யார் அந்த எண்குணத்தான் ?

676 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Jun 25, 2012, 11:22:18 PM6/25/12
to santhav...@googlegroups.com
எல்லார்க்கும் காலை வணக்கம், 

"கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான் 
தாளை வணங்காத் தலை"

இந்த குறளில் எண் குணத்தான் என்பது யார் ? எட்டு வகை குணங்களை உடையவனா ?

ஓர் உரை நூலைப் படித்த போது சைவ சமயத்தின் படி இறைவனுக்கு எட்டு குணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டன . அவை பின் வருமாறு 
1. Self Dependence
2. Immaculate Body
3. Natural Understanding
4. Omniscience
5. Infinite Detachment
6. Infinite Mercy
7. Omnipotence
8. Limitless Bliss

இந்த விளக்கங்கள் சமயத்திற்கு சமயம் மாறுபடுகின்றன. 

உண்மையில் எண் குணத்தான் என்றால் என்ன பொருள் ? 

மேலும், "கோளில்" என்றால் குற்றம் இல்லாத என்று பொருளா ?  

சான்றோர் தெளிவு படுத்தவும்.

அன்புடன்,
நிரஞ்சன் 

Hari Krishnan

unread,
Jun 26, 2012, 12:09:10 AM6/26/12
to santhav...@googlegroups.com

2012/6/26 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

இந்த விளக்கங்கள் சமயத்திற்கு சமயம் மாறுபடுகின்றன. 

உண்மையில் எண் குணத்தான் என்றால் என்ன பொருள் ? 

என் ஆசிரியர் சொல்வார்:

இந்தக் குறள் ஒன்பதாவது குறள் என்பதில் எந்த உரையாசிரியருக்கும் கருத்து வேறுபாடில்லை.  (குறளின் வரிசை அமைப்பில் பழைய உரையாசிரியர்கள் மாறுபட்டிருக்கிறார்கள்.)

இந்த அதிகாரத்தில் இந்தக் குறளுக்கு முன்னால் உள்ள எட்டுப் பாக்களில் என்னென்ன குணங்கள் சொல்லப்பட்டுள்ளனவோ, அவையே இறைவன் எண்குணங்கள்.  ஒவ்வொருவரும் அவரவர் சமயம், நம்பிக்கை, நம்பிக்கையின்மை சார்ந்து ‘இவைதாம் எண்குணம்’ என்று வரையறை செய்தாலும், வள்ளுவருடைய வரையறை காணப் புகுந்தால்:

1) ஆதிபகவன் (உலகுக்கு முதலாக இருப்பவன்)
2) வாலறிவன்
3) மாண் அடி உடையவன்
4) வேண்டுதல் வேண்டாமை இலான்
5) பொருள்சேர் புகழ் (பொருந்திய) இறைவன்
6) பொறிவாயில் ஐந்தவித்தான்
7) தனக்குவமை இல்லாதான்
8) அறவாழி அந்தணன்.

சமயத்துக்கு ஏற்ற எண்குண விளக்கங்கள் ஆயிரம் இருப்பினும், இது மறுக்க முடியாத விளக்கம்.  என் ஆசிரியப் பெருமான் சொன்னது.

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Jun 26, 2012, 12:16:33 AM6/26/12
to santhav...@googlegroups.com

2012/6/26 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

மேலும், "கோளில்" என்றால் குற்றம் இல்லாத என்று பொருளா ?  

கோள் என்றால் கொள்வது என்று பொருள்.  தாளை வணங்காத தலைக்குப் பொறியும் பொறிகளோடு பொருந்திய கோளும், குணமும் இல்லாதன. 

கண் காது மூக்கு முதலான பொறிகளும் அவ்வவற்றுக்கு உரிய செயற்பாடுகளைக் கொண்டு விளங்கும் தன்மையும் (கொள்கை என்றால், கொண்டதாகிய தன்மை என்று பொருள்... நாம பொதுவாச் சொல்லும் பாலிசி மேட்டர் இல்லை) இல்லாத தலைகள். 

பொறியில் என்று பாடம் இருக்கிறதா, பொறியின் என்று இருக்கிறதா என்பதை கவனிக்கவும்.  பொறியின் குணம் இல என்றால் என்ன பொருள் தென்படுகிறது என்று சிந்திக்கவும்.

K.R. Kumar

unread,
Jun 26, 2012, 12:23:51 AM6/26/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஹரிகி,

உங்கள் ஆசிரியர் சொன்ன பொருள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

எந்த மதத்தினரானாலும் இவற்றை மறுக்க முடியாது.

அன்புடன்,
குமார்(சிங்கை)

2012/6/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்: இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில், santhavasanth...@googlegroups.com. இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்: http://groups.google.com/group/santhavasantham?hl=ta

இராம்குமார் முகவை

unread,
Jun 26, 2012, 2:41:01 AM6/26/12
to santhav...@googlegroups.com
அருமையான விளக்கம். பகிர்ந்தமைக்கு நன்றி.

2012/6/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Jun 26, 2012, 5:11:38 AM6/26/12
to santhav...@googlegroups.com
நாமறிந்த எண்குணத்தார் அரியென்னும் அறிஞர் 

எல்லாமே தெரிந்துள்ளார்,எங்கெங்கோ உள்ளார்,
   இதுவேதான் முதற்குணமாய் எண்ணிடுவோம் இங்கே!
வல்லாரை நினைத்திட்டே வேண்டுவன கேட்டால்
   வந்திடுவார் உதவிடவே ஆண்டான்போல் அங்கே!
எல்லோரும் இதையேதான் குணமிரண்டாய்க் கொள்வோம்!
   எழிலாக எழுதுவதே குணமூன்றாம் என்போம்!
நல்லாராம் இவர்புகழை இணையமெல்லாம்  சொல்லும்,
   நான்காகும் இதுவன்றோ என்றென்றும் நில்லும்!

உண்மையையே பேசிடுவார் உலகத்தில் என்றும்,
    உயர்ந்தகுணம் ஐந்தாகும் இதுவுலகை வெல்லும்!
எண்ணிலாத கட்டுரைகள் எழுதியுளம் கொள்வார்,
    இதைஆறாய்க் கொண்டிடுவோம் என்றறிந்தோர் சொல்வார்!
மண்ணுலகில் கம்பனையும் பாரதியையும் மற்றும்
    வள்ளுவரின் வாக்கினையும் நன்குணர்ந்த நண்பர்,
தண்டமிழர் இதைக்கொண்டால் ஏழாவது பண்பாய்,
    தளராத நெஞ்சமதே  எட்டாகு மன்றோ!

சிவ சூரியநாராயணன்.

பி.கு: தம்பி நிரஞ்சன் பாரதி, உங்கள் இழையில் இதைப் பொறுத்துக் கொள்க-சிவசூரி.

2012/6/26 இராம்குமார் முகவை <mugav...@gmail.com>

Balasubramanian N.

unread,
Jun 26, 2012, 6:53:11 AM6/26/12
to santhav...@googlegroups.com

விடை பரமேசுவரன்.

  அத்தாரிட்டி, நானல்ல, காளிதாஸன்.

அவனுக்கு அத்தாரிட்டி வேதவுபநிடதங்கள்.

nbalu 

या सृष्टि: स्रष्टुराद्या, वहति विधिहुतं या हविर्, या च हॊत्री,
1                                                  2           3

ये द्वे कालं विधत्तः, श्रुतिविषयगुणा या स्थिता व्याप्य विश्वम्। 4,5                                                                                       6                  

यामाहु: सर्वभूतप्रकृतिरिति, यय़ा प्राणिनः प्राणवन्त:
7                                     8
 
प्रत्यक्षाभि:प्रपन्नस्तनुभिरवतु वस्ताभिरष्टाभिरीश:
                                                      -------- 
 
2012/6/26 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>

Hari Krishnan

unread,
Jun 26, 2012, 7:04:43 AM6/26/12
to santhav...@googlegroups.com
2012/6/26 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
தண்டமிழர் இதைக்கொண்டால் ஏழாவது பண்பாய்,

    தளராத நெஞ்சமதே  எட்டாகு மன்றோ!

இதற்குச் சற்றும் தகுதியற்றவன்; எனக்குப் பொருந்தாத பாராட்டு.  ஆனால், கவிதை நன்றாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். :)

Hari Krishnan

unread,
Jun 26, 2012, 7:15:02 AM6/26/12
to santhav...@googlegroups.com

2012/6/26 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

விடை பரமேசுவரன்.

இப்ப கேள்வியே பரமேஸ்வரன்னா யாருன்றதுதான்.

பரம ஈஸ்வரன் என்ற பெயருக்கு விஷ்ணு உரியவர் இல்லையா?  முருகன்?  அப்படியானால் பரமேஸ்வரி? 

போகட்டும்.  பெருமாள் என்றால் விஷ்ணுனுதானே அர்த்தம்?  திருப்புகழில் 95 சதம் பெருமாளே அப்படின்னு முருகனைச் சொல்லி முடியுதே!

ஒங்களுக்கு ஏதோ ஒரு பரமேஸ்வரனுக்கு இல்ல பரமேஸ்வரிக்கு எட்டு குணங்களுக்கான அத்தாரிட்டி இருக்குன்னே வச்சுப்போம்.  புத்தருக்கு எட்டு குணங்கள்; அருகனுக்கு எட்டு குணங்கள் என்றெல்லாம் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்.  நாத்திகர்களோ, அதுக்குமேல உட்டாலக்கடி வேலையெல்லாம் செய்யறாங்க.

எதை மறுக்க முடியாததாக வைத்துக் கொள்வது?  வள்ளுவனுக்கு வள்ளுவனே அகராதி.  தீந்தது ஐ நா பிரச்சினை!

Hari Krishnan

unread,
Jun 26, 2012, 8:53:40 AM6/26/12
to santhav...@googlegroups.com

2012/6/26 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

விடை பரமேசுவரன்.

  அத்தாரிட்டி, நானல்ல, காளிதாஸன்.

அவனுக்கு அத்தாரிட்டி வேதவுபநிடதங்கள்.

nbalu 

புலவர் குடந்தையானுடைய பகுத்தறிவு உரையை இணைத்திருக்கிறேன்.  திரு கி வீரமணி அவர்களுடைய முன்னுரையுடன் வெளிவந்திருக்கும் உரை இது.  (அண்ணர் குடந்தையாரும் நங்கநல்லூர்தான்.  வெளிவந்தப்பவே எனக்கு ஒரு பிரதியுபகாகரம் (அதான், பிரதி+உபகாரம்) பண்ணிட்டார்.  2001ம் வருஷம். 

எண்குணத்தானுக்குப் பகுத்தறிவு விளக்கத்தைப் பார்க்கவும்.  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விளக்கம்; ஒவ்வொரு அத்தாரிட்டி.

எங்க... நம்ம வாத்தியார் விளக்கத்தை கவுத்துப் போட ஸொல்ங்க பாப்பம்... குடந்தையான் உட்பட யாராலும் ஆகாத ஒண்ணு. :)))
img062.jpg

Siva Siva

unread,
Jun 26, 2012, 9:03:41 AM6/26/12
to santhav...@googlegroups.com
இணைப்பை மேலோட்டமாகப் பார்த்ததில் கண்ணில் பட்டது:

"கடவுள் அல்ல"

அல்ல ? அன்று?

இத்தகைய 'ஆராய்ச்சி' உரைகளில் இலக்கணம் தேவையற்றதே!

2012/6/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Jun 26, 2012, 9:17:32 AM6/26/12
to santhav...@googlegroups.com

2012/6/26 Siva Siva <naya...@gmail.com>

"கடவுள் அல்ல"

அல்ல ? அன்று?

இத்தகைய 'ஆராய்ச்சி' உரைகளில் இலக்கணம் தேவையற்றதே!

அட நீங்க வேற!  நாத்திகத்தை வள்ளுவர் தலைல ஏத்தறதுக்குள்ள தாவு தீந்து போவுதாம்... இதுல அல்ல-அன்று பேதம் வேறயா?

உறங்குவது போலும்சாக் காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

கண்ணுக்குத் தெரிந்து முதலில் நிகழ்வது பிறப்பு, அடுத்து நிகழ்வது இறப்பு.  நேற்றிரவு ஹரி கிருஷ்ணனாக உறங்கப் போன நான், இன்று காலை ஹரி கிருஷ்ணனாக விழித்தெழுந்தேன்.  சாவில் ஹரி கிருஷ்ணனாகச் சாகும் நான் யாராக அல்லது என்னவாக விழிப்பேன் என்று அவரையும் மேடையில் வைத்துக்கொண்டேதான் கேட்டேன்.  ம்க்கும்.

போங்காட்டம் யாராடினாலும் கேக்கத்தான் கேப்பமாக்கும்.  நங்கநல்லூராகட்டும் நாச.... அய்யிய்யோ...ஜூட்டேய்!

N. Ganesan

unread,
Jun 26, 2012, 9:30:20 AM6/26/12
to சந்தவசந்தம், tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com

On Jun 25, 8:22 pm, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:

> எல்லார்க்கும் காலை வணக்கம்,
>
> "கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
> தாளை வணங்காத் தலை"
>
> இந்த குறளில் எண் குணத்தான் என்பது யார் ? எட்டு வகை குணங்களை உடையவனா ?
>

தமிழ் இலக்கியங்களில் அருகப்பெருமானின் புகழாக எண்குணத்தான்
என்று பல நூற்றாண்டுகளாக வருகிறது.

படித்துப் பார்க்கவும்.
http://banukumar_r.blogspot.com/2011/07/blog-post.html

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jun 26, 2012, 9:32:24 AM6/26/12
to santhav...@googlegroups.com, tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com

2012/6/26 N. Ganesan <naa.g...@gmail.com>

தமிழ் இலக்கியங்களில் அருகப்பெருமானின் புகழாக எண்குணத்தான்
என்று பல நூற்றாண்டுகளாக வருகிறது.

படித்துப் பார்க்கவும்.

பாலு சார்!   வந்தாச்சேய்!  நீங்கள்ளாம் படிச்சு என்ன பிரயோஜனம்?  படிச்சா இப்படி இல்ல படிக்கணும்!

N. Ganesan

unread,
Jun 26, 2012, 9:35:35 AM6/26/12
to சந்தவசந்தம், tiruva...@googlegroups.com

On Jun 26, 3:53 am, "Balasubramanian N." <n.balasubraman...@gmail.com>
wrote:

> விடை பரமேசுவரன்.
>
>   அத்தாரிட்டி, நானல்ல, காளிதாஸன்.
>
> அவனுக்கு அத்தாரிட்டி வேதவுபநிடதங்கள்.
>
> nbalu
>
> या सृष्टि: स्रष्टुराद्या, वहति विधिहुतं या हविर्, या च हॊत्री,
> 1                                                  2           3
>
> ये द्वे कालं विधत्तः, श्रुतिविषयगुणा या स्थिता व्याप्य विश्वम्। 4,5
>    6
>

> यामाहु: सर्वभूतप्रकृतिरिति, यय़ा प्राणिनः प्राणवन्त:

> 7                                     8
>
> प्रत्यक्षाभि:प्रपन्नस्तनुभिरवतु वस्ताभिरष्टाभिरीश:॥
>                                                       --------
>

தமிழில் பன்னெடுங்காலமாக எண்குணன் யார்
என்று விளக்கியுள்ளனர்.

Siva Siva

unread,
Jun 26, 2012, 10:39:20 AM6/26/12
to santhav...@googlegroups.com

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60980&padhi=098&startLimit=10&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

'நாம் ஆர்க்கும் குடி அல்லோம்' என்று ஆரம்பிக்கும் பதிகத்தில் ஒரு பாடல்:

அப்பர் தேவாரம் - 6.98.10
நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
    நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்
    அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
    சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்
    குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60160&padhi=016&startLimit=4&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

அப்பர் தேவாரம் - 6.16.4
திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்
    திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
    வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
    பரங்குன்றம் மேய பரமர் போலும்
எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 26, 2012, 10:52:17 AM6/26/12
to santhav...@googlegroups.com
கி.வா.ஜ. வின் ’திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பி’லிருந்து இக்குறளுக்கான பக்கங்களை இணைத்துள்ளேன்.

1. பொறியிற் குணமிலவே என்பதைப் பொதுவான இலக்கணப்படி பொறியில்+ குணமிலவே என்னாமல் பொறியின் குணமிலவே என்று பரிமேலழகர் பிரித்திருப்பதைப் பார்க்கவும். இதுபோலவே முன்பு (குறள் 550) கொலையிற் கொடியாரை என்பதும் பிரிந்ததைப் பார்த்தோம். இப்படிப் பிரிப்பதன் இலக்கண அடிப்படை என்னவென்று தெரியவில்லை.

2. நிரஞ்சன்  சுட்டிய 8 குணங்களும் பரிமேலழகர் தந்ததன் ஆங்கில மொழிபெயர்ப்பு. குடந்தையார் உரையிலும் இவையே காணப்படுகின்றன என்பதால் பரிமேலழகர் பகுத்தறிவாளர் என்பது வெள்ளிடை மலையெனத் தெள்ளிதின் தெளிவுறாஅநிற்கு மன்றே?

3. காளிங்கர் உரையில் எண் குணத்தான் எண்ணப்ப்பட்ட குணங்களை உடையவன் என்று பொருள் கொள்வதைக் காணவும்.

4. எண்குணத்தான் என்னும் கருத்தைக் கையாளும் பிற நூல்கள் பற்றிய குறிப்புகளையும் பார்க்கவும்.

5. இணைய இடுகைகளைப் பார்க்கும்போது மனிதன் எண்ணாயிரம் குணம் கொண்டவனாக இறைவனையும் தோற்கடிக்கும் சக்தி வாய்ந்தவன் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென உணரத் தக்க உண்மை!

அனந்த்
26-6-2012  

2012/6/26 Hari Krishnan <hari.har...@gmail.com>
-

I.K

unread,
Jun 26, 2012, 10:54:01 AM6/26/12
to vall...@googlegroups.com, சந்தவசந்தம்

அய்யோ அம்மா.... இந்த மேட்டரை ரெண்டாயிரத்து நாலுல இருந்து  அகத்தியர் குழுமம் முதற்கொண்டு கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு. புளிப்போட்டு விளக்கி விளக்கிச் சொன்னவங்க எல்லாம் ஓய்ஞ்சு உக்காந்துட்டாங்க போல. காதுல லைட்டா ரத்தம் வரும் போல. #அழுதுடுவேன்.

Hari Krishnan

unread,
Jun 26, 2012, 10:57:52 AM6/26/12
to vall...@googlegroups.com, சந்தவசந்தம்

2012/6/26 I.K <jee...@gmail.com>

அய்யோ அம்மா.... இந்த மேட்டரை ரெண்டாயிரத்து நாலுல இருந்து  அகத்தியர் குழுமம் முதற்கொண்டு கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு. புளிப்போட்டு விளக்கி விளக்கிச் சொன்னவங்க எல்லாம் ஓய்ஞ்சு உக்காந்துட்டாங்க போல. காதுல லைட்டா ரத்தம் வரும் போல. #அழுதுடுவேன்.

ஆனா லிங்க்காத லிங்க்கி லிங்க்கி தோயுதே..... அது தேயுதா?  ஜருகண்டி...ஜருகு ஜருகு.... பேஸ்ட்டண்டி...  காப்பி சேஸி பேஸ்ட்டண்டேஏய்!

Siva Siva

unread,
Jun 26, 2012, 10:59:00 AM6/26/12
to santhav...@googlegroups.com
/5. இணைய இடுகைகளைப் பார்க்கும்போது மனிதன் எண்ணாயிரம் குணம் கொண்டவனாக இறைவனையும் தோற்கடிக்கும் சக்தி வாய்ந்தவன் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென உணரத் தக்க உண்மை!  /

That is insight!

2012/6/26 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Jun 26, 2012, 11:02:51 AM6/26/12
to vall...@googlegroups.com, சந்தவசந்தம்
”மதியூகியாம் மந்திரியின் பேச்சைக் கேட்ட விக்கிரமாதித்தன் இளநகை கொண்டவனாய்ச் சற்றும் அசராது மரத்தின் மீதிருக்கும் வேதாளத்தை இறக்கிக் கீழே கொண்டுவரப் புறப்பட்டுச் சென்றான். 

விக்கிரமாதித்த மன்னனின் பிடியில் சிக்கிய வேதாளம் அவன் முதுகில் தொங்கியபடியே பெரிதாகச் சிரித்தது. 

காரணம் என்ன என்று கேட்டான். வேதாளம் இந்த ப்ரச்சனைக்கு விடைகண்டால் உமக்குப் புதையல் கிடைக்கும். இதற்குப் பதில் சொல்லாவிட்டால் உமது..... 
.............................................. 
.................................... ”

ஐயோ சாரி. வேதாளக் கதைகள் படித்த நினைவு ஏதோ எழுதிவிட்டேன். 

ஆமாம் இங்க என்ன டிஸ்கஸ் பண்ணப் போறீங்க ? 

*** 

2012/6/26 I.K <jee...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 26, 2012, 11:05:42 AM6/26/12
to vall...@googlegroups.com, சந்தவசந்தம்
வெண்ணிலா கபடிக் குழுன்னு ஒரு படம் அதுல.

" மொத்தம் 48 பரோட்டாத்தான் சாப்பிட்ட நீயி... வேணும்னா கோடு எண்ணிப் பாத்துக்கோ "
" நீ கள்ளாட்டம் ஆடற. மொத்தக் கோட்டையும் அழி. டேய் தம்பி நீ போய் கோடு போடுறா. சப்ளையர் நீ மறுபடி மொதல்ல இருந்து பரோட்டா போடு.... "

வேற படத்துல வடிவேலு :

அவ்வ்வ்.... என்னாது மறுபடியும் மொதல்ல இருந்தா ?

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/6/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Hari Krishnan

unread,
Jun 26, 2012, 11:06:49 AM6/26/12
to vall...@googlegroups.com, சந்தவசந்தம்
2012/6/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஐயோ சாரி. வேதாளக் கதைகள் படித்த நினைவு ஏதோ எழுதிவிட்டேன். 

ஆமாம் இங்க என்ன டிஸ்கஸ் பண்ணப் போறீங்க ? 

இருக்கட்டும் பரவால்ல... எத்தனை முருங்கக்கா பறிச்சீங்க?  பிரமசாரிக்கு எதுக்கு முருங்கக்கா?  அனுமாருக்கு முருங்கக்கா மாலை சாத்தினா வேதாளம் புளியமரத்துக்குப் போயிருமாம்.

தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி....பதிப்பு உரை வேணுமா?  தலகாணி ஒற?  சீஃப் எடிட்டர் யாரு தெரிமா?

Mohanarangan V Srirangam

unread,
Jun 26, 2012, 11:13:55 AM6/26/12
to vall...@googlegroups.com, சந்தவசந்தம்

2012/6/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

2012/6/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஐயோ சாரி. வேதாளக் கதைகள் படித்த நினைவு ஏதோ எழுதிவிட்டேன். 

ஆமாம் இங்க என்ன டிஸ்கஸ் பண்ணப் போறீங்க ? 

இருக்கட்டும் பரவால்ல... எத்தனை முருங்கக்கா பறிச்சீங்க?  பிரமசாரிக்கு எதுக்கு முருங்கக்கா?  அனுமாருக்கு முருங்கக்கா மாலை சாத்தினா வேதாளம் புளியமரத்துக்குப் போயிருமாம். 

முருங்கைக்காய்க்கு ஏன் முருங்கை என்று பெயர் வந்தது என்பதை மன்பதை வாழும் நாநில மருங்கில் எருமையூர் வதியும் வாத்யார் சொல்லல் கடன். 
:-)

தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி....பதிப்பு உரை வேணுமா?  தலகாணி ஒற?  சீஃப் எடிட்டர் யாரு தெரிமா?

--
அன்புடன்,
ஹரிகி.

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Hari Krishnan

unread,
Jun 26, 2012, 11:16:25 AM6/26/12
to vall...@googlegroups.com, சந்தவசந்தம்
2012/6/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
முருங்கைக்காய்க்கு ஏன் முருங்கை என்று பெயர் வந்தது என்பதை மன்பதை வாழும் நாநில மருங்கில் எருமையூர் வதியும் வாத்யார் சொல்லல் கடன். 

பழைய சமண உரையில் இருக்கிறது.  பார்க்கஉம்.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 26, 2012, 11:17:41 AM6/26/12
to vall...@googlegroups.com, சந்தவசந்தம்
http://sivathamiloan.blogspot.in/2009/11/blog-post.html

//

அந்நிய பண்பாட்டுச் சொற்கள் ஏராளமாக இன்று தமிழுக்குள் வாழுவது கண்கூடு. பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு! சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.

திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை. எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது. நக்கீரர்,ஔவையார்,இடைக்காடர் எனப் பல சைவப் புலவர்களால் போற்றி புகழப்பட்ட நூலே திருக்குறள். சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.

அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் கோட்பாட்டில் முதல் மூன்றையும் விளக்கியுள்ளார் வள்ளுவர், எல்லா சமண நூல்களும் காமத்தை துறந்து துறவை நாடுவதில் முடிகின்றன.திருக்குறள் காமத்துப்பாலுடன் அல்லவா முடிகின்றது! வீடு பேற்றை விளக்கினால் சமய பொதுத்தன்மைக்கு இடைஞ்சல் ஆகிவிடும் என கருதியிருக்க வாய்ப்புண்டு.ஆனால் சைவ சித்தாந்தக் கருத்துகளை தவிர்க்காமல் எழுதமுடியவில்லை. சைவத்தை திணிக்கும் எண்ணம் சைவரிடம் இருந்ததில்லை. இதனாலேயே இந்தோனேசியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் சைவம் தழைக்கவில்லை. பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.

//

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

DEV RAJ

unread,
Jun 26, 2012, 1:31:25 PM6/26/12
to vall...@googlegroups.com, சந்தவசந்தம்
                                  *எண் குணத்தான்*

    ॥ य आत्मा अपहतपाप्मा विजरो विमृत्यु: विशोको विजिघत्सोSपिपासःसत्यकामः सत्यसङ्कल्पः ॥

பிரபல இண்டாலஜிஸ்டான ஐயா அவர்களுக்கு இந்தப்
பிரபலமான வாக்கியம் எதிலிருந்து எடுத்தது,
சொல்லப்படும் எண்ணிக்கை என்ன,
பொருள் என்ன என்பதெல்லாம் தெரியாமல் இருக்காது
என்று நம்புகிறேன்.

தெரியாவிட்டால் சுற்றுக்கு அனுப்பியோ,
timesoftamilnadu.blogspot.in ல்
பதிவிட்டோ பொருள் தெரிந்து கொள்ளலாம்.

வேத - இதிஹாஸ - புராணங்கள் எல்லாம்
சமணத்திலிருந்து பிறந்தவை என்பதைச்
துறை தெரிந்த சமணர்களே
ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

தேவ்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 26, 2012, 1:43:21 PM6/26/12
to vall...@googlegroups.com, சந்தவசந்தம்

இது எந்த ஊனிவர்சிடில புடிச்சீங்க ?

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/6/26 DEV RAJ <rde...@gmail.com>

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

N. Ganesan

unread,
Jun 26, 2012, 3:38:31 PM6/26/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com
திரு. நிரஞ்சன்,

தமிழின் ஆதி அமைப்புற்ற காலத்தில் சமணரின் பங்கு 40 ஆண்டுகளுக்கு முன்
தெரிந்ததைவிட இப்பொழுது கல்வெட்டுக்களால் விளங்கிவருகிறது.

தன்யகுமாரின் இப் புத்தகக் கட்டுரை, எண்குணத்தான் பற்றி விரிவாகப்
பேசுகிறது.
http://books.dinamalar.com/details.asp?id=157

http://www.moderntamilworld.com/anmigam/samanamvalluvam.asp

Also, pl. read my essay on Tiruvalluvar TirunaaL published in
Vadakkuvaasal, Delhi, last month:
http://groups.google.com/group/thamizhvaasal/msg/45ed5aa429eb45d0

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jun 26, 2012, 11:47:57 PM6/26/12
to santhav...@googlegroups.com, vall...@googlegroups.com

2012/6/26 DEV RAJ <rde...@gmail.com>

வேத - இதிஹாஸ - புராணங்கள் எல்லாம்
சமணத்திலிருந்து பிறந்தவை என்பதைச்
துறை தெரிந்த சமணர்களே
ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

எல்லாம் பழைய சமண உரையைப் படிக்காதவங்க.

(பழைய சமண உரை எங்க கெடைக்கும்னா கேக்கறீங்க?  ஒரே ஒரு காப்பிதான் இருக்கு.  நாசால.  அசௌகரியமா இருக்கும்போதெல்லாம் பழைய சமணஉரை   ஒருவேளை மைலாப்பூர் லஸ் கார்னர் நம்மாழ்வார் கடைல கெடைச்சாலும் கெடைக்கலாம்.  விக்கிரமாதித்தனை மாதிரி வேதாள வேட்டைக்குப் பொறப்படுங்க... இப்படியாவது வேதாளத்தப் பிடிச்சு ஜாடியில அடைக்கலாமானு பாக்கலாம்.)

devoo

unread,
Jun 27, 2012, 1:45:10 AM6/27/12
to santhav...@googlegroups.com
சமண அன்பர்கள் ஜைந ரீதியாக விளக்கம்
தந்திருப்பதைப்போலவே நமது
தரப்பிலும் விரிவாகப் பேசப்பட்டது;
வள்ளுவம் எந்த ஆதாரத்துடன் பொருந்துகிறது
என்று பார்ப்பதே முக்கியம்.

ஐந்தவித்தான் - ”மஹர்ஷி:”
’நான் இண்டாலஜிஸ்ட்’ என்று
பெருமிதம் கொள்வோர் யாராயினும்
இச்சொல் இடம் பெறும் இடங்களை
மேலும் கூர்ந்து ஆராயலாம்.

திருவள்ளுவர் தம் கருத்தை நிறுவதற்குக்
கையாளும் அந்வய - வ்யதிரேக  முறை,
நாணம், நிலம் இவற்றைப் பெண்
பாலில் சொல்லியிருப்பது,
’சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி’,
‘மற்றீண்டு வாரா நெறி’ போன்ற
தொடர்களின் அமைப்பு, மறைக்கு
அவர் தரும் முதன்மை, ‘அவியுணவின்
ஆன்றோர்’ ,’தென்புலத்தார்’,
இவற்றில் பொதிந்துள்ள மறை வழக்கம்
ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது
நடுநிலைமையானது.

வள்ளுவம் சொல்லும் இறைமை என்ன ?
சமணத்தின் இறைமை எத்தகையது ?
இவற்றை நன்கு அறிந்து கொண்டால்
குழப்பம் இல்லை.

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்"

இக்குறளுக்கும் ‘திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே என்னும்’ எனும்
திருவாய் மொழிக்கும் தொடர்பிருப்பதைக்
காணலாம். ஐசுவரியமும், காக்கும் திறமையும்
இறைவனுக்கும், மன்னர்களுக்கும் பொதுத்தன்மை.

சமணத்தில் இறைமைக்கும் காக்கும்
தொழிலுக்கும் தொடர்பில்லை -

Jainism does not believe in God as a creator, survivor,
and destroyer of the universe.

However Jainism does believe in God, not as a creator,
but as a perfect being. When a person destroys all his karmas,
he becomes a liberated soul. He lives in a perfect
blissful state in Moksha forever.

http://www.jainuniversity.org/jainism_god.aspx

மழை பொழிந்து, பயிர் பச்சைகள் செழித்து
உலக மாந்தர் வாழ்வாங்கு வாழ்வதற்கு
மறை பிரார்த்திக்கிறது -

”நிகாமே நிகாமே ந​: பர்ஜந்யோ வர்ஷது
 ப²லவத்யோ ந ஓஷத⁴ய​: பச்யந்தாம்‌
 யோக³க்ஷேமோ ந​: கல்பதாம்‌”

”அந்நம் பஹு குர்வீத” (உணவுப் பண்டங்களை
மிகுதியாக்குங்கள்) - இது மாந்தருக்கு மறை விதிக்கும்
கட்டளை.

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்
மும்மாரி பெய்வதற்கும், செந்நெல்
மலிந்து விளைவதற்கும், நிலவுலகு
நீங்காத செல்வத்தைப் பெறுவதற்கும்
நாச்சியார் பிரார்த்திக்கிறார்.

‘வீழ்க தண்புனல்’என வாழ்த்துவர் மேலோர்.

வான் சிறப்புக்கும், உழு தொழிலுக்கும்
வள்ளுவமும் முதன்மை தருகிறது

தேவ்

N. Ganesan

unread,
Jun 27, 2012, 2:54:55 AM6/27/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com

On Jun 26, 7:39 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idFie...

>
> 'நாம் ஆர்க்கும் குடி அல்லோம்' என்று ஆரம்பிக்கும் பதிகத்தில் ஒரு பாடல்:
>
> அப்பர் தேவாரம் - 6.98.10
> நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
>     நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
> ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்
>     அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
> தேவாதி தேவன் சிவனென் சிந்தை
>     சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
> கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்
>     குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே.
>

> http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idFie...

>
> அப்பர் தேவாரம் - 6.16.4
> திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்
>     திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
> விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
>     வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
> பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
>     பரங்குன்றம் மேய பரமர் போலும்
> எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
>     இடைமருது மேவிய ஈச னாரே.

இரண்டு பாடல்களும் சமணரை தன் நண்பர் சம்பந்தர் வென்றபின் பாடியதுபோலும்.
எண்குன்றம் பரங்குன்றம் அருகே. எண்ணாயிரவர் கழுவேற்றம்.

எண்குணம் என்றால் என்ன? என யார் முதலில் பட்டியல் தருகின்றனர்?
எத்தனை நூற்றாண்டுகளாய்? எனப் பார்த்தல் அவசியம்.

நா. கணேசன்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 27, 2012, 2:56:28 AM6/27/12
to vall...@googlegroups.com, சந்தவசந்தம், tiruva...@googlegroups.com
//எண்ணாயிரவர் கழுவேற்றம்.//

இதுக்கு மேலும் விவரங்கள் சொல்ல முடியுமா ? யூனிவர்சிடி ரிசர்ச் லெவல் ஆதாரங்களுடன் கூடிய  பதில் கிடைத்தால் மகிழ்வேன்.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/6/27 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Jun 27, 2012, 3:13:21 AM6/27/12
to santhav...@googlegroups.com

2012/6/26 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

//எண்ணாயிரவர் கழுவேற்றம்.//

இதுக்கு மேலும் விவரங்கள் சொல்ல முடியுமா ? யூனிவர்சிடி ரிசர்ச் லெவல் ஆதாரங்களுடன் கூடிய  பதில் கிடைத்தால் மகிழ்வேன்.

நீங்கள் யுனிவெர்ஸிட்டி ரிஸர்ச்சில் இருக்கிறீர்களா? அங்கே கிடைக்கும்.

நா. கணேசன்
 
Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/6/27 N. Ganesan <naa.g...@gmail.com>

எண்ணாயிரவர் கழுவேற்றம்.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
Lalitha & Suryanarayanan

unread,
Jun 27, 2012, 5:06:15 AM6/27/12
to santhav...@googlegroups.com
ஆனால், கவிதை நன்றாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். :)

அன்புடன்,
ஹரிகி.

எண் குணத்தார் யாரே ஆயினும் ஆகுக, எனக்கு  வசிஷ்டர் வாயால் அன்றோ பிரம்ம ரிஷி என்னும் பட்டம் கிடைத்துள்ளது! நன்றி.

சிவசூரி.

2012/6/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

2012/6/26 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
தண்டமிழர் இதைக்கொண்டால் ஏழாவது பண்பாய்,
    தளராத நெஞ்சமதே  எட்டாகு மன்றோ!

இதற்குச் சற்றும் தகுதியற்றவன்; எனக்குப் பொருந்தாத பாராட்டு.  ஆனால், கவிதை நன்றாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். :)

Balasubramanian N.

unread,
Jun 27, 2012, 11:45:58 AM6/27/12
to santhav...@googlegroups.com

காளிதாஸன் வர்ணித்த எண்குணத்தான்
சிவன்/பார்வதி/பெருமாள்/்ரீதேவி/பூதேவி/மூதேவி/மூத்தபிள்ளை/இளையபிள்ளை/
காத்தவராயன்/சுடலைமுத்து/மாரியம்மன் /அருகன்/அன்ன பிற எல்லாப்
புழங்கு சாமிகளுக்கும் அப்பாற்பட்ட
பர-தத்துவார்த்த பரப்ரஹ்ம பரமே்வரன்

2012/6/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

2012/6/26 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

விடை பரமேசுவரன்.

இப்ப கேள்வியே பரமேஸ்வரன்னா யாருன்றதுதான்.

பரம ஈஸ்வரன் என்ற பெயருக்கு விஷ்ணு உரியவர் இல்லையா?  முருகன்?  அப்படியானால் பரமேஸ்வரி? 

போகட்டும்.  பெருமாள் என்றால் விஷ்ணுனுதானே அர்த்தம்?  திருப்புகழில் 95 சதம் பெருமாளே அப்படின்னு முருகனைச் சொல்லி முடியுதே!

ஒங்களுக்கு ஏதோ ஒரு பரமேஸ்வரனுக்கு இல்ல பரமேஸ்வரிக்கு எட்டு குணங்களுக்கான அத்தாரிட்டி இருக்குன்னே வச்சுப்போம்.  புத்தருக்கு எட்டு குணங்கள்; அருகனுக்கு எட்டு குணங்கள் என்றெல்லாம் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்.  நாத்திகர்களோ, அதுக்குமேல உட்டாலக்கடி வேலையெல்லாம் செய்யறாங்க.

எதை மறுக்க முடியாததாக வைத்துக் கொள்வது?  வள்ளுவனுக்கு வள்ளுவனே அகராதி.  தீந்தது ஐ நா பிரச்சினை!

--
அன்புடன்,
ஹரிகி.

--

Narayan Swaminathan

unread,
Jun 27, 2012, 8:07:29 PM6/27/12
to santhav...@googlegroups.com
பாலுசார்:

வணக்கம்.

தயவு செய்து ஸம்ஸ்கிருத ஸ்லோகத்தை தமிழ் எழுத்தில் போட்டு, பொருளும் சொல்லுங்கள்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

2012/6/26 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

விடை பரமேசுவரன்.

  அத்தாரிட்டி, நானல்ல, காளிதாஸன்.

அவனுக்கு அத்தாரிட்டி வேதவுபநிடதங்கள்.

nbalu 

या सृष्टि: स्रष्टुराद्या, वहति विधिहुतं या हविर्, या च हॊत्री,
1                                                  2           3

ये द्वे कालं विधत्तः, श्रुतिविषयगुणा या स्थिता व्याप्य विश्वम्। 4,5                                                                                       6                  

यामाहु: सर्वभूतप्रकृतिरिति, यय़ा प्राणिनः प्राणवन्त:
7                                     8
 
प्रत्यक्षाभि:प्रपन्नस्तनुभिरवतु वस्ताभिरष्टाभिरीश:
                                                      -------- 
 
2012/6/26 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
நாமறிந்த எண்குணத்தார் அரியென்னும் அறிஞர் 

எல்லாமே தெரிந்துள்ளார்,எங்கெங்கோ உள்ளார்,
   இதுவேதான் முதற்குணமாய் எண்ணிடுவோம் இங்கே!
வல்லாரை நினைத்திட்டே வேண்டுவன கேட்டால்
   வந்திடுவார் உதவிடவே ஆண்டான்போல் அங்கே!
எல்லோரும் இதையேதான் குணமிரண்டாய்க் கொள்வோம்!
   எழிலாக எழுதுவதே குணமூன்றாம் என்போம்!
நல்லாராம் இவர்புகழை இணையமெல்லாம்  சொல்லும்,
   நான்காகும் இதுவன்றோ என்றென்றும் நில்லும்!

உண்மையையே பேசிடுவார் உலகத்தில் என்றும்,
    உயர்ந்தகுணம் ஐந்தாகும் இதுவுலகை வெல்லும்!
எண்ணிலாத கட்டுரைகள் எழுதியுளம் கொள்வார்,
    இதைஆறாய்க் கொண்டிடுவோம் என்றறிந்தோர் சொல்வார்!
மண்ணுலகில் கம்பனையும் பாரதியையும் மற்றும்
    வள்ளுவரின் வாக்கினையும் நன்குணர்ந்த நண்பர்,

தண்டமிழர் இதைக்கொண்டால் ஏழாவது பண்பாய்,
    தளராத நெஞ்சமதே  எட்டாகு மன்றோ!

சிவ சூரியநாராயணன்.

பி.கு: தம்பி நிரஞ்சன் பாரதி, உங்கள் இழையில் இதைப் பொறுத்துக் கொள்க-சிவசூரி.

2012/6/26 இராம்குமார் முகவை <mugav...@gmail.com>
அருமையான விளக்கம். பகிர்ந்தமைக்கு நன்றி.

2012/6/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்: இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில், santhavasanth...@googlegroups.com. இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்: http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Pas Pasupathy

unread,
Jun 27, 2012, 8:43:16 PM6/27/12
to santhav...@googlegroups.com
Dear Swami, 

The Skt verse by Kalidasa occurs as Benediction to "Sakunthala:.

Try 

you may see the English transliteration  as well as a translation there 

Hope that helps.

Pasupathy 

2012/6/27 Narayan Swaminathan <swaminath...@gmail.com>

devoo

unread,
Jun 28, 2012, 1:47:12 AM6/28/12
to santhav...@googlegroups.com
On Tuesday, June 26, 2012 11:54:55 PM UTC-7, N. Ganesan wrote:
>> எண்குணம் என்றால் என்ன? என யார் முதலில் பட்டியல் தருகின்றனர்?
எத்தனை நூற்றாண்டுகளாய்? எனப் பார்த்தல் அவசியம்  <<

ஆமாம், அவசியம் செய்யணும்.

அதுபோலவே ‘மன்னவன்’  சொல்லை யார் யாரெல்லாம்
முதலில் கையாண்டார்கள் ? என்ன பொருளில்
என்பதையும்  பார்க்க வேண்டும் . மன்னவன்
என்பது நீதியை வகுத்த பரத சக்கரவர்த்திகளுக்கே
உரிய சிறப்புப் பெயரா என்றும் இலக்கிய  ஆதாரத்தில்
உறுதி செய்து கொள்ள வேண்டும்.

’ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’ -
பொருள்காண வசதியாக .

யுனிவெர்ஸிடி லெவெல்ல
ரிஸெர்ச் பண்ணி ஆருனாச்சும்
சொல்லியிருப்பாங்க; பழைய
சமண உரைய யாரெல்லாம்,
எந்த யுனிவர்ஸிடில எல்லாம்
சொல்லிருக்காங்க, இதுவும்  ஐயாவுக்குக்
கட்டாயம் தெரிஞ்சிருக்கும்

தேவ்

Subbaier Ramasami

unread,
Jun 28, 2012, 8:26:18 AM6/28/12
to santhav...@googlegroups.com
நிரஞ்சன் பாரதிக்கு இப்பொழுது தெளிவுக்குப் பதிலாகக் குழப்பம் வந்திருக்கும்.

என்னைப் பொருத்தமட்டில் பேராசிரியர் நாகநந்தி அளித்துள்ள விளக்கமே சிறப்பாகப் படுகிறது. திருக்குறளோடு மட்டுமல்ல  வேறெந்தக் கொள்கையோடும் ஒத்துப்போகிறது.

இன்னும் குழப்ப வேண்டாம். விட்டுவிடுவோம்

இலந்தை

2012/6/28 devoo <rde...@gmail.com>
--

Balasubramanian N.

unread,
Jun 28, 2012, 1:09:30 PM6/28/12
to santhav...@googlegroups.com

எ(ல்)லே சாமி[அவர்களே!]

அது காளிதாசனின் சாகுந்தல நாடகத்தின் துவக்கச்சுலோகம்.

நாந்தி என நாடகவியலில் கூறப்படும் முதல் இறைவணக்கம்.

அதன் புரியும் லிபி [தமிழ், உரோமன்] வடிவத்தையும் பதவுரையையும் நான்

என் ஒற்றைவிரற்றட்டெழுத்தால் இங்கிடு முன்

உங்களுக்கு உங்களூர் நூலகத்திலேயே கிடைத்துவிடும்.

என்றாலும் நானும் நாளை பொழுதுவிடிந்தபின் எழுதுகிறேன்!

பாலு சார்   

2012/6/28 Narayan Swaminathan <swaminath...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 28, 2012, 1:44:05 PM6/28/12
to santhav...@googlegroups.com
இக்குறளில், பயனில என்ற பன்மை குறிப்பது எவற்றை? பரிமேலழகர் தலையை, தலைகள் என்று விரிக்கிறார். (கோளில்) பொறியின் தலைகள் குணமிலவே என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்ள வேண்டுமா?
(பொறியிற் குணமிலவே என்பது எப்படிப் பொறியின் குணமிலவே ஆயிற்று என்பதும் விளங்கவில்லை)

அனந்த்

பி.கு. எண்குணத்தான் பற்றி ஹரியின் ஆசிரியர் நாகநந்தி தந்த அருமையான விளக்கத்தை ஒட்டித் தமிழ்ப் பண்பாட்டுக் கையேட்டில் உள்ள  ’திருக்குறள்’  பகுதியில் காணும் உரை உள்ளது (”மேலே கூறியது போல எண்ணப்படும் அனைத்து நற்பெருங்குணங்களை உடைய இறைவனது தாளை வணங்காவிட்டால் அவை (பொறிகள்) பயனிலவாம்” 

2012/6/26 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

---

Sent via Epic Browser

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 28, 2012, 2:18:56 PM6/28/12
to santhav...@googlegroups.com
திருத்தம்: பயனில என்ற பன்மை - குணமில என்ற பன்மை

2012/6/28 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

devoo

unread,
Jun 28, 2012, 4:37:51 PM6/28/12
to santhav...@googlegroups.com
We can see these three forms of Siva, i.e. Sthūla, Sūksma and Parā in Kālidāsa’s works.
Among these the grossest form of Siva is depicted in benedictory verse of Abhijñānaśākuntala as:

या सृष्टिः स्रष्टुराद्या वहति विधिहुतं या हविर्या च होत्री
ये द्वे कालं विधत्तः श्रुतिविषयगुणा या स्थिता व्याप्य विश्वम्।
यामाहुः सर्वभूतप्रकृतिरिति यया प्रणिनः प्राणवन्तः
प्रत्यक्षाभिः प्रपन्नस्तनुभिरवतु वस्ताभिरष्टाभिरीशः।।

யா ஸ்ருʼஷ்டி​: ஸ்ரஷ்டுராத்³யா வஹதி விதி⁴ஹுதம் யா ஹவிர்யா ச ஹோத்ரீ
யே  த்³வே காலம்  வித⁴த்த​: ஶ்ருதிவிஷயகு³ணா யா ஸ்தி²தா  வ்யாப்ய விஶ்வம்|
யாமாஹு​:  ஸர்வபீ³ஜப்ரக்ருʼதிரிதி  யயா  ப்ராணிந​:  ப்ராணவந்த​:
ப்ரத்யக்ஷாபி⁴​: ப்ரபந்நஸ்தநுபி⁴ரவது வ​: தாபி⁴ரஷ்டாபி⁴ரீஶ​:||

In this verse, Śiva is praised in his Astamūrti form which consists of Pañca Bhūtas, sun, moon and Hōtr. It may be noted here that Kālidāsa seems to have used the term Hōtr, elsewhere also repeatedly. By doing so, Kālidāsa, in accordance with vedic tradition brings forth the theory that the inner structure of universe comes into existence as a consequence of rituals or sacrifices. In Rājasūya, there is a symbolic representation of rituals linking the world to the king, where he stands at the centre of the universe. It is upon the king, the natural, social and divine world begets a centre of sustenance and unified structure. In aesthetic experience, the poet is the sacrificing priest (Hōtr) who creates a structure of interrelationships among members of different categories of existence, so that the world emerges as a whole. Kālidāsa adroitly puts forth that the transformation of water, fire, ether, earth and air under the influence of sun, moon and sacrificer are essential for the evolution of the universe with a unified structure.

http://www.shripuram.org/index.php/shripuram-news/shripuram-messages/4-elements-of-aivism-in-klidsas-works-
2012/6/26 Balasubramanian N. <n.balasu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்: இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhavasantham@googlegroups.com இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில், santhavasantham-unsubscribe@googlegroups.com. இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்: http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Jun 29, 2012, 5:38:16 PM6/29/12
to santhav...@googlegroups.com
அன்பின் பசுபதி:

சுட்டிக்கு தந்தமைக்கு நன்றி.

சுவாமிநாதன்

2012/6/27 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Narayan Swaminathan

unread,
Jun 29, 2012, 5:42:14 PM6/29/12
to santhav...@googlegroups.com
அன்பின் தேவ்:

விளக்கத்துக்கு நன்றி.

சுவாமிநாதன்

2012/6/28 devoo <rde...@gmail.com>
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com

இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
Reply all
Reply to author
Forward
0 new messages