அன்புள்ள அனந்த் அவர்கட்கு,
இராஜ. தியாகராஜனின் வணக்கம்.
உங்களின் NHM பிரச்சனை பற்றி இங்கு கணினி ஆர்வலர்களுடன் கலந்தாலோசித்துக்
கொண்டிருக்கிறேன். ஏனெனில் விண்டோஸ் XP pro& home/2000 prem & pro/
விண்டோஸ் 2003 வழங்கி ஆகிய இயங்கு தளங்களில் NHM நன்றாகவே வேலை
செய்கின்றது. எனது நண்பரின் விஸ்டாவில் மிகவும் நன்றாக வேலை செய்வதாகக்
கூறுகிறார் (NHM 1.5.1.1 Beta ). என்னைப் பொறுத்தவரை விண்டோஸ் 2003
அதற்கு மேம்பட்ட மைக்ரோ ஃசாப்ட் இயங்கு தளங்களில் NHM நன்றாக இயங்கும்
போது, விஸ்டாவில் இயங்க நிச்சயம தடை இருக்காது. ஒன்று செய்யுங்கள்
உங்களின் NHM writerஐ முழுவதுமாக எடுத்துவிட்டு, மீண்டும்
நிறுவிப்பாருங்கள். அப்படி எடுக்க இயலாவிடில், ஒரு ஆபத்தான வழி ஒன்று
இருக்கிறது. உங்கள் Registryஐ backup செய்துவிட்டு, regedit வாயிலாக NHM
writerக்கான எல்லா தொடர்புகளையும் Registryஇல் இருந்து தூக்கிவிட்டு,
பின்னர் நிறுவினால் NHM writer நிறுவுவதற்கு தடை இல்லாமல் போகும்.
மடிக்கணினி பற்றி சொன்னால் அதில் இருக்கும் எக்ஸ்பி இயங்குதளம் வேறுவகை.
அதில் இயங்குமா என்று நான்
இன்னும் பரிசோதிக்கவில்லை.
இந்த ஒடித்துப் போடும் வேலையில் நமக்கு ஏதும் பங்கில்லை. ஏனெனில், ஆங்கில
எழுத்துருக்கள் 26; இருபத்தாறும் ஒரே gliph வடிவம். ஆனால் தமிழில்
இருக்கும் 247 + 90 (வடமொழி எழுத்துருக்கள்: ஷ, ஜ, ஹ, ஸ போன்றவை)
எழுத்துருக்களை வெறும் 110 இடங்களில் கொண்டு வரவேண்டி இருப்பதால்,
அச்சடிக்கும் போது வலையுலாவி/ மடற்செயலிகள் tamil font render செய்யும்
போது எடுத்துக் கொள்ளும் இடம் அதிமாகும் போது தானாகவே மடக்கிப் போட்டு
விடுகின்றன. இதற்கு ஒரே வழி, பாப் மடல் வழியாக பதிலை அனுப்பாமல் கூகுள்
வெப் மெயில் வலைப் பக்கத்திலிருந்து உங்கள் மடல்களை அச்சடித்துப்
பாருங்கள். சரியாக இருக்கும்.
இவண் அன்பன்,
இராஜ. தியாகராஜன்.
www.pudhucherry.com
On Oct 25, 6:58 am, "VETTAI ANANTHANARAYANAN" <
gan...@gmail.com>
wrote: