On Oct 2, 2:16 pm, kargil jay <jaykuma...@gmail.com> wrote:
> முதல் மூன்று பக்கங்களை நான் தட்டுகிறேன். அதாவது 61 - 63 வரை.
>
நன்றி, கார்கில் ஜே. முழுக் கட்டுரையும் கிடைத்தபின்
ஒரு வலைப்பக்கம் செய்துவிடலாம்.
அடுத்து யார்? தட்டச்சுவோர் பெயருடன் வைத்துவிடலாம்.
நா. கணேசன்
அவரிடம் ஸ்ரீ சாமிநாத ஐயர் பழந்தமிழ் இலக்கியங்களின் பெருமையைப்
பற்றிப் பேசி, ஓலைச் சுவடியைப் பார்க்க வேண்டும் என்கிறார்.
“சாயங்காலம் பார்ப்போம்; இப்போது வயலுக்குப் போகிறேன்” என்கிறார்
வீட்டுக்காரர்.
இதற்குள் சுவரில் உள்ள கறையான் கூட்டின் மேல் ஸ்ரீ சாமிநாத ஐயரின்
பார்வை விழுகிறது. “ஐயையோ! பரண்மேல் கறையான் ஏறிக்கொண்டிருக்கிறதே! சுவடி
போய்விடப் போகிறதே! உடனே பார்த்தால் தேவலை!” என்கிறார் சாமிநாதய்யர்.
அவருடைய பதைபதைப்பை வீட்டுக்காரர் வார்த்துவிட்டு, பரண்மேல் ஏணி வைத்து
ஏறி ஓலைச்சுவடியை எடுத்துக் கீழே போடுகிறார்.
சுவடியின் ஓரங்களில் கறையான் வாய் வைத்திருக்கும் அடையாளங்கள்
தெரிகின்றன. ஸ்ரீ சாமிநாதய்யர் அதை அவசரமாக உதறி எடுத்துத் தம் சிரமீது
வைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்.
பிறகு, ஓலைச் சுவடியைப் பிரித்துப் பார்க்கிறார். ஐயரின் கண்கள்
விரிகின்றன. வியப்பினால் அல்ல; அளவிலாத ஏமாற்றத்தினால்! ஏனெனில், அவர்
தேடிவந்த பழந்தமிழ் நூல் ஒன்றும் அந்த ஓலைச் சுவடியிலில்லை. சமீப
காலத்தில் எழுதப்பட்ட உபயோகமற்ற ஸ்தல புராணம் அது. “இவ்வள்வுதானா?” என்று
எண்ணிப் பெருமூச்சு விடுகிறார். “இதுவும் ஒரு மூலையில் கிடக்கட்டும்;
ஏதாவது பிரயோஜனப்படும்” என்று எண்ணி ஓலைச் சுவடியை எடுத்துக்கொண்டு
கிளம்புகிறார். எங்கே? இன்னொரு ஊரில் இன்னொரு வீட்டுப் பரணில் கிடக்கும்
இன்னொரு ஓலைச்சுவடியைத் தேடிக்கொண்டுதான்.
*
தமிழன்பு என்பது இந்தக் காலத்தில் தமிழ் மக்களிடையே பரந்து
பரவியிருக்கிறது. ‘தமிழன்பு’ பற்றி அடிக்கடி பேசுகிறோம்; எழுதுகிறோம்.
தமிழுக்குத் தொண்டு செய்கிறவர்களைப் பாராட்டுகிறோம். அத்தகைய பாராட்டுக்
கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் வந்து கூடுகிறார்கள்;
ஆரவாரிக்கிறார்கள்.
(பக். 64)
On Oct 4, 4:39 am, Tn Elango <tnela...@gmail.com> wrote:
> மூலம் பி டி எப் கொடுங்கள்.. அடுத்த சில பக்கங்களை நான் தட்டச்சுகிறேன்.
>
> இளங்கோ
>
நன்றி, இளங்கோ, இன்னும் 4 (அ) 4.5 பக்கமே உள்ளது.
நான் பக். 64 தட்டி ஆயிற்று.
பிடிஎப் இங்கே:
https://groups.google.com/forum/?fromgroups=#!topic/santhavasantham/sVEXfZeobFI
நா. கணேசன்
(பக். 64)
> 2012/10/3 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > --
>
> --
>
> Follow my blogs on http://tnelango.blogspot.com/
அன்புடன்
நா. கணேசன்
On Oct 5, 3:21 am, Tn Elango <tnela...@gmail.com> wrote:
> பக்கங்கள் 65 முதல் 69 வரை தட்டச்சியது கீழே.
>
> (பக்கம்-65-ஆரம்பம்)
>
> டாக்டர் சாமிநாதய்யர் தமிழ்த்தொண்டு ஆரம்பித்த காலத்தில் இப்படிப்பட்ட
> தூண்டுதல் ஒன்றுமே கிடையாது. எங்கேயாவது அத்தி பூத்தது போல் ஒரு ஜமீன்தார்,
> ஒரு மடாதிபதி, தமிழபிமானம் கொண்டவராயிருந்து தமிழ்த்தொண்டைப் பாராட்டுவார்.
> அவரிடம் ஒடுக்கத்துடன், நல்ல சமயம் பார்த்துப் போய் நிற்க வேண்டும். மற்றபடி
> தமிழ்த்தொண்டுக்கு அன்னாளில் கௌரவம் கிடையாது. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய்
> ஆங்கில ராணியின் முன்னால் கை கட்டி நின்று பணிவிடை செய்த காலம் அது. அத்தகைய
> காலத்தில் டாக்டர் சாமிநாதய்யர் தமிழ்த்தொண்டைத் தொடங்கினார். இடைவிடாமலும்
> சோர்வடையாமலும் செய்து வந்தார். தமிழன்பு என்பது அவரது ரத்தத்திலேயே
> ஊறியிருக்க வேண்டும். தமிழ்ப் பணியில் ஆர்வமானது அவருடைய சதை நரம்புகளில்
> கலந்து, மூச்சு விடுவதைப் போல் இயற்கையோடு இயற்கையாய்ச் சேர்ந்திருக்க
> வேண்டும். அத்தகைய தமிழன்பரை – தமிழ்த் தொண்டரை- இனி எங்கே காணப் போகிறோம்?
> எப்போது காணப் போகிறோம்?
>
> மகாமகோபாத்தியாய சாமிநாதய்யர் பழைய தமிழ்ப் பண்டிதர்களில் பழுத்துக் கனிந்த
> தமிழ்ப் பண்டிதர்; நவீன இலக்கிய ஆராய்ச்சியாளரில் தலை சிறந்த ஆராய்ச்சியாளர்;
> நவயுகத் தமிழ் எழுத்தாளரில் முதன்மையான எழுத்தாளர்!
>
> சாதாரணமாக மனுஷ்யர்களுக்கு வயதாக ஆக, நோக்கம் குறுகிப் போவதையும், புதிய
> எண்ணங்களைக் கிரஹிக்கும் சக்தி குன்றிவிடுவதையும் பார்க்கிறோம். அதிலும்
> தமிழ்ப் புலவர்கள் வயது ஆகஆகக் கறடு தட்டிய ‘பண்டித’ மனப்பான்மையை
> அடைகிறார்கள். டாக்டர் உ.வே.சாமிநாதய்யரிடம் இதற்கு நேர்விரோதமான இயல்பைக்
> கண்டோம். வயதாக ஆக. அவருடைய மன்ம் விசாலமாகி வந்தது. தமிழ் வசன நடையில்
> ஏற்பட்டுவந்த மாறுதல்களை அவர் பெரிதும் ரஸித்து அனுபவித்தார். அதைவிட
> ஆச்சரியம் என்னவென்றால், புதிய எளிய தமிழ் நடையைத் தாமே பின்பற்றி எழுதவும்
> தொடங்கினார்; அதில் வெற்றியும் அடைந்தார். இலக்கிய உலகத்தில் இது ஒரு பெரிய
> அற்புதம் என்றே கூற வேண்டும்.
>
> O
>
> சுமார் பத்து வருஷத்துக்கு முன்பு டாக்டர் உ.வே.சாமிநாதய்யரை முதன்முதலாக நான்
> பார்த்தேன். ஒரு விசேஷ ஆண்டு மலருக்குக் கட்டுரை கேட்கும் நோக்கத்துடன்
> அவரிடம் சென்றேன். போகும்போது நெஞ்சு கொஞ்சம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.
> அந்த பழந்தமிழ்ப் பண்டிதர் நம்மை எவ்விதம் நடத்துகிறாரோ என்ற பயந்தான் காரணம்.
>
> (பக்கம்-65-முடிவு)
>
> காலஞ்சென்ற வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியாரைப் பற்றிக்
> கேள்விப்பட்டிருக்கிறேன். அவரிடம் வருகிறவர்களைப் பார்த்து சாஸ்திரியார்
> “நீவிர் யாண்டுப் போந்தீர் ?” என்று கேட்பாராம். தமிழ்த்தாத்தா அப்படியெல்லாம்
> என்னைத் திண்டாட வைக்கவில்லை. நம்மையெல்லாம் போlல் சாதாரண வீட்டுத் தமிழிலேயே
> பேசினார். நான் இன்னாரென்று தெரிவித்துக் கொண்டதும், “டி.கே.சிதம்பரநாத
> முதலியார் உம்மைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்” என்றார். எனக்கு அப்போது
> டி.கே.சிதம்பரநாத முதலியார் இன்னார் என்பதே தெரியாது. அவர் எதற்காக என்னைப்
> பற்றிச் சொல்லியிருக்கப் போகிறார் என்று திகைத்தேன். என்னுடைய திகைப்பை
> அதிகமாக்கும்படியாகத் தமிழ்த் தாத்தா மேலும் ஒரு விஷயம் சொன்னார். அதற்குச்
> சிலகாலத்துக்கு முன்பு, முதல்முதல் வெளியான தமிழ் பேசும்படத்தைப் பற்றி,
> “தமிழ்ப் பாட்டி” என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். “தப்பிலி
> கப்”என்ற கதையொன்றும் வெளியாகியிருந்தது. மேற்படி கட்டுரையையும்
> கதையையும் பற்றித்
> தமிழ்தாத்தா திருப்பித் திருப்பித் தமது பாராட்டுதலைத் தெரிவித்தார். தாம்
> ரஸித்த சில சில வாக்கியங்களையும் அப்படியே சொன்னார். எனக்கு இதெல்லாம் ஒரு
> பக்கம் சந்தோஷமாயிருந்தாலும், இன்னொரு பக்கம் சங்கடமாயிருந்தது. எனவே, பேச்சை
> மாற்றும் பொருட்டுச் சுற்றிலும் இருந்த தமிழ் ஓலைச்சுவடிகளைப் பற்றிப்
> பிரஸ்தாபித்தேன். உடனே தமிழ்த் தாத்தா தமது பழைய அனுபவங்களைப் பற்றிப் பேச
> ஆரம்பித்தார். அவை மிகவும் ரஸமாயிருந்தன. உணர்ச்சியுடன் நகைச்சுவை
> பொருந்தியும் இருந்தன. அன்று அவர் சொன்னவற்றில் ஒன்று இன்னமும் எனக்குத்
> தெளிவாய் ஞாபகமிருக்கிறது.
>
> மற்றவர்களைப் புத்தகம் எழுதச் சொல்லித் தம் பெயரால் வெளியிடும் மகாநுபாவர்
> ஒருவர் இருந்தாராம்! அவர் ஒரு நாள் ஐயர்வாளைப் பார்க்க வந்தார். வந்தவர், அந்த
> அறையில் அடுக்கியிருந்த ஓலைச் சுவடிகளை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாராம்.
> உடனெ ஐயர்வாள் “இதோ பாரும்! நீர் என்னைப் பார்க்கத்தானே வந்ததாகச் சொன்னீர்?
> என்னை பார்க்க வந்திருந்தால் என்னைப் பார்த்துப் பேசும்; இல்லாவிட்டால்
> நடையைக் கட்டும். அங்கே இங்கே பார்த்து விழிக்க வேண்டாம்!” என்றாராம்.
>
> இம்மாதிரி எவ்வளவோ சம்பவங்கள் சொன்னார். ஒரு சமயம் ரசிகரான ஒரு ஜமீன்தார்
> முன்னிலையில் ஸ்ரீ சாமிநாதய்யரும், இன்னொரு தமிழ்ப் பண்டிதரும்
> இருந்தார்களாம். ஜமீன்தார் அந்த இன்னொரு தமிழ்ப் பண்டிதரைப் பரிகாசமாய்ப்
> புகழ்ந்து “சாமிநாதய்யருக்கு என்ன தெரியும் ? பழைய
>
> (பக்கம்-66-முடிவு)
>
> ஓலைச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருப்பார். உம்மைப் போல் அவரால்
> நிமிஷத்துக்கு ஒரு பாட்டுப்பாட முடியுமா ?” என்றாராம். இந்தப் புகழ்ச்சியை
> அந்தப்பண்டிதர் உண்மை என்று நினைத்து தம்முடைய மார்பைப் பார்த்துக் கொண்டு
> சந்தோஷப்பட்டாராம். இதை ஐயர்வாள் சொன்னவுடனே, நான் “ தாங்கள் கூடக் கொஞ்ச
> நேரத்துக்கு முன்னால் என்னுடைய எழுத்துத் திறமையை ரொம்பவும் பாராட்டினீர்கள்.
> சிறு பிள்ளையாச்சே என்று ஊக்கப் படுத்துவதற்காகத் தாங்கள் சொன்னதையெல்லாம்
> நான் அப்படியே நிஜமென்று எடுத்துக் கொள்ளலாமா ?” என்றேன். தமிழ்த்தாத்தா
> ‘குபீர்’ என்று சிரித்த சிரிப்பின் ஒலி இன்னும் என் காதில் தொனிக்கிறது.
>
> இதையெல்லாம்விடப் பெரிய ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. ஆண்டு மலருக்குத்
> தமிழ்த்தாத்தாவின் கட்டுரை வந்தது. ‘பரம்பரைக்குணம்’ என்னும் தலைப்புடன்,
> உண்மையாகவே நடந்த சம்பவம் ஒன்றை, எளிய பேச்சுமுறையில் ரஸமாக எழுதியிருந்தார்.
> பழைய காலத்துத் தமிழ்ப் பண்டிதர் ஒருவர்-அதிலும் பண்டித உலகில் இவ்வளவு எளிய
> நடையில் எழுதக்கூடும், எழுதும் துணிச்சல் அவருக்கு ஏற்படும் என்று நான்
> கனவிலும் நினைக்கவில்லை.
>
> அது முதல் நான் சிலசமயம் தனியாகவும், பெரும்பாலும் டி.கே.சி.யுடனும்
> தமிழ்த்தாத்தாவை அடிக்கடி பார்க்கப் போவதுண்டு. அப்போதெல்லாம் அப்பெரியாரின்
> வாழ்க்கை அநுபவங்கள் சிலவற்றை அவருடைய வாய்மொழியாகக் கேட்க நேரும். கேட்கக்
> கேட்க, அந்த அநுபவங்களையெல்லாம் அவர் புத்தகமாக எழுதவேண்டும் என்று ஆசை
> உண்டாகும். “உங்களுடைய சுய சரித்திரத்தை நீங்கள் எழுத வேண்டும்” என்று
> அடிக்கடி தெரிவித்துக் கொள்வோம். மகாத்மா, ஜவாஹர்லால் நேரு முதலியவர்கள் ‘சுய
> சரிதம்’ எழுதியிருப்பதையும் எடுத்துக்காட்டுவோம். “என்னுடைய சரித்திரத்தை நானே
> எழுதிக் கொள்வது என்பது பிடிக்கவில்லையே !” என்பார் ஐயர்வாள். ஆனாலும் நாங்கள்
> விடுவதில்லை. “அதில் ஒரு பிசகும் கிடையாது. தங்களுடைய சுய சரித்திரம் என்றால்,
> அது தமிழ்நாட்டின் எண்பது வருஷத்துச் சரித்திரமாக அல்லவா இருக்கும் ?” என்று
> வற்புறுத்துவோம். எங்களுடைய வேண்டுகோளை அவருடைய அருமைப் புதல்வர் ஸ்ரீ கல்யாண
> சுந்தரமய்யரும். அவருடைய தலைசிறந்த சிஷ்யரான கி.வா. ஜகந்நாதய்யரும்
> ஆதரித்தபடியால், கடைசியில் எங்கள் மனோரதம் நிறைவேறிற்று. தமிழ்த்தாத்தா தமது
> சுய சரித்திரத்தை எழுதச் சம்மதித்து எழுதியும் வந்தார். அது
> பூர்த்தியாவதற்குள் அவர் காலஞ்சென்றது தமிழ்நாட்டின் பாக்கியக் குறைவேயாகும்.
>
> (பக்கம்-67-முடிவு)
>
> தமிழ்த்தாத்தாவை நான் பார்க்கப் போன சமயங்களில் அவரிடம் நான் கண்ட ஒரு
> அருமையான குணம் சிஷ்யர்களிடம் அவருக்கிருந்த அன்புதான். அவருடைய சிஷ்யர்களில்
> எனக்குத் தெரிந்தவர் ஸ்ரீ கி.வா.ஜகந்நாதன். ‘கலைமகள்’ பத்திரிகையின் துணை
> ஆசிரியராயிருந்து திறம்பட நடத்தி வருகிறவரும், புதுமுறையில் சிறுகதைகள் பல
> எழுதியுள்ளவருமான ஸ்ரீ ஜகந்நாதன், குருவையே தெய்வமாகக் கருதும் உத்தம சிஷ்யர்.
> அவருடைய குரு பக்திக்கு ஈடாக, அவரிடம் தமிழ்த்தாத்தா கொண்டிருந்த அன்பைத்தான்
> சொல்லலாம். நான் ‘தியாகராஜ விலாச’த்துக்குப் போகும் சமயங்களில் ஸ்ரீ ஜகந்நாதன்
> அங்கு இல்லாவிட்டால், டாக்டர் சாமிநாதய்யர், “உங்கள் நண்பருக்குச் சதா உங்கள்
> ஞாபகந்தான். அவரை இதோ அழைத்து வரச் செய்கிறேன்” என்பார். உண்மையில் அவர்
> இந்தச் சாக்கிட்டுத் தமது சிஷ்யரைப் பார்க்க விரும்புகிறார் என்று எனக்குத்
> தோன்றும். அந்திய காலத்தில், தமிழ்த் தாத்தாவின் ஆராய்ச்சி வேலைகளுக்கும்
> எழுத்துத் தொண்டுக்கும் உற்ற துணையாயிருந்தவர் ஸ்ரீ ஜகந்நாதய்யர்;
> அய்யர்வாளின் வரலாறு முழுவதையும் அவரிடம் பலமுறை கேட்டறிந்தவர். ஆகவே, குரு
> தமது சுயசரிதத்தை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துச் சீடர் அவருடைய வரலாற்றைப்
> பூர்த்தி செய்வாரென்று நம்புகிறேன்.
>
> O
>
> எப்பேர்ப்பட்ட மகான்களையும், பெரியவர்களையும் நாக்கில் நரம்பில்லாமல்
> தூஷிக்கக்கூடிய புண்ணியாத்மாக்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள். காந்திஜியும்,
> ராஜாஜியும் படுகிறபாட்டில் மற்றவர்கள் எல்லாம் எந்த மூலை? “உ.வே.சாமிநாதய்யர்
> அப்படி என்ன பிரமாதமான தமிழ்த்தொண்டு செய்துவிட்டார் ? புத்தகம் போட்டுப் பணம்
> சம்பாதித்தார் !” என்று சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். புத்தகத்
> தொழிலைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் இதை நம்பவும் கூடும். எத்தனை பக்கம்?
> என்ன அச்சு? எந்த மாதிரி பைண்டு? என்ன காகிதம்? என்பதொன்றும் தெரியாமலே ‘விலை
> ஆறு ரூபாயா? கொள்ளை!” என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நமது
> தமிழ்த் தாத்தா புத்தகம் போட்டுப் பணம் சம்பாதித்த கதையை நான் அறிவேன்.
> சாதாரணமாய், ‘ரெயினால்ட்ஸ்’ நாவல்களை மொழிபெயர்த்து வெளியிட்டவர்கள் அடைந்த
> லாபத்தைக் கூட அவர் அடையவில்லை. ஏனென்றால், எவ்வளவோ உழைப்பின் பேரில் அவர்
> பரிசோதித்து வெளியிட்ட அரிய நூல்கள் எல்லாம் மிகச் சில தமிழன்பர்களே
> வாங்கக்கூடியவை. ஆயிரம் பிரதிகளுக்குக் குறைந்து எந்தப் புத்தகமும் வெளியிட
>
> (பக்கம்-68-முடிவு)
>
> முடியாது. வெளியிட்டால் அசாத்திய விலை வைக்கவேண்டும். தமிழ்த்தாத்தா போட்ட
> புத்தகங்களோ வெளியான ஒரு வருஷத்திற்குள் சாதாரணமாக 200,300 பிரதிகள்தான்
> விற்பனையாகும். அப்புறம் மாதத்துக்கு ஒரு புத்தகம் விற்றால் பெரிய காரியம்.
> அரிய தமிழ்ப் பொக்கிஷங்கள் என்று சொல்லக் கூடிய புத்தகங்கள் விற்பனையாகாமல்
> ஒரு வீடு நிறையக் கிடப்பதை நான் அறிவேன். வீட்டுக்கு வாடகை வேறு கையை
> விட்டுக்கொடுத்து வருகிறார்கள் ! மகா மகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
> திராவிட வித்யாபூஷணம் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் தமக்கு வினாத்தெரிந்த
> காலத்திலிருந்து தமிழ்த் தாய்க்குச் செய்து வந்திருக்கும் ஒப்பற்ற தொண்டுக்கு
> நாம் நன்றி செலுத்த விரும்பினோமானால், அவருடைய ஞாபகத்தைப்போற்ற
> விரும்பினோமானால் அதற்கு மேற்படி புத்தகங்களில் சிலவற்றை வாங்கிக் கொள்வதைக்
> காட்டிலும் சிறந்த மார்க்கம் வேறு எதுவுமே கிடையாது.
>
> O
>
> (பக்கம்-69-முடிவு)
>
> 2012/10/4 Anna Kannan <annakan...@gmail.com>
>
> > பெட்டகம் பிறக்கட்டும். பெருமைகள் சேரட்டும்.
>
> > நா.கணேசன், கார்கில் ஜெய், இளங்கோ, பவளா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.