குமுதம் இதழில் இருந்து இ.பா. அவர்களின்
‘கம்பன் ஏமாந்தான்’ கட்டுரையை இங்கே
தரமுடியுமா? நன்றி.
நா. கணேசன்
http://nganesan.blogspot.com
http://www.dinamani.com/edition/print.aspx?artid=214793
இந்த வாரம் கலாரசிகன்
சில வேளை சில கேள்விகள் சிந்திக்க வைக்கத்தான் செய்கின்றன. தவறு
நேர்ந்துவிட்டது என்பதை ஒத்துக்கொண்டு திருத்துவது என்பது, நான் பிடித்த
முயலுக்கு மூன்று கால்தான் என்று சாதிப்பதைவிடச் சிறந்ததாகத்தானே இருக்க
முடியும்?
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி "குமுதம்' வார இதழில், "கம்பன்
ஏமாந்தான்' என்கிற தலைப்பில் செம்மொழி மாநாடு பற்றி எழுப்பியிருக்கும்
குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. பன்னாட்டு அறிஞர்கள்
கூடும் ஒரு தமிழ் மாநாட்டில் கம்பனுக்கு இடமில்லாமல் போவது என்பது
நிலவில் களங்கம்போலக் கண்ணை உறுத்துகிறதே...
செம்மொழி மாநாடு என்பதால் சங்க இலக்கியம் மட்டும்தான் கருப்பொருள் என்று
கொள்வதில் அர்த்தம் இல்லை. காரணம், சங்க இலக்கியம் என்று அறியப்படும்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார் தவிர ஏலாதி,
சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, மூதுரை போன்றவை காலத்தால் 6-ஆம்
நூற்றாண்டுக்குப் பிற்பட்டவைதானே!
உத்தரபுராணம் என்கிற வடமொழிக் காவியத்தின் தழுவலான 10-ஆம் நூற்றாண்டு
சீவகசிந்தாமணி செம்மொழி இலக்கியமாகக் கருதப்படும்பொழுது, சாதியத்தை
வலியுறுத்தும், பாடல்கள் முழுமையாகக் கிடைக்கப்பெறாத வளையாபதியும்
குண்டலகேசியும் செம்மொழி இலக்கியமாகக் கருதப்படும்பொழுது கம்பகாவியம்
மட்டும் புறந்தள்ளப்படுவது என்ன நியாயம்? அவர்களுக்கு கம்பன் மீதுள்ள
கோபமெல்லாம், அவர் ராமகாதை எழுதிவிட்டாரே என்பதால்கூட இருக்கலாம்.
சமய இலக்கியம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் தமிழ்
காப்பற்றப்பட்டிருக்காது. தமிழே காப்பாற்றப்படாமல் போயிருந்தால் சங்க
இலக்கியம் காலத்தால் அழிந்துவிட்டிருக்கும் என்கிற கூற்றை முதல்வர்
உள்ளிட்ட திராவிடப் பாரம்பரியத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தான்.
ஆனால் உண்மை அதுதானே!
இந்தச் சந்தர்ப்பத்தில் முனைவர் தெ.ஞானசுந்தரம் என்னிடம் பகிர்ந்துகொண்ட
ஒரு சம்பவத்தை நினைவுகூர விரும்புகிறேன். "தீ பரவட்டும்' என்று கூறி
அறிஞர் அண்ணா, கம்பகாவியத்தை எரிக்கத் தலைப்பட்டபோது இலக்குவனார் ஒரு
கடிதம் எழுதி, அதில், "ஒரு தமிழ்ப்புலவனின் தமிழ்க் கவிதையை
எரிக்கிறீர்களே, நியாயமா?' என்று வருத்தப்பட்டாராம். கம்பனின்
கருப்பொருளை மறந்துவிட்டு, அவரது தமிழையும் கவிதை நயத்தையும் ரசிக்கக்கூட
முடியாது என்று முரண்டுபிடித்தால், தமிழ் அன்னை முகம் சுளிப்பாளே...
தமிழ் மாநாடு முழுமைபெறாதே...
இவர்களுக்கு கவிச்சக்ரவர்த்தி கம்பனைப் பிடிக்கிறதோ இல்லையோ கம்பனுக்குத்
திருக்குறள் பிடிக்கும். சங்க இலக்கியம் பிடிக்கும். கம்பகாதை முழுவதும்
பரவிக்கிடக்கின்றன அதற்கான சான்றுகள். ஆரண்ய காண்டம் சூர்ப்பனகை
படலத்தில், முதல் பாடலில், கோதாவரி நதியின் பொலிவினை விளக்குவார் கம்பர்.
அதற்கு அவர் உவமை கூறுவது எதைத் தெரியுமா? சங்கத் தமிழை ஐயா, சங்கத்
தமிழை!
""புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்கு ஆகி
அவிஅகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி
சவி உறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் (218)
மேலே குறிப்பிட்ட பாடலில் "அவிஅகத் துறைகள் தாங்கி' என்பது அகப்பொருள்
இலக்கண வகைகளையும், "ஐந்திணை நெறி அளாவி' என்பது ஐந்திணை இலக்கணத்தையும்
அல்லவா குறிப்பிடுகின்றன. சங்கத் தமிழை அல்லவா கம்பன் உவமையாக்குகிறான்.
அந்தக் கம்பனையா செம்மொழி மாநாட்டில் இருட்டடிப்பு செய்வது?
"கம்பரசம்' எழுதி கம்பனை கடுமையாக விமர்சித்த அறிஞர் அண்ணா தலைமையில்
நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு கம்பனுக்குத் தரவேண்டிய உரிய இடத்தை
அளித்ததுடன், சென்னை கடற்கரையில் சிலையும் வைத்து அந்தக்
கவிச்சக்ரவர்த்தியின் புகழ்பாடத் தவறவில்லை. செம்மொழி என்கிற சாக்கில்
கம்பனுக்குக் கதவு சாத்தப்பட்டால் தமிழ்மொழி அதை ஏற்றுக்கொள்ளுமா?
முதல்வரின் பார்வையில் இருந்து எதுவுமே தப்பாதே... இது எப்படித்
தப்பியது? தெரிந்துதான் கம்பனை அவர் தவிர்த்தாரா? எல்லோரையும்
அரவணைத்துக்கொண்டு செம்மொழிக் கொடியேற்றி குதூகலிக்க வேண்டும் என்று
கனவுகாணும் செம்மொழி மாநாட்டுத் தலைவர் கம்பனை மட்டும் அகற்றி நிறுத்த
முற்பட்டால், நஷ்டம் கம்பனுக்கல்ல... செம்மொழி மாநாட்டுக்குத்தான்.
காலம் கடந்துவிடவில்லை. கம்பனுக்கும் பட்டுக்கம்பளம் விரிக்கப்படும்
என்கிற நம்பிக்கை இன்னும் பொய்த்துவிடவில்லை. அதையும் மீறி கம்பன்
புறக்கணிக்கப்பட்டால் கம்பகாவியம் சொல்லுமே அதுபோல், "விதியின் பிழை'
வேறென்ன?
******
கம்பன் ஏமாந்தான், கண்ணதாசன், 1978
http://videos.mywebdunia.com/blogvideos/tamil/video-123882058367209.html
http://myspb.blogspot.com/2006/05/blog-post_114667588509959796.html
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜீன் மாதம் கோவையில் நடக்க
இருக்கிறது. அகில உலகத் தமிழறிஞர்களும் தமிழ்நாட்டுத் தமிழ்ப்
பேராசிரியப் பெருமக்களும் கலைத்துறை வல்லுர்களும் கலந்துகொள்ள
இருக்கிறார்கள். தமிழ்த் திருவிழாவாகக் கொண்டாடப்படப் போகும் இந்த மங்கள
நாளில், ஆய்வுக்கட்டுரைகள் கூட வாசிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள்
உண்டு என்கிறார்கள். கலைஞர் கருணாநிதி, இம்மாநாட்டின் தொடக்கத்தின் போது
பாடப்பட வேண்டிய ‘கருப்பொருள் பாடல்’ வாநஅந ளழபெ இயற்றியிருக்கிறார;.
ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர்.ரகுமான் இசை அமைக்க, பாம்பே ஜெயஸ்ரீ
மாநாட்டில் பாட இருக்கிறார்.
கி.பி ஆறாம் நூற்றாண்டு வரையிலுள்ள நூல்கள்தாம் ‘செம்மொழி நூல்களாக’
அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வரையறையில், சங்க நூல்கள் பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை, தொல்காப்பியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், இறையனர் அகப்
பொருளுரை, முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய 41 நூல்கள்
அடங்கும்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியாரைத் தவிர
மற்றவற்றில் பெரும்பான்மையானவை, (ஏலாதி, சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை,
மூதுரை போன்றவை) கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு மிகவும் பிற்பட்டவை.
‘ஆசாரக்கோவை’, ‘ஆரிடம்’ என்ற சமஸ்கிருத நூலின் தமிழாக்கம். ‘இறையனார;
அகப்பொருளுரை’, தமிழைப் பற்றி இன்று வழங்கும் பல தவறான கற்பனைக்
கதைகளுக்கு ஊற்றுக்கண். இவற்றையும் செம்மொழி நூலாகக் குறிப்பிடுவதற்கு
வலுவான காரணங்கள் பல, இவற்றை இவ்வாறு நியமனம் செய்திருக்கும்
பேரறிஞர்களுக்கு இருக்கக் கூடும்.
ஆனால் கம்பராமாயணமோ, தேவாரமோ, திருவாசகமோ, நாலாயிரமோ, பெரியபுராணமோ,
இச்செம்மொழிப் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆங்கில இலக்கியப்
பாரம்பரியமென்றால், ஷேக்ஸ்பியரை ஒதுக்கிவிட்டுப் பார;க்க முடியாது என்பது
போல, தமிழ் இலக்கியப் பாரம்பரியம் என்றால், தமிழின் மும்மூர்த்திகளாகிய
திருவள்ளுவர், இளங்கோ, கம்பன் ஆகிய மூவரையும் புறக்கணித்துவிட்டுப்
பார்க்கவியலாது என்பார்கள். ஆனால் நல்ல வேளை, திருவள்ளுவரும் அவர்கள்
செய்த அதிர்ஷ்டத்தினால், இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும்போது, பாவம்
கம்பனுக்கு இடமில்லை. இது கம்பன் செய்த பாவமா? யாருடைய பாவம் என்று
தெரியவில்லை. இவற்றைச் செம்மொழி இலக்கிய நூல்களாக நியமனம் செய்யாததற்கும்
பல வலுவான காரணங்கள் பேரறி்ஞர்களுக்கு இருந்திருக்க வேண்டும். கம்பன்
இல்லாத இவ்விலக்கியப் பாரம்பரிய பீடத்தில் வள்ளுவரும் இளங்கோவும்
இடம்பெற விரும்புவார்களா என்பது பற்றி மாநாட்டில் ஒரு பட்டிமன்ற
நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யக்கூடும்.
இம்மாநாட்டு ‘கருப்பொருள் பாடலி’லும், கம்பனுக்கும் தேவார, திருவாசக
ஆசிரியர்களுக்கும் சேக்கிழாருக்கும் இடமில்லை. ஆனால், சீவக சிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி போன்ற நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. சீவக
சிந்தாமணி, கி.பி. பத்தாம் நூற்றாண்டில், திருத்தக்கத்தேவர் என்ற சமண
முனிவரால் இயற்றப்பட்ட நூல். குணபத்திரன் என்பவர் வடமொழியில் இயற்றிய
உத்தரபுராணம் என்பதன் தழுவலாக்கம். கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரைதான்
செம்மொழி நூல்கள் என்றால், கலைஞரின் கருப்பொருள் பாடலில், ‘செம்மொழி
நூலாக’ சீவக சிந்தாமணி எப்படி இடம் பெற்றது என்பது பற்றியும் மாநாட்டில்
ஒரு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யலாம்.
கலைஞரின் ‘கருப்பொருள் பாடல்’, வளையாபதி. குண்டலகேசி என்ற
நூல்களையும் தமிழ்ச் செம்மொழி நூல்களாக அறிவிக்கின்றது. முதலில்,
முழுவதும் கிடைக்கப் பெறாமலிருக்கும் இந்த இரண்டு நூல்களுக்கும் செம்மொழி
இலக்கியச் சிறப்பு எப்படி ஏற்பட்டதென்று ஆராய வேண்டும். வளையாபதிப்
பாடல்களாக 72 பாடல்கள், ‘புறத்திரட்டு’ என்ற நூலினின்றும், மற்றும்
உரையாசிரியர; குறிப்புகளினின்றும், கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
குண்டலகேசி பாடல்களாகச் சொல்லப்படுவன அனைத்தும் யூகங்கள்தாம்.
வளையாபதி என்ற நூலின் கதை, 1855-ல், சூடாமணிப் புலவர் இயற்றிய
‘வாணிகப் புராணத்தில்’ கூறப்பட்டிருக்கிறது. பிறந்த சாதியை விட்டு
இன்னொரு சாதியில் இரண்டாம் மனைவியைக் கொண்ட ஒரு வணிகனின் கதை.
‘குண்டலகேசி’ என்பது, ஓர; அமைச்சரின் மகள் ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தைச்
சார்ந்த ஒரு கொலைகாரன் மீது காதல் கொண்டு அவனை மணக்கின்றாள். பிறகு அவன்
அவளைக் கொல்ல முற்படும்போது, அவள் அவனைக் கொன்று விடுவதைக் கூறுகின்றது.
இரண்டுமே, சாதி விட்டு இன்னொரு சாதியில் மணப்பதைக் கண்டிப்பதற்காக
எழுதப்பட்டவை என்று கூறுகிறார்கள். ‘வளையாபதி, குண்டலகேசி இவைதாம்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்’ என்று கலைஞரின் ‘கருப்பொருள் பாடல்’
கூறுவதையும், ‘காவியக்கதைகள் இவ்வளவு சாதாரணக் கதைகளாக இருக்க முடியுமா’
என அறிஞர் மு.அருணாசலம் கேட்டிருப்பதையும் ஒப்பிட்டு, மாநாட்டுத்
திருவிழாவில் ஆராய இடமிருக்கிறது.
பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ‘சீவக சிந்தாமணியைச்
செம்மொழியாகக் குறிப்பிடும் ‘கருப்பொருள் பாடல்’, கம்பராமாயணத்தை
செம்மொழி இலக்கியப் பாரம்பரியத்தில் சேர்க்காமல் இருப்பதற்குக் காரணம்,
கம்பன் எழுதியிருப்பது கடன் வாங்கிய கதை என்பதால் இருக்கலாம்.
அப்படியானால், ஷேக்ஸ்பியரை உலகமே கொண்டாடுகிறதே, அவர் நாடகங்களில் ஒன்று
கூட அவருடைய சொந்தக் கதையில்லையே! இரும்பைப் பொன்னாக்கும் ரஸவாதந்தானே
இலக்கியம். அதைத்தானே, கம்பனும் ஷேக்ஸ்பியரும் செய்திருக்கிறார்கள்’
என்று இலக்கியப் பிரக்ஞை உடையவர்கள் வாதாடினால், இது பற்றி ஆராய,
மாநாட்டில் ஒரு வழக்காடு மன்றத்துக்கும் ஏற்பாடு செய்யலாம்.
வாழ்க தமிழ்! வாழிய செம்மொழி!.
கட்டுரையினிடையே இருந்த கலைஞரின் கவிதை,
“கலைஞரின் கவிதை
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர;, யாதும் ஊரே,
தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறந் தள்ளி
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர; பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி
குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்”
- எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. (மார்ச்
10, 2010, குமுதம்)
> தப்பியது? ...
>
> read more »
காரைக்குடியிலிருந்து பேசிய கம்பன் கழகச் செயலாளர் பழ.பழனியப்பன், இளம்பிறை மணிமாறன் தன்னிடம் சமய இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் என்று கூறினார். தொடர்ந்து "தினமணி' உதவி ஆசிரியர் கி.மஞ்சுளா, சேரமான் பெருமாள் நாயனார் எழுதிய "திருக்கயிலாய ஞான உலா' பற்றிய தமது கட்டுரை "சமயமும் தமிழும்' (காதல் மகளிர் எழுவர்) பகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கான கடிதத்தைக் காட்டியவுடன் செம்மொழி மாநாட்டில் கம்பன் மட்டுமல்ல, சமயத்தமிழும் இடம்பெறுகிறது என்பது உறுதியானது.
ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வுசெய்த குழுவிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சொன்ன தகவல் தேனாய் இனித்தது. சமயமும் தமிழும் மட்டுமல்ல, தமிழும் மெய்யியலும் (தத்துவம்), பெண்ணியம், மாறிய பாலியல், நாட்டுப்புறப்பாடல், பிற நாடுகளில் தமிழ்ப் படைப்பிலக்கியம், ஊடகத்தமிழ் போன்ற தலைப்புகளில் பல ஆய்வுக்கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தெரிந்தால், மகிழ்ச்சி அடையாமல் இருப்பது எங்ஙனம்?
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆச்சார்ய ஹிருதயம், உளவியல் நோக்கில் திருவாசகம், வள்ளலாரின் சமயம் கடந்த பொதுநிலை, சைவ சமய உருவாக்கத்தில் செவ்வியல் இலக்கியப் பங்கு, மூவர் திருமுறைகள்-சொற்பொருளும், சொல்லப்பட்ட பொருளும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு இஸ்லாமியப் பங்களிப்பு என்று சமயம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளின் நீண்டதொரு பட்டியலையே என்முன் நீட்டினார்கள்.
இதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகும் எப்படி சும்மா இருப்பது?
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "ஏன் இதையெல்லாம் முன்பே சொல்லவில்லை? செம்மொழி மாநாடு என்று கூறி தேவையற்ற விவாதத்துக்கு வழிவகுப்பானேன்' என்று கேட்டவுடன், கிடைத்த பதில்-
"நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் போனால் அது யார் தவறு?' இப்படியெல்லாம் கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துவிடக்கூடாது என்று முன்கூட்டியே யோசித்து, முதல்வர் தேர்ந்தெடுத்த பெயர்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது. நாங்கள் செம்மொழித் தமிழ் மாநாடு என்று சொன்னபோது அதைத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று அவர் மாற்றியதற்குக் காரணமே மாநாடு சங்க இலக்கியத்துடன் நின்றுவிடக்கூடாது என்பதுதான். அதனால் சமய இலக்கியங்கள் மட்டுமல்ல, பாரதி, பாரதிதாசன் வரை எதுவுமே ஆய்விலிருந்து விடுபடவில்லை' என்று விளக்கம் தந்தார்.
"அதெல்லாம் சரி. பிறகு ஏன் கொள்கை விளக்கப் பாடலில் கம்பன் விடுபட்டான்?' இது எனது கேள்வி.
"ஐம்பெரும் காப்பியங்களில் கம்பன் விடுபட்டுப் போனது ஏன் என்று கி.பி.13-14-ஆம் நூற்றாண்டில் நன்னூலுக்கு உரை எழுதிய மயிலை நாதரைத்தான் கேட்கவேண்டும். அவர் குறிப்பிட்ட ஐம்பெரும் காப்பியங்களில் கம்பன் இடம்பெறவில்லை. அதனால் பாடலில் இடம்பெறவில்லை, அவ்வளவே'.
To unsubscribe, reply using "remove me" as the subject.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கம்பன் ஏமாந்தான்!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜீன் மாதம் கோவையில் நடக்க
இருக்கிறது. அகில உலகத் தமிழறிஞர்களும் தமிழ்நாட்டுத் தமிழ்ப்
பேராசிரியப் பெருமக்களும் கலைத்துறை வல்லுர்களும் கலந்துகொள்ள
இருக்கிறார்கள். தமிழ்த் திருவிழாவாகக் கொண்டாடப்படப் போகும் இந்த மங்கள
நாளில், ஆய்வுக்கட்டுரைகள் கூட வாசிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள்
உண்டு என்கிறார்கள். கலைஞர் கருணாநிதி, இம்மாநாட்டின் தொடக்கத்தின் போது
பாடப்பட வேண்டிய ‘கருப்பொருள் பாடல்’ வாநஅந ளழபெ இயற்றியிருக்கிறார;.
ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர்.ரகுமான் இசை அமைக்க, பாம்பே ஜெயஸ்ரீ
மாநாட்டில் பாட இருக்கிறார்.
கி.பி ஆறாம் நூற்றாண்டு வரையிலுள்ள நூல்கள்தாம் ‘செம்மொழி நூல்களாக’
அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வரையறையில், சங்க நூல்கள் பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை, தொல்காப்பியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், இறையனர் அகப்
பொருளுரை, முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய 41 நூல்கள்
அடங்கும்.