் வாழ்வும் மனிதன் கொண்டே வளர செய்பவளே
வந்தேன் உன்னை வணங்கிக் கேட்டேன் வசந்தம் தாராயோ
குலவும் இன்பம் கொண்டோம் இன்று குறைவே எனவாக
கொள்ளும் காற்றும் பகையென் றாகிக் கண்ணீர் சொரியுதடி

தினமும் எண்ணம் கருகித் துன்பம் தெரியும் வாழ்வென்றே
தேனில் விழுந்த தீயோர் நஞ்சாய் தேகம் குலையுதடி
மனமும் கோணி மகிழ்வும் நாணி மாற்றம் வேண்டியொரு
மழையைத் தேடும் கழனிப் பயிராய் மறுகிக் கிடப்பேனோ

உலகின் சக்தி உயிரின் சக்தி ஓளியின் சக்தியெனும்
உள்ளத் திண்மை உள்ளே தருவாய் உள்ளம் இரங்காயோ
பலதும் பாடிக் கவியென் றாக்கும் பண்பைத் தந்தவளே
பாரில் இன்னும் பலநூ றெண்ணும் பலமும் தாராயோ

நோயும் பிணியும் நிற்கா தெந்தன் நினைவில் மகிழ்வோங்கி
நீயும் சக்தி நிறைவைத் தந்து நெஞ்சில் கவியோங்கி
பாயும் நதியாய் பொங்கும் வெள்ளப் பாங்காய் பலநூறு
பாவும் புனையக் காதில் வந்து பாடிச் செல்லாயோ


**
      சக்தியின் சக்தி!
   (சிறுவரோடு ஆடுதல்)

சக்தி கொண்டு நீயெழுந்து சுற்றிஆடடா - அந்தச்
சக்தி அன்பு தெய்வம் உந்தன் வெற்றியாமடா
சக்தி பூமி பெற்ற துந்தன் அன்னைதானடா - அந்த
சக்தி சத்தி யத்தின் அன்பு தேவியாமடா

சக்தி யின்றி நாம் நடந்து செல்லலாகுமா - அந்தச்
சக்தி போயின் செத்ததென்று ஆகுமேயடா
சக்தி பெண்ணில் உள்ளதென்று கைகள் கூப்படா-அந்தச்
சக்தி பூமி வருவதில்லை பெண்கள்தானடா

சக்தி உந்தன் அன்னைகூட பெண்ணேதானடா - அவள்
சக்தி யாரும் சொல்லிநீயும் தெரிவதாமோடா
சக்தி ஒன்று தார மானல் துச்சமாகுமா - அந்தச்
சக்தி மீண்டும் தாயென்றாகும் நெஞ்சில் வையாடா

****

On Sep 30, 5:10 pm, akila ramasami <akilacsr2...@gmail.com> wrote:
> சின்னபயல் முதலா எவரும்
> கள்ளத்தனம் புரிந்தால்
> சொல்லிக்கொடுப்பதற்கு நாணம்
> கொஞ்சமுமில்லையடி
>
> உண்மையான வரிகள் ...
>
> அன்புடன்
> அகிலா ராமசாமி
>
> 2011/9/30 kirikasan <kanagaling...@hotmail.com>
>
>
>
>
>
>
>
> > நன்றிகள் தங்களுக்கு!  இதேபோல சில மாதங்களுக்கு முன்னர் எழுதினேன்
> > அதையும் இதனுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
>
> >     உள்ளங்கவர் க(ன்/ணி)னி
>
> > உன்னை நினைக்கையிலே மனதில்
> > ஓடிவரும் இன்பம்
> > என்ன சுகம் சொல்வேன் கணியே
> > என்மனத் தாரகையே
> > வண்ண வடிவெடுத்து எந்தன்
> > வாழ்வில் புதியதொரு
> > எண்ணம் குழைத்தவளே என்றும்
> > என்மலர்த் தாமரையே
>
> > உன்னைத் தொடும்போது என்றும்
> > துள்ளி மலர்ந்து நின்று
> > வண்ணத்திரை முகத்தில் ஒளியை
> > வந்திடச் செய்குகிறாய்
> > சொன்னதெலாம் கேட்டு அதனை
> > செய்து முடிக்கையிலே
> > உன்னதமாய் மலரும்  செய்கை
> > உள்ளம் கவருதடி
>
> > என்னதான் கேட்டாலும் உடனே
> > சொல்லி விளக்குகிறாய்
> > உன்அறிவென்பதென்ன என்றும்
> > ஊற்றெடுக்கும் நதியோ
> > வண்ணபடம் வரைந்தால் அழகு
> > வாரிக் கிடக்குதடி
> > பண்ணிசை பாடு என்றால் இனிமை
> > என் செவிக்கின்பமடி
>
> > கட்டுக்கடங்காத கதைகள்
> > எத்தனை சொல்லுகிறாய்
> > சுட்டி பயல்சிறுமி அவர்க்கும்
> > சித்திர காதை சொல்வாய்
> > பட்டுமுகம் உனதை முறைகள்
> > எத்தனை பார்த்தாலும்
> > விட்டு சலிப்பதில்லை அதுவே
> > எத்துணை விந்தையடி
>
> > நாட்டின் அரசியலை வீதி
> > நாற்புறமும் நடக்கும்
> > வீட்டில் தகராறு கொள்ளை
> > விருந்துசெய்யும்முறைகள்
> > சாத்திரம் சோதிடங்கள் எல்லாம்
> > சட்டென்று ஓடிவந்து
> > ஊரில் அறியமுன்னே சேதி
> > காதில் பகருகின்றாய்
>
> > எத்துணை வித்தகியாய் இருந்தும்
> > ஒன்றில் மட்டும் எனக்கு
> > உன்செயல் கண்டதிலே கோபம்
> > ஓடி வருகுதடி!
> > சின்னபயல் முதலா எவரும்
> > கள்ளத்தனம் புரிந்தால்
> > சொல்லிக்கொடுப்பதற்கு நாணம்
> > கொஞ்சமுமில்லையடி
>
> > On Sep 30, 11:15 am, akila ramasami <akilacsr2...@gmail.com> wrote:
> > > மயக்கியவள் யாரோ..
>
> > > அருமை.. அன்றாட அல்லல்களில் இதுவும் ஒன்றாகி விட்டதே..
> > > புலம்பல்கள் அருமை.
> > > அன்புடன்
> > > அகிலா ராமசாமி
>
> > > 2011/9/30 kirikasan <kanagaling...@hotmail.com>
>
> > > > இது கணினியோடு எப்போதும் பொழுதைக் கழிக்கும் கணவனை நொந்து
> > > > கணினியை ஒரு பெண்ணாக உருவகித்து காணும் மனைவியின் ஆதங்கம்
>
> > > >     மயக்கியவள் யாரோ??
>
> > > > வெண்ணிலவு தேனிறைக்க
> > > >   வேளை நடுச்சாமத்திலே
> > > > கண்ணிரண்டும் தான்கலங்க
> > > >  காதல் மனம் கொண்டவரே
> > > > எண்ணியிவள் உன்னவளாய்
> > > >  இங்குமனம் வெந்திருக்க
> > > > கண்ணியமும் தாழ்ந்தவளைக்
> > > >  கண்டுமகிழ் வெய்திடலேன்?
>
> > > > பன்னிரண்டு மணிவரையும்
> > > >  பக்கமவள் தானிருந்து
> > > > சின்னவிரல் கொண்டழைந்து
> > > >  சேருமின்பம் காணுகிறீர்
> > > > என்னைமனம் நோகவிட்டு
> > > >  என்னருமைச் சக்களத்தி
> > > > தன்னில் மோகம்கொண்டதென்ன
> > > >  தனியிருந்து வாடுகிறேன்
>
> > > > திங்களடி உன் வதனம்
> > > >  தித்திக்கும் கன்னமிது
> > > > பொங்குதடி என்இதயம்
> > > >  பொன்னென்றே யன்றுரைத்தீர்
> > > > மங்கிமதி கெட்டுழன்று
> > > >  மன்னவரே இன்றவளின்
> > > > அங்கமெலாம் மின்சாரம்
> > > >  ஆஹா..கா.. என்கின்றீர்
>
> > > > பேசுவது நானென்றால்
> > > >  போதுமடி மூடென்று
> > > > ஏசிமனம் நோகவைத்தீர்
> > > >  இன்றவளோ எத்தனைதான்
> > > > மாசுபடப் பொய்யுரைக்க
> > > >  மையலிடும் கதைசொல்லக்
> > > > கூசும்மனம் ஏதுமின்றிக்
> > > >  கோடிமகிழ்வெய்துகிறீர்
>
> > > > என்னபுதிர் கேட்டாலும்,
> > > >  எடுத்துரைக்க வல்லவளாம்
> > > > சொன்னவேலை கச்சிதமாய்
> > > >  சுறுசுறுப்பாய் ஆற்றிடுவாள்
> > > > என்னழகுச் சித்திரமாய்
> > > >  எழுதுகிறாள் என்றரற்றி
> > > > மென்னழகுப் பொருள்ஈந்து
> > > >  மிகமகிழ்வு கொள்ளுகிறீர்
>
> > > > கல்லெனவே மனதுடையாள்
> > > >  கண்டதெலாம் சொல்லிடுவாள்
> > > > பொல்லாத மாயமிட்டு
> > > >  பொழுதெல்லாம் அருகிருத்தி
> > > > அல்லதொரு சுகமளிப்பாள்
> > > >  அடுத்தவரின் சேதிசொல்வாள்
> > > > உள்ளதொரு ஊர்ப்புதினம்
> > > >  ஓயாது எடுத் துரைப்பாள்
>
> > > > மின்னும் இதழ் கொண்டுமையே
> > > >  மோகமுறச் செய்ததென்ன?
> > > > இன்னிசைகள் பாடிஉமை
> > > >  ஏக்கமுற வைத்தனளோ?
> > > > சொன்னகதை எத்தனைதான்
> > > >  சுகமளிக்கும் வித்தையதோ
> > > > என்னவகை ஆயிருந்தும்
> > > >  இதயமில்லா வன்மையலாள்
>
> > > > அன்னமென ஆக்கியுமை
> > > >  அறுசுவையில் விருந்தளிக்க
> > > > சின்னவளால் முடிகிறதோ
> > > >  செய்வதென்ன நானல்லவோ
> > > > சின்னவளைத் தொட்டெவரும்
> > > >  சில்மிஷங்கள் செய்வரென
> > > > கன்னங் கருத்துவிடக்
> > > >  கட்டிஒரு மந்திரமும்
>
> > > > இட்டுவைத்தும் நீர்வீட்டில்
> > > >   இல்லாத சமயமெவர்
> > > > தொட்டாலும் முகம்மலர்ந்து
> > > >  சொன்னதெலாம் செய்கின்றாள்
> > > > விட்டதொட்ட கதையெல்லாம்
> > > >  விவரித்துக் கூறுவதை
> > > > மட்டும் உமக் குரைத்து விடில்
> > > >  மனம் வாடிப் போய்விடுவீர்
> > > > ****************
>
> > > > (மென்னழகுப் பொருள் - மென்பொருள்)
> > > > (மின்னும் இதழ் -மின்னிதழ்)
>
> > > > On Sep 28, 9:54 am, kirikasan <kanagaling...@hotmail.com> wrote:
> > > > > 3. துயரின் கொடுமை...
>
> ...
>
> read more »

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:

இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

kirikasan

unread,
Nov 4, 2011, 12:19:23 PM11/4/11
to சந்தவசந்தம்
நன்றிகள் ஐயா!
மனம் மகிழ்ந்தேன்

On Nov 4, 5:51 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> பலே பலே..ரசித்தேன்,
>  யோகியார்
>

> 2011/10/2 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> read more »

kirikasan

unread,
Nov 4, 2011, 12:28:56 PM11/4/11
to சந்தவசந்தம்
வாழ்க்கைப் பாதை

பொன்நகை யன்றிப் புன்னகை கொள்வாய்
போகும் பாதையிலே
பன்நகை கண்டும் பதறா துந்தன்
பாதை நீ தெளிவாய்
சின்னகை கொண்டு செல்லப்பிள்ளை
சீண்டும் போதினிலே
என்னது செய்வாய் அதுபோலின்பம்
ஏற்றே சிரித் திடுவாய்

காடும் நாடும் ஒன்றே யறிவாய்
காட்டின் விலங்கினமும்
கூடும் எண்ணம் கொள்ளும் மனிதர்
கூட்டம் காண்பாயே
தேடும் அன்பும் தீமைகொள்ளாத்
தெய்வம்போல் மனிதம்
ஊடும் உள்ளார் உண்மையறிவாய்
உன்னைக் காப்பாயே

பொய்யும் கண்பாய் பொய்மை கொண்டே
புரளும் உலகறிவாய்
எய்யும் அம்பாய் இன்னல் செய்யும்
எதையும் எதிர் கொள்வாய்
மெய்யில் தீரம்கொண்டே என்றும்
மனதில் துணிவாகி
செய்யும் செயலில் சிறிதும்கவனம்
சிதறா தது கொள்வாய்

மாறும் உலகில் மாற்றம் என்பது
மாறா விதி யாகும்
மாறும்போதில் மற்றோர் உயிரை
மதிக்கும் விதி கொள்வாய்
ஊறும் ஒருவர்க் கில்லா மாற்றம்
உலகில் சரியென்றே
யாரும் சிரித்தால் நீயும் சேர்ந்து
சிரிப்பாய் சினம் விடுவாய்

மூடும் முகிலும் கூடும் இருளும்
மௌனப் போர்வைகளும்
போடும் இடியும் புயலும்சேரும்,
புனலும் இழுவெள்ளம்
பாடும் பசியும் பிணியும்பலதும்
பார்த்தும் பதறாமல்
வாடும் உள்ளம் இன்றி நல்லோர்
வழியைக் கண்டிடுவாய்

விண்ணில் காணும்நட்சத்திரங்கள்
எண்ணிக் கைபோலும்
மண்ணில் காணும் விந்தைமனிதர்
மனமும் பலதாகும்
எண்ணிப்பார்த்தால் இவரின் சொல்லோ
இதழில் புன்னகையாய்
கண்ணைச் சிமிட்டும் தாரகைபோல் பின்
கருமை கவிந்திருக்கும்


இன்னோர் உயிரை இகழல்செய்யா
இயற்கையென மதிப்பாய்
தன்னோர் எண்ணம் தனதோர்முறைமை
தவறில்லைக் கொள்வாய்
நன்நேர் வாழ்வை கொள்வாய் நாளும்
நலனே எண்ணிடுவாய்
மின்னேர் ஒளியாய் மிளிர்வாய் உலகில்
மேன்மை கண்டிடுவாய்

> > > > > > >   வேளை நடுச்சாமத்திலே...
>
> read more »

kirikasan

unread,
Nov 4, 2011, 12:54:53 PM11/4/11
to சந்தவசந்தம்
” பொய்யுரைத்த பேதை”யின் முடிவு தீர்ப்பாக தலைவன், உன் கனவில்
நான்வந்து செய்த தொல்லைகளை
தன்னுடைய கனவுகளில் தலைவியை வந்து செய்யுமாறும் , அதற்கு இது சரிவந்து
விடும் என முடிவு கூறுகிறான்.

அதற்கு அவள் எப்படி உன் கனவில் வருவது தெரியவில்லை என்று கூற, ` சரி
கனவில் வர தெரியவில்லை என்றால்
நேரில் வந்து தொல்லை கொடு` என்கிறான். அததோடு இருவரும் மனம் இணைந்து
வாழ்வில் ஒன்றாகிறார்கள்-- என்பதே முடிவு.
கவிதையாக தராததிற்கு மன்னிக்கவும்

> > >    நங்கையர் பூமுடித்து...
>
> read more »

kirikasan

unread,
Nov 5, 2011, 3:53:12 PM11/5/11
to சந்தவசந்தம்
மலையும் மழையும்

மதிநின்று விளையாடும் மலைமீது தொடுமேகம்
மழை கொண்டு நீர்தூவுமாம்
புதிதென்ற மலைவாழை இலைதள்ள அழகான
பசுஞ்சோலை கதிர் கொள்ளுமாம்
முதிதான வளர்நீள மரம்மீது குயில்பாட
மலர்க்கூட்டம் இதழ் பூக்குமாம்
குதித்தோடிக் கிளைதூங்கி கருமந்தி மரந்தாவ
குளிர்நீரும் பூத் தூவுமாம்

அழியாத கலையோடு பெருங்கோவில் அமைந்தொன்று
அழகோடு உயர்ந்தோங்கவே
வழிமீது நடுவானில் வரும்மேகம் இடைநின்று
விடு என்று அதை மோதுமாம்
விழி காணா குளிர்காற்று வெண் பஞ்சு உடல்நீவ
வளைந்தோடி முகில் ஓடவே
எழிலான இவைநூறில் எது தானும் அழகென்று
இவன்சொல்ல இறைதேவியே

மழைவந்து நிலம்மீது உறவாடும் மணல்சேர
மண்வாசம் எழும், கண்டுமே
நுழைந்தோடு பூங்காற்று அதையள்ளி மணம்வீசி
நனைபூவை மறந்தோடுமே
வளைந்தாடும் கொடிபூத்த வகையான மலர்த்தேனில்
விழுந்தூறல் கலந்தோடவே
அழைந்தின்ப மதுவுண்ணும் இளந்தும்பி சுவையின்றி
அருந்தாம லெழுந்தோடுமே

குழல்மீது மலர்கொண்ட குறும்பார்வை தனிலன்பு
கொள்நங்கை தனை ஆடவன்
சுழல்அம்பு விழிகண்டு சிந்தும்புன் னகைபோலும்
சுடர்தானும் புவிமாதினை
மழை நின்ற பெருவானில் கருமேகமிடையாலே
மறைந்தங்கு ஒளிசிந்தவும்
மழைபோகச் சிறு தூறல் தனில்ஏழு நிறமோடி
இதுவாழ்வு உமதென்குமே

பிழையான குரு, பாடம் பயிலாத சிறுபாலன்
படுகின்ற துயராகவே
பழக்காத ஒருமாடு நடுவீதி தடுமாறிப்
பிரம்பொன்றில் வெருண்டோடுமே
முழவோடு சிறுநாத மிசைபாடிஒருகூட்டம்
மெதுவாக நடைகொள்வதும்
அழகோடி எமதான மலைகூடும் சிறுஊரில்
அருங்காட்சி தினம் தோறுமே!

> > > குட்டிகதை சொல்லக்...
>
> read more »

kirikasan

unread,
Nov 5, 2011, 3:56:24 PM11/5/11
to சந்தவசந்தம்
பழக்காத ஒருமாடு தவறு -- பழகாத ஒருமாடு எனக் கொள்க .நன்றி!

> > > >       உத்தமமானவரே!...
>
> read more »

Kaviyogi Vedham

unread,
Nov 6, 2011, 2:51:36 AM11/6/11
to santhav...@googlegroups.com
இதுவும் நல்ல கருத்தமைந்த பாடல் கிரி!
வாழ்க உன் கவிப்புலமை,
 யோகியார்

2011/11/4 kirikasan <kanaga...@hotmail.com>
>
> read more »

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

kirikasan

unread,
Nov 6, 2011, 2:58:54 AM11/6/11
to சந்தவசந்தம்
அதிகாலையில் ஒரு மின்னல்

சக்தி ! சக்தி!! சக்தி!!!

திருநட மிடுமென் னறிவெனுங் கருவில்
உருவமின் றிருப்பவளே
இருளெனு மாயை இதுவரை கண்டேன்
தருமொளி பெரிதுனதே
வருமிடர்கொண்டே பகையுற யிரும்பில்
துருவென உருவழிந்தேன்
பெருமளவாக இருமன துழலும்
செருகினி லெனையிழந்தேன்

ஒருமையில் மனமும் உள்ளொளிதானும்
தருசுடர் எனவருவாய்
எருதினில் ஏறும் தருமனும் உயிரை
வெருகிடப் பெறமுதலாய்
மருவியென் அறிவை தருவதில்குறையை
ஒருபொழு தினிகுறையாய்
சருகெனக் கருக முதலலுரு மாற்று
தருவினில் கனியெனதாய்

உருவினி லன்பும் பெருமையு மறிவும்
வருமுன திருமனதால்
தெருவினில் வீழும் சொரி பனியாக
உருகிட முதலறிவாய்
மருகிடு மனதில் மாற்றமுந் தந்து
மெருகினை யுடைமனதாய்
அருகினில் நெருங்கி ஒருதென தாயாய்
இருயெனை வழிநடத்தாய்

திருமறை யோதும் பெருவிடந் தன்னில்
சருகெனத் தரவிழைத்தாய்
அருமையென் றெதையோ பொருளிழிந் திடவே
பருகிட பிறிதளித்தாய்
நெருங்கியென் னிதயம் சுருங்கிட முதலே
தருந்திரு வருள்தனிலே
மருந்தென மனதில் மருவிய துன்பம்
அருகிட வழிபுரிவாய்

அருவியு மாழி இருதிசை செல்லும்
ஒருங்கிடு மதிலிணையும்
பருவமும் கொள்ளக் கருமுகில் மின்னும்
பெருமழை புவியணுகும்
முருகெனும் தமிழும் அரும்பொரு ளிசைய
தரும்வித மெனைதெரிவாய்!
இருமனக் குருவாய் கருமமும் நிறைவாய்
பெருகிட அருள்புரிவாய்!

> > > > > பொன்னெனப் பேசி...
>
> read more »

kirikasan

unread,
Nov 6, 2011, 3:13:04 AM11/6/11
to சந்தவசந்தம்
நன்றிகள் ஐயா
எல்லாம் இவனல்ல!
சக்தியென்றே ஒப்படைத்து விட்டேன்.
எப்போதும் அவள்தான் எல்லாமே
இவன் வெறும் ஊதுகுழல்
வருமிசை எங்கிருந்தோ..!
இப்படித்தான் தோன்றுகிறது
எல்லாம் அவளே சக்தி!

அன்புடன்
கிரிகாசன்


On Nov 6, 7:51 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> இதுவும் நல்ல கருத்தமைந்த பாடல் கிரி!
> வாழ்க உன் கவிப்புலமை,
>  யோகியார்
>

> 2011/11/4 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> read more »

kirikasan

unread,
Nov 8, 2011, 2:32:12 AM11/8/11
to சந்தவசந்தம்
சிறப்பொடு வாழ்வோம்

தெரிவதும் புரிவதும் உலகோ - இல்லை
தெளிவிலை எனச்சுழல் கொளுதோ
அரியதும் அழகதும் உலகோ - இல்லை
அதனிடை பெருமிருள் வருதோ
சரியதும் பிழையதும் எதுவோ - அது
சரிநிகர் வாழ்வெனும் பொருளோ
எரிமலை கொளும்பெரும் பிளவோ அது
எதில்மன மிடைதனும் எழுதோ

பிறப்பதும் வாழ்வெனும் பொழுதில் - பல
பிழைகளும் பிறப்பது எதனால்?
இறப்பது எனவர முன்னே - பல
இருப்பவை அழிப்பதும் எதனால்?
சிறப்பென வாழ்ந்திட எண்ணும் - மனம்
சிரிப்பினில் முடிவதும் எதனால்?
நிறப்பது சிவப்பென உணர்வே - அதில்
நிரப்பிட வெறுப்பெனும் முடிவேன்?

தரித்திட மணிமுடி வேண்டாம் - ஒரு
தரித்திரம் எனும்பெயர் வேண்டாம்
உரித்தது இவர்மனம் பொன்னோ - இலை
உருப்படி யிலைக்களி மண்ணோ
சரித்திரம் படைப்பது மிவனோ - ஒரு
சரிதிறன் உருவழித் திடவோ
விரியுல கதிலிவை வேண்டாம் - ஒரு
யியல்புறு நடுநிலை போதும்

கறந்திடும் பால்ஒரு போதும் - மடி
கொளத்திரும் பிடுசெய லில்லை
உறங்கிடும் மனம்ஒரு போதும் - ஒளி
உதயமும் கொளுமென இல்லை
மறந்தொரு தவறதும் செய்யா - உன்
மனதினில் கவனமும் கொள்ளு
இறந்திடும் நிகழ்எதிர் காலம் -இவை
இனித்திட உயர்வழி செல்லு

பறந்திடும் சிறிதொரு பறவை -அது
பார்த்திடு முலகதைப் போலே
துறவெனக் காண்மன துள்ளே - நீ
தொலைவினில் பறந்திடல் போலே
நிறமொடு வாழ்ந்திடு ஆனால் - நின்
நினைவது வெளுத்திடு மேலாய்
அறந்தனில் அக்கறை கொள்ளு - இதை
அறிந்திந்த உலகினை வெல்லு !
******

> > > > > > On Sep 30, 5:10 pm, akila ramasami <akilacsr2...@gmail.com> wrote:...
>
> read more »

akila ramasami

unread,
Nov 8, 2011, 8:49:27 AM11/8/11
to santhav...@googlegroups.com
அருமை..
akila

2011/11/8 kirikasan <kanaga...@hotmail.com>
>
> read more »

Kaviyogi Vedham

unread,
Nov 9, 2011, 12:56:38 AM11/9/11
to santhav...@googlegroups.com
அட்டகாசம் என் அன்பு கிரி.. நல்ல சரளமான சந்த நடை. வாழ்க!
யோகியார்

2011/11/8 kirikasan <kanaga...@hotmail.com>
>
> read more »

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

kirikasan

unread,
Nov 9, 2011, 1:08:39 PM11/9/11
to சந்தவசந்தம்
தங்கள் வாழ்த்துக்கள் இன்னுமென்னை மேன்மையுறச்செய்யும். நன்றிகள்
ஐயா!

அன்பும் வாழ்வும்

வெள்ளை மலர்கள் வீசுந்தென்றல் விடியுங் காலைகளும்
உள்ளம் எங்கும் உண்மையன்பும் உலகின்கண் செய்தாள்
தெள்ளத் தெளியும் நீரோடைநற் தேனாம் கனிமரங்கள்
அள்ளித் தூவும் மலர்கள் காட்டின் அமைதி அவள் செய்தாள்

துள்ளித் திரியும் மானின்ஓசை, தூங்கும் இலைதொட்டே
தள்ளும் தென்றற் காற்றின் சத்தம் தந்தே எழில் செய்தாள்
வெள்ளிக் கொலுசாய், விரையும் நதியில் விளையும் சிறுஓசை
கொள்ளை யின்பம் யார்தான் செய்தார் கோலத்திருமகளே

பள்ளித் திண்ணை குருவும் பாடம் பயிலப் பலநூல்கள்
கொள்ளத் திறனும் அறிவும் கொண்ட குணமும் குறுமுகமும்
துள்ளித்திரியும் இளமை இன்பம் தேடும் இரு விழிகள்
வெள்ளிச் சுடரும் விண்ணும்வெளியில் வியக்கும்வகை செய்தாள்

சுற்றுமுலகும் சூழும் அண்டம் சூரிய மண்டலமும்
கற்றும் அறியாக் கற்பனைக் கெட்டாக் காலச் சக்கரமும்
மற்றும் மனமும் மனதில்விரியும், மாபெரும்கற்பனையும்
சற்றும் அறியோம் சக்திஎன்றோர் சக்திதான் செய்தாள்

குற்றம், கொல்லுங் குணமும், குருவி, கொள்ளப் பருந்தினையும்
வற்றும் குளமாய் வாழ்வும் வற்ற, வாடும் மீன்களென
முற்றும்பாசம் அற்றோ ரும் மவர்மௌனப் பெருமூச்சும்
அற்றோர் ஏங்கும் அவலங்களென் றகிலம்கொள வைத்தாள்

விற்றும் வாங்கும் பொருளேயல்ல விளையும் பெருஅன்பு
கற்றுப்பெறுதல், கடனோ அல்லக் கருணை எனும் வெள்ளம்
தொற்றும் நோயாய்ப் பரவி எங்கும் தோற்றம் கொள்வதில்லை
பற்றும் பாசம் படைப்பில் அவளே பார்த்துத் தரவேண்டும்

அன்பே இல்லா உள்ளம் தன்னை அவளே செய்தாளோ
தென்றல் சீறிப் புயலாய் மாறச் சித்தம் கொண்டாளோ
நன்பெய் மழையும் நல்லோர் பயிரும் நாட்டில் வளர்வித்தாள்
வன்மைகொண்டோர் விலங்கைச் செய்து வாழ்வும் அழித்தாளேன்


On Nov 9, 5:56 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> அட்டகாசம் என் அன்பு கிரி.. நல்ல சரளமான சந்த நடை. வாழ்க!
> யோகியார்
>

> 2011/11/8 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> read more »

Kaviyogi Vedham

unread,
Nov 9, 2011, 11:00:11 PM11/9/11
to santhav...@googlegroups.com
இன்னொரு நற்கவிதை.கீழே உளதை ரசித்தேன் நன்கு,
வெள்ளை மலர்கள் வீசுந்தென்றல் விடியுங் காலைகளும்
உள்ளம் எங்கும் உண்மையன்பும்  உலகின்கண் செய்தாள்
தெள்ளத் தெளியும் நீரோடைநற் தேனாம் கனிமரங்கள்
அள்ளித் தூவும் மலர்கள் காட்டின் அமைதி அவள் செய்தாள்

துள்ளித் திரியும் மானின்ஓசை, தூங்கும் இலைதொட்டே
தள்ளும் தென்றற் காற்றின் சத்தம் தந்தே எழில் செய்தாள்
வெள்ளிக் கொலுசாய், விரையும் நதியில் விளையும் சிறுஓசை
கொள்ளை யின்பம் யார்தான் செய்தார் கோலத்திருமகளே
யோகியார்



2011/11/9 kirikasan <kanaga...@hotmail.com>
> ...
>
> read more »

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

thangamani

unread,
Nov 10, 2011, 1:34:11 PM11/10/11
to சந்தவசந்தம்
அன்புள்ள கிரிகாசன்,
உங்கள் பாடல் ஒவ்வொன்றும் மிக அருமை!
சொற்கோவை சரம் சரமாய் வந்து பாடலாய்
பரிமளிக்கும் அழகை சொல்லத் தெரியவில்லை.
பாராட்டுகள்!வாழ்த்துகள்!
உங்கள் உடல்நலனைக் கவனித்துக் கொள்ளவும்.

அன்புடன்,
தங்கமணி.

> > > > > > உன்னைக் காப்பாயே- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »

kirikasan

unread,
Nov 11, 2011, 2:41:50 AM11/11/11
to சந்தவசந்தம்
நன்றிகள் ஐயா! மனம் நிறைவு கண்டு மகிழ்கிறது தங்கள் பாராட்டில்! அன்பான
நன்றிகள்!!

On Nov 10, 4:00 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> இன்னொரு நற்கவிதை.கீழே உளதை ரசித்தேன் நன்கு,
> வெள்ளை மலர்கள் வீசுந்தென்றல் விடியுங் காலைகளும்
> உள்ளம் எங்கும் உண்மையன்பும்  உலகின்கண் செய்தாள்
> தெள்ளத் தெளியும் நீரோடைநற் தேனாம் கனிமரங்கள்
> அள்ளித் தூவும் மலர்கள் காட்டின் அமைதி அவள் செய்தாள்
>
> துள்ளித் திரியும் மானின்ஓசை, தூங்கும் இலைதொட்டே
> தள்ளும் தென்றற் காற்றின் சத்தம் தந்தே எழில் செய்தாள்
> வெள்ளிக் கொலுசாய், விரையும் நதியில் விளையும் சிறுஓசை
> கொள்ளை யின்பம் யார்தான் செய்தார் கோலத்திருமகளே
> யோகியார்
>

> 2011/11/9 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> read more »

kirikasan

unread,
Nov 11, 2011, 2:47:30 AM11/11/11
to சந்தவசந்தம்
மிக்க நன்றிகள்! ஒவ்வொருகவிதையும் அதுவும் இயற்கையின் கற்பனையில்
ஆழ்ந்திருக்கும் போது அது பெரு மருந்தாக தோன்றுகிறது. உடலில் உற்சாகம்
பொங்குகிறது
கவிதை என் நோய்க்கு ஔடதம். நன்றிகள் மீண்டும்

> > > > > > > சின்னகை கொண்டு...
>
> read more »

kirikasan

unread,
Nov 11, 2011, 3:01:48 AM11/11/11
to சந்தவசந்தம்

மதியில்லாத வானமா?

//பாடவா தேடவா பாடி இன்பங்கொள்ளாவா
பால்நிலத்தி லூற்றும் வெண்ணிலா
ஆடவா சூடவா அன்றெழுந்த பொன்னிலா
ஆசைகொண்டு தேன்சுவைக்கும் பா
நாடவா வாடவா நீயிருப்ப தென்னடா
நெஞ்சில் துன்பம் வாட்டும்போதிலா
போடடா பொன்நிலா பூமியில் இருள்வரப்
போயொழித்த மேகமேதடா//

காடெல்லாம் காய்ந்துமே கண்டதென் இல்லையே
காலமொன்று எண்ணும்போதினில்
பாடெல்லாம் பட்டவன் பொன்னொளிர்ந்து மின்னினும்
பார்த்த்த தென்ன போய் நிலத்திலே
நாடெல்லாம் சூரியன் நன்கொளிர்ந்து நின்றவன்
நள்ளி ராவில்கண் ணுறங்கையில்
சூடெல்லாம் வாங்கியே தேகம்மின்னும் பொன்னிலா
செய்வதென்ன கும்மிருட்டினில்

காடெல்லாம் தீயினில் காய்ந்துதீப் பிடிக்கையில்
காற்றுவீசிக் காய்ந்தபோதிலும்
கூடென்றே கூடியே கொண்டதீயும் கொள்ளுதே
கொஞ்ச மாகண் காண மிஞ்சுதே
மூடவே தீயினை மேகம்வந்து தூறட்டும்
மெல்லத் தேன் நிலாவும் மேற்கினில்
காடென சோவெனக் கத்துமாழி வீழமுன்
காணுமாடு மலையில் மின்னிடும்

மின்னல்கள் மின்னிடும் மேகமோ கறுத்திடும்
மேதினியின் தேவை பொழியட்டும்
பன்னெடும் பாதையில் பார்த்துவெள்ளி பூக்கட்டும்
பயனுடைத்த பேச்சு ஓங்கட்டும்
இந்நெடும் வானிலே எத்தனை பௌர்ணமி
இன்னுமென்ற இறைவன் கணக்கிலும்
பின்னங்கள் எச்சங்கள் புரியவில்லை எத்தனை
பிழைகள்விட்டு எண்ணிக் கற்கிலும்

போய்வரும் பாதையில் புதுமைகள் தோன்றுது
பூக்கள்நூறு மலரக்காணுது
தேய்திடும் வெண்ணிலா தேடியே கீழெழும்
தென்றல் வேறுபாட் டிசைக்குது
மேற்கிலே சூரியன் மெல்லவே காணுதே
மின்னலொன்று அங்குமின்னுது
காய்க்குதோ கனியுதோ காற்று அங்குவீசுது
காவல்காத்து கிளியிருக்குது

> > > > > > On...
>
> read more »

kirikasan

unread,
Nov 18, 2011, 2:14:59 PM11/18/11
to சந்தவசந்தம்
இன்பம் எங்கே?

செங்கனிகள் தூங்குமிளஞ் சோலைதனில் தொங்கி
அங்குமிங்கென் றாடுங்கவி ஆற்றலுடை எண்ணம்
திங்கள்எழிற் பொன்வதனச் சேர்மறைகள் மொய்த்த
பங்கமுறும் வண்ணமெனப், பால்நிலவுங் கதிரோன்

செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பில் மின்னி
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணிப் போமோ

தங்குமதன் நெய்பிரியத் தாகமுற்ற தீபத்
தொங்குதிரி கொள்ளொளியின் தோற்றநிலை கொண்டே
வெந் தணலும் உண்ண,வரும் வீழ்புனலில் பட்ட
சந்தணத்தின் நிறமெடுத்த சாந்தரூப உள்ளம்

செங்குருதி குறுகுறுக்கச் சீறுமலை போலும்
பங்கயத்தின் இலைபடிந்த பொய்கையில் நீர்துள்ளி
அங்குமிங்கு ஆடுவதாய் அன்பு கொண்டவாழ்வை
தங்கமெனும் மனமெடுத்தல் தரணியிலே புதிதோ

சிந்தனைக்குள் சினமெழுந்து செந்துளிர்கள்போலும்
வெந்தபுண்ணில் வீழ்நயமாய் வேந்தனுடை வாளும்
தந்தசுகம் என்னருமை, தன்னில் மனம்பாடும்
விந்தைகொள விழிநிறைத்த வியனுலகின் இன்பம்!

> > > > > > அரியதும் அழகதும் உலகோ - இல்லை...
>
> read more »

kirikasan

unread,
Nov 19, 2011, 2:42:50 AM11/19/11
to சந்தவசந்தம்
எனது நண்பனின் மகன் ஒருவன் பத்து வயது. அவரின் இழப்பைக் குறித்து
அஞ்சலிக்காக

பூவே உனைப் பிரிந்து போவென்று சொன்னது யார்?
புன்னகையை நீமறக்கப் பூஞ்செடி ஒடித்தவ ரார்
தாவென்று எமைவிட்டு தவிக்கப் பிரித்தது யார்
தரணியிலே உன்நிழலைத் தனியாய் எடுத்தவ ரார்?
பாவேந்தி நின்பிரிவைப் பரிதவித்தே பாடென்று
பூவேந்தி விழிசொரியப் போடென்று விட்டது யார்?
நாவேந்தி நல்லதமிழ் நீ பேசக் கேட்டிருக்க
சாவேந்தி கொள்ளென்று சஞ்சலத்தை தந்தவர்யார்

பொன்னைப் புழுதியிலும் பூவெடுத்து மண்ணிடையும்
போடும் விதியென்ற பொல்லாப்புத் தான்தெரிந்தால்
அன்னை மடியிருத்தி அணைத்துன்னைக் காத்திருப்பாள்
ஆருயிரே தந்தையுமுன் அன்புயிரை மீட்டிருப்பார்
நேராக வந்திறைவன் நீவேண்டும் என்றுகொளத்
தாரார் இவரென்றோ தனியாக நீயிருக்க
கோரப் பேருருவில் கொழுந்துமுனை கிள்ளுவதாய்
யாரும் அறியாமல் அன்புயிரைக் கொண்டாரோ?

தேறா மனங்கொண்டு தீங்கறியாத் தாய்தந்தை
மாறா அழுதவிழி மாற்றிடவே வாராயோ
சிறுகால் குதித்தோடிச் செல்லமே நடைநடந்து
பெறுமோர் உயர்வாழ்வுப் பேறுடனே இறைசேர்ந்தாய்
தேரேறி யோடித் திசையெங்கும் புகழ்பரவப்
பாராளும் மன்னனெனப் பார்த்துவிட ஆசையுடன்
சீராட்டித் தாய் வளர்த்தாள் சிங்கார பொன்னமுதே
வாராயோ மீண்டுமொரு வாழ்வுபெறத் தாய்மடியில்!
**********

> > > > > மற்றும் மனமும் மனதில்விரியும்,...
>
> read more »

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 19, 2011, 10:15:43 AM11/19/11
to santhav...@googlegroups.com

நெஞ்சைப் பிழியும் கவிதை வரிகளில் சோக உணர்வைக் கொட்டியிருக்கிறீர்கள். அருமை மகவைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு எங்கள் அனுதாபங்கள்.

 

அனந்த்



2011/11/19 kirikasan <kanaga...@hotmail.com>

akila ramasami

unread,
Nov 19, 2011, 10:39:33 AM11/19/11
to santhav...@googlegroups.com
கண்ணில் நீர் வர வைத்தது உம் கவிதை..
இறைவன் உம் நண்பருக்கு நல்ல மனதிடத்தை தர பிரார்த்திக்கும்..
அகிலா ராமசாமி.

 
2011/11/19 kirikasan <kanaga...@hotmail.com>
>
> read more »

It is loading more messages.
0 new messages