3) பின்பு இராமாயணம் பாடியது யார்?கம்பருக்கு விரோதியான அக்காலத்திய பிரபல புலவன் வாணியன் தாதனே இராமாயணத்தைப் பாடியிருக்கக் கூடும் என்கிறார் மு.இரா.இதற்கு ஆதாரங்கள்: முதலில், கூத்தர் இராமாயணம் பாடியதாகச் சொல்லத்தக்க ஆதாரங்கள் எதுவுமில்லை.
On 28 Sep, 19:56, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> இவற்றைப் பற்றித் தற்போது அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்குத்
> தெரியாது.
> என்னிடம் இருக்கும் குறிப்புகளை வைத்துச் சொல்கிறேன்:
>
> 1) "கூத்தர் காலத்தே புகழேந்திப் புலவரும் பெரும்புலவராய் விளங்கினார் என்பது
> தெளிவாகின்றதாயினும், அவ்விருவர்க்கும் பெரிய மாற்சரியம் உண்டானதென்று கொண்டு
> பற்பல கதைகள் கற்பிக்கப் பட்டு வழங்கி வருவதை நூலாராய்ச்சியுடையார் நம்பக்
> கூடவில்லை"
> மு.இராகவய்யங்கார், 'செங்குந்த பிரபந்தத் திரட்டு ஆராய்ச்சியுரை'
இந்தத் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் ஒருநூலை தமிழ்மரபு அறக்கட்டளை
தற்போது மின்பதிப்பாக வழங்கியிருக்கிறது. ஆசிரியர்: வவேசு ஐயர். தமிழ்
மரபு அறக்கட்டளை இது குறித்து அறிவிப்பாக அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி
இது:
=========================
! தமிழ் மரபு அறக்கட்டளை மின் நூல்கள் வரிசையில் மேலும் ஒரு நூல் இன்று
சேர்க்கப்படுகின்றது. !!
நூலின் பெயர்: வ.வே.ஸூ.ஐயர் எழுதிய கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை
(நூல் எண்: 150)
மின்பதிப்பாக்கம்:திரு.இன்னம்புரான் (உதவி திரு.கௌதம்)
மின்னூலாக்கம்: திருமதி.சுபாஷினி ட்ரெம்மல்
==========================
கம்பனுடைய காலத்தைப் பற்றி ரா ராகவையங்கார் செய்துள்ள ஆய்வைத் தாம்
ஏற்றுக்கொள்ளவில்லை என்று வவேசு ஐயர் சொல்கிறார். ஒட்டக்கூத்தர்
உத்தரகாண்டத்தைப் பாடியதைப் பற்றிய தன்னுடைய கருத்தையும்
சொல்லியிருக்கிறார்.
இந்த இடத்தில் http://ebooks.tamilheritage.org/ 150வது பதிப்பாக
இடம்பெற்றுளது இந்நூல்.