மை என்னும் பொய் - வெண்பாப் போட்டிக் கவிதை

5 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Nov 20, 2025, 7:59:32 AM (6 days ago) Nov 20
to santhavasantham

“பைந்தமிழ்ச் சோலை” என்னும் முகநூல் குழுமம் நடத்திய வெண்பாப் போட்டியில், “கண்ணிற்பொய் கொண்டீர்கொல் காரிகையீர்  - கண்ணிறைந்த” என்று கொடுக்கப்பட்ட இரண்டாம் அடிக்கு அடியேன் எழுதிய வெண்பா:

*மை என்னும் பொய்

(நேரிசை வெண்பா)

உண்மைக்கண் நின்ற உளம்புக்(கு) உயிரீரும் 

கண்ணிற்பொய் கொண்டீர்கொல் காரிகையீர்  - கண்ணிறைந்த

வாய்ச்சொல் மொழிந்தென்றன் வாழ்வெல்லாம் கொய்யாதே

ஏய்ப்பற் றெனக்கிரங்கீர் இன்று.

[உண்மை = கண்கள் உண்ணும் மை அல்லது எனது உயிரை உண்ணும் மை; மைக்கண் நின்ற = மையின் எழில் மீது கொண்ட மையலை விட்டு அகலாமல் நிற்கும்; உளம் புக்கு = (ஆடவர்) நெஞ்சம் புகுந்து; உயிர் ஈரும் = உயிரைப் பறிக்கும்; கண்ணிறைந்த = கள் நிறைந்த]

*தலைப்புக் குறிப்பு:  கண்ணுக்கு எழில்கொடுக்கும் மை போல் பொய்த்தோற்றம் கொண்டு உண்மையில் காண்போர் உயிர்பறிக்கும் கூற்றாக இருப்பதால், “மை என்னும் பொய்” என்னும் தலைப்பை இவ்வெண்பாவுக்குக் கொடுத்திருக்கிறேன். 

- இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Nov 20, 2025, 8:21:10 AM (6 days ago) Nov 20
to சந்தவசந்தம்
அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/C11BCC42-3456-4E39-BD62-D8EF4D287B71%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Nov 20, 2025, 8:47:43 AM (6 days ago) Nov 20
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 20, 2025, at 18:29, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

--

Lalitha & Suryanarayanan

unread,
Nov 20, 2025, 9:02:21 AM (6 days ago) Nov 20
to santhav...@googlegroups.com
அருமை !

சிவசூரி.

On Thu, Nov 20, 2025 at 6:29 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

“பைந்தமிழ்ச் சோலை” என்னும் முகநூல் குழுமம் நடத்திய வெண்பாப் போட்டியில், “கண்ணிற்பொய் கொண்டீர்கொல் காரிகையீர்  - கண்ணிறைந்த” என்று கொடுக்கப்பட்ட இரண்டாம் அடிக்கு அடியேன் எழுதிய வெண்பா:

.

இமயவரம்பன்

unread,
Nov 20, 2025, 9:42:03 AM (6 days ago) Nov 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புடன் வாழ்த்திய திரு. பழனியப்பன், திரு. ராம்கிராம், சிவசூரியார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி!

On Nov 20, 2025, at 9:02 AM, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Nov 21, 2025, 3:07:13 AM (5 days ago) Nov 21
to சந்தவசந்தம்
என் முயற்சி 

மண்ணிற்பொய் கொண்டுலவும் மாந்தர் உயிர்கவரக்
கண்ணிற்பொய் கொண்டீர்கொல் காரிகையீர்  - கண்ணிறைந்த
பொய்யான மைவேண்டாம் ; போற்றும்வாய் மைவேண்டும்!
மையாளே உன்வாய் மலர்!

அரசி. பழனியப்பன் 

On Thu, 20 Nov 2025, 6:29 pm இமயவரம்பன், <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 21, 2025, 4:28:08 AM (5 days ago) Nov 21
to santhav...@googlegroups.com
அடடாவோ அடடா!  அழகுக்கு மேலழகு!

சிவசூரி.

Ram Ramakrishnan

unread,
Nov 21, 2025, 4:50:21 AM (5 days ago) Nov 21
to santhav...@googlegroups.com
ஆகா! கவிதை எழிலாய் நடைபோடுகின்றது.

செப்பலோசை அருமையாக அமைந்த வெண்பா, திரு. பழனியப்பன்.

வாழ்க.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Nov 21, 2025, 5:00:44 AM (5 days ago) Nov 21
to சந்தவசந்தம்
தங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Nov 21, 2025, 6:24:01 AM (5 days ago) Nov 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு, திரு. பழனியப்பன்!

Arasi Palaniappan

unread,
Nov 21, 2025, 6:26:04 AM (5 days ago) Nov 21
to சந்தவசந்தம்
மிக்க நன்றி. எல்லாம் தங்கள் வெண்பாவை 
அடியொற்றித்தான் இமய வரம்பரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Nov 21, 2025, 6:27:14 AM (5 days ago) Nov 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி, நண்பரே!
Reply all
Reply to author
Forward
0 new messages