kanda padya - கந்த பத்யம்

195 views
Skip to first unread message

Siva Siva

unread,
Dec 25, 2009, 9:11:18 PM12/25/09
to santhavasantham
சமீபத்தில் சுமதி சதகம் என்ற தெலுங்கு நூலை இணையத்தில் கண்டேன். அது' கந்த பத்யம்' என்ற அமைப்பில் உள்ளது.
இவ்வமைப்புக் கன்னடத்திலும் உண்டு என்று அறிந்தேன்.

அதன் அமைப்பைப்பற்றித் தேடியதில் கண்ட தகவல்களின் சுருக்கம் கீழே.
இவ்வமைப்பு சமஸ்கிருதத்திலும் உண்டா?


கந்த பத்யம் - kanda padya
---------------------------------
தமிழில் வெண்பாவைப் போல் இவ்வகைச் செய்யுள் தெலுங்கு, கன்னட மொழிகளில் மிகவும் பரவலாகக் கையாளப்பட்ட/படுகிற பாடல் வகை.
இதன் இலக்கணம் (நான் புரிந்துகொண்ட அளவில்):
1) 3-5-3-5
என்ற சீர் அமைப்புக் கொண்ட 4 அடிகள்.
2)
எல்லாச் சீர்களும் 4 மாத்திரை கொண்ட ஈரசைச் சீர்கள்.
லகு = குறில் = 1 மாத்திரை = "I"
குரு = குறில்+ஒற்றுகள் / நெடில் / நெடில்+ஒற்றுகள் = 2 மாத்திரை = "U"

3)
சீர்களின் அமைப்பு இப்படி இருக்கவேண்டும்:
W X W
X W Y W Z
W X W
X W Y W Z

இதில் உள்ள W, X, Y, Z என்ற குறியீடுகள் சுட்டும் சீர் அமைப்பு:

X = 4
மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIII IIU IUI UII UU

W = "IUI" (
லகு-குரு-லகு) என்ற அமைப்பைத் தவிர மற்ற 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIII IIU UII UU

Y =
லகுவில் தொடங்கி லகுவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIII IUI

Z =
குருவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIU UU

4)
எதுகை: எல்லா அடிகளுக்கும் இடையே எதுகை அமைய வேண்டும்.
5)
மோனை: 2-ம் அடியிலும், 4-ம் அடியிலும் 4-வது சீரில் மோனை அமையும்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Dec 25, 2009, 9:53:16 PM12/25/09
to santhavasantham

ஸுமதி சதகத்தில் ஒரு செய்யுள்:

அப்புகொனி சேயு விபவமு
முப்புன ப்ராயம்புடாலு, மூர்குனி தபமுன்
தப்பரயனி ந்ரு\புராஜ்யமு
தெப்பரமை மீத கீடு தெச்சுர ஸுமதீ

சீர் பிரித்து:

அப்புகொ னிசேயு விபவமு
முப்புன ப்ராயம் புடாலு, மூர்குனி தபமுன்
தப்பர யனிந்ரு\பு ராஜ்யமு
தெப்பர மைமீ தகீடு தெச்சுர ஸுமதீ

appugoni cEyu vibhavamu
muppuna brAyamputAlu mUrkhuni thapamun
dhapparayani nru\pu rAjyamu
dhepparamai mIdha gIdu dheccura sumathI!

vibhavamu=wealth; prAyamputAlu=young wife; nru\pu=king; thepparamu=harm.
Sumati, wealth obtained through borrowing, a young wife in old age, a fool’s penance, and a regime which doesn’t recognize the crime of an accused, will cause harm later.



2009/12/25 Siva Siva <naya...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Dec 26, 2009, 1:33:25 AM12/26/09
to santhav...@googlegroups.com

எண்சீர்க் கண்ணி வடிவில் அமைந்தது அப்பாடல் . அதில் ஒரு சிறப்பு என்னவென்றால் எண்சீரின் முதல் மூன்றாம் அரையடிகளில்   முதல்சீருக்கும் நான்காம் சீருக்கும் எதுகையிருக்கும்

 

 

காலையில் வேலைவாய்க் காட்சியில்  சோலையில்

கத்தும் குயிலின்  சுவைதரும் கீதமே

நீலமும் மாறிடும்  செம்மையின் கோலமாய்

நேரும்  விடியல்  அழகொளிர்   நீதமே!

 

 

 

 

எண்சீர்க் கண்ணி வடிவில் அமைந்தது அப்பாடல் . அதில் ஒரு சிறப்பு என்னவென்றால் எண்சீரின் முதல் மூன்றாம் அரையடிகளில்   முதல்சீருக்கும் நான்காம் சீருக்கும் எதுகையிருக்கும்

 

 

தெலுங்கு அமைப்பில் போடுவதென்றால்

 

 

காலையில் வேலைவாய்க் காட்சியில்  

சோலையில் கத்தும் குயிலின்  சுவைதரும் கீதமே

நீலமும் மாறிடும்  செம்மையின்

கோலமாய் நேரும்  விடியல்  அழகொளிர்   நீதமே!

 

 

இதில் மாத்திரைக் கணக்கும் ஒத்துப்போகும்

 

 

தெலுங்கு அமைப்பில் இதைத் திருமுந்நான்கு என்று அழைக்கலாம்

 

இவ்வகைகளுக்கு மாத்திரைக் கணக்குப் பார்க்காமல்

 

கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்

தேமா புளிமா கருவிளம் கூவிளம்

 

என்ற அமைப்பிலும் எழுதலாம். 1-4 எதுகை

1-5 மோனை

கல்யாணங்களில் நம் பெண்டிர் அந்தக்காலத்தில் கத்யம் பத்யம் பாடுவது உண்டு. தெரிந்தவர்களிடம் கேட்டால் அதன் அமைப்புத் தெரியலாம்.

 

தங்கமணி அவர்கள் கேட்டிருக்கக்கூடும்.  மணப்பெண் அந்தக்காலத்தில் பத்யம் பாடியே ஆகவேண்டும்.

இலந்தை

 

 



2009/12/26 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kaviyogi Vedham

unread,
Dec 26, 2009, 4:47:39 AM12/26/09
to santhav...@googlegroups.com
அடேங்கப்பா..நம்ம சிவாவும் இலந்தையும் எங்குஎங்கெல்லாமோ தேடித்துழாவி
சந்தம் அமைக்கிறார்களே...பேஷ்பேஷ்!.ஆனால் இச்சந்தத்தில் ஒரு பாட்டுகூட
அமைக்க இப்போது வரவிலை..விட்டேன்.
யோகியார்

2009/12/26 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Siva Siva

unread,
Dec 26, 2009, 8:39:29 AM12/26/09
to santhav...@googlegroups.com

எனது பாடல்:
2009-12-25
('
கந்த பத்ய' அமைப்பில்)
(
தமிழ் யாப்பை ஒட்டி ''காரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன்)

அலைமதி லெரிபுக நகுவார்
மலைமக ளொருபால் துணையென மகிழும் சிவனார்
தலைமலி மாலையு மணிவார்
மலரன அவரடி வழிபட மறவேல் மனமே.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/12/26 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Siva Siva

unread,
Dec 27, 2009, 11:29:48 AM12/27/09
to santhav...@googlegroups.com

2)
வினையின் பயனால் துன்புறு

மனமே வல்வினை அறுவழி மறைபல போற்றும்
புனலணி முக்கட் பரமன்
சினவிடை யான்பேர் அளியொடு தினமுரை செயலே.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/12/26 Siva Siva <naya...@gmail.com>

எனது பாடல்:
2009-12-25
('
கந்த பத்ய' அமைப்பில்)
(
தமிழ் யாப்பை ஒட்டி ''காரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன்)

அலைமதி லெரிபுக நகுவார்
மலைமக ளொருபால் துணையென மகிழும் சிவனார்
தலைமலி மாலையு மணிவார்
மலரன அவரடி வழிபட மறவேல் மனமே.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

thangamani

unread,
Dec 27, 2009, 12:16:42 PM12/27/09
to சந்தவசந்தம்
திரு.இலந்தை அவர்களுக்கு,
அந்த நாளில்,திருமணங்களில்,
பெண்டிர் நலங்கு,கன்னூஞ்சல்,லாலி,
சோபானை...போன்ற பாடல்கள் பாடுவர்.
பத்யம் என்பது பாடக்கேட்டிருக்கேன்.நினைவில்லை.
யாரிடமாவது கேட்டுப் பார்க்கிறேன்.
மேற்சொன்ன பாடல்கள் 'நாட்டுப் புறபாடல்'
வகையில் சேர்த்தலாமோ?

பெண்கள் கொஞ்சம் பாட,
நாதஸ்வரம் வாசிப்பவரும் அதையே பாட
அது ஒரு அழகாய் இருக்கும்!
பலவகையானப் பாடல்கள்!
மணப்பெண் மாப்பிள்ளையிடம் தனக்கு என்னவெல்லாம்
வேண்டும் என்று கேட்பது,
மாப்பிள்ளை பெண்ணிடம் தன் அயல்நாட்டுப் படிப்புக்கு
பணம் தரச்சொல்லிக் கேட்பது,
சம்மந்தி ஏசல் பாட்டு,வகைவகையான
விருந்து உணவு வருணனை...என்று நீண்டுகொண்டே இருக்கும்.

அன்புடன்,
தங்கமணி.

> 2009/12/26 Siva Siva <nayanm...@gmail.com>

> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
Dec 28, 2009, 11:13:36 AM12/28/09
to santhav...@googlegroups.com
இவ்வமைப்பில் எழுதுவது தெலுங்கு கன்னட மொழிகளில் சுலபமாக இருந்திருக்குமோ?

தேடியதில் கண்ட ஒரு பாடல் - இது தெலுங்கு எழுத்துகளில் எழுதிய சமஸ்கிருதமா?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

-----

http://ftp.cs.wisc.edu/list-archives/telusa/log96.mar.c

Date: Tue, 12 Mar 1996 21:07:58 -0500 (EST)

From: R...@FCRFV1.NCIFCRF.GOV


Subject: tIyatEniya: pAdabhramakam - Line-Palindrome in Telugu


This poem occurs in Nandi Timmana's pArijAtApaharaNam. The metre is kandam. Each line is palindromic. Such a poem is said to possess pAdabhramakam. It is also called sarvatObhadra [auspicious in all ways (left-to-right or right-to-left)]. The poem, even though published in a Telugu kAvya, is basically in Sanskrit.


--- kandam ---

dhIra s'ayanIyas'aradhI
mAravibhAnumatamamata manubhAviramA
sArasavananavasarasA
dAradasamatAratAra tAmasadaradA


bhAvArthamu:

Brave to rest on a bed of ocean!
Handsome to look like Cupid! Holy to be worshipped!
Fit to accept sacrificial offerings!
Rich to wear bright pearl necklaces!
O destroyer of the evil forces! Salutations to you!


Meanings for some words:
s'ayaniya = fit to lie; s'aradhi = ocean; mAra = manmatha; vibha = light; anumata = equal to; mamata = possessor of a beautiful body; manubhAvi = that caused by recitation; rama = wealth; sAra = that which is juicy; savana = sacrifice; navasArasa = new lake; dArada = mercury; sama = similar; tAratAra = wearing a pearl necklace; tAmasa = dark; daradA = causing fear.


-----


2009/12/26 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Dec 28, 2009, 12:51:56 PM12/28/09
to santhav...@googlegroups.com
this is adi malaimarru. 
ilanthai
 
 
 
 
 
 


 
2009/12/28 Siva Siva <naya...@gmail.com>
--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 28, 2009, 7:14:25 PM12/28/09
to santhav...@googlegroups.com
தெலுங்கு இலக்கியம் பற்றிய ஒரு slide show:
http://www.slideshare.net/naramr/telugu-language-conf-in-
harvard2

by GVRK Sharma, MD harvard Med School
Telugu Language and Literature

கந்தபத்யம் பற்றி:

p.10. Kanda padyam, a metre not borrowed from Sanskrit .
Cited Thikkanna's poem is similar in meaning to தீயினாற்
சுட்டபுண்.

p.40 Other Telugu-specific metres: seesa, kanda, aathaveladi,
thEthageethi etc. .
".. rhyming of 1st letter of each line rhyming with another letter of
specific location (yathi and prAsA)."

அனந்த்
28-12-2009

2009/12/27 Siva Siva <naya...@gmail.com>:


> 2)
> வினையின் பயனால் துன்புறு
> மனமே வல்வினை அறுவழி மறைபல போற்றும்
> புனலணி முக்கட் பரமன்
> சினவிடை யான்பேர் அளியொடு தினமுரை செயலே.
>

> 2009/12/26 Siva Siva <naya...@gmail.com>
>>
>> எனது பாடல்:
>> 2009-12-25
>> ('கந்த பத்ய' அமைப்பில்)
>> (தமிழ் யாப்பை ஒட்டி 'ஐ'காரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன்)
>>
>> அலைமதி லெரிபுக நகுவார்
>> மலைமக ளொருபால் துணையென மகிழும் சிவனார்
>> தலைமலி மாலையு மணிவார்
>> மலரன அவரடி வழிபட மறவேல் மனமே.
>>
>> அன்புடன்,
>> வி. சுப்பிரமணியன்
>
>
>
> --
> http://nayanmars.netne.net/
> 12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
>

> --
> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> பெறுகிறீர்கள்:
> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> santhavasanth...@googlegroups.com.
> இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>

K.R. Kumar

unread,
Dec 28, 2009, 7:45:34 PM12/28/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள அனந்த்,
 
ஸ்லைட் ஷோ(தமிழில் எப்படிச் சொல்வது ??) பல தெரியாத செய்திகளைத் தெரிவிக்கிறது. மிக்க நன்றி.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)
 


 
2009/12/29 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Dec 28, 2009, 10:15:15 PM12/28/09
to santhav...@googlegroups.com
I happened to come across this info - which seems to indicate some sort of Kannada version of thiruththoNdath thogai of Nambi ANdAr nambi.

===============


http://wapedia.mobi/en/Harihara_(poet)

Shivaganada ragale

Harihara is credited with more than one hundred poems in the Ragale metre and is called the Nambiyanana ragale (also called Shivaganada ragale or Saranacharitamanasa-"The holy lake of the lives of the devotees", c. 1160) after the saint Nambiyana. In this writing, which is a eulogy of the 63 saints of early Shaivism (devotion to God Shiva), of the later social reformers such as Basavanna, Allama Prabhu and Akka Mahadevi, and of God Virupaksha (a form of Hindu god Shiva), Harihara express emotions as few poets could. Referenced in this writing is the Tamil epic Periyapuranam. [10] [11] [1]

==================

Siva Siva

unread,
Dec 28, 2009, 10:50:12 PM12/28/09
to santhav...@googlegroups.com
http://www.classicalkannada.org/DataBase/KannwordHTMLS/CLASSICAL%20KANNADA%20LITERATURE%20HTML/HARIHARA%20HTML.htm

Harihara is one of the most important poets of Kannada for more than one reason. He is perhaps the first Kannada poet who chose a Tamil work as a source instead of more favoured Sanskrit and Prakrit works. ‘Periyapuranaa 11th century work by SEkkiZAar provided brief life sketches of the shaiva saints (Nayanaars) of Chola desha. {( Periya Puranam (The great purana or epic), also known as “Tiruttontarpuranam (the purana of the holy devotees) is a Tamil poetic account depicting the legendary lives of the sixty Nayanars, the canonical poets of Tamil Shaivism. It was compiled during the twelfth century by Sekkizhar. It provides evidence of trade with West Asia. – from Wikipedia} The fact that he could obtain the Tamil work in the immediate aftermath of its publication, that in too in central Karnataka is noteworthy. Consequent of this choice the locale, the details and the narrative style undergo a sea change and become and nearer to the native Dravidian life style. This is particualarly true of ‘puratanara ragalegalu’. On the contrary other ragales hold a mirror to the medeival Karnataka and the details are keenly observed and sensitively portrayed. Harihara performs the act of bidding adieu to old Kannada and ‘Champu style’ in ‘Girijakalyana’. He uses medeiva Kannada or Nadugannada to great effect in all his ragales. The style is highly evocative and the poet eschews Sanskrit words as far as possible. His daring in changing the style and subject matter is to be admired even though one has to concede that he was greatly influenced by the Vachana literature of Shivasharanas. The life of the common man holds the centre stage for the the first time in Kannada literature in these works. A potter, an agriculturist, a hunter, a cobbler, a washerman and a fisherman are the protagonists of some of his celebrated ragales. The lord Shiva is accesible to all of them without the mediation of the priest. This is a huge step forward which unfortunately was not followed by his successors.             


2009/12/28 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Feb 9, 2015, 9:44:13 PM2/9/15
to santhavasantham
Given the recent interest in SV to learn about basic prosody as it exists in some other languages, I thought this thread may be of interest to the SV members who have joined subsequent to this discussion that happened in 2009.


Kavingar Jawaharlal

unread,
Feb 9, 2015, 10:35:17 PM2/9/15
to santhavasantham
பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய முயற்சி.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

Siva Siva

unread,
Feb 15, 2015, 10:55:17 PM2/15/15
to santhavasantham

kanda padya meter - in Kannada - video tutorial: https://www.youtube.com/watch?v=xXE1s7P-OzI
Kanda padya - in kannda - an example and scansion walkthrough - video tutorial: https://www.youtube.com/watch?v=bCBfSA4cFZ8

I believe the main difference between Kannada and Telugu version of Kanda padyam meter is:
In Telugu, there is need for yati (i.e. mOnai) in lines 2 and 4.
In Kannada, the mOnai need may not be there. (So I think).


2009-12-25 21:11 GMT-05:00 Siva Siva <naya...@gmail.com>:

Siva Siva

unread,
Feb 15, 2015, 11:31:31 PM2/15/15
to santhavasantham
Sometimes it comes in handy to keep our own copy of stuff available on the web - as one never knows when a web site will no longer be available!

Here is something that I noted down in 2010. The website link below from which I got that information then seems to be no longer active!

-------------------------------

http://www.classicalkannada.org/DataBase/KannwordHTMLS/CLASSICAL%20KANNADA%20LITERATURE%20HTML/KANDA%20PADYA%20HTML.htm


KANDA PADYA



Kanda padya (ಕಂದಪದ್ಯ) is a prosodic form which is extremely popular in the ancient and medieval Kannada poetry. It contains four lines of unequal length. The first and the third lines contain equal number of ‘matras’. The remaining two lines are also of equal length. Forms like this are designated as ‘ardha sama vrutta’. ‘Kanda’ is essentially a prosodic form in ‘Matraa Vrutta’. However certain minor conditions are imposed making use of the concepts in the 'akshara gana chandassu' This fact becomes significant if one takes in to consideration that ‘kanda’s are usually prevalent in ‘Champu Kavyas’ that were written during the early phase of Kannada poetry and continued unabatedly for a number of centuries. Kandas are used in champu kavyas in combination with ‘Varna Vruttas’ and many indigenous meters. Very rarely one comes across an entire work composed in Kanda padyas. This meter is used in literary works as well as knowledge based texts. One comes across these even in inscriptions.


The word ‘kanda’ as well as the meter are usually traced to the Sanskrit meter ‘aaryaa’ (ಆರ್ಯಾ) and the Prakrit meter ‘Khandayi (ಖಂದಇ) It does not belong to the indigenous ‘amsha gana chandassu. Scholars have put forward many arguments in favor of their beliefs. The structure of a typical kanda padya is as follows.

4 4 4

4 4 4 4 4

4 4 4

4 4 4 4 4

  • Here the number four represents a unit containing four ‘maatra’s. Hence a kanda padya contains sixteen units (gaNa) and the total number of maatras is sixty four. (Thirty two in each half).

  • The odd numbered ganas should not be a ‘ja’ gana which means that its pattern should not be ‘u-u’.(Lahgu-Guru-Laghu).

  • However the sixth and the twelfth unit have to be a ‘ja’ gana or they should have the pattern ‘uuuu’ (four laghus).

  • The eighth and the sixteenth units must have a ‘guru’ at the end.

  • There is a pause in the rendering of the poem after the first letter of the sixth and twelfth ganas.

  • (Yati) The seventh and the fourteenth unit should begin with anew word if it contains four laghus in succession. This meter sticks to the rule of initial rhythm (AdiprAsa) very strictly and one find a lot internal rhyming though not according to stipulated rules. Scholars have done some hair splitting and tried to find some variations of this meter but not with much success.


A survey of Kandas right from the beginning to the modern times reveals a gradual tendency of flouting the rules whether they are literary works or inscriptions. Early poets such as Pampa, Ranna, Nagavarma and Janna have followed the rules very scrupulously. However, almost all these rules were breached occasionally in later works.


The earliest occurrence of Kandas in Kannada is traced to two poems that were found in the Jain mutt at Singanagadde village in Narasimharajapura taluk. Only three kandas belong to the pre-Kavirajamarga era. However there is an extensive use of this meter in Champu kavyas. Most of them have ‘Kanda’ as their major component with other vruttas being used sparingly. This is true of Srivijaya of Kavirajamarga fame, Pampa, Ranna, Nagavarma, Nagachandra, Harihara and a host of others. ‘Yashodhara Charite’ by Janna is composed almost exclusively in this meter. (300 kanda padya and 10 Vruttas) There are many works which make use of only ‘Vruttas’ and ‘Kandas’ avoiding prose (Vachana) altogether. Some ‘Shatakas’ are composed exclusively in ‘Kanda’s. (Triloka Shataka by Ratnakara and ‘Shadakshara Kanda’ by Kondaguli Keshiraja)


‘Kanda’ is the favorite prosodic form of writers who have written knowledge based texts in Kannada. ‘Kavvyavalokana’, (Nagavarma-2) ‘Shabdamanidarpana’ by Keshiraja and ‘Ashvashastra’ by Abhinavachandra are a few among them.


This meter owes its popularity to the facility with which one can combine Kannada and Sanskrit words, the flexibility that makes room for experimentation, a scope to introduce lyricism, conversation and description depending on the needs of the situation. Consequently scholars have heaped praise on this meter and its practitioners. Two illustrations of well constructed kandas are given below.






1. ಕಾವೇ/ರಿಯಿಂದ /ಮಾಗೋ/

ದಾವರಿ/ವರಮಿ/ರ್ಪನಾಡ/ದಾಕ/ನ್ನಡದೊಳ್ / |

ಭಾವಿಸಿ/ದ ಜನಪ/ ದಂ ವಸು/

ಧಾವಳ/ಯ ವಿಲೀ/ನ ವಿಶದÀ/ವಿಷಯ ವಿ/ಶೇಷಂ / || (ಕವಿರಾಜಮಾರ್ಗಂ, 1-36)

காவே ரியிந்த மாகோ
தாவரி வரமிர் பநாட தாகன் னடதொள்
பாவிஸி தஜனப தம்வஸு
தாவள யவிலே னவிசத விஷயவி சேஷம்

2. ಬಿಡದೆ ಪೊ/ಗೆ ಸುತ್ತೆ /ತೋಳಂ/

ಸಡಿಲಿಸ/ದಾ ಪ್ರಾ/ಣ ವಲ್ಲ/ಭರ್ ಪ್ರಾ/ಣಮನಂ/ |

ದೊಡೆಗಳೆ/ದರೋಪ/ರೋಪರೊ/

ಳೊಡಸಾ/ಯಲ್ಪಡೆ/ದರಿನ್ನ/ವೇಂ ಸೈ/ಪೊಳವೇ/ || (ಆದಿಪುರಾಣಂ, ಪಂಪ, 5-24)

பிடதெபொ கெஸுத்தெ தோளம்
ஸடிலிஸ தாப்ரா ணவல்ல பர்ப்ரா ணமனம்
தொடெகளெ தரோப ரோபரொ
ளொடஸா யல்லடெ தரின்ன வேம்ஸை பொளவே


References: 1. ‘Praacheena Kannada Sahitya Ruupagalu’ by R.S. Mugali, 1973, Mysore.

2. ‘Kannada Chandah Svaropa’, by T.V.Venkatachalashastri, 1978, Mysore.

3. ‘Kannada Chandassamputa’ edited by L.Basavaraju, 1974, Mysore

4. ‘Kanda-lakshana, ugama, itihasa’ by N.S.Taranatha, Kannada Chandassina Charitre, 1980, Kannada Adhyayanasamsthe, Mysore University, Mysore.



Siva Siva

unread,
Feb 20, 2015, 6:45:46 PM2/20/15
to santhavasantham
I believe thyAgarAjar has composed some songs in kandapadyam meter.

one of them is - nauka charithram - நௌக சரித்ரம்.


Here is a sample song from that work:

நல்லனி யமுனா நதி3லோ 
தெல்லனி ரங்கை3ன(யோ)ட3 தேலுசு மெரயன் 
பல்லவ பாணுலு பொட33னி
ஸல்லாபமு தோட3 க்ரீட3 ஸல்ப தலசுசுன்


கரிய யமுனை நதியினில்
வெள்ளை நிற ஓடம் மிதந்துகொண்டொளிர, 
தளிர் கரங்களினர் (கோபிகையர்), கண்டு, 
சல்லாபத்துடன் கேளிக்கை செய்ய நினைத்து, 
----------------

Pas Pasupathy

unread,
Feb 20, 2015, 9:30:53 PM2/20/15
to Santhavasantham
The 3-5 structure of KP reminds me of  Sindhu structure in Tamil. வியநிலை சிந்து. For example, an Anandha KaLippu will be 3 -4 cIrs type.( excluding thaniccol) ( முந்நாற்சீரிரட்டை)  I don't know a 3-5 type Sindhu; perhaps a search in Panchali Sabatham may reveal one.

Also see
தின்னப் பழம் கொண்டு தருவான் -பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்.

2015-02-20 18:45 GMT-05:00 Siva Siva <naya...@gmail.com>:
I believe thyAgarAjar has composed some songs in kandapadyam meter.

one of them is - nauka charithram - நௌக சரித்ரம்.


Here is a sample song from that work:

நல்லனி யமுனா நதி3லோ 
தெல்லனி ரங்கை3ன(யோ)ட3 தேலுசு மெரயன் 
பல்லவ பாணுலு பொட33னி
ஸல்லாபமு தோட3 க்ரீட3 ஸல்ப தலசுசுன்


கரிய யமுனை நதியினில்
வெள்ளை நிற ஓடம் மிதந்துகொண்டொளிர, 
தளிர் கரங்களினர் (கோபிகையர்), கண்டு, 
சல்லாபத்துடன் கேளிக்கை செய்ய நினைத்து, 
----------------





Balasubramanian N.

unread,
Feb 21, 2015, 3:15:52 PM2/21/15
to santhav...@googlegroups.com
Is it khaNDa padya?

--

N. Ganesan

unread,
Feb 21, 2015, 3:52:04 PM2/21/15
to santhav...@googlegroups.com


On Saturday, February 21, 2015 at 2:15:52 PM UTC-6, nahupoliyan wrote:
Is it khaNDa padya?


அப்படி ஒருவர் வலைப்பதிவில் எழுதியுள்ளார்,

வித்யா

unread,
Feb 22, 2015, 9:00:50 PM2/22/15
to santhav...@googlegroups.com
அதை எழுதியது நான் தான் - கீழே கன்னடம் நன்கறிந்த, அறிவார்ந்த நண்பர் (அவரும் இங்கே உறுப்பினர்  தான்.) பின்னூட்டத்தில் திருத்தமும் சொல்லி இருந்தார் - அது 'kanda' பத்யம் என்று.  பின்னூட்டத்தில் இருக்கிறதே என்பதால், அதை மேலே திருத்தாமல் விட்டுவிட்டேன்.  பின்னூட்டத்தைப் பார்க்காததால்  குழப்பம் நேரலாம் என்பதால் இப்போது மாற்றிவிட்டேன்! 

"The metre is believed to be derived from the samskRta Arya/skandha metres and kanda itself as a tadbhava of skandha. Clearly the metres are related, with kanda being an elaboration/extension of the samskRta metre with the addition of dvitIyAkShara prAsa and yati/vaDi.One rule you have not mentioned is of the yati/vaDi. I see from the example you have provided that the rules maybe slightly different between kannaDa and telugu versions in terms of where the yati is placed".


Vidya

Siva Siva

unread,
Feb 28, 2015, 9:17:34 AM2/28/15
to santhavasantham
Thanks Vidya.

Here are some pages that I think cover the kandam meter. These are from Nagavarma Canarese Kannada prosody printed in 1875 - pages 88-91.
Hope you or other kannada knowing friends can confirm this and if possible provide some translation.
Nagavarma Canarese Kannada prosody 1875 - pages 88-91.pdf

Balasubramanian N.

unread,
Feb 28, 2015, 2:29:01 PM2/28/15
to santhav...@googlegroups.com

Possibly it is     कन्द  [of kanda-mUla-phalAdi...]. Should check up .

Balasubramanian N.

unread,
Feb 28, 2015, 2:36:13 PM2/28/15
to santhav...@googlegroups.com
I  wish I had seen Vidya's posting before setting to write. The Telugu script confirms my guess. Sehr gUt!

devraj

unread,
Mar 2, 2015, 9:16:39 AM3/2/15
to santhav...@googlegroups.com
ఖండ పద్య  - 
கண்ட பத்யம் , சரியான உச்சரிப்பு என்று தெரிகிறது.
கண்ட காவ்யம்போல் ‘கண்ட பத்யம்’

கன்னடத்தில் ‘கண்ட பத்யம்’


தேவ்  

N. Ganesan

unread,
Mar 2, 2015, 11:43:16 PM3/2/15
to santhav...@googlegroups.com
கந்த பத்யமு - என்றும் கிட்டல் அகராதியில் காண்கிறேன். இரண்டும் வெவ்வேறா?


ನಣಟ naṇṭu-a3.
= ನಣಟ. a relative, a kinsman; a friend (ಆತಮೀಯ, ಸವಜನ, ಬನಧು, ಆಪತ, ಜಞಾತಿ, ಬಾನಧವ Hlā.; Mr. 311; ದಾಯಿಗ, ಬನಧು Nn. 14; My. only = ಬನಧು; Tu. ನಣಟ; Te. ನಣಟಿಕಾಡು, a friend; T. ನಣಣುನ, a friend; M. ನಣಣು, ನಣಣು to remember with love and gratitude; see s. ನಚಚು 1; cf. ನನನಿ 1 & 2). [ಆತನ ನಣಟರಪಪಶವಗರೀವ...ನೀಲಾದಿಗಳಪಪ Pb. 6, 64 va.; Ap. 9, 99, Vr. 72, 8; ಜಗದ ನಣಟ ನೀನೇ ಅಯಯಾ ಕೂಡಲ ಸಂಗಮದೇವಾ! Bv. 25]. ಸಖಯ, ಪರಾಪತಪದೀನ ನದಡ ಮಾಡಿಕ೉ಣಣ ನಣಟನು; ಸಂಗಡಿತನಮೆನದೂ, ಮಬರು; ಮಿತರ, ಸುಹೃತ ನದ೉ಡೆ ಡಯಲಾದ ಸಂಗಡಿಗನು; ನಣಟನನದೂ, ಮಬರು (Nr.). ನಣಟರ ನಲಲರ ಮಾತುಗೇಳದೇ ಓಪನ, ಪರಮಾತಮ! (Śmd. 12). ನಣಟರಿರ, ನಲಲರಿರ ! (153). ಚನನಾಗಿದದರ ನಣಟರು, ಕಟಟರ ಸನೇಹಿತರು. -ಕಟಟು, ನಣಟರಸೇರ ಬೇಡ; ಕಟಟ ಧರಮಾ ಕೇಳಬೇಡ. -ತುಣಟನ ಮನಗ ನಣಟರು ಬನದರ ಗಣಟಿಗಿನತ ಕಡ (worse than cattle). - ತುಣಟನಿಗ ನಣಟರಲಲ ಬಣಟರ ಹಾಗ. -ದಡಡವರ ಮನಗ ಬಡ ನಣಟ ಹೋದ ಹಾಗ (Prvs.). ಹಿತನಣಟ (ಕಿಂಕರ, ಚೇಟ Mr. 238). ನಣಟರು ಬಣಟರು ಹಣವಿನ ಗಣಟಿರುವ ತನಕ ಹೇಳಿದನದದಿ ನಡವರು; ಗಣಟಲಲ ತೀರದ ಮರುದಿನ ನಣಟರ ಗಣಟರ ಗಣಟಲಿಗ ಗಾಣ (Subhāṣita- kandapadya). ನೀತಿಯ ಬಲಲವ ಪುರುಷಂ, ಮಾತುಗಳ ಕಡಿಸಿ ನುಡಿಯದಾತನ ಚತುರಂ, ಪರೀತಿಯ ಮಾಳಪನ ನಣಟಂ, ಭೀತಿಯಳಿರಪವನ ಭೃತಯ (ditto). see Bp. 37, 31; 59, 26. feminine ನಣಟಳು (My.).

அக்கரமுகத்தில் மாற்றிப்பார்த்தேன். எந்த எழுத்தின் மீது புள்ளி (அதாவது, மெய்யெழுத்து
என்று யூகித்துத்தான் கன்னடத்தில் படிக்கணுமோ? அதாவது, தமிழின் பழைய
ஓலைச்சுவடி மாதிரி. கன்னடம் அறிந்தோர் தெரிவிக்க வேண்டுகோள்.

நணட naṇṭu-a3.
= நணட. a relative, a kinsman; a friend (ஆதமீய, ஸவஜன, ப³னது⁴, ஆபத, ஜஞாதி, பா³னத⁴வ Hlā.; Mr. 311; தா³யிக³, ப³னது⁴ Nn. 14; My. only = ப³னது⁴; Tu. நணட; Te. நணடிகாடு³, a friend; T. நணணுன, a friend; M. நணணு, நணணு to remember with love and gratitude; see s. நசசு 1; cf. நனனி 1 & 2). [ஆதன நணடரபபஸ²வக³ரீவ...நீலாதி³க³ளபப Pb. 6, 64 va.; Ap. 9, 99, Vr. 72, 8; ஜக³த³ நணட நீனே அயயா கூட³ல ஸங்க³மதே³வா! Bv. 25]. ஸக²ய, பராபதபதீ³ன நத³ட³ மாடி³க೉ணண நணடனு; ஸங்க³டி³தனமெனதூ³, மப³ரு; மிதர, ஸுஹ்ருʼத நத³೉டெ³ ட³யலாத³ ஸங்க³டி³க³னு; நணடனனதூ³, மப³ரு (Nr.). நணடர நலலர மாதுகே³ளதே³ ஓபன, பரமாதம! (Śmd. 12). நணடரிர, நலலரிர ! (153). சனனாகி³த³த³ர நணடரு, கடடர ஸனேஹிதரு. -கடடு, நணடரஸேர பே³ட³; கடட த⁴ரமா கேளபே³ட³. -துணடன மனக³ நணடரு ப³னத³ர க³ணடிகி³னத கட³ (worse than cattle). - துணடனிக³ நணடரலல ப³ணடர ஹாக³. -த³ட³ட³வர மனக³ ப³ட³ நணட ஹோத³ ஹாக³ (Prvs.). ஹிதனணட (கிங்கர, சேட Mr. 238). நணடரு ப³ணடரு ஹணவின க³ணடிருவ தனக ஹேளித³னத³தி³ நட³வரு; க³ணடலல தீரத³ மருதி³ன நணடர க³ணடர க³ணடலிக³ கா³ண (Subhāṣita- kandapadya). நீதிய ப³லலவ புருஷம்ʼ, மாதுக³ள கடி³ஸி நுடி³யதா³தன சதுரம்ʼ, பரீதிய மாளபன நணடம்ʼ, பீ⁴தியளிரபவன ப்⁴ருʼதய (ditto). see Bp. 37, 31; 59, 26. feminine நணடளு (My.).


-----------------------------

ಮರಮ marma.
(= ವರಮ 2). any open or exposed part of the body particularly liable to be mortally wounded, a vital part, a weak or sensitive part of the body; any vital member or organ. 2, the joint of a limb, any joint or articulation. 3, a secret, a mystery; anything hidden or recondite; secret meaning; secret design or purpose; a secret quality; the art, trick, of a contrivance, etc. ಧರಮಾ ಮಾಡಿದರೂ ಮರಮಾ ತಿಳಿಯಬೇಹು.- ಮರಮ ತಿಳಿಯದ ಕರಮ ಮಾಡಿದವನ ಮನಸು ನಿರಮಲವಾದೀತೇ? (Prvs.). ಅರಥದ ಮರಮವನ ಅರಿಯದ, ವಯರಥಂ ತಾಂ ಕಲಿತರೇನು ಪದಪದಯಗಳಂ? ಮುತತು ಹವಳಂ ಹಣಂಗಳ ಕತತಯು ತಾಂ ಹತತರೇನು? ಬಲಯರಿದಪಪುದೇ? (Subhāṣita kandapadya).

மரம marma.
(= வரம 2). any open or exposed part of the body particularly liable to be mortally wounded, a vital part, a weak or sensitive part of the body; any vital member or organ. 2, the joint of a limb, any joint or articulation. 3, a secret, a mystery; anything hidden or recondite; secret meaning; secret design or purpose; a secret quality; the art, trick, of a contrivance, etc. த⁴ரமா மாடி³த³ரூ மரமா திளியபே³ஹு.- மரம திளியத³ கரம மாடி³த³வன மனஸு நிரமலவாதீ³தே? (Prvs.). அரத²த³ மரமவன அரியத³, வயரத²ம்ʼ தாம்ʼ கலிதரேனு பத³பத³யக³ளம்ʼ? முதது ஹவளம்ʼ ஹணங்க³ள கததயு தாம்ʼ ஹததரேனு? ப³லயரித³பபுதே³? (Subhāṣita kandapadya).


-------------------------
ಮಸಳ mosaḷe.
= ಮಸಳ, (ಮುಸಲಿ). an alligator, a crocodile [Tu. ಮುದಳ]; (ಕುಮಬೀರ, ನಕರ Hlā., Mr. 41; ಶಿಶುಮಾರ Nr.; ಕುಮಬೀರ, ಗರಾಹ, ನಕರ, ನಗಳು, ಮಕರ G.; ನಕರ, ಕುಮಬೀರ, ನಗರು Si. 89; C.; Te. ಮಸಲಿ; M. ಮುದಲ; T. ಮುದಲೈ; cf. Sk. ಮಾಚಲ). [ಆನತರಂ ಮಸಳಯಂ ಪಿಡಿವನತಿರ ನೀರಳತತಿ ಭೀಮನನತಿ ಗರವದಿಂ ಪಿಡಿಯ Pb. 1, 26]. ಮಸಳಗ ಉಪಕಾರ ಮಾಡಿ, ನಶಿಸಿಹೋದ ಹಾಗ (Prv.). ಬಿಸಲಳಗ ಬಿದದ ಮಸುಳಯ ಅಸುವಳಿಯದ ಹಾಗ ತನದು ನೀರಳ ಬಿಡಲ ಆ ಮಸಳ ಮರಳವನ (ಮರಳಿ ಅವನ) ನುಂಗಿತು; ಪಿಸುಣಂಗುಪಕಾರ ಮಾಡ ತಪಪದು ಕೇಡು (Subhāṣita kandapadya). - ಮಸಳತುಪಪ. alligator's fat, used as a medicine (My.). - ಮಸಳವಿಣಡು.-ಪಿಣಡು. a multitude of alligators (Cpr. 5, 39 va.).

மஸள mosaḷe.
= மஸள, (முஸலி). an alligator, a crocodile [Tu. முத³ள]; (குமபீ³ர, நகர Hlā., Mr. 41; ஸி²ஸு²மார Nr.; குமபீ³ர, க³ராஹ, நகர, நக³ளு, மகர G.; நகர, குமபீ³ர, நக³ரு Si. 89; C.; Te. மஸலி; M. முத³ல; T. முத³லை; cf. Sk. மாசல). [ஆனதரம்ʼ மஸளயம்ʼ பிடி³வனதிர நீரளததி பீ⁴மனனதி க³ரவதி³ம்ʼ பிடி³ய Pb. 1, 26]. மஸளக³ உபகார மாடி³, நஸி²ஸிஹோத³ ஹாக³ (Prv.). பி³ஸலளக³ பி³த³த³ மஸுளய அஸுவளியத³ ஹாக³ தனது³ நீரள பி³ட³ல ஆ மஸள மரளவன (மரளி அவன) நுங்கி³து; பிஸுணங்கு³பகார மாட³ தபபது³ கேடு³ (Subhāṣita kandapadya). - மஸளதுபப. alligator(அ)s fat, used as a medicine (My.). - மஸளவிணடு³.-பிணடு³. a multitude of alligators (Cpr. 5, 39 va.).


_______________________________

ಸಯರಣ /sayraṇe.
= ಸೈರಣ. (Tbh. of ಸಹನ). patience, endurance, forbearance, -bearing, enduring (ಮರಷ, ಕಷಮ, ತಿತಿಕಷ, ಕಷಾನತಿ, ಸಹಿಷಣುತ Hlā.; ತಿತಿಕಷ, ಕಷಮ, etc. Mr. 431; ಸಾಮ 267; ಕಷಾನತಿ, ತಿತಿಕಷ Si. 68; Bp. 38, 12; 42, 2; My.; B. 4, 155). ಸವಭಾವದಿನದ ಸಯರಣಯುಳಳವನು (ಸಹಿಷಣು, ಸಹನ, etc. Si. 361). ಮುನಿಸಿದು ನಿನತತು, ಸಯರಣಯನತತು, ಕಳದಿಗತನತತು ಸನದಿಸುವಸಕಂ (Śmd. 179). ಸಯರಣಯಮಬುದು ಮಯಸಿರಿ; ಸಯರಣಯ ದಾನಧರಮ ಜಪವುಂ ತಪವುಂ; ಸಯರಣ ಪುಣಯದ ಮೂಲಂ; ಸಯರಣ ಸರವರಿಗ ಹಿತವು; ವಾಣಿಯ ಮುಕುರಾ (Subhāṣita Kandapadya). ಸಮರಣ ತಪಪಿದರೂ ಸಯರಣ ಇರಬೇಕು (Prv.). - ಸಯರಣಗುನದು.-ಕುನದು. to lose (one's) patience (Rām. 3, 8, 68).

ಹಗುರ hagura.
= ಹಗರ etc. light, easy, etc. (My.; ಸುಲಭ, ಹವುರ G.). ಬಹಳ ಹಗುರ (ಲಘಿಷಠ G.). ಕಪಪುರ ನೀರಿಗಿನತ ಹಗುರವಾಗಿರುವದರಿನದ ನೀರ ಮೇಲೆ ತೇಲುತತದೆ (B. 4, 71). ಲಲಕಕೆ ಹುಲಲು ಹಗುರಂ, ಹುಲಲಿನದಂ ಹಗುರವಾ ಬೂರಲದರಳೆಯದು; ಹುಲಲಿಂಬೂರಲಕಿನದಂ ನಿಲಲದೆಯೆಲಲರನು ಬೇಡುವಾತನೆ ಹಗುರಂ (Subhāṣita kandapadya).

ಹಣವು haṇavu.
= ಹಣ. ಹಣವಿನ ಆಸೆ (Bp. 4, 56). ನಣಟರು ಬಣಟರು ಹಣವಿನ ಗಣಟಿರುವ ತನಕ ಹೇಳಿದನದದಿ ನಡೆವರು; ಗಣಟೆಲಲ ತೀರದ ಮರುದಿನ ನಣಟರೆ ಗಣಟಲಿಗೆ ಗಾಣ (Subhāṣita kandapadya).

ಹುಲಲು hullu.
= ಉಲಲು, ಪುಲ etc. grass; straw (ಶರ, ತೃಣ Nn. 35; ಹರಿತ, ತೃಣ 93; ಪುಲು 123; ತೃಣ, ಅರಜುನ Si. 165; C.), ಲಲಾ ಹುಲಲುಮಮ ಅರಜುನ ಮಬುದು (Hlā.). ಲಲಕಕ ಹುಲಲು ಹಗುರಂ, ಹುಲಲಿನದಂ ಹಗುರವಾ ಬೂರಲದಳಿಯದು; ಹುಲಲಿಂ ಬೂರಲಕಿನದಂ ನಿಲಲದ ಲಲರನು ಬೇಡುವಾತನ ಹಗುರಂ (Subhāṣita kanda- padya). ಹುಲಲಿನ ಉರಿಕನಸಿನ ಸಿರಿ ನಿಲಲದು. - ಹುಲಲು ಕಡವಿದವ ಉಣಣು ಬನದ, ಗೋಣಿ ಕಡವಿದವ ಹಸಿದು ಬನದ. - ಲಾವಂಚವೂ ಹುಲಲೇ, ಲಕಷೀಶವರನೂ ಮನುಷಯನೇ, ಆದರ ಭೇಧವಿಲಲವೋ? - ಹುಲಿಮರಿ ಹುಲಲು ಮೇದೀತೇ? (Prvs.). see Prv. s. ತಂಗು 1. - ಹುಲಲಡಕ. - ಅಡಕ. a heap of grass or straw (ತೃಣಯ, ತೃಣಸಂಹತಿ Si. 165). - ಹುಲಲು ಈಚಲ. a small herb, Curculigo brevifolia Ait. (Z.). - ಹುಲಲು ಕಟಟು. a tie made of grass or straw (My.). - ಹುಲಲು ಕಡಡಿ. a small piece of grass or straw (My.). - ಹುಲಲುಕಲಸ. = ಹುಲಲಕಕಲ. (My.). - ಹುಲಲುಖಾಣ. grass-fodder (Bp. 22, 27). - ಹುಲಲುಗಣಟಿ.- ಕಣಟಿ. grass and thorns (My.). - ಹುಲಲುಗದದ. a paddy-field overgrown with grass (B. 4, 79). - ಹುಲಲುಗಾವಲು. - ಕಾವಲು pasture-lands belonging to government (My.). - ಹುಲಲು ಚಣಡಿನ ಆಟ. a play with balls made of grass (S. Mhr.). - ಹುಲಲುಚಾಪ. a grass-mat (My.). - ಹುಲಲುತರಿಗ. a tax levied from those who bring their cattle to graze on government pasture-lands (My.). - ಹುಲಲುಬಣಬ. a stack of hay or straw (My.). - ಹುಲಲುಬನನಿ. = ಹುಲಲುತರಿಗ. (My.). - ಹುಲಲುಮಣಿಯ. a man in charge of public straw (My.). - ಹುಲಲುಮನ. a house with a roof of grass or straw (My.). - ಹುಲಲುಮೀನು. (ನಲಮೀನ, ಚಿಲಿಚಿಮ Si. 87). - ಹುಲಲುಮೂಟ. = ಹುಲಲಡಕ. (ತೃಣಯ Si. 165). - ಹುಲಲುಮದ. = ಹುಲಲುಬಣಬ. (My.; ತೃಣಯ Si. 165). - ಹುಲಲು
ರಾಶಿ. (ತೃಣಯ Si. 165). - ಹುಲಲುವಾಮ (ತೃಣಯ Si. 165). - ಹುಲಲುಹರ a load or bundle of grass or straw (My.; ತೃಣಯ Si. 165). - ಹುಲಲಕಕಲ. -಑ಕಕಲ. the act of bullocks treading out straw that has been thrashed (My.).


ಹಜ hej.
= ಹಗ 1-. largeness, etc. - ಹಜಜಾಜಿ. Arabian jasmine, Jasminum sambac Ait. (ಸಪತಲ, ನವಮಾಲಿಕ Si. 139). - ಹಜಜಾಲಿ. a large babool tree. ಬಾಳಯ ಗಿಡದಡಿಯಲಿ ಹಜಜಾಲಿಯ ಮರ ತಾನು ಹುಟಟಿ ಬಳಯಲು ಮತತಂ ಕೂಳರು ಹಚಚಿದ ಠಾವಿಲಿ ಬಾಳುವವನ ಆಳಾಗ ಬಹುದೇ? (Subhāṣita kandapadya). - ಹಜಜಾವ. N. of a plant (ವಜನಿ Mr. 11, o. r. ಹಜಜಾತಿ). - ಹಜಜಿಗಣ. a large leech (My.; ದುರನಾಮ, ದೀರಘಕೋಶಿಕ Si. 9). - ಹಜಜೇನು. superior honey deposited in large combs (My.). ಸಜಜನರ ಸಂಗವದು ಹಜಜೇನು ಸವಿದನತ (Sp.).


 

Siva Siva

unread,
Mar 3, 2015, 7:36:06 AM3/3/15
to santhavasantham
Please avoid copy/pasting stuff that is not directly relevant to the topic being discussed.
Thanks.

N. Ganesan

unread,
Mar 3, 2015, 9:19:19 AM3/3/15
to santhav...@googlegroups.com


On Tuesday, March 3, 2015 at 4:36:06 AM UTC-8, siva siva wrote:
Please avoid copy/pasting stuff that is not directly relevant to the topic being discussed.
Thanks.

Dear Sir,

(1) This is not available in the web, How can you or me copy/paste?

(2) kanda-padya is the topic that is being discussed. Is it not?
Is it not relevant that Kittel lists many as kanda-padya in his dictionary?

If you can read my post, these are the occurrences of kanda-padya
in the first Kannada dictionary.

N. Ganesan

Siva Siva

unread,
Nov 26, 2021, 11:52:36 AM11/26/21
to santhavasantham
I came across a write up about "Molla Ramayanam" today. Sharing here as it may be of interest to some of you.
V. Subramanian
==========

molla Ramayanam - info

https://en.wikipedia.org/wiki/Atukuri_Molla

ஆதுகூரி மொல்ல - ఆతుకూరి మొల్ల - ātukūri molla

For those who know (and read) Telugu: Molla Ramayanamu: https://archive.org/details/MollaRamayanamu

===================

https://dhinasari.com/featured/125461-lady-wrote-this-mollaramayana.html

பெண் எழுதிய பிரபலமான ராமாயணம் - 'மொல்ல ராமாயணம்'!

ராஜி ரகுநாதன் - 2020-01-09

இவர் தன் ராமாயணத்தின் முன்னுரையில் தந்தை பெயர் தவிர தன் குடும்பத்தை பற்றி எதுவும் கூறாததால் இவர் பிரம்மச்சாரிணியாகவே வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.


கொம்மரி மொல்ல” என்பவர் 1440-1530 ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த பெண் கவிஞர். மொல்ல வாழ்ந்த காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களிடம் வேறுபட்ட கருத்துகள் நிலவினாலும் அவர் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று எண்ணப்படுகிறது.

வால்மீகி முனிவர் படைத்த சம்ஸ்கிருத ராமாயணத்தைப் பின்பற்றிச் சுத்தத் தெலுங்கில் எழுதப்பட்ட காவியம் ‘மொல்ல ராமாயணம்’. இதில் ‘கந்த பத்யம்’ என்னும் செய்யுள் வகை அதிகமாக காணப்படுவதால் இதனைக் ‘கந்த பத்ய ராமாயணம்’ என்றும் அழைப்பர்.

இவரது முழுப்பெயர் ‘ஆதுகூரி மொல்ல’. இவர் ஆந்திராவின் கடப்பா மாவட்டத்திலுள்ள ‘கோபவரம்’ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் குயவர் குலத்தில் தோன்றியவராகக் குறிப்பிடப்படுவதால் ‘கொம்மரி மொல்ல’ என்று அழைக்கப்பட்டாலும் அதற்கு எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை.

மொல்லவின் வாழ்க்கை வரலாறு பற்றி நமக்குத் தெரியவருவது சிறிதளவே. புராதனப் பெண் கவிஞர்களில் மொல்லவைப் போல் இந்த அளவு இத்தனை புகழ் பெற்றிருக்கும் பெண்கள் வேறெவரும் இல்லை என்றே கூற வேண்டும். மொல்ல, ராமாயணத்தைத் தவிர இன்னும் வேறு நூல்கள் இயற்றினாரா என்றும் தெரியவில்லை.

இவர், தான் எழுதிய ராமாயணத்தின் முன்னுரையில் முதல் சில செய்யுள்களில் தன் பெயரை ‘மொல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘மல்லி’ என்னும் பெயர் அழைப்புப் பெயராக ‘மொல்ல’ என்று மருவி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது. தன் தந்தையின் பெயர் ‘கேசவ செட்டி’ என்றும் அவர் சிறந்த சிவபக்தர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் முறையாக எத்தகைய கல்வியும் கற்கவில்லை என்றும் தன்னுடைய இயல்பான புலமைக்கு இறைவனின் அருளே காரணம் என்றும் கூறியுள்ளார். அவர் எழுதிய ராமாயணத்தை அன்றைய நாள்களில் வாழ்ந்த பிற புலவர்களைப் போல் எந்த அரசருக்கும் அர்ப்பணம் செய்யவில்லை. செல்வமோ புகழோ தேடவில்லை. இது அவருடைய ராமபக்திக்கு எடுத்துக்காட்டு.

மொல்ல ராமாயணம் ஆறு காண்டங்களில் சுமார் 870 செய்யுள்களோடு கூடியது. இதில் வசனங்களும் அடக்கம்.

மொல்ல ராமாயணம் தெலுங்கில் எழுதப்பட்ட ராமாயணங்களிலேயே மிக எளிமையான மொழிநடையில் அமைந்த ராமாயணமாகத் திகழ்கிறது. மொல்லவின் எழுத்துநடை சரளமானது மற்றும் ரமணீயமானது.

முக்கியமாக, மக்கள் நடைமுறைப் பேச்சு வழக்கில் பயன்படுத்திய சொற்களாலேயே ராமாயணத்தை எழுதியுள்ளார் மொல்ல. அங்கங்கே சில இடங்களில் மட்டும் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு முன் கவி இயற்றிய ‘போத்தனா’ போன்ற தெலுங்குப் புலவர்கள் தெலுங்கோடு ஸம்ஸ்க்ருதத்தை மிக அதிகமாகச் சேர்த்துள்ளார்கள்.

மொல்ல மிகவும் பணிவு மிக்கவர். தன் நூலில் தனக்கு முன்னர் ராமாயணம் இயற்றிய கவிஞர்களுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார். தான் படிப்பறிவில்லாதவர் என்று பணிவுடன் கூறிக் கொண்டாலும் அவருடைய நூலில் காணப்படும் சமத்காரம், திறமை, புலமை, சொற்களைக் கையாளும் லாகவம், தனக்கு முந்தைய கவிஞர்களின் நூல்களின் மொழி பற்றி அவர் கூறும் வியாக்கியானங்கள் இவற்றை எல்லாம் பார்க்கையில் அவர் விஸ்தாரமாகக் காவியங்கள், பிரபந்தங்கள் படித்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.

முதல் செய்யுளில் கூறுகிறார், “ராமாயணம் பல முறை பலரால் இயற்றப்பட்டுள்ளது. முன்பே உணவு அருந்தி விட்டோம் என்பதற்காக யாராவது சாப்பிடுவதை நிறுத்துவார்களா? அதே போல் ராமாயணமும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம், படிக்கலாம், விரும்பி அனுபவிக்கலாம்”.

மேலும் அவர், “நூல் வாசிப்பவர் உடனடியாகப் புரிந்து கொள்ள இயலாத சொற்களைக் கொண்டிருந்தால் அது காது கேளாதவரும் வாய் பேசாதவரும் நடத்தும் உரையாடலைப் போல் இருக்கும்” என்று ஹாஸ்யமாகக் கண்டித்துள்ளார். மேலும் அவர், “கவிதை அல்லது செய்யுள் என்பது நிகண்டுவைத் தேடியோ அல்லது அறிஞர்களைத் தேடியோ போகவேண்டிய தேவை இல்லாமல் படிக்கும்போதே பொருள் விளங்க வேண்டும்” என்று அழுத்திக் கூறுகிறார்.

நாவில் தேன் பட்ட உடனே வாய் இனிப்பை உணருவது போல சொற்களின் பொருள் படிக்கும் போதே படிப்பவருக்கு புரிந்து விட வேண்டும்” என்கிறார்.

உதாரணத்திற்கு, “இது வில்லா? மலையா?” போன்ற எளிய தெலுங்கு மொழியும், “சந்து பொந்துகளில் நுழைந்தனர்’ போன்ற, பாமர மக்களும் படித்துப் புரிந்து கொள்ளும் வரிகளும் இந்நூலில் காணப்படுகின்றன.

படிப்போரின் மனத்தை வசீகரிக்கும் சமத்காரங்கள், உவமானங்கள், பழமொழிகளைச் சேர்த்து அழகாகக் கூறினால், காதுக்கு விருந்தாக இருக்கும்” என்று அவதாரிகையில் (முன்னுரை) கூறுகிறார் மொல்ல. மாலைப் பொழுதை வர்ணிக்கையில் “மாலை வெயிலின் இளைய செந்நிற ஒளி, கவிந்து சாயும் இருட்டோடு சேர்ந்து நீலமும் கெம்பும் (சிவப்புக் கல்) இணைத்துக் கட்டினாற் போல உள்ளது ஆகாயம்” என்று கூறுகிறார்.

அவ்வாறு கூறினாலும் உவமான உவமேயங்கள், யுத்த வர்ணனை, நாயகி நாயக வர்ணனைகளில் சில சமஸ்கிருத பதங்களை நிறைத்துளார். அந்தக் காலத்தைப் பொறுத்தவரை எளிமை என்பதன் அளவுகோல் இதுவாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மூன்று அத்தியாயங்களில் இவர் விவரிக்கும் யுத்த காண்ட வர்ணனைகளை பார்க்கையில் இவர் தானே நேரில் போர் செய்திருக்க வேண்டும். அல்லது யுத்தம் தொடர்பான நூல்களையாவது ஆழ்ந்து படித்திருக்க வேண்டும் என்று தோன்றும் வகையில் அமைத்துள்ளன. சொற்களைச் சிக்கனமாக பயன்படுத்துவதில் மொல்ல வல்லவர்.

வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணத்தில் இல்லாத சில நிகழ்ச்சிகளைக் கூட வேறு ராமாயணங்களில் இருந்து எடுத்து சேர்த்துளளார் மொல்ல. அதோடு சில நிகழ்ச்சிகளை நீக்கியுள்ளார் கூட..

உதாரணத்திற்கு அயோத்யா காண்டத்தில் ராமர் சுவர்ணா நதியைத் தாண்டுமுன் குகன் அவர் பாதங்களைக் கழுவும் இடம். இது அத்யாத்ம ராமாயணத்திலிருந்து எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதே போல் பரசுராமர், ராமருடன் யுத்தம் செய்யத் தயாராவது, பாஸ்கர ராமாயணத்திலிருந்து சேர்திருக்கலாம். இதன் மூலம் மொல்ல, விரிவாகத் தெலுங்கு, சம்ஸ்கிருத நூல்களைப் படித்தறிந்து உள்ளது தெரிய வருகிறது.

அவருக்குமுன் புகழ் பெற்றுத் திகழ்ந்த ‘திக்கனா’ போன்ற தெலுங்குப் புலவர்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து சிறிதும் பிறழாத தெலுங்கு மொழிபெயர்ப்புகளை அளித்துள்ளனர்.

விஜய நகர சாம்ராஜ்ய அரசர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்த ஸ்ரீநாதர் போன்ற புலவர்கள், கற்பனைக் கதைகளைச் சேர்க்கக் கூடிய கவி வகையைச் சேர்ந்த பிரபந்தங்களைப் பாடியுள்ளனர். மொல்ல, ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்தவர் என்று கணிக்கப்படுகிறார்.

ஆராய்ச்சியாளர்கள் மொல்லவின் ராமாயணத்தை பெருமதிப்போடு ஏற்றுக்கொண்டுள்ளனர். ‘கிராமீய மணத்தோடு எளிதில் புரியும் சொற்களைக் கொண்டு மிகச் சாதாரண வாசகர்களையும் எளிதில் சென்றடையும் வண்ணம் படைத்துள்ளார்’ என்று ஒருமனத்தோடு போற்றப்படுகிறார் மொல்ல.

இவருக்கு முன் பல ஆண் கவிஞர்கள் எழுதிய ராமாயணங்கள் பல இருந்த போதிலும் மொல்ல ராமாயணம் மட்டுமே கால கர்ப்பத்தில் கலையாமல் நிலைத்து நின்றிருப்பது இவருடைய புலமைக்கும் திறமைக்கும் பக்திக்கும் எடுத்துக்காட்டு என்றே கூறவேண்டும்.

இவர் தன் ராமாயணத்தின் முன்னுரையில் தந்தை பெயர் தவிரத் தன் குடும்பத்தைப் பற்றி எதுவும் கூறாததால் இவர் பிரம்மச்சாரிணியாகவே வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.


விருதுகளும் கௌரவங்களும்:-

ஆந்திர பிரதேச அரசாங்கம் மொல்லவின் சிலையை ஹைதராபாத் உசைன் ஸாகர் ஏரியின் மேல் உள்ள ‘டாங்க் பண்ட்’ பாலத்தின் கரைகளில் தெலுங்கு மொழியின் இதர உயர்ந்த ஆளுமைகளின் சிலைகளின் நடுவே அமைத்துக் கௌரவித்துள்ளது.

இண்டூரி வெங்கடேஸ்வர ராவ் என்பவர் மொல்லவின் வாழ்க்கை வரலாற்றைப் புனைவு கலந்த கதையாக “கும்மரி மொல்ல” (குயவர் மொல்ல) என்ற பெயரில் எழுதி 1969-இல் வெளியிட்டார். இந்த நாவலை ஆதாரமாகக் கொண்டு சங்கர சத்தியநாராயணா என்பவர் கதைப் பாடல் வடிவில் Ballad இயற்றியுள்ளார். இது ஆந்திர பிரதேசத்தில் மிகப் பிரபலமாக உளது.

இதே நாவலை வைத்துக் ‘கதாநாயகி மொல்ல’ என்ற திரைப்படம் வெளிவந்தது. வாணிஸ்ரீ இதில் மொல்லவாக நடித்துள்ளார். இவற்றுள் மொல்லவைப் பெண்ணியத்தின் பிரதிநிதியாகச், சமூக அநீதிகளைக் கண்டு பொங்கிப் போராடும் வீர மாதரசியாகச் சித்திரித்துள்ளனர். ஆனால் அதற்கு வரலாற்றுச் சான்றோ இலக்கியச் சான்றோ இல்லை.

சமீப காலமாகப் பெண்கள் தொடர்பான போராட்டங்களை டாங்க் பண்டில் உள்ள அவர் சிலை முன்பிருந்து தொடங்க ஆரம்பித்துள்ளனர் மாதர் சங்கங்கள்.

==========

Subbaier Ramasami

unread,
Nov 26, 2021, 6:47:26 PM11/26/21
to santhav...@googlegroups.com
உதயப் பொழுதில் கதிரோன்
பதமாய்க் கீழ்த்திசை மிசையெழு வதனைப் பாராய்
அதனைக்  காகம் மிகவே
சதமாய்  உணர்ந்து வரவிசை தருமே ஜோராய்.

அடடா பத்யம் அழகே
எடடா பூக்கள் நறுமண எழிலார் ஆரம்
தொடடா உடனே  சுகமே
கொடடா வாசம் விளைகிற கோலக் கொத்தே!

இலந்தை





--

Subbaier Ramasami

unread,
Nov 26, 2021, 7:52:28 PM11/26/21
to santhavasantham
நான் இரண்டாவது வரியின் இலக்கணத்தை WXYWZ என்று கொண்டுவிட்டதால் கந்த பத்யம் வந்த பத்தியமாக மாறிவிட்டது

இனி அதைக் கந்த பத்திய மாக மாற்றித் தருகிறேன். வந்த பத்தியத்தையும் ஒரு வகைப் பத்தியமாகக் கருதிக் கொள்வோம்.

உதயப் பொழுதில் கதிரோன்
பதமாய்க் கீழ்த்திசை மிசையெழு வதனைப் பாராய்
அதனைக்  காகம் மிகவே
சதமாய்க் காகா   வரவிசை தருமே ஜோராய்.
(இரண்டாவது வரியில்  1-4 ல் மோனைக்குப் பதில் எதுகை அமைந்துள்ளதைக் காண்க. மோனை இல்லாததை எதுகை சரிசெய்யும் என்பது விதி)

அடடா பத்யம் தெளிவே!

எடடா பூக்கள் நறுமண எழிலார் ஆரம்
தொடடா உடனே  சுகமே
கொடடா வாசம் விளைகிற கோலக் கொத்தே!

இலந்தை
26-11-2021


Siva Siva

unread,
Nov 26, 2021, 9:49:15 PM11/26/21
to santhavasantham
Nice.

There are 2 padhigams in this meter in "மதிசூடி துதிபாடி - Vol-1" book.



வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Nov 28, 2021, 11:09:18 PM11/28/21
to santhavasantham
Happened to come across an interesting kanda padhyam in Telugu!

தெலுங்கு இலக்கிய விருந்து - சி.ஆர். சர்மா

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0017112_தெலுங்கு_இலக்கிய_விருந்து.pdf

=========
image.png
=========

https://sanchika.com/atulitamadhurimahima/

కం

ఉణ్ణాముల జగదంబిక

నణ్ణామల విశ్వనాథు నారాధించెన్

మణ్ణాసయుఁ బొణ్ణాసయుఁ

బెణ్ణాసయు లేనివారి పెన్నిధులగుటన్ (3.185)


உண்ணாமுல ஜக³த³ம்பி³க
னண்ணாமல விஶ்வநாது² நாராதி⁴ஞ்சென்
மண்ணாஸயும்ˮ பொ³ண்ணாஸயும்ˮ
பெ³ண்ணாஸயு லேனிவாரி பென்னிது⁴லகு³டன் (3.185)

=========

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Nov 29, 2021, 10:37:59 AM11/29/21
to santhavasantham

                                              

  வாராகி கந்த பத்யப் பஞ்சகம்

ஒருமுறை யேனும் வருவாய்
வருகிற கனவின் நினைவதை உளமே தருவாய்
கருதிடு செயலில் நீயே
பெருகிடு ஜெயமே வருகிற பேறளி தாயே!

தாயே வராக முகியே
நீயே என்றன் கதியென நிற்கும் வகையே
சேயேன் திகழச்  செய்வாய்
நோயே இல்லா அருளதை நித்தம் பெய்வாய்

பெய்யும் மழையும் நீயே
செய்திடு செயலின்  பயனெழு திறலும் நீயே
உய்ந்திட வேண்டும் தெம்பே
எய்திட வைப்பாய் உனதடி யேபிடி கொம்பே!

கொம்பென வேறே இலையே
அம்புஜ பதமே அடியனை ஆளும் நிலையே
தெம்பென வேற்பேன் தினமே
ஜம்பே ஜம்பினி  அருளுக ஜயமே முனமே!

முன்னுக்  கெல்லாம் முன்னே
என்றனை ஈர்க்கும் பொலிவுள இதமே அன்னே
உன்னைச் சார்ந்தேன்  நன்றே
என்னைக் காப்பாய் எனதிறை உள்ளே ஒன்றே!

 

இலந்தை

29-11-2021

Siva Siva

unread,
Nov 29, 2021, 12:42:43 PM11/29/21
to santhavasantham
Impressive speed! Nice andhadhi.
There are some places where the meter will be impacted due to sandhi. I presume we have to assume விரித்தல் விகாரம் to fit the meter in those places.


On Mon, Nov 29, 2021 at 10:37 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

                                              

  வாராகி கந்த பத்யப் பஞ்சகம்

ஒருமுறை யேனும் வருவாய்
வருகிற கனவின் நினைவதை உளமே தருவாய்
கருதிடு செயலில் நீயே
பெருகிடு ஜெயமே வருகிற பேறளி தாயே!

--> Line-2 mOnai.
 

தாயே வராக முகியே
நீயே என்றன் கதியென நிற்கும் வகையே
சேயேன் திகழச்  செய்வாய்
நோயே இல்லா அருளதை நித்தம் பெய்வாய்

--> line-4 mOnai.
 

பெய்யும் மழையும் நீயே
செய்திடு செயலின்  பயனெழு திறலும் நீயே
உய்ந்திட வேண்டும் தெம்பே
எய்திட வைப்பாய் உனதடி யேபிடி கொம்பே!

கொம்பென வேறே இலையே
அம்புஜ பதமே அடியனை ஆளும் நிலையே
தெம்பென வேற்பேன் தினமே
ஜம்பே ஜம்பினி  அருளுக ஜயமே முனமே!

முன்னுக்  கெல்லாம் முன்னே
என்றனை ஈர்க்கும் பொலிவுள இதமே அன்னே
உன்னைச் சார்ந்தேன்  நன்றே
என்னைக் காப்பாய் எனதிறை உள்ளே ஒன்றே!

--> line-4 mOnai in 4th seer. 

Subbaier Ramasami

unread,
Nov 29, 2021, 2:40:29 PM11/29/21
to santhav...@googlegroups.com
நன்றி

 வாராகி கந்த பத்யப் பஞ்சகம்

ஒருமுறை யேனும் வருவாய்


வருகிற கனவின் நினைவதை மனமே  தருவாய்


கருதிடு செயலில் நீயே
பெருகிடு ஜெயமே வருகிற பேறளி தாயே!

- 

தாயே வராக முகியே


நீயே என்றன் கதியென நிற்கும் வகையே
சேயேன் திகழச்  செய்வாய்

நோயே இல்லா அருளதை நுவலப் பெய்வாய்

 

பெய்யும் மழையும் நீயே
செய்திடு செயலின்  பயனெழு திறலும் நீயே
உய்ந்திட வேண்டும் தெம்பே
எய்திட வைப்பாய் உனதடி யேபிடி கொம்பே!

கொம்பென வேறே இலையே
அம்புஜ பதமே அடியனை ஆளும் நிலையே
தெம்பென வேற்பேன் தினமே
ஜம்பே ஜம்பினி  அருளுக ஜயமே முனமே!

முன்னுக்  கெல்லாம் முன்னே


என்றனை ஈர்க்கும் பொலிவுள இதமே அன்னே
உன்னைச் சார்ந்தேன்  நன்றே

என்னைக் காப்பாய் எனதிறை என்னுள் ளொன்றே


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Nov 30, 2021, 9:14:39 AM11/30/21
to santhavasantham
I wrote a kanda padyam on Tiruvannamalai.
I am posting in the "கார்த்திகைத் தீபம் 2021 ஸ்பெஷல் - மதிசூடி X.Y" thread.
FYI

On Sun, Nov 28, 2021 at 11:09 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Happened to come across an interesting kanda padhyam in Telugu!

தெலுங்கு இலக்கிய விருந்து - சி.ஆர். சர்மா

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0017112_தெலுங்கு_இலக்கிய_விருந்து.pdf

=========

కం

ఉణ్ణాముల జగదంబిక

నణ్ణామల విశ్వనాథు నారాధించెన్

మణ్ణాసయుఁ బొణ్ణాసయుఁ

బెణ్ణాసయు లేనివారి పెన్నిధులగుటన్ (3.185)

KKSR

unread,
Dec 1, 2021, 8:49:29 AM12/1/21
to santhav...@googlegroups.com
கந்தபத்யம் - அறிவு

அறிவின் வளர்ச்சி ஆக்கம்
செறிவாம் அதனைப் பெறுவது சிறப்பு எனலாம்
நெறியாய்க் கொள்வீர் நிலத்தில்
அறிந்தே நடக்க அறவழி அகிலம் போற்றும்! 

சுரேஜமீ
01.12.2021 மாலை 5:47


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
Sent from Mobile

Siva Siva

unread,
Dec 1, 2021, 8:55:50 AM12/1/21
to santhavasantham
Pay attention to the seers with the pattern "laghu-guru-laghu". They can come only in places where X or Y is shown in the template.

KKSR

unread,
Dec 1, 2021, 10:29:55 AM12/1/21
to santhav...@googlegroups.com
அறிவின் வளர்ச்சி ஆக்கம்
செறிவாம் அதனைப் பெறுவது நன்மை தருமாம்
நெறியாய்க் கொள்வீர் என்றும்
அறிந்தே செல்வீர் அறவழி அகிலம் போற்றும்! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
Sent from Mobile

Siva Siva

unread,
Dec 1, 2021, 10:45:19 AM12/1/21
to santhavasantham
It is a good practice to scan the verse 2 or 3 times at the end. Once to check all seers are 4 mathras. Once to check seer pattern conformance. Once to check mOnai.
Further, it is a good practice to write by applying sandhi - and explicitly showing where you are making use of seyyuL vikArams.

நன்மை - Here மை is treated as laghu in Tamil. (ஐகாரக் குறுக்கம்).
என்றும் அறிந்தே - என்று மறிந்தே
 Line-2 - lacks mOnai.

KKSR

unread,
Dec 1, 2021, 11:48:14 AM12/1/21
to santhav...@googlegroups.com
Sorry anna,

நமக்கும் கணக்குக்கும் கொஞ்சம் தூரம் ஜாஸ்தி!

இப்ப பாருங்க👇

அறிவின் வளர்ச்சி ஆக்கம்
செறிவாம் அதனைப் பெறுவது சீரைத் தருமாம்
நெறியாய்க் கொள்வீர் மறவா
அறிந்தே செல்வீர் அறவழி அகிலம் போற்றும்! 

*************

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
Sent from Mobile

Siva Siva

unread,
Dec 1, 2021, 12:06:32 PM12/1/21
to santhavasantham
எதனை எழுதினாலும் எண்ணி எழுதவேண்டுமன்றோ! :)

Now meter conformance looks fine.
மறவா அறிந்தே = ?

KKSR

unread,
Dec 1, 2021, 1:52:10 PM12/1/21
to santhav...@googlegroups.com
மறவாத கொள்கைப் பிடிப்பும், அறிந்து அறவழி செல்லலும்! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
Sent from Mobile
Reply all
Reply to author
Forward
0 new messages