நீயும் நானும்

51 views
Skip to first unread message

விவேக் பாரதி

unread,
Nov 21, 2016, 1:07:02 AM11/21/16
to santhav...@googlegroups.com

நீயும் நானும் ! நிலவும் இரவும் 

  நீரும் வளமும் ! நிழலும் மரமும் !
தீயும் ஒளியும் ! திமிரும் கவியும் !
  திசையும் காற்றும் ! திரட்டும் பொருளும் !

வாயும் பல்லும் ! வனமும் உயிரும் !
  வரியும் பணமும் ! வாளும் எஃகும் ! 
தாயும் தளிரும் ! தமிழும் சுவையும் ! 
  தயிரும் வெளுப்பும் ! தரியும் துணியும் !

மலரும் வண்டும் ! மனமும் அசைவும் ! 
  மதியும் செயலும் ! மழையும் மயிலும் ! 
நிலமும் ஏரும் ! நிசமும் மறையும் ! 
  நிதியும் அரசும் ! நிகழ்வும் பதிவும் !

எலும்பும் தோலும் ! எழுத்தும் சொல்லும் ! 
  எறும்பும் இனிப்பும் ! எலியும் கதிரும் ! 
வலுவும் தூணும் ! வளையும் ஒலியும் ! 
  வரப்பும் புல்லும் ! வழக்கும் தீர்ப்பும் !

பாவேந்தர் பாரதிதாசனின் "அவளும் நானும்" பாடலை நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அழகு கொஞ்ச "அச்சம் என்பது மடமையடா" திரைப்படத்தில் இசையாக்கியிருக்கும் விதம் என்னை அப்படியே புரட்டிப் போட, அதே போன்று நான் எழுத முயன்ற பொழுது வந்த பாடலே இது....அந்தப் பாடலின் இணைப்பை இங்கே பகிர்கின்றேன்....

https://www.youtube.com/watch?v=g-dWqptsFfE

வித்தக இளங்கவி 
விவேக்பாரதி

9750588007

Vis Gop

unread,
Nov 21, 2016, 2:31:41 AM11/21/16
to santhav...@googlegroups.com
ஆஹா! மிக அழகான தொகுப்புகள்.
'திமிரும் கவியும்' - கொஞ்சம் அச்சம் தருகிறது!
எலியும் கதிரும்: கதிர் என்பது ஒளியை, சூரியனைக் குறிக்குமாதலால், எலியும் பயிரும் இன்னும் எளிதான சேர்க்கையாகுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

Ramamoorthy Ramachandran

unread,
Nov 21, 2016, 2:41:45 AM11/21/16
to santhav...@googlegroups.com

நன்று! கவியும் திமிரும்? கவியும் கனவும் கூட. சரிதான்! வாழ்த்து!- புலவர் இராமமூர்த்தி.

On Nov 21, 2016 13:01, "Vis Gop" <vis...@gmail.com> wrote:
ஆஹா! மிக அழகான தொகுப்புகள்.
'திமிரும் கவியும்' - கொஞ்சம் அச்சம் தருகிறது!
எலியும் கதிரும்: கதிர் என்பது ஒளியை, சூரியனைக் குறிக்குமாதலால், எலியும் பயிரும் இன்னும் எளிதான சேர்க்கையாகுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

2016-11-21 11:37 GMT+05:30 விவேக் பாரதி <tamiludanvivekbharathi@gmail.com>:

நீயும் நானும் ! நிலவும் இரவும்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

விவேக் பாரதி

unread,
Nov 21, 2016, 9:42:11 AM11/21/16
to santhav...@googlegroups.com
அன்புள்ள கோபால் ஐயாவுக்கு, 

சோளக்கதிர், நெற்கதிர் என்று அதன் முற்றிய பருவத்தைக் குறிக்கும் சொற்றொடர்களாலேயே நான் அங்கே கதிர் என்பதை எழுதியிருக்கிறேன். தவறெனின் சுட்டுக ! 

அன்புள்ள புலவர் ஐயா ! 

கவியும் கனவும் கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் தற்காலத்தில் பலர் ஏதோ கொஞ்சம் எழுதத் தெரிந்தாலும் தாங்கள் கவியென்ற கர்வத்தால் கொள்ளும் திமிரை அவர்களது பேச்சிலேயே காண முடிகிறது. (சில இடங்களில் நான் நேரிலேயே கண்டதுண்டு) அதனால் அப்படி எழுதினேன். போலிப்புலவர்களுக்குத் திமிர் உண்டல்லவா ! 

கருத்து கூறிய இருவர்க்கும் என் மனமார்ந்த நன்றி ! 

வித்தக இளங்கவி 
விவேக்பாரதி

9750588007

N. Ganesan

unread,
Nov 21, 2016, 2:47:03 PM11/21/16
to சந்தவசந்தம்

On Monday, November 21, 2016 at 6:42:11 AM UTC-8, விவேக் பாரதி wrote:
அன்புள்ள கோபால் ஐயாவுக்கு, 

சோளக்கதிர், நெற்கதிர் என்று அதன் முற்றிய பருவத்தைக் குறிக்கும் சொற்றொடர்களாலேயே நான் அங்கே கதிர் என்பதை எழுதியிருக்கிறேன். தவறெனின் சுட்டுக ! 

தவறில்லை.

கதிர் வேளாண்மையில் பயனாகும் நற்சொல். மதுரை மருதை, குதிரை குருதை, ... ஆவது போல கதிர் > கருது என கிராமங்களில் வழங்குவதுமுண்டு.

நா. கணேசன்

அன்புள்ள புலவர் ஐயா ! 

கவியும் கனவும் கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் தற்காலத்தில் பலர் ஏதோ கொஞ்சம் எழுதத் தெரிந்தாலும் தாங்கள் கவியென்ற கர்வத்தால் கொள்ளும் திமிரை அவர்களது பேச்சிலேயே காண முடிகிறது. (சில இடங்களில் நான் நேரிலேயே கண்டதுண்டு) அதனால் அப்படி எழுதினேன். போலிப்புலவர்களுக்குத் திமிர் உண்டல்லவா ! 

கருத்து கூறிய இருவர்க்கும் என் மனமார்ந்த நன்றி ! 

வித்தக இளங்கவி 
விவேக்பாரதி

9750588007

2016-11-21 13:11 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:

நன்று! கவியும் திமிரும்? கவியும் கனவும் கூட. சரிதான்! வாழ்த்து!- புலவர் இராமமூர்த்தி.

On Nov 21, 2016 13:01, "Vis Gop" <vis...@gmail.com> wrote:
ஆஹா! மிக அழகான தொகுப்புகள்.
'திமிரும் கவியும்' - கொஞ்சம் அச்சம் தருகிறது!
எலியும் கதிரும்: கதிர் என்பது ஒளியை, சூரியனைக் குறிக்குமாதலால், எலியும் பயிரும் இன்னும் எளிதான சேர்க்கையாகுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

2016-11-21 11:37 GMT+05:30 விவேக் பாரதி <tamiludanvi...@gmail.com>:

நீயும் நானும் ! நிலவும் இரவும்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 21, 2016, 2:52:07 PM11/21/16
to சந்தவசந்தம்

On Sunday, November 20, 2016 at 10:07:02 PM UTC-8, விவேக் பாரதி wrote:

நீயும் நானும் ! நிலவும் இரவும் 

  நீரும் வளமும் ! நிழலும் மரமும் !
தீயும் ஒளியும் ! திமிரும் கவியும் !
  திசையும் காற்றும் ! திரட்டும் பொருளும் !

வாயும் பல்லும் ! வனமும் உயிரும் !
  வரியும் பணமும் ! வாளும் எஃகும் ! 
தாயும் தளிரும் ! தமிழும் சுவையும் ! 
  தயிரும் வெளுப்பும் ! தரியும் துணியும் !

றியும் துணியும்!
 
Subbaiyar Ramasami

unread,
Nov 21, 2016, 4:04:19 PM11/21/16
to santhav...@googlegroups.com

கவிதை நன்று.  சிவப்பு எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளனவற்றை மீண்டும் கவனிக்கவும். 
1  மற்ற எல்லாம்  இருவேறு பொஉள்கள் ஆனால் திரட்டும் பொருளும் அப்படி யில்லை. திரட்டு என்பதைத் துகுப்பு எனக்கொண்டாலும் பொருந்திவரவில்லை.

தறி

நீயும் நானும் ! நிலவும் இரவும் 

  நீரும் வளமும் ! நிழலும் மரமும் !
தீயும் ஒளியும் ! திமிரும் கவியும் !
  திசையும் காற்றும் !
திரட்டும் பொருளும் !

வாயும் பல்லும் ! வனமும் உயிரும் !
  வரியும் பணமும் ! வாளும் எஃகும் ! 
தாயும் தளிரும் ! தமிழும் சுவையும் ! 
  தயிரும் வெளுப்பும் !
தரியும் துணியும் !

மலரும் வண்டும் ! மனமும் அசைவும் ! 

  மதியும் செயலும் ! மழையும் மயிலும் ! 
நிலமும் ஏரும் ! நிசமும் மறையும் ! 
  நிதியும் அரசும் ! நிகழ்வும் பதிவும் !

எலும்பும் தோலும் ! எழுத்தும் சொல்லும் ! 
  எறும்பும் இனிப்பும் ! எலியும் கதிரும் ! 
வலுவும் தூணும் ! வளையும் ஒலியும் ! 
  வரப்பும் புல்லும் ! வழக்கும் தீர்ப்பும் !

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 22, 2016, 9:22:16 AM11/22/16
to சந்தவசந்தம்

On Sunday, November 20, 2016 at 11:31:41 PM UTC-8, visgop wrote:
ஆஹா! மிக அழகான தொகுப்புகள்.
'திமிரும் கவியும்' - கொஞ்சம் அச்சம் தருகிறது!
எலியும் கதிரும்: கதிர் என்பது ஒளியை, சூரியனைக் குறிக்குமாதலால், எலியும் பயிரும் இன்னும் எளிதான சேர்க்கையாகுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

”திரட்டும் பொருளும்”  

பொருள் உடைய பாடல்கள் மட்டும் தனிப்பாடல் திரட்டில் தொகுத்துள்ளனர் என்பதைக் கவிஞர் சொல்கிறார் எனலாம்.

அல்லது,

தொகையும் பொருளும். தொகை - எட்டுத் தொகை. இறைச்சி, உள்ளுறை உள்ள பாடற்றொகை.
இவை வைத்து, தொல்காப்பியர் - Aristotle of the East - பொருள் இலக்கணம் வரைந்தார் என்று கொள்கிறேன்.
’பொயட்டிக்ஸ்’ என்னும் நூல் மேற்குலகத்திற்கு. தொல். பொருளிலக்கணம் கிழக்குலகத்திற்கு
இதுபோன்ற பொருள் இலக்கணம் வேறு ஆசிய மொழிகளில் அது ஏற்பட்ட காலத்தில் இல்லை.
இந்தப் பொருள் இலக்கணம், பிற்காலங்களில் சம்ஸ்கிருதத்தில் த்வனிக் கோட்பாடு என
ஆனந்தவர்தனர் போன்ற காஷ்மீரர்களால் விரிக்கப்பட்டது.

திரட்டும் பொருளும் = (எட்டுத்) தொகையும், பொருள் (இலக்கணமும்) என்பது என் புரிதல்.

நா. கணேசன்

2016-11-21 11:37 GMT+05:30 விவேக் பாரதி <tamiludanvi...@gmail.com>:

Subbaiyar Ramasami

unread,
Nov 22, 2016, 11:23:15 AM11/22/16
to santhav...@googlegroups.com
இது சப்பைக்கட்டு.

--

Ramamoorthy Ramachandran

unread,
Nov 22, 2016, 11:06:28 PM11/22/16
to santhav...@googlegroups.com

திருட்டும் பொருளும் - வெளிப்படை.

N. Ganesan

unread,
Nov 22, 2016, 11:22:22 PM11/22/16
to சந்தவசந்தம்

                  நானும் அவளும் 

         நானும் அவளும்! உயிரும் உடம்பும்!
         நரம்பும் யாழும்! பூவும் மணமும்!
         தேனும் இனிப்பும்! சிரிப்பும் மகிழ்வும்!                                  
         திங்களும் குளிரும்! கதிரும் ஒளியும்!
                               நானும் அவளும்!

         மீனும் புனலும்! விண்ணும் விரிவும்!
         வெற்பும் தோற்றமும்! வேலும் கூரும்!
         ஆனும் கன்றும்! ஆறும் கரையும்!
         அம்பும் வில்லும்! பாட்டும் உரையும்!
                               நானும் அவளும்!

         அவளும் நானும்! அமிழ்தும் தமிழும்!
         அறமும் பயனும்! அலையும் கடலும்!
         தவமும் அருளும்! தாயும் சேயும்!
         தாரும் சீரும்! வேரும் மரமும்! 
                               அவளும் நானும்!

         அவலும் இடியும்! ஆலும் நிழலும்! 
         அசைவும் நடிப்பும்! அணியும் பணியும்!
         அவையும் துணிவும்! உழைப்பும் தழைப்பும்!
         ஆட்சியும் உரிமையும்! அளித்தலும் புகழும்!
                                அவளும் நானும்!
                                                                        - புரட்சிக் கவிஞர்

N. Ganesan

unread,
Nov 22, 2016, 11:45:22 PM11/22/16
to சந்தவசந்தம்
On Sunday, November 20, 2016 at 10:07:02 PM UTC-8, விவேக் பாரதி wrote

இன்றைக்கு முக்கியமான படம்:

Reply all
Reply to author
Forward
0 new messages