கொடுத்த கருத்திற்கு விடுத்த வெண்பா

5 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Feb 8, 2026, 10:32:19 AM (4 days ago) Feb 8
to santhavasantham

நண்பன் ஒருவன் கீழ்க் கண்ட கருத்தைத் தெரிவித்து அதற்கு ஓர் வெண்பா எழுத முடியுமா எனக் கேட்டார் ( கருத்து அவர் மனத்தில் உதித்ததோ ஆண்டு 2020 - 21 காலக் கட்டத்தில்)

“ஒன்பது வாய் கோணிக்கு ஒரு ஊசி அவசியம்.சுர மருந்தும் அவசியம்.கபம் போக மூலிகை நீரும் அவசியம். இன்று இது போதும்,மறுமுறையும் வருக என்றழைக்கும் வருமுன்காப்போன் (மருத்துவர்) கனிவும்,பரிவும், மிகவும் அவசியம்.
மிகையில்லை.
தைக்காத கோணிக்கு ஊசி  ஒன்று அவசியம்”.

கருத்துப் பரிமாற்றம் இன்று ஏற்பட்டது.


அடியேனுடைய வெண்பா இதோ:

கொடுத்த கருத்திற்கு விடுத்த வெண்பா

ஒன்பதுவாய்த் தேகத்திற்(கு) ஊசியும் கண்டிலேல்
புன்புலால் யாக்கைப் புதைந்தழியும்— நன்புலத்து
மூலிகைநீர் மாமருந்தும் முன்னிற்கும் வைத்தியர்
சீலமும் நோய்தீர்க்கா  தே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Subbaier Ramasami

unread,
Feb 9, 2026, 8:34:46 PM (2 days ago) Feb 9
to santhav...@googlegroups.com
மிக மிக அருமை

இலந்தை

On Sun, Feb 8, 2026 at 9:32 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

Ram Ramakrishnan

unread,
Feb 9, 2026, 8:38:38 PM (2 days ago) Feb 9
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, தலைவரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 9, 2026, at 20:34, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAaY9cYThwHzCGcugC2OJHh28t5bOn%2BhsSFr7ATPYNO9g%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Feb 9, 2026, 9:54:05 PM (2 days ago) Feb 9
to santhav...@googlegroups.com
கொடுத்த கருத்து:

குடிமகன்

மெய் மறந்தார், பொய்யாகிய மெய் மறந்தார்,தன்னை மறந்தார், தன்நிலை  மறந்தார், அனுதினமும், அந்தி மயங்கும் வேளையிலே, சற்றே இளைப்பாற, நாம் கண்ட  எண்ணற்ற குடிமகனார் டாஸ்மார்க் கடைதனிலே, சுற்றம் மறந்தார்,சூழல் மறந்தார், கண நேரம் முற்றும் துறந்தார், எண்ணம் அற்ற நிலை அடைந்தார். வைகறையில் பகலவன் கதிரொளியில் விழித்தெழுந்தார். நாம் கண்டது கனவே, ஒரு மாயம் என்றறிந்து கொண்டார். வாழ்க்கை நோக்கி பயணமானார்.விட்டதைத் தொடுவதற்கு அட்டத்தில் பாய்ந்ததே மீண்டும் ஒரு மனக் குரங்கு. மீண்டும் வாழ்க்கை ஏங்கி நடந்ததே மனிதன் எனும் உயிர்க் குரங்கு.

விடுத்த வெண்பா:

மெய்மறப்பார் சுற்றம் விடுத்தே மதுவுண்டு
பொய்நிலையில் மூழ்கிப் புலன்மறப்பார் - வைகறையில்
தேறித் தவிப்பார் திகைத்தே; மனக்குரங்கு
மாறுவதற் குண்டோ வழி?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 9, 2026, at 20:38, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

மிக்க நன்றி, தலைவரே.

Swaminathan Sankaran

unread,
Feb 10, 2026, 12:33:31 AM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் கவிதை மிக அருமை.

சங்கரன் 



--
 Swaminathan Sankaran

Sai Ganesan H

unread,
Feb 10, 2026, 1:03:12 AM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
அருமையான வெண்பா! 

Arasi Palaniappan

unread,
Feb 10, 2026, 1:22:58 AM (2 days ago) Feb 10
to சந்தவசந்தம்
அற்புதம் அண்ணலே!

Ram Ramakrishnan

unread,
Feb 10, 2026, 8:16:11 AM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சங்கரன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 10, 2026, at 00:33, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Feb 10, 2026, 8:16:38 AM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சத்யவேழன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 10, 2026, at 01:03, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Feb 10, 2026, 8:17:02 AM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 10, 2026, at 01:22, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Feb 10, 2026, 11:37:39 AM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
Nice.

மெய்மறப்பார் & பொய்நிலையில்

இங்கெல்லாம் மெல்லொற்று மிகும்.

V. Subramanian

On Mon, Feb 9, 2026 at 9:54 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
கொடுத்த கருத்து:
...

Ram Ramakrishnan

unread,
Feb 10, 2026, 12:33:58 PM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
அப்படித்தான் எழுதினேன். சந்தேகம் வர, கூகுள் குருவினிடம் வினவியபோது வராது எனச் சொன்னது.

சிவசிவா குருவின் அருள், தெரிந்து கொண்டேன் 😀

திருத்துகிறேன். மிக்க நன்றி, திரு. சிவசிவா.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 10, 2026, at 11:37, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 10, 2026, 12:35:03 PM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
Google returns what is widespread - not necessarily what is correct.

Ram Ramakrishnan

unread,
Feb 10, 2026, 12:38:15 PM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
You are absolutely right.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 10, 2026, at 12:35, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 10, 2026, 12:38:27 PM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
For further info - please see the post in 
Grammar doubts - 2
thread on July 7, 2024.


Ram Ramakrishnan

unread,
Feb 10, 2026, 12:41:51 PM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
கண்டிப்பாக.

முன்பொரு சமயம் இது பற்றிப் பேசியபோது நீங்கள் ஆறுமுக நாவலர் புத்தகத்திலிருந்து சம்மந்தப்பட்ட இழையைக் கொடுத்த தாக ஞாபகம்.

அ. கி. பரந்தாமனார் புத்தகத்தில் காணப் பெறவில்லை.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Feb 10, 2026, 5:24:37 PM (2 days ago) Feb 10
to Santhavasantham
 அருமை..அருமை.

அன்பன்
மீ.வி

Ram Ramakrishnan

unread,
Feb 10, 2026, 5:42:37 PM (2 days ago) Feb 10
to santhav...@googlegroups.com
நன்றி, திரு. மீ. வி


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 10, 2026, at 17:24, M. Viswanathan <meev...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Feb 11, 2026, 9:45:02 PM (7 hours ago) Feb 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. ராம்கிராம்!

“மெய்ம்மறப்பார்”
“பொய்ந்நிலையில்”
இவ்வாறு ஒற்று இரட்டித்து வரும் என்று நினைக்கிறேன்.

- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Feb 11, 2026, 9:47:44 PM (7 hours ago) Feb 11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.

ஆம். திரு.சிவசிவா அவர்களும் இதைச்்சுட்டினார்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 11, 2026, at 21:45, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மிக அருமை, திரு. ராம்கிராம்!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages