அந்தியிலே
அந்தியிலே ஆற்றோரம் நின்று - மாலை
அற்புததைக் கண்டிருந்தேன் அன்று
சிந்தையிலே உன்நினைவு தானே -வேறு
செய்கையின்றி அங்கிருந்தேன் நானே
வந்திடுவேன் என்றுசொன்னாய் பெண்ணே- செம்மை
வானழகும் ஈர்க்கவிலை கண்ணே
பந்துவிழும் முன்செழுமை பொங்கும் -பக்கம்
பாவையுன்றன் தோற்றமங்கும் இங்கும்
மேகத்தில் உன்முகத்தைக் கண்டேன் - மேற்கு
வெள்ளியிலுன் கண்ணழகை உண்டேன்
தாகத்திற்கு உள் பருகும் பானம்-தன்னைத்
தாங்கிவரும் உன்னிதழாம் ஏனம்
ஏகத்திற் கேங்கவைத்தல் நன்றோ- என்றன்
ஏந்திழையே உன்கொடுமை ஒன்றோ
சோகத்தில் வீழ்த்தியது போதும்- வாவா
சொர்க்கத்தை என்கவிதை மோதும்--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCX%3DZVjh1ZBY9OrVOprFM_oNc7RxcQv2UdF0MySZ0CLng%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BUVXS6avcQXABqs8CcSAp1McxC81EB3PZYfm0OYuwvgSg%40mail.gmail.com.
On May 2, 2026, at 8:28 PM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-%2Bayb9DxVynYD%2B94TiUQopNhsd6kyaWwg%3DZOF0ziWcXFA%40mail.gmail.com.