ஈற்றடி : அடிமூன் றளந்தா னடி

1 view
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
2:53 PM (7 hours ago) 2:53 PM
to santhavasantham
“வெண்பா விருந்து” என்ற புலனத்தில் கொடுத்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாக்கள்

ஈற்றடி ஒன்று, கருத்து ஒன்று, வெண்பா மூன்று

ஈற்றடி:

அடிமூன் றளந்தா னடி

வையத்தில் தன்னடியால் வன்துயரம் தீர்த்தருளி
மெய்யடியார் சிந்தைமிசை மேவிநிற்கும் - ஐயன்
வடிவாலே வாமனனாய் வான்மண் தொடர்ந்தே
அடிமூன் றளந்தா னடி.

வையத்தில் தன்னடியால் வன்துயரம் தீர்த்தருளி
மெய்யடியார் சிந்தைமிசை மேவிநிற்கும் - ஐயன்
வடிவாலே வாமனனாய் மாபலிசி ரத்தில்
அடிமூன் றளந்தா னடி.

மாயவனே அந்தணனாய் மண்ணுடன் விண்ணளந்துத்
தீயவனாம் மாபலியைத் தீர்த்திடத் - தூய
வடிவினிலே வாமனனாய் மன்னன் தலையில்
அடிமூன் றளந்தா னடி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
12/06/2026
Reply all
Reply to author
Forward
0 new messages