பதஞ்சலி யோக சூத்திரங்கள் - சமாதி பாதம்
51 சூத்திரங்களை தமிழில் வெண்பா வடிவில் விளக்க ஒரு முயற்சி.
வெண்பாவில் பிழைகள் இருக்கலாம். அதை திருத்தும்படி கேட்டு கொள்கிறேன் .
ஆங்கில மொழியாக்கம் இந்த வலைதளத்தில் இருந்து என் மனதிற்கு பிடித்த/புரிந்ததை எடுத்து தமிழில் எழுத முயற்சித்த்துள்ளேன். http://yogasutrastudy.info/yoga-sutra-introduction/
முதல் 10 சூத்திரங்கள்
1. अथ योगानुशासनम्॥१॥
Atha Yoga Anushasanam
An introduction to the study of Yoga
நடைமுறை காலத்தில் நல்லதோர் நாளில்
விடையென யோகத்தைக் கல்
பொருள் - இன்று இப்பொழுது யோகம் செய்யும் முறையைக் கற்று விடு.
2. योगश्चित्तवृत्तिनिरोधः॥२॥
yogash chitta vritti nirodhah
Yoga is the mastery and integration of the activities of mind
உள்ளமும் ஊனும் ஒருங்கே யிணைந்திட
கள்ளமில்லா யோகம் களி
பொருள் -உள்ளமும் உடலும் இணைந்து செயல்படுவதே யோகம்
3. तदा द्रष्टुः स्वरूपेऽवस्थानम्॥३॥
tada drashtuh svarupe avasthanam
Then the Seer abides in Itself, resting in its own True Nature, which is called Self-realization
அங்கே அவனுமே ஆன்மா அறிந்திட
அங்கே அனைத்தும் அடங்கு
பொருள் -உள்ளுக்குள் இருக்கும் ஆன்மாவை அறிந்து விட்டால் அதில் அனைத்தும் அடங்குவது புரியும்
4. वृत्तिसारूप्यमितरत्र॥४॥
vritti sarupyam itaratra
At other times, when he is not in the state of yoga, man remains identified with the thought-waves in the mind.
அலைபா யுணர்வே அனுபவயி யல்பில்
உளையும் உலகில் மனம்
அலைபா யுணர்விலே அல்லும் பகலும்
உளையும் மனமே உலகு
பொருள் - யோகத்தில் ஈடுபடாத நேரங்களில், எண்ணங்கள் உணர்வாய் அலைபாய அந்த அனுபவத்தில் தினமும் மனம் உளையும்.
5. वृत्तयः पञ्चतय्यः क्लिष्टाक्लिष्टाः॥५॥
vrittayah pancatayah klishta aklishta
The modifications of the mind are five-fold and are painful and not-painful.
அலைகள் மனதிலே ஐந்து விருத்தி
வலையாய்ப் படரும் வலி
வேறு
வலியு மளித்து வலியு மழித்து
வழியி லுணரு மலை
பொருள்- எண்ண அலைகள் ஐந்து வகைப்படும். அவை வலி தருபவையாகவும், வலியற்ற தன்மையாகவும் உள்ளன.
6. प्रमाणविपर्ययविकल्पनिद्रास्मृतयः॥६॥
pramana viparyaya vikalpa nidra smritayah
They are right knowledge, misconception, Imagination, sleep and memory.
பொய்யறிவு கற்பனை புத்துயிரு றக்கமே
மெய்யறி வென்ற நினைவு
பொருள்- ஐந்து வகை எண்ண அலைகள் மெய்யயறிவு, பொய்யறிவு, கற்பனை, நித்திரை மற்றும் நினைவு அல்லது ஞாபகம் எனப்படும்.
7. प्रत्यक्षानुमानागमाः प्रमाणानि॥७॥
pratyaksha anumana agamah pramanani
Direct perception, inference, and competent evidence are proofs.
அறிஞ ருரைக்க அனுமான யெண்ணம்
அறிந்து தெரியு மறிவு
பொருள்- மெய்யறிவு என்பது மூன்று வகையாக அறியப்படும். அறிந்தவர் உரைப்பதின் மூலம் (Competent evidence), அனுமானித்து நினைப்பதின் மூலமும் (Interference), உணர்ந்து தெரிந்து கொள்வதின் மூலமும் (Perception) அறியப்படும்.
8. विपर्ययो मिथ्याज्ञानमतद्रूपप्रतिष्ठम्॥८॥
viparyayah mithya jnanam atad rupa pratistham
Wrong knowledge is knowledge which is false and not based upon the true nature of its object
உள்ளுக்குள் பொங்கும் உணர்விலே மாயையே
இல்லாது காணும் இயல்பு
பொருள்- பொய்யறிவு என்பது இல்லாத பொருளை இருப்பதாய் எண்ணுவதும், தவறாகப் புரிந்து கொள்வதும் - உதாரணத்திற்கு கயிறைப் பாம்பாக எண்ணுவது போன்ற பிரமையான அறிவு.
9. शब्दज्ञानानुपाती वस्तुशून्यो विकल्पः॥९॥
shabda jnana anupati vastu shunyah vikalpah
இல்லாத ஒன்றை இருப்பது போலவே
சொல்லிடும் கற்பனை சொல்
பொருள் - கற்பனை என்பது இல்லாத பொருளை இருப்பதாய் நினைத்து அதை வார்த்தையில் வெளிப்படுத்துவது.
10. अभावप्रत्ययालम्बना वृत्तिर्निद्रा॥१०॥
abhava pratyaya alambana vritti nidra
That modification of the mind which is based on the absence of any content in it is sleep.
ஆழ்ந்த உறக்கம் அலைக ளடங்கிட
வாழ்ந்திடு நித்திரை வாழ்வு
பொருள்- ஆழ்ந்த உறக்கத்தில் எண்ண ஓட்டங்கள் அடங்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது . மெய்யறிவு, பொய்யறிவு, கற்பனை, நினைவு என்ற மற்ற நான்கு அலைகளும் இல்லாத நிலை.
yogash chitta vritti nirodhah ||2||
योगश्चित्तवृत्तिनिरोधः ॥२॥
yogaś-citta-vṛtti-nirodhaḥ ||2||
When you are in a state of yoga, all misconceptions (vrittis) that can
exist in the mutable aspect of human beings (chitta) disappear. ||2||
1- Chitta vritti nirodhah- To Restain upon the vritties of chitta.
Where is no disturbance in chitta. No questions. No answers.
Only consciousness it is yoga.
2- Yoga- It’s yogaha.
An explanation- In this yoga sastra ” Traditional yoga sastra”
it is said that complete restrain in chitta virtties is the yoga.
Relation- This is defination of the word “Yoga”.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/nffXQlAKU9U/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
11-20 சூத்திரங்கள்
अनुभूतविषयासंप्रमोषः स्मृतिः॥११॥
anubhuta vishaya asampramoshah smritih)
When a mental modification of an object previously experienced and not forgotten, comes back to consciousness, that is memory.
குறள் வெண்பா
அனுபவம் செய்கையில் அன்றாட செய்தி
அனுதினம் ஞாபக வாழ்வு
பொருள்- நடந்த நிகழ்ச்சிகளை, செய்திகளை மனம் ஞாபகம் என்ற பெயரில் சேகரித்து அறிந்து கொள்கிறது.
12. अभ्यासवैराग्याभ्यां तन्निरोधः॥१२॥
abhyasa vairagyabhyam tat nirodhah
Thought patterns are mastered through practice and non-attachment
விடாதிங்கு செய்திடும் வித்தைப் பயிற்சியில்
ஓயா தலைகள் ஒடுங்கு
பொருள்- விடாது செய்யும் பயிற்சி முறையில் வைராக்கியம் உருவாகி எண்ண அலைகளை அடக்க முடியும்.
13 तत्र स्थितौ यत्नोऽभ्यासः॥१३॥
tatra sthitau yatnah abhyasa
Continuous struggle to keep them perfectly restrained is practice
திரும்பத் திரும்ப தினமும் முயன்றால்
விரும்பி மனமே பெறும்
திரும்பத் திரும்ப தினமும் பயிற்சி
விரும்பிய செய்திட வெல்
பொருள் - விடா முயற்சியுடன் மனதின் எண்ண அலைகளை அடக்குவதே பயிற்சி
14. स तु दीर्घकालनैरन्तर्यसत्कारासेवितो दृढभूमिः॥१४॥
sah tu dirgha kala nairantaira satkara asevitah dridha bhumih
When practice is done for a long time with love and devotion it becomes firmly rooted and creates stable foundation.
குறள் வெண்பா
நித்தமும் செய்திடும் நேர்மை முயற்சியில்
சித்தமும் பெற்றிடும் வேர்
பொருள்- தடங்கல் இல்லாது தினமும் பல நாள் தொடர்ந்து முயற்சித்தால், வலிமையான வேர் போல அடித்தளம் நிலையாக அமையும்
15. दृष्टानुश्रविकविषयवितृष्णस्य वशीकारसञ्ज्ञा वैराग्यम्॥१५॥
drista anushravika vishaya vitrishnasya vashikara sanjna vairagyam
பற்றினை விட்டுப் பயிற்சியில் வைராக்ய
வெற்றியும் பெற்றிங்கு நில்
பொருள்- பொருள்களின் மீதிருக்கும் பற்று விட்டு விட மிகவும் பயிற்சி தேவை. மீண்டும் மீண்டும் செய்யும் முயற்சியில் பயிற்சி பலமாகி வைராக்கியம் ஏற்பட்டு வெற்றி கிட்டும் .
16. तत्परं पुरुषख्यातेर्गुणवैतृष्ण्यम्॥१६॥
tat param purusha khyateh guna vaitrshnyam
That is extreme non – attachment which gives up even the qualities, and comes from the knowledge of (the real nature of) the Purusha.
அழியா தறிவால் அடங்கு குணத்தில்
செழிக்குமே ஞானச் செருக்கு
பொருள்- பற்றற்று இருக்கும் நிலையில் மனதில் ஏற்படும் ஞானம் தூய்மையான செருக்குடன் விளங்கும்
17
वितर्कविचारानन्दास्मितारूपानुगमात् संप्रज्ञातः॥१७॥
vitarkavichaaraanandaasmitaarUpaanugamaat saMpraj~jaataH
The concentration called right knowledge is that which is followed by reasoning, discrimination, bliss, unqualified egoism.
ஆனந்த வாழ்விலே ஆராய்ந்த பிம்பத்தில்
தானாய் சமாதி பெறு
பொருள்- மெய்யறிவு என்பது மனம் ஆராய்ந்து, அதில் தெரியும் பிரதிபலிப்பில் பிம்பமாய் ஒளிரும் பேரானந்தம் . இதுவே சமாதி நிலை .
Sutra I.18
विरामप्रत्ययाभ्यासपूर्वः संस्कारशेषोऽन्यः॥१८॥
viraamapratyayaabhyaasapUrvaH saMskaarasheSho’nyaH
There is another Samadhi which is attained by the constant practice of cessation of all mental activity, in which the Chitta retains only the unmanifested impressions.
விடாத அலையினை வித்தை நிறுத்த
தொடாது சமாதி தொடு
பொருள்- எண்ண ஓட்டம் என்கிற மன அலையினை விடாது செய்திடும் வித்தையான யோகம் என்னும் பயிற்சியில் நிறுத்தினால், சமாதி பெறலாம். இது இன்னொரு வகையில் பெறக் கூடிய சமாதி நிலை.
19
भवप्रत्ययो विदेहप्रकृतिलयानाम्॥१९॥
bhavapratyayo videhaprakRutilayaanaam
(This Samadhi, when not followed by extreme non-attachment) becomes the cause of the re-manifestation of the gods and of those that become merged in nature.
தொட்ட சமாதி தொடரா உணர்விலே
விட்டு இயற்கையோ டொன்று
உடலில்லா போதும் உணர்விலே யோகி
சுடராய் இயற்கையில் சேர்
பிறப்பில் உடலின்றி பெற்றுவிட்ட யோகம்
சிறப்பாய் சமாதி பெறு
பொருள்
சமாதி நிலை அடைந்த பிறகு விருப்பும் வெறுப்பும் தொடராத நிலையில், இறையோடும் இயற்கையோடும் ஒன்றாக கலக்க முடியும்
உடலில்லா விதேகியும், பிறக்கும் போதே யோக சக்தி உடையவரும் இயற்கையாகவே சமாதி நிலை அடைவர்.
20
श्रद्धावीर्यस्मृतिसमाधिप्रज्ञापूर्वक इतरेषाम्॥२०॥
shraddhaavIryasmRutisamaadhipraj~jaapUravaka itareSham
To others (this Samadhi) comes through faith, energy, memory, concentration, and discrimination of the real.
கவனம் பயிற்சி கருத்து இதிலே
புவனம் சமாதி பெறு
கவனம், நம்பிக்கை கருத்துடன் செய்யும் பயிற்சி இதன் மூலம் சமாதி நிலை பெறலாம்.
சிரத்தை உணர்விலே வீரிய சக்தி
சிறந்த சமாதி பெறு
சிரத்தையுடன் செய்யும் யோக பயிற்சியில் அடைந்திடும் வீரிய சக்தியில் சிலர் சமாதி பெறுவர்
அன்புடன் வரலட்சுமி
Sutras 21-30
Sutra I.21
तीव्रसंवेगानामासन्नः॥२१॥
tIvrasaMvegaanaam aasannaH
To the keen and intent practitioner this [Samadhi] comes very quickly
வீரியம் கூடவே வித்தை பயின்றிட
காரியம் கையிலே கூடு
பயிற்சி முறையை வீரியத்துடன் தீவிரமாய் செய்பவர்கள் சமாதி நிலையை சீக்கிரத்தில் அடைவர்.
22.
मृदुमध्याधिमात्रत्वात् ततोऽपि विशेषः॥२२॥
mRudumadhyaadhimaatRutvaat tato’pi visheShaH
The time necessary for success further depends on whether the practice is mild medium or intense
முயலும் விதமே முனைய முனைய
பயிற்சி தருமே பலம்
பொருள் - நாம் செய்யும் முயற்சியின் தீவிரத்திற்கு ஏற்ப நாம் அடையும் வெற்றியும் மாறுபடும்.
23.
Sutra I.23
ईश्वरप्रणिधानाद्वा॥२३॥
IshvarapraNidhaanaat vaa
samadhi is attained by devotion with total dedication to God (Isvara)
அடைக்கல மென்றால் அடையும் சமாதி
விடைகளும் பெற்று விடு
பொருள் - ஈஸ்வரனை பரிபூரணமாக அடைக்கலம் என்று அடைந்துவிட்டால் அதன் மூலமும் சமாதி நிலையைப் பெறலாம்.
Sutra I.24
क्लेशकर्मविपाकाशयैरपरामृष्टः पुरुषविशेष ईश्वरः॥२४॥
kleshakarmavipaakaashayairaparaamRuShTaH puruShavisheSha IshvaraH
Isvara is the supreme Purusha, unaffected by any afflictions, actions, fruits of actions or by any inner impressions of desires.
செய்யும் செயலாலும் செய்பலன் இச்சையாலும்
மெய்யும் தொடயியலா மெய்
பொருள் - ஈஸ்வரன் என்பவன் செயலாலும், செயலின் பலன்களாலும், செய்ய விரும்பும் விருப்பத்தாலும் பாதிக்கப்படாத உண்மை பொருந்திய ஒரு உயரிய புருஷன்.
Sutra I.25
तत्र निरतिशयं सर्वज्ञबीजम्॥२५॥
tatra niratishayaM sarvaj~jabIjam
In Him becomes infinite that all-knowing-ness which in others is (only) a germ
அறிந்தது எல்லாம் அறியும் அறிவு
அறியும் விதையும் அது
பொருள்
எல்லாம் அறிந்த பேரறிவு அவனிடத்தில் இருக்க மற்றவர் எல்லோரிடத்திலும் அறிவு ஒரு சிறு விதையைப் போலவே இருக்கிறது.
26
Sutra I.26
पूर्वेषाम् अपि गुरुः कालेनानवच्छेदात्॥२६॥
pUrveShaam api guruH kaalenavachChedaat
Being unconditioned by time, He is the teachers of even the ancients teachers.
காலமழி யாவழி காட்டிடும் ஆசானின்
மூலமான ஆசான் அவன்
பொருள் -வழி காட்டும் ஆசான்களுக்கெல்லாம் மூலமான ஆசானாகிய அவனை காலத்தினால் அழிக்க முடியாது
27.
तस्य वाचकः प्रणवः॥२७॥
tasya vācakaḥ praṇavaḥ
The expression of that (isvara) is OM (prananva-primary sound frequency of creation heard as an inner ringing sound current).
பிரணவ மந்திர பேரின்ப மோங்க
பிறந்து அடங்க சிறப்பு
பொருள் -ஓம் என்ற அந்த பிரணவ மந்திரமே ஈஸ்வரன்
28.
तज्जपस्तदर्थभावनम्॥२८॥
taj-japaḥ tad-artha-bhāvanam
Repeat It And Contemplate Upon Its Meaning.
திரும்ப திரும்ப தியானப் பயிற்சி
மருந்து பெறுமே மனம்
பொருள் -அந்த பிரணவத்தை திரும்ப திரும்ப நினைத்திடு
29.
ततः प्रत्यक्चेतनाधिगमोऽप्यन्तरायाभावश्च॥२९॥
tataḥ pratyak-cetana-adhigamo-‘py-antarāya-abhavaś-ca
From that is gain (the knowledge of) introspection, and the destruction of obstacles.
தடைகள் அகல திரையும் விலக
விடையும் பெறுமே மனம்
பொருள் -அந்த தியானத்தில் கிட்டும் அறிவு தடைகளை அகற்றும்
30
व्याधिस्त्यानसंशयप्रमादालस्याविरतिभ्रान्तिदर्शनालब्धभूमिकत्वानवस्थितत्वानि चित्तविक्षेपास्तेऽन्तरायाः॥३०॥
vyaadhistyaanasaMshayapramaadaalasyaaviratibhraantidarshana vyādhi styāna saṁśaya pramāda-ālasya-avirati bhrāntidarśana-alabdha-bhūmikatva-anavasthitatvāni citta-vikṣepāḥ te antarāyāḥ
The obstacles that distract thought are disease, apathy, doubt, carelessness, indolence, dissipation, false vision, failure to attain a firm basis in yoga, and restlessness.
நோயோடு சோர்ந்து நொடித்த புலனாசை
ஐயமாட்ட மாய மதிர்வு
பொருள் -நோய், நொடி, சோர்வு , புலன் ஏற்படுத்தும் காமம், ஐயம், அதிர்வு , பொய்யறிவு, திரமில்லா ஆட்டம் இவைகளே மனதை திசை திருப்பம் தடைகள் .
Varalakshmi Niranjan
31-51
31
दुःखदौर्मनस्याङ्गमेजयत्वश्वासप्रश्वासा विक्षेपसहभुवः॥३१॥
duḥkha-daurmanasya-aṅgamejayatva-śvāsapraśvāsāḥ vikṣepa sahabhuvaḥ
Grief, mental distress, tremor of the body, irregular breathing, accompany non-retention of concentration.
துக்க மழுத்தம் துடிப்பும் எழுமூச்சும்
தக்க தடுக்கு மிடர்
பொருள் -துக்கம், மன அழுத்தம், படபடப்பு, மூச்சு வாங்குதல், நிலையில்லா நினைவு போன்றவை தியான நிலையின் தடைகள்
32
तत्प्रतिषेधार्थमेकतत्त्वाभ्यासः॥३२॥
tat-pratiṣedha-artham-eka-tattva-abhyāsaḥ
In order to prevent those blocks, the abhyasa-practice of a single truth.
மெய்யை தினந்தோறும் மெத்தன சிந்திக்க
பொய்யை விலக்கு மறிவு
பொருள் -மேற்குறிய தடைகளை அகற்ற மெய்யை திரும்ப திரும்ப தியானித்து பயிற்சி செய்வதே வழி
33.
मैत्रीकरुणामुदितोपेक्षणां सुखदुःखपुण्यापुण्यविषयाणां भावनातश्चित्तप्रसादनम्॥३३॥
maitrī karuṇā mudito-pekṣāṇāṁ-sukha-duḥkha puṇya-apuṇya-viṣayāṇāṁ bhāvanātaḥ citta-prasādanam ॥33॥
Undisturbed calmness of mind is attained by cultivating friendliness toward the happy, compassion for the unhappy, delight in the virtuous, and indifference toward the wicked.
அகத்தின் சமநிலை அன்பின் தருமம்
சுகதுக்க எண்ணத்தின் நட்பு
பொருள் -சுகத்தில் இருப்பவரை நட்பாக்கி, தரும வழியில் நடந்து, சோகத்தில் இருப்பவருக்கு கருணை காட்டுவதில் மனம் அமைதி பெறும்.
34.
प्रच्छर्दनविधारणाभ्यां वा प्राणस्य॥३४॥
pracchardana-vidhāraṇa-ābhyāṁ vā prāṇasya
By Exhaling And Restraining The Breath Also (the Mind Is Calmed).
விடுகின்ற மூச்சில் விரியும் அமைதி
விடாது அடங்கும் மனம்
பொருள் -மூச்சை அடக்குவதில் வெளி விடுவிடும் நேர்த்தியிலும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியும்
35
विषयवती वा प्रवृत्तिरुत्पन्ना मनसः स्थितिनिबन्धिनी॥३५॥
viṣayavatī vā pravr̥tti-rutpannā manasaḥ sthiti nibandhinī ॥35
Those forms of concentration that bring extraordinary sense perceptions cause perseverance of the mind.
ஏற்றமிகு எண்ணம் எழவே மனதிலே
சீற்றம் குறைய சிறப்பு
பொருள் -ஒப்பில்லா அந்த உணர்வே மனதை சீர்படுத்த உதவும்.
36.
विशोका वा ज्योतिष्मती॥३६॥
viśokā vā jyotiṣmatī ॥36॥
Concentration may also be attained by fixing the mind upon the Inner Light, which is beyond sorrow.
உள்ளொளி எண்ணவே இல்லாத சோகமே
உள்ளத்தில் கண்ட களிப்பு
பொருள் -உள்ளிருக்கும் ஒளி சோகங்களுக்கு அப்பாற்பட்டது
37.
वीतरागविषयं वा चित्तम्॥३७॥
vītarāga viṣayam vā cittam
Contemplating On A Mind Which Is Free From Desires (The Devotee’s Mind Gets Stabilized).
இச்சை துறந்த இனிய மனதினை
உச்சத்தி லெண்ண உயர்வு
பொருள் -ஆசைகளைத் துறந்த மனம் தியானிக்க தியானிக்க இன்னும் இன்னும் மேம்படும்
38.
स्वप्ननिद्राज्ञानालम्बनं वा॥३८॥
svapna-nidrā jñāna-ālambanam vā
Or by meditating on the knowledge that comes in sleep
உறக்கம் கனவிலே உண்மை உணர
மறக்கா தறியு மனம்
பொருள் -உறக்கம், கனவு இவை கற்று தரும் உண்மையை நிலையில்லா தன்மையை மனம் அறிய வேண்டும்
39.
यथाभिमतध्यानाद्व॥३९॥
Yathā-abhimata-dhyānād-vā
Or by meditation on anything that appeals to one as good.
உள்ளம் விரும்பும் உருவத் தியானமும்
அள்ளி அருளும் சிறப்பு
பொருள் -மனதிற்கு பிடித்ததை தியானித்தலும் நல்லது.
40
Sutra I.40
परमाणु परममहत्त्वान्तोऽस्य वशीकारः॥४०॥
paramāṇu parama-mahattva-anto-‘sya vaśīkāraḥ
The Yogi’s mind thus meditating, becomes un-obstructed from the atomic to the Infinite.
எண்ணத்தில் யாவும் எழிலாய் அடங்கிட
அண்டம் அணுவும் அடங்கு
பொருள் -தியானத்தில் ஈடுபடும் யோகியின் மனதில் சிறிய அணுவும் பெரிய அண்டமும் அடங்கி விடும்.
41
क्षीणवृत्तेरभिजातस्येव मणेर्ग्रहीतृग्रहणग्राह्येषु तत्स्थतदञ्जनतासमापत्तिः॥४१॥
kṣīṇa-vr̥tter-abhijātasy-eva maṇer-grahītr̥-grahaṇa-grāhyeṣu tatstha-tadañjanatā samāpattiḥ
Just as the naturally pure crystal assumes shapes and colors of objects placed near it, so the Yogi’s mind, with its totally weakened modifications, becomes clear and balanced and attains the state devoid of differentiation between knower, knowable and knowledge. This culmination of meditation is samadhi.
பிம்பத்தை கல்லும் பிடிப்பது போலவே
கும்பிட ஞானம் பிறப்பு
பொருள் -அறிவு, அறிதல் அறிபவர் இந்த வேறுபாட்டை உணர ஒரு ரத்தினக் கல் பல்வேறு உருவங்களை பிடித்துக் கொள்பது போல் மனதில் தெளிவு பிறக்கும்
42
तत्र शब्दार्थज्ञानविकल्पैः संकीर्णा सवितर्का समापत्तिः॥४२॥
tatra śabdārtha-jñāna-vikalpaiḥ saṁkīrṇā savitarkā samāpattiḥ
The samadhi in which name, form and knowledge of them is mixed is called savitarka samadhi, or samadhi with deliberation.
உருவம் அறிவு உரைக்கும் பெயரும்
தருணத் திலறி தலை
பொருள் -பொருளின் பெயர் உருவம் இதன் வேறுபாட்டை அறிதலே சிறந்த அறிவு
43
स्मृतिपरिशुद्धौ स्वरूपशून्येवार्थमात्रनिर्भासा निर्वितर्का॥४३॥
smr̥ti-pariśuddhau svarūpa-śūnyeva-arthamātra-nirbhāsā nirvitarkā
When The Memory Is Purified, The Mind Appears To Be Devoid Of Its Own Nature (i.e. Of Reflective Consciousness) And Only The Object (On Which One Is Contemplating) Remains Illuminated. This Kind Of Engrossment Is Called Nirvitarka Samapatti.
புனித மடையும் புலனால் மனதில்
இனிய ஒளியும் இயல்பு
பொருள் -மேலும் எழும் தியானிக்க புனிதம் அடையும் புலன்களால் மனம் பரிபூரண உண்மையான நினைவை அறியும்
44
एतयैव सविचारा निर्विचारा च सूक्ष्मविषया व्याख्याता॥४४॥
etayaiva savicārā nirvicārā ca sūkṣma-viṣaya vyākhyātā
By this process (the concentrations) with discrimination and without discrimination, whose objects are finer, are (also) explained.
பிரிக்க அறிந்திட பித்தம் தெளியும்
அரிதின் அறியும் அறிவு
பொருள் -இந்த முறையில் ஞானத்தை பிரித்துப் பார்த்தல், பிரிக்காது புரிதல் என்ரா வேறுபாட்டை அறிந்திட முடியும்
45
सूक्ष्मविषयत्वं चालिङ्गपर्यवसानम्॥४५॥
sūkṣma-viṣayatvam-ca-aliṇga paryavasānam
Behind all subtle objects is Prakriti, the primal cause.
உள்ளே அடங்கிய உண்மை உணர்ந்திட
தெள்ளத் தெளிவாய் உணர்வு
பொருள் -உள்ளுக்குள் ஒளிந்த சூட்சமத்தை உணர உணர தெளிவு பிறக்கும்
46
ता एव सबीजः समाधिः॥४६॥
tā eva sabījas-samādhiḥ ॥46॥
These kinds of samadhi are said to be “with seed.”
விதையில் சமாதி விரியும் நிலையும்
விதவித நேர்த்தி அழகு
பொருள் -இந்த வகை சமாதி விதையுள்ள சமாதி எனப்படும்.
47
निर्विचारवैशारद्येऽध्यात्मप्रसादः॥४७॥
nirvicāra-vaiśāradye-‘dhyātma-prasādaḥ ॥47॥
The clarity of the higher self occurs in the lucidity of the nirvicara samapatti, (sampatti beyond subtle reflection).
உன்னி லறிந்திட உள்ளம் உணர்ந்திட
தன்னில் நிறையும் நிகர்
பொருள் -பிரதிபலிக்கும் உள்ளுணர்வை அறியும் இந்த நிலை நிர்விசார சமாதி எனப்படும்
48
ऋतम्भरा तत्र प्रज्ञा॥४८॥
r̥taṁbharā tatra prajñā ॥48॥
The knowledge in that is called “filled with Truth.”
மெய்யு மறிய மெருகும் ஒளியிலே
பொய்யும் விலக்கு மறிவு
பொருள் -மெய் எது என்று அறிய அறிய பொய்மை எனப்படும் போர்வை விலகும்
49
श्रुतानुमानप्रज्ञाभ्यामन्यविषया विशेषार्थत्वात्॥४९॥
śruta-anumāna-prajñā-abhyām-anya-viṣayā viśeṣa-arthatvāt ॥49॥
The knowledge which is gained from inference and the study of scriptures is knowledge of one kind. But the knowledge which is gained from samadhi is of a much higher order. It goes beyond inference and scriptures.
அறியா தறியு மறிவை மிகுத்த
அரிதே சமாதி அறிவு
பொருள் -வேதங்கள், உபநிடதங்கள் மூலம் அறியும் அறிவு ஒரு விதம். சமாதி நிலை அனுபவ அறிவு ஒரு விதம்.
50
तज्जः संस्कारोऽन्यसंस्कारप्रतिबन्धी॥५०॥
tajjas-saṁskāro-‘nya-saṁskāra pratibandhī
The resulting impression from this Samadhi obstructs all other impressions.
தெளிவும் மறைக்க தெரியு மறிவு
எளிதி லடையா மலர்
பொருள் -இதில் அறியும் உணர்வு மற்ற உணர்வுகளை மறைக்கும்
51
तस्यापि निरोधे सर्वनिरोधान्निर्बीजः समाधिः॥५१॥
tasyāpi nirodhe sarva-nirodhān-nirbījaḥ samādhiḥ ॥51॥
By the restraint of even this (impression, which obstructs all other impressions), all being restrained, comes the “seedless” Samādhi.
வித்தின்றி உள்ளே விரியும் மலரிலே
சத்திய புத்தி பிறப்பு
பொருள் -அப்படி பிறக்கும் சமாதி விதையில்லா சமாதி எனப்படும்
Varalakshmi Niranjan