--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CEB9F756-0278-4FDD-8E16-C9800FBD94A0%40gmail.com.
*அருளே சிவமே!*
பொன்னரும் மின்னுடற் புனலருட் சடைமுடிப்
பின்னலுள் வெண்மதிப் பிறைமுடிந் தினிந்தாய்
தன்னருட் திரளெனத் தனிமையி லிருந்தாய்!
என்னருள் விளக்கே! எனுள்எழுந் தருளே!
கரிவுரி தரித்தாய்! கனல்கரம் பதித்தாய்!
பரிவருள் கரத்தால் பயமழித் துதித்தாய்!
வரிமழு டமரம் வருமொலி இசைத்தாய்!
விரிபுவ னதிபா! விடையமர்ந் தருளே!
இடப்பதம் எடுத்தாய்! எமபயம் கெடுத்தாய்!
தடப்படும் முயலகன் தலைக்கனம் அவித்தாய்!
விடப்புனல் குடித்தாய்! விடிவருள் கொடுத்தாய்!
திடப்பட எனக்கருட் திசையுகந் தருளே!
பூசிடுஞ் சாம்பல் புனைமலர் அரவம்
வீசிடுந் தணல்நீர் விளைமழு வுடன்மான்
நாசியில் வேதம் நயந்ததுன் நடனம்
காசினிக் கேபுகல்! கதிஎனக் கருளே!
உருவெனிற் சுந்தரம்! அருவெனில் மந்திரம்!
அருவுரு வெனுஞ்சிவ லிங்கமுன் யந்திரம்!
தருவென முப்புரம் தரவிரிந் தனையே!
குருவென என்மனம குடிபுகுந் தருளே!
மீ. ரா
12-6-2026