Re: வாட்ஸ்ஆப்பில் வந்தவுரு

1 view
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Jul 20, 2026, 7:12:57 AM (yesterday) Jul 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com




*ஸ்ரீ வெக்காளி அம்மன் துதி*

கனலாகிச் சுடுவெயிற்
காற்றுலர்த் திடுமுடன்
கார்முகில் நனைக்கு தம்மா!

காலமுந் தேசமுங்
கட்டுவெளி யும்புவனக்
கற்பிதந் துதிக்கு தம்மா!

அனலாக் கினிமதியும்
அட்டதிக் காவுமுன்
அடிபணிந் தேத்து தம்மா!

அருமறையும் ஆகமமும்
திருவிளக் கேற்றியருள்
அற்புதங் காட்டு தம்மா!

சனல்மாலை மந்திரமும்
சாக்தவழித் தந்திரமும்
சாமரம் வீசு தம்மா!

சகலவுயிர்க் கமுதருளும்
நகிலதனில் சிவஞானம்
சந்தனம் பூசு தம்மா!

எனைவாரி அணைப்பையோ
ஏற்பையோ கேட்கிறேன்
எனதுயிர் ஒளி விளக்கே!

மணல்வாரி நிறையுமருட்
புனல்வாரி உறையூரின்
மாதே! வெக்காளி உமையே!

(2)
சீட்டெழுதிக் கட்டியும்
சிரத்தைதலை குட்டியும்
சிரந்தரை பதிந் துன்னிடம்

சித்சுகமும் சத்பதமும்
சீர்மையருள் நன்மனமும்
சேரும் வரம் வேண்டினேன்!

கேட்டவரம் ஈட்டவழி
காட்டுமருட் காலடிகள்
ஊட்டும் அமுதாய்ப் பொழிவதாய்க்

கிரணமதி பரிதிவிண்
கீறுமொளித் தாரகைகள்
கிடந்துனது அடிபணி வதாய்க்

காட்டுமுன தருளுருவில்
நாட்டமிக வேஅடியார்
கூட்டமிகுந் திடும்-அதி லெதால்

கைகூடும் எனையுமொரு
கணக்கிலே எடுத்தருளுங்
கரிசனந் தரும்வலை யெதால்

மாட்டுமென் விண்ணப்பம்?
மகிமையுன் காருண்ய
மயவிழி முனைகள் அதிலே!

மணல்வாரி நிறையுமருட்
புனல்வாரி உறையூரின்
மாதே! வெக்காளி உமையே!

மீ. ரா
20-7-2026

image.png

Lalitha & Suryanarayanan

unread,
12:30 AM (13 hours ago) 12:30 AM
to santhav...@googlegroups.com
மிக அருமை!
சிவசூரி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/6A2C8065-178C-497E-8742-A7441935685E%40gmail.com.

Sai Ganesan H

unread,
12:32 AM (13 hours ago) 12:32 AM
to santhav...@googlegroups.com
மிகவும் அருமை! 

—சத்ய வேழன் H சாயி கணேசன்

Ram Ramakrishnan

unread,
9:05 AM (5 hours ago) 9:05 AM
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. மீ. ரா

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 21, 2026, at 00:30, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:



VETTAI ANANTHANARAYANAN

unread,
1:21 PM (23 minutes ago) 1:21 PM
to santhav...@googlegroups.com
பாடலும் சந்தமும் மிக அருமை.
>கனலாகிச் சுடுவெயிற்
காற்றுலர்த்  திடுமுடன்
கார்முகில் நனைக்கு தம்மா!  

அனந்த்

On Mon, Jul 20, 2026 at 4:12 AM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:




*ஸ்ரீ வெக்காளி அம்மன் துதி*

கனலாகிச் சுடுவெயிற்
காற்றுலர்த்  திடுமுடன்
கார்முகில் நனைக்கு தம்மா!

காலமுந் தேசமுங்
கட்டுவெளி  யும்புவனக்
கற்பிதந் துதிக்கு தம்மா!

அனலாக் கினிமதியும்
அட்டதிக் காவுமுன்
அடிபணிந் தேத்து தம்மா!

அருமறையும் ஆகமமும்
திருவிளக் கேற்றியருள்
அற்புதங் காட்டு தம்மா!



Reply all
Reply to author
Forward
0 new messages