1)
சம்பந்தர் தேவாரம் - 1.11.2
ஈறாய்முதல் ஒன்றாய்இரு பெண்ணாண்குண(ம்) மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்-அவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே.
2)
சம்பந்தர் தேவாரம் - 1.79.3
எண்ணிடை ஒன்றினர் இரண்டினர் உருவம்
.. எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்
.. வகுத்தனர் ஏழிசை எட்டிருங் கலைசேர்
பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர்
.. பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
.. கழுமல(ம்) நினையநம் வினைகரி சறுமே.
3)
சம்பந்தர் தேவாரம் - 2.7.3
மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவில் நாலருடல் அஞ்சினர் ஆறரே ழோசையர்
தேவில் எட்டர்திரு வாஞ்சிய(ம்) மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.
4)
சம்பந்தர் தேவாரம் - 1.128
திருவெழுகூற்றிருக்கை
ஓருரு வாயினை மானாங் காரத்
5)
சம்பந்தர் தேவாரம் - 3.122.6 - (numbers 8 to 1 in descending order)
மணந்திகழ் திசைகள் எட்டுமே ழிசையு(ம்)
.. மலியுமா றங்கமை வேள்வி
இணைந்தநால் வேத(ம்) மூன்றெரி இரண்டு
.. பிறப்பென ஒருமையா லுணரும்
குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம்
.. அற்றவை உற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர்
.. உடையவர் வடதளி யதுவே .
6)
அப்பர் தேவாரம் - பதிகம் - 4.18
ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
7)
திருமந்திரம் - song-1
ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே .
8)
ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை - 11.36.1
Lines 5-8
திருவருள் பெற்ற இருபிறப் பாளன்
முத்தீ வேள்வு நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை யெண்டிசை யறியத்
===
மதிசூடி துதிபாடி :
a) padhigam 2.02 -
b) A song in some other padhigam:
#7
அந்தம் இலாவொரு தேவன் ஆனையின் ஈருரி போர்த்தான்
முந்தெயில் மூன்றெரி செய்த மொய்ம்பினன் நான்மறை நாவன்
ஐந்தொழில் செய்திடும் ஐயன் ஆறுமு கந்திகழ் கின்ற
கந்தனைப் பெற்றவள் பங்கன் கற்குடி மேய பிரானே.
c) padhigam - P.438 - எழுகூற்றிருக்கை
ஒன்றாய் நின்ற ஊழி முதல்வன்
d) There are some more madhisudi padhigams with eNNalankAram but they have not been posted in the blog yet.
===