ஒன்றரைக் கோடன் எண்பா

95 views
Skip to first unread message

பாலாஜி சாம்பமூர்த்தி

unread,
Nov 21, 2019, 2:03:05 PM11/21/19
to சந்தவசந்தம்
சந்தவசந்தம் குடும்பத்தினருக்கு பாலாஜி சாம்பமூர்த்தியின் பணிவான வணக்கங்கள். நான் இந்த குடும்பத்தில் சேர்ந்து ஓரிரு நாட்களே ஆன போதிலும் இங்கு எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் நுண்ணிய கலை அனுபவம் அபாரம். நன்றி!

எனது எளிய படைப்புக்களில் ஒன்றை இங்கு இடுகிறேன். நிறைக்கூறல் களிப்பூட்டும் குறைக்கூறல் தெளிவூட்டும். களிப்பும் தெளிவும் இரண்டுமே பெற விழைகிறேன்!

ஒன்றரைக் கோடன் எண்பா

1. முதலாய் எளிதாய் முழுதும் உளதாய்ப்
பதிலாய்த் திகழாய்ப் பதியே - நிதமினிப்
பட்ட இருபுற் பதமாய்ப் பதமிட
வட்டம் தருமே வளம்

2. அப்பன் அரையீந்த அம்பிகை நீராலே
ஒப்பில் லுனையீந் தொன்றினள் - தப்பாது
பற்றும் இலார்க்குப் பரிந்தே உனையீந்து
கொற்றம் தனையீந்த கோன்

3. உரியச் சிரமோ ஒருநூ றெனினும்
கரிநுண் ணறிவது கண்டாய்ச் - சரியே
நினை‌யெணு மாந்தர் நினைவக லாதெம்
வினையது காந்த விலக்கு

4. விண்டதும் தந்தமே வீழ்ந்தது காவியம்
அண்டமே தந்ததே ஆழ்புகழ் - கண்டதோ
சிற்றியல் தந்ததும் சீரகம் கிட்டிடும்
பற்றிலன் தந்த படிப்பு

5. சித்தியும் புத்தியும் சீரென வாகையும்
சத்திய வாக்கையுந் தந்திடும் - இத்தகைத்
தத்துவ முந்தனிற் தானெனக் காணிலன்
பத்தினி என்றிடின் பாழ்

6. வெம்பனி ஈரணி வில்விழைக் கொன்றிடச்
சும்பநி சும்பரைச் சுட்டிட - நும்மிணைச்
சந்ததி யாயினுந் தந்திர மேவிட
வந்தது மூடிகம் மாண்

7. மூதுரைத் தந்த ‌முதியாள் துதியிடத்
தோதுன் துதியது தூக்கிடக் - கோதறு
அன்பது நல்கிடும் ஐங்கரன் தாளெனும்
மன்பதை எய்தும் மகிழ்வு

8. கட்டத்தி னென்னைக் கடத்தப் பலரெனின்
இட்டத்தே நீயே எதனாலோ - அட்டமா
சித்தி அசபையோ சித்தமோ யாதெனும்
பித்த னெனினுமே பேணு

பல ஸ்ருதி:
வலமும் தளிரும் வழுவா மதியும்
புலனது நாலதில் பொத்தித் - தலமது
சென்றதும் பேணிச் சிகரமும் ஏற்றிடும்
ஒன்றரைக் கோடன் உனை

நன்றி

Ramamoorthy Ramachandran

unread,
Nov 21, 2019, 7:55:00 PM11/21/19
to santhav...@googlegroups.com
ஒன்றரைக் கோடன்! தலைப்பே அருமை. வாழ்த்துகள். - புலவர் இராமமூர்த்தி. 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/19553fb7-5b87-4fbe-9a03-4600f269ebf9%40googlegroups.com.

Siva Siva

unread,
Nov 21, 2019, 9:56:41 PM11/21/19
to santhavasantham
ஒன்றரைக் கோடன்? புதிய பிரயோகமோ?

/விண்டதும் தந்தமே வீழ்ந்தது காவியம்/
காவியம் வீழ்ந்ததா?

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Subbaier Ramasami

unread,
Nov 21, 2019, 10:03:46 PM11/21/19
to santhavasantham
ஒவ்வொரு பாடலுக்கும் விளக்க உரை எழுதிக்கொண்டிருக்க முடியாதல்லவா? கொஞ்சம் தெளிவாக எழுத முயல்க!

உங்கள் கவிதை உங்கள் உள்ளத்தில் மிக அற்புதமான காட்சியை நிகழ்த்தியிருக்கக் கூடும். அதை மற்றவர்களும் காணவேண்டுமல்லவா?
இலந்தை

Saranya Gurumurthy

unread,
Nov 22, 2019, 12:12:09 AM11/22/19
to சந்தவசந்தம்
புதிதாகவே இருக்கிறது. ஏகதந்தன், ஒற்றை மருப்பன் என்றே பார்த்திருக்கிறேன். 

சித்திரங்களில் ஒரு தந்தம் முழுதாகவும் மற்றொரு தந்தம் பாதி உடைந்தது போல் இருக்கும். அதனால் ஒன்றரைக் கோடன் என்று வைத்தார் போலும். 


சரண்யா 

Vis Gop

unread,
Nov 22, 2019, 12:34:28 AM11/22/19
to santhav...@googlegroups.com
ஒரு கொம்பைப் பிடுங்கியிருந்தால் ஒற்றைக் கொம்பன். உடைத்ததனால் ஒன்றரைக் கொம்பன்; கையில் அரைக் கொம்புடையவன். கணக்கு சரியே! ☺

வீழ்ந்தது காவியம்? 
கங்கை வீழ்ந்தது நன்மைக்கே! பழம் வீழ்வதும் நன்மைக்கே! கதைகள் காதுகளில் வீழ்பவைதாமே! இறையருளால் ஒரு காவியம் மானுடத்துக்குப் பரிசாய் வீழ்ந்தது உண்மைதானே!

நல்வாழ்த்துகள் 
கோபால்.

பாலாஜி சாம்பமூர்த்தி

unread,
Nov 22, 2019, 5:56:55 AM11/22/19
to சந்தவசந்தம்
மேதகு ஐயா, தங்கள் பதில் பதிவிற்கு நன்றி. ஆம் இது புதிய ப்ரயோகமே; ஒரு சிறிய முயற்சி. தந்தத்தை உடைத்ததும் அதனின்று ஒரு காவியம் புறப்பட்டதென்று பொருள்பட எழுதியிருக்கிறேன். தாங்கள் சுட்டிக்காட்டியதைச் சற்று விரிவாக்கினால் தெளிவுபடுத்தவோ நான் திருத்திக் கொள்ளவோ ஏதுவாக இருக்குமே.

பணிவன்புடன்

பாலாஜி சாம்பமூர்த்தி

unread,
Nov 22, 2019, 5:56:55 AM11/22/19
to சந்தவசந்தம்
மேதகு சரண்யா அவர்களே, தங்கள் பதிலுக்கு நன்றி. தாங்கள் யூகித்து முற்றிலும் சரியே. படத்தில் கண்டு ரசித்து மனத்தில் இருத்தியதன் விளைவே இந்த சொல்லாட்சி. தங்கள் ஊக்கத்திற்கு மறுபடியும் என் நன்றி.

பணிவன்புடன்

பாலாஜி சாம்பமூர்த்தி

unread,
Nov 22, 2019, 5:56:55 AM11/22/19
to சந்தவசந்தம்
மதிப்பிற்குரிய VisGop ஐயா அவர்களே, தங்கள் விளக்கத்திற்கு நன்றிகள் பல. என் மனதில் தோன்றிய கருத்தை அப்படியே இம்மி பிசகாமல் உரை எழுதியுள்ளீர்கள். என் சொல்வேன், நன்றியைத் தவிற?

பணிவன்புடன்

பாலாஜி சாம்பமூர்த்தி

unread,
Nov 22, 2019, 5:56:55 AM11/22/19
to சந்தவசந்தம்
மேதகு ஐயா, தங்கள் பதில் பதிவிற்கு நன்றிகள் பல. ஊக்கம் ஊட்டியமைக்கு மிக்க நன்றி.

பணிவன்புடன்

பாலாஜி சாம்பமூர்த்தி

unread,
Nov 22, 2019, 5:57:03 AM11/22/19
to சந்தவசந்தம்
மதிப்பிற்குரிய ஐயா, முதற்கண் உங்களுடைய பதில் பதிவிற்கு நன்றி. தங்கள் அறிவுரையை ஏற்கிறேன். அடுத்த முயற்சியில் நிச்சயம் செயல்படுத்துகிறேன்.

பணிவன்புடன்

Vis Gop

unread,
Nov 22, 2019, 6:19:57 AM11/22/19
to santhav...@googlegroups.com
Dear Balaji,
You need to keep a portion of the original mail to which you reply. Otherwise, how do we know whom you reply to?
This mail may serve as an example. You may keep as much of the original mail as you need to make your reply full and clear. Deleting unwanted portions is advised to save space.
Congrats for a nice start. Best wishes.
gopal.


On Fri, Nov 22, 2019 at 4:27 PM பாலாஜி சாம்பமூர்த்தி <balaji.sa...@gmail.com> wrote:
மதிப்பிற்குரிய ஐயா, முதற்கண் உங்களுடைய பதில் பதிவிற்கு நன்றி. . . .  .

N. Ganesan

unread,
Nov 22, 2019, 6:22:52 AM11/22/19
to சந்தவசந்தம்
நிறைக்கூறல் - பிழை.

நிறைகூறல், குறைகூறல், ...

நா. கணேசன்

பாலாஜி சாம்பமூர்த்தி

unread,
Nov 22, 2019, 6:53:23 AM11/22/19
to சந்தவசந்தம்
Dear Mr. Gopal, how thoughtless of me to have missed something as trivial as that. Many thanks for pointing it out. Hope I have got it right at least now!

Regards,
Balaji

பாலாஜி சாம்பமூர்த்தி

unread,
Nov 22, 2019, 6:55:23 AM11/22/19
to சந்தவசந்தம்
திருத்திய மைக்கு மிக்க நன்றி ஐயா!

N. Ganesan

unread,
Nov 24, 2019, 2:53:39 PM11/24/19
to Santhavasantham
On Thu, Nov 21, 2019 at 9:12 PM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
புதிதாகவே இருக்கிறது. ஏகதந்தன், ஒற்றை மருப்பன் என்றே பார்த்திருக்கிறேன். 

ஒருகோட்டன் - மாதவச் சிவஞான முனிவர் - காஞ்சிப் புராணம்.

குமாரக் கடவுள்

     முருகோட்டந் தரப்பாயும் மும்மதமும் ஊற்றெடுப்ப முரிவிற்கோட்டும், 

     ஒருகோட்டு மழகளிற்றை இருகோட்டு முதுகளிறா  உலவக் காட்டிப், 

     பருகோட்ட நறைவேட்டுப் பைங்கோட்டுத் தினைப்புனத்துப் பரண்மேற் கொண்டு, 

     குருகோட்டும் பெடைமணந்த   குமரகோட் டத்தடிகள் குலத்தாள் போற்றி.                     8

     பறவைகள் தினைப்புனத்து வீழாமே கடியும்;வள்ளியம்மையாரின்
இதழமுதம் விரும்பி, உபசார மும்மதமும், ஒருகொம்பும், இளமையும் உடைய
யானைவடிவினராகிய விநாயகப் பெருமானை உண்மையாகவே மும்மதமும்,
இருதந்தமும், முதுமையும் உடைய யானையாகப் பரண்முன் வருவித்து
அவ்வம்மையை மணந்த குமரகோட்டப் பெருமான் திருவடிகள் காப்பதாக!

 நா. கணேசன்

சித்திரங்களில் ஒரு தந்தம் முழுதாகவும் மற்றொரு தந்தம் பாதி உடைந்தது போல் இருக்கும். அதனால் ஒன்றரைக் கோடன் என்று வைத்தார் போலும். 


சரண்யா 

On Fri, 22 Nov 2019 08:26 Siva Siva, <naya...@gmail.com> wrote:
ஒன்றரைக் கோடன்? புதிய பிரயோகமோ?

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 24, 2019, 2:56:27 PM11/24/19
to Santhavasantham
மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர் 
ஆட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் - கேட்டிலையோ 
குட்டி மறிக்கவொரு கோட்டானையும் பெற்றாள் 
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண் .  ~காளமேகம்

பாலாஜி சாம்பமூர்த்தி

unread,
Nov 25, 2019, 3:28:08 AM11/25/19
to சந்தவசந்தம்
சான்றோர் அருளியதை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி.

"இதை அப்படியே ஏற்று இந்த ப்ரயோகத்தை மாற்றியமை" என்று என்னிடம் இப்போது சொல்லும் அதே மனம்தான் நன்கு சிந்தித்து இந்த ப்ரயோகத்தைத் தந்தது. புதிய நாமத்தை பிள்ளையாருக்கு சூட்ட வேண்டுமென்றோ தமிழ்க் கவிதைக்கு ஒரு புதிய சொல்லாட்சியை அளிக்க வேண்டுமென்றோ அதிகப்ரசங்கம்‌ ஒருக்காலும் எனக்கில்லை.

தர்க்கம் செய்வது என் நோக்கமுமல்ல, எனக்குத் தகுதியுமில்லை (considering the company) என்று நன்கு அறிவேன். ஆனால் ஐயப்பாடு நீங்கித் தெளிவடைவதே என் நோக்கம். தோன்றியதைக் கீழே கூறியுள்ளேன்; இப்போது மனதில் கனமில்லை. இனி அறிஞர்களாகிய தங்களின் அறிவுரைப் படி நடக்கிறேன்.

"ஒற்றைக் கோடு" சரி என்பதற்கு ஏராளமான references இருப்பதோடு (including अथर्वशीर्ष), தந்தம் என்ற உறுப்பு, முழுதாக இருந்தாலன்றி அதை தந்தம் என்று கூற இயலாது; அதனாலேயே ஏகதந்தம் என்பது logical-ஆகவும் இருக்கிறது.

ஆயினும், எனது தாழ்மையான கருத்தாவது, "ஒன்றரைக் கோடன்" என்ற பயன்பாடும் ஒரு கோணத்திலிருந்து சரியென்பதாகும். 3 காரணங்கள்.
1. உடைத்த இடத்தில் ஒட்டிக் கொண்டு இருப்பது முன்பு முழுமையான கோடாக இருந்ததே. ஆக, பாதி தந்தம் இன்னமும் முகத்தில் ஓட்டிக் கொண்டு உள்ளது. அந்த அரைக் கோடை வர்ணனையில் விட்டுவிட மனம் சற்று தயங்கியது.
2. விநாயகர் அகவலில் ஔவையார் எண்ணிக்கைகள் நிறைய பயன்படுத்தி உள்ளார் என்பதை நாம் அறிவோம்: 5 கரம், 3 கண், 2 செவி‌ etc.,). இதற்கு ஒரு காரணம், நாம் விநாயகரை தியானிப்பதற்கு vivid description of the features தேவைப்படுகிறது. "அருள் வடிவம்ய்க் காட்சி தருகிறார்" எனப் பொருள்பட ஒரு nuanced description-ஐ அவர் எழுதியிருக்கலாம் அல்லவா? மேற்கோள் காட்டப்பட்ட இத்தகைய vivid description of the feature-ஐ நான் கையாள முயற்சித்தேன், என் (நிஜமான) சிற்றறிவுக்கு எட்டியபடி.
3. தந்தம் பிடுங்கப் படவில்லை, உடைக்கப்பட்டது என்பதற்கு கணேச புராணத்தில் reference இருப்பதாகக் கேள்விப்பட்டதுண்டு (நான் first-hand-ஆக படிக்கவில்லை; அறிஞர் பெருமக்களின் அறிவூட்டல் தேவை)

தவறான எண்ணத்துடன் எழுதவில்லை; வார்த்தையில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.

பணிவன்புடன்


பாலாஜி சாம்பமூர்த்தி

N. Ganesan

unread,
Nov 25, 2019, 5:35:14 AM11/25/19
to Santhavasantham
சிவஞான சித்தியார்
காப்புச் செய்யுள்

எண்ணலங்காரம்

பாடல் எண் : 1

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே.

கங்கையாறுங் கோணுதலைத் தரும் அழகிய பிறையுங் கொன்றை மாலையுமுடைத்தாய்த் தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் பிள்ளையாகத்தந்த தேவன், ஒரு கொம்பையும் இரண்டு செவியையும் மூன்று மதத்தையும் நான்றவாயையும் ஐந்து கரத்தையு முடையோனாகிய ஒப்பற்ற யானையினது தாள்கள் உள்ளம் உருகுதலைச் செய்வதாகிய அன்போடுகூடி வந்தித்து ஒழியாது இரவும் பகலும் நினைப்போரது நெஞ்சில் திருக்கை ஈண்டணுகாவண்ணம் துரக்கும். பிரம விஷ்ணுக்கள் பதங்களும் ஒன்றல்லவென்ன மிக்க வீட்டின்பத்தையும் உண்டாக்கும்.  
 

RAJAGOPALAN APPAN

unread,
Nov 25, 2019, 5:51:26 AM11/25/19
to santhav...@googlegroups.com
இரண்டு கண்களும் இருந்தாலும், பார்வையற்ற நிலையில், 'பாவம் கண்ணில்லாதவன்' என்று கூறுவதுபோல, உடைந்த கொம்பு பயனற்றுப் போவதால் இருப்பதாகக் கருதப்படுவதில்லை. 

அ.ரா.

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

பாலாஜி சாம்பமூர்த்தி

unread,
Nov 25, 2019, 6:42:31 AM11/25/19
to சந்தவசந்தம்
இம்முறைச் சந்தேகம் எழுந்தது தருமிக்கு (ஸாக்ஷாத் அடியேன்!), தீர்த்து வைத்தது நக்கீரர் (நக்கீரர்கள்), திருவிளையாடலை நிகழ்த்தியது ஒன்றரைக் கோடன், ஐ மீன், ஒற்றைக் கோடன் :-)

அறிவும் தெளிவும் ஊட்டிய அனைவர்க்கும் நன்றி!

Reply all
Reply to author
Forward
0 new messages