

குற்றச்சாட்டு என்று எழுதுவது தவறு. குற்றச்சாற்று என்று எழுதுவது தான் சரி. இது ஏன் ?
மனதில் மகிழ்ச்சி என்பது தவறு. மனத்தில் மகிழ்ச்சி என்பதே சரி. இது ஏன் ?
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
திருப்புகழ்- மூலா நிலமதின் மேலே மனதுறு; மனது ருக்கிக ளணைமீதே; மனதை யுடைய அசட்டு மனிதன்; மனது போற்கரு கினகு வாற்குழல்
--
இது பற்றி முன்னமும் இங்கே மனம் விட்டுப் பேசியிருக்கிறோம் :-)
வடமொழியான மனஸ் என்பதை மனது, மனம் என்று இருவிதமாகத் தமிழில் மொழியாக்கம் செய்வதுண்டு. (மனது பேச்சுவழக்கில் மனசு என்றாகிறது). மனஸ் மனம் என்றாகும்போது மனத்தை என்று அத்துச் சாரியை பெற்றும், மனது என்றாகும்போது பெறாமலும் வரும்.
காட்டு:
பாரதி- வெள்ளை மனது பறிகொடுத்தேன் - அம்மா! ;என்மனதைச் சொல்வேன்;
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!; வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கி..
இது போலவே சிரஸ், சிரசு, சிரம் -
காட்டு: எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்
திருமந்திரம்: நீரும் சிர(சு)இடை பன்னிரண்டு அங்குலம்
--
- அரண்மனை வீரர்களில் யார் சிறந்தவர் ? அரண்மனை வீரர்களுள் யார் சிறந்தவர் ?.--> இந்த இரண்டில் எது சரி ? ஏன் ?
- ஒரு படத்தின் பாடல்களை வெளியிடும் போது " இன்று இசை வெளியீடு" என்று எழுதுகிறார்கள். இது சரியா ? இன்று பாடல்கள் வெளியீடு என்று தானே இருக்க வேண்டும் ?
- எதிர்க்கட்சி தலைவர் இணைய தளம் ஒன்றிற்கு/ஒன்றுக்கு பேட்டி அளித்தார் --> இதில் எது சரி ? ஏன் ?
--
உடு பற்றி ஏற்கெனவே அடியேனும் ஹரியும் ராஜப்பனும் தந்துவிட்டிருக்கிற விளக்கக் குறிப்பின்படி:-
உடு = தனக்கு உடையணிவித்துக்கொள்
உடுக்கி(ன்)றான் / உடுக்கி(ன்)றாள் / உடுக்கி(ன்)றது
உடுக்கி(ன்)றார்(கள்) உடுக்கும்
உடுப்பான் / உடுப்பாள் / உடுக்கும்
உடுப்பார்(கள்)
உடுத்து [வினையெச்சம்: கொடுத்து, விடுத்து, தடுத்து,பழுத்து, என்பன போல்]
உடுத்தாது [-மல்]
உடுக்க=உடுப்பதற்கு
உடுக்கா[து] [-மல்]
உடுத்து = பிறருக்கு உடையணிவி, பிறரை உடுக்கச்செய்
உடுத்துகிறான் உடுத்துகிறாள் உடுத்துகிறது,
உடுத்துகிறார்கள் உடுத்துகி[ன்]றன
உடுத்தினான் உடுத்தினாள் உடுத்திற்று
உடுத்தினார்கள், உடுத்தின
உடுத்துவான் உடுத்துவாள் உடுத்தும்
உடுத்துவார்[கள்]
உடுத்த=உடுத்துவதற்கு
உடுத்தி [வினையெச்சம் - அணிவித்து என்றவாறு]
உடுத்தாது=உடுத்தாமல்
நகுபோலியன்
அ.ரா
கருப்பு - ஒரு நிறத்தின் பெயர்கறுப்பு - அடர்ந்த நிறம் (Dark color)
பார் - பார்வை - பார்த்த (பாத்த) - பார்க்கப்பட்ட (பாக்கப்பட்ட).
கோர்த்தான் என்பதே பின்னர் சிதைந்து கோத்தான் ஆகிவிட்டது.இலக்கியங்களீலேயே கோக்க என்ற பயண்பாடு உண்டு.
'மடந்தை பொற்றிரு மேகலை மணியுகவே' என்று தொடங்குகிற வில்லிபாரதப் பாடலில், மேகலையிலிருந்து உதிர்ந்த முத்துக்களை,
'எடுக்கவோ கோக்கவோ என்றான்'என்று வரும். கர்ணன் செஞ்சோற்றுக்கடன் கழிக்க உறுதியெடுத்துக்கொண்ட இடம்.
அ.ரா
கோர்த்தான் என்பதே பின்னர் சிதைந்து கோத்தான் ஆகிவிட்டது.இலக்கியங்களீலேயே கோக்க என்ற பயண்பாடு உண்டு.
'மடந்தை பொற்றிரு மேகலை மணியுகவே' என்று தொடங்குகிற வில்லிபாரதப் பாடலில், மேகலையிலிருந்து உதிர்ந்த முத்துக்களை,
'எடுக்கவோ கோக்கவோ என்றான்'என்று வரும். கர்ணன் செஞ்சோற்றுக்கடன் கழிக்க உறுதியெடுத்துக்கொண்ட இடம்.
, n. < கோ-. [M. kōrva.] Corr. of கோவை.
என்பது லெக்சிகன் சொல்வது. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88&matchtype=exact&display=utf8
Corr. of என்றால் corrupted form of என்பதைக் குறிக்கும்.
இனி எடுக்கவோ கோக்கவோ என்ற பகுதியை
மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க
அற்று விழுந்த அருமணிகள் - மற்றவற்றைக்
கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க்கென் னாருயிரைப்
போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு
என்பது பாரத வெண்பா.
கோக்கேனோ என்ற சொல்தான் சரியான வடிவம். கோர்த்தல் என்ற வடிவத்தில் இலக்கிய ஆட்சி ஏதும் இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.
தேம்பாவணி -
பேர்த்தன பருதி போய்ப் பெருகும் மா இரா
போர்த்தன இருள் அறத் தயங்கும் பொன் மணி,
*கோர்த்தன தரளம் மேல் கொழுமும் தோரணம்
ஆர்த்தன முகில் இடை அவிர் வில் மானுமே.
கடு உண்ட எண் இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான்;
கடு உண்ட எண் இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான்.
வடு உண்ட பிறையின் வாளி மறம் உண்ட மதியான் *கோர்த்தான்;
வடு உண்ட பிறையின் வாளி வகுத்து அவை அமலேக்கு ஈர்த்தான்.
ஆர்த்தன பல்லாண்டு; ஆர்ந்தன உவகை; ஆறு அறுநூற்று மூ ஐம் பூ,
சீர்த்தன மதுவின் பூத்தன, சூசை சேர்த்த கைக் கொடியில் அம் மலரால்
*கோர்த்தன ஆறாறு அணிகளே கடவுட் குளுஞ்சுடர்ப் பதத்து அவை
நெட்டு ஒளி மாடத்து உச்சி நேர் இடை விடாது நீலப்
பட்டு ஒளிப் பந்தர் பாய்த்தி, பத்தியின் பயிற்றிக் *கோர்த்த
கட்டு ஒளி மணிகள் நாற, கதிர்ப் பகற்கு அஞ்சா மின்மீன்
விட்டு ஒளி பூத்த வான் போல் வியென்ன மா நகரம் அன்றே
தேவ்
On May 13, 9:58 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/5/14 RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
>
> > கோர்த்தான் என்பதே பின்னர் சிதைந்து கோத்தான் ஆகிவிட்டது.இலக்கியங்களீலேயே
> > கோக்க என்ற பயண்பாடு உண்டு.
>
> > 'மடந்தை பொற்றிரு மேகலை மணியுகவே' என்று தொடங்குகிற வில்லிபாரதப் பாடலில்,
> > மேகலையிலிருந்து உதிர்ந்த முத்துக்களை,
> > 'எடுக்கவோ கோக்கவோ என்றான்'என்று வரும். கர்ணன் செஞ்சோற்றுக்கடன் கழிக்க
> > உறுதியெடுத்துக்கொண்ட இடம்.
>
> கோத்தல், கோவை என்பனவற்றின் சிதைவே கோர்த்தல், கோர்வை போன்றவை. இது குறித்து
> வேறொரு மடற்குழுவில் சென்ற வாரம்தான் எழுதினேன். குறிப்பிட்ட மடல்களைத் தேடி
> எடுத்துத் தருகிறேன்.
>
> *கோர்வை¹* kōrvai
>
> , *n*. < கோ-. [M. *kōrva*.] *Corr. of *கோவை.
>
> என்பது லெக்சிகன் சொல்வது.http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamill...
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
’பரீக்ஷா’ என்பது சங்கத வடிவம்;
தமிழில் இஷ்டப்படி எழுதுவர்.
‘தேர்வு’ என எழுதலாம்.
>>> முதற்கண் வணக்கம் என்பது தவறு <<<
”அனைவருக்கும் முதற்கண் (முதலில்) வணக்கம் தெரிவிக்கிறேன்”
என்பதில் தவறில்லையே .
>>> மெனக்கெட்டு என்பது தவறு. வினை கேட்டு என்பதே சரி என்று கேள்விப்
>>> பட்டிருக்கிறேன்.<<<
வினைகெட்டு சரி
தேவ்
On May 14, 6:26 am, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote: