கணபதி துதி - கச்சியப்ப முனிவர்

3 views
Skip to first unread message

Siva Siva

unread,
Apr 18, 2026, 2:28:16 PM (7 days ago) Apr 18
to santhavasantham
A friend sent me a verse (that came to him as a whatsApp forward) and wanted its meaning.
I made an attempt at its interpretation.
Sharing it here - in case it is of interest to any others.

V. Subramanian
=========

The following song comes in some work by கச்சியப்ப முனிவர்.

This song is seen (on pdf file page 4) in this booklet on Ganesa:

https://upload.wikimedia.org/wikipedia/commons/0/06/கணபதி.pdf


அகரமென அறிவாகி உலக மெங்கும்

.. அமர்ந்தகர உகரமக ரங்கள் தம்மால்

பகருமொரு முதலாகி வேறு மாகிப்

.. பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு

புகரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந் தெய்தப்

.. போற்றுநருக் கறக்கருணை புரிந்தல் லார்க்கு

நிகரின்மறக் கருணைபுரிந் தாண்டு கொள்ளும்

.. நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்.

                                                         - ஸ்ரீ கச்சியப்ப முனிவர்.


My interpretation:

பதம் பிரித்து:

அகரம்-என அறிவு ஆகி, உலகம் எங்கும்

.. அமர்ந்து, அகர உகர மகரங்கள் தம்மால்

பகரும் ஒரு முதல் ஆகி, வேறும் ஆகிப்,

.. பல-வேறு திருமேனி தரித்துக்கொண்டு,

புகர்-இல்- பொருள் நான்கினையும் இடர் தீர்ந்து எய்தப்

.. போற்றுநருக்கு அறக்கருணை புரிந்து, அல்லார்க்கு

நிகர்-இல்- மறக்கருணை புரிந்து, ஆண்டுகொள்ளும்

.. நிருமலனைக், கணபதியை நினைந்து வாழ்வாம்.


அகரம்-ன அறிவு ஆகி = "" ஆகிச் சித்ஸ்வரூபியாகி;

உலகம் எங்கும் அமர்ந்து = பல தலங்களில் எழுந்தருளி;

அகர உகர மகரங்கள் தம்மால் பகரும் ஒரு முதல் ஆகி = பிரணவமாகி (ஓங்காரமாகி); (பகர்தல் - சொல்தல்);

வேறும் ஆகிப் = பிறவும் ஆகி;

பல-வேறு திருமேனி தரித்துக்கொண்டு = பல வடிவங்களைத் தாங்கி;

புகர்-இல்- பொருள் நான்கினையும் இடர் தீர்ந்து எய்தப் போற்றுநருக்கு அறக்கருணை புரிந்து = துன்பம் தீர்ந்து, குற்றமற்ற நான்கு பொருள்களையும் (அறம், பொருள், இன்பம், வீடு - புருஷார்த்தங்கள்) அடையும்படி பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்து; (புகர் - குற்றம்); (இடர் - துன்பம்); (அறக்கருணை - அனுக்கிரகம்);

அல்லார்க்கு நிகர்-இல்- மறக்கருணை புரிந்து = துஷ்டர்களுக்கு ஒப்பற்ற மறக்கருணை செய்து (= அவர்களை நிக்கிரகம் செய்து); (மறக்கருணை - நிக்கிரகம்);

ஆண்டுகொள்ளும் நிருமலனைக் = ஆட்கொள்ளும் தூயனை; (நிர்மலன் - நிர்மலன் - பரிசுத்தன்);

கணபதியை நினைந்து வாழ்வாம் = கணபதியைத் தியானித்து வாழ்வோம்; (நினைதல் - எண்ணுதல்);


V. Subramanian

=========

Siva Siva

unread,
Apr 18, 2026, 2:47:13 PM (7 days ago) Apr 18
to santhavasantham
This verse comes in the கடவுள் வாழ்த்து section in the following book
விநாயக புராணம் - Vināyaka purāṇam
by கச்சியப்ப முனிவர்

(Only the verses in the above file. No notes).
==

Ram Ramakrishnan

unread,
Apr 18, 2026, 10:37:40 PM (6 days ago) Apr 18
to santhav...@googlegroups.com
பதம் பிரித்து அழகாகப் பாட்டின் பொருளையும் ஈந்தீர்.

வேறென்ன வேண்டும் இது மோதும் எமக்கு.

மிக்க நன்றி, திரு. சிவசிவா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 18, 2026, at 23:58, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOPihEgy73MqAxJX3biy%2B6t0L0mKZaoeAiLswEMN9hQvQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages