உலகக் கவிதை தினம் - March 21

7 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
7:22 AM (12 hours ago) 7:22 AM
to santhavasantham


IMG_1032

GEMINI - AI created image/ redone in Claude for spelling corrections.

கலிவெண்பா

வான்மழைக் காலத்தே வையத்தோர்

மேன்மையுறத்

தான்பெய்து வெள்ளம் ததும்பிட, - வேனிலில்

ஏரி குளம்யாவும் ஏற்றமுறச் சேலினங்கள்

ஓரடி மேலெழும்பல் ஊற்றொக்க, -

கூர்மூக்குக்

கொக்கொடு நாரையும் கோலமாய்

நின்றிருக்கப்

புக்ககமாம் பூமி மடிகுளிரச் - செக்கர்

வயலெங்கும் நெற்பயிர் வானென ஓங்கத்

துயரிலா ஏருழவன் துய்க்க - இயல்பாய்ச்

செடிகொடி மாமரங்கள் தீங்கனி நீட்ட

அடிமுதலாய்க் காடுமலை காக்க - வடிவுடனே

காற்றும் புனலும் கழனிகளும் மாசற

ஏற்றத்தில் புட்கள் இசையெழுப்ப - ஆற்றுநீர்

ஆழ்கடல் சேர்க்கையில் ஆங்கொன்றாய் 

முத்தெழும்பச்

சூழும் உழைப்பே துறக்கமென - வாழ்வகையில்

ஆட்சியர் மக்கட் கரும்பணி யாற்றிட

மாட்சியுறப் பெண்ணினம் போற்றிட -

வேட்டுமவ்

வன்பும் பெருகிட ஆன்மிகம் ஓங்கிடத்

துன்பமிலா வாழ்க்கைத் துணைவர - இன்பத்தில்

பிள்ளைகளும் கல்விப் பெருதனத்தைத் 

தாமுணரத்

தெள்ளுதமிழ்க் காவியங்கள் சீர்ப்படுத்த - விள்ளுமனச்

சாதிமதப் பாதகத்தைத் தள்ளுவகை ஒற்றுமையே

நீதியென ஓங்கி நிலைத்திட- வேதநெறி

இவ்வுலகில் அன்புவிதைச் செவ்வனே தான்விதைக்க

அவ்வியம் கவ்வா அருமைத்தாம் - எவ்விடமும்

விஞ்ஞான மேன்மையில் விஞ்சும் புதுமைகள்

எஞ்ஞான்றும் நாட்டில் எழுச்சிபெற - அஞ்சுவகைச்

சீரழிக்கும் போர்கள் செகமதில் நீக்கிட

யாருக்காம் போரிடல் என்பதை - ஊர்கேட்க

மார்ச்சி ருபத்தொன்றில் மாண்பின் கவிதைநாள்

கீர்த்திபெற நாம்முயல்வோம் கேடற - ஆர்த்துக்

கவிபடைப்போம் காணும் கனவுகள் யாவும்

புவியில் நிலைக்கப் புனைந்து.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

இமயவரம்பன்

unread,
7:45 AM (11 hours ago) 7:45 AM
to santhav...@googlegroups.com, santhavasantham
படத்திற்கேற்ற பாட்டு, பாட்டிற்கேற்ற படம்! மிகச் சிறப்பு! 

- இமயவரம்பன் 

On Mar 22, 2026, at 7:22 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

Rajagopalan Soundararajan

unread,
7:46 AM (11 hours ago) 7:46 AM
to சந்தவசந்தம்
உலக அமைதி நாடி. . 

படைக்கலம் யாவும் ஒழித்துப்

. . பாரெங்கும் அமைதி சூழத், 

துடைத்தெறி பகைகள் இன்றே

. . தூயநல் லருளே பொங்க, 

மிடைக்கின்ற வேற்று மைகள் 

. . விரைந்துதாம்  மறைந்து போகத் 

தொடைபயில் மாலை சூட்டித்

. . தொழுதனம் அருளு வாயே!


On Sunday, 22 March 2026 at 07:22:38 UTC-4 Ram Ramakrishnan wrote:


Ram Ramakrishnan

unread,
7:54 AM (11 hours ago) 7:54 AM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 22, 2026, at 17:15, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/396A33C0-CE47-45D8-8761-8CF19D9984BB%40gmail.com.

இமயவரம்பன்

unread,
8:49 AM (10 hours ago) 8:49 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
“தொடைபயில் மாலை” 

மிக அருமை, திரு ஸெளந்தர்! 

- இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
11:54 AM (7 hours ago) 11:54 AM
to சந்தவசந்தம்
கவிதைநாள் வெல்லக் கவின்இயற்கை பாடிப் 
புவிபோற்றக் கொண்டீர் புகழ்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
IMG_1032.png

Ram Ramakrishnan

unread,
12:24 PM (7 hours ago) 12:24 PM
to santhav...@googlegroups.com
ஆகா! வந்ததே இயற்கை வளத்திற்கு வாழ்வு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 22, 2026, at 21:25, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:


கவிதைநாள் வெல்லக் கவின்இயற்கை பாடிப் 
புவிபோற்றக் கொண்டீர் புகழ்!

On Sun, 22 Mar 2026, 4:52 pm Ram Ramakrishnan, <ramr...@gmail.com> wrote:


<IMG_1032.png>
Reply all
Reply to author
Forward
0 new messages