https://thehindu.com/news/national/tamil-nadu/the-elusive-jnanpith-award-for-tamil-litterateurs/article69104191.eceTamil littérateurs and why they miss out on the prestigious Jnanpith Award
By T. Ramakrishnan | Jan. 16th, 2025, The Hindu, Madras. Full essay here,
https://x.com/naa_ganesan/status/2032852520129699892தமிழுக்கு ஞானபீட விருது!
-------------------------------
தமிழிலே, முன்னர் எழுத்தாளர்கள் அகிலன், ஜெயகாந்தன் பெற்ற ஞானபீட விருதை இப்போது கவிஞர் வைரமுத்து பெற்றுள்ளார். பாராட்டுகள்!
ஞானபீட விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவிஞர் வைரமுத்து, “இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இனி புதிய பாய்ச்சலுடன் என் இலக்கிய பணி தொடரும்” எனத் தெரிவித்தார்.
பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாகக் கருதப்படுகிறது.
கடந்த 1965-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் ஞான பீட விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 60-வது ஞானபீட விருது வைரமுத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1975-ஆம் ஆண்டு ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக அகிலன் மற்றும் 2002-ல் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீட விருது பெற்றுள்ளனர்.
ஒரு கேள்வி:
Was there any other poet/writer professing atheism who won the Gnanapitham award? Or, Vairamuthu the first?
Like Bharatidasan, Vairamuthu has openly said he is an atheist. A poet/writer of the Dravidian movement ruling Tamil Nadu from 1967 onwards. Though Kannadasan changed to Hinduism in his later life, Vairamuthu and Bharatidasan are avowed atheists.
~NG