வைகாசி விசாகம் - நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்

11 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
May 29, 2026, 11:13:05 PM (7 days ago) May 29
to சந்தவசந்தம்
வைகாசி விசாகம் – ப்ரபன்ன ஜன கூடஸ்தரான நம்மாழ்வாரின் திருநக்ஷத்ரம்! அவர் திருத்தாளில் இந்த ஐந்து கலிவிருத்தப் பாக்களைச் சமர்ப்பிக்கிறேன்


குருகூர் நாயகனைக் குறித்தே வாழ்ந்தாய்
திருசேர் நாரணனை நமக்கே என்றாய்
அருள்சேர் சரணநெறி அமுதால் ஈந்தாய்
இருள்சேர் வினைமுழுதும் இலையாய்க் காத்தாய்
(அமுது- தமிழ்)

பணிந்தேன் வைகாசி விசாகத் தானே
அணிந்தேன் பாதமதை சிரசில் நானே
துணிந்தேன் நல்வழிநீ வகுத்த வாறே
மணிந்தேன் மால்தரும் மடியில் மாறா
( மணிந்தேன் - அழகுற்றேன்)

தெளிவாய் மறைபொருளே தெரியக் காட்டித்
துளியும் பிணக்கறநல் பொருளைத் தேற்றி
அளியன் இவனெனவுன் அருளைக் கூட்டி
விளிசெய் வகுள!விரி விருந்தே போற்றி

திருமால் குணங்களையே திறமாய்க் கோத்தாய்
வருநாள் சிறந்திடநல் வழியே இட்டாய்
கருவாய் இனியென்றும் கனிதல் காத்தாய்
ஒருநாள் உயர்வுசொல உறுமோ நம்பீ

குறிப்பால் அருத்தபஞ்ச கமெலாம் சொல்லிக்
குறிப்பால் அமைகண்ணன் பொருளைப் பாற்றிக்
குறிப்பால் பரமனவன் எளிமை மூழ்கிக்
குறிப்பால் எமைக்கொண்ட குருவே போற்றி

_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

இமயவரம்பன்

unread,
May 30, 2026, 4:07:32 AM (7 days ago) May 30
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
சிறப்பான பாடல்கள்!

திருசேர் = திருச்சேர் என்று வரும் என நினைக்கிறேன்.

Kaviyogi Vedham

unread,
May 30, 2026, 11:15:53 AM (7 days ago) May 30
to santhav...@googlegroups.com
not  necy. aseeraa  says  oru  hyphen    - pottal  pochchu,
 yo

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/BE9E1E08-CF22-41A8-ABB1-8AD05C836C8F%40gmail.com.

Kaviyogi Vedham

unread,
May 30, 2026, 11:16:59 AM (7 days ago) May 30
to santhav...@googlegroups.com
attakasam   parthaa. vazga,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Parthasarathy S

unread,
May 31, 2026, 12:29:21 AM (6 days ago) May 31
to சந்தவசந்தம்
நன்றி திரு யோகியாரே!
Reply all
Reply to author
Forward
0 new messages