தமிழுக்கு ஞானபீட விருது

57 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 14, 2026, 1:15:49 PM (4 days ago) Mar 14
to Santhavasantham
 https://thehindu.com/news/national/tamil-nadu/the-elusive-jnanpith-award-for-tamil-litterateurs/article69104191.ece
Tamil littérateurs and why they miss out on the prestigious Jnanpith Award
By T. Ramakrishnan | Jan. 16th, 2025, The Hindu, Madras. Full essay here,
https://x.com/naa_ganesan/status/2032852520129699892

தமிழுக்கு ஞானபீட விருது!
-------------------------------

தமிழிலே, முன்னர் எழுத்தாளர்கள் அகிலன், ஜெயகாந்தன் பெற்ற ஞானபீட விருதை இப்போது கவிஞர் வைரமுத்து பெற்றுள்ளார். பாராட்டுகள்!

ஞானபீட விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவிஞர் வைரமுத்து, “இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இனி புதிய பாய்ச்சலுடன் என் இலக்கிய பணி தொடரும்” எனத் தெரிவித்தார்.

பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாகக் கருதப்படுகிறது.

கடந்த 1965-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் ஞான பீட விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 60-வது ஞானபீட விருது வைரமுத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1975-ஆம் ஆண்டு ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக அகிலன் மற்றும் 2002-ல் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீட விருது பெற்றுள்ளனர்.

ஒரு கேள்வி:
Was there any other poet/writer professing atheism who won the Gnanapitham award? Or, Vairamuthu the first?  

Like Bharatidasan, Vairamuthu has openly said he is an atheist. A poet/writer of the Dravidian movement ruling Tamil Nadu from 1967 onwards. Though Kannadasan changed to Hinduism in his later life, Vairamuthu and Bharatidasan are avowed atheists.

~NG

Govindaraju Arunachalam

unread,
Mar 14, 2026, 9:48:50 PM (4 days ago) Mar 14
to N. Ganesan, Santhavasantham
பொருள் பொதிந்த வினா. 
வைரமுத்துவின் எந்த நூலுக்கு இவ் விருது வழங்கப்படுகிறது?

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,



--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcjrMSTJczTVF49sWZ_zntRT1-3U9AwJXAYMRCa6uMgvg%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Mar 14, 2026, 9:51:49 PM (4 days ago) Mar 14
to சந்தவசந்தம்
" புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்ப தில்லை!
  வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை "

கவியரசர் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcjrMSTJczTVF49sWZ_zntRT1-3U9AwJXAYMRCa6uMgvg%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 14, 2026, 9:59:25 PM (4 days ago) Mar 14
to santhav...@googlegroups.com
/ தமிழுக்கு ஞானபீட விருது /

I recall some phrase from the 70s - "India is Indira & Indira is India".

/ தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. /

Interesting statement.

V. Subramanian

N. Ganesan

unread,
Mar 15, 2026, 8:28:11 AM (3 days ago) Mar 15
to santhav...@googlegroups.com
On Sat, Mar 14, 2026 at 8:51 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
" புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்ப தில்லை!
  வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை "

கவியரசர் 

Intense lobbying எனச் சமூக ஊடகங்களில் காண்கிறேன். தேர்தல் வருகிறது, பாண்டிச் சீமை வாக்கும் இருக்கிறது.
எதிர்வினை ஜெமோ, சாரு நிவேதிதா ஆற்றியுளர்.

N. Ganesan

unread,
Mar 15, 2026, 8:37:17 AM (3 days ago) Mar 15
to santhav...@googlegroups.com
On Sat, Mar 14, 2026 at 8:59 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
>
> / தமிழுக்கு ஞானபீட விருது /
>
> I recall some phrase from the 70s - "India is Indira & Indira is India".

Yes.


>
> / தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. /
>
> Interesting statement.

VM imitates the famous line of Bharaiyar's ChiiTTukkavi (Epistolary Poem).
https://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html

மகாகவி பாரதியார் 2 மே 1919 அன்று எட்டையபுரத்தில் எழுதிய சீட்டுக்கவி:

மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த
       மன்னரிலை என்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
     புனைந்தபொழு திருந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு
       சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
       தமிழ்ச்சுவைநீ களித்தாய் அன்றே!

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
       தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டிற் கில்லையெனும்
       வசையென்னாற் கழிந்த தன்றே!

சுவைபுதிது! பொருள்புதிது! வளம்புதிது!
       சொற்புதிது! சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
       மாகவிதை என்று நன்கு!

தமிழிலே 1950 வரை சீட்டுக்கவிகளைத் தொகுத்தால் 1000+ தேரும். செய்யக் கல்லூரிகளோ, பள்ளிகளோ காணோம்.

நா. கணேசன்



>
>
> V. Subramanian
>
> On Sat, Mar 14, 2026 at 1:15 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>>
>>  https://thehindu.com/news/national/tamil-nadu/the-elusive-jnanpith-award-for-tamil-litterateurs/article69104191.ece
>> Tamil littérateurs and why they miss out on the prestigious Jnanpith Award
>> By T. Ramakrishnan | Jan. 16th, 2025, The Hindu, Madras. Full essay here,
>> https://x.com/naa_ganesan/status/2032852520129699892
>>
>> தமிழுக்கு ஞானபீட விருது!
>> -------------------------------
>>
>> தமிழிலே, முன்னர் எழுத்தாளர்கள் அகிலன், ஜெயகாந்தன் பெற்ற ஞானபீட விருதை இப்போது கவிஞர் வைரமுத்து பெற்றுள்ளார். பாராட்டுகள்!
>>
>> ஞானபீட விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவிஞர் வைரமுத்து, “இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 15, 2026, 8:50:12 AM (3 days ago) Mar 15
to Govindaraju Arunachalam, Santhavasantham, Kanaka Ajithadoss, Banukumar Rajendran, Pandiyaraja Paramasivam, Sirpi Balasubramaniam, Dr.Krishnaswamy Nachimuthu, A.R. Venkatachalapathy, TV Venkateswaran
On Sat, Mar 14, 2026 at 8:48 PM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
பொருள் பொதிந்த வினா. 
வைரமுத்துவின் எந்த நூலுக்கு இவ் விருது வழங்கப்படுகிறது?

அறிகிலேன். ஜெயகாந்தனுக்கும் ஒரு நூல் பெயரைக் குறிப்பிட்டதாகக் காணோம். அவ்வாறு ஜெ.கா. நூல் ஏதாவது குறிப்பிடப்பட்டதா?

இலங்கைத் தமிழர் கிருஷ்ண அம்பலவாணர் ஐரோப்பாவில் வசிப்பவர். வைரமுத்தைப் வானொலி நிகழ்ச்சிகளில் பேட்டிகண்டவர். என் கேள்விக்கு அவர் சொன்னார்,

அம்பலவாணருக்கு என் மறுமொழி:
பலமுறை கடவுள் மறுப்பு பற்றிக் கூறி வைரமுத்து தன் கொள்கை என்று கூறியுள்ளார். "கடவுள் என்பதுதான் உடன்பாடு இல்லை. கடவுள் வேறு; தெய்வம் வேறு.  கடவுள் என்பது கற்பிக்கப்பட்டது. தெய்வம் என்பது வாழ்ந்த மனிதனின் குணாம்சங்கள் தான்." திருக்குறளை நுணுகி ஆய்ந்தவர்கள், மணக்குடவர் தொடங்கி, அவர் சமண சமயப் பின்புலம் கொண்டவர் என்றும், முதல் நான்கு அதிகாரங்கள் சான்று என்றும் விளக்கியுள்ளனர். வள்ளுவரது முதல் அதிகாரம், தீர்த்தங்கரர் வாழ்த்து ஆகிய கடவுள் வாழ்த்து. இப்போதைய உரைகாரர்கள், வைரமுத்து போன்றோர், இவ்வுண்மையை மறைத்து விடுவது வழமை. அவரது உரையில் "அறிவு" என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வள்ளுவர் கடவுள் வாழ்த்து குறள்களை வெறும் "அறிவு" எனப் பொருத்த முடியாது. வியாபார நோக்கிற்காக, வெளிப்படையாகச் சொல்லவில்லையோ? நடிகர்கள் எவ்வேடம் எனினும் தாங்குவது உண்டே. எம். ஆர். ராதா, சத்யராஜ், ...

-----------------------
வைரவமுத்து > வைரமுத்து எனக் குறுகும். ஒருகாலத்தில் வைரவர்/வடுகநாதர் வழிபாடு பாண்டிநாட்டில் மிகுதி. வைரமுத்து (< வைரவமுத்து) பெண்ணுக்கும் வைக்கும் பெயர்.

அன்புடன்,
நா. கணேசன்

Siva Siva

unread,
Mar 15, 2026, 8:55:23 AM (3 days ago) Mar 15
to santhav...@googlegroups.com
In சீட்டுக்கவி, the poet is required to mention his own greatness. (That is what I vaguely recall as one of the requirements of that genre of poetry).
I did not realize Vaiyaramuthu was following that convention in his self-congratulation.

Have any other "Me too" accused persons gotten this award earlier?

V. Subramanian

Niranjan Bharathi

unread,
Mar 15, 2026, 9:06:08 AM (3 days ago) Mar 15
to santhav...@googlegroups.com
வைரம் / வயிரம் + முத்து = வைரமுத்து என்று இதுகாறும் நினைத்திருந்தேன். அப்படி பொருள் கொள்ளலாகாதா?

N. Ganesan

unread,
Mar 15, 2026, 9:07:13 AM (3 days ago) Mar 15
to santhav...@googlegroups.com
On Sun, Mar 15, 2026 at 7:55 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
In சீட்டுக்கவி, the poet is required to mention his own greatness. (That is what I vaguely recall as one of the requirements of that genre of poetry).
I did not realize Vaiyaramuthu was following that convention in his self-congratulation.

My take: VM's ChiiTTukkavi to his fans. He uses Bharati's statement.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 15, 2026, 9:15:47 AM (3 days ago) Mar 15
to santhav...@googlegroups.com
I think Sri. Sivasivaa is bang on here. This guy Vairamuthu tries to glorify himself using Mahakavi Bharathiyar’s poem.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 15, 2026, at 09:07, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:



N. Ganesan

unread,
Mar 15, 2026, 11:23:50 AM (3 days ago) Mar 15
to santhav...@googlegroups.com, Niranjan Bharathi
On Sun, Mar 15, 2026 at 8:06 AM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
> வைரம் / வயிரம் + முத்து = வைரமுத்து என்று இதுகாறும் நினைத்திருந்தேன். அப்படி பொருள் கொள்ளலாகாதா?

சினிமா உலகில் அவ்வாறே துதி செய்கின்றனர். ஆனால், பெயர் அமைந்த சரிதம் வேறு.
சிறுகூடல்பட்டி கண்ணதாசன் ஊர். அவ்வூர்ப் பெண் வைரமுத்து. தன் பெயர்க் காரணத்தை நீயா நானா நிகழ்ச்சியில்
விளக்கினார். 2011-ல் (15 ஆண்டு முன்!) குறிப்பிட்டு எழுதினேன். வைரமுத்தின் காணொளி கண்டு தெளியலாம்.
https://cruelkingstvshows.blogspot.com/2014/06/neeya-naana-vairamuthu-girl-from.html
(காணொளி தரவிறக்கி அனுப்பவும். பாதுகாக்க வேண்டியது.)

Later on, Sirukoodalpatti Vairamuthu gave an interview during the Jallikattu battle.
https://cinema.vikatan.com/television/78263-village-girl-vairamuthu-speaks-her-love-for-cattle
https://www.youtube.com/watch?v=wfQa2UxEqx8

இடைக்குறை (Syncope) எடுத்துக்காட்டு:
(1) வைரவமுத்து > வைரமுத்து
(2) யாவர் > யார்
(3) வானவன் > வானன்
     வல்லை யேஎனக்கு இன்னும் உன்கழல்
     காட்டி மீட்கவும் மறுவில் வானனே. (திருவாசகம்)
(4) வீரராகவமங்கலம் > வீரராகமங்கலம் (கல்வெட்டு, முதுமுனைவர் குடவாயில் பாலு கட்டுரை).
(5) சொல்லிவிடு > சொல்லிடு
(6) விற்றுவிடு > விற்றிடு
(7) மலையமான் > மலைமான்
(8) பாண்டியநாடு > பாண்டிநாடு
(9) அமுதகலையநாதர் > அமுதகலைநாதர். கலையநல்லூர் (சாக்கோட்டை). சுந்தரர் தேவாரம் அழகானது. கலியாணங்களில் ஓதப்படுவது.
(10) சேரலன் > சேரன்
(11) யக்ஷி/யட்சி/யக்கி குடி > (இ)சக்கிகுடி > சக்குடி (மதுரை அருகே உள்ள ஊர்). Cf. லக்ஷ்மி > லக்குமி/லட்சுமி/லச்சுமி.
(12) பேரரையன் > பேரையன்
(13) சாவ + ஊர் > சாவவூர் > சாவூர். Cf. சாவூர் பரஞ்சோதி. பாரதச் செம்மொழிகள் இரண்டிலும் வல்லவன் ஆன, சைவ சமய ஆச்சாரியன். சுமார் 80 ஆண்டுகள், 3 சோழ சக்கிரவர்த்திகளின் கல்வெட்டுகளில் வருகிறான். சைவ சித்தாந்த சாத்திரங்களையும், திருமுறைகளையும், பரத நாட்டிய சாத்திரத்தையும், இசையையும் சாவம் (ஜாவகம்) நாட்டில் பரப்பியவன். எனவே, "சாவூர்" பரஞ்சோதி எனப் புகழ்பெற்றவன். கொல்லி (கொற்றவை) + ஊர் > கொல்லியூர் > கொல்லூர் ... போல.
(14) கிரகணம் > கிரணம் (சந்திரகிரணம், சூரியகிரணம்)
(15) கிராகக > கிராக்கி (grAhaka > girAki in Telugu, Kannada. kirAkki in Tamil.)
(16) உதாகரணம் > உதாரணம்
(17) வேட்டுவப்பட்டி >
 ...
இன்னும் syncope காட்டுகள் இருக்கும். தெரிந்தோர் தரலாம்.

--------------

கொங்குநாட்டில் ஒரு வேட்டுப்பட்டி உண்டு.
https://ta.wikipedia.org/wiki/காளிக்கவுண்டம்பாளையம்_வேட்டுப்பட்டி_மாரியம்மன்_கோயில்
“ இடைப்பாடி அருகே, கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இடைப்பாடி தாலுகா வெள்ளரிவெள்ளி பகுதியில், செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவில், நான்கு நாட்களுக்கு முன், இரவில் நாடகம் நடந்த போது, கல்லபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், வேட்டுவப்பட்டியை சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ” http://www.dinamalar.com/news_detail.asp?id=618253&Print=1 (தமிழக முதலமைச்சர் தொகுதி இது.)
’பூலாம்பட்டி அருகே உள்ள, வேட்டுவப்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து. ’ http://www.dinamalar.com/district_detail.asp?id=1383134&dtnew=11/9/2015&Print=1

வேட்டுவப்பட்டி > வேட்டுப்பட்டி எனக் குறுகுதற்கு நல்ல காட்டு ஒன்றுண்டு.
பாண்டிநாட்டில் பைரவர் வழிபாடு மிகுதியாய் இருந்துள்ளது.
வைரவன் அருள் என்னும் பொருளில் வைரவமுத்து என ஆணுக்கும், பெண்ணுக்கும்
பெயர் ஏற்பட்டிருக்கிறது. வைரவமுத்து > வைரமுத்து. கவிஞர் வைரமுத்து.

சிறுகூடல்பட்டி வைரமுத்து (< வைரவமுத்து)
http://cruelkingstvshows.blogspot.com/2014/06/neeya-naana-vairamuthu-girl-from.html
https://cinema.vikatan.com/tamil-cinema/television/78263-village-girl-vairamuthu-speaks-her-love-for-cattle.html

இப்பெண் பேச்சைக் கேட்டு வைரவமுத்து > வைரமுத்து என 2011-ல் எழுதிய இழை:
-முத்து என முடியும் பெயர்கள். ஆயிமுத்து என்பது கோவை அய்யாமுத்துவின் பெயர்.
https://groups.google.com/forum/#!msg/mintamil/zBimydXnQgo/R07c-N5ZdccJ

--------------

கிராம தெய்வங்களின் அருளால் பெற்ற குழந்தையர்க்கு  தெய்வப்பெயர் + முத்து எனப் பேர் இடுதல் மரபு.

நாச்சிமுத்து, காளிமுத்து, மாரிமுத்து, பேச்சிமுத்துஆயிமுத்து (கோவை அய்யாமுத்து அவர்களின் பெயர்), காத்தமுத்து, சுடலைமுத்து, செல்லமுத்து (செல்லாண்டி அம்மன்), நல்லமுத்து (நல்லபுள்ளி அம்மன்),  சவரிமுத்து, மரியமுத்து, ...

வைரவருக்கு வடுகநாதன் எனப்பேர். வடுகமுத்து. வைரவமுத்து > வைரமுத்து.
சிறுகூடல்பட்டி வைரமுத்து:

இதுபோல் -முத்து என்னும் இன்னும் பேர்கள் உண்டா? நாஞ்சில்நாட்டில்
சொரிமுத்து (ஜீவாவின் பெயர்), ஒதிமுத்து.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 15, 2026, 12:22:30 PM (3 days ago) Mar 15
to santhav...@googlegroups.com
some more syncopes:
கச்சத்தீவு < கச்சபத்தீவு. Cf. உதாரணம் < உதாஹரணம், விவகாரம் < வியவஹாரம், அவசியம் < ஆவசியகம் < ஆவஸ்யகம், ராசானாலும் < ராசாவானாலும், கிராணம் < கிரஹணம், கிராக்கி < கிராஹக, பேரையன் < பேரரையன், வீரராகமங்கலம் < வீரராகவமங்கலம், வைரமுத்து < வைரவமுத்து etc., Consonant Assimilation.

Niranjan Bharathi

unread,
Mar 16, 2026, 7:48:56 AM (2 days ago) Mar 16
to santhav...@googlegroups.com
என் மனமார்ந்த நன்றி கணேசன் Uncle 😊🙏

N. Ganesan

unread,
Mar 16, 2026, 10:22:51 AM (2 days ago) Mar 16
to santhav...@googlegroups.com
On Mon, Mar 16, 2026 at 6:48 AM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
என் மனமார்ந்த நன்றி கணேசன் Uncle 😊🙏

 
 வைரமுத்து < வைரவமுத்து : பெயர்க் காரணம்
https://x.com/naa_ganesan/status/2033261347144630465

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ashok Subramaniam

unread,
Mar 16, 2026, 2:56:10 PM (2 days ago) Mar 16
to santhav...@googlegroups.com
ஞானபீட விருது பத்திரத்தின் நடுநாயகமாக இருப்பது வாக்தேவியின் (சரஸ்வதி) திருவுரு. ஹொய்சாள சிற்பவடிவத்தில் அமைந்தது.. நான்கு கரங்களிலும் ருத்திராக்கம், கமண்டலம்,ஏடு, கமலப் பூவை ஏந்திய உருவம். ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறு பக்கம் ஹிந்தியிலும் விருது பத்திர வாக்கியங்கள்
அன்னை வாக்தேவி அறிவின், கலைகளின் இறைவி. கையில் வேத நூலும், தூய்மையைக் குறிக்கும் தாமரையும், வேதங்களை அவளே ஓதிக் கொண்டிருப்பதால் ஜப மாலையும், முனிவர்கள் கையில் ஏந்தும் கமண்டலமும் ஏந்திய உருவினள். முதலாவது இந்த விருதை நிறுவியவர்களுக்கும், இப்போது நிர்வகிப்பவர்களுக்கும், நாடறிந்த நாத்திகருக்கு, இக்குறியீடுகள் உள்ள விருதை வழங்கவேண்டும் என்று தோன்றியதே விநோதம்..அதுவாவது சரி... கடவுளுக்கு பேதமில்லை.. ஆனாள் அந்த குறியீடுகளெல்லாம் விருதை "வாங்கியே விட்ட" நாத்திகருக்குச் சம்மதமா? ஐயோ! ஆங்கிலத்துக்காவது திராவிடச் செம்மல்கள் விலைபோனவர்கள்.. ஆனால் இந்தியில் பொறிக்கப்பட விருது வார்த்தைகள்...?



--

N. Ganesan

unread,
Mar 16, 2026, 3:21:11 PM (2 days ago) Mar 16
to santhav...@googlegroups.com


On Sun, Mar 15, 2026 at 7:55 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
>
> Have any other "Me too" accused persons gotten this award earlier?

An interesting "Me too" cartoon,
https://x.com/satishacharya/status/2033434658332086454

>
> V. Subramanian
>

Rajagopalan Soundararajan

unread,
Mar 16, 2026, 8:00:25 PM (2 days ago) Mar 16
to சந்தவசந்தம்
ज्ञानपीठ  விருதை  ज्ञानपीडा விருது என்று தமிழில் எழுதினால் ஒரே மாதிரிதான் இருக்கும்.

Siva Siva

unread,
Mar 17, 2026, 9:43:17 PM (19 hours ago) Mar 17
to santhav...@googlegroups.com

Jnanpith to Vairamuthu is a mockery of Tamil literature
The award to the lyricist—a #MeToo accused with questionable literary merit—is the latest in a long history of institutional neglect of Tamil.
Published : Mar 16, 2026 15:24 IST - 5 MINS READ

B  Jeyamohan

....
....
===

Ram Ramakrishnan

unread,
Mar 17, 2026, 11:19:17 PM (17 hours ago) Mar 17
to santhav...@googlegroups.com
I fully endorse Jeyamohan’s views.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 18 Mar 2026, at 7:13 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages