கார் வரவு!

4 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 18, 2025, 7:43:30 AM (4 days ago) Oct 18
to santhav...@googlegroups.com
.                                       கார் வரவு!

இலைசெழித்து மலர்களெலாம் எழில்வண்ண நிறம்கொள்ளும்
அலைபெருத்துக் கடலினிலே ஆர்ப்பரித்து மிகத்துள்ளும்
மலையணைத்துக்  கார்முகில்கள் மழைவரவைத் தாம்சொல்லும்
கலைமணத்துக் கவிஞருளம் காவியங்கள் பலவிள்ளும்

.
பொழியுமழைத் துளிநனைந்து பூமிமனம் குளிர்ந்துவிடும்
வழியுமலர்த் தேனினைந்து வண்டினங்கள் பறந்துவரும்
கழையினிலை நுனிகளிலே கவின்முத்துத் துளிவளரும்
வழிமிசையில் விழிவைக்கும் மங்கைமனம் நனிதளரும்!

                                                             —தில்லைவேந்தன்.

Arasi Palaniappan

unread,
Oct 18, 2025, 8:56:44 AM (4 days ago) Oct 18
to சந்தவசந்தம்
கார்வரவால் சீர்வரவு சிறப்பு!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hj5d5qXuBNMCRjfshgb_CMFbn8JvHtYZH9Qyj%2BXKwuMVg%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 18, 2025, 9:38:18 AM (4 days ago) Oct 18
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

      —தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages