வார்த்தை வலிவினும் வார்த்தை இடைமோனம்
கூர்த்த வலிவென்று கூறு
வார்த்தைகளுக்கு மட்டும்தான் பொருளுண்டென்பதல்ல. வார்த்தைகளுக்கு இடையே உள்ள மோனத்தில் வார்த்தைகளின் பொருளைவிட அதிகப் பொருள் இருப்பதுண்டு. ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் இடையே கொடுக்கிற இடைவெளி சொல்லும் போது எழுகிற தொனி, அதன் மாறுபாடு வேகம், அல்லது மென்மை அதிகப் பொருளை உணர்த்திவிடும். அனுபவித்து அறிந்து கொள்ள வேண்டியது இது.. இரண்டு மலைகளுக்கிடையே புகுந்து வெளிப்படும் காற்றின் வேகமும் சுகமும் அலாதிதான்