Re: நாலும் இரண்டும் ........! : நாலடியார் விளக்கம்

2,733 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Jun 4, 2013, 4:33:40 AM6/4/13
to santhavasantham, Groups

சென்னை...புத்தகக் கண்காட்சி.. கூட்ட நெரிசலில் என்கைப்பட்டு விழுந்தது ஒரு புத்தகம் ..எடுத்து அடுக்கிவைக்கும் பொழுதுதான் பார்த்தேன் .... முகப்பு ஒருமுனையில் கிழிந்திருந்தது ... குறையோடு மீண்டும் விற்பனை வரிசையில் வைக்க மனமில்லை நானே வாங்கிக் கொண்டேன் ... அது நாலடியார்

தாராபுரம் ஆஞ்சனேயர் கோவில்.. வாசலில் விளக்கு, படம், பூசை சாமான்கள் வாங்கியபின் பணம் கொடுத்தேன்.. கடைப் பாட்டியிடம் மீதம் இல்லை போலும் இந்தாங்கய்யா..இதை வச்சுக்கறீங்களாஎனஎன்னிடம் ஒரு கையடக்கப் பத்தகத்தைக் கொடுத்தார் அவர் எனக்குத் தரவேண்டியது 20 .. புத்தகத்தின் விலையோ 25 ..சிரித்துக்கொண்டே ” கொடுங்க” என வாங்கிக்கொண்டு மீதம் 5ஐக் கொடுக்க பைக்குள் கைவிடும் போதுதான் கவனித்தேன் .... அது நாலடியார் ...

பக்கென்று மண்டைக்குள் ஒரு பொறி.. அந்தப் பாட்டியைப் பார்த்தேன்.. இப்பொழுது அவர் சிரித்துக் கொண்டிருந்தார் .. எதற்காக இந்த 5 ரூபாய்.. ஏதோ செய்தி எனக்கு வருவதாய் உணர்ந்தேன் ...

நாலடியார் .. இதுவரையிலும் அறிமுகமில்லை எனக்கு .. உடனே அறிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன்

[குறிப்பு : பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாகக் குறிப்பிடப்படும் சிறப்புடையது நாலடியார். காலம் கி.பி 250

·         ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

·         'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்'

என்னும்  கூற்றுகளில் வரும் நாலும்என்ற சொல் நாலடியாரையும்  இரண்டும் என்ற சொல் திருக்குறளையும் குறிக்கிறது.

நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும்அறத்துப்பால்பொருட்பால்காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்லநாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது

திருக்குறள் தனியொருவரின்/ திருவள்ளுவரின் படைப்பாகவும், நாலடியார்  சமண  முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.]

’ நாலிரண்டில்’ இரண்டிற்கு வெண்பாவால் விளக்கவுரை எழுதி முடித்தபிறகு , நான்கைப் பற்றி அறியலாம் எனத் தொட்டபின்னரே அறிந்து கொண்டேன் அதன் ஆழம் .. அதற்குத் தரப்பட்ட விளக்கங்களோ அதனிலும் ஆழம் .. முதல் அறிமுகத்திலேயே

​ பாடலை..அதன் அமைப்பிலேயே 
புரிந்துகொள்ள இயலவில்லை எனக்கு..

திருக்குறளுக்கு அமைத்தது போலவே .. நாலடியாருக்கும் செய்யுளின் அமைப்பிலேயே ..எளிமையாய் வெண்பாவில் விளக்கம் தரமுடியுமா ? முயன்றுதான் பார்ப்போமே! என்னும் எண்ணம் மனதுள் எழுந்தது..

திருக்குறளை எடுத்தவுடன் நம்கண்முன் நிற்பவர் வள்ளுவர் ஒருவரே.. உரைக்காக ..அவருடன் மனதளவில் பேசிக்கொண்டே இருந்ததால்.. நட்பாகி..அவருடைய பாக்களின் அமைப்பு , அதனுள் இருந்த ஒழுங்கு , ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிந்தது ..அதனால் பாதியளவு வரும்பொழுதே ஒரு இணக்கம், பிடிப்பு, புரிதல் தன்னால் அமைந்து போனது..

ஆனால்.. நாலடியாரை எடுத்தவுடன் ..முகம் அறியாத

​ நூற்றுக்கும் மேற்பட்ட​
 ஆசிரியர்கள், குருக்கள் நம்மைச் சூழ்ந்து
 ​ நின்று கூர்ந்து​
 கவனித்துக்கொண்டே நிற்பது போன்ற எண்ணம் தோன்றி .. அரங்கத்தில் ஆசிரியர்களுக்கு நடுவில் நிற்கும் ஒருமாணவனின் படபடக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது..  ஓவ்வொரு பாடலும் ஓவ்வொரு கோணத்தில், வீச்சில் , வேகத்தில், விதவிதமான தாக்கத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது ..

அவர்களை உள்வாங்க மிகவும் அதிகமாகவே சிரமப்பட்டேன் .. ஒருவழியாய் ஒத்துப்போய்..அவர்களின் பாக்களுக்கு நான் அமைத்த விளக்க வெண்பாக்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .. J

திருக்குறளுக்கு  விளக்ககுறள் என்னும் உரு வருவதற்கு நீரே கரு, நீரே நீர். அதுபோலவே நாலடியார் விளக்கம் வளர்வதற்கும் இன்னும் தெளிவதற்கும் நீராய் இருந்து ஊக்கம்தர வேண்டுகிறேன்..

பாக்கள் பற்றிய கருத்துக்களை முக்கியமாக குற்றங்களை குறிப்பிட்டு காட்டுங்கள் ..புடம் போட உதவுங்கள்

வாழ்க உறவுகள்

கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.

​விளக்கப் பா :

காலத்தின் கட்டின்றி முன்தோன்றும் வானவில்போல்;

கால்நிலத்தில் பாவாத வானவரை - வாழ்வளிக்கும்

மண்ணைத் தலைதொடத் தாழ்ந்துவணங்(கு) எம்உள்ளத்(து)

எண்ணம் நிறைவுசெய் என்று 

கருத்துகள் வருமெனத் தொடரக் காத்திருக்கிறேன்....

Siva Siva

unread,
Jun 4, 2013, 8:51:17 PM6/4/13
to santhavasantham
Good endeavor! 

Some suggestions:

1) Old works like nAladiyAr may be difficult for many members to understand. Without understanding the original song, it is not possible to comment on your version. Hence, I suggest you post the meaning for the original song as well. Then it will help interested members to comment on your song.

2) If you are planning to post this series in multiple groups, it may be good to keep separate threads for each group - so that any responses from members of one group do not get mixed and get cross-posted in the other groups.

2013/6/4 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

துரை.ந.உ

unread,
Jun 5, 2013, 1:31:02 AM6/5/13
to Groups, santhavasantham
வாழ்க ஐயா ...

தங்களின் பரிவான பார்வைக்கு மிக நன்றி ...
உங்களின் தொடர்கண்காணிப்பில் இருக்க விரும்புகிறேன்..
எண்ணம் நிறைவேற்றி வைய்யுங்கள் 

2013/6/4 Pandiyaraja <pipi...@gmail.com>
மிக்க அருமை அன்பரே!
வெண்பாவுக்கு விளக்கம் வெண்பாவில்! அருமையான கருத்து. தங்களின் வெண்பா எளிமையாகவும் இனிமையாகவும் இருந்தது. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.
பொதுவாக நான் எந்த வெண்பாவைப் பார்த்தாலும் முதலில் தளையைச் சோதிப்பேன். பின்னர் சீர்களை எண்ணுவேன். கொடுக்கப்பட்டுள்ள நாலடியார் வெண்பாவில் தேமா - 4; கூவிளம் - 5, கருவிளம் - 1 ; ஆக ஈரசைச்சீர் மொத்தம் 10; (மூவசைச்சீர்)காய்ச்சீர் 4.
தங்களின் விளக்கப்பாவில்: ஈரசைச்சீர் மொத்தம் 4 ,(மூவசைச்சீர்)காய்ச்சீர் 10.
(தனிச்சீர் தவிர)
சங்கப் பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பா வகையைச் சார்ந்தன. அவற்றில் மிகப் பெரும்பாலும் ஈரசைச் சீர்களே உள்ளன. மூவசைச் சீர்கள் மிகக் குறைவு. அதன் தாக்கம் சங்கம் மருவிய வெண்பாக்களிலும் காணப்படுகிறது.
ஆனால் பிற்காலத்திய - தற்காலத்திய - எந்தப் பா வகையிலும் (ஆசிரியப்பா/வெண்பா)மூவசைச் சீர்களே மிகுந்து காணப்படுகின்றன. இதைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை படித்திருக்கிறேன்.
தொடர்ந்து தங்களின் பாக்களையும் கவனித்து வருவேன். (சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே என்பதுபோல் முதலிலேயே சொல்லிவிட்டேனோ!!!! இது குறை அல்ல - போக்கு. எனவே தங்களின் போங்கில் எழுதுங்கள்.
நன்றி,
மீண்டும் பாராட்டுகள்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
பி.கு: வாய்மையால் என்பதை ஐகாரக்குறுக்கமாக வாய்மயால் என்றுகொண்டு ஈரசையாக எண்ணியிருக்கிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Jun 5, 2013, 1:39:01 AM6/5/13
to santhavasantham

2013/6/5 Siva Siva <naya...@gmail.com>
Good endeavor! 

வாழ்க ஐயா ..​​

Some suggestions:

1) Old works like nAladiyAr may be difficult for many members to understand. Without understanding the original song, it is not possible to comment on your version. Hence, I suggest you post the meaning for the original song as well. Then it will help interested members to comment on your song.

​மிக நன்று ஐயா ... வெளியிடும் விளக்கம் என்னுடையது என்று எடுத்துக் கொள்வார்களோ என்னும் குழப்பம் இருந்தது ..மேலும் ​எனது விளக்கத்தில் நாலடியார் பாக்களில் சான்றோர்கள் சொல்லியுள்ள வரிசையிலேயே (அடிகளை   மாற்றாமல் ) , உள்ளது உள்ளமடியே ( தற்குறிப்புகளை ஏற்றாமல் ...) பொருள்கொள்ள முயற்சி செய்திருக்கிறேன் ..

இனி முயல்கிறேன் ஐயா

2) If you are planning to post this series in multiple groups, it may be good to keep separate threads for each group - so that any responses from members of one group do not get mixed and get cross-posted in the other groups.

​அப்படியே செய்கிறேன் ஐயா​

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
துரை.ந.உ

unread,
Jun 5, 2013, 8:42:53 AM6/5/13
to santhavasantham
2.

இளமை நிலையாமை :

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.

16

விளக்கம் வெண்பா / என்பா :

வெறிகொண்டப் போர்க்களத்தில் வேல்வீரன் கையின்

அறுக்காப்போர் மாலையைக்கண் முன்கண்ட கன்று

மறித்ததை உண்ணும் நிலையில்லா இன்பம்

அறிவுடையோர் கொள்வதில்லை யாம்

என் விளக்கம்:

வெறியாடும் போர்க் களத்தில்வெறிகொண்ட வேல்வீரனின் கையில் கட்டியுள்ள போருக்கான பூமாலையைக் கண்முன் கண்ட இளம்கன்று . அதை உண்ணத் தொடங்கி ( இருக்கும் இடம் பற்றியும் , பின் விளைவுகளையும் ,இதன்மூலம்  ஆகப்போகும் தன் நிலையையும் பற்றி அறியாமல்) ..அதனால் இன்பம் அடைவது போன்றுநிலையில்லாத .... 
இளமையை இன்பமெனக்கொண்டு  மகிழ்தல்அறிவுடையோரிடத்தில்  இல்லை! 

கருத்துகள் வரக் காத்திருக்கிறேன் 

Siva Siva

unread,
Jun 5, 2013, 8:54:46 AM6/5/13
to santhavasantham
I think you have provided explanation for your song. What I intended to state earlier was - "it will be good if you can provide the explanation of the original nAladiyAr song from a good urai'. Please also provide info as to the original book or author whose urai is provided for the nAladiyAr song.

Thanks.

2013/6/5 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Siva Siva

unread,
Jun 5, 2013, 9:31:11 AM6/5/13
to santhavasantham
Google search for nAldaiyAr urai returned:
2) Tamilvu.org also has a urai.
-----

By the way, is your effort to cover all songs of nAladiyAr or only some selected songs?

2013/6/5 Siva Siva <naya...@gmail.com>

துரை.ந.உ

unread,
Jun 7, 2013, 12:33:05 AM6/7/13
to santhavasantham
3. யாக்கை நிலையாமை : (உடலின் நிலையற்ற நிலை)

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் -மணங்கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.

25

 Inline image 1

விளக்கம் :

கூடிநின்று சுற்றம்'’ஓ’’’' என்றலற செத்தவரின்

கூட்டோடு காடுசெல்வோர்க் கண்டபின்பும்-வீட்டினுள்வாழ்(வு)

உண்டுண்டுண்(டு) என்றெண்ணம் கொண்டோர்க்(கு) உரைக்குமே

டொண்டொண்டொண் என்னும் பறை

​.​

2013/6/5 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
2.
1 nn.png

துரை.ந.உ

unread,
Jun 7, 2013, 12:41:38 AM6/7/13
to Groups, santhavasantham

2013/6/5 கி.காளைராசன் <kalair...@gmail.com>
தலைவருக்கு வணக்கம் .

ஹா ஹா ஹா ..ஐயா ..என்ன இது :)))

இப்படிக் கிண்டல் பண்ணீட்டீங்க :))
​​

இரண்டிலிருந்து நாலுக்குச் சென்று விட்டீர்கள்.

வாழ்த்துகள் ஐயா.
அன்பன்
கி.காளைராசன்

2013/6/4 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

சென்னை...புத்தகக் கண்காட்சி.. கூட்ட நெரிசலில் என்கைப்பட்டு விழுந்தது ஒரு புத்தகம் ..எடுத்து அடுக்கிவைக்கும் பொழுதுதான் பார்த்தேன் .... முகப்பு ஒருமுனையில் கிழிந்திருந்தது ... குறையோடு மீண்டும் விற்பனை வரிசையில் வைக்க மனமில்லை நானே வாங்கிக் கொண்டேன் ... அது நாலடியார்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
துரை.ந.உ

unread,
Jun 11, 2013, 3:11:56 AM6/11/13
to santhavasantham
4. அறன் வலியுறுத்தல்

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

39

Inline image 1

விளக்கம் :

நாள்முடிந்தே நாள்பிறக்கும் என்றறிந்தும் பின்மறந்து

நாளும்தம் வாழ்நாளும் நீளும்என்(று) இன்புறுவார்

நாள்தோறும் வாழ்நாளில் அந்நாள் கழிந்துவரும்

தாள்என்ப(து) ஏற்கா தவர்

.

2013/6/7 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
4 aran.jpg
1 nn.png

Dr Subramanian

unread,
Jun 11, 2013, 3:46:17 AM6/11/13
to santhav...@googlegroups.com
அன்பு துரை
உங்கள் இடுகைகளையெல்லாம் பார்த்து வருகின்றேன்.தொடர்ந்த பயிற்சியும் முயற்சியும் உங்கள் கவிதைகளில் ஒரு புதிய மெருகேற்றம் செய்துள்ளன.சொற்களை ஆளக் கற்றுவிட்டீர். வாழ்த்துகள்
அன்புடன்
வவேசு

2013/6/11 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Managing Editor,
Journal of Algal Biomass Utilization (JABU): ISSN: 2229 – 6905 
http://jalgalbiomass.com
President ,IBA-Indian Biomass Association (Regd)
President, KIA,Chennai (Regd)
Off: 044-26208896 Res: 044-24748674
Mobile: 9381044470
Skype ID vavesu1
4 aran.jpg
1 nn.png

துரை.ந.உ

unread,
Jun 11, 2013, 4:23:45 AM6/11/13
to santhavasantham

2013/6/11 Dr Subramanian <vav...@gmail.com>

அன்பு துரை
உங்கள் இடுகைகளையெல்லாம் பார்த்து வருகின்றேன்.தொடர்ந்த பயிற்சியும் முயற்சியும் உங்கள் கவிதைகளில் ஒரு புதிய மெருகேற்றம் செய்துள்ளன.சொற்களை ஆளக் கற்றுவிட்டீர். வாழ்த்துகள்
அன்புடன்
வவேசு

வாழ்க ஐயா ..

கிடைப்பது எல்லாமும் உங்களுக்கே ​​/ இவ்விடத்துக்கே 
உங்களின் நிழலே எனக்குக் கற்றுத்தந்த குரு 
 
VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 11, 2013, 10:53:40 PM6/11/13
to சந்தவசந்தம்
பாடலோடு, படம் சொல்லும் செய்தியும் அழகு.

அனந்த்

2013/6/11 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

4. அறன் வலியுறுத்தல்

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

39

Inline image 1

விளக்கம் :

நாள்முடிந்தே நாள்பிறக்கும் என்றறிந்தும் பின்மறந்து

நாளும்தம் வாழ்நாளும் நீளும்என்(று) இன்புறுவார்

நாள்தோறும் வாழ்நாளில் அந்நாள் கழிந்துவரும்

தாள்என்ப(து) ஏற்கா தவர்

.

---
 
4 aran.jpg

துரை.ந.உ

unread,
Jun 12, 2013, 12:49:55 AM6/12/13
to santhavasantham

2013/6/12 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

பாடலோடு, படம் சொல்லும் செய்தியும் அழகு.

அனந்த்

வாழ்க ஐயா 

 நன்றி 

துரை.ந.உ

unread,
Jun 14, 2013, 8:36:36 AM6/14/13
to santhavasantham

 5. தூய் தன்மை :

ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.

47

​​

Inline image 1
விளக்க என்’பா’ :

ஊறிவெறுக் கத்தகுந்த ஒன்பது வாசலிலும்

நாறிக் குலைந்திருக்கும் அவ்வுடல்மேல் – கூறின்றி

பேரெழிலாள் வான்மழையாள் என்றாசைக் கொண்டலைவார்

காரிருளுள் பார்த்தறிந்தார்ப் போல்..............................................................................(1)

ஊறிவெறுக் கத்தகுந்த ஒன்பது வாசலிலும்

நாறிக் குலைந்திருக்கும் கும்பத்தை – நாடி

​’​
பெரும்தோளாள்
​ ​
சேர்த்தணைப்பாள்
​’​
 என்றாசைக் கொள்வான்

இருளுக்குள் பார்ப்பவன் போல்.................................................................................  .(2)

(#குறிப்பு : இந்தப் பாடலுக்குப் பெரியவர்கள் தந்துள்ள  தெளிவுரைக்கு எனக்கு மாற்றுக் கருத்து உண்டு )

​ஒரு விளக்கம் :​

அழுக்குகள் ஊறிவெறுக்கத்தக்க ஒன்பது துளைகளையுடைய புலன்கள் வழியாக அவ்வழுக்குக் குழம்பை வெளிப்படுத்தும் உடலாகிய ஒரு குடத்தைப் பார்த்து அறிவில்லாத ஒருவன்மேலே போர்த்திருக்கும் அழகான தோலினால் கண்கள் கவரப்பட்டு, 'பெருத்த தோளையுடையவளே! வளையல்களை அணிந்தவளே! என்று பிதற்றுவான்! (அறிவிலான் உடம்பின் புற அழகைக் கண்டு மயங்குவான்!) 

​.​

1 nnn.jpg

Ramamoorthy Ramachandran

unread,
Jun 14, 2013, 10:11:28 PM6/14/13
to santhav...@googlegroups.com
வணக்கம் நாலடியார் படித்து வருகிறேன் படமும் பாடலும் அருமை 'தூயதன்மை'' பாடலில் பெருந்தோள் இயற்கை வனப்பு, கைவளை செயற்கை ஈர்ப்பு 

நண்போடே நாலடியை நண்ணி நயத்தோடே
வெண்பா விளக்கம் வழங்கிட்ட -பண்பாளா
எண்ணும் செயலில் இறையருளால் வெற்றிபெற 
நண்ணியே வாழ்த்துவேன் நான் 

அன்புடன் புலவர் இராமமூர்த்தி 15/06/2013 

2013/6/14 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
1 nnn.jpg

Ramamoorthy Ramachandran

unread,
Jun 14, 2013, 10:13:15 PM6/14/13
to santhav...@googlegroups.com
இப்பாடல் பெண்ணழகை வெறுக்கும் சமணக் கொள்கையைப் புலப்படுத்துகிறது.

2013/6/15 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>
1 nnn.jpg

Iyappan Krishnan

unread,
Jun 15, 2013, 1:09:15 AM6/15/13
to சந்தவசந்தம்

2013/6/15 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

இப்பாடல் பெண்ணழகை வெறுக்கும் சமணக் கொள்கையைப் புலப்படுத்துகிறது.

அப்ப திருக்குறளுக்கும் சமணக் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை இல்லையா ? ( #காமத்துப் பால் )

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

துரை.ந.உ

unread,
Jun 19, 2013, 1:54:03 AM6/19/13
to santhavasantham

2013/6/15 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

வணக்கம் நாலடியார் படித்து வருகிறேன் படமும் பாடலும் அருமை 'தூயதன்மை'' பாடலில் பெருந்தோள் இயற்கை வனப்பு, கைவளை செயற்கை ஈர்ப்பு 

வாழ்க ஐயா ...
மிக மகிழ்ச்சி எனக்கு 

-பெருந்தோளி பெய்வளாய் / கருந்தோல் - இதில் சிறிது மாறுபடுகிறேன் நான் 

இதையே ‘பெருந்தோளாள் பெய்வளையாள்’ என்று சொல்லி இருந்தாலும் இலக்கணம் பிழையாகப் போவதில்லை ...பின் ஏன் தோளி , வளாய் இங்கே வந்தது ?

47 தோளி  காளி துர்கை நன்னீர்மீன்வகை அரக்கு தோழி துளையிடப்படாதரத்தினம்
47 பெய்  மேலிருந்துபொழி மழை
47 வளாய் மூடு

இதில் மேலேயுள்ள பொருளே பொருந்தி வருவதாகத் தோன்றியது எனக்கு ..

ஏனெனில்....

இவன் தவறாக காமத்தில் உலறுவதாகச் சொல்லப்பட்ட இடத்தில் பெருந்தோள் என்றும் ( இது பெண்மையின் குறீயீடு அல்ல ) , வலையலைப் பற்றியுமா கூறிக்கொண்டிருப்பான் ? ... கருந்தோல் இங்கே அழகின் குறியீடாகுமா ??

ஒன்பது துளையுள்ள உடலை , துளையிடப்படாத ரத்தினம் என்கிறான் ...மழையைப் போல பொழிந்து / மூடுவாள் என்கிறான் 

(இருளுக்குள் பார்த்து எல்லாம் பார்த்து அறிந்து கொண்டவன் போல )

இதுதான் நான் கண்ட பொருள் ..

தவ்று இருந்தால் திருத்துங்கள் ஐயா 

ஊறிவெறுக் கத்தகுந்த ஒன்பது வாசலிலும்

நாறிக் குலைந்திருக்கும் பெண்ணுடலை – கூறின்றி

கீறலில்லா ரத்தினமே வான்மழையே’  என்றுரைப்பார்

காரிருளுள் பார்த்தறிந்தார்ப் போல்

​​
நண்போடே நாலடியை நண்ணி நயத்தோடே
வெண்பா விளக்கம் வழங்கிட்ட -பண்பாளா
எண்ணும் செயலில் இறையருளால் வெற்றிபெற 
நண்ணியே வாழ்த்துவேன் நான் 
மிக நன்றி ஐயா 

Iyappan Krishnan

unread,
Jun 19, 2013, 1:57:42 AM6/19/13
to சந்தவசந்தம்

துரை.ந.உ

unread,
Jun 19, 2013, 2:03:52 AM6/19/13
to santhavasantham
6. துறவு 

தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.

58

Inline image 1
விளக்க என்பா’ :

தம்மை இகழ்ந்தோரைத் தாம்பொறுத்தல் மட்டுமன்றி

எம்மை இகழ்ந்த செயலால் – எமனுலகின்

வெம்மைமிகு பாகத்தில் வீழ்வாரோ என்றெண்ணி

வெம்புவதும் சான்றோர்  இயல்பு

nal.jpg

Iyappan Krishnan

unread,
Jun 19, 2013, 2:49:21 AM6/19/13
to பண்புடன், சந்தவசந்தம், mintamil, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்

2013/6/19 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

இவன் தவறாக காமத்தில் உலறுவதாகச் சொல்லப்பட்ட இடத்தில் பெருந்தோள் என்றும் ( இது பெண்மையின் குறீயீடு அல்ல ) , வலையலைப் பற்றியுமா கூறிக்கொண்டிருப்பான் ? ... கருந்தோல் இங்கே அழகின் குறியீடாகுமா ??

பெருந்தோள் பெண்களுக்கானது என்று யாரும் சொல்ல முடியுமா ? ஆண்களுக்குத்தானே அப்படிச் சொல்லுவாங்க ?

இராமனைப் பார்த்த சூர்ப்பநகை சொல்றதப் பாருங்களேன்.

தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேள்உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தன்
தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்லகண் நெடிய மார்பு என்றாள்.

    தாள் உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும் கேள் உயர்
நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான் -
நாளத்தோடு கூடி உயர்ந்த
செந்தாமரை மலரின் இதழ்களுடன் ஒளி சிறந்து விளங்கும் கண்களையும்
மலை போன்று சிறந்து விளங்கும் தோற்றத்தையும் உடைய இவனது;
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் - ஒரு தோளோடு
மற்றொரு தோளை அளாவத் தொடர்ச்சியாகப் பார்த்தால்; கண் நீளிய
அல்ல -
என் கண்கள் நீண்டன அல்ல; மார்பு நெடிய என்பாள் - மார்பு
நீண்டு பரந்துள்ளது என்று சொல்வாள்.

துரை.ந.உ

unread,
Jun 19, 2013, 3:16:07 AM6/19/13
to தமிழ் சிறகுகள், பண்புடன், சந்தவசந்தம், mintamil, தமிழ் வாசல்
வாழ்க ஜீவ்ஸ் ...
பெரும்தோளில் எமைக்காக்கும் சுமைத்தூக்கி வந்தமைக்கு மிக நன்றி 

இன்னும்  ஒரு வேண்டுகோள் :

ராமன் கண்ட ‘பெரும் தோள்” பற்றியும் இங்கே குறிப்புகள் தந்தால் மிகவும் துணையாக இருக்கும் 

2013/6/19 Iyappan Krishnan <jee...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Iyappan Krishnan

unread,
Jun 19, 2013, 3:22:23 AM6/19/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், பண்புடன், சந்தவசந்தம், mintamil
//சூர்ப்பநகை இராமனைப் பாத்து மோகித்து நிற்கும் போது சொல்வது

தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேளுயிர் நாட்டத்தன் கிரியின் தோற்றத் தன்
தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்லகண் நெடிய மார்பென்றாள் "

இந்தத் தோள்ல இருந்து அந்த தோள் வரைக்கும் பார்த்ததாலயா என் கண்ணு இவ்ளோ நீளமாச்சு ? இல்ல இல்ல. இவனோட மார்பு அப்படி பரந்து விரிந்திருக்கிறது அப்படிங்கிறா சூர்ப்ப நகை. இப்ப  கம்பர் இதே உவமையை எங்க எடுத்து அடிக்கிறார்னு பாருங்க.

தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நாள்பல கழியுமால் நடுவண் நின்றதோர்
தாளுடை மலைகொலாம் சமரம் வேட்ட
ஆளென் றுணர்கிலேன் ஆர்கொ லாம்இவன்?

. ஒரு மலைக்கு கைக் கால்  முளைச்சு எழுந்து வந்தா மாதிரி இருந்துச்சாம் பாக்கறதுக்கு இந்தத் தோள்ல இருந்து அடுத்த தோள் பாத்து முடிக்கவே நாளாகுமாம். அப்படின்னு யார் சொல்றது ? இராமனே சொல்றானாம்.  இது கும்பகர்ணனுக்கு அளித்த பெருமை தானே ?//

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

துரை.ந.உ

unread,
Jun 27, 2013, 1:24:11 AM6/27/13
to santhavasantham
6.சினமின்மை 

விளக்கம் :

நெடும்காலம் ஆனாலும் கீழோரின் கோபம்

கெடும்காலம் இல்லாமல் கூடும் – சுடும்காலம்

நீர்அடையும் வெப்பம்போல் தானே தணியுமாம்

சீர்அடைந்த சான்றோர் சினம்

Inline image 1

 நாலடியார் :

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

68

1.jpg

துரை.ந.உ

unread,
Jul 2, 2013, 10:58:56 AM7/2/13
to santhavasantham

8.பொறையுடைமை (பொறுமை)

வேற்றுமை இன்றிக் கலந்தோரின் நட்பினுள்

மாற்றம் ஒருவர் ஒழுக்கத்தில் உண்டானால்

ஏற்கும் அளவுப் பொறு;மீறும் வேளையில்

தூற்றாது தூரம் விலகு

Inline image 1
 நாலடியார் :

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்...............................................................75
0 nbdhbdd.jpg

துரை.ந.உ

unread,
Jul 10, 2013, 4:17:14 AM7/10/13
to santhavasantham

நாலடியார் 9.பிறர்மனை நயவாமை        (காமம் கொண்டு  பிறர் மனைவியரை விரும்பாமை.)

நுழையும்போ(து) அச்சம்; விடைபெறும்போ(து) அச்சம்;

இழையும்போ(து) அச்சம்; மறைக்கும்போ(து) அச்சம்;எப்

போ(து)அச்சம் தந்தாலும் வேற்றுமனைப் போகஒரு

போ(து)அச்சம் கொள்வதில்லை! ஏன்?

Inline image 1

நாலடியார் :
புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.
​                                                  .83​
 
naaaaa.jpg

துரை.ந.உ

unread,
Jul 16, 2013, 12:51:47 PM7/16/13
to santhavasantham

 10.ஈகை :

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ள இடம்போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு............................................91

Inline image 1

விளக்க என்பா’ :

இல்லாப் பொழுதும் இயலும் அளவு(எ)ல்லாம்

உள்ளதுபோல் உள்ளம் மிகமகிழ்ந்து – சொல்லாமல்

முந்திக் கொடுக்கும் குணத்தார்க்குத் தான்திறக்கும்

விண்உலகின் வாசற் கதவு 

rainbow_bridge.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages