விளக்கம் வேண்டும்

815 views
Skip to first unread message

இராஜ.தியாகராஜன்

unread,
Dec 22, 2010, 2:12:04 PM12/22/10
to சந்தவசந்தம்
அன்புடையீர்
இராஜ. தியாகராஜனின் வணக்கம்.

கீழ்வரும் ஐயங்களை தீர்த்துக் கொள்ள விழைகிறேன். கழை எனில் கரும்பு
அல்லது மூன்று விண்மீகள் என்று பொருள் வருவதாக சொல்லக் கேட்கிறேன்.

1. ஒரு வேளை கழைக் கூத்தாடி என்ற சொல்லின் வேரே மூங்கில் / கரும்பு
என்பதோ?
2. கழை, கழைய, கழைதல் என்ற என்ற சொல் இலக்கியத்தில் கையாளப்படிருக்கிறதா?
3. சங்க் இலக்கியங்கள்/ சிற்றிலக்கியங்கள் எனில் எடுத்துக்காட்டுகளை தர
வேண்டுகிறேன்.
4. கீழ்வரும் பாடல்களில் வரும் கழைய என்ற சொல்லாட்சிக்கான பொருள் அறியத்
தர வேண்டுகிறேன்.
------------------------------------------------------
நானறிந்த எடுத்துக் காட்டுகள்:
------------------------------------------------------

1. புறப்பொருள் வெண்பாமாலை
(செலவு இன்னது)
வில் ஏர் உழவர் வேற்றுப் புலம் உன்னிக்
கல் ஏர் கானம் கடந்து சென்றன்று
1.8
கூற்று இனைத்து அன்னார் கொடுவில் வலன் ஏந்திப்
பாற்று இனம் பின் படர முன்படர்ந்து - ஏற்றினம்
நின்ற நிலை கருதி ஏகினார் நீள் கழைய
குன்றம் கொடு வில்லவர் 5

2.இரட்சண்ய யாத்திரிகம்
இரண்டாம் பாகம்
3.நிதான பருவம் - நகர்புகு படலம்
14.
ஆழி யன்னவ கழைய கப்புறஞ்
சூழு மேருவிற் றோன்றிய விஞ்சியை
ஊழி னோக்கியு யர்கடை வாயொரீஇ
வாழி யாரணர் புக்கனர் வஞ்சரூர்.

அன்பன்
இராஜ. தியாகராஜன்.

Hari Krishnan

unread,
Dec 22, 2010, 11:22:31 PM12/22/10
to santhav...@googlegroups.com


2010/12/23 இராஜ.தியாகராஜன் <tyag...@gmail.com>


கீழ்வரும் ஐயங்களை தீர்த்துக் கொள்ள விழைகிறேன். கழை எனில் கரும்பு
அல்லது மூன்று விண்மீகள் என்று பொருள் வருவதாக சொல்லக் கேட்கிறேன்.

கழை என்றால் மூங்கில் என்பது பொருள்.  கரும்பைக் கழி என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  கருப்பங்கழி என்பார்கள்.  ஒருவேளை அதன் பருமன் நோக்கி, கரும்பையும் கழை என்று சொல்லக்கூடும்.  ஆனால் அந்தப் பொருளில் எந்தப் பாடலிலும் இச்சொல் பயின்று வருவதைப் பார்த்ததில்லை,

அதுபோன்றே மூன்று விண்மீன்கள் என்ற பொருளிலும் நான் பார்த்தில்லை.  பல்கலைக்கழகப் பேரகராதியிலும் இந்தப் பொருள் தரப்படவில்லை.  வின்ஸ்லோ அகராதியிலும் இப்பொருள் கிட்டவில்லை.


1. ஒரு வேளை கழைக் கூத்தாடி என்ற சொல்லின் வேரே மூங்கில் / கரும்பு
என்பதோ?

மூங்கில்களைப் பயன்படுத்தி, அந்தக் கம்பங்களுக்கிடையில் கயிறு கட்டி, மூங்கிலையே கையிலும் ஏந்தி அந்தக் கயிற்றின்மேல் நடப்பவன் கழைக்கூத்தாடி.  கம்பங்கூத்தாடி என்றும் இவனுக்குப் பெயருண்டு.  கழைக்கூத்தாடி, தன் வித்தைக்கு, மூங்கிலை மட்டும்தான் பயன்படுத்துகிறான்.  கரும்பைப் பயன்படுத்துவதில்லை.  ஆகவே, மூங்கில் என்ற பொருளினடிப்படையிலேயே கழைக்கூத்தாடி என்ற பெயர் ஏற்பட்டது.  கழையைப் பயன்படுத்துபவன் கழைக்கூத்தாடி; கம்பத்தைப் பயன்படுத்துபவன் கம்பங்கூத்தாடி.  இரண்டும் ஒன்றே.

இங்கேயும் கரும்பு அல்லது மூன்று விண்மீன் என்ற பொருள் இல்லை.


2. கழை, கழைய, கழைதல் என்ற என்ற சொல் இலக்கியத்தில் கையாளப்படிருக்கிறதா?

கழை என்ற வடிவம் நூற்றுக் கணக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.    ஆனால், நுழை, நுழைய, நுழைதல் என்று வருவதுபோல், கழை, கழைய, கழைதல் என்று சொல்வடிவம் பெறுவதில்லை.  குறைந்தது நானறிந்த அளவில் இப்படிப்பட்ட வடிவங்கள் இல்லை.  

3. சங்க் இலக்கியங்கள்/ சிற்றிலக்கியங்கள் எனில் எடுத்துக்காட்டுகளை தர
வேண்டுகிறேன்.

கழை என்ற சொல்லைக் கண்டதும் எனக்குக் கம்பராமாயணத்தில் இரண்டு இடங்கள் நினைவுக்கு வருகின்றன.  ஒன்று.  வனம்புக்க படலத்தில் யமுனையைக் கடக்கும்போது, (இப்போது குகன் அருகில் இல்லை; எனேவே) இந்த ஆற்றை எப்படிக் கடப்பது என்று ராமன் சிந்தித்த மாத்திரத்தில், இலக்குவன் மூங்கிற் கழைகளை வெட்டிக்கொண்டு வந்து, அவற்றால் தெப்பமொன்று அமைத்து, அந்தத் தெப்பத்தின்மேல் ராமனையும் சீதையையும் அமர்த்தி, தான் யமுனையில் நீந்தியவாறே அந்தத் தெப்பத்தை உந்திக்கொண்டு செல்லும் இடம்.  

ஆறு கண்டனர்; அகம் மகிழ்ந்து இறைஞ்சினர்; அறிந்து,
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார்;
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு, நீர் உண்டார்;
'ஏறி ஏகுவது எங்ஙனம்?' என்றலும், இளையோன்,  35

வாங்கு வேய்ங் கழை துணித்தனன்; மாணையின் கொடியால்,
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து, அதன் உம்பரின், உலம்போல்
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப,
நீங்கினான், அந்த நெடு நதி, இரு கையால் நீந்தி.

இலக்குவனுடைய குணசித்திரத்தை விளக்கும் அற்புதமான இடம்.  எனவே இந்தப் பாடலில் பயிலும் கழை உடனடியாக நினைவுக்கு வந்தது.  

இரண்டாவது: யுத்தகாண்டம், ஒற்றுக் கேள்விப் படலத்தில் நளன், சுக்ரீவன் முதலானோருக்குப் பாசறை அமைத்தபின், ராமன் தங்குவதற்காகத் தனியாக ஒரு பாசறையை ஏற்படுத்தும் இடம்:

வில்லினாற்கு இருக்கை செய்யும் விருப்பினால், பொருப்பின் வீங்கும் 
கல்லினால் கல்லை ஒக்கக் கடாவினான், கழைகளான 
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான், தருப்பை என்னும் 
புல்லினால் தொடுத்து, வாசப் பூவினால் வேய்ந்து போனான். 

வில்வீரன் ராமனுக்கு இருப்பிடம் அமைக்க வேண்டும் என்ற விருப்பத்தால், மலைகளிலுள்ள பருத்த கற்களை எடுத்து வந்து, அவை மேடு பள்ளமில்லாமல் சீராக இருக்குமாறு (ஒக்க) அமைத்தான்.  பிறகு மூங்கில்களாலும் வாகை மரங்களாலும் கால்களை அமைத்து, தருப்பைப் புல்லைப் பரப்பி, பூக்களால் கூரை அமைத்தான்,

கல்லினால் கல்லை ஒக்க என்ற தொடர் எனக்கு முதலில் புரியவில்லை.  கல்லை ஒக்கக் கடாவினான் என்று இரண்டாவது சீரிலிருந்து கூட்டவேண்டும் என்பதை அனுமானிக்க நிறைய சிந்திக்க வேண்டியிருந்தது.  அது போலவே, கழைகளான நெல்லினால் என்ற இடத்தில், கழைக்கும் நெல்லுக்கும் என்ன தொடர்பு என்று விளங்காமல் நிறையத் தேட வேண்டியிருந்தது.  (அப்போது என்னிடம் வைமுகோ உரை இல்லை.)  வைமுகோ உரை வாங்கிய பிறகு, நெல்லே வாகையு நெல்லு மிருபெயர் என்ற அகராதி விளக்கத்தைக் கண்டேன்.  உள்துளை (hollow) கொண்ட காரணத்தால் நெல்லும் மூங்கிலும் ஓரினம் என்ற விளக்கத்தையும் கண்டேன்.  புரிந்துகொள்ள சிரமப்பட்ட பாடல் என்பதால் இதுவும் நினைவிலிருக்கிறது.

கழை என்ற சொல் கம்பராமாயணத்தில் மட்டுமே குறைந்தது நூறு இடங்களில் தட்டுப்படும்.  எல்லா இடங்களிலும் மூங்கில் என்ற பொருளை மட்டும்தான் பார்த்த நினைவிருக்கிறது.  கரும்பு என்ற பொருளில் பார்த்த நினைவில்லை.  விண்மீன் அல்லது மூன்று விண்மீன் என்ற பொருளில் அறவே இல்லை.  இருந்தால் மற்ற பெருங்கல்வியாளர்கள் வந்து விளக்குவார்கள்.

4. கீழ்வரும் பாடல்களில் வரும் கழைய என்ற சொல்லாட்சிக்கான பொருள் அறியத்
தர    வேண்டுகிறேன்.

இதெல்லாம் பெரிய இடத்து சமாசாரம்.  கவிமாமணி உற்பத்திக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து சொல்வார்கள்.  எளியேன் இதற்கு வல்லேனல்லன்.  



--
அன்புடன்,
ஹரிகி.

துரை.ந.உ

unread,
Dec 22, 2010, 11:56:51 PM12/22/10
to santhav...@googlegroups.com
அன்பு அய்யாவின் பார்வைக்கு ....

bamboo, மூங்கில்; 2. pole used for propelling boats; 3. sugar-cane, கரும்பு; 4. the 7th lunar asterism, புனர்பூசம்; 5. an elephant-goad.  

Acrobat's pole; கழைக்கூத்தன் ஏறி நின்று ஆடுதற்கு நாட்டும் மூங்கிற்கம்பம்


கழை +. Bamboo- seed; மூங்கிலரிசி. போகுயர் நீள்கழை நெல்லும் (சீவக. 1422). 

 செம்-மை + கழை. Red sugarcane; செங்கரும்பு. (யாழ். அக.)


’போருக் கழைத்த’ போன்ற இடங்களில் அந்த ‘கழை’ வருகிறது   

2010/12/23 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

குழுமம்   : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Hari Krishnan

unread,
Dec 23, 2010, 12:12:08 AM12/23/10
to santhav...@googlegroups.com


2010/12/23 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

அன்பு அய்யாவின் பார்வைக்கு ....

bamboo, மூங்கில்; 2. pole used for propelling boats; 3. sugar-cane, கரும்பு; 4. the 7th lunar asterism, புனர்பூசம்; 5. an elephant-goad.  

Acrobat's pole; கழைக்கூத்தன் ஏறி நின்று ஆடுதற்கு நாட்டும் மூங்கிற்கம்பம்

நன்றி.  இரண்டாவது பொருள், மூங்கிலால் செய்யப்பட்ட துடுப்பு என்பதனால், கழையே துடுப்புக்கும் ஆகிவந்ததால் ஏற்பட்டது.  மூன்றாவது நான்காவது பொருள்களுக்கு மிக்க நன்றி.  (ஐந்தாவது பொருளான அங்குசம் என்பதும் ஆகுபெயரே.  ‘ காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு’ என்ற குறளில் கண் அஞ்சா என்பதிலுள்ள கண் என்பதை அங்குசம் என்று பரிமேலழகர் உரைகண்டார்.  கண் (நிலம்) அதனிடத்திலுள்ள மலைக்கு ஆகிவந்து, அந்த மலை, அதனகத்தில் விளையும் மூங்கிலுக்கு ஆகிவந்து, அந்த மூங்கில், மூங்கிலைப் பிடியாக உடைய அங்குசத்துக்கு ஆகிவந்தது என்று ஒருமடி, இருமடி, மும்மடி ஆகுபெயர் என்று இதனை விளக்கியிருக்கிறார்.)  இங்கே கழை என்பது நேரடியாகவே அங்குசத்துக்கு ஆகிவந்திரக்கிறது.  பரிமேலழகர் அளவுக்கு இதை வளைக்க வேண்டியதில்லை.

மூன்றாம் நான்காம் பொருள் காணப்படும் அகராதி அல்லது இலக்கியச் சான்று எது என்பதைத் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.



கழை +. Bamboo- seed; மூங்கிலரிசி. போகுயர் நீள்கழை நெல்லும் (சீவக. 1422). 

 செம்-மை + கழை. Red sugarcane; செங்கரும்பு. (யாழ். அக.)

இவற்றை என்னுடைய முதல் விளக்கத்தில் சொல்லியிருக்கிறேன்.  

Kaviyogi Vedham

unread,
Dec 23, 2010, 12:13:55 AM12/23/10
to santhav...@googlegroups.com
அப்படிப்போடு.!இவ்வளோ அற்புதமாகச் சொல்லிவிட்டு என் போல் கவிமாமணிகள் வந்து சொல்வார்கள் என்றால் என்ன அர்த்தம்(கிண்டல்..) அரீ!. நாங்கள் வெறும் கவிமாமணி. நீயோ கவிமாமணிகட்கெல்லாம் மேலாகப்பட்ட கம்பனைக்கரைத்துக்குடித்த கவிமாமணி.
 சரியா?
யோகியார்

2010/12/23 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 23, 2010, 12:16:42 AM12/23/10
to santhav...@googlegroups.com


2010/12/23 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

அப்படிப்போடு.!இவ்வளோ அற்புதமாகச் சொல்லிவிட்டு என் போல் கவிமாமணிகள் வந்து சொல்வார்கள் என்றால் என்ன அர்த்தம்(கிண்டல்..) அரீ!. நாங்கள் வெறும் கவிமாமணி. நீயோ கவிமாமணிகட்கெல்லாம் மேலாகப்பட்ட கம்பனைக்கரைத்துக்குடித்த கவிமாமணி.


நானெங்கே உங்களைச் சொன்னேன்?  கவிமாமணி உற்பத்திக் கழகத்தை அல்லவா சொன்னேன்!  பால் உற்பத்தி, நெல் உற்பத்தி, ஆடை உற்பத்தி போல, கவிமாமணிகளை உற்பத்தித்துக் கொண்டிருக்கிற கழகத்தையல்லவா குறிப்பிட்டேன்.  நீங்க கவிமாமணியும் இல்லையே!  நீங்கதான் கவிமாமாமணியாச்சே!

துரை.ந.உ

unread,
Dec 25, 2010, 2:42:14 AM12/25/10
to santhav...@googlegroups.com
செந்தமிழ்.ஆர்க்
http://wiki.senthamil.org/செந்தமிழ்

இது அந்த அகராதியின் இணைப்பு அய்யா

2010/12/23 Hari Krishnan <hari.har...@gmail.com>

மூன்றாம் நான்காம் பொருள் காணப்படும் அகராதி அல்லது இலக்கியச் சான்று எது என்பதைத் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.


--
அன்புடன்,
ஹரிகி.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
Reply all
Reply to author
Forward
0 new messages