சிலந்தி வலை போல் அழகாய்க் கவிதைப் பின்ன..
இலந்தைத் தலைவர் அவர் வாய்ப்பளித்தார்..
எல்லோரும் ஏறிக் கிளம்பிவிட்ட பேருந்தில்..
எழுந்தடித்துக் கொண்டு எழுதிவிட்டேன்..
எனக்கு இது... போராடவே இந்தப் போது..
என்ன பண்ணுவது..
எனது வேதம் அப்பா.. என்னை திருமணம் செய்து கொடுத்த இடம் சமையலறைச் சத்தம் விரும்பும் தஞ்சை ,புகுந்த வீடாயிற்றே..!!!😀😀)
தலைப்பு...:--
"போராடவா இந்தப் போது.."
தேராடும் குடந்தை வீதியிலே..
தேன்கனிகள் இறைந்த தோட்டத்திலே,
ஆராவமுதன் பள்ளிகொண்ட பாங்கினிலே..(சாரங்கபாணி)
ஆனை வரவேற்கும் மங்களாம்பிகை
கோயிலிலே
ஊராடும் மகிழ்ச்சியிலே!
உள்ளம் ஆடும் தினம் விழாக்களிலே!
பூரா சென்மமும் காணப் போதாதே!
புண்ணியக் குடந்தை வாழ்
மாந்தருக்கே..!
சீராடும் ,சோறாடும் ,நீராடும் காவிரி நதிவளம்சேர் இந்நகரிலே,
எனக்கு மட்டும்
போராடவா இந்தப் போது..??!!
---------------
ஏன் போராட்டம்..??
நித்தம் என் மனதுள்ளே
சீறுகின்றது ஒரு பாம்பு..!!
நிலைகெட்ட மனிதர் செயல் கண்டு..!!
சத்தம் போட்டு சுழித்தோடும் எம் காவிரிப் பெண் ,
சட்டென்று மௌனியானாள்..!!
புத்தி இல்லா பைத்தியங்கள் வீசுகின்ற குப்பைகள் ,
புழுதி ,அழுக்கு பாசிப்பச்சை என்று பருத்து நின்றாள்,
நடந்தாய் வாழி காவிரி இல்லை..
நடக்க முடியவில்லை அவளால் இன்று..!!
கத்தி எடுத்து சண்டையிட காவிரியால் முடியாது..!!
கண்கலங்க பார்த்து நிற்கிறேன் காவிரி என்றுனக்கு விடிவு..!!.??
சத்தியம் இல்லா ராஜாக்களுக்கு
சளைக்காமல் மனு போட்டு சலித்த என்றனுக்கு
போராடவா இந்தப் போது..??
முடியுமா என்னால்..??
நம்பிக்கை என்றும் நான் இழப்பதில்லை !!
நாளும் தேவி என்னுள் வசிப்பதனால்!!
அம்பிகை அருளிருந்தால் அனைத்துமே மாறிவிடும் !!
சும்மா இல்லை என் போராட்டம்
சுளீர் என்று வாளெடுக்கும் காளி பயங்கரி போல்
சுழித்தோடுவாள் காவேரி,
மீண்டும் கல்கியின் கதை போலே..!
அதுவரை போராடுவேன் ,எப்போதும்!!
சின்னப் பாலையின் சிறு விரல் என் கைப் பிடித்தே இழுத்துச் செல்வதினால்..!!
நன்றி வணக்கம்..!!
சுதா வேதம்..!!