தப்பு, தவறு, பிழை, பிசகு: பொருளில் நுண்ணிய வேறுபாடுகள் யாவை?
பாலு
தப்பு- சரியான பாதையிலிருந்து வழிமாறிச் செல்வது
-பிறழ்தல்
வழி தப்பினான்.
வேண்டுமென்றே நிகழ்வதல்ல
எனவே தப்பிலிருந்து தப்பிக்க முடியும்
தவறு- அறிந்தும் அறியாமலும் செய்கிற பிழை
பிழை- அறிந்து செய்கிற தவறு
பிசகு- slip
கை பிசகிக் கொண்டது
இலந்தை
பெண்ணறிவு பேதைமையுடையதாகக் கூறப்படுவதுண்டு.
'உழைத்தவல் இருவினைக்கு ஊறுகாண்கிலாது
அழைத்தயர் உலகினுக்கு அறத்தின் ஆறெலாம்
இழைத்தவர்க்கு இயல்பல இயம்பி என்செய்தாய்
பிழைத்தனை பாவி நின் பெண்மையால்'
இது வாலியின் கூற்றாக வருகிற கம்பன் பாடல்.
ஆக, பிழை - பேதைமையால், சரியானது எது என்று அறியாமையால் செய்வது(அஞ்ஞானம்).
தவறு - ஒன்றைப் பிறிதொன்றாகத் தவறாக அறிந்து செய்தல்(அன்யதாஞ்ஞானம்).
தப்பு - சரியற்றதைச் சரியானதாகக்கருதிச்செய்வது (விபரீதஞ்ஞானம்)
பிசகு -சரியானது எது என்று தெரிந்துகொண்டிருந்தபோதும், கவனக்குறைவால் நேர்வது.
* சரியான பாதையிலிருந்து வழிமாறிச் செல்வது
பிறழ்தல்
வழி தப்பினான்.
வேண்டுமென்றே நிகழ்வதல்ல
எனவே தப்பிலிருந்து தப்பிக்க முடியும் -
இலந்தை
* சரியற்றதைச் சரியானதாகக்கருதிச்செய்வது (விபரீதஞ்ஞானம்) -
ராஜகோபாலன் அப்பன்
* இவற்றையும் யோசிக்க:-
"நீ அவ்வாறு பேசியது தப்பு."
"இந்த[கணக்கின்] விடை தப்பு"
"சரியா, தப்பா?"
"நீ தப்பிவிட்டாய், நான் மாட்டிக்கொண்டேன்".
"........... தப்பாமற் சார்வார் தமக்கு" -பாலு
தவறு:
-----------
* அறிந்தும் அறியாமலும் செய்கிற பிழை -இலந்தை
* ஒன்றைப் பிறிதொன்றாகத் தவறாக அறிந்து செய்தல்(அன்யதாஞ்ஞானம்).
ராஜகோபாலன் அப்பன்
* இவை எவ்வகை?
கை தவறி விழுந்த கண்ணாடி .....
நான் செய்ததில் என்ன தவறு?
வார்த்தை தவறிவிட்டாய்!
எல்லாமே தவறான தகவல்.
சரியா தவறா யார் கண்டார் -
பிழை-
----------
* அறிந்து செய்கிற தவறு -இலந்தை
* பேதைமையால், சரியானது எது என்று அறியாமையால் செய்வது(அஞ்ஞானம்) -
ராஜகோபாலன் அப்பன்
* .ஒப்பிடுக-
....காட்சிப்பிழைதானோ? தோற்ற மயக்கங்களோ? -மஹாகவி
பிசகு
----------
* slip கை பிசகிக் கொண்டது -
- இலந்தை
* சரியானது எது என்று தெரிந்துகொண்டிருந்தபோதும், கவனக்குறைவால்
நேர்வது.
-
ராஜகோபாலன் அப்பன்
----------------------------------------------------------------
இவற்றில் எதெது சரி எதெது தப்பு?
பாலு
=====================================================================================
On Oct 30, 12:24 pm, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:
> பெண்ணறிவு பேதைமையுடையதாகக் கூறப்படுவதுண்டு.
> 'உழைத்தவல் இருவினைக்கு ஊறுகாண்கிலாது
> அழைத்தயர் உலகினுக்கு அறத்தின் ஆறெலாம்
> இழைத்தவர்க்கு இயல்பல இயம்பி என்செய்தாய்
> பிழைத்தனை பாவி நின் பெண்மையால்'
> இது வாலியின் கூற்றாக வருகிற கம்பன் பாடல்.
>
> ஆக, பிழை - பேதைமையால், சரியானது எது என்று அறியாமையால் செய்வது(அஞ்ஞானம்).
> தவறு - ஒன்றைப் பிறிதொன்றாகத் தவறாக அறிந்து செய்தல்(அன்யதாஞ்ஞானம்).
> தப்பு - சரியற்றதைச் சரியானதாகக்கருதிச்செய்வது (விபரீதஞ்ஞானம்)
> பிசகு -சரியானது எது என்று தெரிந்துகொண்டிருந்தபோதும், கவனக்குறைவால் நேர்வது.
> இது என் கருத்து.
> அ.ரா.
>
> Visit arajagopalan.blogspot.com
>
> 2009/10/29 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>
>
>
>
> > தப்பு- சரியான பாதையிலிருந்து வழிமாறிச் செல்வது
>
> > -பிறழ்தல்
>
> > வழி தப்பினான்.
>
> > வேண்டுமென்றே நிகழ்வதல்ல
>
> > எனவே தப்பிலிருந்து தப்பிக்க முடியும்
>
> > தவறு- அறிந்தும் அறியாமலும் செய்கிற பிழை
>
> > பிழை- அறிந்து செய்கிற தவறு
>
> > பிசகு- slip
>
> > கை பிசகிக் கொண்டது
>
> > இலந்தை
>
> > 2009/10/29 n balu <n.balasubraman...@gmail.com>
>
> > தப்பு, தவறு, பிழை, பிசகு: பொருளில் நுண்ணிய வேறுபாடுகள் யாவை?
>
> >> பாலு- Hide quoted text -
>
> - Show quoted text -
தப்பு = error
பிழை = mistake (பிழைத்தல் = to do wrong)
தவறு = Mistake, error
பரீட்சையில் தவறினான். கணக்கில் தப்பு = கணக்கைத் தவறாகப் போட்டான்.
பிசகு = slip
நா. கணேசன்