
வான்மழைக் காலத்தே வையத்தோர்
மேன்மையுறத்
தான்பெய்து வெள்ளம் ததும்பிட, - வேனிலில்
ஏரி குளம்யாவும் ஏற்றமுறச் சேலினங்கள்
ஓரடி மேலெழும்பல் ஊற்றொக்க, -
கூர்மூக்குக்
கொக்கொடு நாரையும் கோலமாய்
நின்றிருக்கப்
புக்ககமாம் பூமி மடிகுளிரச் - செக்கர்
வயலெங்கும் நெற்பயிர் வானென ஓங்கத்
துயரிலா ஏருழவன் துய்க்க - இயல்பாய்ச்
செடிகொடி மாமரங்கள் தீங்கனி நீட்ட
அடிமுதலாய்க் காடுமலை காக்க - வடிவுடனே
காற்றும் புனலும் கழனிகளும் மாசற
ஏற்றத்தில் புட்கள் இசையெழுப்ப - ஆற்றுநீர்
ஆழ்கடல் சேர்க்கையில் ஆங்கொன்றாய்
முத்தெழும்பச்
சூழும் உழைப்பே துறக்கமென - வாழ்வகையில்
ஆட்சியர் மக்கட் கரும்பணி யாற்றிட
மாட்சியுறப் பெண்ணினம் போற்றிட -
வேட்டுமவ்
வன்பும் பெருகிட ஆன்மிகம் ஓங்கிடத்
துன்பமிலா வாழ்க்கைத் துணைவர - இன்பத்தில்
பிள்ளைகளும் கல்விப் பெருதனத்தைத்
தாமுணரத்
தெள்ளுதமிழ்க் காவியங்கள் சீர்ப்படுத்த - விள்ளுமனச்
சாதிமதப் பாதகத்தைத் தள்ளுவகை ஒற்றுமையே
நீதியென ஓங்கி நிலைத்திட- வேதநெறி
இவ்வுலகில் அன்புவிதைச் செவ்வனே தான்விதைக்க
அவ்வியம் கவ்வா அருமைத்தாம் - எவ்விடமும்
விஞ்ஞான மேன்மையில் விஞ்சும் புதுமைகள்
எஞ்ஞான்றும் நாட்டில் எழுச்சிபெற - அஞ்சுவகைச்
சீரழிக்கும் போர்கள் செகமதில் நீக்கிட
யாருக்காம் போரிடல் என்பதை - ஊர்கேட்க
மார்ச்சி ருபத்தொன்றில் மாண்பின் கவிதைநாள்
கீர்த்திபெற நாம்முயல்வோம் கேடற - ஆர்த்துக்
கவிபடைப்போம் காணும் கனவுகள் யாவும்
புவியில் நிலைக்கப் புனைந்து.
On Mar 22, 2026, at 7:22 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
படைக்கலம் யாவும் ஒழித்துப்
. . பாரெங்கும் அமைதி சூழத்,
துடைத்தெறி பகைகள் இன்றே!
. . தூயநல் லருளே பொங்க,
மிடைக்கின்ற வேற்று மைகள்
. . விரைந்துதாம் மறைந்து போகத்
தொடைபயில் மாலை சூட்டித்
. . தொழுதனம் அருளு வாயே!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/396A33C0-CE47-45D8-8761-8CF19D9984BB%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0D1E5409-FB4A-41C6-9E19-1899B5DE4D5F%40gmail.com.
On Mar 22, 2026, at 21:25, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
கவிதைநாள் வெல்லக் கவின்இயற்கை பாடிப்புவிபோற்றக் கொண்டீர் புகழ்!
On Sun, 22 Mar 2026, 4:52 pm Ram Ramakrishnan, <ramr...@gmail.com> wrote:
<IMG_1032.png>
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYEot7ys_ZkZAtPGgzNepVP-gfnAHHRFuHOVZso-9c6hw%40mail.gmail.com.
<IMG_1032.png>