அடியும் முடியும்

29 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Oct 16, 2025, 11:32:42 AM (6 days ago) Oct 16
to santhavasantham
சந்தவசந்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அடியும் முடியும் என்ற தலைப்பில் குறள் வெண்பாக்கள் சில வெளியிட்டிருந்தோம். அதன் அமைப்புக் கொஞ்சம் சிறப்பானது. குறள் வெண்பாவின் முதல் சொல்லும் கடைசிச் சொல்லும்(குறந்தது முதல் இரண்டு எழுத்துகள்) ஒன்றாக இருக்கவேண்டும். ஆனால் பொருள் வேறாக இருக்கவேண்டும். இதில் பல கவிஞர்கள் பங்கேற்றார்கள். சிவசிவா பெருஞ் சாதனையே படைத்துவிட்டார். எடுத்துக் காட்டாக் ஒரு பாடல் இங்கே இடுகிறேன். குறள் வெண்பாவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நேரிசை வெண்பாவாக் நான்கடிகளிலும் அமையலாம். முதல் சொல்லும் கடைசிச் சொல்லும்வேறு பொருளில் ஒன்றாக அமையவேண்டும்

இதோ பாடல். அன்பர்கள் முயலலாம்.

முடியும் அடியும்

 

இடம்சென்றேன் காரில், எதிர்ப்பக்கம் பார்த்தால்

எனக்குத் தெரியா இடம்.

 

கண்டு பிடித்தேனென் கட்டிலுக்குக் கீழே

கறுப்பு நிறத்தில்நூற் கண்டு.

 

உடைந்துள்ள கண்ணாடி உட்கதவின் பின்னாடி

உள்ளதே என்றன் உடை

 

அடிவீழ்ந் தழுகின்றேன் ஆண்டவனே தாராயோ

ஆற்றல் கவிதை அடி!

 

படியென்றான் பேரன், படிப்படியாய் ஏறிவந்தேன்

பத்திரமாய் நல்ல படி.

 

கடைசியில் தேடிநான் கண்டு பிடித்துவிட்டேன்

கண்ணாடி விற்கும் கடை.

 

காட்டு வெளிகளிலே காணும் மலர்களையுன்

கண்ணின் விருந்தாகக் காட்டு.

 

ஓட்டுக்கள் போட்டும் உதவாத பேர்வழியை

ஊருக்குள் வாராமல் ஓட்டு.

 

பாடு படும்போது பாங்காய்க் களைப்பொழிய

பண்ணோடு நீபாட்டுப் பாடு.

 

ஓடும் கனகமும் ஒன்றாக எண்ணுபவர்

உத்தமர், அன்னார்பின் ஓடு.

Siva Siva

unread,
Oct 16, 2025, 12:26:58 PM (6 days ago) Oct 16
to santhav...@googlegroups.com
Brings back the memories!
You had posted this under the subject -  "mudiyum adiyum"  - on 1-Jan-2009.
That motivated me to attempt songs in that format.

That set was included in மதிசூடி துதிபாடி - தொகுதி-3.

V. Subramanian

Siva Siva

unread,
Oct 16, 2025, 3:31:10 PM (6 days ago) Oct 16
to santhav...@googlegroups.com

Below are some songs not included in Madhisudi Thudhipadi Vol-3.


2009-01-01 to 2009-07-01

அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)

=============

(குறள்வெண்பாவில் முதலிலும் முடிவிலும் ஒரே சொல் வேறு பொருள்பட வருமாறு மடக்கு அமைந்தது)

முற்குறிப்பு: மதிசூடி துதிபாடி தொகுதி-3 நூலில் தொகுப்பில் இடம்பெறாத சில பாடல்கள் இவை. இச்சொற்களால் அமைந்த வேறு பாடல்கள் அத்தொகுப்பில் உள்ளன.


25-1) மதி

-----------

மதியில் தசமுகனை ஓர்விர லாலே

மிதித்தான் அணிவான் மதி.


மதி - 1. அறிவு; 2. சந்திரன்;


36-1) அசை

-----------------

அசைத்தஅர(வு) ஐயன் அரையிருக்கச் சென்னி

மிசையாடும் ஓர்பாம்(பு) அசைந்து.


அசைத்தல் - கட்டுதல்;

அசைதல் - இயங்குதல் (To move, stir);


60-1) குடி

-----------

குடிவிடம்சேர் கண்டனுக்குக் குற்றேவல் செய்யும்

அடியார் மனமே குடி.


விடம் குடித்தல் என்பது இங்கே நஞ்சு உண்டலைச் சுட்டியது;

குடி - உறைவிடம்;


63-1) படை

--------------

படையெனத் தாக்கும் பழவினைதீர் ஈசன்

உடையானோர் சூலப் படை.


படை - 1. சேனை; 2. ஆயுதம்;

******

sudha's creations

unread,
Oct 16, 2025, 7:23:30 PM (6 days ago) Oct 16
to santhavasantham
ரொம்ப சவாலாக இருக்கே..
முயன்று பார்க்கிறேன்..
Thanks..
Sudha vedham 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOz72dW%3D_7rE%3DtQGSPEGV-ivLNeVB1swgFFXGHRAGFPug%40mail.gmail.com.

Kaviyogi Vedham

unread,
Oct 16, 2025, 8:39:39 PM (6 days ago) Oct 16
to santhav...@googlegroups.com
bale  bale
  yogiyar

On Thu, Oct 16, 2025 at 11:32 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Oct 16, 2025, 10:33:28 PM (6 days ago) Oct 16
to சந்தவசந்தம்
மிக அருமை. எதுகை இல்லாமலும் அமைக்கலாமோ?
எதுகையோடே அமைக்கிறேன் 

மீட்டுநீ யாழை வியன்பாணர் நன்கிசைத்த 
மேட்டிமைசேர் யாழிசையை மீட்டு!

பண்பாடு! பாடிப் பயன்காட்டு நந்தமிழர்
பண்பால் உயர்ந்தபண் பாடு!


காட்டு விலங்(கு)அல்ல! காருண்யன் நானென்று
காட்டு பலஎடுத்துக் காட்டு!

வீடு துலங்க விளக்கேற்றி ஆண்டவனை
நீடுதொழு நீயடைவாய் வீடு!

நாடு தழைத்தோங்க 
நல்லறங்கள் மிக்கோங்க
நாடுவாழ் நல்லாரை நாடு!

முயல் தன்னை விஞ்ச முடியாதென்(று) அந்நாள்
முயலாமை ஓர்ந்து முயல்!

நாட்டு வளங்களினை நல்லவிதம், செல்லுகிற
நாட்டிலெல்லாம் நீசென்று நாட்டு!

அரசி. பழனியப்பன்
17.10.2025











--

Ramnath Bhagavath

unread,
Oct 17, 2025, 12:54:24 PM (5 days ago) Oct 17
to சந்தவசந்தம்
கவிப்பெருமக்களுக்கு என் மனமார்ந்த வணக்கம் :) 
முதற்கண், வரும் தீபாவளிப் பண்டிகைக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள். "அடியும் முடியும்" சிறப்பான ஒரு வடிவம். ஒருவகையில் நோக்கின், ஒரு புதுவித அந்தாதி அமைப்பு போன்றதாகும். பாடல்களுக்கிடையில் அந்தாதி இல்லாமல், ஒரு பாடலுக்குள்ளே அந்தாதியாய் இருக்கிறது. எனது முயற்சியைக் கீழே இட்டுள்ளேன்:

அடியும் முடியும் - சிவன் குறட் பதிகம்

1.  கால்எரிநீர் வான்நிலமாய் காலமெலாம் ஆடுவான்
     நீளுலகை ஆட்டிடும்தன் கால்

2.   ஆலமர்ந்தான் ஞானம் அனைத்துமவன் ஞாலத்தைப்
      பாலிக்க உண்டானே ஆல்
 
3.   இடப்பாதி மாதிடம் ஈந்தானாம் பாடம்
      படித்தான் முருகன் இடம்

4.   கொன்றை மலரான் கொதிகனல் கண்திறந்து
      நின்றனன் மாரனைக் கொன்று

5.   முடியடியா தென்றயன்மால் காண முடியா
       வடிவினனுக் கில்லை முடிபு

6.    பொடியணுவின் நுண்ணியன்தன் போல்பெரிதும் இல்லான்
       உடலணியும் காட்டின் பொடி

7.     விடையேறி கண்டம் மிசைக்கறை கொண்டான்
        இடராம் பவத்தின் விடை (பவம் = சம்சாரம், 2ம் விடை = தீர்வு )

8.     கனிவே உருவாவான் கண்ணுதலான் காலைப்
        பணிவார்க்காம் இன்பக் கனி

9.     ஆறு பகையழிந்துள் ஆற, தலையிலே
        ஆறணிந்தான் சேவடியே ஆறு (1ம்  ஆறு = 6, 2ம் ஆறு = நதி, 3ம் ஆறு = வழி)

10.    மதியின் பிறையணிந்தான் மத்தமலர் வைத்தான்
         கதியென்று கொள்வாய் மதி

இராம்நாத் பகவத்
17/10/2025

Siva Siva

unread,
Oct 17, 2025, 3:36:35 PM (5 days ago) Oct 17
to santhav...@googlegroups.com

/ நாடு தழைத்தோங்க நல்லறங்கள் மிக்கோங்க
  நாடுவாழ் நல்லாரை நாடு! /

நன்று.

வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Oct 17, 2025, 3:37:12 PM (5 days ago) Oct 17
to santhav...@googlegroups.com
Nice.

// கொன்றை மலரான் கொதிகனல் கண்திறந்து
   நின்றனன் மாரனைக் கொன்று  //

இவ்வகையை அந்தாதியாகக் கருதாமல் மடக்கு என்று கருதி இயற்றினால் இன்னும் சிறக்கும்.

வி. சுப்பிரமணியன்

Govindaraju Arunachalam

unread,
Oct 18, 2025, 2:01:01 AM (5 days ago) Oct 18
to santhav...@googlegroups.com
வெண்பாப் புனைவில் மற்றுமோர் புதுமை
இங்கே பாவலர் பற்பல பாக்களும் மிக அருமை

இதோ என் முயற்சியில் இரு வெண்பாக்கள்

அணிபல பூண்டே அழகாய் இருப்பாள்

மணிக்குரல் வாய்த்த மலர்ஆ சிரியை

அறியா எனக்கும் அழகாய் விளக்கும்

பிறிது மொழிதல் அணி

 

பால்நினைந் தூட்டிப் பசியினை நீக்கிடும்

சால்புடைத் தாயெனத் தாங்குவாள் என்னை

விரிசடை யானின் விளங்குமை போல

பரிவுடையள் என்றுமென் பால்.

 

-கருவூர் இனியன்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Arasi Palaniappan

unread,
Oct 18, 2025, 8:08:45 AM (4 days ago) Oct 18
to சந்தவசந்தம்
நன்றி திரு சிவ சிவா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Oct 18, 2025, 8:57:53 AM (4 days ago) Oct 18
to santhav...@googlegroups.com

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 18, 2025, 9:37:18 AM (4 days ago) Oct 18
to santhav...@googlegroups.com
திருவாளர்கள்.இராம்நாத் பகவத், அரசி.பழனியப்பன்,இனியன் ஆகியோரின் பாடல்கள் யாவும் அருமை 

                       —தில்லைவேந்தன்


Arasi Palaniappan

unread,
Oct 18, 2025, 9:55:32 AM (4 days ago) Oct 18
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணா!

On Sat, 18 Oct 2025, 7:07 pm NATARAJAN RAMASESHAN, <chrome...@gmail.com> wrote:
திருவாளர்கள்.இராம்நாத் பகவத், அரசி.பழனியப்பன்,இனியன் ஆகியோரின் பாடல்கள் யாவும் அருமை 

                       —தில்லைவேந்தன்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Oct 21, 2025, 9:45:39 AM (yesterday) Oct 21
to santhav...@googlegroups.com

2009-01-01 to 2009-07-01

அடியும் முடியும் - (பொதுப்-பாடல்கள்)

=============

(குறள்வெண்பாவில் முதலிலும் முடிவிலும் ஒரே சொல் வேறு பொருள்பட வருமாறு மடக்கு அமைந்தது)


1-b) முடி

--------------

முடிமுடி என்று முறைத்தார்; சமைத்து

முடித்தபின் பார்த்தேன் முடி!


முடி - 1. உச்சி; 2. கூந்தலை முடிதல்; 3. செய்து முடித்தல்; 4. இக்காலத் தமிழில் மயிர் என்ற பொருள்;


3-b) கொல்

--------

கொல்வெட்(டு) எனச்சிலர் கற்றுக் கொடுக்கிறார்

நல்வழி யென்(று)இஃதென் கொல்.


4-b) கல்

------------

கல்லென்றும் கல்லார் சிலர்அவர் வாழ்வினில்

செல்லும் வழியெங்கும் கல்.


6-b) படு

--------

படுபடு என்றார். கொசுவலை இன்றி

நடுநடுத்தேன். சொன்னார் படு!


8-b) காட்டு

---------

காட்டுவிலங் கின்கடையோர் கையில் விலங்கிட்டுப்

பூட்டு; திருந்தவழி காட்டு.


17-b) அறை

--------------

அறைவண்டு தேனுண் டுறங்கிவிட்டால் பூவே

நறைஆர் படுக்கை அறை.


18-b) சிறை

-------------

சிறைஆர் கிளிக்குச் சிலமக்கள் வைத்தார்

அறையிலே கூண்டுச் சிறை.


36-b) அசை

------------

அசைவிளக்கும் ஆசிரியர் அங்(கு)ஓர் குறட்டை

இசைகேட்டுச் சொன்னார், "அசை"!


45-b) ஈறு

------------

(று)இன்றி என்றுமினிப்(பு) உண்டிருந்தால் உண்டாமே

பே(று)இவர்க்குப் பல்லின்றி ஈறு.


52-b) தொக்கு

-----------------

தொக்கிருந்த(து) அத்தயிர்ச் சோற்றின் நடுவினில்

மிக்கிருந்த(து) ஆமலகத் தொக்கு.


தொக்கு - 1. சேர்ந்து; மறைந்து; 2. ஊறுகாய் வகை;

ஆமலகம் - நெல்லி;


68-b) நகர்

------------

நகர வொணாவண்ணம் நல்ல நெரிசல்;

பகர்வார் பெயர்தான் நகர்!


x-1) சொல்வதை

---------------

சொல்வதை நற்றமிழில் சொல்ல அறிகிலர்;

செல்லிடம்எல் லாம்சொல் வதை.


சொல் வதை - தமிழ்க்கொலை;


x-2) கடன்

--------

கடன்என்று வாங்கியதைக் காலம் தவறா(து)

அடைத்தல் ஒருவர் கடன்.


V. Subramanian

Surya Janakiraman

unread,
Oct 21, 2025, 10:46:33 AM (yesterday) Oct 21
to santhav...@googlegroups.com
/முடிமுடி என்று முறைத்தார்; சமைத்து

முடித்தபின் பார்த்தேன் முடி!/

முடியை வைத்து நல்ல வார்த்தைச் சிலம்பம் ஆடியுள்ளீர்! அடியை மட்டும் ஏன் விட்டு விட்டீர்? 😃


/கொல்வெட்(டு) எனச்சிலர் கற்றுக் கொடுக்கிறார்

நல்வழி யென்(று)இஃதென் கொல்./

சில (தமிழ்நாட்டு) அரசியல்வியாதிகளுக்கும் (உள்நாட்டு/வெளிநாட்டு) மதவாதிகளுக்கும் தேவையான அறிவுரை


/நகர வொணாவண்ணம் நல்ல நெரிசல்;

பகர்வார் பெயர்தான் நகர்!/

தி.நகர் ரங்கநாதன் தெரு தீபாவளிக் கும்பலை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. சும்மா நின்று கொண்டிருந்தாலே போதும். Escalator போல் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு நம்மை நகர்த்திக் கொண்டு சென்று விடும் கும்பல்.

பி.கு: 1b, 2b, 68b, X1, X2,... இத்யாதி நம்பர்களுக்கு என்ன அர்த்தம்? உங்கள் internal ரெஃபெரன்ஸா? அது ஏன் இங்கே இருக்கின்றது? படிக்கிறவர்கள் மண்டை காயட்டுமே என்ற நல்ல எண்ணமோ?😃


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
Surya Janakiraman

Ram Ramakrishnan

unread,
Oct 21, 2025, 11:18:08 AM (yesterday) Oct 21
to santhav...@googlegroups.com


எண்ணுதற்குப் பற்பலவாய் இன்சுவைப் பாட்டிருக்க

எண்ணத்தில் எண்வந்த தெண்ணு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 21, 2025, at 20:16, Surya Janakiraman <surya.ja...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Oct 21, 2025, 11:34:02 AM (yesterday) Oct 21
to santhav...@googlegroups.com
Thanks.

// 1b, 2b, 68b, X1, X2,... இத்யாதி நம்பர்களுக்கு என்ன அர்த்தம்? உங்கள் internal ரெஃபெரன்ஸா?  //

நல்ல வினா.
சில சொற்களுக்குச் சிவன்மீது பாடல் எழுதியபொழுது அச்சொற்களில் வேறு கருத்துகளிலும் பாடல் எழுதினேன்.
மதிசூடி துதிபாடி தொகுதி-3-இல் பகுதி 3.3-இல் உள்ள பாடல்களில் எண்களோடு தொடர்புடைய எண்கள் இவை. 
X - இக்குறியீடு பெற்ற சொற்கள் அந்தத் தொகுதியில் இடம்பெறாத சொற்கள்.

03.03 – அடியும் முடியும்

V. Subramanian

--
Surya Janakiraman

Swaminathan Sankaran

unread,
Oct 21, 2025, 12:09:44 PM (yesterday) Oct 21
to santhav...@googlegroups.com
சிறப்பு. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
Oct 21, 2025, 2:37:53 PM (24 hours ago) Oct 21
to santhav...@googlegroups.com
Thanks.
V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages