கவியரங்கம் -62 - தோரண வாயில்

7 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jun 29, 2026, 6:25:23 PM (8 hours ago) Jun 29
to santhavasantham
 மாறுபட்ட வகையினிலே கவியரங்கம் நாளை
       மலர்ந்திடவே போகிறது மிகநல்ல வேளை
கூறியழைப் பவரில்லை கொண்டுவந்து பாடல்
       கூடத்தில் எல்லோரும் இடும்நல்ல கூடல்
வீறுடனே வெண்பாவின் ஈற்றடிகள் மீது
        மிகநல்ல பாட்டளிப்பார் இதற்கிணையும் ஏது?
ஏறுபுகழ்க் கவிஞரெலாம் கவியிடுவார் முன்னர்
        இவற்றிற்குப் பின்னூட்டம் இடுவோம்நாம் பின்னர்

வெண்பாவின் இலக்கணத்தை வகுத்துள்ள ஆன்றோர்
        மிகத்தெளிவாய்ச் சிந்தித்திதே அளித்துள்ள சான்றோர்
பண்ணுண்டு சிக்கலிலா தளையாட்டம் உண்டு
         பலவகையாய் வெண்பாவில் பகுப்புகளும் உண்டு.
எண்ணத்தைத் திண்ணமுற ஒருங்கிசைத்துக் கொண்டே
         எழுதிவிட நல்லிசையும் அமைந்திடுதல் உண்டே
உண்ணத்தான் காத்துள்ளோம் கவிஞர்களே வருக!
         உற்சாக உயிர்ப்பாடல் உடன்கொண்டு தருக!

இலந்தை
29-6-2026
கவியரங்கம்  இழை கவியரங்கம் 62- வெண்பா வித்தகம் என்று தொடங்கட்டும்

Govindaraju Arunachalam

unread,
Jun 29, 2026, 9:02:28 PM (6 hours ago) Jun 29
to santhav...@googlegroups.com

வெள்ளைப் பாட்டில் வித்தகராய்

   வெளுத்து வாங்கும் கவிவேழம்

அள்ளுஞ் சுவையில் அழகாக

   அமைத்தார் பாவில் நுழைவாயில்

கொள்ளை இன்பம் தருகின்ற

   கொட்டும் மழையாய் வெண்பாக்கள்

அள்ளிப் பருக ஆவலுடன்

    அடியேன் மன்றில் இருப்பேனே!

 

-கருவூர் இனியன்,


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDw5jKjXY2_WPbO14uTg%3Dhub9HE1LdvH9E%3DvqdaO%2BV2PQ%40mail.gmail.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Ram Ramakrishnan

unread,
Jun 29, 2026, 10:02:48 PM (5 hours ago) Jun 29
to santhav...@googlegroups.com
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா

வெண்பாக்கள் பலவுண்டு வேட்கைதரக் கவிகளுண்டு
கண்பாய்த்து நயஞ்சொல்ல களிப்புநிறை சபையுண்டு
விண்பாயும் புகழ்மேவ வேழத்தின் தொடர்புண்டு
எண்ணார்ந்த புலவர்தம் ஏற்றமிகு சொல்லுண்டு.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



Sai Ganesan H

unread,
2:23 AM (20 minutes ago) 2:23 AM
to santhav...@googlegroups.com
வணக்கம். 

வெண்பாக் கவியரங்கில் வீரமுடன் பங்கேற்க

எண்ணி எடுத்தேன் எழுதுகோலைத்-தண்மழைபோல்

பாக்கள் சுரந்தன பாவேந்தர் ஈற்றடிக்காய்

ஆக்கிப் பகர்வேன் அடுத்து. 

—- சத்ய வேழன் H சாயி கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages