உள்ள வெள்ளம்

766 views
Skip to first unread message

Chandar Subramanian

unread,
Jun 27, 2010, 9:47:10 PM6/27/10
to santhav...@googlegroups.com
உள்ள வெள்ளம்
 
 
ஊற்றென உளத்துள் தோன்றும்
.. உணர்வுகள் தொண்டை சேருங்
காற்றினை உதறச் செய்து
.. கவிதையாய் உதட்டுக் கீனும்;
ஏற்புடைத் தரத்தில் உண்டா
.. இலக்கணம் சரியா என்று
சாற்றிடும் போதென் நெஞ்சம்
.. சரிவரப் பார்ப்ப தில்லை (1)
 
 
மீட்டிடின் நீளும் நாதம்
.. முதற்செவி சேரும் முன்னர்
ஊட்டிடும் விரலி னூடே
.. உணர்வினால் உள்ளம் சேர்ந்து
காட்டுமோர் மோக மாயை,
.. காண்கையில் மயங்கும் போது
கூட்டியோ குறைத்தோ பாட்டைக்
.. கொன்றிடல் இயல்பு தானோ? (2)
 
 
ஆழ்கடற் குடித்த நீரை
.. அணைத்திடும் மேகம் போன்றே
வாழ்வியல் பயிற்றும் பாடம்
.. வகைபல, வாங்கிச் சேர்த்து
மூழ்கியே அதனுள் முத்தை
.. முனைப்புடன் நாடித் தேர்வேன்,
சூழ்ந்தஇவ் வரங்கச் சான்றோர்
.. சொல்கவென் தவற னைத்தும் (3)
 
 
கரைவழி எங்கும் தோன்றும்
.. கண்வழிக் காட்சி நெஞ்சில்
வரைந்திடும் ஓவி யத்தை
.. வண்ணமும் நனவும் சேர்த்து;
நுரைத்திடும் நெஞ்சில் நின்று
.. நுண்ணிய கனவே சொல்லால்
உரைத்திடும் கவியாய் மாறும்,
.. உணர்வது கவிதை தானே (4)
 
 
மோதிடும் உணர்வாய் நெஞ்சில்
.. முளைத்திடும் கவிதைப் போது;
யாதிலும் கவிதை காணும்
.. யந்திரம் ஆகும் நெஞ்சம்;
வேதமும் விண்ணார் தெய்வம்
.. வேதனும் கண்கள் பார்த்த
காதலும் அழகாய்த் தோன்றும்
.. காட்சியும் கவிதை ஈனும் (5)
 
 
கங்கையாய் தலையில் வெள்ளம்,
.. கைவழி விரலில் ஊறி
பொங்கிடும் கவிதை யாக
.. புதுப்புது வடிவங் கொண்டே;
பங்கிடப் பெருகும் தீபோல்
.. பரவிடும் பொருளே இஃதும்
இங்கினி இயன்ற நேரம்
.. இயல்வ-தும் இதயம் ஏறும் (6)
 
 
சேயதன் சித்தி ரத்தை
.. தேர்ந்திடா தாயும் உண்டோ?
தீயெனச் சொன்ன துண்மை,
.. தேடிவோர் கவிதை தந்தேன்;
வாயுவின் வீச்சே தன்முன்
.. வளர்தழல் எரியச் செய்யும்;
தாயென நீரே ஆகித்
.. தணலெனை ஊதிக் காப்பீர் (7)
 
 
கண்படும் காட்சித் தென்றல்
.. கனவெனும் முகிலைத் தள்ளும்;
எண்ணமும் கனவும் சேர
.. இடித்தெழும் கவிதைக் கீற்று;
வண்ணமாய் வானில் தோன்றும்
.. வடிவமாம் வளைந்த வான்வில்;
மண்ணெலாம் நனைக்கப் பெய்யும்
.. மழையது சுவைதா னன்றோ (8)
 
 
இத்தரை மரத்தின் மீதே
.. இனித்திடும் பழமும் உண்டு;
மெத்தவே விளைச்சல் தந்தும்
.. மாறுமோ இனிப்பின் தன்மை? 
நித்தமோர் சுவையிற் தோய்த்து
.. நின்மன வாயில் சேர்க்கும்
வித்தைசேர் உள்ளம் ஒன்று
.. விளைந்திடும் கவிதை நூறு  (9)
 
 
பாட்டுடைப் பொருளாய் கண்ணில்
.. படும்பொருள் யாவும் மாறும்;
பூட்டிய நெஞ்சின் தாழ்ப்பாள்
.. பொடியுறத் துவங்கும் பாட்டும்;
கூட்டிட வரிகாண் சொற்கள்
.. கோலமாய் மாறி முன்னர்
கேட்டிடாக் கவிதை யாக
.. கொட்டிடும் கோல ஜாலம் (10)
 
 
சொல்லினுள் உணர்வும் உண்டோ?
.. சொலச்சொல சேர்ந்த சொத்தோ? 
கல்லினுள் சிற்பம் ஒன்றை
.. கடைந்தவன் காண்ப தைப்போல்
மெல்லவே இதயம் தேய்த்து
.. மெருகிடக் கவிதை யேற்ற
புல்லிலை பூவில் கூடப்
.. புதுப்புது வண்ணம் சேரும் (11)
 
 
உள்ளமே நதியின் மூலம்,
.. உடைந்தெழும் கவிதை ஆறு;
வெள்ளமே நதியின் ஓட்டம்
.. வெளியெழும் உணர்வின் ஊற்று;
பள்ளமா மேடா என்று
.. புதுப்புனல் பார்த்தா பாயும்?
உள்ளெழும் கவியி னூடே
.. உதிரியாய் தவறும் சேரும்  (12)
 
 
செல்வழி உருளும் கற்கள்
.. தெளிந்திடச் செய்யும் நீரை;
கல்வழி மன்றத் தோரென்
.. கவிதையின் களங்கம் நீக்கி
சொல்வதில் தவற றுத்து
.. தூய்தமிழ் மொழியில் நானும் 
வல்லமை பெறவே நல்ல
.. வழியதைக் காட்டிச் செல்வீர் (13)


--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Dr Subramanian

unread,
Jun 27, 2010, 11:59:53 PM6/27/10
to santhav...@googlegroups.com
அன்பு சந்தர்


பாட்டுடைப் பொருளாய் கண்ணில்
.. படும்பொருள் யாவும் மாறும்;
பூட்டிய நெஞ்சின் தாழ்ப்பாள்
.. பொடியுறத் துவங்கும் பாட்டும்;


பலே ..இந்த உணர்வுதான் கவிதையின் தளம்; கற்பனையின் களம்.
வவேசு

2010/6/28 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Dr.V.V.Subramanian
Director-Exec
Phycospectrum Consultants Pvt.Ltd;
Chennai, 600083
044-24748674

Chandar Subramanian

unread,
Jul 1, 2010, 10:13:17 PM7/1/10
to santhav...@googlegroups.com
குரு பக்தி
 
 
அ) இறை வணக்கம்
 
 
காலவெளி யெல்லாங் கடந்தோர் நிலைநிற்கும்
மூலவனே, தட்சிணா மூர்த்தியே - பாலருக்கு
முன்நாள் வழங்கினாய் மௌனவழி, இன்றிங்கே
என்பாப் பொருளாய் இரு
 
 
(பிரம்மனின் புதல்வர் நால்வரும், முக்தியடைய சிவனிடம் வந்த போது, இறைவன் தக்ஷிணா மூர்த்தியாய் காட்சியளித்து, மௌனத்தால் வழி அருளினார்.)
 
 
ஆ) குரு பக்தி
 
 
பண்போ டடக்கம், பயபக்தி, நம்பிக்கை,
தொண்டாய்ப் பணியாற்றல், தாளடைதல் - திண்ணார்
விருப்பொடு, நல்வாழ்வின் முன்வழி என்றாய்
குருபக்தி எண்கூறே காண்
 
 
(விருப்பம், நம்பிக்கை, பண்பு, அடக்கம், தொண்டு, பக்தி, சரணாகதி, பின்பற்றுதல்)
 
 
1) பண்பு
 
 
கல்லாய் எரிகரியாய் கண்டெறியும் சூடமாய்
நில்லா தொருநிலையாய் நின்று,குரு - சொல்லாப்
பொருளும் தெளிவான் பெருஞ்சீடன்; பண்பாய்க் 
கருதும் குணமிதுவே காண்
 
 
2) அடக்கம்
 
 
தன்நிலையைத் தான்தாழ்த்தித் தன்குருவை என்றுமுள
முன்னிலையில் வைத்தே முயல்பவனை, - வன்மையாய்
எண்ணத்தும் எண்ணானை, என்றும் தொழுவானை,
கண்ணொக்கக் காப்பார் குரு 
 
 
3) பக்தி
 
 
வற்றாப் பிணையுழற்றும் வாழ்வென்னும் ஆழ்கடலில்
ஒற்றைப் படகாய் ஒருவரவர் - தொற்றியுடன்
பாரத்தை அங்கிறக்கப் பாதை தெரிந்துநமை
சேரச்செய் யுங்கைத் துடுப்பு 
 
 
4) நம்பிக்கை
 
 
நம்மைத் துலக்குமந் நாலிரண்டு கூறுகளில்
செம்மை துலங்குவழி யாதெனின் - நம்பிஅவர்
எண்ணம் செயற்பா(டு) எழுத்திவை மூன்றையும்
திண்ணமாய் எண்ணும் திடம்
 
 
5) ஆர்வம்
 
 
பார்வை விரித்துப் படும்யாவும் உட்பதித்துச்
சோர்வை அகற்றிச் செயற்றெரிவம் - ஆர்வமிகு
நோக்கத்தால் நூலுள் நுணங்கி அவர்தரும்
ஊக்கத்தாற் காண்பம் வழி
 
 
6) தாளடைதல்
 
 
எழுகிளைபூ காயிலைவேர் ஈன்விதையு மன்று,
விழுதொன்றே கால்கடந்து வாழும் - தொழுதிடின்
நாளென்றும் நற்குருவால் நன்றாகும்; நம்பியவர்
தாளண்(டு) அவரே தரு
 
 
7) விருப்பம்
 
 
பள்ளங்கொள் மண்ணார் பரப்பிடையே பாய்ந்தோடும்
வெள்ளங்கொள் வேகம் உயர்ந்தேகும் - உள்ளத்துள்,
வற்றாப் பசியிருப்பின் வந்தமுது வாயூட்டும்
நற்றாய் குருவை நினை 
 
 
8) முன்வழி
 
 
சொல்லும் வழிபோன்றே செய்வரவர் பாதைதனில்
செல்கையில் நம்வாழ்வும் செம்மையுறும் - நல்லமுதை
கொண்டே கடல்சேர்க்கும் கோலநதி யோடிணைய
உண்டாகும் உய்யும் வழி
 
 
-----
(வேறு)
 
 
நடந்திடப் பழகிப் பின்னர்
.. நற்குரு வழியைப் பற்றிக்
கடந்திடும் நதியாய், ஓடிக்
.. கலந்திடும் கடலில் நீரும்,
தொடர்ந்திடும் மழையாய் மீண்டும்
.. தூயவள் புவியின் மண்ணில்
படர்ந்திடும், குருவின் பாதம்
.. பணிவதே இயற்கை யாமே (1)
 
 
ஊறுநீர் நிலத்தில் நெல்லும்
.. ஊன்றியே சார்ந்து வாழும்;
சாறதே மணியாய் மாறச்
.. சாய்த்திடும் அதன்சூல் பாரம்;
மீறிடின் வீசுங் காற்றால்
.. நெல்மணி விரயம்; பெற்றப்
பேறினை மறவா தென்றும்
.. பணிவதே இயற்கை யாமே (2)
 
 
வேரிலாக் காளான் காற்று
.. வீசிட விண்ணில் மேயும்;
கீரையின் வேரைக் கையாற்
.. கிளர்ந்தெழப் பிடுங்கக் கூடும்;
தேரிய விழுதை மண்ணிற்
.. சேர்த்திடும் ஆலே வாழும்;
சாரத்தின் பதத்தை மெத்தச்
.. சார்தலே இயற்கை யாமே (3)
 
 
முன்னவா, முதல்வா போற்றி;
.. முதல்மறை இறையே போற்றி;
தென்னவர் திருவே போற்றி;
.. தட்சிணா மூர்த்தி போற்றி;
என்னையிவ் அரங்கம் சேர்த்து
.. என்கவி முழங்கச் செய்தாய்;
உன்னையே வணங்கி நானும்
.. உரைப்பதை முடித்து நின்றேன். (4)
 
 
குறிப்பு: 30/5/10 அன்று திரு கவியோகி அவர்களின் யோகாஸ்ரம நிகழ்ச்சியின் போது படிக்கப்பட்ட பாடல்.

SUBBAIER RAMASAMI

unread,
Jul 1, 2010, 10:40:23 PM7/1/10
to santhav...@googlegroups.com

நற்குரு பெருமை யெல்லாம்

     நலம்தரும் சொற்க ளாலே

விறபன மாக இங்கே

      விரித்தனர் சந்தர், வாழ்வின்

நற்பயன் குருவின் பார்வை

      நம்வயின் கிட்டச் சேரும்

அற்பனும் குருவின் வாழ்த்தால்

      அறிஞனாய் மாற லாகும்

 

இலந்தை

 



2010/7/1 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 2, 2010, 5:25:45 AM7/2/10
to santhav...@googlegroups.com
ரொம்ப நன்றி சந்தர்!..
 எங்கே இன்னொரு முறை யான் படிக்க, சேமிக்க உன் கவிதையை இவண் இடாமல் போவாயோ என எண்ணினேன்
 நல்லவேளை. இப்போதிட்டனை.. வாழ்க.
 அழகிய கருத்துள்ள கவிதை. சேமித்துக்கொண்டேன்.
 யோகியார்

2010/7/2 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 3, 2010, 4:22:13 AM7/3/10
to santhav...@googlegroups.com


2010/6/28 Dr Subramanian <vav...@gmail.com>

அன்பு சந்தர்


பாட்டுடைப் பொருளாய் கண்ணில்
.. படும்பொருள் யாவும் மாறும்;
பூட்டிய நெஞ்சின் தாழ்ப்பாள்
.. பொடியுறத் துவங்கும் பாட்டும்;


பலே ..இந்த உணர்வுதான் கவிதையின் தளம்; கற்பனையின் களம்.
வவேசு

 
உங்கள் கருத்துக்கு நன்றி

Chandar Subramanian

unread,
Jul 3, 2010, 4:31:03 AM7/3/10
to santhav...@googlegroups.com
ஆகுமென் றென்னை வாழ்த்தும்
.. அன்புடை நெஞ்சம் நோக்கிப்
போகுமென் நன்றி யாவும்,
.. புதுப்பலன் பெற்று நின்றேன்.

2010/7/2 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 3, 2010, 4:32:05 AM7/3/10
to santhav...@googlegroups.com
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
 


 
2010/7/2 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Jul 4, 2010, 10:07:21 PM7/4/10
to santhav...@googlegroups.com
அறன் வலியுறுத்தல்
 
 
அல்லதைச் செய்யா நிற்கின்
.. அளவிலா தமையும் அன்பு;
நல்லதைச் செய்வோர்க் கென்றும்
.. நலமெலாம் தானே சேரும்;
புல்லதைக் களைந்த கைக்குப்
.. பயன்தரும் பயிரைப் போன்றே,
செல்வமும் சிறப்பும் ஈனும்
.. சிதைவிலா அறமே சொத்து (1)
 
 
சேயது மறக்கா தன்பைத்
.. தினம்தினம் சுரந்த தாயை;
வாயது ரைக்கா தென்றும்
.. உளமதில் உணராப் பேச்சை;
ஆயதாய் அமைந்த வாழ்வை,
.. அறமனம் அளிக்கச் செய்யும்;
தூயதாம் மனித வாழ்வில்
.. தனதறம் மறத்தல் தீதே (2)
 
 
பெய்ம்மழை பொழியும் போது
.. பெறுநிலம் தெரிந்தா பெய்யும்?
வெய்யிலின் ஒளியும் சீராய்
.. விழும்வெளி ஒளிரச் செய்யும்;
மெய்வழிக் கொன்றே நோக்கம்,
.. பலனிலை, பணிய தொன்றே;
செய்வினை யாவும் நல்லச்
.. செயலென அறமாய்ச் செய்க (3)
 
 
வெள்ளமாய் ஓடும் ஆறும்
... மணற்கிணற் றடிநீ ராமோ?
முள்ளுடை மலரின் தேனில்
.. முகிழ்ந்திட வருமோ வண்டு?
உள்ளமுள் உறுத்தும் மாசை
.. ஒளித்திடல் அறனே இல்லை;
கள்ளமே கவரா நெஞ்சம்,
.. கனியதே, பிறவாம் தாழ்வே (4)
 
 
தாமெனும் அகந்தை கொண்டே
.. தழைத்திடும் பொறாமை எண்ணம்,
வாமன வடிவங் கொண்டே
.. வளர்ந்திடும் உதவா ஆசை,
நாமதை அறியாப் போதில்
.. நமதறி வழிக்கும் கோபம்,
தீமொழி பயிலும் நாவும்
.. துறப்பதே அறமாய்க் காண்க (5)
 
 
மூழ்கிடும் சமயம் பார்த்தா
.. முறைப்படி நீச்சற் கற்போம்?
சூழ்நிலை பாரா தென்றும்
.. தொடர்ந்தறம் செய்தல் வேண்டும்;
தாழ்படர் விழுதே ஒர்நாள் 
.. தளர்ந்திடும் தருவைத் தாங்கும்;
வீழ்கையில் விலகா தென்றும்
.. வருந்துணை அறமே காண்க (6)
 
 
பள்ளமாய் பகுதி பார்த்தே
.. பரவிடும் நீரும், மேடாய்
உள்ளதால் விளைச்சற் காணா(து)
.. உயர்நிலம் வரண்டு காயும்;
வெள்ளமே அறமாம், கள்ளம்
.. உவர்நிலம்; சிவிகை மஞ்சம்
கொள்பவன் சுகமும், ஏந்தும்
.. குழுவினர் பாடும் இஃதே (7)
 
 
கோள்பல இருக்கும் வானில்
.. குளிர்ச்சியாய் ஒளிரும் விண்மீன்;
நாள்மிகு பயணம் செய்தே
.. நம்மிடை ஒளியும் சேரும்;
நாள்தொறும் அறம்நாம் காப்பின்
.. நம்புகழ் ஒளிபோல் நீளும்;
மாள்பவன் அறமே சாகா
.. வாழ்வினை வளர்க்கும் வீதி (8)
 
 
நன்னலம் பயக்க நாளும்,
.. நமதுளத் தறமே நன்று;
பொன்னினும் பெரிய பேறாய்,
.. பொருள்மிகு அறமே செல்வம்;
அன்பெனும் அரிய மேகம்
.. அறமழை பொழியும் நாளும்;
இன்பமே அறத்தாற் கூடும்,
.. இலையறன் எனிற்காண் கேடே (9)
 
 
உய்யவோர் வழியே உண்டு,
.. உலகினில், அறமே அஃது;
மெய்வழிப் பயணஞ் செய்ய
.. மெய்த்துணை அறமே ஆகும்;
கைவழிப் பலன னைத்தும்
.. கிடைத்திடும் அறத்தைக் காக்கின்,
செய்கவே அறமே என்றும்,
.. செயத்தகாப் பழியொ ழித்தே (10)
 
 
திருக்குறளின் 'அறன் வலியுறுத்தல்' அதிகாரத்தின் பொருள் பற்றிய எனது புரிதலை, விருத்தப் பதிவாய் முயற்சி செய்துள்ளேன்.

Chandar Subramanian

unread,
Jul 7, 2010, 9:19:42 AM7/7/10
to santhav...@googlegroups.com
மனிதருள் நீயுமோர் மனிதன்
 
 
ஓடுமிவ் வியற்கை ஓட்டம்,
.. உடனுலா புரியும் வாழ்விற்
கேடொடு நலமும் ஒன்றாய்க்
.. கிடைத்திடும், சரியாம் பங்கு;
பாடுமிப் பாட்டில் இன்று
.. படுத்துமப் பாடு மற்றும்
கூடிடுங் கொள்ளை இன்பம்
.. கொடுத்திடும் மனிதம் ஆய்வோம் (1)
 
 
மன்றிலில் புகுந்து முன்னாள்
.. மனிதரைப் பணயம் வைத்தார்;
வென்றிடும் நிலையைக் காணார்
.. விரைந்தவர் முன்நிற் போரைக் 
கொன்றனர்; கதறல் கண்டும்
.. கொண்டிலர் கருணை; யாரும்
ஒன்றவர், உயிரும் ஒன்றிவ்
.. வுணர்விலார் மனித ராமோ? (2)
 
 
அத்தனை கொடுமை கண்டும்
.. அசைவிலா உறுதி யோடு
மெத்தவே திட்டம் தீட்டி
.. மேம்படக் காத்த வீரர்
சத்தியம் தழைத்து வாழத்
.. தன்னுயிர் தந்தார், சேற்றின்
மத்தியில் மலரை ஒக்க
.. மாண்டவர், மனிதம் காத்தார் (3)
 
 
இச்சையால் ஆசை கொள்ளும்
.. இருவர்தம் தவறி னாலே
இச்சகம் சேரும் கிள்ளை,
.. இனியதற் கனாதை இல்லம்;
துச்சமாய் இருவர் எண்ணித்
.. துறந்தஅவ் வுயிரைக் கூட
மெச்சவே வளர்க்கும் இல்லம்,
.. மேம்படும் மனிதம் இன்னும் (4)
 
 
தம்மதம் உயர்ந்த தென்பார்,
.. தரணியில் சிறந்த தென்பார்,
அம்மதம் கூறும் கூற்றும்
.. அறிந்திலார்; அமைதி வாழ்வை,
செம்மையை, சிறந்த நாட்டைச்
.. செய்வதே மதத்தின் வேலை;
இம்மொழி உணர்ந்து வாழும்
.. இயல்பினால் மனிதன் நீயும் (5)
 
 
இத்தரை எவர்க்கும் சொந்தம்,
.. இருப்பவர் எவரும் மன்னர்,
மொத்தமாய் தனக்கே என்னும்
.. முறையினித் தேவை இல்லை
உத்தியை உழைப்பில் ஊட்டி
.. உயர்ந்திடும் வழியை நீகொள்;
நித்தமும் நகரும் பூவில்
.. நீயுமோர் மனிதன் தானே? (6)
 
 
வெற்றிடம் இருந்தால் தானே
.. வேண்டிய பொருள்கள் சேரும்,
பற்றிட ஒருநூல் போதும்,
.. பற்றுடன் வழியைப் பற்று;
கற்றிட வேண்டின் முன்னோர்
.. கடந்தஅப் பாதை நீகொள்;
வெற்றிஅம் மனிதர் பெற்றார்,
.. வெல்லுவாய் மனிதன் நீயும் (7)
 
 
ஒன்றுதான் காசென் றாலும்
.. உருவினில் இரண்டு பக்கம்;
நன்றது நடக்கும் ஊடே
.. நலமிலாத் தீதும் சேரும்;
வென்றவன் என்றும் நன்றை
.. விழைந்ததால் வெற்றி கொண்டான்;
அன்றென அறிந்த பின்னும்
.. அணுகுவான் மனிதன் அல்லன் (8)
 
 
நன்றதைத் தெரிவு செய்யும்
.. ஞானமே நமக்குள் வேண்டும்;
இன்றேனின் நமக்கு முன்னோர்
.. இயம்புதல் கேட்டல் வேண்டும்;
முன்தினம் நம்மைப் போன்றே
.. முயன்றவர் மனிதம் காத்தார்,
வன்முறை இல்லா வாழ்க்கை
.. வாழுவம் மனிதர் நாமும் (9)
 
 
கூடியே வாழும் வாழ்வில்,
.. கொள்வதும் கொளாது மென்றேன்?
சோடியாய்க் கரங்கள் தட்டச்
.. சேர்ந்திடும் செவியில் சத்தம்;
நாடுவோர் நன்மை செய்தால்
.. நாடிடும் நன்மை கிட்டும்;
ஆடியைப் போன்ற தன்றோ
.. அன்புகொள் வாழ்க்கை இங்கு? (10)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 7, 2010, 5:47:18 PM7/7/10
to santhav...@googlegroups.com

முந்தியன போல இதுவும் கருத்துச் செறிவும் கவித்துவமும் கலந்து பயில்கிறது. பாராட்டுகள்

அனந்த்

2010/7/7 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 7, 2010, 8:52:25 PM7/7/10
to santhav...@googlegroups.com
உங்கள் பாராட்டுக்கு நன்றி.

2010/7/8 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 9, 2010, 9:33:03 PM7/9/10
to santhav...@googlegroups.com
குறளும் பொருளும்
 
 
எண்ணும் செயல்யாவும் எண்ணுமா றோங்கிட 
எண்குணத்தான் நற்றாளை எண்ணுவம் - திண்ணமாய்
ஓதுமிப் பாவின் உறையும் பொருளாவான்
ஆதி பகவன் அவன்
 
 
ஏழுசீர் கொண்டோர் எழில்நடையில் முப்பாலாய்
வாழும் வழிதந்தான் வள்ளுவன் - சூழுலகிற்
பாடுபொருட் கூறும் பலன்யாவும் பெற்றிடவே
நாடுவமந் நூல்வழியில் நாம்
 
-----(வேறு)-----
 
சொல்லொன்றைத் திருக்குறளுள் தேர்ந்தெ டுத்தே
.. சொலல்வேண்டும் ஓர்கவிதை; தோண்டிப் பார்க்கச்
செல்கின்ற நேரத்தே 'திரு'வென் றோர்சொல்,
.. திருக்குறளின் பெயரினிலே திகழக் கண்டேன்;
மெல்லவென்றன் மௌனத்தை மதியால் தூண்ட
.. மேலெழுந்து வந்ததிந்தக் கவிதை; மண்ணில்
செல்வமென்றும் தனமென்றும் சேரும் ஆக்கம்,
.. திருவென்னும் பொருள்பற்றித் திரியும் இப்பா (1)
 
 
விருப்பமெலாம் விழிகாணப் பொருளே வேண்டும்,
.. உன்னை யெனை உந்திவிடப் பொருளே வேண்டும்,
கருப்புவெள்ளைக் கண்ணோடும் கனவு; மெய்யாய்
.. காசன்றி வேறேதக் கனவை மாற்றும்? 
அருளுண் டென்? இவ்வுலகின் அலையும் வாழ்வை
.. அடுத்துவரும் அவ்வுலகில் தானே வேண்டும்?
பொருளின்றின் இவ்வுலகிற் புகழே இல்லை,
.. பொருத்தமொடு குறள்கூறும் பொருளும் ஈதே (2)
 
 
பொருளதனின் வீச்சுக்கோர் எல்லை இல்லை,
.. பொருளுணர்வார் பெருஞ்செல்வப் போகம் காண்பார்;
பொருளானை அவன்பெற்றப் பொருளைக் கண்டே
.. பொருளாக மதிப்பாரிப் புவனம் வாழ்வோர்;
பொருளதற்குத் தூரங்கள் பொருட்டே இல்லை,
.. பொருளுண்டோ இதனின்மீப் பெரிதாய் கூறு;
பொருளில்லார் வாழ்வதனின் பொருளைக் காணப்
.. பொருளன்றி வேறில்லை, பொய்யான் ஐயன்! (3)
 
 
இல்லாதார் பொருள்மட்டும் இலாதார் அல்லர்,
.. இன்முகத்தார் சுற்றமெலாம் இழந்து நிற்பர்;
எல்லாரும் வறுமையைக்கண் டிழிவு செய்தே
.. எள்ளுவர்காண், இந்நிலத்தார் இயல்பே ஈது;
செல்வமொன்றே வளம்புகழைச் சேர்க்கும் ஏணி,
.. சேர்ந்தார்க்கு மதிப்பேறும், சேரும் பேரும்;
சொல்லாலே செயலாலே சிறப்பு செய்தே,
.. செல்வந்தர் காலடியைத் தேடும் ஊரும் (4)  
 
 
நோக்கத்தில் உயர்வான நோக்கம் ஈட்டும்
.. நல்நிதியே நம்வாழ்வில் நன்மை சேர்க்கும்;
தேக்கத்தால் தெள்ளியநீர் திரிந்த பின்பா
.. தேடிவரும் உயிரினத்தின் தாகம் தீர்க்கும்?
ஊக்கத்தின் ஊதியமாய் உற்ற செல்வம்
.. ஒன்றேதான்; மற்றெல்லாம் ஒழிந்தே போகும்;
ஆக்கம்காண் அதர்கேட்டு ஆங்கண் ஏகும்,
.. அசைவில்லா ஊக்கத்தான் அமையும் இல்லம் (5)
 
 
குளங்காய்ந்துக் குட்டையெனக் குறுகிப் போயும்
.. குடிக்கவரும் உயிர்களுக்குக் கிடைக்கும் நீராய்
அளவோடு வருஞ்செல்வம் அமையும் போதும்
.. அதற்குள்ளே செலவனைத்தும் அடக்க வேண்டும்;
உளமாற பிறர்பொருளை நினைக்கா நெஞ்சம்
.. உயர்வடையும், வெகுமதியாய் செல்வம் வெல்லும்;
களவாடும் எண்ணத்தை கைவிட் டார்க்குக்
.. கைப்பொருட்கட் சுருங்காது, கிளைக்கும் ஆலாய் (6)
 
 
செல்வத்தின் பயனொன்றே, அதுவே ஈதல்,
.. சேர்த்துப்பின் சேர்ந்தார்க்குச் சேர்த்தல் வேண்டும்;
நல்மதியான் தான்பெற்ற செல்வம் ஊரின்
.. நடுநின்று பழங்கொடுக்கும் மரம்போன் றாகும்
அல்லுறுத்தும் பிணிக்கதுவே மருந்தாய் ஆகும்;
.. அவலத்தை வருத்தத்தை அழித்துத் தீர்க்கும்;
செல்கையிலும் கொடுக்கின்ற பொரு ளீ தொன்றே,
.. சேர்புகழே செல்வத்-தின் உயரம், உண்மை. (7)
 
 
இன்பத்துள் இனிதொன்றே, ஈதல் என்பர்,
.. இல்லாதார் இதைச்செய்யப் பொருள்தான் யேது?
தன்பைக்குள் பொருளிருந்தும் செய்யா தர்மம்
.. தான்வாழ வயதிருந்தும் வாழா வாழ்வே;
அன்புக்காய் செய்கின்ற செலவாய் எண்ணி
.. அடுத்தோர்க்கு வழங்கிடிலோர் இன்பம் சேரும்;
என்னசுகம் என்றெழும்பும் உங்கள் கேள்வி,
.. ஈந்துகையில் பதிலதற்கு நீரே காண்பீர் (8)
 
 
ஈத்துவக்கும் இன்பமதை இழந்த செல்வர்,
.. எல்லையிலாப் பொருளிருந்தும் இல்லார் ஆவர்;
சோத்தையெதிர் கண்டவுடன் உண்ணா தங்கு 
.. சுற்றெமெலாம் கூட்டிடவே கரைந்து நின்றே
காத்திருக்கும் காக்கையதன் காதல் காணீர்;
.. கண்ணிருந்தும் குருடராய் ஏன் கானல் வாழ்க்கை?
பூத்தமலர் புதுமணத்தை மறைப்ப துண்டா?
.. பொருளிருப்பின் பிரிவதற்கே; பகிர்ந்தே வாழ்க (9)
 
 
போட்டியிட்டுப் பொருள்சேர்க்கும் செயலின் நன்றாம்
.. போட்டியிட்டுப் பிறரோடுப் பகிர்ந்து கொள்ளல்;
ஈட்டியது கோடியெனும், இயன்ற மட்டும்
.. ஈதலெனும் செய்கையதே இதயம் சேர்க்கும்; 
பாட்டொன்றில் படம்பிடித்தான் பொய்யா ஐயன்,
.. பகிர்ந்தொழுகும் மனமில்லான் பதடி ஆவான்;
நாட்டுலவும் வறியோர்க்கு நல்காச் செல்வம்,
.. நடைபிணமாம், கைம்பெண்ணின் நிலையை ஒக்கும். (10)\
 
 
மெச்சிடுவர் தனக்குள்ளே ஈன்ற செல்வ
.. எழுச்சிதனை எண்ணியெண்ணித் தாமே, என்றும்
உச்சநிலை பொருளுடையார்க் கொன்ற தீகை;
.. உவந்தளிக்கும் மனமில்லான் ஊரின் உள்ளே
நச்சுமரம் போல்நிற்பான், நச்சுக் காயாய்
.. நலிந்தோர்க்குப் பலனில்லாச் செல்வம் தொங்கும்;
நிச்சயமாய் அவன்வாழ்வில் நிறைவே இல்லை,
.. நீள்வாழ்வில் பணங்காத்து நிற்பான் பேயாய் (11)
 
 
வேண்டும்தான் செல்வமிந்த உலகில் என்றான்,
.. வேறில்லை இதற்கிணையாய் என்றும் சொன்னான்,
தோண்டுபவர் பெறுகின்ற நீரைப் போலே
.. தொடர்வார்க்குப் பொருளெடுத்து தருக வென்றான்,
மாண்டப்பின் இப்பொருளா வழியைக் காட்டும்?
.. மாறாத அறமொன்றே வளர்க்கும் வீதி  
ஆண்டுபல ஆனபின்னும் ஐயன் வார்த்தை
.. அழியாத வாழ்வியலாம், அதுவே உண்மை (12)
 
 
இரண்டடியில் உலகளந்த குறளின் பார்வை
.. இன்றல்ல, எப்போதும் இயல்பாய் வாழும்;
தெருவெல்லாம் திருக்குறளே; செயலும் பேச்சும்
.. சிந்தையிலும் அதன் தாக்கம் மேலும் வேண்டும்;
வருங்காலம் வள்ளுவனார் வழங்கும் சொல்லை
.. வரவேற்கப் புதுவிதமாய் வழிகள் செய்வோம்;
திருக்குறளே தூய்தமிழின் சுரங்க வேதம்
.. தீராது விரியுமதைத் தெளிவார் போன்றே (13)

Chandar Subramanian

unread,
Jul 14, 2010, 8:44:54 PM7/14/10
to santhav...@googlegroups.com
மட மனிதனும், மழைத்துளியும் - ஒரு பேட்டி
 
 
எத்தனை நாட்கட் பின்னர்
.. எழுந்ததோ கருத்த மேகம்;
முத்தெனப் பொழியும் மாரி
.. முழுமலர்ச் சரமாய் மண்ணில்
'பொத்'தென விழுந்தும் எக்கிப்
.. பெருமுகில் நெருங்க வெண்ணும்
அத்துளி துணிச்சல் கண்டேன்,
.. அதன்வழி வளரும் பாட்டு. (1)
 
 
'சொற்பநாள் முகில ளித்த
.. சுகத்தினால் விளைந்த நோயோ?
கற்பனை மழைசேர் வாழ்க்கை,
.. கடலதுன் பிறந்த வீடு,
பெற்றவள் பரந்த பூமி,
.. பெருமையே செழுமை வண்ணம்',
நிற்குமத் துளியைக் கேட்டேன்,
.. 'நினதுவேர் மறக்க லாமோ?' (2)
 
 
வேரினை மறக்க நானோர்
.. மனமிலா மனித னாமோ?
பாரினை அடைத்து நஞ்சாய்
.. பாலிதின் நிரப்பி வைத்தாய்;
ஊரிலே உலைகள் கட்டி
.. வெளியெலாம் அமிலம் சேர்த்தாய்;
யாரினி இருப்பார் இந்த
.. நஞ்சுடை உலகில், கூறு? (3)
 
 
உப்பினை ஒதுக்கி நானுன்
.. உயிர்ப்பசி காக்க வந்தேன்;
அப்பினாய் முகத்தி லெல்லாம்
.. அளவிலா அமிலச் சேற்றை;
துப்பினான் முகிலன் மேலே
.. தொலைந்துபோ புவிக்கே யென்றான்;
தப்பினேன் என்றே நானும்
.. தரைவிழுந் தடங்கி நின்றேன் (4)
 
 
விட்டதா மாசு என்னை
.. விழுந்துமிக் கடற்ப ரப்பில்?
கெட்டதே நீரும், சேர்ந்தே
.. கெடும்பல உயிர்கள் ஆங்கே;
பட்டஅம் மாசே நீந்தும்
.. பறவைதன் சிறகொ டிக்கும்;
துட்டனே, உன்வன் நெஞ்சால்
.. தொலையுதே உயிர்கள் வீணாய் (5)
 
 
மண்ணிடை விழுந்த நானோ
.. மாசுடை அமிலம் ஊற்ற,
நுண்துளை நுழைத்து வேரால்
.. நுகர்மரம் விடத்தைச் சேர்க்கும்;
விண்ணிறை கிளைகள் வீழ
.. வரண்டது விறகாய் மாறும்;
கண்களாம் மரங்கள் போயின்
.. காட்சியே கருமை ஆகும் (6)
 
 
வானுயர் வளர்ந்த மாடம்,
.. வளைக்குமென் கருத்த நீரும்;
போனதாய்க் கொள்க என்பேன்
.. பொலியுமச் சுவற்றின் வண்ணம்,
நானதைக் கெடுத்தேன் என்றே
.. நினைப்பினும் உன்றன் நெஞ்சம்
தானதாய்த் தெரிந்து கொள்ளும்,
.. 'தன்வினை தன்னை வாட்டும்' (7)
 
 
மண்ணினாற் பாண்டம் செய்தாய்
.. மிகுபல ஆண்டு முன்னர்;
இன்றுமப் பொருளைச் சிந்து
.. சமவெளி நகரிற் காண்க;
மண்ணதே இயற்கை ஆயும்
.. மடியவே இல்லை இன்னும்,
பின்னைநீ நினைத்துப் பாராய்,
.. பாலிதின் என்றே மாளும்? (8)
 
 
சூழடர் பிளாஸ்டிக் மண்ணில்
.. தோய்ந்திட நிரப்பி வைத்தாய்;
ஊழெனக் கொள்க, இஃதே
.. வந்துறுத் தூட்டும் ஓர்நாள்;
பாழிடர் வழியை நீயே
.. பண்படச் செய்தாய்; மக்கட்
தாழியாய் உலகே மாறும்
.. நாளினி வந்தே தீரும் (9)
 
 
2010, சூன் மாத யுகமாயினி இதழில் (yugamayini.blogspot.com) வெளியானது.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 16, 2010, 11:15:46 PM7/16/10
to santhav...@googlegroups.com

அன்புள்ள சந்தர்,

அற்புதமான கவிதை! ஆற்றொழுக்காக ஓடும் எளிமையான நடையில் மரபு வழுவாமல் சுற்றுப்புரச் சூழ்நிலையைப் பாழ் செய்யும் மனித இனத்தைச் சாடும் கவிதையில் ஆவேசமும் அறிவுரையும் கலக்கும் அழகைக் காண்கிறேன். இறுதியில் வைத்த முத்தாய்ப்பு வரிகள் அருமை. இதுபோன்ற நடைமுறைப் பிரச்சினைகளைப் பேசும் கவிதைகள் நமக்கு நிறையத் தேவை

அனந்த்

>பாழிடர் வழியை நீயே
.. பண்படச் செய்தாய்; மக்கட்
> தாழியாய் உலகே மாறும்
.. நாளினி வந்தே தீரும்
2010/7/14 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 17, 2010, 2:49:40 AM7/17/10
to santhav...@googlegroups.com
உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
 


 
2010/7/17 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 17, 2010, 9:03:17 PM7/17/10
to santhav...@googlegroups.com
பகவத்கீதை, அத்தியாயம் மூன்றின், குறிப்பிட்ட சில பாடல்களின் எனது புரிதலை, இங்கு வெண்பா வடிவில் அமைத்துள்ளேன். நிறை குறைகளை மடலாய் இட வேண்டுகிறேன்.
 
 
தொண்டாய்ச்செய் உன்றன் தொழிலனைத்தும்; அன்றெனின்
உண்டாகும் கைப்பிணையாய் உன்பணியே - கண்டார்ப்பச்
செய்வாய் செயல்யாவும் சீராய்; அறிகநீ,
உய்வாய், தளையே(து) உனக்கு (3:9)
 
 
மறைகூறும் தொண்டை மதியாதார் வாழ்வில்
குறையேறும், நீள்பாவங் கூடும் - அறியாதார்
பொய்ப்புலனார் மாயைவழி போவர்; அறிகநீ
மெய்யாகா(து) அத்தகையோர் வாழ்வு (3:16)
 
 
தன்னுள் மனம்மகிழ்தல் தன்னுள்ளம் தானுணர்தல்
என்றும் நிறைவாய்ஓர் எண்ணமிவ்வொவ் - வொன்றுமொரு
சேரஉடை யார்க்கு செயலே(து) அறிகநீ
சீரகத்தார்க்(கு) ஏது செயல் (3:17)
 
 
தன்னை உணர்ந்தார்க்கும் தன்னிலைய றிந்தார்க்கும்
ஒன்றுமிலை தொண்டென்று வேறேதும் - என்றுமவர்
செய்யா திருக்கத் திறமே தறிகநீ
உய்யார் பிறருழைப்பால் உண்டு (3:18)
(என்றும் - எனினும்; திறம் - காரணம்)
 
 
எய்தும் பயன்தன்னை எண்ணாது தன்கடனாய்ச்
செய்கநீ சீராய் செயறனை - உய்வதற்குப்
பற்றற்ற வாழ்வொன்றே பாதை; அறிகநீ
பெற்றிடுவாய் அவ்வழியாற் பேறு (3:19)
 
 
சான்றோர் பழகுஞ் செயல்யாவுங் கண்டவை
போன்றே புரிந்திடுவர் பாமரரும் - ஆன்றபணி
கொண்டோர் அறம்வகுத்துக் காப்பர் அறிகநீ
ஒண்டிவரும் அவ்வா றுலகு (3:21)
 
 
எம்பணியென் றேதும் எமக்கிலையிம் மூவுலகில்;
எம்தேவை யென்றுமிங் கேதுமிலை - எம்நிலையில்
ஏற்கவென் றேதுமிலை என்ப தறிகநீ
ஆற்றுவம் ஆயினும் அஃது (3:22)
 
 
செய்யா திருப்பின்யாம் செய்பணியை, மூவுலகும்
உய்யா தொழியும், உலகத்தோர் பொய்க்கூட்டம்
ஆவதற்காய் காரணம்யாம் ஆவோம் அறிகநீ
பூவின் அமைதி படும் (3:24)
(படும் - அழியும்)
 
 
பற்றுடன் செய்வர் பணியை, பயன்யாவும்
பெற்றிடும் எண்ணத்தாழ் பேதையர் - கற்றோரோ
உய்பயன் எண்ணா துழைப்பர்; அறிகநீ
மெய்வழிக் கீதே முறை (3:25)
 
 
பொய்யுணர்வின் தாக்கத்தாற் போதையுறு பேதைமதி
செய்கைகள் யாவும் தனதென்னும் - மெய்யாக
ஆட்டுவிக்கும் ஆற்றலாம் ஆசை அறிகநீ
மூட்டுவிசை மோகவழி மூன்று (3:27)
 
 
மெய்ப்பொருள் நன்குணர்ந்தான் மெய்செவிவாய் நாசிகண்ணென்
றுய்யான் புலன்வழியே; ஓர்பணியின் செய்நோக்கம்
பக்திபல னென்றிரு கூறாம் அறிகநீ
அக்கூ றறிவான் அவன் (3:28)
 
 
என்னைத் தெளிந்துபலன் எண்ணா துழைத்துநீ
முன்னின் றுரிமை முறைதவிர்த்து - மன்னுமடி
வென்றுன் பணிசெய்து வாஇன் றறிகநீ
என்றுமுன் செய்கை எனது (3:30)
மடி - சோம்பல்
 
 
தம்வழியாய் எம்மொழியைத் தாமேற்(று) அழுக்காறா(து)
எம்வழியாற் றம்பணிசெய் ஏற்புடையோர் - செம்மையுற
உய்ப்பர் தளையிலா வாழ்வ தறிகநீ
செய்பலன் நோக்காச் செழிப்பு (3:31)
 
 
மன்பொருமி யெம்சொல் மறுத்துழன் றெம்வழியிற்
பின்தொடரா தாரிழப்பர் பேரறிவை - முன்னுமவர்
செய்கையெவ் வொன்றுமே தொய்யும் அறிகநீ
பொய்யெனப் போகும் பொழுது (3:32)
முன்னும் - முயலும்
 
 
ஐம்பொறிசார் பற்றுமுள மொவ்வா வெறுப்புமிவை
மெய்ம்மையுற வேண்டின் வழியுண்டாம் - உய்வாழ்வில்
மன்மயக்கு மிவ்விரண்டும் மாயை; அறிகநீ
தன்னுணர்வுக் கீதே தடை (3:34)
மெய்ம்மை - இயல்பு
 
 
செம்மையாய் மற்றபணி செய்தலின் சேர்பிழைஆர்
தம்பணிதாம் செய்தற் றகுமென்றும் - தம்வழியில்
நின்றதிடர் ஆயினும் நன்றாம் அறிகநீ
அன்னியர் பாதை அழிவு (3:35)
 
 
சூழ்ந்திடும் நீற்புகையிற் செந்தீ மறைந்திடும்,
வீழ்மாசே ஆடி மறைத்திடும் - வாழ்கருவை
மெய்யுள் கருப்பை மறைக்கும் அறிகநீ
உய்யுயிர்க்(கு) ஆசை உறை (3:38)
 
 
நெஞ்சம் பொறியைந்து நீளறிவிம் மூன்றுமவா
தஞ்சம் அடைந்துத் தழைக்குமிடம் - மிஞ்சுமுன்
மோகம் இயல்பறிவை மூழ்த்தும் அறிகநீ
போகத்(து) உழலும் பொறி (3:40)
போகம்- இன்பம்
 
 
ஐம்பொறியின் ஆற்றலசை யாப்பொருளின் மீநன்று;
மெய்ம்மனமோ ஐம்பொறியின் மேன்மையது - துய்யறிவோ
ஒட்டிமிகும் மன்கொள் உயர்வை அறிகநீ
பட்டறிவின் ஓங்கும் பசு (3:42)
 
 
பெற்றறி(வு), ஐம்பொறி, பேய்மனம்மூ வுங்கடந்து
முற்றும் துறந்தோர் முனைப்பொடு - கற்குமுளம்
பந்தமற பக்தியாற் பண்ப டுமறிகநீ
அந்தமில் ஆசை அறும் (3:43)

thangamani

unread,
Jul 18, 2010, 3:33:58 AM7/18/10
to சந்தவசந்தம்
மரபில்,எழுச்சியும்,விழுமமும் நிறைந்த
புதுமையான கருத்துக்களை அழகு தமிழ்க் கவிதைகளாக வழங்கும்
சந்தருக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகள்!
உளம்கனிந்த பாராட்டுகள்!

அன்புடன்,
தங்கமணி.

On Jul 17, 6:03 pm, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:

Chandar Subramanian

unread,
Jul 18, 2010, 8:35:24 PM7/18/10
to santhav...@googlegroups.com
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.


 
2010/7/18 thangamani <tvthan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Jul 18, 2010, 9:07:02 PM7/18/10
to santhav...@googlegroups.com
உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.

சில கருத்துகள் / ஐயங்கள்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/7/14 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

மட மனிதனும், மழைத்துளியும் - ஒரு பேட்டி
 
 
எத்தனை நாட்கட் பின்னர்
.. எழுந்ததோ கருத்த மேகம்;
முத்தெனப் பொழியும் மாரி
.. முழுமலர்ச் சரமாய் மண்ணில்
'பொத்'தென விழுந்தும் எக்கிப்
.. பெருமுகில் நெருங்க வெண்ணும்
அத்துளி துணிச்சல் கண்டேன்,
.. அதன்வழி வளரும் பாட்டு. (1)

'கருத்த மேகம்' - கரிய மேகம் எனில் இன்னும் சரியாக இருக்கும்.

 
 
'சொற்பநாள் முகில ளித்த
.. சுகத்தினால் விளைந்த நோயோ?
கற்பனை மழைசேர் வாழ்க்கை,
.. கடலதுன் பிறந்த வீடு,
பெற்றவள் பரந்த பூமி,
.. பெருமையே செழுமை வண்ணம்',
நிற்குமத் துளியைக் கேட்டேன்,
.. 'நினதுவேர் மறக்க லாமோ?' (2)
 

நல்ல தத்துவ வினா!
 
 
வேரினை மறக்க நானோர்
.. மனமிலா மனித னாமோ?
பாரினை அடைத்து நஞ்சாய்
.. பாலிதின் நிரப்பி வைத்தாய்;
ஊரிலே உலைகள் கட்டி
.. வெளியெலாம் அமிலம் சேர்த்தாய்;
யாரினி இருப்பார் இந்த
.. நஞ்சுடை உலகில், கூறு? (3)

'நான் ஓர் மனிதன் ஆமோ?'

இங்கே 'ஆமோ' என்ற்பது சரியான பிரயோகமா? அறிந்தோர் சொல்லின் உதவும்.
 
 
 
உப்பினை ஒதுக்கி நானுன்
.. உயிர்ப்பசி காக்க வந்தேன்;
அப்பினாய் முகத்தி லெல்லாம்
.. அளவிலா அமிலச் சேற்றை;
துப்பினான் முகிலன் மேலே
.. தொலைந்துபோ புவிக்கே யென்றான்;
தப்பினேன் என்றே நானும்
.. தரைவிழுந் தடங்கி நின்றேன் (4)
 

நல்ல தற்குறிப்பேற்றம்!
 
 
விட்டதா மாசு என்னை
.. விழுந்துமிக் கடற்ப ரப்பில்?
கெட்டதே நீரும், சேர்ந்தே
.. கெடும்பல உயிர்கள் ஆங்கே;
பட்டஅம் மாசே நீந்தும்
.. பறவைதன் சிறகொ டிக்கும்;
துட்டனே, உன்வன் நெஞ்சால்
.. தொலையுதே உயிர்கள் வீணாய் (5)
 

மாசு என்னை - புணர்ச்சியை நோக்கவும்.

/ அம் மாசே நீந்தும்.. பறவைதன் சிறகொ டிக்கும்/

இந்த இடத்தை எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?

/தொலையுதே/ - இலக்கணப்படிச் செல்லும் பாடலில் இங்கே கொச்சைமொழி வாராதிருப்பின் இன்னும் சிறக்கும்.

 
 
மண்ணிடை விழுந்த நானோ
.. மாசுடை அமிலம் ஊற்ற,
நுண்துளை நுழைத்து வேரால்
.. நுகர்மரம் விடத்தைச் சேர்க்கும்;
விண்ணிறை கிளைகள் வீழ
.. வரண்டது விறகாய் மாறும்;
கண்களாம் மரங்கள் போயின்
.. காட்சியே கருமை ஆகும் (6)
 

/வரண்டது / - வறண்டது?

 
 
வானுயர் வளர்ந்த மாடம்,
.. வளைக்குமென் கருத்த நீரும்;
போனதாய்க் கொள்க என்பேன்
.. பொலியுமச் சுவற்றின் வண்ணம்,
நானதைக் கெடுத்தேன் என்றே
.. நினைப்பினும் உன்றன் நெஞ்சம்
தானதாய்த் தெரிந்து கொள்ளும்,
.. 'தன்வினை தன்னை வாட்டும்' (7)
 
 
மண்ணினாற் பாண்டம் செய்தாய்
.. மிகுபல ஆண்டு முன்னர்;
இன்றுமப் பொருளைச் சிந்து
.. சமவெளி நகரிற் காண்க;
மண்ணதே இயற்கை ஆயும்
.. மடியவே இல்லை இன்னும்,
பின்னைநீ நினைத்துப் பாராய்,
.. பாலிதின் என்றே மாளும்? (8)
 
 
சூழடர் பிளாஸ்டிக் மண்ணில்
.. தோய்ந்திட நிரப்பி வைத்தாய்;
ஊழெனக் கொள்க, இஃதே
.. வந்துறுத் தூட்டும் ஓர்நாள்;
பாழிடர் வழியை நீயே
.. பண்படச் செய்தாய்; மக்கட்
தாழியாய் உலகே மாறும்
.. நாளினி வந்தே தீரும் (9)
 

/ பாழிடர் வழியை நீயே.. பண்படச் செய்தாய்/

இந்த இடம் சற்றுப் புரியவில்லை.
 
 



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Chandar Subramanian

unread,
Jul 19, 2010, 9:37:51 AM7/19/10
to santhav...@googlegroups.com
உங்கள் கருத்துகளுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.


 
2010/7/19 Siva Siva <naya...@gmail.com>

உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.

சில கருத்துகள் / ஐயங்கள்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/7/14 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

மட மனிதனும், மழைத்துளியும் - ஒரு பேட்டி
 
 
எத்தனை நாட்கட் பின்னர்
.. எழுந்ததோ கருத்த மேகம்;
முத்தெனப் பொழியும் மாரி
.. முழுமலர்ச் சரமாய் மண்ணில்
'பொத்'தென விழுந்தும் எக்கிப்
.. பெருமுகில் நெருங்க வெண்ணும்
அத்துளி துணிச்சல் கண்டேன்,
.. அதன்வழி வளரும் பாட்டு. (1)

'கருத்த மேகம்' - கரிய மேகம் எனில் இன்னும் சரியாக இருக்கும்.
 
சரி.

 
 
'சொற்பநாள் முகில ளித்த
.. சுகத்தினால் விளைந்த நோயோ?
கற்பனை மழைசேர் வாழ்க்கை,
.. கடலதுன் பிறந்த வீடு,
பெற்றவள் பரந்த பூமி,
.. பெருமையே செழுமை வண்ணம்',
நிற்குமத் துளியைக் கேட்டேன்,
.. 'நினதுவேர் மறக்க லாமோ?' (2)
 

நல்ல தத்துவ வினா!
 
 
வேரினை மறக்க நானோர்
.. மனமிலா மனித னாமோ?
பாரினை அடைத்து நஞ்சாய்
.. பாலிதின் நிரப்பி வைத்தாய்;
ஊரிலே உலைகள் கட்டி
.. வெளியெலாம் அமிலம் சேர்த்தாய்;
யாரினி இருப்பார் இந்த
.. நஞ்சுடை உலகில், கூறு? (3)

'நான் ஓர் மனிதன் ஆமோ?'

இங்கே 'ஆமோ' என்பது சரியான பிரயோகமா? அறிந்தோர் சொல்லின் உதவும்.
 
மனிதனாமோ? என்பதைப் பிரித்து அளித்துள்ளேன். தவறெனின் சுட்டவும்
 
 
 
உப்பினை ஒதுக்கி நானுன்
.. உயிர்ப்பசி காக்க வந்தேன்;
அப்பினாய் முகத்தி லெல்லாம்
.. அளவிலா அமிலச் சேற்றை;
துப்பினான் முகிலன் மேலே
.. தொலைந்துபோ புவிக்கே யென்றான்;
தப்பினேன் என்றே நானும்
.. தரைவிழுந் தடங்கி நின்றேன் (4)
 

நல்ல தற்குறிப்பேற்றம்!
 
 
விட்டதா மாசு என்னை
.. விழுந்துமிக் கடற்ப ரப்பில்?
கெட்டதே நீரும், சேர்ந்தே
.. கெடும்பல உயிர்கள் ஆங்கே;
பட்டஅம் மாசே நீந்தும்
.. பறவைதன் சிறகொ டிக்கும்;
துட்டனே, உன்வன் நெஞ்சால்
.. தொலையுதே உயிர்கள் வீணாய் (5)
 

மாசு என்னை - புணர்ச்சியை நோக்கவும்.
 
சரி. 'மாசும்' எனக்கொள்ளவும்.

/ அம் மாசே நீந்தும்.. பறவைதன் சிறகொ டிக்கும்/

இந்த இடத்தை எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?
 
அந்த மாசே, கடல் நீரில் நீந்தும் பறவைகளின் சிறகை ஒடிக்கும். எண்ணெய்க்கப்பல்கள் கவிழும்போது இத்தகைய ஆபத்துகள் நடப்பதை செய்திகளில் அறிந்திருக்கலாம்.

/தொலையுதே/ - இலக்கணப்படிச் செல்லும் பாடலில் இங்கே கொச்சைமொழி வாராதிருப்பின் இன்னும் சிறக்கும்.

 'தொலையுமே' என்று கொள்ளலாம்.
 
மண்ணிடை விழுந்த நானோ
.. மாசுடை அமிலம் ஊற்ற,
நுண்துளை நுழைத்து வேரால்
.. நுகர்மரம் விடத்தைச் சேர்க்கும்;
விண்ணிறை கிளைகள் வீழ
.. வரண்டது விறகாய் மாறும்;
கண்களாம் மரங்கள் போயின்
.. காட்சியே கருமை ஆகும் (6)
 

/வரண்டது / - வறண்டது?

வறண்டது
பாழையும் இடரையும் தரும் வழியை நாமே நன்றாக அமைத்தல்.
 
 



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

RAJAGOPALAN APPAN

unread,
Jul 20, 2010, 10:35:47 AM7/20/10
to santhav...@googlegroups.com
//மனிதனாமோ? என்பதைப் பிரித்து அளித்துள்ளேன். தவறெனின் சுட்டவும்//
 
 ஆகுமோ என்பதே ஆமோ என்று வருகிறது. அது உயர்திணையைச் சுட்டி வருவதில்லை. மனிதன் ஆவேனோ என்று வரலாம். அது ஓசையைப் பாதிக்கும் .சொற்களை மாற்றவேண்டும்.
அ.ரா

2010/7/19 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 20, 2010, 9:28:36 PM7/20/10
to santhav...@googlegroups.com
உங்கள் விளக்கத்துக்கு நன்றி. வரிகளை மாற்றி அமைக்கிறேன்.
 
 
வேரினை மறக்க நானோர்
.. மனமிலா மனிதன் அல்லன்


2010/7/20 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

Soundar

unread,
Jul 20, 2010, 9:30:44 PM7/20/10
to santhav...@googlegroups.com
தன்மையில்,  மனிதன் அல்லேன் என்று வரவேண்டும்.

2010/7/20 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 20, 2010, 9:36:08 PM7/20/10
to santhav...@googlegroups.com
திருத்தியதற்கு நன்றி.

2010/7/21 Soundar <rsou...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 21, 2010, 9:04:22 PM7/21/10
to santhav...@googlegroups.com
மாணிக்கவாசகன்
 
 
அருளாளன் அத்தன் அகமாரும் ஆனன்
.. அனலாடி ஆலன் அவனே
குருவாக நின்று குருதீக்கை தந்து
.. கொடையாக ஈந்த தமிழால்
திருவாத வூரன் சிவநேச செல்வன்
.. செறிவான சைவ நெறியான் 
தருவாகி வையந் தனைகாக்கத் தந்த
.. தமிழ்ஞான நூட்கள் பழமே (1)
 
 
அரிமர்த்த மன்னன் அவைகேட்கும் சேவை
.. அதைசெய்யு மன்பன் ஒருநாள்,
பரிவாங்கத் தந்தப் பணங்காசைக் கொண்டு
.. பரமேசன் கோயில் அமைத்தான்;
திருநோக்கம் ஏதும் தெரியாத மன்னன்
.. திருமானை தள்ள சிறையில்,
நரியோடு நம்பன் நகரோடி அன்பன்
.. நலங்காத்து நின்ற தழகே (2)
 
 
உருகாத நெஞ்சும் உளமாற வேண்டி
.. உலகாளும் வண்ணம் ஒருநூல்
திருவாச கத்தை தினமோதி நாமும்
.. திகட்டாத இன்பம் தெளிவோம்;
பருகாத தேனும் பயிலாத ஞானம் 
.. பழகாத யோகம் பலவாய்
தருவானே தந்து தழலாடி பாதம்
.. தனில்சேரும் இன்பும் தருவான் (3)
 
 
அருள்தேடும் நெஞ்சம் அடைகின்ற தஞ்சம்
.. அவன்பாடல் ஒன்றில் அறிவாய்;
அரிதான யுத்தி அநுபோக சுத்தி
.. அதனோடு மேலும் பலவாய்
ஒருநூறு பாடல் உயர்ஞான தேடல்
.. உருவான பத்தில் வரமாய்
பெருமானைப் பாடி பெருஞ்ஞானம் தேடிப்
.. பெறுகின்ற பேறும் புரிவான் (4)
 
 
குருசக்தி ஒன்றின் நவசக்தி கொண்டு
.. குறையற்று பூமி குலுங்கும்,
ஒருசக்தி நின்று மறுசக்தி தன்னை
.. உயர்வாகச் செய்தல் விதியே;
இருளென்ற மாயை இனியில்லை காலை
.. இசைபாடி உள்ளம் எழும்பத்
தெருதோறும் சென்று தினம்பாடத் தந்த
.. திருவெம்பா வைநம் திருவே (5)
 
 
விரிவோலை கொண்டு விடையேறி ஆணி
.. விரைந்தோட ஏட்டில் எழுதும்
அருள்பெற்ற வாசன் அவன்கேட்ட வண்ணம்
.. அகக்கோவை ஒன்றை அருள்வான்;
பெருமானின் எண்ணம் புரியாது நின்ற
.. பெரியோர்கள் வந்து வினவ
பொருளென்று தில்லைப் பெருமானைக் காட்டிப்
.. பெருஞ்சோதி தன்னுட் புகுவான் (6)
 
 
18/07/2010 அன்று நங்கைநல்லுர் பாரதி கலைக்கழகம் நடத்திய 'அருளாளர்கள்' எனும் கவியரங்கத்தில் பாடியது.

Chandar Subramanian

unread,
Jul 25, 2010, 9:08:28 PM7/25/10
to santhav...@googlegroups.com
விளங்கட்டும்; திரை விலகட்டும்
 
 
போரைத் தொடர்ந்து புரிவோரால்
.. பொல்லாப் பகையே புறையோட,
பார வாழ்வைப் பரிசேற்றுப்
.. பாச மென்றும் பழகாதோர் 
ஈரக் கண்கள் இனியின்றி
.. இயல்பாய் வாழ்க்கை இயங்கட்டும்,
வீரம் அதுவாய் விளங்கட்டும்
.. விழிஆர் திரையும் விலகட்டும் (1)
 
 
பாரே தமதாய்ப் பார்ப்போர்க்குப்
.. பாதை யெல்லாம் பரிசாகும்;
யாரோ எவரென் றறியாது
.. யாவர்க் குமீயும் பழமரம்போல்
ஆராய்ந் துதவி அளிக்காது
.. யாருங் களிக்க அன்பொன்றே
வேராய் பூவாய் விளங்கட்டும்
.. வெற்றுத் திரையும் விலகட்டும் (2)
 
 
சொற்ப நாளே தொல்லுலகில்,
.. தொலைப்பின் வாழ்வும் தொலைந்தேகும்;
அற்ப வெற்றி யதைக்காண
.. அன்பின் வழியை அடைத்தோரும்
கற்கும் விதத்திற் கற்பிப்போம்,
.. காண்போம் வெற்றி, காழ்ப்பதனை
விற்கும் அவர்க்கு விளங்கட்டும்
.. விதியின் திரையும் விலகட்டும் (3)
 
 
வட்டப் பரிதி வளையத்தே
.. ஒற்றைப் புவனம், ஒன்றியதில்
இட்டப் படிநாம் இனிதாக
.. இல்லான் செல்வன் என்றெண்ணா
தொட்டி ஒழுகின் ஒருநாளிவ்
.. வுண்மை உரைக்கும்; உறுபகையும் 
விட்டிப் புதிரும் விளங்கட்டும்
.. விடைமறை திரையும் விலகட்டும் (4)

Dr Subramanian

unread,
Jul 25, 2010, 9:14:20 PM7/25/10
to santhav...@googlegroups.com
அருமைக் கவிதை.நேயமிகு பார்வை.
"புறையோட" என்பது "புரையோட" என்று இருக்க வேண்டும்.
வவேசு

2010/7/26 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Dr.V.V.Subramanian
Director-Exec
Phycospectrum Consultants Pvt.Ltd;
Chennai, 600083
044-24748674

Chandar Subramanian

unread,
Jul 25, 2010, 9:22:38 PM7/25/10
to santhav...@googlegroups.com
உங்கள் கருத்துக்கும் பிழையைச் சுட்டியதற்கும் நன்றி.
 


 
2010/7/26 Dr Subramanian <vav...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 28, 2010, 9:49:03 PM7/28/10
to santhav...@googlegroups.com
பகவத்கீதை, நான்காம் அத்தியாயத்தின் குறிப்பிட்ட சில பாடல்களின் எனது புரிதலை, இங்கு வெண்பா வடிவில் அமைத்துள்ளேன். நிறை குறைகளை மடலாய் இட வேண்டுகிறேன்.
-----
எம்மின்றோர் நீள்தொடராய் யோகம் தழைக்கையில்
இம்மண்வாழ் முன்மன்னர் ஏற்றனரே - உம்முன்னோர்
விட்டுத் தொலைத்தும் விலகா தறிகநீ
பட்டது போற்றென் படும் (4:2)
-----
நம்புமந் நல்லோர்க்கு நல்கவும் நானிலத்தே
வம்பரின் வன்மையை மாய்க்கவும் - இம்மண்
தருமம் திரும்பத் தழைக்க வுமறிகநீ
வருவம் பிரதி யுகம் (4:8)
-----
எல்லாங் கடந்தோங்கும் என்னிலையை நன்குணர்வோர்
நில்லாப் பொதியுடல் நீங்கயிப் - பொல்லாதோர்
செல்லாப் பிறப்பொழித்துத் தேர்வர் அறிகநீ
வெல்வர் அவரேயென் வீடு
-----
அச்சம் சினம்பற்(று) அறுத்தோர் அடைவரெமை;
எச்சியெம் தாளடைந்தோர் ஏராளம் - மெச்சியவர்
துய்த்தரெமை எண்ணித்தம் தூய்வாழ்(வு) அறிகநீ
உய்த்தனர் அவ்வா(று) உயர்வு (4:10)
-----
ஈர்க்கும் செயலென் றெமக்கிலை; பின்னெதிர்
பார்க்கும் பணியீன் பலனெமக்கேன் - சேர்பலனைத்
தேடார்காண் ஈங்கண் தெளிந்தோர் அறிகநீ
நாடாமற் செய்வதே நன்று (4:14)
-----
தெள்ளுதல் வேண்டும் செயற்றனை, தேர்ந்தவற்றுள்
கொள்வதைக்கொள், அன்றெனின் கொள்ளாநில் - தள்ளியே
நிற்கவுஞ்செய் செய்யா நிலையில் அறிகநீ
கற்கஇந் நுட்பங் கடிது (4:17)
-----
நிற்கா தியங்குநிலை நிலைமை இவற்றொன்றுள்
மற்றொன்றைக் காண்பான் மதியுடையான் - கற்றுழல்வான்
செய்கையெனும் மாயையவன் செய்யி னுமறிகநீ
உய்ப்பன்றன் வாழ்வில் உயர்வு (4:18)
-----
முன்னும் முனைவிலெலாம் மோகம் தவிர்ப்பானை
என்றும் மதியாளன் என்றுரைப்பர் - மன்னறிவால்
உய்ப்பலன் நோக்கெரித்து வாழ்வான் அறிகநீ
உய்வனவன் வாழ்வில் உயர்ந்து (4:19)
-----
உன்னாப் பலனா லுளம்நிறைவார், பற்றுவெறுப்
பென்றுழலா துள்ளத்(து) எரியாதார் - ஒன்றென்றே
வாழ்வொடு தாழ்வை வகுப்பார்க்(கு) அறிகநீ 
ஊழ்வந் துறுத்தா உயர்வு (4:22)
உன்னாத - எண்ணாத
-----
நாடு,நல் ஞானியர் நல்கிடும் ஞானவளம்;
தேடறிவை, தொண்டெலாம் செய்தவர்க்கு; - கூடுமுனை
சான்றோர் பயிற்றும்நற் சாரம்; அறிகநீ
ஆன்றோர் அடைந்த தது (4.34)
-----
பலன்தேடும் நோக்கிலா பக்தியோ டையம்
இலதாக்கும் மெய்யறிவை ஏற்றுத் துலங்குவார்
எல்லையுள் ஆன்மா இயங்கும் அறிகநீ
இல்லைசெயற் பந்தம் இவர்க்கு (4:41)
-----
அறியாமை யால்வளர் ஐயங்கள் தம்மை
குறையாஉன் ஞானத்தால் கொல்வாய் - பொறிவெல்லும்
நல்லரணாம் யோக நலங்கொள்; அறிகநீ,
வெல்லஅது போதும் விரை (4:42)
----->

Chandar Subramanian

unread,
Jul 31, 2010, 9:22:25 PM7/31/10
to santhav...@googlegroups.com
தலவுலா (1. பற்று அம்பலத்தான் பதம் - தில்லை)
-----
ஆடுமுன் தாளிரண்டும் அம்பலத்தே ஆடுமெனின்
தேடுமென் நெஞ்சத்தை சேராதோ - பாடிநிதம்
உன்னைப் பணிவேன் உமைநேசா, இத்தருணம் 
என்பாப் பொருளாய் இரு (1)
-----
இருமாதர் மெய்யோ டிணைந்தோர் உருவாய் 
திருக்கோலம் பூணுமுயர் தில்லை - நிருத்தனே
சாரமாய் ஈங்கார் சதிரொலியில் என்குதலை
சேருமோ உன்றன் செவி (2)
(சதிர் - நாட்டியம்; குதலை - மழலைச்சொல்)
-----
செவியமர்ந்துன் ஐந்தெழுத்து சீர்கொடுக்க நெஞ்சின்
கவிபடைத்தேன் நின்றாள்நீ காண - குவிபதத்தால்
தோடெடுத் தாடிநிற்கும் சோதியா, கீழ்கிடக்கும்
ஏடெடுத் தென்பா டெரி (3)
-----
எரிவிழியோய், ஏந்திவந்த எட்டாறில் தில்லை
கரிகொடுத்த நூலொன்று கண்டாய் - தருவதற்காய்
உன்னைத் துதிசெய் தொருநூறு பாவெழுத
என்நெஞ்சிற் கொண்டேன் இலக்கு (4)
குறிப்பு: தில்லையின் படிகளிலுள்ள யானைச் சிலைகளுள் ஒன்று, படைக்கப்பட்ட பதினான்கு சாத்திரங்களில் ஒன்றைத்தன் தும்பிக்கையால் எடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்படியார் ' என்ற பெயர் பெற்றது
-----
இலக்காய் உனைகொண்டேன் இங்கெனக்காய் தில்லை
கலக்கமினி யென்வாழ்விற் காணேன் - உலவிநிதம்
காலத்தை ஓட்டிப்பூ கண்டுப்பின் சாமத்தே
மூலத் தொடுங்கல் முறை (5)
குறிப்பு: அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் தில்லையின் மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்
-----
முறைகண்ட மூவரவர் முன்னோர்நாள் தில்லை
இறைஉன்னை யேத்திப்பா ஈந்தார் - பிறைகொண்டோய்,
முன்னோர் வழியில் முனையுமென் னுள்ளத்தால்
சொன்னேன், சுவையோநீ சொல் (6)
-----
சொற்கோயில் ஒன்றமைத்துச் செய்கின்றேன் பாமுழுக்கு, 
பொற்கோயில் கொண்டோர் புறத்திங்கு - நிற்காது
முக்காலம் ஆடும் முதல்வாநின் றாளென்இல்
எக்காலம் காணும் இனி (7)
-----
இனிப்பார் இதயமாய் ஈங்கார் விராட்டா,
தனியார்? துணைவுன் தயையே - பனிமலருள்
தேனாய் திருநடனம் செய்வோனே என்கவியாய்
ஆனாய், சுவைநின் அருள் (8)
-----
அருள்தேடி தில்லையில் அன்றுகவி பாடி
குருஏற்றி வைத்தார் கொடியை - உருகியதைப்
பூணுமோர் பொன்னாய்ப் புகழ்ந்தேற்கும் உன்நெஞ்சம்
காணுமோ என்றன் கவி (9)
குறிப்பு: உமாபதிசிவம் 'கொடிக்கவி' பாடிக் கொடியேற வைத்த அதிசய தலம் தில்லை ஆகும்
-----
கவியியற்றி உன்பதம் காத்துக் கிடப்பேன்
புவியியக்கும் தில்லைப் பெரும - குவிகரத்தால்
கேட்குமென் விண்ணப்பம் கேளாயோ நெஞ்சிரங்கி
ஆட்கொண்டென் உள்ளமைந் தாடு (10)
-----
ஆடிநிதம் வாழ்வெலாம் ஆட்டம் பலகண்டும்
கூடுபலன் யாதுகண்டாய்? கூறவன்பேர் - கேடுலகில்
முற்றுவினை நீங்க முனைந்தோர் முறையேனும்
பற்றம் பலத்தான் பதம்

Chandar Subramanian

unread,
Aug 4, 2010, 10:16:06 AM8/4/10
to santhav...@googlegroups.com
திருக்குறள் 'இல்வாழ்க்கை' அதிகாரத்தின் எனது புரிதல், விருத்த வடிவத்தில்...
 
 
இல்வாழ்க்கை
 
ஆவன அனைத்தும் கற்றே
.. அன்புசேர் நகரில் வாழ்வோர்,
பூவனம் வசித்து யோகப்
.. புண்ணியத் தவத்தில் ஆழ்வோர்,
தேவையைத் துறந்த யோகி,
.. மூவரும் அறத்தைக் காக்கச்
சேவையாய் தெரிந்து செய்வான்
.. செவ்விய நல்இல் வாழ்வான் (1)
 
 
அல்வழி துறந்து வாழும்
.. அகத்துறை துறவி யார்க்கும்,
அல்லலில் உழன்று வாழும்
.. அருளிலா உலகத் தார்க்கும்,
செல்வழி மரணம் என்றோர்
.. சேய்துணை இல்லா தார்க்கும்,
இல்வழி இணைந்து வாழ்வான்
.. இயன்றதைச் செய்தே வாழ்வான் (2)
 
 
தென்புலத்(து) அமைந்த ஆதித்
.. தோற்றுவாய், இருந்து மாண்டோர்,
முன்னவர், முழுதாய் யாவும்
.. முடித்திடும் முழுமைத் தெய்வம்,
தன்னிடம் விருந்தாய் வந்தோர்,
.. தன்குடி, தனது சுற்றம்,
என்னுமிந் நால்வ ரோடுத்
.. தன்னையும் ஓம்பல் நன்றே (3)
 
 
செய்பழி தவிர்த்துத் தான்செய்
.. செயற்றனில் பாவம் சேரா(து)
உய்வழி என்றும் நன்றாய்
.. உயர்குணத் தமையப் பெற்ற
மெய்வழி தருமச் செல்வம்
.. வையகம் பகிர்ந்து வாழ்வான்;
செய்யுமிச் செயல்இல் வாழ்வான்
.. செலும்வழி செழிக்கச் செய்யும் (4)
 
 
பண்புடன் ஆணும் பெண்ணும்
.. பயில்வதே நல்இல் வாழ்க்கை,
பண்பெனப் படுவ திங்கே
.. பழகிடும் அன்பே ஆகும்;
எண்செயல் இவற்றில் என்றும்
.. இடைவிடா தறமே வேண்டும்,
மண்ணதிற் பிறந்த பேறாய்
.. மனிதனின் பயனும் ஈதே (5)
 
 
சொல்லதின் பொருளைத் தேடித்
.. தொலைந்திடும் நிகண்டும் உண்டோ?
புல்வெளிப் பரப்பில் வாழும்
.. பசுவதா பசியால் வாடும்?
சில்லெனும் நதியின் மீனா
.. தணித்திடா தாகம் என்னும்?
நல்லறம் நிறைஇல் வாழ்வின்
.. நன்றெது? பிறகென் தேடல்? (6)
 
 
ஆழியின் அலைமேல் பெய்யும்
.. அடர்மழை பயன் தராது;
மேழியால் உழுதும் என்ன,
.. மேருவில் விளைச்சல் உண்டோ?
வாழிடத் தியல்பாய் இல்லம்
.. வாழ்பவன் வாழு கின்றான்,
சூழுமச் சார்ந்தோர் மூவர்
.. தொடர்வரே அவன்றன் பாதை. (7)
 
 
தூய்மனங் குவித்தே ஆற்றும்
.. துறவியர் தவத்தைக் காத்தவ்
ஆய்வழி அறத்தைப் பேணி
.. அன்பொடு வாழ்இல் வாழ்வே
ஓய்வெதும் விரும்பா வண்ணம் 
.. உதவிகள் இல்லாக் காட்டிற்
போய்த்தவம் யோகம் யாவும்
.. புரிதலின் உயர்ந்த தாமே (8)
 
 
இன்பமாய் இணைந்து ஒன்றாய்
.. இயைந்திட இருவர் தங்கள்
அன்பினால் வாழ்இல் வாழ்க்கை,
.. அறமென அதையே காண்க;
துன்பமே தொடரும் கான்வாழ்
.. துறவிகள் தம்மை யாரும்
வன்மையாய் வசையா வாழ்வு
.. வாழ்ந்திடின் அதுவும் அஃதே (9)
 
 
இல்லறம் தன்னில் வாழும்
.. இயல்பினார் இவர்தம் வாழ்வின்
நல்வழி நாடிச் சென்று
.. நலமுற வாழ்தல் நன்றே;
செல்வரிவ் வையம் விட்டுத்
.. தேவரின் உலகுக் கோர்நாள்;
சொல்வரே புகழ்ந்தி வர்க்குச்
.. சொத்தென அமையும் அஃதே (10)

Chandar Subramanian

unread,
Aug 8, 2010, 2:31:26 AM8/8/10
to santhav...@googlegroups.com
மனமெனும் மணற்றிடல்
 
 
மனமெனும் எல்லை யில்லா
.. மணற்றிடல் அரங்க மாக
தினமொரு விதமாய்த் தோன்றும்
.. சிந்தனை பந்தாய் மாறும்;
கனவெனும் காலிற் பட்டுக்
.. களத்தினைப் பந்து மீற
நனவெனும் நடுவர் பந்தை
.. நடுக்களம் வைத்துப் போவார் (1)
 
 
விதமொரு விந்தை சேர்க்கும்
.. வித்தகக் கனவுக் காலால்
உதைபட எண்ணப் பந்தோ
.. உலவிடும் உயரே வானில்;
சிதைவுறும் எண்ணம் சற்றே
.. தொய்திடும் வேளை காலோ
அதைவிடுத் தடுத்தோர் பந்தை
.. அடித்திடும், அதுவே றெண்ணம் (2)
 
 
வலமிடும் பந்தை நம்முன்
.. வரவிடா வண்ணம் ஐந்துப்
புலன்களும் போட்டி யிட்டுப்
.. புறம்நமை பிடித்துத் தள்ளும்;
இலக்கதை மறைத்து நிற்கும்
.. எதிரணிக் கிவையே வீரர்;
கலக்கிநம் நெஞ்சக் கூட்டிற்
.. கலவரம் யாவும் செய்யும் (3)
 
 
தரைவரும் பந்தைக் கண்கள்
.. தவிர்த்திடும்; காதோ ஓசை
பரவிடும் அரங்கம் நோக்கிப்
.. பார்த்திட வைக்கும்; மெய்யில்
விரவிடும் விரலைக் காண
.. விழைகையில் விலகும் பந்து;
கரமிணைத் தைந்தும் அங்கே
.. களிப்புற, சிதறும் சிந்தை (4)
 
 
தொலைவமர் கூட்டக் கண்கள்
.. தொடர்ந்திடும் பந்தை நோக்கும்;
இலக்கைநாம் நெருங்கும் போதே
.. இருகரம் தட்டி வாழ்த்தும்;
விலகியே எதிரி சார்பாய்
.. விரைந்திடும் பந்தைக் கண்டுப்
பலவித வார்த்தை பேசும்,
.. பதரென நம்மைத் தூற்றும் (5)
 
 
நிலையிலாப் பந்தை மெல்ல
.. நிறுத்தியே தூரம் தோன்றும்
இலக்கதை ஒன்றே எண்ணும்
.. இயல்புடன் குவித்து நெஞ்சை
கலக்குமவ் வைந்தும் பொய்க்கக்
.. கடுமையாய் எதிர்த்த வற்றை
விலக்கிடும் வண்ணம் ஆடி
.. வெற்றியைக் காணல் வேண்டும் (6)
 
 
வழியெலாம் ஏற்றஞ் சேர்க்க
.. வாய்ப்புகள் வரும்பின் போகும்;
விழியினைத் திறந்து, வாய்க்கும்
.. வேளையில் ஆட வேண்டும்;
கழிவென் றேதிங் கஃதும்
.. கண்டிரா வாய்ப்பே; காற்றுச்
சுழிதனில் இலையைப் போலே
.. சொல்லொனா உயரம் செல்வோம் (7)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 8, 2010, 9:02:45 AM8/8/10
to santhav...@googlegroups.com

நடைமுறையில் நாம் காணும் நிகழ்வுகளைக் கற்பனை,சொல் வளத்துடன் யாப்பிலக்கணம் பிறழாமல்  அற்புதமாக கவிதை வடிக்கிறீர்கள். இந்தக் கவிதையில் ஐம்புலன்களை எதிர்க்கட்சியாகவும், அவற்றோடு போராடும் மனத்தை நம் கட்சியாகவும் உருவகம் செய்த அழகை மிகவும் இரசித்தேன். பாராட்டுகள்!

.. அனந்த்



2010/8/8 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Siva Siva

unread,
Aug 8, 2010, 9:57:59 AM8/8/10
to santhav...@googlegroups.com
நல்ல உவமை/உருவகம்.

மன ஆட்டத்திற்கு நடுவர் நனவு!
வளமான எண்ண ஓட்டம்.

// கழிவென் றேதிங் கஃதும் //
இவ்விடத்தில் வாய்பாடு பிறழ்கிறதோ?

// காற்றுச்

சுழிதனில் இலையைப் போலே
.. சொல்லொனா உயரம் செல்வோம் //

இலை சுய முயற்சி இன்றிக் காற்று எடுத்துச்செல்லும் வழியில் செல்கிறது. நீங்கள் சொல்லவந்தது அதுவா? ஒருவேளை, 'பருந்தைப் போல' என்பது போல் இருந்தால் இன்னும் பொருந்துமோ?

'சொல்லொணா'.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்




2010/8/8 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 8, 2010, 9:01:14 PM8/8/10
to santhav...@googlegroups.com
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
 


 
2010/8/8 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 8, 2010, 9:05:59 PM8/8/10
to santhav...@googlegroups.com

நல்ல உவமை/உருவகம்.

மன ஆட்டத்திற்கு நடுவர் நனவு!
வளமான எண்ண ஓட்டம்.

நன்றி.

// கழிவென் றேதிங் கஃதும் //
இவ்விடத்தில் வாய்பாடு பிறழ்கிறதோ?

ஆமாம். மடலில் இட்ட பிறகே அதை கவனித்தேன். 'கழிவென ஏதிங் கஃதும்' என வரவேண்டும்.

// காற்றுச்

சுழிதனில் இலையைப் போலே

.. சொல்லொனா உயரம் செல்வோம் //

இலை சுய முயற்சி இன்றிக் காற்று எடுத்துச்செல்லும் வழியில் செல்கிறது. நீங்கள் சொல்லவந்தது அதுவா? ஒருவேளை, 'பருந்தைப் போல' என்பது போல் இருந்தால் இன்னும் பொருந்துமோ?

வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொண்டால் அவ்வாய்ப்புகளே நம்மை உயர்த்தும் என்னும் பொருளில் அமைத்தேன். வாய்ப்புகளால் நாம் விரைவாகவும் எளிதாகவும் உயர முடியும் என்பதை சொல்ல வந்தேன்.

'சொல்லொணா'.

சுட்டியதற்கு நன்றி.


2010/8/8 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Aug 11, 2010, 10:40:25 AM8/11/10
to santhav...@googlegroups.com
தலவுலா (2. அண்ணாமலையான் அருள் - திருவண்ணாமலை)
-----
பதங்கண்டான் அன்று பரந்தாமன் ஈங்கண்
அதங்கண்டான் ஆணவத்தால் அஞ்சன் - நிதமொன்றாய்
பாப்பாடி நின்னைப் பணிந்தேன் அருணேசா
காப்பாயென் குற்றங் களைந்து (1)
அஞ்சன் = பிரமன்
-----
களைமலிந்த வாழ்வின் கரையென்று காண்பேன்
விளைஉயர்வென் வாழ்வில் விரைந்து - துளையிருந்தென்,
காற்றுலா வாராது காணா திசை;குழலென்
ஊற்றுநீ வந்துயிர் ஊட்டு (2)
-----
ஊட்ட அமுதுண்ட உத்தமருக் கன்றறந்தான்
காட்டியருள் செய்தாய் கண்ணுதலா - பாட்டின்நான்
கேட்கும் பொருளுண்டு கீற்றொளியோய் என்றுமென்
ஏட்டின் பொருளாய் இரு (3)
-----
இருக்கும் மலையாகி ஏத்துவர்தம் இன்பம்
பெருக்கும் இணையில் பெரும - வருநாள்
குறையாதுன் கோலவெழில் கூறும் வரம்வேண்டும்
நிறையாயோ நெஞ்சுன் நினைப்பு (4)
-----
நினைக்கின் அருளும் நெடும்பதி நின்றிங்
குனைத்துதித்தேன் உள்ளத் துமையோய் - வினையிழக்க
வேண்டியுன் தாட்கண் விழைகின்றேன் என்னூழும்
மாண்டறத் தாவோர் மருந்து (5)
-----
மருந்தாகி என்னுளத்தார் மாசறுத் தென்றன்
திருந்தாவன் நெஞ்சைத் திருத்து - விருந்தாக
நின்னைப் புகழ்ந்தோர் நெடும்பாடல் பாடுதற்காய்
என்னுட் தமிழை எழுது (6)
-----
எழுத்தைந்தால் ஈர்க்குமுனை எண்ணாவன் நெஞ்சத்
திழுக்கார் எனக்கேதிங் கின்பம் - அழுக்குமனம்
தேக்கும் பழியாயும் தேய்த்துத் தொடர்வினையும்
நீக்கியெனை என்றேற்பாய் நீ (7)
-----
நீயே ஒளியாகி நிற்கின்ற இப்பதியில்
நாயின் கடையனாய் நான்நிற்க - தாயினும்
அன்பூட்டும் ஆதரவே அண்ணா மலையோனே
என்றோடும் என்வினைஇ யம்பு (8)
-----
இயம்புமென் துன்பமற ஏத்திப் பணிவேன்
சுயம்புநிலை தெய்வமே சோதீ - வியனுலகில்
சேர்த்த வினையாவும் தீர விழைந்துன்னைப்
பார்த்துப் படிக்கின்றேன் பாட்டு (9)
-----
பாடுமெனை மென்மேலும் பாடச்செய்; ஊழ்விரிக்கும்
பாடுமெனை அண்டாப் படியுஞ்செய் - கூடடைக்கும்
வெற்றுயிர் வாழ்க்கையில் வேண்டுமுன் எண்ணமென்றுப்
பற்றினேன் இன்றுன் பதம் (10)
-----
பதந்தொடரும் நீழலாற் பாரிற் பயனென்?
விதவிதமாய் யாக்கைவுயிர்க் கேனோ - நிதம்முனைந்
தெண்ணத்தைச் சீர்படுத்தி ஏத்த உனையருகும்
அண்ணா மலையான் அருள்
-----

Siva Siva

unread,
Aug 11, 2010, 11:02:53 PM8/11/10
to santhav...@googlegroups.com
// களைமலிந்த வாழ்வின் கரையென்று //

கரை என்று வரின், கடல் போல ஏதேனும் நீர் வரவேண்டாமோ? களை நிலத்தில் அன்றோ இருக்கும்.


2010/8/11 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
தலவுலா (2. அண்ணாமலையான் அருள் - திருவண்ணாமலை)
-----
........
களைமலிந்த வாழ்வின் கரையென்று காண்பேன்
விளைஉயர்வென் வாழ்வில் விரைந்து - துளையிருந்தென்,
காற்றுலா வாராது காணா திசை;குழலென்
ஊற்றுநீ வந்துயிர் ஊட்டு (2)
-----
........
-----
 

--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Kaviyogi Vedham

unread,
Aug 12, 2010, 3:58:03 AM8/12/10
to santhav...@googlegroups.com
ரொம்ப நல்ல வெண்பாக்கள். நற்கருத்தும்.. வாழ்க!,
 யோகியார்

2010/8/11 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
யோகியார். வேதம்.(Yogiyar vedham)
Anaivarum vaazhga vaLamudan!--..
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600041
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-41(போன் 64565979)-
*****************************
 

Chandar Subramanian

unread,
Aug 12, 2010, 9:13:06 AM8/12/10
to santhav...@googlegroups.com
உண்மைதான்.
 
"களைமலிந்த வாழ்வில் களமென்று காண்பேன்" என்றால் பொருள் சரியாகுமா. இங்கு களம் என்பது நெற்களம்.


 
2010/8/12 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Aug 12, 2010, 9:13:37 AM8/12/10
to santhav...@googlegroups.com
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


2010/8/12 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 15, 2010, 9:29:45 AM8/15/10
to santhav...@googlegroups.com
சுதந்திர நினைவுகள்...
 
ஆய்ந்தே அழிவை அணுகாமல்
.. ஆயு தமற்றச் சுதந்திரத்தை
வேய்ந்த வெள்ளை உளத்தோரின்
.. வெற்றித் திருநாள் நினைவதுவே  
தேய்ந்துப் போய்ச்சிந் தனையற்றுத்
.. தேசப் பற்றை நினையாமல்
ஓய்ந்துப் போய்நாம் மரம்போலே
.. உணர்வில் லாமல் கிடக்கின்றோம் (1)
 
 
வெற்று நெஞ்சம் கொண்டோர்க்கா
.. வெற்றித் திருநா டவர்தந்தார்?
சற்றே வளைத்துச் சத்தியத்தைத்
.. தன்பால் இழுப்பர் சதியாளர்,
முற்றும் தெரிந்தும் முனிவர்போல்
.. மொழியா நிலையில் வெறுங்கூடாய்
அற்றுப் போய்நம் உணர்வெல்லாம்
.. அலையும் பிணமாய் இருக்கின்றோம் (2)
 
 
ஒவ்வோர் தலைக்கும் விலைபேசி
.. உண்மை முடக்கும் விளையாட்டில்
ஒவ்வா வழியில் அவர்நாடும்
.. உதவி யாவும் செய்கின்றோம்;
கவ்விக் கொல்லும் கழுகுகளைக்
.. கனவான் என்றே கருதும்நாம்
தவ்விச் செல்லும் தவளைகளாய்
.. தரத்தால் தாழ்ந்துக் கிடக்கின்றோம் (3)
 
 
ஏது மில்லை எனும்வேளை
.. எதையோ செய்யும், ஏமாற்ற
சாதிப் பேச்சை தூண்டிவிடும்,
.. தனியாய் அதனில் குளிர்காயும்;
பேத மில்லை எனும்நாமே
.. பிரிந்தோம், பிரிவின் நிலைப்பாட்டால்
மோதிப் பார்க்கும் மனங்கொண்டோம்,
.. முரணாய் முடங்கிக் கிடக்கின்றோம் (4)
 
 
வேண்டும் எண்ணம் புதிதான
.. விளைவை விதைக்கும் விடையாக
வேண்டாம் மேலும் பிரிவேதும்
.. விழைவோம் ஒன்றை, அதுஅன்பே
ஆண்டான் அடிமை அனைவர்க்கும்
.. அதுவே அடைசொல் அடையாளம்
தீண்டாப் பகையும் இனியேது
.. திடமாய் வாழ்வில் இனியேற்றம் (5)
 
 
வேண்டும் அன்பே உரையெங்கும்
.. வீட்டின் உறவில் அதுவேண்டும்
வேண்டும் அன்பே நகரெங்கும்
.. வேற்று நாட்டான் உறவெல்லாம்
வேண்டும் அன்பே உலகெங்கும்
.. வெளியோர் கேளிர், தமிழ்கூறும்
மீண்டும் மீண்டும் மொழிகின்றேன்
.. முனைவோம் அன்பே வழியென்றே (6)

Kaviyogi Vedham

unread,
Aug 16, 2010, 3:24:17 AM8/16/10
to santhav...@googlegroups.com
நல்ல அழகிய சுதந்திரக்கவிதை.. வாழ்க1
 யோகியார்

2010/8/15 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Aug 16, 2010, 8:29:20 PM8/16/10
to santhav...@googlegroups.com
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
 


 

Chandar Subramanian

unread,
Aug 18, 2010, 9:24:39 PM8/18/10
to santhav...@googlegroups.com
தம்பியருள் சிறந்தவன் குகனே...
 
 
குக படலத்தில் கம்பன் நிலை நிலையாக குகனின் சிறப்பை உயர்த்திச் செல்லும் பொருள் குறித்து எழுந்த கவிதை இது. 15/8/2010 அன்று கம்பன் கலைக்கழகத்தில் படிக்கப்பட்டது.
 
 
கம்பனின் கரந்தந்த கவியதில் வருமந்த
தம்பியர் பலருள்ளர்; தரமதில் இவருள்ளும்
செம்மையர் எவரென்றத் தெளிவறு புதிரொன்றே
எம்மனத் தகமோடும் எழுநிலை குகனோடே (1)
(எழுநிலை = ஏழு நிலைகள்)
 
 
ஓடிடும் நதிகங்கை உலவிடும் திரைபொங்கும்,
காடுறை நகரத்தார் கடந்திடும் அகலத்தில்
நாடிடும் இடங்காட்டி நலஞ்செயும் படகோட்டி
வேடவன் குகனென்பான் விரைநதித் துறைமன்னன் (2)
 
 
(நிலை 1. நாவாய் வேட்டுவன், நாய் அடியேன் - 10)
தாயினள் பிரியென்றாள் தயரதன் சரியென்றான்
போயின முடிசெங்கோல் பொலிவிலை இனியெங்கும்
வாயிலில் அவன்தம்பி வழிவிட குகன்தன்னை
நாயினன் எனச்சொல்வான் நடந்திடும் வழிவெல்வான் (3)
 
 
(நிலை 2. உள்ளம் தூயவன், தாயின் நல்லான் - 11)
போயினன் இளவற்றன் பெருமனின் செவியொற்றித்
தூயவன் குகனென்பான் தெளிவினன் அகவன்பால்
தாயினும் மிகுநல்லன் தமையனுக் கிதுசொல்ல
நாயினன் நிலையற்று நரனெனும் நிலையுற்றான் (4)
 
 
(நிலை 3. செய்குவன் அடிமை - 16)
அன்புடன் சுவைமீனும் அமுதென அமைதேனும்
முன்பிடும் அதையுண்ண முறையிடும் நமதன்பன்
இன்னலின் இடியாள இணங்கிடும் அடியாளாய்
இன்னோரு படியேற்றி இயம்பிடும் நடைசாற்றும் (5)
 
 
(நிலை 4. யாதினும் இனிய நண்பா - 17)
பாதையில் நதியோடைப் பயணமே அதிகாலைப்
போதினில் ஒருநாவாய் பொருத்திடக் கரைசேர்வாய்
காதலில் பதமண்டிக் கதறிடும் விதம்கண்டி
யாதினும் இனியன்தான் இவனென கவிசொல்வான் (6)
 
 
(நிலை 5. இளவல் உன் இளையான் - 40)
கங்கையை மறுநாளே கடந்தவர் பிரிவேளை
தங்குவன் எனக்கெஞ்சும் சலமகன் தனைநெஞ்சில்  
பொங்கிடும் மகிழ்வாலே பெருமனும் புகழ்வானாம்
அங்குள இளையானை அடியனின் இளையானாய் (7)
 
 
(நிலை 6. அன்புள இனி நாமோர் ஐவர்கள் உளர் ஆனோம் - 41)
ஐயனின் பதமொன்றி அருகமர் பணியொன்றை
மெய்யினன் மிகுநல்லான் விரும்பிட பெருவில்லார்
கையினன் பகற்கின்றான் கடமையில் அகம்வென்றாய்
ஐவரே இனிநாமோர் அகமுளர் எனவாவோம் (8)
 
 
(நிலை 7. உன் கிளை எனது அன்றோ; என் கிளை இது கா நீ - 43)
கண்ணெனத் தினங்காக்கக் கருதிய குகன்நோக்கை
அண்ணலும் மறுக்கின்றான் அவனதைத் துறக்குங்கால்
மண்ணதை எவர்காப்பர் வனக்கிளை இவனேற்றே 
உண்மனக் களைப்பின்றி உதவிடென் கிளைக்கென்றான் (9)
(உண்மனம்=உள்+மனம்)
 
 
காவியம் இயல்கின்ற கடமையில் பயன்தன்னை
மேவிய இளையோரே மிகப்பலர்; சளையாமல்
ஏவிடும் பணிதன்னில் இயன்றவன், பணிந்தண்ணல்
சேவையே பெரிதென்றோன் சிறப்புகள் அரிதன்றோ (10)
 
 
ஒரு ஐயம்...
 
துன்புள தெனினன்றோ சுகமுள ததுவன்றிப்
பின்புள திடைமன்னும் பிரிவுள தெனஉன்னேல்
முன்புளே மொருநால்வேம் முடிவுள தெனவுன்னா
அன்புள இனிநாமோர் ஐவர்க ளுளரானோம்
 
 
"கூவிளம் புளிமாங்காய் கருவிளம் புளிமாங்காய்" எனும் வாய்ப்பாட்டில் வரும் இப்பாடலின் ஈற்றடியில், மூன்றாம் சீர் கூவிளமாக உள்ளதற்கான காரணங்கள் ஏதேனும் உளவா? விளக்கவும்.

Dr Subramanian

unread,
Aug 18, 2010, 9:47:26 PM8/18/10
to santhav...@googlegroups.com
"ஐ" -க்கு ஒலி கூடும். அவர்கள் என்பதையும் ஐவர்கள் என்பதையும் சொல்லிப் பாருங்கள்.புரியும். இலக்கணத்தை விடுங்கள்...படிக்கும் போது காது என்ன சொல்கிறது என்று கேளுங்கள்.
வவேசு

2010/8/19 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Pas Pasupathy

unread,
Aug 18, 2010, 10:11:11 PM8/18/10
to santhav...@googlegroups.com
இதைச் சீர் வாய்பாடு மட்டும் வைத்துப் புரிந்து கொள்ள முடியாது.
 
இது ஒரு சந்தக் கலிவிருத்தம். 20 மாத்திரை அடிகள்.
( மேலும் அறிய விரும்பினால் என் “கவிதை இயற்றிக் கலக்கு”
கட்டுரைகளில் பார்க்கவும்.)
 
தந்தன தனதன்னா தனதன தனதன்னா
 
என்ற அமைப்பு.
 
( முதல் சீரும், மூன்றாம் சீரும் 4 மாத்திரைகள்.  ’தானன’ ..’தனதன’ இரண்டுமே 4 மாத்திரைகள் தாம். ’தந்தன’ வும் அப்படியே) 
 
சந்த இலக்கணம் வழுவாமல் வந்த பாடல்.  

2010/8/18 Chandar Subramanian chandarsu...@gmail.com
 
ஒரு ஐயம்...
 
துன்புள தெனினன்றோ சுகமுள ததுவன்றிப்
பின்புள திடைமன்னும் பிரிவுள தெனஉன்னேல்
முன்புளே மொருநால்வேம் முடிவுள தெனவுன்னா
அன்புள இனிநாமோர் ஐவர்க ளுளரானோம்
 
 
"கூவிளம் புளிமாங்காய் கருவிளம் புளிமாங்காய்" எனும் வாய்ப்பாட்டில் வரும் இப்பாடலின் ஈற்றடியில், மூன்றாம் சீர் கூவிளமாக உள்ளதற்கான காரணங்கள் ஏதேனும் உளவா? விளக்கவும்.
 



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Chandar Subramanian

unread,
Aug 19, 2010, 10:10:45 AM8/19/10
to santhav...@googlegroups.com
விளக்கத்திற்கு நன்றி.

Chandar Subramanian

unread,
Aug 19, 2010, 10:16:41 AM8/19/10
to santhav...@googlegroups.com
விளக்கத்திற்கு நன்றி. ஆயினும் 'ஐவர்க' எனும் சீர் 'தனதன' எனும் சந்தத்தில் எப்படி கொள்வதென்று விளங்கவில்லை. என் வினாவிலோ அல்லது என் புரிதலிலோ தவறிருப்பின் மன்னிக்கவும். 

Pas Pasupathy

unread,
Aug 19, 2010, 10:53:17 AM8/19/10
to santhav...@googlegroups.com
உங்கள் கேள்விக்கு முழுமையான பதில் மிக மிக விரியும். அதனால் தான் ஒரு கோடி காட்டினேன்!
 
 
 
 
படியுங்கள். பிறகும் புரியவில்லை என்றால் தயங்காமல் இங்கேயே
மீண்டும் கேள்விகளைக் கேளுங்கள்.
 
தயக்கம் வேண்டாம்.
 


 
2010/8/19 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 21, 2010, 8:53:27 PM8/21/10
to santhav...@googlegroups.com
விதி 1. குறில் = ஒரு மாத்திரை ( உதாரணம்: ப ) (இதை லகு என்று குறிப்பர்.) 
விதி 2. நெடில் = குறில்+ஒற்று = நெடில் +ஒற்று = இரு மாத்திரை 
(உதாரணங்கள் : பா, பல், பால்) அதாவது, குறில் மட்டும் ஒரு மாத்திரை; 
மற்றவை எல்லாம் இரண்டு மாத்திரை. (இதைக் குரு என்பர்)
விதி 4. சந்தப் பாடலின் சீர்களின் இடையில் வரும் ய ர ல வ ழ ள 
ஒற்றுகளுக்கும், சிறுபான்மை ன ண ம மெய்களுக்கும் மாத்திரைக் கணக்குக் 
கிடையாது.

இந்த விதிகளின் படி 'ஐவர்க' எனும் சீர் ஐ+வ+(ர்)+க என அலகிட 2+1+0+1 என்று 4 மாத்திரை ஓசையை பெறுகிறது.

காட்டுதலுக்கும் உங்களின் 'கவிதை இயற்றிக் கலக்கு' கட்டுரைக்கும் நன்றி.



2010/8/19 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 22, 2010, 12:34:16 AM8/22/10
to santhav...@googlegroups.com
தலவுலா (3. நெஞ்சே மயிலை நினை - திருமயிலை)

-----

அருளன்றி வேறுண்டோ ஐயன்ஆர் சீரூர்
திருமயிலை சேர்ந்தோர்க்கு? செல்நீ - கருநெஞ்சே
எண்ணத்தில் செய்கையில் ஏற்றந்தான் என்றுமிது
திண்ணம் அவன்பாதம் தேடு (1)

-----

தேடற் கரியானை தேவியே ஓர்மயிலாய்
ஆடிப் பணியும் அழகைக்காண் - ஓடுநெஞ்சே 
தாணாடு, மாமயிலை சங்கரன்றன் கோலவெழில் 
காணாத கண்ணன்று கண் (2)
தாணாடு = தாள் + நாடு

-----

கண்மூடி இவ்வுலகில் காலம் கழித்தபின்
மண்மூடும் வாழ்வே மனிதம்காண் - புண்ணெஞ்சே 
கொள்வினை வேரறுக்கும் கோவன் மயிலையில்
உள்ளவன் என்றுணர்ந் தோது (3)

-----

ஓதவனை மாவோ டுறைவோனை பாழுலகில்
ஆதரவாய்க் காப்பிங் கவனன்றி யேதுநெஞ்சே
ஓடேந்திக் காக்கின்ற ஊழிக்கூத் தன்பதத்தை
நாடி ஒடுங்கல் நலம் (4) 

-----

நலங்காக்க ஓடேந்தும் நம்பன் மயிலை
நிலங்காத்து நிற்பான் நிதமும் - மலநெஞ்சே
தீவினை யாவையும் தீர்க்க வரமளிக்கும்
கோவனையே உன்நினைவிற் கொள் (5)

-----

கொண்ணங்கை என்றான் குடநீற்றைப் பெண்ணாக்கிப்
பண்ணொன்றை சம்பந்தன் பாடியே - அண்ணெஞ்சே
ஆற்றுப் பெருக்காய் அவனருள், உன்னகத்தே
நீற்றான்றன் எண்ணம் நிறை (6)
கொண்ணங்கை = கொள் + நங்கை
அண்ணெஞ்சே = அள் + நெஞ்சே

-----

நிறையன்பன் நாடிவந்து நிற்போர்க் கருள்வான்
பிறைசூடி மாமயிலைப் பெம்மான் - குறைநெஞ்சே
இல்லாப் பொருள்வேண்டி இன்றேனும் சென்றங்கேத்(து) 
எல்லாம் அவனே என்று (7)

-----

என்றேகும் என்றறியேன் என்பிணைகள் மாமயிலை
சென்றேனும் தீதெலாம் தீருமோ - வன்நெஞ்சே
வந்தோர்க் கருளி வரும்பிணையும் நீக்குமந்த
முந்தையன்றாள் எண்ணி முனை (8)

-----

முனைவோர்க் கருளும் முழுமுதல்வன் ஆடி
அனையேத்தும் மாமயிலை ஐயன் - வினைநெஞ்சே
தொக்குமூழ் அற்றுத் தொடரா நிலைவேண்டி
சொக்கன் பதியிற் றொழு (9)

-----

தொழுவார்க் கருள்கின்ற தோடுடையான் பாதத்(து)
ஒழுகாதார் உண்டோ உலகில் - எழுநெஞ்சே
உன்னை உழற்றும் உறுவினையைத் தீர்க்குங்காண்
அன்பொழுகும் அத்தன் அருள் (10)

-----

அருளன்றி வேறுண்டோ அத்தனவன் தாள்நினைந்துப்
பொருள்காண் பிறப்பில் புதிதாய் - இருள்நீங்க
அஞ்செழுத்தன் அன்பன்றி ஆதரவாய் வேறேது   
நெஞ்சே மயிலை நினை 

-----

Siva Siva

unread,
Aug 22, 2010, 9:21:12 AM8/22/10
to santhav...@googlegroups.com
உங்கள் ஆர்வத்தை மெச்சுகிறேன்.

சில ஐயங்கள் / கருத்துகள்.

2010/8/22 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

தலவுலா (3. நெஞ்சே மயிலை நினை - திருமயிலை)

-----

அருளன்றி வேறுண்டோ ஐயன்ஆர் சீரூர்
திருமயிலை சேர்ந்தோர்க்கு? செல்நீ - கருநெஞ்சே
எண்ணத்தில் செய்கையில் ஏற்றந்தான் என்றுமிது
திண்ணம் அவன்பாதம் தேடு (1)

-----

தேடற் கரியானை தேவியே ஓர்மயிலாய்
ஆடிப் பணியும் அழகைக்காண் - ஓடுநெஞ்சே 
தாணாடு, மாமயிலை சங்கரன்றன் கோலவெழில் 
காணாத கண்ணன்று கண் (2)
தாணாடு = தாள் + நாடு


மாமயிலைச் சங்கரன் - என்று ஒற்றுமிகும் என எண்ணுகிறேன்.
இப்பாடலிலும் வேறு சில பாடல்களிலும் சில இடங்களில் வல்லொற்று மிகவேண்டும்.

-----

கண்மூடி இவ்வுலகில் காலம் கழித்தபின்
மண்மூடும் வாழ்வே மனிதம்காண் - புண்ணெஞ்சே 
கொள்வினை வேரறுக்கும் கோவன் மயிலையில்
உள்ளவன் என்றுணர்ந் தோது (3)

மனிதம் = ?
 

-----

ஓதவனை மாவோ டுறைவோனை பாழுலகில்
ஆதரவாய்க் காப்பிங் கவனன்றி யேதுநெஞ்சே
ஓடேந்திக் காக்கின்ற ஊழிக்கூத் தன்பதத்தை
நாடி ஒடுங்கல் நலம் (4) 

 
"ஓதவனை, மாவோடு உறைவோனைப், பாழ் உலகில்
ஆதரவாய்க் காப்பு இங்கு அவன் அன்றி ஏது நெஞ்சே"

சொல்லமைப்பில் ஏதேனும் மாற்றம் தேவையோ?


-----

நலங்காக்க ஓடேந்தும் நம்பன் மயிலை
நிலங்காத்து நிற்பான் நிதமும் - மலநெஞ்சே
தீவினை யாவையும் தீர்க்க வரமளிக்கும்
கோவனையே உன்நினைவிற் கொள் (5)

-----

கொண்ணங்கை என்றான் குடநீற்றைப் பெண்ணாக்கிப்
பண்ணொன்றை சம்பந்தன் பாடியே - அண்ணெஞ்சே
ஆற்றுப் பெருக்காய் அவனருள், உன்னகத்தே
நீற்றான்றன் எண்ணம் நிறை (6)
கொண்ணங்கை = கொள் + நங்கை
அண்ணெஞ்சே = அள் + நெஞ்சே

-----

நிறையன்பன் நாடிவந்து நிற்போர்க் கருள்வான்
பிறைசூடி மாமயிலைப் பெம்மான் - குறைநெஞ்சே
இல்லாப் பொருள்வேண்டி இன்றேனும் சென்றங்கேத்(து) 
எல்லாம் அவனே என்று (7)


குறைநெஞ்சே - இதன்பொருள் என்ன?
 
-----

என்றேகும் என்றறியேன் என்பிணைகள் மாமயிலை
சென்றேனும் தீதெலாம் தீருமோ - வன்நெஞ்சே
வந்தோர்க் கருளி வரும்பிணையும் நீக்குமந்த
முந்தையன்றாள் எண்ணி முனை (8)

-----

முனைவோர்க் கருளும் முழுமுதல்வன் ஆடி
அனையேத்தும் மாமயிலை ஐயன் - வினைநெஞ்சே
தொக்குமூழ் அற்றுத் தொடரா நிலைவேண்டி
சொக்கன் பதியிற் றொழு (9)

-----

தொழுவார்க் கருள்கின்ற தோடுடையான் பாதத்(து)
ஒழுகாதார் உண்டோ உலகில் - எழுநெஞ்சே
உன்னை உழற்றும் உறுவினையைத் தீர்க்குங்காண்
அன்பொழுகும் அத்தன் அருள் (10)

-----

அருளன்றி வேறுண்டோ அத்தனவன் தாள்நினைந்துப்
பொருள்காண் பிறப்பில் புதிதாய் - இருள்நீங்க
அஞ்செழுத்தன் அன்பன்றி ஆதரவாய் வேறேது   
நெஞ்சே மயிலை நினை 


தாள்நினைந்து*ப்*பொருள்காண் - 'ப்' மிகாது.
 
-----

--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Chandar Subramanian

unread,
Aug 22, 2010, 9:37:50 AM8/22/10
to santhav...@googlegroups.com
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. வழக்கம் போல் சந்திப்பிழைகளை சுட்டியதற்கும் நன்றி.



2010/8/22 Siva Siva <naya...@gmail.com>

உங்கள் ஆர்வத்தை மெச்சுகிறேன்.

சில ஐயங்கள் / கருத்துகள்.

2010/8/22 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

தலவுலா (3. நெஞ்சே மயிலை நினை - திருமயிலை)

-----

அருளன்றி வேறுண்டோ ஐயன்ஆர் சீரூர்
திருமயிலை சேர்ந்தோர்க்கு? செல்நீ - கருநெஞ்சே
எண்ணத்தில் செய்கையில் ஏற்றந்தான் என்றுமிது
திண்ணம் அவன்பாதம் தேடு (1)

-----

தேடற் கரியானை தேவியே ஓர்மயிலாய்
ஆடிப் பணியும் அழகைக்காண் - ஓடுநெஞ்சே 
தாணாடு, மாமயிலை சங்கரன்றன் கோலவெழில் 
காணாத கண்ணன்று கண் (2)
தாணாடு = தாள் + நாடு


மாமயிலைச் சங்கரன் - என்று ஒற்றுமிகும் என எண்ணுகிறேன்.
இப்பாடலிலும் வேறு சில பாடல்களிலும் சில இடங்களில் வல்லொற்று மிகவேண்டும்.

-----

கண்மூடி இவ்வுலகில் காலம் கழித்தபின்
மண்மூடும் வாழ்வே மனிதம்காண் - புண்ணெஞ்சே 
கொள்வினை வேரறுக்கும் கோவன் மயிலையில்
உள்ளவன் என்றுணர்ந் தோது (3)

மனிதம் = ?

மனிதம் = மனிதப்பிறவி
 
 

-----

ஓதவனை மாவோ டுறைவோனை பாழுலகில்
ஆதரவாய்க் காப்பிங் கவனன்றி யேதுநெஞ்சே
ஓடேந்திக் காக்கின்ற ஊழிக்கூத் தன்பதத்தை
நாடி ஒடுங்கல் நலம் (4) 

 
"ஓதவனை, மாவோடு உறைவோனைப், பாழ் உலகில்
ஆதரவாய்க் காப்பு இங்கு அவன் அன்றி ஏது நெஞ்சே"

சொல்லமைப்பில் ஏதேனும் மாற்றம் தேவையோ?

தெரியவில்லை. நான் எண்ணுவது கீழ்கண்ட படி...
"ஓதவனை, மாவோடு உறைவோனைப்
- பாழ் உலகில் ஆதரவாய்க் 
- காப்பு இங்கு 
- அவன் அன்றி ஏது நெஞ்சே?"
 

-----

நலங்காக்க ஓடேந்தும் நம்பன் மயிலை
நிலங்காத்து நிற்பான் நிதமும் - மலநெஞ்சே
தீவினை யாவையும் தீர்க்க வரமளிக்கும்
கோவனையே உன்நினைவிற் கொள் (5)

-----

கொண்ணங்கை என்றான் குடநீற்றைப் பெண்ணாக்கிப்
பண்ணொன்றை சம்பந்தன் பாடியே - அண்ணெஞ்சே
ஆற்றுப் பெருக்காய் அவனருள், உன்னகத்தே
நீற்றான்றன் எண்ணம் நிறை (6)
கொண்ணங்கை = கொள் + நங்கை
அண்ணெஞ்சே = அள் + நெஞ்சே

-----

நிறையன்பன் நாடிவந்து நிற்போர்க் கருள்வான்
பிறைசூடி மாமயிலைப் பெம்மான் - குறைநெஞ்சே
இல்லாப் பொருள்வேண்டி இன்றேனும் சென்றங்கேத்(து) 
எல்லாம் அவனே என்று (7)


குறைநெஞ்சே - இதன்பொருள் என்ன?

குறைநெஞ்சு = நிறைநெஞ்சின் எதிர்ச்சொல்
 
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kaviyogi Vedham

unread,
Aug 22, 2010, 9:43:09 AM8/22/10
to santhav...@googlegroups.com
பலே! பலே உமது வெண்பாவில் பொருள்+சொல் ..லின் சீரான முன்னேற்றத்தைக்கண்டு மகிழ்கின்றேன். வாழ்க சந்தர்!
 யோகியார்

2010/8/22 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

srirangammohanarangan v

unread,
Aug 22, 2010, 9:44:41 AM8/22/10
to santhav...@googlegroups.com
சந்தர் சார், அந்தாதியாகத் தாங்கள் எழுதும் வெண்பாக்கள் கண்டேன் மகிழ்ந்தேன். நல்ல பொழுது. வாழ்த்துகளை ஏற்பீர்.
:--))

 

Chandar Subramanian

unread,
Aug 22, 2010, 10:12:54 AM8/22/10
to santhav...@googlegroups.com
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி



2010/8/22 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 22, 2010, 10:13:05 AM8/22/10
to santhav...@googlegroups.com
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

2010/8/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 24, 2010, 9:43:27 PM8/24/10
to santhav...@googlegroups.com
தீவுக்கோர் தீர்வு...

வண்டுகளொன் றாய்ச்சேர்ந்து வாதம் செய்யும் 
.. வழக்கில்லா வழக்கிதுவே வாயால் நாளும்
கொண்டுவரும் மலர்சொரிந்த குழம்புத் தேனைக்
.. கொள்வதாலே மதுக்கூடு தனதாய்ப் போமோ?
செண்டுகளோ பனிநீரைத் தினமும் மாற்றித் 
.. தெளிதேனாய் அளித்திடினும் சூதால் தோற்கும்; 
அண்டைநில ஈழமண்ணை வேராய்க் கொண்டோர்,
.. அளித்ததெது அடைந்ததெதென் றகிலம் சொல்லும். (1)

கவ்வவரும் கீரியெதிர் பாம்பை இட்டுக்
.. களத்திடையே போர்மூட்டிப் பொருளைச் சேர்ப்பான்;
அவ்விதமாய் இம்மண்ணில் நடந்த தாலே
.. ஆளுக்கொரு திசைசென்றார் அன்பர் பாரில்,
செவ்வியதாய் தாய்நாட்டில் வாழ்வைக் காணாச்  
.. செத்தொழிந்த சந்ததிகள் இரண்டா? மூன்றா?;  
எவ்வூரும் எமதென்னும் சங்கப் பாட்டின்
.. எழுபொருளும் ஈதாமோ? இதயம் சோரும். (2)

கிட்டியமண் துளியெனினும் பாறை ஓரம்
.. கிளர்ந்தெழும்பும் சிறுவிதையின் வேகம் காண்க;
முட்டியது பின்னோர்நாள் வேரை நீட்டி 
.. முளைமறுத்தப் பாறைதனை பிளக்கும் மெல்ல;
வெட்டியதோ இலைகிளைதான்; விளைந்த மண்ணுள் 
.. வேரென்றும் விழித்திருக்கும் விடியல் தேடி;  
கட்டியதாய் அவர்நினைக்கும் கோட்டை எல்லாம்
.. கனவாகும், காலஅலை கவிழ்த்துத் தள்ளும் (3)

இத்தனைநாள் போராடிப் பார்த்து வீணாய்
.. இழந்தவைதான் ஏராளம்; இன்னும் ஏனோ?
சத்தியத்தின் வழிசெல்லும் பாதை தன்னில்
.. சத்தியமாய் வெற்றியுண்டு; சற்றே முன்னர்
இத்தரையின் சுதந்திரத்தை வாங்கித் தந்த
.. இணையில்லாப் புதுசக்தி அதுவே அன்றோ?
கத்தியிலா இரத்தமிலாக் கரமே என்றும்
.. காட்டிடுமே வெற்றிபெறும் காட்சி தன்னை.  (4)

இன்னுமொரு வாய்ப்பதனை அளித்துப் பார்ப்போம்,
.. இயல்பான அரசியலால் இயலும் காண்க; 
வன்மையினை எதிர்த்துத்தன் வாழ்வை ஈந்தோர்
.. வருங்காலம் கண்டிருப்பார் கனவில் அன்றே,
இன்பமதின் இயல்பென்றும் மழையை ஒக்கும்,
.. இடிகண்டோம், இனிதொடரும் இன்பத் தூறல்;
முன்னுற்ற துன்பமில்லா முடிவ தொன்றை,
.. முடிவில்லான் எவர்க்குமாக முடித்து வைப்பான் (5)

வேர்வுண்டு, விளைவாக விளைச்சல் உண்டு,
.. வீரமுண்டு, விளைவாக வெற்றி உண்டு,
தேர்வுண்டு, விளைவாகத் தேர்ச்சி உண்டு
.. தேவையுண்டு, விளைவாகத் தேடல் உண்டு, 
நீர்வுண்டு, விளைவாக நிலமும் உண்டு, 
.. நிலஞ்சார்ந்த பெருங்குடிக்கு நிஜமாய் ஓர்நாள் 
தீர்வுண்டு, விளைவாகத் தீவில் மீண்டும்
.. செழிப்பான வாழ்க்கையது திரும்ப உண்டே. (6)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 24, 2010, 9:55:32 PM8/24/10
to santhav...@googlegroups.com
உள்ளில் பொங்கும் உணர்ச்சிகளை அற்புதமாய்க் கவிதையில் வடித்திருக்கிறீர்கள்.  அடிபட்டவர்களுக்கு விடிவு காலம் கட்டாயம் வருமென்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.  காத்திருப்போம்.
 
அனந்த்
 
நீர்வுண்டு - பொருள்? நீருண்டு?

2010/8/24 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 24, 2010, 10:06:37 PM8/24/10
to santhav...@googlegroups.com
தவறுக்கு வருந்துகிறேன். திருத்திய படிவம்...

வேர்தந்த விளைவாக விளைச்சல் உண்டு,
.. வீரத்தின் விளைவாக வெற்றி உண்டு,
தேர்வுண்டு, விளைவாகத் தேர்ச்சி உண்டு
.. தேவையதன் விளைவாகத் தேடல் உண்டு,
நீர்தந்த விளைவாக நிலமும் உண்டு,
.. நிலஞ்சார்ந்த பெருங்குடிக்கு நிஜமாய் ஓர்நாள்
தீர்வுண்டு, விளைவாகத் தீவில் மீண்டும்
.. செழிப்பான வாழ்க்கையது திரும்ப உண்டே. (6)


2010/8/25 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Aug 25, 2010, 2:53:43 AM8/25/10
to santhav...@googlegroups.com
நல்ல பாட்டு..வாழ்க,
 யோகியார்

2010/8/25 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Chandar Subramanian

unread,
Aug 27, 2010, 8:48:17 PM8/27/10
to santhav...@googlegroups.com
பகவத்கீதை, ஐந்தாம் அத்தியாயத்தின் குறிப்பிட்ட சில பாடல்களின் எனது புரிதலை, இங்கு வெண்பா வடிவில் அமைத்துள்ளேன். நிறை குறைகளை மடலாய் இட வேண்டுகிறேன்

-----

பக்தியும் வாழ்வில் பலன்தேடா அந்நிலையும்
ஒத்ததெனப் பேதை உணரான் - உத்தியுடன் 
ஒன்றியற்றின் பேறிரண்டாய் உய்ப்பான் அறிகநீ
நன்றீ தறிவர் நயர் (5:4)

நயர் - அறிவுடையவர்

-----

செயற்கணிக்கும் சிந்தனை சேர்நிலையை பக்தி
உயர்நிலைஆர் தொண்டாலும் உய்ப்பர் - இயல்பொக்கும்
இவ்விரண்டும் ஒர்நிலை என்பர்; அறிகநீ
செவ்வித் தெளிவர் செயல் (5:5)

-----

செய்பணியைப் பக்தியொடு செய்குணத்தார், ஐந்தொடுக்கி
உய்வழி நன்குணர்ந்த உத்தமரே மெய்யன்பர்
யார்க்கும்;எல் லாருமவர் அன்பர்; அறிகநீ 
சேர்பிணைகா ணாதச் செயல் (5:7)

-----

கண்டுகேட் டுண்டுயிர்த்துக் கைதொட் டுணர்ந்திரு
கண்ணயர்ந்து மேல்முகர்ந்து காலுலவி - எண்செய்தும்
செய்திலர்தாம் என்றே தெளிவர் அறிகநீ
ஐம்புலன் ஆளும் அவர் (5:8)  

-----

எண்ணத்தார் பேச்சதனோ டேற்பு விடுப்புடன் 
கண்திறப்பு மூடலுமாய் காண்செயல்கள் - கொண்டுழற்றல்
ஐம்புலன்றன் போக்கென் றறிவர் அறிகநீ
தம்மை பிணைக்கா தவர் (5:9) 

-----

பலனெமக்கு நேர்ந்துப் பணிசெய்மெய் பக்தன்
துலங்கமைதி பெற்றதில் துய்ப்பான் - கலங்குமனம்
செய்பலனைத் தேடித் திரியும் அறிகநீ
பொய்ச்சுழலில் வெஃகிப் புகும் (5:12)

வெஃகுதல் - பேராசைப்படுதல்

-----

தன்னியல்பை தன்வயத்தே தானடக்கித் தன்மனதால்
முன்னும் செயல்மறுக்கும் மேலான்மா - ஒன்பதுவாய்
மெய்யில் மகிழ்ந்தின்பம் மேவும் அறிகநீ
செய்தல் செயத்தூண்டல் தீர்த்து (5:13) 

-----

உள்,அறிவு, நம்பிக்கை ஒன்றிஅரண் என்றுபரம்
கொள்வரே தீவினைகள் கொல்வரவர் - தெண்ணிறை
ஞானத் தெளிவிது நல்கும் அறிகநீ
ஆனது மோட்சம் அது (5.17)

-----

ஒல்காச் சமநிலையில் ஒன்றும் மனமுடையார்
வெல்வாரே தொந்தத்து வேற்றுமையை - அல்லுலகில்
மாசற்றார் என்பர் இவரே அறிகநீ
தேசுற்றார் தெய்வத் திருந்து (5:19)

தொந்தம் - Pair, couple; இரட்டை; duality
ஒல்கா - தளராத / சுருங்காத

-----

இன்பக் களிப்பும் இலையென் வரும்வெறுப்பும்
ஒன்றென்பான் நெஞ்சம் உழம்பாதான் - முன்னமே 
அண்ட பிரம்மத் தமைவான் அறிகநீ
கொண்ட அறிவின் கொடை (5:20)

-----

மிக்கப் புலன்களிப்பின் மேலெழும் ஈதறிந்தே
துக்கத்தை போதர் துறந்திடுவர் - அக்களிப்பும்
தோன்றி யழியும் தொடரா தறிகநீ
ஆன்றோர் அறிவர் அது (5:22)

போதர் - புத்திமான்

-----

மெய்விடுமுன் வெஞ்சினம் வெஃகலிவை ஆய்ந்துத்தன் 
ஐம்புலனார் ஆசை அழிப்பவனே - உய்யுலகில்
இன்பம் திளைக்க இருப்பான் அறிகநீ
நன்றமையும் வாழ்வின் நடப்பு (5:23)

-----

ஐயத் தெழுசெயல் அற்றுமனத் துள்ளுணர்வோ 
டுய்யுலகம் ஓங்க உழைநெஞ்சும் - செய்வினை
யண்டாச் சிறப்புமுடை ஆன்றோர்க் கறிகநீ
உண்டப் பரத்தில் உயிர்ப்பு (5:25)

-----

வேள்வி தவத்தால் விழையும் பலனெமக்கு
கோள்யாவும் எம்வசமே கோன்யாமே - ஆள்பதும்யாம்
எவ்வுயிர்க்கும் நண்பனெமை எண்ணத் தறிந்துநீ
கவ்வுபிணை யற்றமைதி காண் (5:29) 

-----

Chandar Subramanian

unread,
Aug 30, 2010, 9:11:38 PM8/30/10
to santhav...@googlegroups.com
இரவல் வாழ்க்கை
 
 
தந்தையே உயிர்ப்பைத் தந்தான்;
.. தாயினள் ஊனைத் தந்தாள்;
முந்தையன் உணர்வைத் தந்தான்;
.. முழுவுரு மனிதன் என்னும்
விந்தையாய் மண்ணிற் சேர
.. உலகமோர் பெயரைச் சேர்க்கும்;
சொந்தமாய் ஏதும் அற்ற
.. தொடர்கதை இரவல் வாழ்க்கை (1)
 
 
ஆவதின் கன்றாய் மாறி
.. அருந்துவோம் இரவற் பாலை;
பூவதைத் தொடரும் நெல்நாம்
.. புசித்திடும் இரவற் சோறு;
பாவதில் நெய்த ஆடை
.. பருத்தியின் இரவல் நூலால்;
தேவைதான் வசிக்க வீடு,
.. செய்வதும் மரம்மண் தானே (2)
 
 
கல்வியை யாரோ ஈவர்,
.. கருத்ததை சேர்த்துப் பார்ப்போம்;
அல்லதும் நலமும் வாழ்வில்
.. அடுத்தவர் கொடுத்துச் செல்வர்;
செல்வமும் இரந்தி ரந்து
.. செலும்வரை சேர்த்த தன்றோ?
இல்லவே இல்லை என்றே
.. இடைவிடா திரந்து வாழ்வோம் (3)
 
 
ஊனதின் செல்கள் யாவும்
.. உணவதின் சக்தி ஏற்கும்;
மேனிறம் முன்னோர்த் தோலின்
.. மரபுதன் குணத்தை ஒக்கும்;
தானெனும் செருக்கில் மீசை
.. தழைத்திட உதட்டின் ஓரம்,
நானெனும் எண்ணம் ஏனோ
.. நம்நிலை மறந்து நிற்கும் (4)
 
 
வாலிபம் வந்த பின்னே
.. வளர்த்தவர் பெண்ணை ஈவார்;
தாலியாற் சொந்தம் ஆவாள்,
.. தாவென இரப்போம் அன்பை;
கோலமாய் அமைந்த வாழ்வில்
.. குழந்தையை இரந்து கொள்வோம்;
பாலகன் வளரும் போழ்து
.. பார்என இரந்து நிற்போம் (5)
 
 
மண்ணதில் வீழ்ந்த போது
.. வளர்ந்திட இரந்த காற்று;
விண்ணவன் மீட்டுச் செல்ல
.. விழைகுவான் கொடுத்த மூச்சை;
கண்ணெதிர் உயிரும் மீளும்,
.. காயமும் மறையும் மண்ணுள்;
உண்மையாய் நமது வாழ்வின்
.. உடமைகள் ஏதும் உண்டோ? (6)
 
 
வந்ததின் நோக்கம் என்ன?
.. வரவென ஏதும் இல்லை;
மந்தையாய் வாழ்வோம், மாய்வோம்;
.. மனமெலாம் நிறைந்து நிற்கும்
சிந்தனை என்னும் ஒன்றே
.. சேர்த்ததென் றெண்ணும் வேளை
தந்தவன் அணுகு கின்றான்,
.. தாவெனக் கேட்ப தற்கோ? (7)

Dr Subramanian

unread,
Aug 30, 2010, 9:29:53 PM8/30/10
to santhav...@googlegroups.com
"இரவல் தந்தவன் கேட்கின்றான்
இல்லையென்றால் அவன் விடுவானா? "
என்ற
கண்ணதாசன் வரிகளுக்கு முழுநீளக் கவிதை விளக்கமாக நான் உங்கள் பாடலை இரசித்தேன்.மிக அருமை.
வவேசு

2010/8/31 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Siva Siva

unread,
Aug 30, 2010, 10:38:10 PM8/30/10
to santhav...@googlegroups.com
நல்ல பாடல்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/8/30 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

இரவல் வாழ்க்கை
 
 
தந்தையே உயிர்ப்பைத் தந்தான்;
.. தாயினள் ஊனைத் தந்தாள்;
முந்தையன் உணர்வைத் தந்தான்;
.. முழுவுரு மனிதன் என்னும்
விந்தையாய் மண்ணிற் சேர
.. உலகமோர் பெயரைச் சேர்க்கும்;
சொந்தமாய் ஏதும் அற்ற
.. தொடர்கதை இரவல் வாழ்க்கை (1)

தாயினள்? தாயவள்?

மூன்றாம் அடியில் மோனை இருப்பின் இன்னும் சிறக்கும்.
 
 
ஆவதின் கன்றாய் மாறி
.. அருந்துவோம் இரவற் பாலை;
பூவதைத் தொடரும் நெல்நாம்
.. புசித்திடும் இரவற் சோறு;
பாவதில் நெய்த ஆடை
.. பருத்தியின் இரவல் நூலால்;
தேவைதான் வசிக்க வீடு,
.. செய்வதும் மரம்மண் தானே (2)

ஆவதின்? ஆவதன் (ஆ அதன்)? (இதே போல் பிற பாடல்களிலும்).

// பூவதைத் தொடரும் நெல்நாம்
.. புசித்திடும் இரவற் சோறு; //
இது எனக்குப் புரியவில்லை.
 

தந்தவன் அணுகுகிறானா, காலன் அணுகுகிறானா?
 


Kaviyogi Vedham

unread,
Aug 31, 2010, 6:02:16 AM8/31/10
to santhav...@googlegroups.com
ஆம்.. நம் அனைவரது உயிர், உடல்,எண்ணம் யாவும்
 பிறர் கொடுத்த பிச்சையே.
 நல்ல தத்துவம் தந்த சந்தர் வாழ்க!
யோகியார்

2010/8/31 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Aug 31, 2010, 9:23:31 AM8/31/10
to santhav...@googlegroups.com
கண்ணதாசனின் இந்தப்பாடல் தெரிந்திருந்தும், பாடல் எழுதும் போது, என் கவனத்துக்கு வரவில்லை. நனவோடையை இணைத்ததற்கு நன்றி. உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.



2010/8/31 Dr Subramanian <vav...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 31, 2010, 9:27:36 AM8/31/10
to santhav...@googlegroups.com
பிழைகளைச் சுட்டியதற்கு நன்றி.

தாயினள்/தாயவள்: 
'தாயினள்' என்பது தவறா? விளக்கவும்.

மூன்றாம் அடியில் மோனை: 
.. முழுவுரு மனிதன் என்னும்
விந்தையாய் மண்ணிற் சேர
.. விளிக்கவோர் பெயரும் சேரும்;
என வரலாமா?

ஆவதன்: 
நன்றி. திருத்திக்கொள்கிறேன் (ஆவதன் / ஊனதன் / வந்ததன்)

// பூவதைத் தொடரும் நெல்நாம்
.. புசித்திடும் இரவற் சோறு; //: 
பூவின் தொடர்ச்சியாக வரும் நெல்மணிகளே நாம் புசித்திட ஆகும் சோறு, அதுவும் இயற்கையிடம் இரந்து பெற்றது.  

தந்தவன் அணுகுகிறானா, காலன் அணுகுகிறானா?: 
தந்தவனே. முதல் பாடலில், நம் உணர்வுகளைத் தந்தவன் இறைவன் என்பதால், அவ்வுணர்வுகளைத் திரும்பிப்பெற அவ்விறைவன் வருகிறானா எனும் பொருளில் அமைத்தேன்.


2010/8/31 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Aug 31, 2010, 9:27:55 AM8/31/10
to santhav...@googlegroups.com
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.



2010/8/31 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Chandar Subramanian

unread,
Sep 2, 2010, 9:27:56 PM9/2/10
to santhav...@googlegroups.com
ரசனை இதழில் வெளியான எனது பாடலை குழுமத்தில் இட்ட திரு கவியோகி அவர்களுக்கு எனது நன்றி. இவ்வாய்ப்பினை அளித்த திரு இலந்தையார் அவர்களுக்கும் என் நன்றி.

பாடலை இங்கு இடுகிறேன்.

நிழலின் நிஜங்கள்...

ஓவியனே தூரிகையாய் உருவில் மாறி
.. ஓய்வின்றி வரைகின்றான் நிழலை மண்ணில்;
ஆவியென ஊனுடலை அணைத்துக் கொண்டே
.. அந்திவரை நிழல்நிஜத்தை அடுத்துச் செல்லும்;
சாவியிலா எந்திரனோ? தன்செல் க்ளோனோ?
.. தன்நிஜத்தின், அகமுகத்தின் தன்மை தானோ?
ஏவியெவர் விட்டவினை? என்றும் பின்னே
.. இடைவிடாது செல்கின்ற இருட்டுச் சாத்தான் (1)

ஆடியென நிலப்பரப்பை ஆக்கித் தானே
.. அடிகீழே அடியொன்றை அளந்து வைக்கும்,
சோடியென நிஜத்தோடு திரிந்த போதும்
.. சுடுவெய்யில் படும்வேளை தேய்ந்துப் போன
பேடியென உருசுருங்கி புதைந்து நின்றும்
.. பிற்பகலும் முற்பகலும் பெரிதாய் நீளும்;
ஓடிடுமே இரவினிலே ஒளியைக் கண்டால்
.. ஒளிந்துகொளும், நிஜமறைவில் ஒடுங்கி நிற்கும் (2)

காலுடைய மனசாட்சி கண்டோம் இங்கே,
.. கருநிழலே; அதுநமக்குக் காட்டும் நம்மை;
காலணியாய் நம்கால்கள் கடந்து வந்த
.. காலமெலாம் அதுவாழும்; காவல் நிற்கும்;
காலனவன் உயிர்பறிக்க காற்றுப் போயும்
.. கடமையிலே தவறாது காயம் காக்கும்;
காலத்தால் அழியாத கருப்புச் சாமி
.. கண்கண்ட கடவுளிது, கண்ணே சாட்சி (3)
scan0006.jpg

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 2, 2010, 10:23:31 PM9/2/10
to santhav...@googlegroups.com
அருமை!
 
அனந்த்
 
ஒற்று:  தேய்ந்து போன; உரு*ச்*சுருங்கி; மன*ச்*சாட்சி (?); உயிர்பறிக்க*க்* காற்று,

2010/9/2 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Sep 4, 2010, 1:40:48 AM9/4/10
to santhav...@googlegroups.com
பிழைகளைத் திருத்தியதற்கு நன்றி.

2010/9/3 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Sep 4, 2010, 1:44:45 AM9/4/10
to santhav...@googlegroups.com
நான்பெரியன், வானில்லை


வெள்ளைக் குழம்பெடுத்து வெளிர்நீல வான்திரையில்
கள்ளைப் பரப்புகின்றான் காவியமாய் கவிஇறைவன்
உள்ளம் அதைக்குடிக்க உணர்விழந்தவ் வொருநொடியில்
துள்ளும் மன அசைவில் தொடர்ந்திடுங் கவிதையிது


காற்றுத் தூரிகையால் கண்கவரும் ஓவியத்தை
ஊற்றிச் செல்கின்றான் உளம்காணும் வழியாவும்;
நேற்று வரைந்ததுவோ நிலையாக இன்றில்லை 
மாற்றுக் கவிபாடி மகிழ்விப்பான் தினந்தோறும்


முன்னர் எழுங்கதிரின் முள்ளொத்தக் கிரணங்கள்
குன்றைச் செதுக்கஅதன் கோலத்தில் வரும்மாற்றம்; 
தென்றல் தினந்தோறும் திரைமேகத் துணிகொண்டு
கன்னி மலைமகளின் கண்ணொத்தி மைத்தீட்டும்


வட்ட விண்ணோடி வகைவகையாய் விளையாடி
முட்டும் மேகமதன் முன்னோடும் ஒளிக்கீற்று,
சொட்டும் அழகெடுத்துத் துளித்துளியாய்த் தேன்சேர்த்து
கொட்டும் நம்விழியில், கொளுமுள்ளம் பூரிக்கும்


கண்கள் குவளைகளோ, காணும்வான் கள்ளூற்றோ,
எண்ணம் தடுமாற எடுத்தெடுத்து நிரப்புகின்றேன்;
பண்டம் தலைக்கேறப் பார்வைகள் பலவாகி 
அண்டம் அனைத்தையுமே அடைக்கின்றேன் ஆழ்மனத்தில்


வானம் ஒன்றதிலே வருங்காட்சி பலகோடி;
நானென் பார்வையினால் நகலெடுத்த தொருகோடி;
ஆன திவைகோடி அண்டமென்றன் ஆழ்மனத்தே;
ஞான மிதுவென்பேன் நான்பெரியன், வானில்லை


ஓடி மறைகின்ற ஒருநிமிட ஓவியங்கள்,
நாடின் அதைப்பின்னர் நாம்காண இயலாதே; 
கோடி அவைசேர்த்து கொண்டுள்ளேன் என்னகத்துள்,
தேடும் நிமிடத்தே திரும்பவரும் கண்முன்னே


போதும் இக்கவிதை, பொழுதின்று போவதற்குள்
மோதும் மேகத்தின் முழுவுருவப் படம்வேண்டும்;
யாதும் எனக்கென்றே எழுவானம் அளிக்கையிலே
ஏதும் செயலாமோ இதுவன்றி இனியிங்கே!

selva kumaran

unread,
Sep 4, 2010, 6:13:09 AM9/4/10
to santhav...@googlegroups.com
இங்கிருக்கும் தமிழ் பெருமக்கள் யாராவது இந்த ஒற்று விஷயங்களை  எளிய நடையில் சிறுகச் சிறுகச் சொன்னால் நன்றாக இருக்கும்.

ஒரேயடியாக ஏதாவது கட்டுரை ஒன்றை படியுங்கள் என்று அனுப்பி விடாமல் ஒவ்வொரு மடலாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.


சந்தி பிழை, ஒற்று விஷயங்களை தெள்ளத் தெளிவாக புரிந்துக் கொள்கிறார் போல் யாராவது எழுதினால் அதுவே இந்த காலத்திற்கேத்த தமிழ் சேவையாக இருக்கும்.



2010/9/3 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
அருமை!

Kaviyogi Vedham

unread,
Sep 4, 2010, 8:24:34 AM9/4/10
to santhav...@googlegroups.com
அட்டகாசம் சந்தர்.. எங்கேயோ போய்விட்டீர்! வாழ்க!
 யோகியார்

2010/9/4 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Chandar Subramanian

unread,
Sep 4, 2010, 10:09:57 PM9/4/10
to santhav...@googlegroups.com
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

2010/9/4 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Chandar Subramanian

unread,
Sep 5, 2010, 9:35:13 PM9/5/10
to santhav...@googlegroups.com
தலவுலா (4. ஏகம்பனுக்கு ஏது இணை? - திருக்கச்சி)

-----

நினைந்தவனை நின்றவற்றன் நிட்டை கலைக்கச்
சுனைவழி வெள்ளம் சொரிந்தான் - நனைகணிகம்
கட்டியன்றோ காத்திருந்தாள் காமாட்சி இப்பதியை
ஒட்டிநில் ஓடும் வினை (1)

கணிகம் = தாற்காலிக பூசைக்குரியதாய் மண் முதலியவற்றால் செய்யப்பெறும் இலிங்கம் 

குறிப்பு:-
காஞ்சியில், கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தைச் செய்து பார்வதி பரமசிவனை பூஜித்து வந்தார். சிவபெருமான், பார்வதியின் தவத்தைக் கலைக்கச் சடையில் உள்ள கங்கையின் நீரைக் கம்பையாற்றில் வெள்ளமாகச் செய்தார். வெள்ளம் கண்டு பார்வதி சிவலிங்கத்தைக் கைகளால் அணைத்துக் கொண்டார். 

-----

வினையறுக்க வல்லான் விழியொன்றை மீட்டு 
தனைத்தொழும் தோழனுக்குத் தந்தான் - நினைப்பவர்க்(கு)
எண்ணிய யாவையும் எண்ணிய வாறளிக்கும் 
அண்ணற்றன் பாதம் அடை (2)

-----

அடைவோர்க் கருள்கின்ற அத்தன்வாழ் கச்சி
விடையீனும் எல்லா வினைக்கும் - மடையில்லா
ஆற்றுப் பெருக்காம் அவனருள வன்புகழை
போற்றிச்சேர் வாழ்வின் பொருள் (3)

-----

பொருட்தேடி ஓடும் புவிவாழ்க்கை கான்வாழ்
இருட்தேடும் பேயின் இயல்பே - அருட்தேடி
அண்ணலின் தாளண் டவன்நினைவால் உண்டினிகாண் 
உண்மை ஒளிரும் உளம் (4)

-----

உள்குவார் உள்ளத் துறைவோனை கம்பைநதி
வெள்ள விளையாட்டு வித்தகனை - கொள்கஉன்
நெஞ்சகத்தே; கொண்டவினை நீங்கிட கச்சிவாழ்
பிஞ்ஞகனின் பாதம் பிடி (5) 

-----

பிடித்தகை என்றும் பிழையாதெ னுஞ்சொல் 
விடுத்தவன்றன் பார்வையை மீட்டான் - அடுத்தரனை
எச்சுவோர் வாழ்வெல்லாம் ஏற்றந்தான்; தாழ்வுதனிற்
கச்சியான் தாளே கதி (6)

குறிப்பு:-
சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரிடம் பிரியமாட்டேன் என்று வாக்குக் கொடுத்து மணம் புரிந்தார். பின்னர் அவர் சங்கிலியாரை விட்டுப்பிரிந்ததால் தன் கண்பார்வையை இழந்தார். பின் காஞ்சியை அடைந்து திருவேகம்பத்தில் இறைவனை வழிபட இறைவன் இடக்கண்ணை அளித்தான். 

-----

கதியற்று வாழ்க்கை கரையுமுன்னர் கச்சிப்
பதியொட்டி நெஞ்சைப் பதஞ்செய் - நதிகொட்டி
அம்மைக் கருட்தந்த அண்ணலவன் பாதங்காண்
மும்மைவினை கட்கும் முடிவு (7)

-----

முடிவின்றி எண்ணங்கள் மோதும்போ(து) ஐயன் 
அடிபோற்றி வாழ்தல் அழகு - நொடிப்போதில்
எண்ணத்தை மாற்றும் இயல்புடைத்து நின்புறக்
கண்காண் கனவுக் கடை (8)

-----

கடைவரை கேள்வியேன்? கச்சிநகர் ஆங்கண்
விடைஆர் திசையும் விளங்கும் - சடையன்மேற்
கல்லெறிந்த சாக்கியனும் கண்டுவந்தான்; ஓங்காரச்
சொல்லறிந்து நீயும் தொழு (9)

குறிப்பு:-
புத்தமதத்தை சார்ந்த சாக்கியர் என்பவர் அன்றாடம் உணவுக்குமுன் ஈசன் மீது கல்லை ஏறிந்து வழிபடுவார். ஒருநாள் அதை மறந்து உண்ணப் புகுந்தார். அப்போது கல்லெறியும் நினைவு வர எழுந்து வந்து சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்தார். அவருடைய செயலில் மனம்மகிழ்ந்த இறைவன் அவருக்கு காட்சி தந்து அவரை ஆட்கொண்டார்.

-----

தொழுவார்தம் ஆடை துவைப்பானை சோதித்(து) 
அழவைத்தான் வேடங்கொண் டையன் - மழைவானால் 
அன்றளந்தான் அன்பனின் அன்பினை; கச்சிவாழ்
நின்றளந்தான் பாதம் நினை (10)

குறிப்பு:-
சலவைத் தொழிலாளியான திருக்குறிப்புத் தொண்டர் ஏகம்பனின் மேல் இருந்த அளவிடற்கரிய பக்தியால் சிவனடியார்களின் ஆடைகளை துவைப்பதையே தன் தொண்டாகச் செய்து வந்தார். இறைவன் சிவனடியார் வேடத்தில் அழுக்குத் துணியைக் கொடுத்து அன்று மாலைக்குள் துவைத்து உலர்த்தித் தருமாறு கேட்டு உறுதியையும் பெற்றார். சிவன் தன் திருவிளையாடலால் அன்று முழுவதும் மழையைப் பெய்யச் செய்தார். சலவைத் தொழிலாளியான அவர் தன் வாக்கு தவறியதை எண்ணி வேதனை கொண்டு துணி துவைக்கும் கல்விலேயே தன் தலையை மோதி நாயனார் உயிர்விடத் துணிந்தார். அப்போது திருவேகம்பர் காமாட்சியோடு எழுந்தருளிக் காட்சி தந்தார். 

-----

நினையவனை மாயைசூழ் நீள்வாழ்வில் சேரும்
வினையாவும் வேரற்று வீழும் - அனையொரு 
பாகத்தான் மால்காணா பாதத்தான் கச்சிவாழ்
ஏகம்ப னுக்கே(து) இணை

-----

ka thamizhamallan

unread,
Sep 5, 2010, 10:19:59 PM9/5/10
to santhav...@googlegroups.com
சந்தர் சுப்பிரமணியன் பாடலில் கற்பனைச் சிறப்பைக்கண்டேன். பிறமொழிச்சொற்கள் மிகுதி.
5ஆம் வரி இறுதிச் சீர் பிழை.தேய்ந்துப்போன ஒற்று மிகாது.
தெரிந்து கொள்வதற்காகச் சொன்னேன்.அனந்து எடுத்துக்காட்டியுள்ளவை சரியானவை.மனச்சான்று இதில் ஒற்றுமிகுதல் இயல்பு.மனசாட்சி யே போதும். ஒற்று வேண்டா.சாட்சி தமிழன்றாகையால்.
முனைவர் க.தமிழமல்லன்


 
3-9-10 அன்று, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> எழுதினார்:

Siva Siva

unread,
Sep 6, 2010, 1:36:37 PM9/6/10
to santhav...@googlegroups.com
நல்ல கற்பனை வளம்! வாழ்க!

முதற் பாடலில் 'இருட்டுச் சாத்தான்' என்கிறீர். பின்னர், மூன்றாம் பாடலில் 'கண்கண்ட கடவுளிது' என்கிறீர். சற்று முரண்படுகிறதே!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/9/2 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

ரசனை இதழில் வெளியான எனது பாடலை குழுமத்தில் இட்ட திரு கவியோகி அவர்களுக்கு எனது நன்றி. இவ்வாய்ப்பினை அளித்த திரு இலந்தையார் அவர்களுக்கும் என் நன்றி.

பாடலை இங்கு இடுகிறேன்.

நிழலின் நிஜங்கள்...

ஓவியனே தூரிகையாய் உருவில் மாறி
.. ஓய்வின்றி வரைகின்றான் நிழலை மண்ணில்;
ஆவியென ஊனுடலை அணைத்துக் கொண்டே
.. அந்திவரை நிழல்நிஜத்தை அடுத்துச் செல்லும்;
சாவியிலா எந்திரனோ? தன்செல் க்ளோனோ?
.. தன்நிஜத்தின், அகமுகத்தின் தன்மை தானோ?
ஏவியெவர் விட்டவினை? என்றும் பின்னே
.. இடைவிடாது செல்கின்ற இருட்டுச் சாத்தான் (1)

ஆடியென நிலப்பரப்பை ஆக்கித் தானே
.. அடிகீழே அடியொன்றை அளந்து வைக்கும்,
சோடியென நிஜத்தோடு திரிந்த போதும்
.. சுடுவெய்யில் படும்வேளை தேய்ந்துப் போன
பேடியென உருசுருங்கி புதைந்து நின்றும்
.. பிற்பகலும் முற்பகலும் பெரிதாய் நீளும்;
ஓடிடுமே இரவினிலே ஒளியைக் கண்டால்
.. ஒளிந்துகொளும், நிஜமறைவில் ஒடுங்கி நிற்கும் (2)

அடிக்கீழே, உருச்சுருங்கிப் புதைந்து - என ஒற்றுமிக்கு வரும் என எண்ணுகிறேன்.
தேய்ந்து போன - ஒற்றுமிகாது வரும்.

காலுடைய மனசாட்சி கண்டோம் இங்கே,
.. கருநிழலே; அதுநமக்குக் காட்டும் நம்மை;
காலணியாய் நம்கால்கள் கடந்து வந்த
.. காலமெலாம் அதுவாழும்; காவல் நிற்கும்;
காலனவன் உயிர்பறிக்க காற்றுப் போயும்
.. கடமையிலே தவறாது காயம் காக்கும்;
காலத்தால் அழியாத கருப்புச் சாமி
.. கண்கண்ட கடவுளிது, கண்ணே சாட்சி (3)



மனச்சாட்சி - என 'ச்' மிக்குவரும் எனக் கருதுகிறேன்.
 


Siva Siva

unread,
Sep 6, 2010, 1:53:48 PM9/6/10
to santhav...@googlegroups.com
நல்ல கருத்து. வாழ்க!

2010/9/5 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

தலவுலா (4. ஏகம்பனுக்கு ஏது இணை? - திருக்கச்சி)

-----

நினைந்தவனை நின்றவற்றன் நிட்டை கலைக்கச்
சுனைவழி வெள்ளம் சொரிந்தான் - நனைகணிகம்
கட்டியன்றோ காத்திருந்தாள் காமாட்சி இப்பதியை
ஒட்டிநில் ஓடும் வினை (1)

கணிகம் = தாற்காலிக பூசைக்குரியதாய் மண் முதலியவற்றால் செய்யப்பெறும் இலிங்கம் 

குறிப்பு:-
காஞ்சியில், கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தைச் செய்து பார்வதி பரமசிவனை பூஜித்து வந்தார். சிவபெருமான், பார்வதியின் தவத்தைக் கலைக்கச் சடையில் உள்ள கங்கையின் நீரைக் கம்பையாற்றில் வெள்ளமாகச் செய்தார். வெள்ளம் கண்டு பார்வதி சிவலிங்கத்தைக் கைகளால் அணைத்துக் கொண்டார். 

-----

வினையறுக்க வல்லான் விழியொன்றை மீட்டு 
தனைத்தொழும் தோழனுக்குத் தந்தான் - நினைப்பவர்க்(கு)
எண்ணிய யாவையும் எண்ணிய வாறளிக்கும் 
அண்ணற்றன் பாதம் அடை (2)

அண்ணல்தன் - புணர்ச்சியில் 'அண்ணறன் ' என்று ஆகும் என எண்ணுகிறேன்.


-----

அடைவோர்க் கருள்கின்ற அத்தன்வாழ் கச்சி
விடையீனும் எல்லா வினைக்கும் - மடையில்லா
ஆற்றுப் பெருக்காம் அவனருள வன்புகழை
போற்றிச்சேர் வாழ்வின் பொருள் (3)

-----

பொருட்தேடி ஓடும் புவிவாழ்க்கை கான்வாழ்
இருட்தேடும் பேயின் இயல்பே - அருட்தேடி
அண்ணலின் தாளண் டவன்நினைவால் உண்டினிகாண் 
உண்மை ஒளிரும் உளம் (4)


பொருள் தேடி -  'பொருடேடி என்று புணருமோ? (அதேபோல் இருள் தேடி, அருள் தேடி).

-----

உள்குவார் உள்ளத் துறைவோனை கம்பைநதி
வெள்ள விளையாட்டு வித்தகனை - கொள்கஉன்
நெஞ்சகத்தே; கொண்டவினை நீங்கிட கச்சிவாழ்
பிஞ்ஞகனின் பாதம் பிடி (5) 

-----

பிடித்தகை என்றும் பிழையாதெ னுஞ்சொல் 
விடுத்தவன்றன் பார்வையை மீட்டான் - அடுத்தரனை
எச்சுவோர் வாழ்வெல்லாம் ஏற்றந்தான்; தாழ்வுதனிற்
கச்சியான் தாளே கதி (6)

குறிப்பு:-
சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரிடம் பிரியமாட்டேன் என்று வாக்குக் கொடுத்து மணம் புரிந்தார். பின்னர் அவர் சங்கிலியாரை விட்டுப்பிரிந்ததால் தன் கண்பார்வையை இழந்தார். பின் காஞ்சியை அடைந்து திருவேகம்பத்தில் இறைவனை வழிபட இறைவன் இடக்கண்ணை அளித்தான். 

-----

கதியற்று வாழ்க்கை கரையுமுன்னர் கச்சிப்
பதியொட்டி நெஞ்சைப் பதஞ்செய் - நதிகொட்டி
அம்மைக் கருட்தந்த அண்ணலவன் பாதங்காண்
மும்மைவினை கட்கும் முடிவு (7)

முன்னர் - இதன் பின் வல்லொற்று மிகும்.
அருள் தந்த - 'அருடந்த' என்று புணருமோ?

 

-----

முடிவின்றி எண்ணங்கள் மோதும்போ(து) ஐயன் 
அடிபோற்றி வாழ்தல் அழகு - நொடிப்போதில்
எண்ணத்தை மாற்றும் இயல்புடைத்து நின்புறக்
கண்காண் கனவுக் கடை (8)

-----

கடைவரை கேள்வியேன்? கச்சிநகர் ஆங்கண்
விடைஆர் திசையும் விளங்கும் - சடையன்மேற்
கல்லெறிந்த சாக்கியனும் கண்டுவந்தான்; ஓங்காரச்
சொல்லறிந்து நீயும் தொழு (9)

குறிப்பு:-
புத்தமதத்தை சார்ந்த சாக்கியர் என்பவர் அன்றாடம் உணவுக்குமுன் ஈசன் மீது கல்லை ஏறிந்து வழிபடுவார். ஒருநாள் அதை மறந்து உண்ணப் புகுந்தார். அப்போது கல்லெறியும் நினைவு வர எழுந்து வந்து சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்தார். அவருடைய செயலில் மனம்மகிழ்ந்த இறைவன் அவருக்கு காட்சி தந்து அவரை ஆட்கொண்டார்.

-----

தொழுவார்தம் ஆடை துவைப்பானை சோதித்(து) 
அழவைத்தான் வேடங்கொண் டையன் - மழைவானால் 
அன்றளந்தான் அன்பனின் அன்பினை; கச்சிவாழ்
நின்றளந்தான் பாதம் நினை (10)


இரண்டாம் வேற்றுமை உருபின்பின் வல்லொற்று மிகும்.
 
குறிப்பு:-
சலவைத் தொழிலாளியான திருக்குறிப்புத் தொண்டர் ஏகம்பனின் மேல் இருந்த அளவிடற்கரிய பக்தியால் சிவனடியார்களின் ஆடைகளை துவைப்பதையே தன் தொண்டாகச் செய்து வந்தார். இறைவன் சிவனடியார் வேடத்தில் அழுக்குத் துணியைக் கொடுத்து அன்று மாலைக்குள் துவைத்து உலர்த்தித் தருமாறு கேட்டு உறுதியையும் பெற்றார். சிவன் தன் திருவிளையாடலால் அன்று முழுவதும் மழையைப் பெய்யச் செய்தார். சலவைத் தொழிலாளியான அவர் தன் வாக்கு தவறியதை எண்ணி வேதனை கொண்டு துணி துவைக்கும் கல்விலேயே தன் தலையை மோதி நாயனார் உயிர்விடத் துணிந்தார். அப்போது திருவேகம்பர் காமாட்சியோடு எழுந்தருளிக் காட்சி தந்தார். 

-----

நினையவனை மாயைசூழ் நீள்வாழ்வில் சேரும்
வினையாவும் வேரற்று வீழும் - அனையொரு 
பாகத்தான் மால்காணா பாதத்தான் கச்சிவாழ்
ஏகம்ப னுக்கே(து) இணை


'மால்காணாப் பாதத்தான்' என்று 'ப்' மிகும்.
 
-----



Chandar Subramanian

unread,
Sep 6, 2010, 9:23:36 PM9/6/10
to santhav...@googlegroups.com
பிழைகளை சுட்டியதற்கு நன்றி. 

2010/9/6 ka thamizhamallan <vtth...@gmail.com>

Chandar Subramanian

unread,
Sep 6, 2010, 9:26:32 PM9/6/10
to santhav...@googlegroups.com
உங்கள் கருத்துக்கும் பிழைகளை சுட்டியதற்கு நன்றி. 

சாத்தான்/கடவுள்: முந்தையது ஐயம். இரண்டாவது கருத்து!



2010/9/6 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Sep 6, 2010, 9:27:37 PM9/6/10
to santhav...@googlegroups.com
உங்கள் கருத்துக்கும் பிழைகளை சுட்டியதற்கு நன்றி. 



2010/9/6 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Sep 9, 2010, 8:54:43 PM9/9/10
to santhav...@googlegroups.com
பகவத்கீதை, ஆறாம் அத்தியாயத்தின் குறிப்பிட்ட சில பாடல்களின் பொருளை, நான் புரிந்து கொண்ட அளவில், வெண்பா வடிவில் அமைத்துள்ளேன். நிறை குறைகளை மடலாய் இட வேண்டுகிறேன்.

----------

ஒன்றிமனம் யோகத் தொழுகும் முனைவர்க்கு
நன்றுதவும் நற்கருவி நற்பணியே - வென்றபலன்
உய்யாமை யோகிக் குயர்வே அறிகநீ
ஐந்தடக்கம் ஆயுத மாம் (6:3) 

----------

உள்ளத்தால் நல்லுயர் வுற்றல்நன் றஃதற்று
கொள்ளுநிலை தாழக் கொளற்றீது - தெள்ளியர்க்குத் 
தோழனாய் தன்மனமே தோன்றும் அறிகநீ
ஆழப் பகையும் அது (6:5)
தெள்ளியர் - தெளிந்த அறிவினர்

----------

நண்பருள் தன்னெஞ்சே நற்றுணையாம் அந்நெஞ்சை
வென்றாளும் விந்தை உணர்ந்தார்க்கு - தன்நெஞ்சே
வாட்டும் கடும்பகையாய் மாறும் அறிகநீ
ஓட்டத்தை வெல்லா உயிர்க்கு (6:6)

----------

தன்நெஞ்சை ஆண்டதன்கண் தான்பெற்ற நிம்மதியால்
வென்றான்காண் அப்பரத்தின் மேன்மையை - அன்னவன்முன்
வன்வெப்பும் தண்மையும் ஒன்றாம் அறிகநீ
இன்பதுன்பம் வேற்றுமை இல் (6:7)

----------

நடுநிலையான் ஈவோன் நலம்விரும்பி தூதன் 
படுபாவி வன்கணன் பக்தன் - தொடர்நண்பன்
யாவருமொன் றென்பர் உயர்ந்தோர் அறிகநீ
மேவுவர் மேன்மை மிகுத்து (6:9)

----------

உண்ண லுறங்க லுளங்களித்தல் செய்கையிவை
பண்படத்தன் வாழ்வைப் பயில்வோனே - புண்படுத்தும்
மாயைத் துயரற்று வாழ்வான் அறிகநீ 
தூயுள யோகத் தொடர்பு (6:17)

----------

ஏற்றமிகு யோகநிலை ஏற்றவன்றன் எண்ணத்தில்
மாற்றமற நெஞ்சாளும் வல்லானே - காற்றிலாப்
போதலையாத் தீச்சுடர்ப் போல்வான் அறிகநீ
யாதுமிலை யோகத் தெதிர் (6:19)

----------

உள்ளத் தடுமாற்றம் உந்துமவா வேரறுத்துக் 
கள்ளப் பொறியைந்தைக் காத்தடக்கித் - தெள்ளறிவோ
டுன்னத யோகநிலை உள்ளுய்த் தறிகநீ
முன்னுவழி மாறா முயன்று (6:24)

----------

அடிப்படையாம் நல்லறிவை ஆற்றலாய்க் கொண்டு
படிப்படியாய் சாந்தம் பழகி - விடுத்துபுறம்
தன்னகத்தெண் ணஞ்சேர் தவஞ்செய் தறிகநீ
எந்நினைவும் இல்லா தியல்பு (6:25)

----------

தங்கிடா தெங்கினும் தாவும் மனவழியில் 
எங்கெலாம் உள்ளெண்ணம் ஏகிடுமோ - அங்கிருந்து
நன்முறைக்கு மீட்டலே நன்றென் றறிகநீ
உன்வழிசேர் உள்ளத் துயர்வு (6:26)

----------

எவ்வுயிர்க் கண்டும் எமையுணர்வான் எம்மிலவன்
ஒவ்வோர் உயிராய் உணர்கின்றான் - செவ்வுளத்தான்
என்றுமெங்கும் காண்கின்றான் எம்மை அறிகநீ
ஒன்றிய தெம்முள் உலகு (6:29)

----------

காணும் உயிரிலெலாம் கண்டெமை ஏத்துபவன்
காணுமெமை அப்பரமாய்க் காண்பதனால் - காணுமவன்
எம்முள் உறைகின்றான் என்ப தறிகநீ
அம்மனமே யோகிக் கணி (6:31)

----------

செவ்வி செயற்செய் திறம்படைத்தோர் சீர்கெடுக்கும்
எவ்வழிவும் காணார்காண் இவ்வுலகில் - அவ்வுலகில்
இல்லை துயரவர்க்கென் றாகு மறிகநீ
நல்லோர் அடையார் நலிவு (6:40)

----------

பற்றில் தவசி,பலன் பாராச் செயல்வீரர்,
முற்றுமுணர் ஞானியரிம் மூவரின் - கற்றுணர்ந்த 
யோகியரே மேலவர் என்ப தறிகநீ
ஆகியுணர் யோகத் தழகு (6:46) 

----------

Chandar Subramanian

unread,
Sep 10, 2010, 11:39:35 PM9/10/10
to santhav...@googlegroups.com
தனியன்கள்:-

தொந்தி கணேசா தொழுவோர் உளத்தென்றும் 
முந்தி வருவோனே முந்தையனே - வந்தவினை
அற்றொழித் தன்பர்க் கருளூட்டி இப்புவியின்
உற்றார்தம் உள்ளத் துறை

இருளை விரட்டுமொளி, ஈதுண்மை என்பர் 
பொருளறியார் கண்மூடும் போழ்து - வருமொளியை
காயும் கதிராக்க கார்ஆர் திரையாகி
ஈயும் இருட்கே திணை

அடுக்கி யழகாக அமைந்திருக்கும் வாழ்க்கை
தொடுத்த மலரொக்கும் தோற்றம் - கொடுத்தவன்நம்
செய்கைகள் யாவையும் தேர்ந்தன்றோ சேர்க்கின்றான்
மெய்வெறும் மேடையிதே மெய்

ஆதியில் வண்ணம் அதுவொன்றே பச்சை,பின்நாள்
சோதித்த வண்ணங்கள் தோல்விதான் - யாதிலுமே
உள்ளங் கவரும் உணர்வேது? நெஞ்சத்தை
அள்ளும் பசுமை அழகு

நோக்கும் நினைவே நுழையாத நம்நெஞ்சப்
போக்கின்பின் ஓடும்நாம் புல்லரோ - தாக்கும்வன்
பேச்சிற் கழிப்போம் பெருவாழ்வை, தீதுவமை; 
பூச்சிக்கு வாழ்வளிக்கும் புல்

தூக்கமாய் உள்ளத் துயிலெழுப்பி நன்நினைவுத்
தேக்கமாய் உட்திரண்டு தெள்ளியதாய் - ஆக்கமாய்
ஆங்கார் பொருளாகி அப்பொருளின் உட்கருவாய்த் 
தூங்கும் நிலையான் செயல்

Kaviyogi Vedham

unread,
Sep 11, 2010, 3:06:44 AM9/11/10
to santhav...@googlegroups.com
ஆகா! ரொம்ப நல்லாயிருக்கே.
 யோகியார்

2010/9/11 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Siva Siva

unread,
Sep 11, 2010, 8:03:36 AM9/11/10
to santhav...@googlegroups.com


2010/9/10 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

தனியன்கள்:-

தொந்தி கணேசா தொழுவோர் உளத்தென்றும் 
முந்தி வருவோனே முந்தையனே - வந்தவினை
அற்றொழித் தன்பர்க் கருளூட்டி இப்புவியின்
உற்றார்தம் உள்ளத் துறை

வினை அற்று ஒழித்து - அமைப்பைத் திருத்தவேண்டுமோ?
அருள் ஊட்டுதல்? அருள்புரிந்(து) என்பதும் பொருந்தலாம்.



இருளை விரட்டுமொளி, ஈதுண்மை என்பர் 
பொருளறியார் கண்மூடும் போழ்து - வருமொளியை
காயும் கதிராக்க கார்ஆர் திரையாகி
ஈயும் இருட்கே திணை


இப்பாடலின் பொருள் எனக்குத் தெளிவாகவில்லை.

 
அடுக்கி யழகாக அமைந்திருக்கும் வாழ்க்கை
தொடுத்த மலரொக்கும் தோற்றம் - கொடுத்தவன்நம்
செய்கைகள் யாவையும் தேர்ந்தன்றோ சேர்க்கின்றான்
மெய்வெறும் மேடையிதே மெய்

ஆதியில் வண்ணம் அதுவொன்றே பச்சை,பின்நாள்
சோதித்த வண்ணங்கள் தோல்விதான் - யாதிலுமே
உள்ளங் கவரும் உணர்வேது? நெஞ்சத்தை
அள்ளும் பசுமை அழகு

நோக்கும் நினைவே நுழையாத நம்நெஞ்சப்
போக்கின்பின் ஓடும்நாம் புல்லரோ - தாக்கும்வன்
பேச்சிற் கழிப்போம் பெருவாழ்வை, தீதுவமை; 
பூச்சிக்கு வாழ்வளிக்கும் புல்

தூக்கமாய் உள்ளத் துயிலெழுப்பி நன்நினைவுத்
தேக்கமாய் உட்திரண்டு தெள்ளியதாய் - ஆக்கமாய்
ஆங்கார் பொருளாகி அப்பொருளின் உட்கருவாய்த் 
தூங்கும் நிலையான் செயல்


உள் திரண்டு - உட்டிரண்டு.
 

--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 11, 2010, 6:59:04 PM9/11/10
to santhav...@googlegroups.com
அழகாக அமைந்திருக்கும் -- தளை? அழகாய் அமைந்திருக்கும் எனலாம்
 
அனந்த்

2010/9/11 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Pas Pasupathy

unread,
Sep 11, 2010, 9:01:17 PM9/11/10
to santhav...@googlegroups.com
அடுக்கியழ காக அமைந்திருக்கும் வாழ்க்கை
 
என்று பிரிக்கலாம்.

2010/9/11 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--

Chandar Subramanian

unread,
Sep 11, 2010, 10:00:49 PM9/11/10
to santhav...@googlegroups.com


2010/9/11 Siva Siva <naya...@gmail.com>



2010/9/10 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

தனியன்கள்:-

தொந்தி கணேசா தொழுவோர் உளத்தென்றும் 
முந்தி வருவோனே முந்தையனே - வந்தவினை
அற்றொழித் தன்பர்க் கருளூட்டி இப்புவியின்
உற்றார்தம் உள்ளத் துறை

வினை அற்று ஒழித்து - அமைப்பைத் திருத்தவேண்டுமோ?
அருள் ஊட்டுதல்? அருள்புரிந்(து) என்பதும் பொருந்தலாம்.


தொந்தி கணேசா தொழுவோர் உளத்தென்றும் 
முந்தி வருவோனே முந்தையனே - வந்தவினை
அற்றுவிழ அன்பர்க் கருள்புரிந்(து) இப்புவியின்
உற்றார்தம் உள்ளத் துறை

இப்படி வரலாமா? 

இருளை விரட்டுமொளி, ஈதுண்மை என்பர் 
பொருளறியார் கண்மூடும் போழ்து - வருமொளியை
காயும் கதிராக்க கார்ஆர் திரையாகி
ஈயும் இருட்கே திணை


இப்பாடலின் பொருள் எனக்குத் தெளிவாகவில்லை.

 
இருட்டு இல்லை என்றால் ஒளியே தெரியாது. இது தெரியாதவர்களே இருளை விரட்டும் ஒளி என்பர். வருகின்ற ஒளியின் வெப்பக்க கதிர்களைக் காட்ட, இருளே கரிய திரையாக மாறி ஒளியை நம்மால் காண உதவுகிறது எனும் பொருளில் அமைந்தது. தவறெனின் சுட்டவும். 
 
அடுக்கி யழகாக அமைந்திருக்கும் வாழ்க்கை
தொடுத்த மலரொக்கும் தோற்றம் - கொடுத்தவன்நம்
செய்கைகள் யாவையும் தேர்ந்தன்றோ சேர்க்கின்றான்
மெய்வெறும் மேடையிதே மெய்

ஆதியில் வண்ணம் அதுவொன்றே பச்சை,பின்நாள்
சோதித்த வண்ணங்கள் தோல்விதான் - யாதிலுமே
உள்ளங் கவரும் உணர்வேது? நெஞ்சத்தை
அள்ளும் பசுமை அழகு

நோக்கும் நினைவே நுழையாத நம்நெஞ்சப்
போக்கின்பின் ஓடும்நாம் புல்லரோ - தாக்கும்வன்
பேச்சிற் கழிப்போம் பெருவாழ்வை, தீதுவமை; 
பூச்சிக்கு வாழ்வளிக்கும் புல்

தூக்கமாய் உள்ளத் துயிலெழுப்பி நன்நினைவுத்
தேக்கமாய் உட்திரண்டு தெள்ளியதாய் - ஆக்கமாய்
ஆங்கார் பொருளாகி அப்பொருளின் உட்கருவாய்த் 
தூங்கும் நிலையான் செயல்


உள் திரண்டு - உட்டிரண்டு.
 
 
திருத்தத்திற்கு நன்றி
 
--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Sep 11, 2010, 10:03:06 PM9/11/10
to santhav...@googlegroups.com
"அடுக்கியழ காக" எனும் வகையில் அமைத்தேன். அதற்கு முன் இட்ட சொற்களை மாற்றி அமைத்ததால், இறுதியாக இடும் போது சொற்களை பிரித்தெழுதாமல் விட்டுவிட்டேன். சுட்டியதற்கு நன்றி.



2010/9/12 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Sep 11, 2010, 10:04:12 PM9/11/10
to santhav...@googlegroups.com
அவ்வாறே அமைத்தேன். இடும்போது சரியாக சொற்பிரிக்காமல் இட்டதால் வந்த குழப்பம். குறிப்பிட்டதற்கு நன்றி.

2010/9/12 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Chandar Subramanian

unread,
Sep 13, 2010, 9:15:39 PM9/13/10
to santhav...@googlegroups.com
சில நாட்களுக்கு முன், வேறோர் இழையில், திரு இலந்தை அவர்கள் சில மழலைப்பாடல்களை இட்டார். அவரது வழியில் எனது சில முயற்சிகள்...

எங்கள் வீட்டு ஒளிப்பெட்டி

எங்கள் வீட்டு ஒளிப்பெட்டி
.. எனக்குப் பிடித்தக் கதைசொல்லும்;
அங்கும் இங்கும் விளையாடி
.. அழகாய்ப் பேசும் அதில்கரடி;
தொங்கும் மரத்தில் தலைகீழாய்
.. தொற்றிச் சிரிக்கும் குரங்கொன்று;
பங்காய் வந்த உணவுண்டு
.. பறக்கும் காக்கை பலவுண்டே.

பேசும் நாயே என்நண்பன்,
.. பொல்லா தந்தக் கரும்பூனை;
ஆசைக் காட்டும், அதைநம்பி
.. அய்யோ, என்நாய் ஏமாறும்;
காசை எண்ணும் மடவாத்தின்
..  கையில் மூன்றே விரலுண்டு;
மேசை ஏறி விளையாடும்
.. மூக்கு நீண்ட எலியொன்று.

காட்டுக் குள்ளே நடமாடும்
.. காண்டா மிருகம் அதுகூட
பாட்டுப் பாடி நடமாடும்,
.. பார்க்க வேண்டும் அதைமீண்டும்;
கோட்டுப் போடும் கரடிக்குக்
.. கோட்டைத் தைத்து யார்கொடுப்பார்?
ஓட்டை வழியே வரும்வாலை
.. ஆட்டிக் காட்டும் அழகைப்பார்.

அப்பா வந்தென் ஒளிபெட்டி
.. அணைத்துச் சென்றார்; நான்கேட்டேன்
இப்போ திந்தப் பெட்டிக்குள்
..  இருக்கும் யானை எங்கோடும்?
அப்பா சொன்னார் அழகாக
.. அம்மா மடியில் அதுதூங்கும்
தொப்பென்றே நான் என்றன்
.. அம்மா மடியில் விழுந்தேனே

---------------------------------

டிக்டிக் கடிகாரம்

டிக்டிக் சொல்லும் கடிகாரம்
.. சுவரில் தொங்கும் கடிகாரம்
பக்கம் செல்லும் போதெல்லாம்
.. பார்க்கத் தூண்டும் கடிகாரம்
அக்கம் பக்கம் உள்ளோரை
.. அலர வைக்கும் மணியோசை
திக்கென் றிதயத் துடிப்பேற்றித் 
.. திகைக்க வைக்கும் கடிகாரம்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 13, 2010, 10:11:29 PM9/13/10
to santhav...@googlegroups.com

மிக அழகாகக் குழந்தைகள் மனப்பாங்கிற் கேற்றவாறு அமைந்துள்ள பாடல்கள். குறிப்பாக ஒளிப்பெட்டி பற்றிய கற்பனைகள் அருமை. பாராட்டுகள்.

தொப்பென்றே நான் என்றன்’ - ஓசை குறைகிறது; ’தொப்பென்றே நான் என்அருமை’ என்று மாற்றலாம்.

கடிகாரப் பாடலின் இறுதி அடியில்- முன்னடிகளைப் பார்க்கும் போது- நடையின் எளிமை சற்றுக் குறைகிறது.

 

அனந்த்



2010/9/13 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Pas Pasupathy

unread,
Sep 13, 2010, 10:13:09 PM9/13/10
to santhav...@googlegroups.com
அழகாய் வந்துள்ளன. 

2010/9/13 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Sep 13, 2010, 10:57:56 PM9/13/10
to santhav...@googlegroups.com
நல்ல முயற்சி.

சில இடங்களில் மோனை குறைகிறது.

2010/9/13 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Sep 14, 2010, 7:06:38 AM9/14/10
to santhav...@googlegroups.com
ஆகா.. என் பேரப்பசங்க விரும்பும் அழகுக்கவிதை.. வந்தால் ராகம் போட்டுப்பாடிக்காட்டுவேனே!வாழ்க சந்தர்!,
 யோகியார்

2010/9/14 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

nahupoliyan

unread,
Sep 14, 2010, 9:20:26 AM9/14/10
to சந்தவசந்தம்
"சிறுகச் சிறுக"? OK:-

தமிழ் பெருமக்கள் |

ஒன்றை படியுங்கள்|----------> Insert ப்
சந்தி பிழை |
புரிந்துக் கொள்கிறார் போல் ----------> Delete க், Change ர் into ற்
and insert ப்
தமிழ் சேவையாக ------------------> Insert ச்

காலத்திற்கேத்த ---------------------> correct the end as ற்ற

ஆடல்மன்.இளமுருகு
[All in good humour please!]
*******************************************************************


On Sep 4, 3:13 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> இங்கிருக்கும் தமிழ் பெருமக்கள் யாராவது இந்த ஒற்று விஷயங்களை  எளிய நடையில்
> சிறுகச் சிறுகச் சொன்னால் நன்றாக இருக்கும்.
>
> ஒரேயடியாக ஏதாவது கட்டுரை ஒன்றை படியுங்கள் என்று அனுப்பி விடாமல் ஒவ்வொரு
> மடலாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.
>
> சந்தி பிழை, ஒற்று விஷயங்களை தெள்ளத் தெளிவாக புரிந்துக் கொள்கிறார் போல்
> யாராவது எழுதினால் அதுவே இந்த காலத்திற்கேத்த தமிழ் சேவையாக இருக்கும்.
>
> 2010/9/3 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>
>
> > அருமை!
>
> > அனந்த்
>
> > ஒற்று:  தேய்ந்து போன; உரு*ச்*சுருங்கி; மன*ச்*சாட்சி (?); உயிர்பறிக்க*க்*
> > காற்று,
>

> > 2010/9/2 Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>


>
> >  ரசனை இதழில் வெளியான எனது பாடலை குழுமத்தில் இட்ட திரு கவியோகி அவர்களுக்கு
> >> எனது நன்றி. இவ்வாய்ப்பினை அளித்த திரு இலந்தையார் அவர்களுக்கும் என் நன்றி.
>
> >> பாடலை இங்கு இடுகிறேன்.
>

> >>  *நிழலின் நிஜங்கள்...*

> >>www.MovingMoon.com<http://www.movingmoon.com/>


>
> >> --
> >> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> >> பெறுகிறீர்கள்:
> >> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> >> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> >> santhavasanth...@googlegroups.com.
> >> இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> >>http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
> >  --
> > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> > இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> > santhavasanth...@googlegroups.com.
> > இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:

> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -
>
> - Show quoted text -

It is loading more messages.
0 new messages